“அக்கா சீக்கிரம் ஆர்த்தி தட்டை ரெடி பண்ணுங்க, அவங்க பக்கத்துல வந்துட்டாங்க!” என்று சகுவை அவசர படுத்தினாள் காயத்ரி, “அண்ணி பாப்பாவை பிடிங்க திருஷ்டி சுத்தும் போது அவ எதுக்கு பக்கத்துல” என்று தனது குழந்தையை சுடரிடம் கொடுத்து விட்டு வாசலையே எதிர்பார்த்து காத்திருந்தாள்.
கேட்டை திறக்கும் சத்தம் கேட்டதும் கையில் இருந்த ஆரத்தியை எடுத்து கொண்டு வாசலில் காயத்ரி நிற்க, சற்று தள்ளி ஓரமாக குழந்தையோடு நின்றாள் சுடர். மகேந்திரனை வீல் சேரில் அமர வைத்து “அப்பாவை கூட்டிட்டு போங்க அம்மா நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்” என்று அகிலன் காரை இயக்கினான்,
வாசலில் காயத்ரியை பார்த்து “அம்மாடி இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு ஆரத்தி எடுக்கட்டும் நீ அவ கையில கொடு” என்று சுடரை அழைத்து ஆரத்தி எடுக்க சொல்ல, “அம்மா நான் என்னோட அப்பாவுக்கு எடுக்க கூடாதா!” என்று ஆதங்கமாய் கேட்டாள், “ஐய்யோ அப்படி இல்லடி இனி இந்த வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் அவ தான் செய்யனும் அண்ணாவுக்கு கல்யாணம் ஆன பிறகு ஒரு சில விசயங்களை சுடர் தான் செய்யனும் இருக்கும் போது அவள் எப்படி தெரிந்து கொள்வா, நாம தானே சொல்லி தரணும்” என்று சொல்லவும் தாய் சொல்வதும் சரியென படவே, “அண்ணி வாங்க நீங்க வந்து அப்பாவுக்கு ஆர்த்தி எடுங்க” என்று தட்டை சுடரிடம் கொடுத்து விட்டு, குழந்தையுடன் தள்ளி நின்றாள் காயத்ரி.
வண்டியை நிறுத்தி விட்டு நடந்து வந்தவன் சுடரின் கையில் இருந்த ஆரத்தி தட்டு கற்பூரம் ஏற்ற பட்டு சுற்றுவதற்கு கையை எடுத்து கொண்டு போகும் போது அகி பார்க்க, வேகமாக ஓடி வந்தவன் அவள் கையில் இருந்த தட்டை, தட்டி விட்டு அவளின் கையை பிடித்து தந்தையை விட்டு விலக்கி நிறுத்தி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டு இருந்தான்.
அவன் அடித்த அடியில் கீழே விழுந்தாள், அவனை என்ன என்பது போல் கன்னத்தை பிடித்து கொண்டே எழுந்தாள். சுடரின் முடியை பிடித்து வீட்டிற்குள் இழுத்து செல்லும் போது, “எல்லோரும் உள்ளே வாங்க! வீட்டுக்குள்ளே பேசிக்கலாம்” என்று கோவமாக சொன்னவன், வீட்டில் வேலை செய்யும் அனைவரையும் வெளியே செல்ல சொல்லி இருந்தான்.
“ஐயோ இவனுக்கு என்ன ஆச்சி எதுக்கு இப்படி அவளை அடிக்கிறான்! அதிர்ந்து கூட பேசாதவன் எதுக்கு எல்லோரும் பார்க்கிற மாதிரி அவனோட பொண்டாட்டியை அடிக்கணும்” என்று புலம்பி கொண்டே வீல் சேர் தள்ளி கொண்டே வர, சகுவை அழைத்து “குழந்தையை பார்த்துக்க நான் வந்து கூப்பிட்டு கொள்கிறேன்” என்று அனுப்பி வைத்து விட்டு வேகமாக உள்ளே சென்றாள் காயத்ரி.
உள்ளே அவளை இழுத்து வந்து கீழே தள்ளி, “எவ்வளவு தைரியம் இருந்தால் என்னோட அப்பாவை கொல்ல பார்த்து இருப்பீங்க! எதுக்கு இப்படி செய்த? நான் ஆசைப்பட்டேன் சொல்லி வசதி பார்க்காமல் உன்னை கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு தண்டனையா! சொல்லுடி சொல்லு” என்று மீண்டும் அடிக்க கையை ஓங்க அவனது கையை பிடித்து “அடிக்கிற வேலையெல்லாம் வைச்சிக்காதே அகில் என்னோட கையும் சும்மா இருக்காது! எதை வைச்சி நான் இதை செய்தேன் சொல்றீங்க?” என்று அவளும் விடாது கேட்க,
இடையில் புகுந்த தாயையும் “யாரும் எதுவும் பேச கூடாது!” என்று மூவருக்கும் தடையை விதித்தான், மூவரும் நடப்பதை அதிர்ச்சியாக பார்க்கும் வெறும் பார்வையாளர்களைப் போல் சுடரையும் அகிலனையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தார்கள். அகியிற்கு இவ்வளவு கோபம் வருமா என்று ஒரு அதிர்ச்சி என்றால், சுடர் கொலை செய்ய பார்த்திருக்கிறாள் என்பது பேரதிர்ச்சி! ஸ்தம்பித்து இவர்கள் இருக்க,
“ஆதாரமா கேக்குற என்னிடம் ஆதாரம் இல்லாமல் பேசுவேன் நினைக்கிறியா! சுடர் ஒழுங்கா உண்மையை ஒத்துக்க” என்று அவனும் கோவத்தில் கத்த, அதே கோவத்தில் இவளும் “இருந்தால் காட்டுங்கள் நானும் பார்க்கிறேன்” என்று இவளும் கத்தி பேச, தனது கையில் இருந்த ஃபைல் ஒன்றை அவளிடம் நீட்டினாள், “இதுல இருக்கிற பேங்க் ஸ்டேட்மெண்ட் உங்க மாமா அக்கவுண்ட் ல ஒரு லாரி டிரைவருக்கு போயி இருக்கு!” என்று சொல்ல,
“அது அவரோட வேலை விசயமா கூட கொடுத்து இருக்கலாம் தானே! அதெப்படி இதை வைச்சி எங்க மேல பழியை போடுற அகில்” என கோவமாக பேச,
“அப்போ நீயா ஒத்துக்க மாட்ட எல்லாத்தையும் என்னோட வாயால் சொல்லணும் எதிர் பார்க்கிற அப்படி தானே! நானே எல்லாத்தையும் சொல்றேன் அதுவரைக்கும் வாயை திறக்க கூடாது” என்று அவளின் உதட்டில் கையை வைத்து சொன்ன அகில், தனது தந்தைக்கு அருகிலே சென்று “என்னோட அப்பா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு காலேஜில் பசங்க ரொம்ப தொந்தரவு செய்யுறாங்க என்று, நானும் பெரிய விஷயமா எடுத்துக்கவே இல்லை! இப்ப வரைக்கும் காலேஜ் என்றால் இப்படி இருப்பது சகஜம் என்று நினைத்து விட்டு விட்டேன் ஆனால், என்னைக்கு நீ அந்த அரவிந்த்க்கு பணத்தை கொடுத்தியோ அப்பவே விசாரிக்க ஆரம்பித்து இருக்கணும் தப்பு பண்ணிட்டேன் எனக்கு சந்தேகம் வரவே இல்லை, நேற்று ஆபீஸ் போகும் போது அந்த சரத்தை பார்த்தேன் அவனை கூப்பிட்டு பேசினால் கேம்பஸ் மூலமா வந்தேன் சொல்லி இருந்தான், சரி அதுவும் எதேச்சையாக நடந்ததாக விட்டு விடலாம்,
இது.. இதுக்கு என்ன அர்த்தம் என்று தனது மொபைலை காண்பித்து வீடியோ ஒன்றை ஓட விட்டான் அனைவரும் பார்க்கும் விதமாக, அதில் வெட்டிங் பார்ட்டியில் கேப் அணிந்து இருந்த நபர் சுடரிடம் ஒரு பென்டிரைவ் கொடுத்து சில நிமிடம் பேசுவது போல் இருந்து, வாஷ் ரூம் போயிட்டு வரேன் சொல்லி போன அந்த நேரத்துல இதை செய்து இருக்க என்ன சரியா! அன்றைக்கு நடந்த அவமானமும் உன்னாலே! இதோடு நீ நிறுத்தல, அப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஒரு டெண்டர் உங்க கையை விட்டு போனதை நினைத்து கோவமாக வீட்டுக்கு வந்து ஃபைல் தூக்கி விசிறினிங்களே! அந்த டெண்டர் நம்ம கம்பனி விட்டு போக இவ தான் காரணம் நம்ம ஆபீஸ் ல இருந்து கோட் பண்ண அமௌண்டை அந்த சரத் அரவிந்த்துக்கு சென்ட் பண்ணி இருக்கான் இதோ அதுக்கான ஆதாரம்” என்று இருவரின் போனின் விவரங்களை காண்பித்தான்.
கோவமாக பேசியவன் திடீரென அமைதியாகி மூச்சை உள்ளே இழுத்துவிட்டு ஏதோ நினைவு வந்தவனாக சுடரின் அருகே வந்து அவளின் கையை அழுத்தமாக பிடித்து “ஹே உண்மையை சொல்லு அந்த பெர்வெல் டே நடந்த அன்றைக்கு உன்னை சரத் அடைச்சி வைச்சது அவன் செய்ததா! இல்லை உன்னோட டிராமாவா” என்று கேட்க, ஒற்றுக்கொள்ள மனமில்லாமல் பொய் சொல்கிறோம் என்று தெரிந்தும் “அது அவனோட பகையை தீர்க்க செய்தான்” என்று அவனை முறைத்து கொண்டே சொன்னாள்.
அவன் அழுத்திய கை வலிக்கவே அகிலனிடம் இருந்து தனது கையை எடுத்தவள் வலித்த இடத்தை இலகுவாக அழுத்தி முகத்தை சுருக்கினாள், சுடரின் முகம் வாடுவதை பார்த்து கவலை கொண்டவன் திரும்பி கொள்ள, அவனுக்கு எதிரே வீல் சேரில் அமர்ந்த தந்தையை பார்த்ததும் ஓடி சென்ற கோவம் மீண்டும் வந்து ஒட்டி கொண்டது,
அதே கோபத்துடன் “சொல்லுங்க சுடர் எதுக்காக எங்க அப்பாவை கொல்ல உங்க குடும்பம் முயற்சி செய்யனும்! எங்க சொத்து மேல ஆசை வந்து முதல்ல எங்க அப்பா அப்புறம் நான்! அதான் உங்க பிளான் எங்க அம்மாவும் தங்கையும் உங்களுக்கு ஒரு பொருட்டே இருக்காது ஈசியாக அபகரிச்சிடலாம்” என்று கோவமாக அகிலன் வார்த்தை விட்டதும், இதுவரை அமைதியாக இருந்தவள் தன்னை கொல்ல திட்டம் போட்டு இருக்கீங்க! என்று அவன் சொன்னதுமே கதி கலங்கி போயி அவன் பேசிய அந்த வார்த்தைக்கு ஒரு அறையை விட்டு இருந்தாள் அவன் கன்னத்தில்,
“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உனக்கு எதுமே ஆக விட மாட்டேன்! யாரும் உன்னை நெருங்கவும் விட மாட்டேன், ஏதோ கோபத்துல பேசுற என்று அமைதியா இருந்தால் ரொம்ப பேசுற! என்னோட புருஷனை யாரும் நெருங்க முடியாது இந்த சுடர் உயிரோட இருக்கிற வரைக்கும்!” என்று ஆக்ரோசமாக கத்திய சுடர், அவனது சட்டையை பிடித்து உலுக்கி “நான் உங்க அப்பாவை கொல்ல நினைக்கில அவரு செய்தது எல்லாத்தையும் திருப்பி கொடுக்க வந்து இருக்கேன், அவரு அணு அணுவாக அனுபவிக்கிற வேதனையை பார்க்க வந்து இருக்கேன், நிம்மதியில்லாமல் வாழுற வாழ்க்கையை பரிசாக கொடுக்க வந்து இருக்கேன்,
அவரு செய்த நம்பிக்கை துரோகத்தை திருப்பி கொடுக்க வந்து இருக்கேன், எதுக்கு டா இந்த வாழ்க்கை எண்ணி துடிக்கிறதை பார்த்து ரசிக்க வந்து இருக்கேன், எல்லாமும் இருந்து இல்லாத மாதிரி ஒரு அநாதையாக அவரு உணர வைக்கணும், உங்க அப்பா கொண்ணுட்டா இதெல்லாம் எப்படி நடக்கும், அவரை அவ்வளவு சீக்கிரம் சாக விடமாட்டேன்,
இந்த மகேந்திரன் அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கு அதற்குள்ள அவருக்கு நிம்மதியான ஒரு சாவை கொடுத்திடுவேனா! பாரு அவரு செய்த பாவங்கள் எல்லாவற்றிக்கும் இன்னும் அனுபவிக்க போறாரு! மரணத்தை வேண்டி பிச்சை கேட்க வைக்கல நான் சுடர் இல்ல!
என்ன சொன்ன உங்க சொத்துக்கு ஆசை பட்டு இதை என்னோட குடும்பத்தோட செய்தேன் சொன்னியே அகில், யாருக்கு வேணும் இந்த சொத்து, நாங்க வாழ போதும் சொல்லும் அளவை விட அதிகமாகவே இருக்கு, நீ பார்த்து இருப்பியே எங்க வீடு தோட்டம் வயல் என்று ஊருல இருக்கிற இடத்துல பாதி எங்களுக்கு சொந்தம் நாங்க போட்ட பிச்சையில தான் உங்களோட குடும்பமே இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறது! இன்னும் சொல்ல போனால் இந்த நிமிடம் இந்த இடத்துல என்னை கேள்வி கேட்கும் நீ உன்னை பெற்ற அப்பாவை பார்த்து கேளு இந்த சுடர் நமக்கு பிச்சை போட்டு தான் வாழ்கிறோம் சொல்கிறாளே உண்மையா! என்று,
இப்போ இந்த வீடு இருந்த இடத்தில் இதற்கு முன்னாடி யாரெல்லாம் இருந்தார்கள் என்று கேள் என்ன சொல்வார் உங்க அப்பா” என கோவமாக பேசியவள் மேலே தனது அறைக்கு ஓடினாள்.
“என்ன சொல்கிறாள்!” என்று மகேந்திரன் முகம் பார்க்க அவரோ மொத்தமாக இடிந்தது போல் சரித்து வீல் சேரில் மயக்கம் கொள்ள தண்ணிரை தெளித்த கல்யாணி கண்ணில் கண்ணீர் தாரை தாரியாக வந்து கொண்டு இருந்தது, இப்படி அவள் பேசியதற்கு அவளை கோவமாக திட்டி இருக்கணும் அல்லது அடித்து இருக்கணும் அதை விட்டுட்டு இருவரும் இப்படி இருப்பது அவனுக்கு ஏதோ சரியாக படவில்லை இருந்தும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களுக்கு அருகே நின்று பார்த்து கொண்டு இருந்தான்
மயக்கம் தெளிந்த மகேந்திரனுக்கு தண்ணிரை குடிக்க வைக்க, அவரோ படியிலிருந்து கீழே நடந்து வந்த சுடரை பார்த்து கொண்டு இருந்தார். இப்போது தான் அவருக்கு புரிந்தது இவ்வளவு நாளும் சுடரின் நடவடிக்கை யாரை நினைவு படுத்தியது என்று,
அகிலன் அருகே தனது பையை வைத்து விட்டு கையில் இருந்த இரண்டு புகைபடத்தை நால்வருக்கும் மத்தியில் வீசி விட்டு நான் ராகவன் மகேஷ்வரி பொண்ணு என்று கோவமாக சொன்னவள் கண்கள் கண்ணீரில் மூழ்கியது.