• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 22

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
வழிநெடுக்க அவனை பார்ப்பதும், ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதும் என்று சுடர் இருக்க, பத்திரமாக அவளை வீடு சேர்த்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவன் சரத்தை எண்ணி ஆத்திரம் கொண்டான், நான் மட்டும் பார்க்காமல் இருந்து இருந்தால் என்னோட சுடரின் நிலைமை என்ன ஆகி இருக்குமோ! என்ற கோவத்தில் இருந்தான், ஒரு வழியாக அவள் வீடு வந்ததும் இறக்கி விட்டவன் ஏதும் பேசாமல் வருகிறேன் என்ற தலை அசைப்பு கொடுக்க இவளும் தலையை ஆட்டி அனுப்பி வைத்தாள்.

அவன் கார் மறைந்ததும் உள்ளே வந்தவள், “அப்பாடா!” என்ற பெரு மூச்சை இழுத்து விட்டு, “அம்மா தண்ணியை தாங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் அவளின் முன்னால் சொம்பை நீட்டினாள் மகேஷ்வரி. வாங்கிய வேகத்தில் குடித்து முடித்தவள்,

“மாமா அந்த சரத்தை என்ன பண்ண போறேன் பாருங்க, சும்மா அகிலன் முன்னாடி லேசா இழுத்துட்டு போகிற மாதிரி நடிக்க சொன்னா! வேண்டுமென்றே மயக்க மருந்து கொடுத்து உள்ளே இழுத்துபோட்டு விட்டான் இங்க பாருங்க!” என்று முதுகை காண்பித்து “எப்படி கீறி இருக்கு அவன் சரியான முரடான இருக்கான் இன்னும் பழைய பகையை மனசுல வைச்சி பழிவாங்கிட்டான்” என்று சொன்னவள் முன்னாடி கீழே விழுந்தான் சரத்.

“ஐய்யோ சுடர் என்னை மன்னிச்சிடு நான் வேண்டுமென்று பண்ணல, ஏதோ ஒரு வேகத்துல செய்துட்டேன்” என்று சொன்ன சரத்தை அடித்து வெளுத்து இருந்தான் அரவிந்த், சுடரின் முன்னால் நின்ற சரத்தையும் அரவிந்தையும் பார்த்த “விருதாச்சலமோ சரி விடுங்க இதுக்கு மேல பார்த்து நடந்துக்குங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மூவருமே சண்டை போடுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி இருந்தனர், ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காது என்று அடுத்தவர் சொல்லுவது போல் அவர்களின் நடவடிக்கை இருக்கும் ஆனால் உண்மை அது தான் இல்லை, இருவர் சண்டை போட்டால் சுடரை தவிர வேற யாரும் உள்ளே நுழையாமல் பார்த்து கொண்டு, அவளே தீர்வை தருவது போல் ஒரு மாயை உருவாக்கி இருந்தாள், ஆரம்பத்தில் சுடருடன் மல்லுக்கு நின்ற சரத் அவளின் எண்ணத்திற்கு உதவ முன் வந்தான், சரத்தின் குடும்ப செலவு தங்கையின் படிப்பு, அவனின் பெற்றோர் இருவருக்கும் அவர்களின் தோட்டத்திலே வேலை கொடுத்து பார்த்து கொண்டு இருந்தவளை எதற்கு பகைத்து கொள்ள வேண்டும் என்று அவளின் வழிக்கு செல்லாமல் பொறுப்பானவனா மாறி சென்ற அவனை எப்படி தனது திட்டத்திற்கு பயன்படுத்த முடியும், முரடான இருக்கும் போது அவள் பேச்சுக்கு எதிர் மறையாக செய்து கொண்டு இருந்தவனை வைத்து தனது காரியங்களை எளிதாக நடத்தி கொண்டால், ஆனால் இப்போது முழுதாக திருந்திய அவனை எப்படி பேசி சமாளிப்பது என்று யோசித்தவள் சரத் அரவிந்த் இருவரையும் அழைத்து தனக்கு உதவ வேண்டுகோள் விடுத்தாள், பெரியதாக ஒன்றும் இல்லை எப்போதும் போல் சண்டை போட்டு மேனேஜ்மென்ட் நிம்மதி கெடுத்தால் போதும் என்று சொல்லி இருந்தாள், எல்லாமே சரியாக தான் சென்று கொண்டு இருந்தது மகேந்திரன் பொறுப்பு துறக்கும் வரை, அவர் சென்ற பிறகு எதற்கு வீண் சண்டை எப்போதாவது ஒன்று இரண்டு சண்டை போட்டால் போதும் திடிரென சண்டை போடாமல் இருந்தால் சந்தேகம் வரும் என்று அவ்வபோது சண்டை போட்டனர்,

இதோ இன்று கூட அகிலனை எப்படியும் இவளுடன் சேர்த்து வைக்க விருத்தாச்சலம் போட்ட திட்டத்தை இந்த இருவர் வைத்து நடந்த இதை முழுமையாக அறியாத சுடர் தான் கொஞ்சம் பயந்து போனாள், வீட்டுக்கு வந்த பிறகு தான் உண்மையை அறிந்து கொண்டாள்,
“என்ன மாமா நீங்க அவரு சரியான பயந்தாங்கொளி என்னை காப்பாற்றி பதறி என்னிடம் காதல் சொல்லுவாரு நினைச்சி செய்தீங்க! ஆனா அவரு பயந்து மயக்கம் போட்டது தான் மிச்சம்” என்று சொன்னவள், தனக்காக அவன் பதறிய பதற்றம், எனக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று ஆராய்ந்த அவனின் தவிப்பு என்றும், கண்ணில் தெரிந்த காதல் என்ற அனைத்தையும் மறைத்தவள் தனது அறைக்கு சென்று அவனையே நினைத்து சந்தோஷமாக படுத்துகொண்டாள்,

'நீங்க அந்த மகேந்திரன் மகனாய் இல்லாமல் இருந்து இருக்கலாம் அகிலன்' என வருத்தமாக கூறியவள் மனதில் காதல் சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டு தான் இருந்து, வழக்கமாக காலையில் காலேஜ் கிளம்பிய சுடரை தடுத்து, “அம்மாடி ஒரு ரெண்டு நாளுக்கு வேலைக்கு போகாதே” என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தார், அவளுக்கும் அவரின் திட்டம் புரிவது போல் இருக்கவே வண்டியை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றாள். “என்ன இவ காலேஜ் கிளம்பாமல் பைக்கில் வெளியே போறா! ஒரு வேளை இன்னிக்கு காலேஜுக்கு லீவ் போட்டு இருப்பாளோ” என்று காலேஜ் பஸ்சுக்காக நின்ற ரகு யோசித்தான்.


சுடரை வீட்டில் விட்டவன் நேரே வந்துது காலேஜுக்கு தான் அவளை பின் தொடர்ந்து வந்த சரத் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தால் அதை ஆதாரமாக வைத்து அவனை துரத்திவிட வேண்டும் என்ற கோவத்தில் இருக்க, சரியாக அந்த குறிப்பிட்ட அறையை சுற்றியிலும் எந்த ஒரு சிசிடிவி இல்லாமல் இருந்தது, வெளியே வரும் சரத் கழிவறை இருக்கும் பக்கம் சென்று பிறகு கொஞ்ச நேரத்தில் விழா நடக்கும் இடத்திற்கு செல்வது போல் வெகு இயல்பாக இருந்தது.

ச்சை என்று கடிந்து கொண்டான் அந்த இருட்டிலும் அவள் இருந்த அறைக்கு முன்னால் சுற்றி முற்றி பார்க்க வெறுத்து போனவன், நல்லா பிளான் பண்ணி செய்து இருக்கான் என்று கோவமாக கத்தியவன், சிறிது நேரத்தில் அவள் என்ன செய்து கொண்டு இருப்பாள், சாப்பிட்டு இருப்பாளா? தூங்கி இருப்பாளா என்று யோசித்தவன் அவளுக்கு போனை போட்டால் என்ன! என்று அவளின் எண்ணிற்கு அழைக்க எண்ணி மொபைல் எடுக்கும் போது என்னோட நம்பர் உங்களுக்கு யார் தந்தாங்க என்று கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தவன் மூளையில் பல்பு எரியவில்லை போலும், இவளை பற்றிய பயோ டேட்டா காலேஜில் இருந்து எடுத்தேன் என்று தைரியமா சொல்லி சமாளிப்பதற்கு,

நம்ம வேணுமென்றால் ரகுவிற்கு போனை போட்டு கேட்டால் என்ன? என்று தோன்றினாலும் இந்த நடுஇரவில் போனை போடவேண்டாம் என்று யோசித்தவன் வீடு போய் சேர்ந்து அவளின் நினைவிலேயே தூங்காமல் யோசித்து கொண்டு இருந்தவனுக்கு பொழுது எப்போது விடியும் என்றே இருந்தது, பொழுது விடிந்ததும் சுடர் வரும் நேரத்திற்கு முன்னமே காலேஜ் சென்று காத்து கொண்டு இருக்க, காலேஜ் கேட் மூடுவதை பார்த்து சுடர் வரவில்லை போலும் என்ற முடிவுக்கு வந்தவன், ரகுவை அழைத்து இருந்தான்.

“சொல்லுங்க சார் என்ன விசயம் வர சொல்லி இருந்தீங்களா!” என்று அவனின் முன் நின்ற ரகுவை பார்த்து, “டேய் நானே அவ வராமல் இருக்கிறதுல கடுப்புல இருக்கேன் நீ வேற வெறுப்பேற்றிகிட்டு சும்மா இருடா” என்ற அகிலனை சீண்ட மனமில்லாமல் “என்ன ஆச்சி அகில் ஏதாவது பிரச்சனையா!” என அவனின் தோலில் கை வைத்து கேக்க,

அவனிடம் நேற்று நடந்ததை சொல்ல விருப்பமில்லாமல் “வெறுமெனவே சுடர் இன்னைக்கு வரல அதான் கொஞ்சம் கவலையா இருக்கு” என்ற அகியை பார்த்து கடுப்பான ரகு, “உங்க காதல் தேவதை வராமல் போனதுக்கா இப்படி கவலைபடுறீங்க! நீங்க இப்படியே உங்க காதலை சொல்லாமல் ஒரு தலை ராகமா இருக்க போறீங்களா சார்!, அவ இருக்கிற அழகுக்கும் தைரியத்துக்கும் மாப்பிள்ளை வரிசை கட்டி நிற்பாங்க, நீங்க இதயம் முரளி மாதிரி சொல்லாமலே பார்த்திட்டு இருக்க போறீங்க, யாரோ இடையில் வந்து அவளை கொத்தி கொண்டு போக போறாங்க பார்த்துக்க அகி” என்று இன்னும் பயத்தை கிளறிவிட்டு இருந்தான் அவன் பேச்சில் திகிலுடன் பார்த்த அகியை பார்த்து சிரித்தே விட்டான் ரகு.

“சரி அப்படி ஒன்னும் இல்லை அவங்க வீட்டுல அறுவடை பண்ணுறாங்க அதான் காலையிலே புல்லட்ல கிளம்பி போனா, நாளைக்கு வந்துடுவா வேணுமென்றால் ஆபீஸ் ரூம் போய் கேட்டு பாரு அவ ஏற்கனவே லீவ் சொல்லி இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே சென்றான். குறிப்பிட்ட ஒரு பெண்ணை பற்றி மட்டும் எப்படி விசாரிக்க தப்பா நினைத்தால் என்ன செய்வது என்ற யோசனையிலே அமைதியாக இருந்தான்,

அவளும் அடுத்த நாள் வேலைக்கு வந்துவிட, தனது அறையில் இருந்த சிசிடிவியை பார்க்க அதில் சுடரை கண்டதும் அப்படி ஒரு பரவசம் கொண்டான் அகிலன். அதற்கு பிறகு அவளை ஒருநாளைக்கு ஒரு முறையாவது பார்த்து ஏதோ ஒரு விசயம் கேட்டாவது அவளிடம் பேசி விடுவான், பெரும்பாலும் அது காலேஜ் சார்ந்த விஷயம் என்பதால் அவளும் எந்த ஒரு மறுப்போ கடுமையான சொல்லோ இல்லாமல் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லி விட்டு நகர்ந்து விடுவாள்.

நாட்களும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது ஆனால் அகிலன் காதலை சொல்லாமலே பார்வையிலே கிடத்தி கொண்டு இருந்தான், அவளும் உணராமல் இல்லை இருந்தும் அவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள், முன்பு போல் மாணவர்கள் சண்டையோ பிரச்சினையோ இல்லாமல் காலேஜ் அமைதியாக சென்று கொண்டு இருந்தது, ஏனென்றால் இதுவரை இங்கே இருந்த மகேந்திரன் இல்லாமல் போகவே, சுடர் இலக்கை மாற்றி இருந்தாள் அதற்கும் கொஞ்ச நாட்கள் காத்து கொண்டு இருந்தாள்,

சரத்தும் கல்லூரி முடித்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மகேந்திரன் கம்பனியில் சேர்ந்து இருந்தான், அரவிந்த் ஏற்கனவே இன்டெர்ஷிப் போன கம்பனியில் வேலை கிடைக்க அங்கேயே சேர்ந்து விட்டான். இப்போது மகேந்திரன் கம்பெனியில் நடப்பதை சுடருக்கும் அவளுடைய மாமாவிற்கும் சொல்லி கொண்டு இருந்தான் சரத், அரவிந்த் ஏற்கனவே சேர்ந்த கம்பனியில் இருந்து மாறுதல் பெற்று மகேந்திரன் கம்பனியின் போட்டி கம்பனிக்கு சென்று சேர்ந்து இருந்தான், இவையெல்லாம் சுடர் மற்றும் அவளது மாமாவின் ஏற்பாடே,

இதுநாள் வரை காலேஜில் நிம்மதி இல்லாமல் இருந்தவர், கம்பனியிலும் சிறிது சிறிதாக நிம்மதியை இழந்து கொண்டு இருந்தார், அரவிந்த் இவளுக்கு உதவி செய்தாலும் அதற்கு பணத்தை கொடுத்து அவன் பொருளாதார நிலையை உயர்த்தினாள். தன்னோட குடும்பம் போலவே அரவிந்த் குடும்பம் தந்தையை இழந்து வாடும் போது, இவன் ஒருவனே ஆதாரமாக இருந்தான் இவன் வளர்ந்தால் மட்டுமே குடும்பம் அடுத்த நிலைக்கு உயரும் என்பதை தெரிந்த சுடர் முதலில் உதவ முன் வந்தால், அவளும் தன்னை போலவே தந்தை இல்லாமல் வளர்ந்தவள் என்ற உணர்வே அவளுடைய செயலுக்கு துணையாக நின்றான் அரவிந்த்.

நாட்களும் கரைந்து கொண்டு தான் இருந்தது இனி அகிலனே வந்து பேசி கல்யாணம் செய்வது கடினம் என்பதை உணர்ந்து கொண்டு தீபாவிடம் பேசுவது போல் அவனோட காதில் விழுவது போல் சத்தமாக சொல்லி கொண்டு இருந்தாள் சுடர் அவள் சொன்ன வார்த்தையில் இந்த உலகமே தன்னை விட்டு நழுவது போல் வெளிறிபோய் விட்டான் அகி.
 
  • Like
Reactions: shasri