இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்து கொள்வதும் சிரித்து கொள்வதுமாக வீடு வந்து சேர்ந்தனர், வீட்டிற்கு வருவதற்கு முன்பே டின்னருக்கு வெளியே செல்ல இருப்பதாக தாயிடம் சொல்லியவன் கூட எங்களுக்காக காத்திருக்க வேண்டாம் என்று அழுத்தி கூறி இருந்தான்.
வெளியே முதல் முறையாக இருவரும் ஒரு டின்னருக்கு சென்று இருந்தனர் பெயரளவில் உணவை உண்டவர்களுக்கு ஒருவித தாபங்களே அவர்களை வேற உலகத்தில் சஞ்சரிக்க வைத்து இருந்தது. சாப்பிடும் போது அவளை பார்த்து அகிலன் கண்ணை அடிப்பதும் பிறகு சிரிப்பதுமாக இருக்க, அவள் சுற்றும் முற்றும் பார்த்து உள்ளே போன குரலில் “அகி இது ஹோட்டல் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்!” என்று வெக்கபட்டு சொல்ல, அவனும் சிரித்து விட்டு அமைதியாக சாப்பிட்டான்.
இருவரும் வீட்டிற்குள் நுழையும் போது சகு தான் இவர்களுக்காக காத்து கொண்டு இருந்தாள், அவர்களின் காரை பார்த்ததும் சமையலறை சென்றவள் ஃப்ளாஷ்கில் பாலும் இரண்டு டம்ளர் அதோடு தண்ணீர் பாட்டிலும் எடுத்து கொண்டு வந்து “பாப்பா மேலே எடுத்து கொண்டு வரவா, இல்லை..” என்று தயங்க “வேண்டாம் அக்கா நானே எடுத்து கொண்டு போறேன்” என்றவள் தூங்கி வழியும் சகுவை அனுப்பி வைத்தாள்.
மேலே வந்தவள் ப்ரெஷ் ஆகி இரவு உடைக்கு பதில் ஒரு பட்டு
புடவை அணிந்து இருக்க, அகிலனும் வேட்டி சட்டையில் தயாராகி வந்தான், அவனிடம் சகு கொடுத்த பாலை நீட்ட அவனோ அவளை பார்த்த பார்வையில் தலையை குனிந்து கொண்டு, தனக்கான பாலையெடுத்து நகர்ந்து விட்டாள். வழக்கமாக இருவருக்கும் இடையில் தலையணையை வைத்து விட்டு படுப்பவள் இப்போது வைக்கலாமா வேண்டாமா என்று யோசனையில் இருந்தவள், கையில் எடுத்த தலையணையை இருவருக்கும் இடையில் வைத்த பிறகு அதன் மேலே தனது கையை அகிலன் தொடும் தூரத்தில் வைத்து அவனையே பார்த்தவாறு படுத்து கொண்டாள்.
விளக்கை அணைத்து விட்டு படுத்த அகிலன் எப்போதும் மெத்தையின் ஓரமாக படுத்து கொள்வதும் அவள் தூங்கிய பின்பு தலையணையை கட்டி கொண்டு இருக்கும் அவளின் கையோடு தனது கையை கோர்த்து கொண்டு சிறிது நேரம் படுத்து கொண்டு இருப்பவன் மீண்டும் விலகி தனியாக படுத்து கொண்டு இருந்தான், இன்றைய நாளில் நடந்த நிகழ்வுகள் அவனை தைரியமாக முன்னேற ஒரு உந்துதல் கொடுக்கவே, அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் முகம் தங்கமாக ஜொலிக்க, எப்போதும் அவள் தூங்கிய பின்பு கையை பிடிப்பவன் இன்று விழித்து கொண்டு இருக்கும் போதே தலையணையில் இருந்த அவளது கையை பிடித்து அவளை பார்க்க என்ன என்பது போல் அவள் கண்ணை காண்பிக்க, ஒன்றுமில்லை என்பது போல் தலையை அசைத்தான். சின்னதாக சிரித்த சுடர் அவனிடம் பேசாமல் கோர்த்த கையை இன்னும் அழுத்தமாக பிடித்தாள், இதுவே
அவனுக்கு போதுமானதாக இருந்தது, இன்னுமே அவளிடம் நெருங்க குறுக்கே தடங்கலாக இருந்த இரு தலையணையில் ஒன்றை காலால் உதைத்தும் மற்றொன்றை கையால் எடுத்து கீழே போட்டு இருந்தான்.
அவளை நெருங்கும் போது ஒருவித படபடப்பு அவனுள் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அவளை முழுவதுமாக நெருங்கி ஓர் கணவனாக அவளுள் தொலைந்து போக மனைவியாக அவன் தேடலுக்கு உதவியவள் ஒரு சேர தொலைந்து தான் போனார்கள். ஆரம்பத்தில் தனது தொடுதலுக்கு சுடர் என்ன சொல்லுவாளோ எந்த மாதிரி என்னிடம் நடந்து கொள்வாள் என்று தயங்கியவன் அவளின் அமைதியும் வெக்கத்துடன் வரும் மெல்லிய புன்னகையே அவளுக்கும் இதில் விருப்பம் இருக்கிறது என்று தயங்காமல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருந்தான்.
ஒருவாறு ஆசுவாசப்படுத்தி கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு படுத்து கொண்டு இருந்தனர். “சுடர் இது கனவா இல்லை நிஜமா கூட தெரியலை அவ்வளவு சந்தோசமா இருக்கு, இப்படி நாம சேர்ந்து வாழ்வோம் என்று நினைத்து கூட பார்க்கல!” என்று சொல்லி அவள் புறம் திரும்பி நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். அவனது முத்தத்தை வாங்கியவள் திருப்பி அவனுக்கு முத்தம் கொடுக்க, “இந்த சுடர் யாருக்கும் கடனாளியா இருக்க மாட்டாள்!” என்று சொல்ல மீண்டும் மீண்டும் அவன் கொடுக்க அவளும் திருப்பி கொடுத்து கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்குமே சிரிப்பு வந்து விட, அவனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தவளோ அவளின் இதய பகுதியில் வருடி கொண்டே,
“அகில் நான் ஒண்ணு கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!” என்று கேக்க, “நீங்க!” என்று அவன் சொன்னதும் அகியை பார்த்து “இன்னும் எதுக்கு நீங்க வாங்க ஏங்க சொல்லி கூப்பிட்டு இருக்கீங்க அகி, நீ வா போ இப்படி கூப்பிடுங்க” என்று அவள் சொல்ல, “போக போக மாற்றிக்கொள்ளலாம் சுடர் அதுக்கும் டைம் எடுக்கும் தானே! உடனே வா போ வருவது கொஞ்சம் கஷ்டம் கண்டிப்பா டி போட்டு பேசுற அளவுக்கு முயற்சி செய்கிறேன்!” என்று சொன்னவன் தாடையை ஆட்டி முத்தம் வைத்தாள்.
“சரி ஏதோ சொல்ல வந்தீங்களே” என்று அவளுக்கு எடுத்து கொடுக்க, “ஏதாவது கடினமான சூழ்நிலையில் நமக்குள்ள சண்டையயோ அல்லது அந்த இடத்துல நான் கெட்டவளா சொல்லும் போதோ என்னிடம் உண்மையை கேட்க முயற்சி செய்வீங்க என்று எனக்கு சத்தியம் பண்ணுங்க!” அகில் கையை நீட்டி இவள் கேட்க, “எதுக்கு இப்படி கேள்வி கேட்கிறீங்க சுடர் கண்டிப்பா நமக்கு அந்த மாதிரி கடுமையான சூழலோ அல்லது உங்க மேல எந்த ஒரு தப்பும் இருக்காது இப்படி அர்த்தமில்லாமல் கேட்காதீங்க! ரொம்பவே நேரமாச்சு தூங்கலாம்” என்று அணைத்து கொண்டவன் சீக்கிரமே தூங்கி போனான்.
“இல்ல அகில் ஏற்கனவே உங்களை காதலிச்சு தடுமாறி கொண்டு இருக்கேன், இனியும் தாமதிக்க மாட்டேன் பிறகு உங்களுக்காக அவரை மன்னித்தாலும் மன்னித்து விடுவேன்” என்று அவனை பார்த்து மனதில் சொல்லி கொண்டவள், “என்னை மன்னிச்சிடுங்க மாமா என்னோட காதல் அடுத்த கட்டத்துக்கு போய் நாங்க வாழ
ஆரம்பிச்சிட்டோம் கண்டிப்பா எனக்கு புடிச்சி தான் வாழவே ஆரம்பித்து இருக்கேன், இது என்னோட காதலுக்கு நான் கொடுக்கிற மரியாதை கண்டிப்பா உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியம் மீறினாலும் என்னோட கொள்கையில் உறுதியா இருக்கேன்!” தனது போனில் இருந்த விருத்தாச்சலம் புகைபடத்தை பார்த்து பேசியவள், அதற்கான வேலைகளையும் திட்டமிட்டபடியே படுத்தாள்.
நாட்களும் நகர நகர அவர்களின் இல்லற வாழ்க்கையும் அதிக பிணைப்பு கொண்டு பலமாக மாறி கொண்டு இருந்தது, அவளை கட்டி அணைக்காமல் தூக்கம் கொள்வது என்பது அவனுக்கு கடினம், அகியின் பரிசமும் வாசமும் இல்லாமல் இவளின் நாள் முழுமை பெறாது என்பது போல் அவ்வளவு நெருக்கமாக இவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருந்தது.
அவப்போது மகேந்திரன் பிரச்சினைகளை சந்தித்து கொண்டு தான் இருந்தார், அதை சொல்லி புலம்புவதை பார்த்து ஆறுதல் படுபவளுக்கு இது போதாது இன்னும் அனுபவிக்கனும் என்று சொல்லி கொள்பவள், அதற்கான திட்டமும் வகுத்து தனது மாமனிடம் சொன்னவள் “சரியா இந்த நேரத்தில் கிளம்புவார்” என்று குறிப்பிட்ட நேரத்தை சொல்லி இருந்தாள். அவருடைய மனசும் குழம்பி இருந்தால் தான் நான் நினைத்தது நடக்கும் என்று எண்ணியவள், மகேந்திரன் கிளம்பும் போது அவருக்கு உணவை பரிமாற சென்றவள் தீபாவை தனக்கு சிறிது நேரத்தில் போனை போட சொல்லி தான் அவரிடம் சென்றாள்.
உணவை சாப்பிடும் மகேந்திரன் காதில் விழும் அளவிற்கு அவருக்கு அருகிலே நின்று பேசினாள், “என்ன சொல்ற தீபா ராகவனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடிச்சா! நேற்று நல்லாத்தானே பேசிட்டு போனாரு எப்படி திடீரென!” என்று பதட்டமாக சுடர் பேசவும் அவளுக்கு அருகில் அகியும் வந்து என்ன என்பது போல் ஜாடை காண்பிக்க, இருங்கள் என்பது போல் அவளும் கையை காண்பித்தாள், பேச்சுக்கு இடையில் தனது மாமனார் முகப்போக்கையும் குறித்து கொண்டவள் விடாது இன்னும் மேற்கொண்டு பேசினாள்,
அதற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாமல் பாதி சாப்பாட்டிலே மகேந்திரன் எழுந்து கொள்ள, “சரிடி நான் காலேஜ் வந்ததும் நம்ம ரெண்டு பேரும் அவரை பார்க்க போகலாம்” என சொல்லி போனை வைத்தாள். “என்ன மாமா பாதியிலே எழுந்துட்டீங்க!”என கேட்க, “இல்லைம்மா எனக்கு போதும்” என்று சொன்னவர் முகம் பதட்டமாக இருந்தது, “யார் அந்த ராகவன்?” என்று யோசனையாக கிளம்பிக்கொண்டு இருக்க, அவள் என்ன பதில் சொல்வாள் என்பதற்காகவே மெதுவாகவே கிளம்பினார்,
“சுடர் என்ன ஆச்சி யார் அந்த ராகவன் எதுக்கு இப்படி பதட்டமா பேசினீங்க? நீங்க பேசினது வரைக்கும் யாருக்கோ ஆக்சிடென்ட் ஆகினது போல இருக்கு! அவருக்கு ஒன்னும் இல்லையே!” என்று அகி பதற்றாக கேட்க, அவள் என்ன பதில் சொல்லுவாள் என்று மகேந்திரன் பார்த்தார். லேசாக பதட்டமாக இருந்தவளை அமர வைத்து தண்ணிரை நீட்டினான் அகி, “அவரு நம்ம காலேஜ் பக்கத்துல கடையை வைச்சி இருக்காரு அகி, நல்ல மனுஷன் யாரையும் கோவமாக பேசினது கூட இல்லை, அவரு கடையில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு போகும் போது, யாரோ நோட்டமிட்டு பணத்தை பறிக்க நினைச்சி இருக்காங்க பணத்தை காப்பாற்ற போராடி கொண்டு இருக்கும் போது பின்னாடி வந்த வண்டி அவரை இடிச்சு இருக்கு!” கொஞ்சம் கஷ்டம் சொல்றாங்க என்று சொன்னவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல், “நாம வேண்டும் என்றால் போயிட்டு வருவோமா!” என்று அகி கேட்க,
“ஐய்யோ இல்லாத ராகவனுக்கு நான் எங்கே போகிறது!” என்று யோசித்தால், “வேண்டாம் அகில் நானும் தீபாவுமே போய் பார்த்திட்டு வந்துடுவோம் நீங்க காலேஜ் வேலையை பாருங்க, காலேஜில் இருந்து தான் போக போறோம்” என்றவள் சாப்பிடாமல் வருத்தமாக கிளம்புவது போல் நடிக்க, மகேந்திரனோ தன்னிலையை மறந்து கடந்த கால நினைவில் பயம் கொண்டு அமர்ந்து கொண்டவரை நெருங்கினாள் சுடர்.
“என்ன மாமா சீக்கிரம் கிளம்பனும் சொல்லிட்டு இருந்தீங்க இப்போ அமைதியா உட்கார்ந்துட்டு எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க என்ன ஆச்சி!” என்று கேட்க அப்போது தான் சுயத்திற்கு வந்தவர் “ஹான் கல்யாணி எங்கே காணோம்” என்று சமாளிப்பதற்காக கேட்டார், “அத்தை உங்களிடம் சொல்லிட்டு தானே கோவிலுக்கு போனாங்க நானும் அவங்க சொல்லும் போது பார்த்தேனே! இப்படி மறந்து திருப்பி கேட்கிறீங்க என்னவோ ஆச்சி உங்களுக்கு!” என்று அவரை ஆராயும் பார்வை அவள் பார்க்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் கிளம்புகிறேன்” என்று சொல்லி கிளம்பினார்.
மகேந்திரன் கிளம்பிய பிறகு சிறிது நேரத்திலே அகியும் சுடரும் காலேஜுக்கு கிளம்பினார்கள். காலேஜ் வந்தவள் “சரிங்க நான் தீபாவுடன் போயிட்டு வந்துடுறேன் என்னை எதிர்பார்க்காமல் சமத்தா சாப்பிட்டு வேலையை பாருங்க!” என்று அவனை கிள்ளி முத்தம் வைத்து அவள் கிளம்ப, அவளின் கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து கொண்டவன் அவள் கன்னத்திலே முத்தம் வைக்க, “ஹே என்ன பண்றீங்க! இது காலேஜ்..” என்று அவள் கேட்க “இது நம்ம கார்” என்று அவன் கண்ணை அடித்து சொன்னவன் அவளுக்கு கதவை திறந்து விட்டு “சீக்கிரம் வந்திடு சுடர் உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது” என்று கொஞ்சியவனை “சீக்கிரம் வந்துவிடுகிறேன்” என்று சொல்லி கொண்டே தீபாவிடம் சென்றாள்.
அவள் சென்று அரை மணிநேரத்திலே அகிலனுக்கு போன் கால் ஒன்று வந்தது “ஐய்யோ எப்படி ஆச்சி இப்ப எப்படி இருக்காங்க? எந்த ஹாஸ்பிடல்! நா.. நான் உடனே வந்துடுறேன் கொஞ்ச நேரம் அங்கேயே இருங்க!” என்று பதட்டமாக பேசியவன் கலங்கிய விழிகளோடு அவசர அவசரமாக தனது காரை இயக்கினான்.