• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 21

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
இன்றோடு அகி கல்லூரி பொறுப்பை ஏற்று ஒரு வருடம் முடிந்து இருக்க, அதே நேரம் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூனியர் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து சிறிய அளவில் ஃபேர்வெல் செலேபிரேசியன் செய்ய அகிலன் மறுக்க மறுக்க நிர்வாகமும் ஸ்டூடண்ட்ஸ் சிறிய அளவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர். தனக்காக இல்லாவிட்டாலும் மாணவர்களுடைய ஸ்பெசல் டே வேண்டாம் என்று சொல்ல மனம் வராமல் சம்மதம் தெரிவித்து இருந்தான், அன்றைய நாள் முழுவதும் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்ச்சியாக மாணவர்கள் இருக்க, இதில் இருவர் மட்டும் பதட்டமாக இருந்தார்கள்,

உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்து அதில் பெண்கள் புடவையும், ஆண்கள் வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என்று நிர்வாக சார்பாக அறிவிப்பு அனைத்து வகுப்பிற்கு அனுப்பி வைக்க பட்டு இருந்தது, அதே போல் நிர்வாகத்தில் இருப்பவர்கள் கூட வர வேண்டும் என்றும் இருந்தது, அனைவரும் அவ்வாறே வந்து இருக்க, சுடரின் கண்களோ அகிலனை தேட அவனை காணாது விழிகளை அலைய விட்டவள் தூரத்தில் மாணவர்களுடன் பேசி கொண்டு இருப்பதை பார்த்தவள் அவனின் அழகில் சொக்கி தான் போனாள்,

சிறிது நேரத்தில் அவ்விடம் விட்டு நடந்து வருவதை பார்த்தவள் அவனை பார்க்காது போல் போனை எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள், அவளை பார்த்ததும் வேகமாக அடித்த இதயத்தை தொட்டு மூச்சு வாங்கியவன் ' இந்த புடவையில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!' என்று சொல்ல துடித்த வாயினை கட்டு படுத்தி கொண்டவன், “சுடர்!” என்று சொன்னதும் தீயென அவனை பார்க்க அதிலே நடுங்கி போனான் அகி, “சொல்லுங்க சார் நான் என்ன செய்யனும்” என்றாள். இதில் இன்னும் நடுக்கம் கொண்டவன் “கொஞ்சம் ஸ்டூடண்ட் சண்டை போடாமல் பார்த்துக்குங்க” என்றவன் அதன் பிறகு அங்கே நிற்காமல் தனது அறைக்கு சென்று இருந்தான், 'அவளை பார்க்கும் போது மட்டும் ஏன் இப்படி பதட்டமா இருக்கு!' என்று சொல்லி தண்ணிரை குடித்தான்.

விழா நடக்கும் ஆடிட்டோரியம் மாணவர்களால் அலங்காரத்தில் நன்றாக ஜொலித்தது, அதில் கல்யாணி மகேந்திரன் சீஃப் கெஸ்ட் ஹாகா வரவைக்கபட்டனர், விழாவில் மாணவர்கள் நடனம் முடிந்ததும், மகேந்திரனுக்கு சால்வை போற்றபட்டு பூங்கொத்து கொடுத்து பேச அழைத்தனர்,
கல்யாணி அருகில் அமர்ந்த அகிலன் “இவங்க தான் நான் சொன்ன அந்த பொண்ணு” என்று சுடரை காண்பித்து சொல்லி கொண்டு இருந்தான், மேடையில் பேசிக்கொண்டு இருந்த மகேந்திரன் “ஸ்பெசல் தேங்க்ஸ் சுடர்” என்று அவள் பெயரை சொன்னதும், எதற்கு! என்று அவளும் புருஷன் பாராட்டிய அந்த பொண்ணை பார்த்த கல்யாணி கணவர் என்ன பேச போகிறார் என்று ஆவலுடன் மேடையை பார்த்தாள்.

“இவங்க இதே காலேஜில் படிச்ச பொண்ணு, இப்போ நம்ம காலேஜில் வேலையும் பார்க்கிறாங்க, இவங்களுக்கு பாரின் ஆஃபர் வந்தும் அதை ரிஜெக்ட் பண்ணி நம்ம காலேஜிலே இருக்கிறாங்க, இப்பவும் மேனேஜ்மென்ட்க்கு ஏதாவது ஒரு பிரச்சனையா இருந்தால் இவங்க முன்னாடி வந்து நிற்பாங்க” என்று இவர் சொல்ல,

“புலி பதுங்கிறது பாய தான் அது தெரியாமல் புகழ்ந்துகிட்டு” என்று அரவிந்த் சொல்லி சிரித்தான், தள்ளி அமர்ந்த சரத்தை நக்கலாக பார்த்து சிரிக்க, அவனுமே நக்கலாக பார்த்தான், “இதுங்க திருந்தாதுங்க” என்று பக்கத்தில் இருந்தவர்கள் தலையில் அடித்து கொள்ளாதது தான் குறை.

“நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் இது யாருக்கிட்டையும் டிஸ்கஸ் பண்ணல, நம்ம காலேஜில் படிச்ச பசங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைக்கிற மாதிரி ஏற்கனவே ஏற்பாடு பண்ணி இருக்கோம் அதுவும் போக என்னோட கம்பனியில் இருந்தும் வருவாங்க, என்னோட ஸ்டூடண்ட் என்னோட ஆபீஸ்ல வேலைக்கு சேரும் போதும் ட்ரைனிங் பீரியட் டைம்லேயே அவங்க கேப்பாசிட்டி பொறுத்து பெர்மெண்ட் ஸ்டாப் ஹா அப்போய்மெண்ட் பண்ணவும் போறேன்” என்றதும்,

“போச்சி யானை தன் மேலே தானே மண்ணை வாரி போட்டுக்கிச்சி” என்று முனுமுனுத்தான் சரத். இப்போதும் அரவிந்த் சரத் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பிறகு ஒரு சேர சுடரை பார்த்தனர். அவளும் இவர்களை பார்த்து சிரித்தாள். அவர் பேசி முடித்ததும் மீண்டும் மாணவர்கள் ஆடி பாடி மகிழ்ச்சியாக இருந்தனர்,

கல்லூரி அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து இருக்க அவற்றை கவனிக்க வேண்டி சுடர் வெளியே வந்ததும் அவள் சென்றதைக் கண்ட சரத் அவளுக்கே தெரியாமல் ஒளிந்து சென்றான், மேடையை ஒட்டி நின்ற சுடர் இப்போது இல்லாமல் இருப்பதை கவனித்த அகி “அம்மா கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லி வெளியே வந்து அவளை தேட,சுடர் அலுவலக ஊழியர்களுக்கு வாங்கிய உணவை சரி பார்த்து கொண்டு இருக்கும் போது அவளின் முகத்தில் மயக்க மருந்து வைத்து மயக்க வைத்தவன் ஒரு அறையில் அடைத்து வைக்க சரியாக அந்நேரம் அகிலன் வெளியே வரும் போது சரத் வேகமாக கதவை சாற்றி விட்டு ஓடி ஒளிய, சந்தேகப்பட்டு கதவை திறந்து அகிலன் உள்ளே சென்றதும் அகிலனையும் சேர்த்து கதவை சாற்றி பூட்டு போட்டு வந்து நிகழ்ச்சியை இயல்பாக பார்த்து கொண்டு இருந்தான், பிளான் சக்சஸ் என்று சொல்லி அரவிந்த் முன்னால் கையை உயர்த்தினான், எவ்வளவு நேரமாக மயக்கத்தில் இருந்தாளோ! சற்று அழுக்காகவும் சில இடங்களில் கிழிந்த ஆடையை தொட்டு பார்த்த சுடர் கோவமாக கதவை எட்டி உதைத்து திறக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள்,

சுடரை அடைத்த இடமோ கேண்டீன் பழைய பொருட்களை வைக்கும் அறை, தூசியும் கருப்பு கரையும் தரையெல்லாம் பிசுக்காகவும் ஒரு மாதிரி மூச்சு முட்டும் அளவுக்கு பழைய பொருட்களின் நாற்றமும் அடிக்க, சுடரை கிடத்திய இடமோ டைல்ஸ் உடைந்து கூர்மையாக இருந்தது, சுடரை வஞ்சம் தீர்க்க சமயம் எதிர்பார்த்தவனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் சூழ்நிலை அமையும் போது சும்மாவாக இருப்பான், அகிலன் உள்ளே சென்றதுமே கதவு மூடி கொள்ள, அந்த இருட்டில் தனது போனை எடுத்து பார்க்க அதுவோ எந்த நெட்வொர்க் இல்லாமல் இருந்தது டார்ச்சை அடித்து அவளின் அருகே சென்றவன் “சுடர் சுடர்!” என்று அவளின் தாடையை தட்டி எழுப்ப முயற்சி செய்யும் போதே அவனுக்கு இருமல் வந்து கொண்டே இருந்தது, நாற்றத்தில் மூக்கினை பொத்தியவனுக்கு சிறிது சிறிதாக மயக்கம் வருவது போல் இருக்க அவளை தட்டி கொண்டே அவளின் மேலே விழுந்து சரிந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ லேசாக முனங்கி கொண்டே எழும் போது முதுகில் இருந்த துணி கிழிவது போல சத்தம் கூடவே முதுகிலும் ஒரு வலி, அதை பொருட்படுத்தாமல் தனது மேலே விழுந்தவனை தொட்டு பார்க்க “மூச்சு இருக்கு” என சொல்லி அவனை கீழே படுக்க வைத்தவள், கதவை தட்டி பார்த்து கொண்டு இருக்கும் போது, வாட்ச்மேன் வந்து கதவை திறக்க வானம் முழுவதும் இருட்டு இருந்தது, காலேஜில் யாருமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது, “அண்ணே இப்ப என்ன நேரம்?” என்று கேக்க, “அம்மாடி இப்போ எப்படியும் எட்டுக்கு மேலே இருக்கும்” என்று சொன்னவரை “கொஞ்சம் தண்ணியை கொண்டு வாங்க” என்று அவரை அனுப்பியவள் அகிலனை எழுப்பி பார்க்க அவனோ எழுந்த மாதிரி தெரியவில்லை, “அண்ணே இவரை கொஞ்சம் பிடிங்க!” என்று அவரிடம் உதவி கேக்க, அவனின் அலுவலக அறைக்கு அழைத்து சென்று சோஃபாவில் படுக்க வைத்து விட்டு,

“நீங்க போங்க நான் பார்த்து கொள்கிறேன்” என்றவளை பார்த்து, “தாயி ஆம்பிளை மாதிரி தப்பை தட்டி கேக்கும் போது பாக்க நல்லா தான் இருக்கு, ஆனால் இந்த மாதிரி கெடுதலும் கூடவே வரும் பார்த்து சூதானமா இருந்துக்க ஒரு பொண்ணை பெத்த அப்பனா சொல்றேன்!” என்று நகர,
'நானும் என்னோட அப்பனுக்கு தான் எல்லாமே செய்ய பார்க்கிறேன்' என்று மனதில் சொல்லி கொண்டாள்.

“போகும் போதே ஏதோ அகிலன் தம்பி நல்லவரா இருக்க போயி இந்த பொண்ணு அப்படியே வந்து இருக்கு, தனிமையை பயன்படுத்திக்க நினைக்கும் ஆளா இருந்தா இந்நேரம் இவ இப்படி நிக்க முடியுமா? பாரு காப்பாற்ற போயி இவரு மயக்கம் போட்டு விழுந்து கிடக்கிறார்” என்று சொல்லி கொண்டே காலேஜை ஒரு ரவுண்ட்ஸ் சுற்ற கிளம்பிவிட்டார்.

அவர் பேசி கொண்டே சென்றது சுடரின் காதில் விழுந்து தான் இருந்தது, ஏற்கனவே அவனின் மேல் காதலில் இருந்தவளுக்கு இன்னும் அகிலன் மீது காதலையும் தாண்டி அவனை ரசனையாக பார்த்தாள். அப்போது தான் மயக்கம் தெளிந்து எழுந்த அகில் தனது அருகே நின்ற சுடரை பார்த்ததும், எழுந்து நின்று கட்டி கொண்டு “உனக்கு ஒன்னும் ஆகல தானே! உனக்கு எங்கேயாவது அடி பட்டு இருக்கா!” என்று விலகி மேலும் கீழுமாக அவளை பார்த்து கொண்டு இருக்கும் போது அவனின் கையில் ரத்தம் இருப்பது பார்த்து, இந்த ரத்தம் என்று கையை சுற்றி பார்க்க, சுடரின் பின்னால் சென்று அவளின் முதுகை பார்த்தான், பிளவுஸ் மறைக்காத முதுகில் ஆழமாக குத்திய டைல்ஸ் பிசை இழுக்க மேலும் ரத்தம் வெளியே வந்தது, தனது கைக்குட்டையை வைத்து அமுக்கி பிடித்து கொண்டே அவளை அமர வைக்க போகும் போது அவளின் முந்தானையில் பெரிய கிழிசல் இருந்தது,

போனை எடுத்தவன் டாக்டர் வர வைக்க, அவரும் சுத்தம் செய்து ஒரு தடுப்பு ஊசியை போட்டு விட்டு மருந்தை கொடுத்துவிட்டு சென்று இருந்தார், இவ்வளவு நேரமும் பதறி கொண்டிருந்த அகிலனை ரசனையாக பார்த்த சுடரை காணாமல் விட்டு விட்டான் அவன்.

'இப்போது எங்கே போனது அவனுடைய பயம் பதட்டம் எல்லாம் என்னை பார்த்தாலே பத்து அடி தள்ளி நிற்பவனை இந்த காதல் எதுமே யோசிக்க விடவில்லை போலும்' என்று நினைத்தவளிடம், “ஏங்க சுடர் உங்க வீட்டு போன் நம்பர் தாங்க நீங்க வர நேரமாகும் சொல்லிட்டால் எல்லோரும் பயப்படாமல் இருப்பாங்க” என்று அவன் சொன்னதும் நினைவு வந்தவளாக,

“என்னோட போன் அந்த கேண்டீன் பக்கத்து ரூம்ல இருக்கும்” என்று சொன்னதும், “சரி அதை அப்புறம் எடுத்துக்கலாம் இப்ப நம்பரை சொல்லுங்க பேசிட்டு தேடலாம்” என்று சொன்ன அகியை பார்த்து, “சரி போனை தாங்க” என்று வாங்கியவள் தனது மாமாவிடம் பேசியவள் ஒரு மூன்று மணிநேரத்தில் வருவதாக சொல்லி வைத்தாள். அகிலுக்கும் அவனது தாய் அழைத்து இருக்க, நாளை வருகிறேன் வேலை இருப்பதாக சொல்லி போனை வைத்து விட்டான்.

அதற்குள் ரவுண்ட்ஸ் சென்ற வாட்ச்மேன் வந்து “தம்பி எழுந்திட்டுங்களா! இந்த பொண்ணு சரியான தைரியசாலி தான், நான் பார்க்கும் போதெல்லாம் யாருக்காவது அட்வைஸ் பண்ணும் இல்ல, திட்டி மிரட்டி கொண்டு இருக்கும் என்று சொன்னவர் உங்களுக்கு சாப்பிடக் ஏதாவது வாங்கி வரணுமா” என்று கேக்க, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணா நீங்க திறந்த ரூம்ல ஒரு போன் இருக்கும் அதை மட்டும் எடுத்துக்கொண்டு வாங்க நாங்க கிளம்புறோம்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தாள்.


கொஞ்ச நேரத்தில் அவரும் போனை எடுத்து கொண்டு வந்து நீட்ட, வாங்கியவள் சிநேகமாக புன்னகைத்து நன்றி சொல்லி கிளம்ப, அகிலனே அவளை அழைத்து சென்று இருந்தான், நடந்த உண்மை இருவருக்குமே தெரியும் இருந்தும் அதை பற்றி பேசவிரும்பாமல் அமைதியாக இருந்தனர், இந்த சூழ்நிலையில் அவளை ரசிக்கவும் காதல் பொழியவும் தோணாது அவளை வீடு சேர்த்தால் போதும் என்றே தோன்றியது அவனுக்கு, அதற்கு மாறாக சுடரோ அவனையே கண்களால் களவாடி கொண்டு இருந்தாள்.
 
  • Like
Reactions: shasri