அகிலனோடு கொஞ்சி பேசி வந்தவள், நேராக சென்றது தீபாவிடம் தான் சுடரை பார்த்ததும் “ஹே லூசு எதுக்கு இப்படி சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் போனில் பேசின! எனக்கு ஒன்னுமே புரியலை நீயா கேள்வி கேட்டு நீயா பதில் சொல்லிட்டு போனை வைச்சிட்ட, என்ன தான் உன்னோட பிளான் சுடர்”. “அதெல்லாம் போகுற வழியில் பேசிக்கலாம் இப்ப வா எனக்கு ரொம்ப பசிக்குது அப்புறம் நடக்கிற சம்பவத்துல சரியா சாப்பிட கூட முடியாது” என்று தீபாவிற்கு புரியாத மாதிரி பேசினாள்.
காலேஜ் விட்டு வெளியே வந்தவள் ஒரு நல்ல உயர்தர சைவ உணவகத்திற்கு வந்து இருந்தாள், தனக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருக்க, இவளை வாயை பிளந்து பார்த்தவள் வாயிலும் எச்சில் ஊற தான் செய்தது, “ஹே எரும உனக்கு வேண்டுமென்றால் எடுத்து சாப்பிடு எதுக்கு இப்படி பார்க்கிற அப்புறம் எனக்கு வயிறு வலிக்க போகுது என்று சொல்ல, நான் பார்த்து எல்லாம் உனக்கு வயிற்றுவலி வராது இவ்வளவும் ஒரே நேரம் வெளுத்து கட்டுற இல்ல அதுக்கு தான் வயிறு வலிக்க போகுது!” என்று சொன்னதும் “கண்ணு வைக்காதடி கொலபசி பீலிங்கா இருக்கிற மாதிரி ஒரு நடிப்பை போட்டு வந்திருக்கேன், அதை மெயின்டன் பண்றது எவ்வளவு கஷ்டமா இருக்கு” என்று சொன்னவள் விக்க, “ஹே பார்த்துடி பொறுமையா சாப்பிடு” என்று அவளுக்கு தண்ணிரை கொடுத்தாள் தீபா.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தவள் பணத்தை கொடுத்துவிட்டு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சென்று இருந்தாள், நாள் முழுக்க சுற்றி திரித்துவிட்டு, காலேஜ் விட இரண்டு மணி நேரம் இருக்கும் போது தான், காலேஜ் வந்து சேர்ந்தனர். “சரிமா தாயே நான் கிளம்பலாமா!” என்று கிண்டலாக கேட்க, “உங்களுக்கு சுதந்திரம் கொடுத்து அரை மணி நேரம் அச்சு, தாராளமாக கிளம்பலாம் போயி மாணிக்கத்துடன் டூயட் பாடினாலும் சரி! இல்லை சண்டை போட்டாலும் சரி! எனக்கு எந்த ஆட்சபனையும் இல்ல” என்று சொல்ல, “உத்தரவு மகாராணி!” என்று சொல்லி அவளின் காதை திருகி சொல்லி சென்றாள்.
அகிலனோட அறை கதவை திறந்த சுடருக்கு அவன் இல்லாமல் வெறும் அறையே காட்சி அளிக்க, திட்டம் ஒருவேளை நிறைவேறி இருக்குமோ? என்று யோசனையாக வெளியே வந்தவள் உறுதி செய்து கொள்ளவே பார்க்கிங் இடத்திற்கு சென்று அவனது கார் இருக்கிறதா என்று தேடி பார்த்தாள், அங்கே அவனது காரும் இல்லாமல் போக 'சரி தான் பிளான் சக்சஸ் போலியே!' என்று மனதில் சொல்ல, அப்போது தான் அவ்விடம் ஓடி வந்தாள் மலர்,
வேகமாக ஓடி வந்தவள் மூச்சு வாங்கி கொண்டு “அக்கா ஹா ஹா!” என்று மூச்சை வாங்க, “ஹே என்னப்பா எதுக்கு இப்படி பதட்டமாக ஓடி வந்து நிற்கிற ஏதாவது பிரச்சனையா?” என்று சுடர் கேட்க, “அய்யோ அக்கா எனக்கு ஒன்னும் இல்ல, சேர்மன் சார் உங்க மாமனாருக்கு தான் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு சொல்லி போன் வந்தது, உங்களுக்கு போனை போட்டால் ரீச் ஆகலை சொல்லி நீங்க வந்தால் சொல்லிட சொன்னாங்க! ரகுவும் சாரும் ஹாஸ்பிடல் போயிருக்காங்க!” என்றதும் உள்ளுக்குள் அவ்வளவு நிறைவு இருந்தும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பதறியவளாக எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டு சென்றாள்.
அவளுக்கு தெரியும் எப்படி அவருக்கு அடிபட வேண்டும், எந்த அளவில் அவரை பயமுறுத்த வேண்டும், உயிருக்கு மட்டும் ஆபத்து நிகழாமல் ஒரு விபத்து நடக்க வேண்டும் என்று இவள் கொடுத்த ஐடியாவில் தானே இது நிகழ்ந்தது, ஆனால் எந்த மாதிரி உடம்பில் காயம்பட்டு இருக்கிறது என்பதை பார்க்க ஆவலாக சென்று இருந்தாள் சுடர்.
ஹாஸ்பிடல் சென்ற சுடரை ஓடி அணைத்து கொண்டார் கல்யாணி. “மாமாவுக்கு இப்படி ஆகும் என்று கனவுல கூட நினைச்சி கூட பார்க்கலையே மா, அவரு எப்படி இருக்காரு பாரு மா!” என்று அழுது தீர்த்தவளை அணைத்து ஆறுதல் சொன்னவள் “ச்சை இவருக்கு போய் இப்படி ஒரு தங்கமான மனைவி” அவள் அழுகில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், அவளை தேற்றி தண்ணிரை குடிக்க வைத்தவள், அவரை கண்ணாடி வழியாக பார்க்க சென்று இருந்தாள்.
நெற்றியில் சிறியதாக காயமும், ஒரு கால் முட்டியில் இருந்து பாதம் வரை கட்டு போட்டு இருக்க, அங்கு அங்கே சிறு சிறு சிராய்ப்புகள் இருந்தது, மயக்கத்தில் இருந்தவரை பார்த்து விட்டு, “எப்படி ஆச்சி அத்தை காலையில் நல்லா தானே போனாங்க, எப்படி திடீரென்று?” என்று கேட்க
அப்போது தான் டாக்டரை பார்த்துவிட்டு அகியும் ரகுவும் வர, “ஆக்சிடென்ட் என்றால் எதிர்பாராமல் திடீரென்று தானே நடக்கும்!” என்று ரகு சொல்ல அவனை முறைத்தாள் சுடர். “ஹே சும்மா இருடா, அப்பா போயிட்டு இருக்கும் போது காரை திருப்பும் போது எதிரே வந்த லாரி எதிர்பாராமல் லேசா இடிச்சிட்டு போயிருக்கு பெருசா ஒன்னும் பயப்பட தேவையில்லை ஒரு ரெண்டு நாள் கழிச்சி டிஸ்டார்ச் பண்ணிடலாம் மீதியை வீட்டிலே பார்த்துக்கலாம் என்று டாக்டர் சொல்லி இருக்காரு நீங்க கவலை படாதீங்க! என்று தனது தாய்க்கும் மனைவிக்கும் பொதுவாக சொன்னவன் நீங்க உட்காருங்க, இருவருக்கும் குடிக்க ஏதாவது குடிக்க வாங்கிட்டு வரோம்” என்று சொன்னவன் ரகுவின் கையில் இருந்த மருந்தை சுடரின் கையில் கொடுத்து விட்டு, “அம்மாவை பார்த்துக்குங்க சீக்கிரம் வந்துவிடுறேன்” என்று சொல்லி ரகுவை தன்னோடு இழுத்து சென்று இருந்தான்.
“டேய் இப்ப எதுக்குடா சுடர் கிட்டையும் அம்மாவிடமும் மறைச்ச!” என்று அகிலனை கோவமாக கேட்டான் ரகு. “அண்ணா ரெண்டு ஆரஞ்சு ஜுஸ் பார்சல்” என்று சொல்லிவிட்டு காத்து கொண்டு இருந்தான். “நான் கேட்டுகிட்டு இருக்கேன் நீ இப்படி எதுமே சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம் அகி அண்ணா!” என்றான் ரகு. “என்னடா திடீரென அண்ணா சொல்ற” என்று சொன்னவனை முறைத்து பார்த்தான் ரகு. “சரி சொல்றேன் இந்தா காலையில் இருந்து என்னோட சாப்பிடாமல் சுத்திட்டு இருக்க, இதை பிடி” என்று அவன் கையில் ஜுஸ் ஒன்றை கொடுத்து குடிக்க வைத்தான்.
“என்னடா சொல்ல சொல்ற அவரை இடிச்ச லாரி வேண்டுமென்றே வந்தது, அப்பாவை கொல்ல முயற்சி பண்ணாங்க என சொல்ல சொல்றியா! அப்படி நான் சொன்னால் அவங்களால் தாங்க முடியுமா? எதுக்கு அவங்களுக்கு தேவையில்லாமல் பயத்தை கொடுக்கணும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் போலீஸ் கிட்டையும் இதை பற்றி பேசிக்க வேண்டாம் அப்பாவும் சொல்ல மாட்டாரு நாமளே பெர்சனலா பார்த்துக்கலாம்! நானும் ஏதோ தொழில் போட்டி என்று நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன், ஆனால் எனக்கு தெரியாத ஒரு ரகசியம் இருக்கு அது தான் எல்லாத்துக்கும் காரணமா இருக்குமோ தோணுது! அம்மாவுக்கும் அது தெரிந்து இருக்கு ஆனால் என்னிடம் சொல்லாமல் இருக்காங்க! என்ன சுற்றி நிறைய விசயம் நடக்கிற மாதிரி இருக்கு என்னதான் நடக்குது ஒன்னுமே புரியலை!” என்று சோர்ந்து பேசிய அகியை தோலில் தட்டி கொடுத்தவன் “கவலை படாதீங்க! அண்ணா எல்லாமே சரியாகிடும்” என ரகு சொல்ல,
“முழுசா தெரிந்த பிறகு தான் எதுவா இருந்தாலும் சுடரிடம் சொல்லணும், எதுமே தெரியாத அவங்களையும் கவலை பட வைக்க எனக்கு விருப்பம் இல்லை ரகு, அவங்க எங்க வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது சந்தோசமா இருக்கவேண்டிய காலத்துல இந்த விஷயம் சொன்னால் பயந்துடுவாங்க! நாங்களும் இப்ப தான் வாழவே ஆரம்பித்து இருக்கோம் இதை பற்றி சொன்னால் அப்பாவுக்கு நடந்தது எனக்கும் நடக்குமோ என்று யோசித்தால், என்ன சொல்லி ஆறுதல் சொல்ல முடியும்! இதுக்கு யார் காரணம் தெரிந்த பிறகு பொறுமையா சொல்லிக்கலாம்!” என்று அவனோட கிளம்பி சென்றவன் இருவருக்கும் ஜுஸ் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு இருவரையும் அனுப்பி வைத்தான்.
சிறிது நேரம் மகேந்திரன் அருகில் அமர்ந்தவன் அவரில் அசைவு தெரியவே “அப்பா.. அப்பா!” என்று அவரின் பெயரை உச்சரித்துது “எப்படி இருக்கீங்க இப்ப ஓகே தானே! நான் டாக்டர் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லி அவரை அழைத்து வர, வந்தவரும் எல்லாத்தையும் பார்த்து விட்டு, கவலைபட தேவையில்லை “மிஸ்டர் அகிலன் ஹி இஸ் ஆல்ரைட் டோண்ட் ஒரிஸ்”என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
விழியை திறந்ததும் தனது மனைவியை தேட, அதை புரிந்தவ அகி “அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவாங்க நீங்க கண்ணை மூடி தூங்குங்க அப்பா” என்று சொன்னவன், மகேந்திரன் கண்விழித்து கல்யாணியை தேடியதை சொல்ல அவளும் வந்து விட, தாயை உள்ளே அழைத்து வந்தவன் அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு சுடரை அழைத்து கொண்டு வெளியே வந்தான். அங்கே இருந்த நாற்காலியில் இருவரும் அமர, சுடரின் தோலில் தலையை சாய்த்து கண்ணை முடியவனை, கண்ணம் வருடி கொடுத்தவள் அவன் சாப்பிட கொண்டு வந்த உணவினை கொடுத்தாள், வேண்டாம் என்பதாக தலையை அசைத்து சொல்ல, இவளே ஊட்டி விட்டு இருந்தாள். சாப்பிட்டு முடித்தவன் அவளின் முந்தானையில் வாயை துடைத்து விட்டு,
“சுடர் அப்பா ஓரளவு சரியாகுற வரைக்கும் ஆபீஸ் நான் தான் பார்த்துக்கணும், எனக்கு நீயும் ஹெல்ப் பண்ணனும்!” என்று கேட்டவனை கேள்வியாக பார்த்தாள்.
“காலேஜ் வேலையில் பெருசா என்னால கவனம் செலுத்த முடியாது அதனால் நீ தான் காலேஜ் பார்த்துக்கணும்” என்றதும் “நான் எப்படி அகில் பார்த்துக்க முடியும்? உங்களுக்கு உதவியா என்ன செய்ய முடியுமோ! அதை செய்யுறேன்” என அவள் சொன்னதும் “சரி எனக்கு இதுவே போதும் முழுநேரமும் காலேஜில் இருக்க முடியாது ஆபீசுக்கும் போகணும் நான் பார்த்து கொள்கிறேன்” என்று சொன்னவன் மனதிலே ஓராயிரம் என்னோட்டங்கள்.
ஆபீசுக்கும் காலேஜுக்கும் முழுநேரமும் இருக்கவேண்டிய அவசியம் இல்லையே இந்த நவீன உலகத்தில், இருந்த இடத்திலே அனைத்தும் பார்த்து கொள்ள அனைத்து வசதியும் கைக்குள் அடக்கம் இருந்தாலும் காலேஜ் பற்றியை கவலை இல்லாமல் இருக்கவே சுடரை பார்க்க சொன்னான். ஆபீஸ் வேலையும் பார்ப்பதற்கு ஆட்கள் இருப்பதால் மேற்பார்வை மட்டும் போதுமானதாக இருந்தது இவன் எண்ணம் முழுக்க,
'யார் அந்தத் எதிரி! எதற்காக கொலை முயற்சி? அப்படி என்ன ரகசியம் பெற்றோர்கள் என்னிடம் மறைக்கும் அளவிற்கு!' என்று இது தான் அவன் மூளைக்குள் ஓடி கொண்டு இருந்தது! இதற்கான பதில் தெரிந்து கொள்வது தான் தனது முக்கிய வேலை என்று முடிவாக இறங்கி விட்டான் அகிலன்.