• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 25

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
பெண்ணவள் பரிசத்தில் தன்னை உணர்ந்தவன் அதை தொடர விரும்பி அவளை நெருங்கும் போது கதவு தட்டும் சத்தத்தில் மோகநிலை அறுபட்டு ஏக்கமாக அவளை பார்த்தவன் அவள் பரிமாறிய உணவினை சாப்பிட்டு, விட்டதை மீண்டும் தொடங்கலாம் என்று நினைத்து அவளை நெருங்கி செல்ல.

சாப்பிட்ட பாத்திரத்தை ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு, கையைக்கழுவி திரும்பும் போது மிக நெருக்கமாக அவளிடம் நின்ற அகியை என்ன என்பது போல் கண்ணை உருட்டி கேட்டாள், அந்த கண்ணிலே ஏதும் இல்லாமல் வெறுமையை பார்த்தவன், “ஐய்யோ போச்சா! கோல்டன் சான்ஸ் போச்சி!” என்று வருத்தமாக சொல்ல, “என்ன கோல்டன் சான்ஸ் அகி” என்று அவனை பார்த்து இவளும் கேக்க, “ஒன்னும் இல்லை சுடர்!” என்று சோகமாக திரும்பி தனது இருக்கையை நோக்கி நடந்தான், 'ஐய்யோ பாவம்' என்று முணுமுணுத்தாள் “சரி அகி நான் கிளம்புறேன்” என்று அவனுக்கு அருகில் சென்று சொன்னவள் அவன் எதிர் பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடிவிட,

அவள் இதழ்பட்ட கன்னத்தை தொட்டு பார்த்தவன் “சுடர் சுடர்!” என்று சந்தோசத்தில் துள்ளி குதித்து எழும் போது அவளோ கதவை திறந்து சென்று இருந்தாள், “எஸ்! எஸ்!” என்று உற்சாகமா கத்தியவன் இது கனவா இல்லை உண்மையா என்று மீண்டும் மீண்டும் தனது கன்னத்தை தொட்டு பார்த்து வியந்து போனான், எல்லாமே இந்த மோதிரம் செய்த அதிசயம் என்று தனது கையில் இருந்த சுடர்கொடி என்ற எழுத்தை தொட்டு பார்த்து அதற்கு ஒரு முத்தத்தை கொடுத்து 'ம்ம்' என்று பெரிய மூச்சை உள்ளே இழுத்து விட்டு சிரித்தவனுக்கு வேலையில் கவனம் இல்லாமல் எப்போது மாலை வரும் என்று காத்து கொண்டு இருந்தான்.

அவனை விட்டு ஓடி வந்தவள் “என்ன சுடர் அவர் கொடுப்பதற்கு முன்னாடி நீயே முத்தத்தை கொடுத்து இருக்க, உன்னை பற்றி அகி என்ன நினைப்பார்!” என்று தனக்குள்ளே பேசியவள் மனமோ அவரு தான் உனக்கு முதல் முத்தம் கொடுத்தாரு மறந்துட்டியா! ஊருல நீ குளிச்சிட்டு வரும் போது தலையை கோதுவது போல முதுகில் முத்தம் கொடுத்தாரே என்று அவளுக்கு ஆறுதலாக சொல்ல, “ஆமாம் ஆமாம் அவரு தான் முதல் முத்தம் கொடுத்தாரு நான் இல்லை” என்று தனக்கு தானே பேசிய சுடர் மெல்லிய கீறல் போல இதழை வளைத்தவள், அவன் நினைப்பிலே வேலையை கவனிக்க சென்று இருந்தாள்.

முகம் முழுவதும் பிரகாசமாக நடந்து வந்தவள் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு கணினியை இயக்காமல் நாற்காலியில் சுழன்று கொண்டும் திடீரென சிரிப்பது என்று இருப்பதை பார்த்த தீபாவிற்கு அனைத்தும் புரிந்து கொண்டாள் அவளை சீண்டி பார்க்க ஆசைபட்டு, “ஹலோ மேடம் என்ன கண்ணை திறந்து கொண்டு கனவு காணுறீங்க போல!” என்று அவளை உலுக்கி கேட்டவளை முறைத்து பார்த்து “இப்ப என்னடி உனக்கு பிரச்சனை” என்று முகத்தை சற்று கோவமாக வைத்து கொண்டு கேட்டாள்.

“கற்பனை உலகத்தில் றெக்கை கட்டி பறக்கும் கொடியே! சுடர் கொடியே! காதல் பித்தம் கூடி போயி இப்படி தனியா சிரிக்கிறது நல்லவா இருக்கு, தூரத்தில் இருந்து உன்னை யாராவது பார்த்தால் பைத்தியம் முத்தி போச்சி நினைக்க போறாங்க, சீக்கிரம் அதுக்கான மருந்தை தேடி போ தாயி உனக்கும் சேர்த்தே கூட நான் வேலை பார்க்கிறேன், ஆனால் தயவு செய்து இப்படி வெக்கமும் சிரிப்புமா என் பக்கத்துல இருந்து வெறுப்பேற்றும் வேலை மட்டும் வச்சிக்காதே!” என்று அவளை விரட்ட தீபா முயற்சி செய்யும் போது,

கதவை திறந்து உள்ளே வந்தான் அகிலன், அவள் முத்தம் கொடுத்த பிறகு வேலையில் கவனம் செலுத்தமுடியாமல் அங்கும் இங்கும் நடந்தவன் இருப்பு கொள்ளாமல் அவளை பார்த்து விட வேண்டும் என்று முடிவு எடுத்தவனாக அவளை தேடி வந்து விட்டான். “பாருடி லவ் பார்ட்ஸ்க்கு தனியா இருக்க முடியலை அதான் தன்னோட இணையை தேடி வந்து இருக்கு!” என்று சுடரின் காதில் சொல்ல, “ஹே சும்மா இருடி அவர் வேலை விசயமா வந்து இருப்பாரு” என்று அமைதியாக வேலை செய்வது போல் பாவலா செய்து கொண்டு இருந்தாள் சுடர்.

வந்தவன் சுடரிடம் நேராக வந்து “ஏங்க சுடர் வாங்க வெளியே போகலாம்” என்று நேரடியாக விஷயத்திற்கு வர, “அவளோ எனக்கு வேலை இருக்கே!” என்று இழுத்தாள், அவள் அப்படி சொன்னதும் யோசனையாக நின்ற அகிலன் “ரொம்ப அவசரமான வேலையா! நாளைக்கு பார்க்க முடியாதா?”என்று கேட்டு அவளின் பதிலுக்காக காத்து கொண்டு இருக்க, தீபாவோ எழுந்து “சார் நான் அவளோட வேலையை பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்று சொல்ல அகிலன் முகம் மலர்ந்து “ரொம்ப தாங்க்ஸ்” என்று அவளிடம் சொல்லிவிட்டு சுடரின் முகத்தை பார்த்தான்.

“கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன் நீங்க காரில் இருங்க” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து இருந்தாள், “என்ன தீபா அவரு கேட்டதும் சரி சொல்லிட்ட கொஞ்சம் கெஞ்ச வைக்கலாம் நினைச்சேன்” என்று சொல்ல, “அடிப்பாவி எப்படி மா ஒரே நாள்ல இப்படி ஒரு மாற்றம்” என்று கேட்டவளிடம், “என்னோட வாழ்க்கையையும் பழிவாங்கனும் என்ற எண்ணத்தையும் பிரித்து பார்க்க ஆரம்பித்துவிட்டேன் தீபா. காதல் வேற, பகை வேற என்னோட காதல் வாழ்க்கையை வாழணும் ஆசைப்படுகிறேன் அதான் இந்த மாற்றம்” என சொல்லி சிரித்தவள் “அப்ப நான் வரேன்” என்று சுடர் சொல்ல, “எப்படியும் ரெண்டு நாளைக்கு இந்த பக்கம் இரண்டுபேரும் எட்டி பார்க்க மாட்டிங்க போலியே! போகிற ஸ்பீட் பார்க்கும் போது” என்று குறும்பாக சொல்லி வாயில் கையை வைத்து ஒரு மார்க்கமாக சிரித்து கொண்டே அவள் சொல்ல,

அவளின் தலையில் தட்டி “மேடமும் இப்படி தான் இருந்தீங்களா என்ன?” என்று அவள் வீசிய பந்தைய அவளுக்கே திருப்பி வீசினாள் சுடர்.
“சரி சரி சார் ரொம்ப நேரமா வெயிட் பண்ணுவாரு நீ கிளம்பு” என்று மழுப்பலாக பேசி அனுப்பி வைத்தாள் தீபா.

காரில் அவளுக்காக காத்திருந்த அகிலன் அவள் வருவதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி, காரின் கதவை அவளுக்காக திறந்து விட்ட, புன்னகையுடன் அமர்ந்து கொண்டாள் சுடர். வேகமாக காரை இயக்கியவன் “அவளை பார்த்து எங்கே போகலாம் சுடர்” என்று கேட்டதும் “பீச் போகலாம்” என்று அவள் சொன்னதும் போன முறை சென்ற நினைவு வந்து சென்றது அவனுக்கு, அவனின் முகத்தை பார்த்தவள் சிரித்து கொண்டே “பயப்படாதீங்க! நம்மை யாரும் தொந்தரவு பண்ணாமல் இருந்தால் நல்ல பொண்ணா நானும் நடந்துப்பேன்” என்று அவனுக்கு தைரியம் சொன்னாள்.

அதில் சிரித்தவன் “எனக்கு பிடித்த விஷயமே உங்களுடைய தைரியமும், அந்த மிடுக்கான தோரணையும் தான் சுடர், பெரும்பாலும் நான் பார்த்த பொண்ணுங்களை விட நீங்க ரொம்ப வித்தியாசமா இருக்கீங்க!” என்று சொன்னவன் வண்டியை ஓட்டி கொண்டே அவளை பார்த்து “என்னங்க நான் இவ்வளவு பேசுறேன் நீங்க அமைதியா வரீங்க” என்று பேசியவன் அவளை பார்க்க, “அகிலன் இவ்வளவு தைரியமா இந்த சுடரிடம் இப்ப தான் பேசுறாரு அதான் பார்க்கிறேன்” என்றதும் அமைதியாகி விட்டான் அகி.

சிறிது நேரம் அமைதியாக இருக்க கியர் மாற்றும் அவனது இடது கையின் அருகே அவளின் கையை பார்த்தவன் கியரை மாற்றிய பிறகு அவளின் கையை பிடித்து தனது நெஞ்சில் வைத்து வண்டியை ஓட்டி கொண்டே பேசினான். “உங்களை பார்த்து பயம் என்றெல்லாம் சொல்லிட முடியாது!” என்று சொன்னவனை அவள் பார்க்க, சிறியதாக சிரித்தவன் “ஆனால் கொஞ்ச பயம் தான்” என்றதும் சுடர் சிரித்துவிட அவளின் சிரிப்பில் சேர்ந்து கொண்டவன் சிரித்து கொண்டே அவளின் கைகளுக்கு முத்தம் வைத்தான்.

முத்தம் வைத்ததும் அவளின் முக மாறுதலை பார்க்க அவளோ குறுநகை புரிய, இன்னொரு முத்தம் கொடுத்து தனது நெஞ்சுக்குள்ளே அவளது கையை தாங்கி கொண்டான். காரை விட்டு இறங்கியதும் ஓடி சென்று அவளது புறம் கதவை திறக்க, “நானே திறந்துகிறேன் அகில் எனக்கு நீங்க இப்படி திறக்கிறது சங்கடமா இருக்கு” என்று சொன்னவளிடம் “என்னோட பொண்டாட்டிக்கு நான் கதவை திறந்து விடுறது எனக்கு சந்தோசமா இருக்கு இதுல சங்கடப்பட ஒன்றுமே இல்லை சுடர்” என்று சொன்னவன் அவளின் கையை எவ்வித பயமும் பதட்டமும் இல்லாமல் தைரியமாக பிடித்து கொண்டு நடந்தான்.

நடக்கும் போதே கண்ணில் தெரிந்த பூவிற்கும் பெண்ணிடம் இருந்து பூவை வாங்கியவன் அதை சுடரிடம் கொடுத்துவிட்டு, “உங்களை கேக்காமல் வாங்கியது தப்பு தான் ஆனால் உங்க தலையில் பூ இல்லாமல் உக்காந்துட்டு இருக்கும் போது நிறைய பேரு இடையில் வந்து பூ வாங்க சொல்லுவாங்க, நாம பேசுறதுக்கு கொஞ்ச இடைஞ்சலாக இருக்கும் அதுக்கு தான்” என்றவன் ஒரு பழ சாலட் வாங்கி கொண்டு “இப்ப போகலாம் யாரு நம்ம பேசும் போது இடையில் வருவார்கள்” என்று மகிழ்ச்சியாக நடக்க, அவன் கொடுத்த பூவினை தலையில் சூடிகொண்டவள் அதை தொட்டும் பார்த்தாள்.

ஒரு கையில் பழமும் ஒருகையில் அவளின் கையை பிடித்து கொண்டும் நடந்தவன் கடலின் கரையை தொட்டு சென்ற நீரில் இருவரும் காலை நனைக்க, ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டு அலையை ரசித்து கொண்டு இருக்க வேகமாக வந்த அலையில் இருவரும் பாதி நனைந்து இருந்தனர். “போதும் அகில் காலை நனைச்சது அப்படி உட்காரலா!” என்று கேட்டாள்.

கடலை விட்டு கரையை நோக்கி இருவரும் நடக்க, எதிரே வந்த போலீஸ் சுடரை பார்த்து “என்னமா வேலுநாச்சியா புருஷனோட பீச் வந்தீங்களா!” என்று கேட்க “ஆமாம் இதுல சாருக்கு ஏதாவது வருத்தமோ” என்று மிடுக்காக அவள் சொல்ல, “நான் யாருமா உன்னை கேட்க நீயாச்சி உன்னோட புருஷனாச்சி நல்லா இருந்தால் சரி! அப்ப நான் கிளம்புகிறேன்” என்று சொல்லி விட்டு விசிலை ஊதி கொண்டே அவர் நடக்க “என்னங்க சார் அந்த பொண்ணை மட்டும் தனியா விசாரிச்சிட்டு வரீங்க, தெரிந்த பொண்ணா” என்று புதியதாக டியூட்டி சேர்ந்த போலீஸ் கேட்க அன்று நடந்த விசயத்தை சொல்லி கொண்டே நடந்தார். “ம்ம் இப்படி தான் பொண்ணுங்க தைரியமா இருக்கணும் சார்” என்று அவருடன் பேசி கொண்டே நடந்தார்.

போலீஸ் சென்றதும் இருவரும் சிறிது நேரம் கடல் காற்றை வாங்கியவாறு பேசிய பிறகு, வீட்டிற்கு கிளம்பலாம் என்று எழுந்துக்கொள்ளும் போது அவளின் செருப்பை அவள் குனிந்து கையில் எடுத்து நடக்க ஆரம்பித்தாள் அவளின் செருப்பை வாங்கி தனது கையில் எடுத்துகொண்டு நடந்தான், அவள் மறுத்தும் எடுத்து வந்தவனை பார்த்தவளுக்கு இவனை காதலித்ததில் கர்வம் கொண்டாள், பொது இடத்தில் இத்தனை நபருக்கு மத்தியில் பெரிய பணக்காரன் கௌரவம் பார்க்காமல் மனைவியின் செருப்பை எடுத்து கொண்டு வருவது என்பது அவ்வளவு சிறிய விசயமாக எடுத்து கொள்ளாமல் அவனை பெருமையாக பார்த்தவள் இன்னுமே அவனில் தொலைந்து தான் போனாள்.
 
  • Like
Reactions: shasri