• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 24

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
“என்ன சுடர் எப்ப கல்யாணம்!” என்று கேட்டதும் இவ்வளவு நேரமும் போகும் அகிலனை பார்த்தவள் “ஹான் என்ன கேட்ட?” என்று மீண்டும் கேக்க, “சரியாபோச்சு போ எப்ப கல்யாணம் என்று கேட்டேன்” என்றான் ரகு.

“கல்யாணம் இன்னும் முடிவாகலை மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க, சரியான வரன் வந்ததும் அடுத்த முகூர்த்ததில் கல்யாணம் வைக்கணும் பேசிட்டு இருக்காரு மாமா, வர ஞாயிறு பொண்ணு பார்க்க வரபோறாங்க! என்று சொன்னவள் மனதில் அப்படி ஒரு வலி அவனின் சோகமான முகமே மீண்டும் மீண்டும் வந்து இம்சை செய்தது, மாப்பிள்ளை போட்டோ இருந்தால் காட்டேன் பார்க்க” என்று ரகு கேட்டதும் “நான் எங்க காட்ட இல்லாத மாப்பிள்ளை போட்டோவை” என தனக்குள்ளே பேசியவள் “என்னிடம் இல்லை ரகு மாமா கிட்ட இருக்கு ஆனால் பார்க்க நல்லா தான் இருந்தாரு” என்று சொல்லி கிளம்பிவிட்டாள்,

ஆளுக்கொரு திசையாக சென்ற இருவரையும் பார்த்த ரகு பெரிய மூச்சை இழுத்துக்கொண்டு “என்ன நடக்க போகுதோ!” என்று சொல்லி மலரை தேடி சென்றான்

“பாவம் மனுஷன் ரொம்பவே கவலைப்பட்டு போறாரு இருந்தும் அவருக்குள்ள அவ்வளவு காதல் வைச்சி என்ன பண்ண போறாரு எனக்கான காதலை என்னிடம் சொன்னால் தான் என்னவாம் சரியான அழுத்தம்” என்று அவனை திட்டினாள், பழிவாங்கும் எண்ணத்தை தாண்டி அவளின் காதல் வேகமாக வளர்ந்து கொண்டு இருந்தது.

கண்கள் கலங்க தனது வண்டியை எடுத்து கொண்டு வந்தவன், நேராக தனது தாயை தேடி சென்று அணைத்து கொண்டு “அம்மா எனக்கு சுடர் இல்லாமல் வாழ்க்கையையும் இல்லை வாழவும் விருப்பமும் இல்லை” என்று மகன் சொன்னதை கேட்ட பிறகு பெற்றவள் பதட்டமாக கணவருக்கு போனை போட்டு வரவழைத்து இருந்தாள்.

“என்ன அகிலன் காரை காணோம்!” என்று யோசனையாக இருந்த சுடர் வாட்ச்மேன் அழைத்து விசாரிக்கும் போது மதியமே கிளம்பி விட்டதாக சொல்லி சென்றார். சுடர் உடனடியாக “மாமா நம்ம வீட்டில் இருக்கும் அப்பா போட்டோவை எடுத்து மறைச்சி வைங்க, அப்படியே அம்மாவையும் வெளியே வர வேண்டாம் சொல்லுங்க எனக்கு என்னமோ இன்னைக்கு அந்த அகிலன் அவங்க குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு பொண்ணு கேக்க வருவங்களோ என்று தோணுது!” என்று சொன்னவள் காலேஜ் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள், சுடர் சொன்னது போல வீட்டை ஒழுங்கு படுத்து இருந்தனர் சாந்தா மீண்டும் ஒருமுறை சரி பார்த்து கொண்டாள்,

கல்லூரி வாகனத்தில் இருந்து இறங்கியவள் தனது வீட்டு வாசலில் அகிலனோட காரை பார்த்ததும் சிரித்து கொண்டே, “அப்படி வா வழிக்கு” என்று சொல்லியவாரே வீட்டிற்கு உள்ளே சென்றதும்,

“இதோ பொண்ணே வந்துட்டா” என்று சாந்தா சுடரை பார்த்து சொல்ல, அப்போது தான் பார்ப்பது போல் அமர்ந்து இருந்த அகிலன் குடும்பத்தை பார்த்து, “சார் நீங்க என்ன குடும்பத்தோட வந்து இருக்கீங்க? அகிலன் சார் ஏதாவது பிரச்சனையா நான் இப்ப தான் காலேஜில் இருந்து வரேன் பெருசா எந்த பிரச்சனையும் இல்லையே!” என்று அவள் பேசி கொண்டே போக, கல்யாணி எழுந்து வந்து “அம்மாடி இங்க நாங்க உன்னை என்னோட பையன் அகிலனுக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்கோம்” என்ற சொன்னதும் அகிலனை பார்த்து முறைக்க, அவனோ அவளை பார்த்தும் பார்க்காதது போல விருத்தாச்சலம் பக்கம் திரும்பி “சார் நான் சுடரை கல்யாணம் பண்ண ஆசைபடுறேன், இதுவரைக்கும் அவங்ககிட்ட கூட நான் சொல்லவில்லை, நீங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறதா சுடர் பேசியதை வைச்சி தெரிஞ்சி கிட்டேன், எனக்கு அவங்க இல்லாமல் வாழ்வது என்பது கனவுல கூட நினைச்சி பார்க்க முடியல!” என்று பேசிய மகனை சமாதானமாக தொடையில் தட்டி அமைதிபடித்திய மகேந்திரன், “நாங்க சுத்தி வளைச்சி பேச விரும்பல நேரா விஷயத்துக்கு வரேன் எனக்கு இருக்கிற எல்லா சொத்துக்கும் என்னோட ரெண்டு பசங்களுக்கு தான், சொத்தை தாண்டி அவனோட சந்தோஷம் தான் முக்கியம் நினைச்சி உங்க பொண்ணை கேக்க வந்து இருக்கோம்” என்றவர் விருத்தாச்சலம் பதிலைத் எதிர் பார்த்து அவரின் முகத்தை பார்க்க,

“எல்லாம் சரி தான் ஆனால் வர ஞாயிறு பொண்ணு பார்க்க ஒரு குடும்பம் வராத சொல்லி இருக்காங்க, அப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்றது!” என்று யோசனையாக இழுத்த விருதாச்சலத்திடம், “அவங்களை வரவேண்டாம் சொல்லிடுங்க அவங்க வேற பொண்ணை பார்க்க சொல்லுங்க!” என்று கடுப்பாக சொன்ன அகிலனை அறையில் இருந்தவாறே பார்த்து சிரித்தாள்.

உடனே தரகரிடம் பேசுவது போல் பேசி போனை வைத்தார் சுடர் மாமா. “சரி நீ வா சுடர் வந்து புடவை கட்டிக்கொண்டு வந்து காபியை கொடுமா” என்று சாந்தா அழைக்கவும் உடனே கல்யாணி “இவ்வளவு நேரமும் அவளை பார்த்திட்டு தானே இருந்தேன் எதுக்கு புதுசா புடவை கட்டி வந்து நிற்கணும் காபியை மட்டும் கொடுங்க” என்று சொல்லி காபியை குடித்து விட்டு கிளம்பி சென்றனர்.
அடுத்த வாரமே நிச்சயமும் இரண்டு மாதத்தில் கல்யாணமும் என்று பேசி முடித்து இருந்தனர், இந்த விஷயம் கல்லூரி வரை பரவுவதற்குள் கல்யாணமும் முடிந்து இருந்தது.

(அகிலன் சுடரை காதலித்தது மட்டுமே சில எபிசோட்டிற்கு முன்னால் எழுதி இருப்பேன், இப்ப இவளோட பக்கமும் எழுதி இருக்கேன், சுடரின் காதலும் உண்மை தானே!)



இவ்வளவு நேரமும் தீபாவின் மடியில் தலையை வைத்து யோசித்து கொண்டு இருந்தவள், ஒரு முடிவு எடுத்தவளாக கையில் அவன் அணிவித்த மோதிரத்தை
வருடி வெக்க புன்னகையை தீபா பார்க்கும் முன் சிரித்து விட்டு எழுந்து கொண்டாள். “என்னடி இப்ப ஓகே வா, ரொம்ப நேரமா இங்கேயே இருந்தால் வேலையை யாரு பார்க்கிறது!” என்று சொன்ன தீபாவை பார்த்து லேசாக சிரித்து விட்டு “சரி வா போகலாம்” என்று அழைத்து சென்றாள். எப்போதும் காலேஜ் வந்தால் வீட்டிற்கு செல்லும் போது தான் காரிடம் அகிலனுக்காக காத்து கொண்டு இருப்பாள், மதிய உணவை நேரத்தில் கூட அவனிடம் செல்லாது தனது நட்புகளுடன் கதை பேசி சாப்பிடும் அவளுக்கு இன்று அவனை பார்க்க வேண்டும், பேச வேண்டும் ஆசை அவளை விரட்ட, அவளின் உணர்வுக்கு அடிபணிந்து நடந்தாள் சுடர்.

எப்போதும் அவனே தேடி வந்து பேசி செல்பவன் இன்று அவளே வந்து பேசினாள் என்ன ஆகுவான் அவன். எப்போது மதியம் வரும் அவனை பார்க்க எப்போது செல்வோம் என்று அடிக்கடி கடிகாரத்தை பார்த்து தவித்து போனவள், “ச்சை இந்த நேரம் ஏன் இவ்வளவு மெதுவா போகுது” என்று கடிகாரத்தை கடிந்து கொண்டவள் எழுந்தே விட்டாள். “ஹே என்னடி என்ன ஆச்சி எதுக்கு வேலையே கவனிக்காமல் கடிகாரத்தை பார்க்குற, எழுந்து எங்க போக போகிறதா ஐடியா! என்று அவளை ஒருவித சந்தேகத்துடன் பார்த்த தீபாவை பார்த்து,

“ஹான் என்னோட புருஷனை பார்க்க போறேன் இப்ப என்ன அதுக்கு? ஒழுங்கா வேலை செய் இல்லாட்டி சம்பளத்தில் இருந்து பணத்தை புடிச்சிட்டு கொடுக்க சொல்லிடுவேன் பார்த்துக்க!” என்று மிரட்டிய சுடரை ஆச்சரியமாக பார்த்து “சரிங்க ஓனர் அம்மா உங்களை ஒரு வார்த்தையும் கேள்வியும் கேக்கல, நீங்க போங்க தாயி!” என்று கைகூப்பி அவளை அனுப்பினாள் தீபா.

அவள் சைகையை பார்த்து சிரித்தவள் “அது அந்த பயம் இருக்கட்டும்” என்றதும் சுடரின் தலையில் ஒரு கொட்டு வைத்து “சும்மா இங்கே நின்று என்னோட வேலையை கெடுக்காமல் உங்க புருஷனை பார்க்க கிளம்புங்க” என்று அவளை மனதிருப்தியுடன் அனுப்பி வைத்தாள். “எப்படியோ நீ நல்லா இருந்தாலே அது போதும்டி எனக்கு” என்று துள்ளலாக செல்லும் சுடரை பார்த்து சொன்னாள் தீபா.

மகிழ்ச்சியாக அவனை காண சென்றவள் அனுமதி கேட்டு உள்ளே நுழைய, “என்னங்க சுடர் நீங்க இந்த ரூம் வரத்துக்கு பெர்மிஷன் வாங்கனும்மா என்ன? நமக்குள்ள எதுக்கு இந்த மாதிரி ஃபார்மாலட்டி கம் ஆன்” என்று அவளை அழைக்க, அவளும் புன்னகையுடனே அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர போனவளை கைபிடித்து தான் அமர்ந்த நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தவன் சில புகைப்படங்களும் எடுத்து கொண்டான்.
நாற்காலியில் இருந்து எழுந்துகொண்டவள் அவன் இருக்கிற இடத்திற்கு சென்று அவன் கண்களோடு தனது கண்ணை கலக்க விட்டவள் நெடு நேரமாக அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

அந்த கண்களில் இருவருமே ஒருசேர தொலைந்து தான் போனார்கள் எப்படியும் தன்னை கட்டுபடுத்தி கொண்டவன் 'ம்ம்' என்று தனது தொண்டையை செருமி கொண்டவன் அவளின் பார்வையில் இருந்து தன்னை விலக்கி “சொல்லுங்க சுடர் ஏதாவது ஃபைல் சைன் பண்ணனுமா? ஆனா நீங்க எந்த ஃபைல்லும் எடுத்திட்டு வந்த மாதிரி தெரியலையே?” என்று அவளை பார்த்து கேக்க, “ம்ம் நான் ஆபீஸ் விசயமா வரல, என்னோட புருஷன் கூட மதியம் சாப்பிடலாம் என்று ஆசையா வந்தேன் ஆனா நீங்க!” என்று சொன்னவள் அமைதியாகிவிட, “அய்யயோ சுடர் என்ன நீ ஒரு வேகத்துல உண்மையை உளறி கொட்டிட்ட!” என்று தனது நாக்கை கடித்தவள் சோஃபாவில் போய் அமர்ந்து கொள்ள,

அவள் சொல்லிய வார்த்தையில் சிரித்தவன் 'என்ன மேடம் புதுசா இருக்கு நானா வந்து ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாமா கேக்கும் போது இது காலேஜ் நீங்க ஓனர் நான் ஒரு நார்மல் ஸ்டாப் இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டா நல்லவா இருக்கும் என்று வசனத்தை பேசுவீங்க! ஆனா நீங்களே வந்து இருக்கீங்க என்ன ஒரு ஆச்சரியம்!' என்று கேட்க தோன்றியதை வெளிப்படையாக கேட்ட பின்பு அவள் பழையபடி சென்றுவிட்டாள் என்ன செய்வது? ஓர கண்ணால் அவளை ரசித்துவிட்டு, போனை எடுத்தவன் இரண்டு பேருக்கும் தனியாக வெவ்வேறு இடத்தில் உணவை வைக்கும் நபருக்கு போனை போட்டு இருவருக்கும் தனது அறையிலே கொண்டு வந்து தருமாறு சொல்லி போனை வைத்து விட்டான்.

இவ்வளவு நேரமும் அவனை பார்க்காமல் விழிகளை தாழ்த்தி அவன் பெயரை பொரித்த மோதிரத்தை தொட்டு பார்த்து கொண்டு இருந்தாள் அதை அகியும் பார்த்து சொல்லமுடியா சந்தோசத்தில் திளைத்தான், அவளின் அருகே அமரும் தைரியமும் கொடுத்தது அவளின் செயல்கள், சுடரின் அருகே அமர்ந்தவன் அவளின் கையைப் பிடித்து தனது கையுடனே வைத்து கையை நீட்டி இருவரின் பெயரையும் சேர்த்து வைக்க அவளின் கையோடு தனது கையோடு கோர்த்து “இந்த பெயர் இப்போ ஒண்ணா சேர்ந்து இருக்குற மாதிரி நாமும் காலம் முழுக்கவும் சேர்ந்தே இருக்கணும் சுடர்” என்று அவளது கையை தனது நெஞ்சோடு அணைத்து கொண்டு சொன்னான்.
ஒருவித மௌன நிலையில் இருவரும் இருக்க, அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு அவளிடம் அவளை இதை தாண்டி தொட்டால் என்ன செய்வாளோ என்ற பயம் அவனுள், இருந்தும் ஒரு தைரியத்தை வரவழைத்து அவளின் கன்னத்தை தனது இரு கைகளாலும் தாங்கியவன் அவளின் சம்மதம் வேண்டி அவளின் கண்ணை பார்க்க, அவனையே பார்த்தவள் பார்வையில் வழக்கமான ஒரு திமிரும் கோபமும் இல்லாமல் ஒரு மென்மை அதிலும் அவனை மயக்கும் ஒரு ஊடுருவல் பார்வையை கண்டவனுக்கு ஆர்வம் கூடிவிட அவளை இன்னும் நெருக்கும் போது அவளின் கண்கள் தாமாக மூடி கொண்டது இதுவே அவளுக்கு சம்மதம் என்பதை சொல்லாமல் சொல்ல, இன்னும் சும்மா இருக்காதே அகி என்று அவனோட மனசு சொல்ல, அவளை நெருங்கும் போது,

கதவை தட்டும் சத்தம் கேட்டு அவள் கண் விழிக்க, சட்டென்று தனது கையை அவள் தாடையில் இருந்து எடுத்தவன் வேகமாக அவ்விடத்தை விட்டு, வேகமாக தனது இருக்கையை அடைந்தவன் அமர்ந்து கொண்டு இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக்கொண்டான், சுடரும் போனை எடுத்து பார்ப்பது போல் தன்னை காண்பித்து கொண்டாள். இரண்டாவது முறை கதவு தட்டும் சத்தத்தில் “ஹான் எஸ் கம் இன்” என்று சிரித்தவாறு சொன்னவன் வாய் மட்டும் தான் சிரித்தது அவன் கண்களோ முறைத்து கொண்டு தான் இருந்தது, “சார் அம்மா சாப்பாட்டை கொடுத்து விட்டு இருக்காங்க!” என்று கொண்டு வந்ததை வைத்துவிட்டு வந்தவன் கிளம்பிவிட, விட்டதை தொடர்ந்தால் என்ன என்று வேகமாக எழுந்தவன் நோக்கம் புரிந்தவள் அவனை பார்த்து “கையை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் நான் எடுத்து வைக்கிறேன்” என்று அவள் எழுந்து நடக்க, காற்று போன பலூன் போல் முகத்தை வைத்து கொண்டு “சரி” என்று அவனும் கையை கழுவ செல்ல, சிரித்து கொண்டே அவளும் பரிமாற அவளை பாவமாக பார்த்து கொண்டே சாப்பிட்டான்.
 
  • Haha
Reactions: shasri