• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 32

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
“வந்த கோபத்துக்கு அவரோட தலையை தள்ளி விட்டு எழுந்து கொள்ளணும் தோணிச்சி, அப்போ அவரு “என்னோட பக்கத்தை நான் சொன்னதுக்கு பிறகு, எனக்கு நீ எந்த தண்டனை கொடுத்தாலும் மனசார ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லும் போது “என்ன தான் சொல்லுறாரு!” என்று கேட்போம் என்று, அவர் பேசுறதை கேட்க ஆரம்பித்தேன், எனக்கு தெரியாத அவரோட குணத்தை சொல்லிட்டு இருந்தார்.

“நான் கம்பனி பணத்தை நிறைய எடுத்து செலவு செய்துட்டேன், ரொம்ப நாளாக ராகவன் இதை கேட்காமல் இருந்தான் ஒரு வருட அக்கவுண்ட்ஸ் பார்க்கும் போது நிறைய பணம் கணக்கில் வரவில்லை என்று சொல்லி கேட்கும் போது என்னால உண்மையை மறைக்க முடியல, நான் தான் எடுத்தேன் சொல்லி ஒத்து கொண்டேன், அவன் எடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு சில மாதங்கள் கெடு கொடுத்து இருந்தான், என்னால அந்த பணத்தை கொடுக்க முடியல, அப்போது தான் சம்பளம் கொடுக்க பணத்தை நாங்க ரெண்டு பேரும் எடுத்து கொண்டு வரும் போது ஆளை வைச்சி திருடி அந்த பணத்தை மாற்றி கொஞ்ச நாளில் கொடுத்திடலாம் பிளான் பண்ணி இருந்தேன், எல்லாமே சரியா போயிட்டு தான் இருந்தது என்னோட திட்டம் படி, பணம் என்னோட ஆளுங்க திருடி கொண்டு தான் போனாங்க! அவங்க வண்டி முன்னாடி போகும் போது ராகவன் வேகமாக வண்டியை ஓட்டி கொண்டு ஓவர் டேக் பண்ணான் அப்போ தான் எதிர்பார்க்காமல் லாரியில் வண்டியை விட்டுவிட்டான், அதுல நான் பிழைச்சித்தே பெரிய விசயம்! நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!” என்று கண்ணீர் விட்டவன்,

குற்ற உணர்ச்சி தாளாமல் கண்ணாடி முன்னாடி நின்று பேசி அழுகும் போது ஒரு வேளை மகேஷ் பார்த்து இருப்பாள், அதற்கு பிறகு தான் அவளும் எனக்கு காபியை கொடுத்து விட்டு போனாள் என்று அவர் சொன்னதும் அமைதியாக எழுந்து நின்று அவரை பூஜை அறை கூட்டி கொண்டு போனேன் அங்கே இருக்கிற கடவுளுக்கு சாட்சியாக, ஒரு சத்தியம் செய்தேன் இனி நான் என்னோட இரண்டு பசங்களுக்காக மட்டுமே உன்னோட வாழ போறேன், பொண்டாட்டியென்று எந்த உரிமையும் நீ எடுத்துக்க கூடாது! என்னோட மகேஷ் இழந்த திருமண வாழ்க்கை எனக்கும் தேவையில்லை! இல்லறம் என்பது இனி உனக்கு கிடையாது இனி நீ பொண்டாட்டி இருந்தும் தனி மரமாக எரியனும், பிள்ளைகள் எதிரே நல்ல பெற்றோராக நடிக்கலாம் ஆனால் இந்த நிமிடத்தில் இருந்து நீங்க யாரோ! நான் யாரோ! இது இந்த கடவுள் மேலேயும் நம்ம குழந்தைகள் மேலேயும் சத்தியம் என்று சொன்னேன், அதற்கு பிறகு இந்த நாள் வரை எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாத வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு தான் வருகிறோம்.

அவளை தேடி கொண்டு தான் இருந்தோம், கிடைக்க கூடாது என்று ஓடி ஒளிந்தவளை கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கிறோம் எப்படியாவது அவளை கண்டு பிடிச்சி தாங்க!” என்று இரு கை கூப்பி வேண்டுவதோடு அந்த வீடியோ முடிந்து இருந்தது.

தந்தையின் மறைக்கபட்ட பக்கங்கள் இத்தனை நாள் ரகசியமாக இருந்தது இப்போது வெளியே வந்த பிறகு எந்த மாதிரி வினையாற்றுவது என்று தெரியாமல் கையில் இருந்த சுடரின் புடவையை முகத்தில் அழுத்தி கொண்டு அழுதான்.

போனின் சத்தம் கேட்டு எடுத்து பார்த்தவன் ரகு என்ற பெயரை பார்த்ததும் அட்டன் செய்து “சொல்லுடா சுடர் வீட்டுக்கு வந்துட்டாள!” என்று வேகமாக கேட்டான், அவனின் பதற்றம் புரிந்து “டேய் என்னடா பண்ணி வைச்சி இருக்க, அவ தலை முடி கலைந்து கண்ணம் வீங்கி சிவந்து போயி இருக்கு அப்படியே பிரம்மை பிடித்த மாதிரி நடந்து போறா! அவங்க மாமா வந்து தான் காருக்கு பணம் கொடுத்து அனுப்புறாரு! அவர் முகம் அப்படியே கோபத்துல எரியுது என்ன தான் நடந்துச்சி” என்று ரகு கேட்க, “நான் அப்புறம் சொல்றேன் அவளை மட்டும் பார்த்துக்க! அவங்க வீட்டில் என்ன நடக்குது என்று சொல்லுடா” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

தலையை பிய்த்து கொள்ளாதது தான் குறை, ஒன்றுமே விளங்கவில்லை அவனுக்கு, ஆனாலும் ஒன்று மட்டும் புரிந்து போனது ஏதோ சண்டை என்று,

(மகேஷ்வரி அடுத்து என்ன செய்தால் அதையும் பார்த்து விடலாம்)

குழந்தையோடும் கணவனின் புகைப்படமும் எடுத்து கொண்டு வந்தவள் கால் போன போக்கில் போக, ஒரு கோவிலில் போய் அழுதாள், குழந்தை பசியில் அழுது தனது இருப்பை ஞாபகம் படுத்த, கண்ணீரை துடைத்து கொண்டு எழுந்தவள், தனது கையில் இருந்த தங்க வளையலை விற்று குழந்தைக்கு சாப்பிட வாங்கி கொடுத்துவிட்டு, நேராக தனது பிறந்த வீட்டின் வாசலில் நின்றாள்,

அவள் வந்து நின்ற கோலத்தை கண்டு தூக்கி பிடித்த கோபத்தை விட்டு எறிந்து ஓடி அணைத்து கொண்டார் விருத்தாச்சலம் “அம்மாடி என்னமா கோலம் இது!” என்று கட்டி கொண்டு கேட்க, “நீ தானே சொன்ன எங்களை மீறிக் கட்டிக்கொண்டவனோடு எப்படி சந்தோசமாக வாழ்விடுவ! என்று சாபம் கொடுத்த நீ ஆசைபட்ட மாதிரி வந்துட்டேன் போதுமா” என்று சொன்னதும் ஏதோ ஒரு கோபத்தில் சொன்ன வார்த்தை இப்போது அவரையே சுட்டது, “ஏதோ கோவத்தில் சொன்னது அதெப்படி என்னோட தங்கை வாழ்க்கை கெடனும் நினைப்பேன்” என்று அவளை கட்டி கொண்டு அழுதார்.

“இப்ப அழுது என்ன பயன் அதான் பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை பண்ணிட்டானே அந்த பாவி!” என்று கையில் இருந்த தனது உடமைகளை தொப்பென்று போட்டவள் புழுதி பறக்கும் அந்த மண் தரையில் விழுந்து அழுதாள், இவள் அழுக அழுக பார்த்து கொண்டு இருந்த அமுதாவும் ஓவென்று அழுக இவ்வளவு நேரமும் மகேஷை கட்டி கொண்டு அழுத சாந்தாவும் விருத்தாசலமும் குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய, சாந்தாவிடம் கொடுத்து விட்டு தனது தங்கையை கை தாங்காலாக வீட்டுக்குள்ளே அழைத்து சென்று ஓரளவு தேற்றி இருந்தார், புழுதியில் புரண்டவளை குளிக்கவும் சாப்பிடவும் வைத்து தூங்க வைக்க போராடினார்கள் இருவரும், இரவெல்லாம் தூங்காமல் யோசித்து கொண்டும் அழுது கொண்டும் இருந்த தங்கையை பழைய நிலைக்கு கொண்டு வர மருத்துவமும் ஆன்மிகமும் அவளுக்கு கொடுத்து கொஞ்சம் மனதை மாற்றி இருந்தனர்.

அவள் கொண்டு வந்த பையில் இருந்த புகைபடத்தை எடுத்து பார்த்ததில் அதில் இருந்த இரண்டு குடும்பத்தில் ஒன்று தங்கையின் குடும்பம் என்பது சொல்லாமலே புரிந்து போனது அவருக்கு, மற்ற குடும்பம் என்று யோசனையாக இருந்தவர் அந்த படத்தை காண்பித்து கேட்க, “அவன் தான் என்னோட புருஷனோட உயிரை குடிக்க வந்த பணப்பேய்” என்று அன்று அவன் கண்ணாடி பார்த்து பேசியதை கண்ணீர் மல்க சொல்லி முடித்தாள்.

“போதும் தாயி நீ அழுதது அடுத்து குழந்தையை பாரு! இன்னும் பழசை நினைத்து குழந்தையை கண்டுக்காமல் விடாதே!” என்று சொன்ன பிறகே அமுதா என்று அவளின் பெயரை சொன்னவள் பாதியிலே நிறுத்தி, “அந்த கேடு கெட்டவன் வைச்ச பேரு என்னோட பொண்ணுக்கு வேண்டாம், அவளுக்கு வேற பெயரை வைக்கணும் அண்ணே, முறைபடி சொல்லி செய்யணும்” சொல்லி உள்ளே சென்று விட்டாள்,

அவள் கேட்டது போலவே அமுதா அம்மு என்று அழைக்கப்பட்ட பெயரை மாற்றி “சுடர்கொடி” என்று பெயரை வைத்து ஊருக்கு மத்தியில் அவளை அறிமுகம் செய்து கடா விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார்.
விருத்தாச்சலத்துக்கும் குழந்தை இல்லாமல் இருக்க அவளை தனது குழந்தையாக வளர்த்து வந்தார் சில வருடங்கள் கழித்தே அவருக்கு கபிலன் பிறந்தான், அவருக்கு என்று குழந்தை வந்த பிறகும் சுடரிடம் எந்த வேறுபாடும் இருவரும் காட்டவில்லை, மன ஆறுதலுக்காக ஆன்மீகத்தில் நுழைந்த மகேஷ்வரி முழு நேரமும் அதிலே மூழ்கி போனாள் யோகி மாதிரி சுற்றி திரிந்தவள் எப்போதாவது வீடு வந்து செல்வாள், தங்கையின் நிலமையை சுடர் வளரும் போது சொன்னவர் ஒரு நாள் அவள் வாழ்க்கையில் அனுபவித்த வேதனையை சொல்லி பழி வாங்கும் எண்ணத்தை விதைத்தார்.

நாட்களும் போக போக மகேந்திரனும் பிசினஸ் நல்ல வளர்ச்சி அடைந்து இருந்தது, அவரின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு சென்று கல்லூரி ஒன்றை தொடங்குவதாக செய்தித்தாள் விளம்பரம் பார்த்து அந்த காலேஜில் படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவள் பள்ளி படிப்பு முடிந்ததும் அதற்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தாள், காலேஜ் சேர்ந்து ஒவ்வொன்றாக கவனித்து கொண்டும் மறைமுக தொந்தரவும் கொடுத்து கொண்டும் இருந்தாள். அப்படியே படித்து முடித்ததும் அதே காலேஜில் சேர்ந்து கொண்டாள், மகேந்திரனிடம் நேரடியாக நல்ல பெயரும் அதே நேரம் பல தொல்லைகளை மறைமுகமாகவும் கொடுத்து தனது தந்தையின் இழப்பிற்கு பழி தீர்த்து கொண்டு இருந்தாள், அப்போது தான் அகிலை தனது ஊரிலே பார்த்து ஈர்க்கப்பட்டவள் நாளடைவில் அவன் மேல் கொண்ட ஈர்ப்பை காதல் என்று உணர்ந்ததும், அதை ஒதுக்கி வைத்தும் ஒரு கட்டத்திற்கு மேல் காதல் பக்கம் சாய்ந்தாள், இருந்தாலும் அவரை பழி தீர்க்க வேண்டும் என்று எண்ணி தனது தந்தைக்கு நடந்த விபத்தை அதேபோல் அவருக்கும் கொடுக்க நினைத்து அதற்கான சூழ்நிலை எதிர் பார்க்க சமயமும் அமைய பயன்படுத்தி கொண்டாள்.


அகிலனிடம் கர்ப்பத்தை எப்படியெல்லாம் சொல்லலாம் என்று யோசித்தவள் அதற்காக ஐ லவ் யூ என்று எழுதியும் அதிலே பிரக்னன்சி கிட்டும் வைத்து அவன் உள்ளே வந்ததும் கண்ணை மூடச்சொல்லி கொடுக்கலாம் என்று சிரித்த சுடர் அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்டதும் மகிழ்ச்சியில் அவனை காண வாசலில் நிற்க அங்கோ நடந்தது அனைத்தும் தலைகீழ் பொறுத்து பார்த்தவள் 'பணத்திற்காக என்னையும் கொல்லவும் துணிவாய்' என்று சொன்னதும் அவனை அறைந்து உண்மையை சொல்லி தனது உடமைகளை எடுக்கும் போது கண்ணில் பட்ட கடிதத்தை திருப்பி எழுதிவைத்து விட்டு கோவமாக கிளம்பி சென்றாள்.

அன்று தங்கையை போலவே அவள் பெற்ற மகளும் பையோட வரவே கதிகலங்கி போனார் சுடரின் மாமா. இருந்தும் இது ஒருநாள் கண்டிப்பாக நிகழும் என்று தெரிந்தது தான் என்றாலும் கண்ணம் வீங்கி முடி கலைந்து கசங்கிய சேலை என்று வந்தது தான் அவருக்கு வலித்தது, தங்கையை போல அழுகாமல் காரை விட்டு இறங்கியவள் நேராக தனது அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டாள்.

கதவை நால்வருமாக தட்டி கொண்டு இருக்க வெறுப்பாக எழுந்து வந்து கதவை திறந்து “நான் எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்க மாட்டேன்! போய் அவங்க அவங்க வேலையை பாருங்க! எனக்காக இல்லை என்றாலும் என்னோட குழந்தைக்காவே நான் உயிரோட இருப்பேன் அதுக்கு முன்னாடி சமைச்சி வைங்க காலையில் இருந்து சரியாவே சாப்பிடல!” என்று சொல்லி அனைவரையும் விரட்டி விட்டு கதவடைத்து கொண்டாள்.
 
  • Love
Reactions: shasri

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
sudar sema bold ma nee
நம்மளை நாம தான் பார்த்துக்கணும் என்ற சூழல் ஒவ்வொரு பொண்ணுக்கும் வரும் போது தைரியமாகவும் மிடுக்காகவும் பெண்கள் தெரிவார்கள்🙏