• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 28

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
மகேந்திரனுக்கு ஆக்சிடென்ட் என்று சொன்னதுமே பதறியடித்து ஓடி வந்தவன் உயிருக்கு எந்த ஆபத்து இல்லை என்று சொன்ன பிறகே இயல்பாக சுவாசிக்க முடிந்தது அகியிற்கு, அதன் பிறகு தான் தனது தந்தையை காப்பாற்றிய மனிதனை தேட ஆரம்பித்து இருந்தான், “யார் காப்பாற்றினார்கள்! யார் என்னோட அப்பாவை கொண்டு வந்து சேர்த்தார்கள்” என்று தெரிந்து கொள்ளும் போது “அவர் இப்போது தான் வெளியே போனார்” என்று ஒரு நர்ஸ் சொல்லவும் அவள் சொன்ன அடையாளத்தில் இருந்த நபரை நெருங்கி,

“ஹலோ நான் அகிலன் என்னோட அப்பாவை காப்பாற்றி ஹாஸ்பிடல் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்!” என்று சொன்னதும் பரவலை “என்னோட பெயர் ராகவ் இதுல என்ன இருக்கு!” என்று சொன்னவன் இருவரும் இயல்பாக பேச, “அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆனா இடம் சொல்ல முடியுமா! அது எப்படி நடந்தது கொஞ்சம் விசாரிக்கணும்” என்று அகில் சொல்லவும்,

“ஹான் மறந்துட்டேன் என்று தனது போனில் படமெடுத்த ஒரு லாரியை காண்பித்து இந்த லாரி தான் இடிச்சிட்டு நிற்காமல் போனது, நான் அந்த லாரியை பார்த்தேன் அதுல இருந்த டிரைவர் எட்டி பார்த்து போனில் பேசிட்டு போனது எனக்கு என்னமோ திட்டம் போட்டு உங்க அப்பாவை ஆக்சிடென்ட் பண்ண மாதிரி தோணுது! பார்த்துக்குங்க” என்று சொல்லி அந்த போட்டோவை அனுப்பி வைத்து அவன் கிளம்ப, நன்றி சொல்லி அகிலன் தனது தந்தையை பார்க்க வந்தான்.

மயக்கம் தெளிந்து பார்த்த மகேந்திரனை பார்த்து “அப்பா உங்ககிட்ட ஒரு விசயம் பேசணும்” என்றதும் சிரமப்பட்டு “சொல்லு அகி” என்றார். “அப்பா அது வந்து..!” என்று இழுத்தவன், “சரி நான் நேரடியாக விஷயத்துக்கு வரேன் உங்களுக்கு எதிரி யாராவது இருக்காங்களா! அதும் கொலை செய்யணும் தோன்ற அளவுக்கு?” என்று கேட்க, அதிர்ச்சியாக அகிலனை பார்த்தவர் “அப்படி யாரும் இல்லைபா!” என்று சொன்னவர் யோசனையாக இருக்க, “அப்ப உங்களை காப்பாற்றிய ராகவ் ஏன் அப்படி சொல்லணும்!” என்றதும் “என்ன பெயர் ராகவ் ஓ ராகவ் ஹா!” என்று சடுத்தியில் பதறிய பதற்றத்தை மறைக்க, அகிலன் கண்டு விட்டான். இந்த ராகவன் ராகவ் என்று சொல்லும் போது அவர் பதறுவது தெரிந்த அகி சிறிது யோசனையாக இருந்து விட்டு,

“அதை விடுங்க நீங்க எப்போதுமே காரை ஓட்டும் போது நிதானமாகவும் சரியாகவும் தானே ஓட்டுவீங்க எப்படி அடிப்பட்டது” என கேட்க “அது ஒரு யோசனையில் வந்திட்டு இருந்தேன், திடீரென அந்த பக்கம் லாரி வரும் எதிர்பார்க்கவில்லை, சடன் பிரேக் போட்டும் லாரியில் மோதிடுச்சி” என்று சொன்னவர் அமைதியாகி விட, “சரி பா எதைபற்றியும் யோசிக்காமல் ரெஸ்ட் எடுத்துக்குங்க! கம்பனி வேலையும் நான் பார்த்துக்கிறேன் அப்புறம் இது வீட்டுல யாரிடம் சொல்ல வேண்டாம் அவங்க பயபடபோறாங்க” என்று சொன்னவன் காரில் சென்றும் யோசனையாக இருந்தான்.

“சுடர்! காயத்ரிக்கு போனை போட்டு கொடுமா, அவளுக்கும் ஒரு வார்த்தை சொல்லிடுவோம் அப்புறம் இவ்வளவு விஷயம் நடந்து ஒருவார்த்தை சொன்னிங்களா? என கேட்டு சண்டை போடுவா! அவ அப்பாவுக்கு நடந்ததை அவளிடம் மறைக்கிறதும் தப்பா போயிடும் உள்ளதை சொல்லிட்டால் பிரச்சினை வராது பாரு” கல்யாணி சொல்ல, “ஆமாம் அப்பாவுக்கு என்ன நடந்தது என்று பொண்ணுக்கு கண்டிப்பா சொல்லணும்!” என்று பல்லை கடித்து கொண்டே வார்த்தையை துப்பினாள் மெல்லமாக கல்யாணி கேட்டாதாவாறு.

காயத்ரிக்கு தகவல் சொல்லிய பிறகு பதறியவள், அழுது கொண்டே அவரின் உடல் நலத்தை கேட்டு தெரிந்து கொண்டாள், சொல்லிய உடனே வந்துவிடும் தூரத்தில் இல்லையே அவள்! “எப்படியும் அவள் நாளைக்கு தான் வருவாள்” என்று புலம்பிய கல்யாணி கணவருக்கு தேவையானது அனைத்தையும் எடுத்துகொண்டு கிளம்ப, “அத்தை நானும் வரேன் நீங்க மட்டும் எதுக்கு தனியா போகணும்” என்று சுடர் சொல்ல, “இல்லை சுடர் உனக்கே வேலை நிறைய இருக்கும் நீ காலேஜ் போ நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றவரை வம்படியாக தனது காரில் அழைத்து சென்றவள், தனது மாமனாரை நலம் விசாரித்து விட்டு, “எதுவா இருந்தாலும் எனக்கு போனை போடுங்க அத்தை நான் வந்துடுறேன்” என்று சொல்லி கிளம்ப,

“கடவுள் நல்ல மருமகளை தான் நமக்கு கொடுத்து இருக்காரு!” என்று கணவரை பார்த்து சொன்னாள். ஹாஸ்பிடல் விட்டு சுடர் கிளம்பியதும் தனது போனை எடுத்து இங்கே நடந்த அனைத்தும் சொல்லி மகிழ்ந்தவள் கூடவே அகிலனோட வாழ ஆரம்பித்த விசயத்தையும் சாந்தாவிடம் சொல்லி போனை வைத்தாள்.

முதலில் கோவமாக பேசியவர்கள் சின்ன பொண்ணு வயசு பொண்ணு கல்யாணம் ஆகியும் இப்படி இருக்கிறது நல்லதும் இல்லை என்று தனது கணவனுக்கு எடுத்து சொல்லி சமாதானம் செய்து இருந்தாள், “இன்னும் கோவமா இருந்தால் என்ன அர்த்தம் அதான் அவளோட சூழ்நிலையை எடுத்து சொன்ன பிறகும் இப்படி இருந்தால் நல்லவா இருக்கு, அவளும் வயசு பொண்ணு அதுவும் தங்கமாக தாங்கும் புருஷனை எத்தனை நாளுக்கு பட்டினி போட முடியும்! சும்மா கோவப்படாமல் ஆக வேண்டிய வேலையை பாருங்க!” என்று விருதச்சலாத்தை தன் வழிக்கு கொண்டு வந்தாள் சாந்தா.

குடும்பத்தாரிடம் பேசியவள் மனதில் ஏதோ ஒரு நெருடல், என்னவோ நடக்க போகிறது என்று, இருந்தும் அதனை உதாசீனம் செய்து வேலையில் மும்முரமாக செயல்பட தொடங்கினாள், தந்தையை பார்த்து கொள்ள அம்மா இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது வந்து பார்த்துவிடுவான் அகி, எதற்காக இத்தனை முறை வருகிறாய் என்று கேட்டால் ஆபீஸ் பற்றி கேட்க வந்தேன் என்று கூறினாலும் ஒரு முறை கூட அதை பற்றி பேசியது கிடையாது, வருபவன் இருவரையும் பார்த்துவிட்டு பேசி சாப்பிட வைத்த பிறகே செல்வான், காயத்ரியும் குழந்தையோட வந்து விட, கொஞ்ச நேரம் அழுது ஆர்பாட்டம் செய்து பிறகு சமாதானம் ஆனாள்.

“நான் ஈவினிங் மேலே வந்து அப்பாவோட ஸ்டே பண்ணிக்கிறேன், அதுவரைக்கும் நீங்க இங்கேயே இருங்க எங்கேயும் போக வேண்டாம்” என்று அழுத்தமாக அகி சொன்னதும், “டேய் சுடர் தனியா இருப்பா டா! நான் அப்பாவோட இருந்துகிறேன் நீ காயத்ரியும் குழந்தையும் மட்டும் கூட்டி கொண்டு போ” என்று முடிவாக கல்யாணி சொல்லியிருக்க சரி என்பது போல் தலையை ஆட்டி விட்டு கிளம்பினான்.

காலேஜ் முடிந்து நேராக ஹாஸ்பிடல் சுடர் வரவும் தனது சம்மந்தியை பார்த்து விட்டு விருத்தாச்சலம் சாந்தா தம்பதினர் கிளம்பி கீழே வரும் போது சுடரை பார்க்க, மிகவும் இயல்பாகவும் சந்தோஷமாகவும் மூவரும் கேண்டீனில் அமர்ந்து ஜுஸ் குடித்து கொண்டே பேசினார்கள், “இப்ப தான் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு தாயி! அவன் செய்த பாவம் கொஞ்சம் இல்லை, 'பாவம் என்னோட தங்கை!' கண்டிப்பா இன்னும் நிறைய அனுபவிக்கனும் அவன்” என்று கோவமாக அவர் பேச, “சும்மா அதையே பேசிக்கிட்டு, சுடர் மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துக்கொள்கிறாரா” என்று மறைமுகமாக கேட்க, வெட்கப்பட்டு குனிந்த சுடரின் முகமே சொன்னது தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று, “நீ குழப்பிக்காதே உனக்கு பிடிச்ச மாதிரி வாழு எதுவாயிருந்தாலும் நாங்க இருக்கிறோம்” என நம்பிக்கை சொன்ன சாந்தா அவளை தட்டி கொடுத்துவிட்டு, நெற்றியிலே ஒரு முத்தம் கொடுத்து “நாங்க போயிட்டு வரோம்” என்று இருவரும் விடைபெற்றனர்.


அவர்கள் கிளம்பியதும் மாமனாரை பார்க்க சென்றவள் சிறிய நல விசாரிப்பு முடித்து கல்யாணியிடம் அமர “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து இருக்க கூடாது இப்ப தான் உங்க அத்தை மாமா வந்து போனாங்க முன்னமே வந்து இருந்தால் அவர்களை பார்த்து இருக்கலாம்” என்று சொன்ன அத்தையிடம் “நான் அவர்களை பார்த்துவிட்டு தான் வந்தேன் இப்ப தான் கேண்டீனில் ஜுஸ் சாப்பிட வைச்சி அவங்களை அனுப்பி வைச்சேன்”என்று சுடர் சொல்லும் போது,

“அப்போ நீங்க அகிலனை அங்கே பார்த்து இருக்கலாமே! அவனும் அங்கே தான் போயிருக்கான்” என்று கல்யாணி சொன்னாள். “இல்லையே அத்தை அவரை நாங்க பார்க்கவில்லையே! ஒருவேளை கூட்டத்தில் பார்த்திருக்க முடியல போலும்” என்று சமாதானம் சொல்லும் போது,

கண்கள் சிவக்க உள்ளே நுழைந்த அகில் சுடரை பார்க்காமல் தாயிடம் சென்று வாங்கி வந்ததை கொடுத்து விட்டு, கோவமாக சுடரை பார்த்து விட்டு சிறிது நேரத்திலே இயல்பாக மாற்றி லேசாக சிரித்தான். “நான் கம்பனி விசயமா வெளியே போறேன் எப்படியும் நாளைக்கு மதியம் மேலே வந்துவிடுவேன், அப்பாவை ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று சொன்னவன் மீண்டும் ஒரு முறை சுடரை ஏறிட்டு பார்த்தவன் வேகமா வெளியே நடந்தான்.

“எதுக்கு இப்படி பார்த்துவிட்டு போறாரு! என்னவா இருக்கும்? ஓ ரொம்ப நாளாச்சு அதான் ஏக்கமாக பார்த்துவிட்டு போறாரு! இவரு டிஸ்சார்ஜ் ஆனால் தான் எல்லாமே இயல்பா மாறும்” என்று யோசனையாக இருந்தவள் அவனின் முகத்தை படிக்க மறந்தாள். “அம்மாடி நான் இங்கேயே இருக்கேன் நீங்க வீட்டுக்கு போங்க” என காயத்ரி அவளது குழந்தை இருவரையும் சுடருடன் அனுப்பி வைத்தாள்.

கல்யாணி சொன்னதை போல் மூவரும் கிளம்பி வீட்டிற்கு சென்று விட, அகிலன் இந்த நேரத்தில் போனை போட்டு பேசுவாறு எதுக்கு போனை இன்னும் போடலை என்று யோசனை இருந்தாலும் மனதை திசை திருப்பினாள், “ஹே பிளாக்கி என்னடா!” என்று காலை சுற்றி வந்த நாயினை கொஞ்சி சாப்பிட வைத்து விட்டு, காயத்ரி குழந்தை இருவரையும் பார்த்து பேசிய பின்னரே தனது அறைக்கு சென்று இருந்தாள்.

நேரம் நள்ளிரவு கடந்தும் அவன் இல்லாமல் தூக்கம் கொள்ள கடினப்பட்டவள் திரும்பி திரும்பி
படுத்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் அவனை அழைத்து பேசிவிட வேண்டும் என்று அவனுக்கு அழைப்பை விடுத்தாள், போன் முழுவதுமாக சத்தம் போட்டு அடங்கிய பிறகே கண்ணீரோடு தனது போனில் இருந்த சுடரின் புகைபடத்தை பார்த்து,

“என்னால நம்ப முடியல சுடர் நீங்க தான் என்னோட அப்பாவை கொல்ல முயற்சி பண்ணி இருப்பீங்க! என்று இப்பவும் இது பொய்யா இருக்க கூடாதா!” என்று வாயை விட்டு ஹா என்று சத்தமாக கத்தினான் யாருமில்லாத அறையில்.



ஹாஸ்பிடல் வரும் போதே சாப்பிட வேண்டும் கேட்ட காயத்ரி குழந்தைக்கு வாங்க கேண்டீன் வந்த அகில் தனது கண்ணெதிரே மனைவியின் குடும்பத்தை பார்த்ததும் அவர்களின் அருகே செல்லும் போது தான் சுடரின் மாமா பேசும் வார்த்தை கேட்டு அப்படியே மறைந்து நின்று கேட்டு கொண்டு இருந்தான். அவர்கள் பேசியது பாதி புரிந்தும் புரியாதுமாக இருந்த அகில் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் பேச கூடாது என்று அமைதி காத்தவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி வந்து சேர்ந்தது.

எல்லா ஆதாரமும் எடுத்து கொண்டு வந்த அகிலன் கையோடு தனது தந்தையும் டிஸ்சார்ஜ் செய்தவன் மனமோ தான் ஏமாற்றப்பட்ட வலி தங்காமல் கொதித்து கொண்டு இருந்தான், இதை அறியாத சுடர் அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்க காத்திருந்தாள்
 
  • Wow
Reactions: shasri