“ஹே தீபா இந்த கல்யாணம் குடும்பம் புருஷன் பத்தி எனக்கு கொஞ்சம் சொல்லேன், ஆம்பிளை மாதிரி இவ்வளவு நாள் சுத்திட்டு இருந்துட்டேன், எனக்கும் பெருசா காதல் சொல்றேன் சொல்லி எவனும் என் பின்னாடி சுத்தினதும் கிடையாது” என்று சொல்லியவளை தடுத்து நிறுத்தினாள் தீபா.
“அதுக்கு மேடம் கொஞ்சம் பொண்ணு மாதிரி நடந்துக்கணும் எப்பவும் சண்டியர் கணக்கா விறைப்பா சுத்திட்டு இருந்தால் எந்த பையன் பின்னாடி வந்து தைரியமா காதல் சொல்லுவான், மேடம் பார்க்கிறதே முறைக்கிற மாதிரி இருக்கும், இதுல இவ பேசுறது இருக்கே, ஓ மை காட் அப்படியே வீரமங்கை பற்றி பேச்சு போட்டியில் பேசுறது போல கணீர் என்று, இப்படி நீ சுத்தினால் எந்த பையன் தைரியமா உனக்கு முன்னாடி வந்து காதல் சொல்லுவான் அப்படியே சொர்ணா அக்கா மாதிரி!” என்று சொல்லி சிரிக்க, தூரத்தில் இருந்த அகிலும் “அப்படி சொல்லுங்க இப்படி இருந்தா, அவங்க முன்னாடி இல்ல பின்னாடி நிற்கவும் பயமா தான் இருக்கும்” என்று முணுமுணுத்தான்.
தீபாவின் பேச்சில் அவளை முறைக்க “ஐய்யோ முறைக்காதடி அழகான சொர்ணா அக்கா போதுமா!” என்று சொல்லி சிரிக்க,
“தீபா…!” என்று கடுப்புடன் அவளின் பெயரை உச்சரித்தாள் சுடர்.
“சரி.. சரி விஷயத்துக்கு வருவோம், என்ன மேடம் திடீரென காதல் கல்யாணம் புருஷன் பற்றி எல்லாம் பேசுறீங்க! இது உங்க டிபார்ட்மெண்ட் இல்லையே! அடி தடி, சண்டை இது தானே உங்க ரூட்டு! என்ன காத்து இந்த பக்கம் திரும்புது, என்ன விசயம் மேடத்துக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா என்ன?” என்றதும், அகியின் காதுகள் இன்னும் கூர்மையாக்கினான் சுடர் என்ன சொல்ல போகிறாள் என்ற ஆர்வத்தில்,
“நானது கல்யாணத்துக்கு ஆசைபடுவதாது, எனக்கு வயசு கூடிக்கிட்டே போகுதாம் ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சா எங்களோட கடமை முடியும் சொல்லி மாமா என்னிடம் சொல்லி உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் இருக்கேன், உனக்கு சம்மதமா அப்பா இல்லாத பொண்ணுக்கு ஒரு அப்பனா நான் என்னோட கடமை செய்யணும் சொல்லி, மாமா அவங்க அண்ணன் தங்கை பாசமலர் படத்தை ஓட்டி விட்டார், ஒரே செண்டிமெண்ட் சீன் நேற்று முழுக்க, அம்மாவும் கோவில் குளம் சொல்லி இங்கே இருக்க மாட்டாங்க, அவங்க இப்ப கூட ஒரு மடத்துக்கு கிளம்பினாங்க, மாமா தான் அம்மாவை பிடிச்சி வைச்சி சம்மதம் வாங்கி இருக்காங்க, அம்மாவும் உங்க பொண்ணு உங்க விருப்பம் சொல்லி கிளம்பிட்டாங்க, தரகரை கூப்பிட்டு எனக்கு ஏற்ற வரன் இருந்தா சொல்லி விட இருக்காரு, அவரு போற வேகத்தை பார்த்தால் எப்படியும் ஒரு மாதத்துலா என்னோட கல்யாணம் நடந்திடும் போல” என்று சொல்ல,
“வாழ்த்துக்கள் சுடர் நீயும் என்னை மாதிரி குடும்ப இஸ்திரியா மாற போற!” என்று சொன்னவளை விநோதமாக பார்த்து, “அதென்ன இஸ்திரி!” கேள்வி கேட்டாள் “அது பேச்சுக்கு சொல்றது தான் அதெல்லாம் ஆராய கூடாது, மாப்பிள்ளை பார்த்ததும் கண்டிப்பா எனக்கு அவரு போட்டோ எனக்கு காட்டணும்” சொன்னவள் மாணிக்கம் வருவதை பார்த்து “சரி நான் என்னோட புருஷன் கூட கிளம்புகிறேன்”என சொல்லி விடை பெற,
இதையெல்லாம் தூரத்தே நின்று கேட்டவன் தான் துடித்துடித்து போனான், விட்டால் அழுதுவிடுவேன் என்பது போல முகத்தை வைத்தவன் நேராக தனது காரில் ஏறி வேகமாக ஓட்டி சென்றான், “அப்போ சுடர் கல்யாணம் பண்ண போறாங்களா? எனக்கு அவங்க கிடைக்க மாட்டாங்களா! என்னோட காதல் அவங்களுக்கு புரியலையா?” என
(அதுக்கு சார் வாயை திறந்து சொல்லி இருந்து இருக்கணும்)
தனக்கு தானே பிதற்றி கொண்டு வந்தவன், எங்கே செல்கிறோம் அறியாமல் வண்டியை ஓட்டியவன், வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு வண்டியை ஓரமாக நிறுத்தினான், எந்த இடம் என்று சுற்றி முற்றி பார்க்க ஒரே இருட்டாக இருந்தது. மேப் போட்டு பார்த்து வண்டியை இயக்கினான் வீட்டை நோக்கி,
மொத்த சத்தையும் இழந்தது போல தளர்ந்த நடையில் சோகமா வரும் மகனை பார்த்த கல்யாணி வாசலை நோக்கி ஓடி வந்தாள், “டேய் கண்ணா அகிலா என்னடா ஆச்சி எதுக்குடா இப்படி வர, என்னங்க.. என்னங்க!” என்று கணவனை சத்தம் போட்டு கூப்பிட அவரும் அடித்து பிடித்து வேகமாக அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தார்.
“என்னமா எதுக்கு இப்படி சத்தம் போடுற என்ன பிரச்சினை! கம்பனியில் தான் ஒரே பிரச்சினையாக இருக்கு என்றால் இங்கேயும் இப்படி சத்தம் போட்டா எப்படி இவ்வளவு வசதி பணம் இருந்து என்ன பிரயோஜனம், மனுஷன் நிம்மதியா இருக்க முடியுதா?” என்ற மகேந்திரனை முறைத்து பார்த்து உள்ளே போன குரலில் “அதுக்கு கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கணும்!” என்று குத்தலாக பேசியவள் பேச்சில் இதுவரைக்கும் இருந்த ஆர்பாட்டம் அடங்கி போய் அமைதியாக, “எதுக்குமா இப்ப கூப்பிட்ட?” என்று இறங்கி வந்தார்.
சோஃபாவில் பொத்தென்று அமர்ந்த மகனை காண்பித்து, “பையன் வரும் போது எதையோ இழந்தவன் மாதிரி சோகமா வந்தான் இதுவரைக்கும் அவன் இப்படி வந்ததே கிடையாது, எனக்கு பயமா இருக்கு, கொஞ்சம் என்னவென்று கேளுங்களேன்!” என்று சொல்லி அகிலுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
மகேந்திரனும் அகிலனிடம் சென்று அவனை உற்று பார்த்து, “என்னடா நீ காதலிச்ச பொண்ணு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி போன மாதிரி இடிந்து உக்காந்துட்டு இருக்க!” என்று சொன்னதும் வெடுக்கென தனது தந்தையின் பக்கம் திரும்பி “ஐய்யோ அப்பா பேச்சுக்கு கூட அந்த மாதிரி சொல்லாதீங்க!” என்று கோவமாக சொன்ன அகிலை பார்த்த மகேந்திரன் சிரித்து விட்டு, “அப்ப நீ ஒரு பொண்ணை காதலிக்கிற அப்படி தானே!” என்ற கணவனை முறைத்தாள் கல்யாணி.
“என்னோட பையன் யாரையும் லவ் பண்ண மாட்டான், எங்க ராகவன் அண்ணா பொண்ணு அம்முவை தான் கட்டிப்பான் சும்மா என் பையன் மனசை கலைக்க பார்க்காதீங்க!,” என்று இருவரும் பேசி கொண்டு இருக்க, “ஐய்யோ ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா! நானே கடுப்புல இருக்கேன், நீங்க வேற சண்டை போட்டுகிட்டு, எப்பவோ காணாமல் போன குடும்பத்தை கண்டு புடிச்சி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணனுமா சும்மா இருமா”வெறுப்பாக சொன்னவன், சிறிது நேரம் கண்ணை மூடி ஆழ்ந்து நீண்ட பெரிய மூச்சை விட்டவன்,
“நான் ஒரு பொண்ணை விரும்புறேன்” என்று இருவரையும் பார்த்து சொல்லி அவர்களின் பதிலை எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருந்தான், “அப்படி போடு என்ன!, பொண்ணுகிட்ட காதல் சொன்னதும் அடிச்சிட்டாளா! அதான் சோகமா வந்தியா” என்று மகேந்திரன் கேக்க
“டேய் என்னோட சத்தியம் என்ன ஆகிறது என்னோட அண்ணியும் நானும் அப்பவே பேசிக்கிட்டது அவ என்னோட மருமகளை வரணும் சொல்லி நான் தான் கேட்டேன் இப்ப வாக்கு மாறினால் என்ன அர்த்தம்” என்றவளை கடுப்பாக பார்த்த மகேந்திரன்,
“ஹே அது எப்பவோ நடந்த விசயம் விளையாட்டாக சொன்னது அதே போய் பெருசுபடுத்துகிட்டு, அதுவும் போக அவங்க எங்கன்னு போயி தேடுவ சும்மா பழசை பேசாமல் இப்ப நடக்க வேண்டியதை பாரு” என்று மனைவியின் எண்ணத்திற்கு முற்று புள்ளி வைத்தார் மகேந்திரன்.
“இப்ப நான் பேசட்டுமா இல்லை நீங்களா பேசி நீங்களே சண்டை போட்டுக்குங்க! நான் கிளம்புறேன்” என்றவனை தடுத்து நிறுத்தினார் மகேந்திரன், “அவ கிடக்கிறா நீ சொல்லு அவ நம்ம வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ற பொண்ணு தானே! யார இருந்தாலும் அப்பா பேசி முடித்து காட்டுறேன்” என்று வசனம் பேச, கல்யாணி முறைத்து கொண்டு இருந்தாள்.
அகில் வாய் திறக்கும் முன்பே “எனக்கு தெரிந்து அந்த பொண்ணு சுடர்கொடி என்று நினைக்கிறேன் என்ன சரியா!” என்று சொன்னதும் அதிர்ச்சியாக மகேந்திரனும் ஆச்சரியமாக அகிலனும் கல்யாணி முகத்தை பார்த்தனர். “எப்படி மா சரியா என்னோட மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்ட” என கேக்க, “நீ என்னிடம் பேசுறது பாதி அவளை பற்றி தான் எப்படியும் வண்டி இப்படி வந்து நிற்கும் நினைச்சேன்” இவ சொல்ல,
“அதெப்படி நம்ம காலேஜில் வேலை செய்யும் பொண்ணு என்னோட மருமகளா ஏற்றுக்கொள்ள முடியும்” என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க, கல்யாணி மகிழ்ச்சியில் யாரும் அறியா வண்ணம் சிரித்தாள்.
தனக்கு பிடித்த பொண்ணு இவன் கல்யாணம் பண்ணவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவருடைய பணக்கார சம்மந்த ஆசையும் அடிபட்ட சந்தோசம் கல்யாணிக்கு.
( நம்ம எப்போதும் அப்படி தானே! நமக்கு ஒரு கண்ணு போனால், எதிரிக்கு இரண்டு கண்ணு போயி இருக்கு சொல்லி ஆறுதல் படுவோம், அப்படி தான் கல்யாணியும் தனக்கு விருப்பமான பெண்ணை மகன் கல்யாணம் பண்ணவில்லை என்றதும் வருத்தம் கொண்டவள், புருஷனோட பணக்கார சம்மதம் என்ற கனவுக்கு மகன் மண்ணை அள்ளி போட்டதில் அவ்வளவு ஆனந்தம்.)
“எனக்கு சுடர் தான் புடிச்சி இருக்கு கல்யாணம் பண்ணால் அவங்களை தான் பண்ணுவேன், இல்லையென்றால் நான் இப்படியே இருந்துட்டு போகிறேன் யாரையும் கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயம் படுத்தினால் என்னோட முடிவு வேற மாதிரி இருக்கும்!” என்று சொல்லி வேகமா அவனது அறைக்கு சென்றான். இருவரும் கோவமாக சென்ற அகிலனை பார்த்து விட்டு அவர்களது அறைக்கு சென்று இருந்தனர்.
யாரிடமும் பேசாமல் சோகமாக காலேஜ் செல்வதும் வீட்டுக்கு வருவதுமாக இருந்த அகிலனை பார்த்து சிரித்து கொண்டாள் சுடர், “ஷாக் ட்ரீட்மெண்ட் நல்லவே வேலை செய்து போலியே! ஆனால் இது பத்தாது இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டால் தான் என்னோட வழிக்கு வருவான்” என்று யோசித்தவள், தனது அடுத்த பிளானை நடைமுறை படுத்த தயாராகி இருந்தாள்.
சோகமாக சுற்றிய அகிலனை பார்த்த ரகு பிடிவாதமாக கேன்டீன் அழைத்து சென்றான், அகிலன் செல்வதை பார்த்து கொண்டு இருந்த சுடர் சிறிது நேரம் கழித்து அங்கு செல்லலாம், என்ன பேச போகிறார்கள் என்று கவனித்தாள்.
சோகமாக இருந்த அகிலை இயல்பாக மாற்றவே கேண்டீன் அழைத்து வந்தான் ரகு இப்போதும் அமைதியாக இருந்த அகிலை எரிச்சலாக பார்த்து “எதுக்கு இப்படி முகத்தை தொங்க போட்டு இருக்க, என்ன தான் பிரச்சினை சொன்னால் தானே! சரி செய்ய முடியுமா என்று யோசிக்க முடியும், அதை விட்டு இப்படி சோகமாக இருந்தால் எல்லாம் சரியா போகுமா?” என்ற ரகுவை கோவமாக பார்த்த அகில்.
“எல்லாம் உன்னோட வாய் இருக்கே அது தான் காரணம், எந்த நேரத்தில் சுடருக்கு மாப்பிள்ளை பார்க்க போறாங்க சொல்லி வாயை வைச்சியோ அப்படியே நடக்குது” என்று கோவமாக பேச ஆரம்பித்து சோகமாக முடித்தான்.
“அட என்னப்பா கல்யாண வயசு வந்தா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களா! எங்க ஊருல சுடர் தான் இவ்வளவு வயசு ஆகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கிறதே! அதுவும் அவ படிச்சதுக்கு அர்த்தம் வேண்டும் சொல்லி தான் வேலைக்கு வரா, அவங்க வசதிக்கு பணம் எல்லாம் ஒரு விசயமே இல்ல, இதோ நீயும் அவளை பார்த்தே மூன்று வருஷம் ஓடி போச்சி, உனக்கே இப்ப கல்யாணம் பண்ற வயசு தான், உங்க வீட்டுல எப்ப பேச்சு எடுத்து உனக்கு கல்யாணம் ஆகிறது, எப்படியும் நீயா போயி சுடர்கிட்ட காதல் சொல்ல போறது இல்லை” என்று சொல்லும் போது இது தான் சரியான நேரம் என்று அவர்கள் அமர்ந்த இருக்கைக்கு அருகில் வந்து ரகுவிடம் பேச்சை கொடுத்தாள் சுடர்.
“டேய் ரகு என்ன! டீ குடிக்கிற போல” என அகிலன் அருகில் இருந்த ரகுவை பார்த்து நக்கலாக கேக்க, “இவ என்ன வம்பு இழுக்கிற மாதிரி பேசுறா என்னவா இருக்கும், உஷாரா இரு ரகு தேவையில்லாமல் இவ கிட்ட வாயை கொடுத்து மாட்டிக்காதே!” மூளை சொன்னாலும் வாய் சும்மா இல்லாமல்,
“ஆமாம் டீ தான் குடிக்கிறேன், நீ வேண்டுமென்றால் சமோசாவும் வாங்கி தாயேன் எங்க ஊரு தலைவி சுடருக்கு புண்ணியமா போகும்” என இவனும் சொல்ல, எதிரே அமர்ந்து சுடரை பார்ப்பதும் பிறகு போனையும் டீயை குடிப்பதுமாக இருந்த அகிலனை ஒரு முறை பார்த்துவிட்டு,
“சரி வாங்கி தரேன் அதுக்கு எனக்கு நீ ஒரு உதவி செய்யணும்” என்றதும் ஆர்வாமாக “என்னது சுடருக்கு ஒரு உதவி, அதுவும் இந்த ரகு என்ன ஒரு அதிசயம்! வியப்பாக கேக்க, “அடங்கு டா” என்று கையை வாயில் வைத்து சைகை காண்பிக்க ரகுவும் அமைதியாக, “இப்ப இருக்கிற பசங்களுக்கு எந்த மாதிரியான பைக் பிடிக்கும், நானும் பைக் வைச்சி இருக்கேன் எனக்கு புல்லட் பிடிக்கும் ஆனா சீர் கொடுக்கும் போது அதைவிட இன்னும் விலை கூடுதலாகவும் அந்த பைக்கை பார்த்தும் என்னை கட்டிக்க போறவருக்கு ஆச்சரியத்தில் வாயை திறக்கணும்” என்று அகிலனை பார்த்து சொல்ல,
“ஐய்யோ இவ என்ன இப்படி சொல்லுறா!” உதடு முணுமுணுத்தாலும் கண்கள் அகிலனை பாவமாக பார்த்தது, “சரிடா ஒரே ஊர்காரங்க பேச ஆயிரம் இருக்கும் நீங்க பேசிட்டு வாங்க!” என்று சொல்லி வேகமாக நடந்து சென்றவன் கண்ணில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது.