“ஒரு இருபத்து ஐந்து வருடத்திற்கு முன்னாடி நாங்க இவ்வளவு வசதியா இல்லை! என்னோட புருஷனும் ராகவன் என்ற ஒருத்தரும் ஒண்ணா சேர்ந்து பிசினெஸ் பண்ணிட்டு இருந்தாங்க எங்களுக்கும் கல்யாணம் ஆகி பையன் மட்டும் கை குழந்தையா இருந்தான்,
ராகவன் அண்ணாவுக்கு அப்போ கல்யாணம் ஆகல ஆனா அவரு மகேஷ்வரி என்ற பொண்ணை காதலிச்சிட்டு இருந்தாரு, அவங்க நல்ல வசதியான குடும்பம் அவ மேல் படிப்பு படிக்க ஹாஸ்டல் தங்கி இருந்தாங்க! அவங்க காலேஜில் இருந்து வர வழியில் தான் இவங்க கம்பெனியும் இருந்தது, அப்படி அவங்க வரும் போதும் போகும் போதும் பார்த்து புடிச்சி போய் பழக ஆரம்பித்து இருக்காங்க,
ராகவன் அண்ணாவுக்கு பெரியதா சொல்லிக்கிற அளவுக்கு சொந்தமும் கிடையாது அவரு விவரம் தெரியும் போதே அவங்க அப்பா இல்லை, எப்படியோ படிச்சி வளர்ந்த அண்ணாவுக்கு வேலைக்கு போயிட்டு இருக்கும் போது அவங்க அம்மாவும் இல்லாமல் போயிட்டாங்க! அப்புறம் யாருமே இல்லாமல் தனியா இருந்தவருக்கு என்னோட புருஷனோட அறிமுகம் கிடைத்தது முதல்ல ரெண்டு பேரும் ஒரு கம்பனியில் வேலை செய்து இருந்து இருக்காங்க! தனியா தொழில் தொடங்கினால் என்ன என்று ரெண்டு பேரும் யோசித்து பணத்தை ரெடி பண்ணி பிசினஸ் ஆரம்பித்து இருக்காங்க, ராகவன் அண்ணாவை விட என்னோட புருஷன் அவரோட பங்கை குறைவா தான் கொடுத்து இருக்காரு ஆனாலும் ராகவன் அண்ணா இக்வல் பார்ட்னர்ஷிப் கொடுத்து இருக்காரு!
என்னோட புருஷனுக்கு சீக்கிரமே பணத்தை சம்பாதிச்சு கோடீஸ்வரன் ஆகிடனும் என்று பேராசை அதற்காக பணத்தை இரட்டிப்பா கிடைக்கும் வழி எதுவோ அதை தேடி தேடி பணத்தை அதுல கொடுத்து ஏமாந்தது வருவாரு! அப்போ தான் மகேஷ்வரி வீட்டுலையும் படிப்பு முடிய ஆறு மாதம் இருக்கு சொல்லி கல்யாணம் பண்ணனும் சொல்லி அவ ஊருக்கு போன சமயத்துல நிச்சயம் நடத்திட்டாங்க! அதுக்கு கட்டுபட்டு நிச்சயம் நடக்கட்டும் சொல்லி அமைதியா இருந்தவள், படிப்பு முடிந்ததும் கல்யாணம் சொன்னதும் மறுபடியும் ஹாஸ்டல் வந்தவ ராகவன் அண்ணாவை பார்த்து நடந்த நிச்சயம் சொல்லி அழுதுட்டு இருந்தவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு!
நாங்களும் அப்போ தான் அவளை முதல் முறையாக பார்த்தோம், அவளுக்கு ஆறுதல் சொல்லி தேற்றி பேசும் போது அவங்க குடும்பத்தில் இவங்க காதலை சொன்னாலும் கல்யாணத்தை நிறுத்த மாட்டாங்க, அவளை பிடிச்சி வைச்சி ரெண்டு பேரையும் பிரிச்சிடுவாங்க சொல்லி அழுதவளுக்கு நானும் என்னோட புருஷனும் சேர்ந்தே தான் கல்யாணத்தை நடத்தினோம் அப்போ அகிலுக்கு ஒரு ரெண்டு வயசு இருக்கும். இதோ இந்த வீடு இருக்கே இந்த இடத்தில் தான் அவங்களும் நாங்களும் சின்னதாக வீடு கட்டி வாழ்ந்துட்டு இருந்தோம்,
மகேஷ்வரி காணாமல் போன விஷயம் அவங்க குடும்பத்துக்கு தெரிந்து இங்கே தேடி வந்துட்டு போனதா சொன்னாங்க! அப்போ நாங்க இல்லை குடும்பத்தோட குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு வரும் போது போலீஸ் வந்து ராகவன் அண்ணாவிடம் பேசிட்டு போனத்தை தான் பார்த்தோம், அவங்க குடும்பத்தோட வந்து மகேஷ்வரியை கூப்பிட்டு பார்த்த போது வர மறுத்து இருக்கா அவங்களும் ராகவன் அண்ணா மேலே கம்ப்ளெண்ட் கொடுத்து கூட்டி வந்து மிரட்டும் போது,
மகேஷ் இவரை விரும்பி தான் கல்யாணம் பண்ணேன் யாரும் மிரட்டல என்று சொல்லி அவங்களை அனுப்பி வைச்சி இருக்கா! அவர்களும் சண்டை போட்டு நீ செத்தால் நாங்க வர மாட்டோம் நாங்க செத்தாலும் நீ வர கூடாது என்று சொல்லி திட்டிட்டு போனதா சொல்லி என்னோட தோளில் சாய்ந்து அழுதா! என்று சொன்ன கல்யாணி தண்ணிரை குடித்து கொஞ்சம் தன்னை இயல்பாக மாற்றியவள்,
அதற்கு பிறகு ரெண்டு பேரும் நல்லா அன்னியோன்யம்மா சந்தோசமா வாழ்ந்துட்டு தான் இருந்தாங்க! திடீரென மகேஷ் அம்மா இறந்துட்டாங்க சொல்லி போன் வரவும் இவங்க ரெண்டு பேரும் போயிருக்கும் போது ராகவன் அண்ணாவை மகேஷ்வோட அண்ணா அடிச்சதாகவும் சாபம் விட்டதாகவும் சொன்னாள் அதிலிருந்து அவளை வெளியே கொண்டு வருவதே பெரிய விஷயமா போயிடுச்சி எங்களுக்கு, அதிலிருந்து அண்ணன் கொஞ்சம் தாமதமாக வந்தாலும் பதறி போய் வாசலே பார்த்திட்டு இருப்பாள், அவங்க கொடுத்த சாபம் பளிச்சிடுமோ! என்ற பயம் அவளை எது பற்றியும் யோசிக்கவே விடல,
அவ கர்ப்பமாக இருக்கிறதை நான் கண்டு புடிச்சி சொன்ன பிறகு தான் அவளுக்கு மூன்று மாதம் பீரியட் வரலை என்பது அவளுக்கு ஞாபகம் வந்தது, அதற்கு பிறகு ஓரளவு இயல்புக்கு வந்த மகேஷ் நல்லா தான் வாழ்ந்துட்டு இருந்தாள் அவளை பார்த்துக்கவே அண்ணா சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாரு, அது என்னோட புருஷனுக்கு ரொம்பவே வசதியா போயிச்சி அண்ணா இல்லாத நேரம் அவரோட பேராசை எட்டி பார்க்க, கம்பனி பணத்துல கை வைக்க ஆரம்பித்து இருந்தாரு! எப்படியும் ஜெயித்துடுவோம் என்ற நம்பிக்கையில், பணம் இரட்டிப்பாக வந்ததும் எடுத்த பணத்தை திருப்பி வைச்சிடலாம் என்ற நம்பிக்கையில் பணம் எடுத்து இருக்காரு ஆனால் அவரு கட்டின பணம் இழந்தது தான் மிச்சம்,
அதற்குள்ள மகேஷுக்கும் ஒரு பொண்ணு பொறந்து இருந்தது, அந்த குழந்தைக்கு என்னோட புருஷன் தான் அமுதா என்ற பெயரை வைச்சாரு! நாங்க எல்லோரும் செல்லமா அம்மு தான் கூப்பிடுவோம்” என்று சொன்னவள் மீண்டும் அழுக, செல்வம் எழுந்து வந்து தண்ணிரை கொடுத்து “அம்மா முடியல என்றால் விடுங்க! நான் வேண்டுமென்றால் இன்னொரு நாள் வரேன் பேசிக்கலாம்” என்றதும்
“இல்ல பா என்னோட மனபாரத்தை இப்போதே இறக்கி வைச்சிடுறேன்” என்று சொல்லி தன்னிலை அடைந்த பிறகு “நான் எதுல விட்டேன்” என்று செல்வத்தை பார்த்து கேட்க, “ராகவன் மகேஷ்வரி பொண்ணை அம்மு சொல்லி கூப்பிடுவிங்க சொன்னீங்க!” என்றான்.
“ஹான் அம்மு! எங்க வீட்டுல வந்த முதல் பொண்ணு அம்மு அவ வந்த ஒரு வருஷம் கழித்து தான் எனக்கும் இன்னொரு குழந்தை உருவாகி இருந்தது, அம்முவை கொஞ்சாமல் என்னோட புருஷனுக்கு அந்த நாளே போகது, அவளும் மாமா அத்தை சொல்லி எங்களிடம் ஒட்டிக்கொண்டு தான் இருப்பா, எனக்கும் குழந்தை பிறக்கவும் தேதி நெருங்கிட்டு இருந்தது, என்னோட அம்மா வீட்டுக்கு போறேன் சொன்ன போது நான் பார்த்து கொள்கிறேன் சொன்னா, நான் தான் எதுக்கு அவளுக்கு சிரமம் கொடுக்கணும் சொல்லி என்னோட பையன் அகிலனோட கிளம்பி வந்துட்டேன் ஆனால் எனக்கு தெரியாது!
அது தான் நாங்க ஒற்றுமையா இருந்த நாட்கள் முடிய போகுது என்று, என்னோட புருஷன் செய்த பண மோசடி ராகவன் அண்ணா கண்டு புடிச்சி அந்த பணத்தை திருப்பி வைக்க சொல்லி டைம் கொடுத்து இருந்து இருக்காரு, நானும் எனக்கு பொண்ணு பொறந்த சில மாதங்களில் இங்கே வந்துவிட்டேன் அவரும் அதிலிருந்து அவங்ககிட்ட என்னை பேச விடாமல் இருந்தவரு, கோவமா ஒரு நாள் அடிச்சிட்டாரு அதை மகேஷ் பார்த்து அண்ணாவிடம் சொல்லி இருக்கா அவரும் புருஷன் பொண்டாட்டி விஷயத்துல தலையிடாமல் இரு இன்று அடிச்சிகிட்டவங்க நாளைக்கே சேர்ந்துப்பாங்க என்று சொல்லி தள்ளி நின்னுட்டாங்க,
அவரும் அண்ணாவும் நெருக்கமாக பேசி இருந்த பழக்கம் குறைந்து போய் வேலை விசயம் மட்டும் பேசி நாட்களை ஓட்டி கொண்டு இருந்து இருக்காங்க! அப்படி தான் ஒரு நாள் கம்பனியில் வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம் போடணும் சொல்லி பேங்க் போயி பணத்தை எடுத்துட்டு வந்து இருக்காங்க! ஆனா அன்றைக்கு..! இவங்க போன வண்டி ஆக்சிடன்ட் ஆகுவதற்கு முன்னாடி பணத்தை யாரோ திருடி கொண்டு போனதாகவும் அவனை விரட்டும் போது எதிரே வந்த லாரியில் அடிபட்டு ராகவன் அண்ணா அங்கேயே இறந்து விட்டதாகவும் என்னோட புருஷன் லேசான காயத்துடன்
பிழைத்ததாகவும் போன் வந்தது நாங்க ரெண்டு பேரும் போய் பார்க்கும் போது என்று அழுதவள் அப்படியே மேஜையில் தலையை வைத்து படுத்து கொண்டு அழுது கொண்டே இருந்தாள்.
“போதும் அம்மா இதோட நிறுத்தி கொள்ளலாம் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்” என்று அவளை சமாதானம் செய்ய, வெடுக்கென்று எழுந்தவள் தனது கண்ணை அழுந்த துடைத்து கொண்டு “இல்லை தம்பி நான் சொல்கிறேன்” என்று சொன்ன கல்யாணியிடம் ஃப்ளாஷ்கில் இருந்த காபியை ஒரு டம்ளரில் இருந்து ஊற்றி கொடுத்து இருந்தான் செல்வா.
காபியை குடித்தவள் சற்று இதமாக உணர்ந்தாள், “அப்புறம் நாங்க தான் ராகவன் அண்ணாவுக்கு எல்லாமே செய்தோம் இவரும் ஒரு வாரம் பிரம்மை பிடித்த மாதிரி இருந்தார், கம்பெனியை இவருடைய பெயருக்கு மாற்றி எழுதி அதுக்கு எந்த ஆட்சபனையும் இல்லை என்று மகேஷிடம் கையெழுத்தை வாங்க வக்கீல் வந்து இருந்தாரு, கேட்டதுக்கு இது தான் ப்ரோசிஜர் சொன்னாரு! அப்போது வக்கீல் வைத்திருந்த பத்திரத்தை தாண்டி வெறுமையான பத்திரம் கேட்டாள் அதிலும் கையெழுத்தை போட்டு விட்டு, என்னோட புருஷன் முன்னாடி அவளது குழந்தையை இடுப்பில் வைத்து கொண்டு “மிஸ்டர் மகேந்திரன் இந்த பணத்துக்காக என்னோட புருஷன் என்னோட காதல் வாழ்க்கையை அழிச்சிட்ட இல்ல! இந்தா வைச்சிக்க இந்த பணம் கம்பனி, வீடு எல்லாமே என்னோட புருஷன் ராகவன் உனக்கு போட்ட பிச்சையாக வைச்சிக்க! இனியும் நீ சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்திலும் என்னோட புருஷனோட ரத்த வாடை தான் வீசும்! கண்டிப்பா நீ நல்லவே இருக்க மாட்ட!” என்று சொன்னவள் தனது குடும்ப போட்டாவையும் குழந்தையும் சில துணிகள் அடங்கிய பையை மட்டுமே எடுத்து சென்றாள்.
இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கும் நேரத்தில் அவள் எங்கே போனால் என்று தெரியாமல் ரெண்டு பேரும் நிற்கும் போது அவ சொன்ன வார்த்தை திருப்பி திருப்பி என்னோட காதில் ஒலித்து கொண்டே இருந்தது, அப்போ இவரு ஏதோ செய்து இருக்காரு தோணும் போது அவரை சட்டை புடிச்சி கேள்வி கேட்கும் போது அவரோ தலையில் அடித்து கொண்டு ஓ வென்று கதறி அழுது, “உன்னை கொல்லனும் நினைக்கல ராகவா பணத்தை மட்டும் திருடி அந்த பணத்தை வைச்சி, கம்பனிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்கலாம் நினைத்து ஆளை ஏற்பாடு செய்தேன் இப்படி நடக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று அடித்து கொண்டு அழுகும் கணவனை என்ன சொல்வது என்று புரியாமல் அப்படியே குழந்தைகளுடன் உள்ளே போன எனக்கு அவர் கூட பேசவே பிடிக்கவில்லை, ஒரு வாரம் அவருடன் பேசாமல் தான் இருந்தேன்,
ஒரு நாள் திடீரென எனக்கு பக்கத்தில் வந்தவர் என்னோட காலை இரண்டையும் புடிச்சி
அழுதுட்டு இருந்தாரு! அவரை விட்டு விலகி நின்ற பிறகு எழுந்து வந்து என்னோட இரண்டு கையை பிடித்து மாறி மாறி அவரே அவரோட கன்னத்தில் அறைந்து கொண்டார்.
கடினப்பட்டு அவரிடம் கையை உருவி போய் தனியா அமர்ந்து கொண்டு இருக்கும் போது என்னோட காலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து என்னோட மடியில் தலையை வைத்து கொண்டார்.