• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 30

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
“என்னோட காதல் உண்மை! உன்னோட வாழ்ந்த வாழ்க்கை என்னோட முழு மனசோட எந்த பொய்யும் இல்லாமல் இதுவரைக்கும் வாழ்ந்து இருக்கேன்,
இவ்வளவு நடந்த பிறகு இனிமேல் நான் இங்கே இருக்க போறது இல்லை” என்று கோவமாக பேசிய சுடர் கீழே இருந்த தனது பையையும் அவளது தாய் தந்தையோடு எடுத்து கொண்ட புகைபடத்தை எடுத்து கொண்டு வெளியே நடந்தாள்.

“அம்மு அம்மு” என்று சத்தமாக கத்தி கொண்டே அவளின் பின்னாலே ஓடிய கல்யாணி அவளின் கையை பிடித்து “எங்களை விட்டு போகாதமா எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்!” என்று கெஞ்சி கொண்டு இருந்தாள்.

“நீங்க நல்லவங்க என்று எங்க அம்மா சொல்லி கேள்விபட்டு இருக்கேன் அத்தை, அதை இங்கே வந்து நல்லாவே தெரிந்து கொண்டேன், உங்க மனசுக்கு தான் அவரை உயிரோட வைச்சி இருக்காரு அந்த கடவுள், என்னை விடுங்க நான் கிளம்புகிறேன் தடுக்காதீங்க!” என்று அவளின் கையை எடுத்து விட்டு நடந்து சென்றாள்.

“காயத்ரி அப்பாவை உள்ளே கூட்டிக்கொண்டு போய் படுக்க வை” என்று சொன்னவன் அவள் வீசிய படத்தை கையில் எடுத்தான், பின் பக்கமாக இருந்த படத்தை திருப்பி பார்த்து 'இது அம்மா கொடுத்த படமாச்சே!' யோசித்தவன் “அவளை அம்மா அம்மு சொல்லி கூப்பிட்டாங்க! அவ அப்போ அம்மா தேடின குடும்பத்தோட பொண்ணா என்னோட சுடர்! என்ன தான் நடக்குது என்ன சுற்றி?” குழப்பத்தில் இருந்த அகில் தனது தலையை பிய்த்து கொண்டு “ஹா!” என்று சத்தமாக கத்தினான்.

அவன் குரலில் நிகழ்வுக்கு வந்த கல்யாணி மகனிடம் வந்து “அவசரப்பட்டு வார்த்தை விட்டு இருக்க கூடாது அகில் அவ போறா! இவ்வளவு நாள் தொலைந்து போன பொக்கிஷத்தை பக்கத்துல வைச்சி இருந்தும் கவனிக்காமல் இருந்து விட்டேன் அவளை பார்க்கும் போது ரொம்ப பழக்கமான உணர்வு இருந்தது ஆனால் அதை கண்டு பிடிக்காமல் விட்டு விட்டேன், அவ அப்படியே என்னோட மகேஷ் மாதிரி இருக்கா, சரியான ரோசக்காரி!” என்று கண்ணீரை துடைத்தவள்

“உங்க மாமனார் வீட்டுக்கு உடனே கிளம்பலாம் எப்படியும் அவங்க கையில காலுல விழுந்தாவது செய்த பாவத்துக்கு பாவ விமோசனம் வாங்கனும் நமக்கு பக்கத்துல இருந்தும் கண்டு பிடிக்காமல் ஊர் ஊராக தேடி இருக்கோம், எனக்கு அவங்க இருக்கிற இடம் தெரிந்ததே போதும்” என்று சொன்ன தாயினை பார்த்த அகில்,

“இங்கே என்ன தான் நடக்கிறது அவ அப்பாவை கொல்ல முயற்சி செய்து இருக்காள், நீங்க என்னடா என்றால் அவ பின்னாடி ஓடி போறீங்க?” என்று கேட்ட அகிலை பார்த்து, “காணாமல் போன என்னோட ராகவன் அண்ணா குடும்பம் கிடைச்சி இருக்கு, எனக்கு அதுவே போதும், எனக்கு தெரியாது என்னோட அம்மு இந்த வீட்டுக்கு வந்தே ஆகணும் அவ இல்லாமல் நம்ம வரவே கூடாது! போயி வண்டியை எடு” கல்யாணி சொல்ல,

“ஐய்யோ அம்மா அவ பழிவாங்கிற அளவுக்கு அப்படி என்ன தான் நடந்தது நீங்க சொல்லாமல் நான் எங்கேயும் வரதா இல்லை!” என்று கடுப்புடன் பேசிய மகனிடம் தனது கணவனை பற்றி தவறாக பேச மனம் வரவில்லை, “சரி நாம நாளைக்கு போகலாம் இப்ப போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க நானும் முடிக்க வேண்டிய வேலைகளை இன்றக்குள்ளே முடிச்சிடுறேன்” என்று நழுவும் தாயின் கையை பிடித்து “அம்மா தயவு செய்து சொல்லுங்க இதுக்கு மேலேயும் மறைக்கணும் நினைக்காதீங்க!”

ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டு, “கண்டிப்பா நீ தெரிந்து கொள்ளணும் நினைக்கிற, சரி நம்ம வீட்டுக்கு வந்த உன்னோட ஃப்ரெண்ட் செல்வாவிடம் சொல்லி இருக்கேன் அவனை கேட்டு தெரிந்துக்கோ” என்று சொல்லி விட்டு அவளது அறைக்கு செல்ல, “அம்மா!” என்று காயத்ரி ஆரம்பிக்க “போதும் காயத்ரி என்னால முடியல எதுவா இருந்தாலும் உங்க அண்ணனை கேட்டுக்கோ” என்று அவளை விரட்ட,

“என்ன தான் நடக்குது” என்று காயத்ரி அகிலனை கேட்க, “எனக்கும் தெரியலை முழுசா தெரிந்ததும் உனக்கு சொல்கிறேன் போய் குழந்தையை பாரு” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு தனது அறைக்கு சென்று இருந்தான்.

உள்ளே நுழைந்ததும் அலமாரிகள் அனைத்தும் திறந்து இருந்தது, சுடரோட துணிகள் அவள் சம்மந்தப்பட்ட பொருட்கள் என்று எதுமே இல்லாமல் வெறுமையான அலமாரியே இருந்தது, ஆனால் அகிலன் ஆசையாக கொடுத்த தங்க நகைகள் முகூர்த்த புடவை, முதல் கூடலில் அவள் அணிந்த பட்டு புடவை இன்னும் நிறைய பரிசு பொருட்கள் என்று அனைத்தும் அப்படியே இருந்தன, அதையெல்லாம் தொட்டு பார்த்தவன் அதை அணிந்து அவள் வலம் வந்த நினைவுகள் இன்னும் அவனை இம்சைத்தது.

முதலிரவில் பயன்படுத்திய புடவையின் மேல் ஒரு காகிதம் இருப்பதை பார்த்தவன் அதை எடுக்க, “அகில் ஐ லவ் யூ” என்று எழுதி அதில் இதழை ஒற்றிய அடையாளம் கூடவே கண்ணீரில் நனைந்த தடயமும், இதுவரை ஒருவருக்கு ஒருவர் பிடித்து இருக்கிறது என்பதை வார்த்தையாக வெளிபடுத்தியதே கிடையாது கண்ணிலே அவர்கள் காதலை கிடத்தியவர்கள் சொல்லால் விவரித்தது இல்லை தங்களின் காதலை. பேப்பர் கீழே ஒரு கவர் இருக்க அதில் கர்ப்பத்தை உறுதி செய்யும் கிட் இருந்தது அதை பார்த்தவனுக்கு சிரிப்பதா அழுகுவதா என்று தெரியாமல் மெத்தையின் மேலே பொத்தென்று அமர்ந்தான்.

“சுடர்.. ஹா” என்று கத்தியவன் அந்த கிட்டை தொட்டு வருடி முத்தம் கொடுத்தான், அவளை இப்போதே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அவளை கையில் தாங்கி செல்லம் கொஞ்சி அவளின் மணிவயிற்றில் முத்தம் வைத்து சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள துடித்த மனதை, மூளை காரி துப்பியது 'அவளை வேலைக்காரர்கள் முன்னாடி அடித்து பேசிவிட்டு எந்த முகத்தை வைத்து கொண்டு பார்க்கணும் கொஞ்சனும் முத்தம் கொடுக்கணும் என்று ஆசை படுகிற' என்று கேட்டதும் சோர்ந்து போய் படுத்தான், “இந்த கை தானே என்னோட சுடரை அடிச்சது” என்று வேகமாக எழுந்து சுவற்றை கை வலிக்க வலிக்க குத்தி கொண்டே “சாரி சுடர் சாரி சுடர்” என்று அழுது அப்படியே அமர்ந்து சுவற்றில் மாட்டபட்ட இருவர் திருமண புகைப்படம் வெறித்து பார்த்தான்.

“ஐ லவ் யூ” என்று எழுதிய கடிதத்தை மீண்டும் பார்க்கும் போது அதன் பின்னாலும் எழுத்துக்கள் இருப்பதை பார்த்தவன் அவசர அவசரமாக திருப்பி பார்த்து படிக்க ஆரம்பித்தான், “அகில் நான் இந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாட நினைத்தேன் ஆனால் இப்படி அமையும் நினைத்து பார்க்கல! உனக்கு ஞாபகம் இருக்குமா தெரியலை, நாம ஒன்றாக சேர்ந்த அந்த நைட்டு உங்க கிட்ட ஒரு சத்தியம் கேட்டேன் ஏதாவது ஒரு சூழ்நிலையில் என்னை குற்றவாளியாகவோ அல்லது கெட்டவலாக தெரியும் போது என்னிடம் விளக்கம் கேட்கணும் சொல்லி ஒரு சத்தியம் வாங்கினேன்! ஆனால் நீங்களா முடிவு செய்து எல்லோரும் பார்க்கிற மாதிரி அடிச்சி அவமானம் படுத்திட்டீங்க ரொம்ப சந்தோசம்! எனக்கு உங்களிடம் இருந்து எதுமே தேவையில்லை ஆனா திருப்பி கொடுக்க முடியாத இரண்டை மட்டும் எடுத்து கொண்டு போறேன், ஒன்னு இந்த தாலி இன்னொன்று நம்ம குழந்தை, நான் கர்பமாக இருப்பதை இப்படி சொல்லுவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை நான் கிளம்புகிறேன்!” என்றதோடு அந்த பக்கம் முடிந்து இருந்தது, பின் பக்கத்தில் அவள் முத்தமும் ஐ லவ் யூ என்றும் எழுதி இருந்தது, உள்ளங்கையில் இருந்த அந்த கிட் பார்த்து கண்ணீரை வடித்து கொண்டே “அப்பாவை மன்னிச்சிடு தங்கம் உங்களை இப்படி வரவேற்பேன் என்று நான் எதிர் பார்க்கலை!” என்று அதற்கு முத்தம் கொடுத்து விட்டு பத்திர படுத்தி வைத்து விட்டு, “நீ அன்றைக்கு கேட்டதுக்கு அர்த்தம் எனக்கு இப்போது தான் புரியுது சுடர்
உன்மேல் பழி வந்தால் உன்னோட தரப்பு கேட்க ஒரு வாய்ப்பு முன்னாடியே கேட்டு இருக்க நான் தான் அவசர பட்டுட்டேன்” என்று தன்னை தானே அடித்து கொண்டு அழுது தீர்த்தவன்.

திடிரென தனது போனை எடுத்து, ரகுவிற்கு போனை போட்டு “டேய் அங்க சுடர் வந்தாள் எனக்கு போனை போடு, அவ என்ன பண்றா என்பதை எனக்கு சொல்லிட்டு இரு நான் உன்னை அப்புறம் கூப்பிடுகிறேன்” என்றவன் ரகுவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டான், “இவன் எதுக்கு இப்படி பதட்டமாக பேசுறான் என்னவா இருக்கும்! ஏதோ பிரச்சனை மட்டும் தெரியுது! அவனா சொல்லுவான் அப்போ பார்த்துக்கலாம்” என்று அமைதியாகி விட்டான் ரகு.

அடுத்து செல்வாவிற்கு போனை போட்டவன் தனது தாய் சொன்ன விவரங்களை தன்னிடம் சொல்லுமாறு கேட்டான் அவனோ அவர்கள் அனுமதி இல்லாமல் யாருக்கும் சொல்ல முடியாது அவங்க ஓகே சொல்லட்டும் என்று திட்டவட்டமாக சொல்லி போனை வைத்து விட, கோபமாக கீழே இறங்கி வந்த அகில் கல்யாணியை தேடி சென்றான், “அம்மா..அம்மா!” என்று காட்டு கத்தலாக கத்தி அழைத்தான், “இப்ப எதுக்கு கத்திட்டி இருக்க அகில், போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க நாளைக்கு என்னோட அம்முவை கூட்டி வரணும் அதற்கான வேலையை பாரு” என்று விரட்ட பார்க்க, அதற்குள் செல்வத்திற்கும் மீண்டும் போனை போட்டு “அவன் கிட்ட சொல்லுங்க நீங்க தான் அவனிடம் சொன்னதை கேட்டு தெரிந்து கொள்ள அனுமதி கொடுத்தீங்க என்று!” கடுகடுத்து பேசி நின்றான்.

“தம்பி!” “ஹான் லைன் ல இருக்கேன் மா, அகில் கேட்ட மாதிரி நீங்க பேசுனதை அவனுக்கு அனுப்பலாமா?” என்று கேட்க “சரி தம்பி அவனுக்கு கொடுத்துடு” என்று அவர் சொன்னதும் “இன்னும் ஒரு நிமிடத்தில் எனக்கு அனுப்பி இருக்கணும்” என்று பல்லை கடித்து சொன்னவன் சட்டென்று போனை கட் செய்து விட்டு வேகமாக தனது அறைக்கு ஓடி சென்றான்.

அறைக்கு வந்தவன் சிதறிய துணிகளில் அவள் அன்று ஜிம்மிற்கு பயன் படுத்திய உடையை எடுத்து அணிந்து கொண்டவன் அவளது புடவையையும் கையிலே வைத்து அணைத்து கொண்டு போனை பார்த்தான் அப்போது தான் செல்வா அனுப்பியதும் வந்து இருந்தது.

ஆர்வமாக அதை திறந்து பார்த்தவன் கல்யாணி அழுது கொண்டே பேச ஆரம்பித்தாள். “என்னோட புருஷன் ஒரு குடும்பத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்துட்டாரு அதால ஒரு நல்ல மனுஷன் உயிரும் போயிடுச்சி!” என்று சொன்னவள் குலுங்கி குலுங்கி அழுதாள், கொஞ்சம் அழுகை குறைந்ததும் தண்ணிரை குடித்து விட்டு மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார்.
 
  • Sad
Reactions: shasri