சுடும் நிலவு -3
விளையாட்டினை துவங்கிய "மது..."
முதலில் தனது அப்பாவை , விளையாட்டினை துவங்கி வைக்க கேட்கிறாள்.
தன் அன்பு , மகளின் பேச்சுக்கு மறு வார்த்தைகள் இன்றி தானே விளையாட்டை துவங்கி வைக்க ஒப்புக்கொண்டவர்,
தனது மனைவியை பார்த்து என்ன டார்லிங், ரெடியா?? என்று கேட்கவே,
"பிந்துவோ ..", பசங்களுக்கு தான் வேறு வேலை இல்லை. சிறு பிள்ளைகள், விளையாடுவார்கள், நீங்களும் சிறு பிள்ளை போல் அவர்களோடு விளையாடிக் கொண்டு எழுந்து குளிக்க போங்க என்று கூறுகிறாள்.
நோ....! மை டியர், முதலில் கேம் முடிச்சு தான் இன்று குளியல் என்று "கதிர்.."கூறவே,
அப்பா....! அப்படியே , பேசிக்கிட்டே இருக்காதீங்க முதல்ல கேம் ஸ்டார்ட் பண்ணுங்க என்று "மது" குரல் கொடுக்கிறாள்.
ம்ம்ம்....! சரி மா.ஓரே வரியில் என் மனைவியை வர்ணிக்க வேண்டும் அவ்வளவு தானே?
இப்போ பாருங்க பா எல்லாரும்... என்று ஆர்வமாக துவங்கினார் கதிர்.
"காலம் கரைந்தும் கண்ணால் பேசும் புதுக்கவிதை...! " என்னவள் என்றிட அனைவரும் கைத்தட்டி அருமை என்று கூறவே ,
ஆஹா...மாமா இப்படி தான் பிட்,பிட்டா போட்டு அத்தைய கரெக்ட் பண்ணிங்களா ,?? அங்கு பாருங்க எல்லாரும் அத்தை முகத்தில் எத்தனை வெட்கம் என்று ஆகாஷ் கூற,
ச்சீ....ச்சீ....! வெட்கமா?? எனக்கா? என்று வெட்கத்தோடு சிரித்துக் கொண்டே "பிந்து ...'பதிலளிக்கிறாள்.
சரி....! அடுத்து "முரளி" மாமா நீங்க அத்தையை பற்றி ஓரே வரியில் வர்ணிங்க என்று "மது" கூறுகிறாள்.
"முரளி.."சிரித்துக் கொண்டே, இந்த வருடத்தோடு பெரிய நகைச்சுவை இதுதான் என்று,சிரிப்பை அடக்க முடியாமல் கூறுகிறார்.
அதெல்லாம், முடியாது மாமா..! கேம் என்றால் கேம் தான் நீங்கள் கூறி தான் ஆக வேண்டும் என்று "மது" கட்டளை இடுகிறாள்.
சரி...! நான் ரெடி , "நித்தி" நீ ரெடியா என்று முரளி கேட்க.
நித்தி..! ம்ம்ம்...! ஆமாங்க, நானும் ரெடி ரொம்ப ஆவலாவும் இருக்கேன். ஒற்றை வரியில் என்னை , நீங்கள் எப்படி வர்ணிக்க போறீங்கன்னு பார்ப்போம், என் அண்ணனை விட சூப்பரா சொல்லிடுங்க என்கிறாள்.
ம்ம்...ம்ம்....! ரெடி, ஜூட் என்று கூறிவிட்டு,
தன் மனைவியின் முகத்தைப் பார்த்தப் படியே,
"எங்கே செல்லும் இந்த பாதை..!"
என்ற பாடல் வரியை பாடி காண்பிக்க,
ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ," நித்தி .." தன் கணவரின் அருகே சென்று முறைத்துப் படியே பற்களை கடித்து கொண்டு வீட்டுக்கு போற வழியில உங்களுக்கான பாதையை காட்டுகிறேன் என்று பொய்யான கோபத்தோடு உயரிய குரலில் கூறுகிறாள்.
அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க, இந்த பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை என்று "மது.." கூறிவிட்டு சரி நெக்ஸ்ட் என்னுடைய பாசமலர், என் அண்ணியை ஒற்றை வரியில் வர்ணிக்க போகிறார் என்கிறாள்.
உடனே...பாலா, அடுத்தது நான் கூறுகிறேன். முதலில் நம்ப புது மாப்பிள்ளை சொல்லட்டும் என்று ஆகாஷ் பக்கம் திரும்பி பார்க்கிறான் பாலா.
ஆமாம்...! "ஆகாஷ்..."மற்றும் மது..."நிச்சயம் ஆனவர்கள்.திருமணத்திற்காக காத்திருக்கிறார்கள்.
ஆகாஷ்...! ம்ம் .சரி ..! நானே , என் பொம்முக்கு சொல்றேன் என்றவுடன்,"மது.." தன்னை மறந்து ஆகாஷையே இமையசைக்காது பார்த்து கொண்டிருக்க,அதனை அறிந்தவனாய் அவனும் ,அவளை பார்த்தவாறு
"ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்"
என்று பாடலே பாடிவிட்டான் ஆகாஷ்..
அந்த பாடலைக் கேட்டவுடன் உள்ளுக்குள் ஏதோ மோகம் தொற்றிக் கொண்டாலும் அதனை வெளியே காட்டாதவாறு, உன்கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் மாமா இப்படி சிம்பிளா முடிச்சிட்டியே , இட்ஸ் ஓகே. என்று கூறுகிறாள்.
சரி...! சரி..! அடுத்து நம்ம பாலா தான் அவன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது, காயத்ரிக்காக ஏதோ ஒரு ஸ்பெஷல் வச்சிருக்கான்னு நினைக்கிறேன். வாங்க எல்லோரும் பாலா காதல் தேவதைக்காக செதுக்கி வைத்திருக்கும் சிற்பத்தை போல் அவன் வார்த்தைகளை நாமும் பார்ப்போம் என்று முரளி கூறவே,
வெட்கம் கலந்த புன்னகையோடு அட சும்மா, இருங்க மாமா..! நீங்களும் சேர்ந்து ஓட்டுறீங்க எனக்கு சும்மாவே ஒண்ணும் இவள வர்ணிக்க தெரியாது இதுல நீங்க எல்லாரும் வேற பக்கத்துல இருந்தீங்கன்னா, அவ்வளவு தான் என்று சிரித்துக்கொண்டே பாலா கூற,
போதும்.! போதும் டா ..!உன்னோட நடிப்பெல்லாம் இங்க செல்லாது ஒழுங்கா உன் மனசுல என்ன ஓடுதோ அதை சொல்லிடு நாங்க எல்லாம் இப்ப சொல்லலையா ??
ஒருவேளை சோத்துக்கு பயந்துகிட்டு என்னோட மச்சான் பிந்துவ வர்ணிச்சிட்டான். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழும் பயந்துகிட்டு என் பையனும் ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிட்டான் ஆனால் நான் பாரு யாருக்கும் பயப்படாம உண்மைய சொன்னேன் அதுதான் டா முரளி இது மாதிரி நீயும் தில்லான ஆம்பளையா இருந்தா சொல்லுடா பாப்போம் என்று முரளி பாலாவை ஊசுபேத்தி விட,
பாலா தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு இந்த மாமா இன்னிக்கு நம்மளை விடமாட்டார் போலவே என்ன பண்ணி சமாளிக்கலாம் என்று எண்ணத்தில் ஓடும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவனாய் காயுவின் அருகில் சென்று அமர்ந்து அனைவரையும் பார்த்தப்படியே,
பே..பே..ப்பப்பபே..! என்று பாலா ஊமை பாஷை பேசவே , அவனையே உற்றுநோக்கிய அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டனர். காயு அதான பார்த்தேன் பக்கத்தில வந்து உட்காரவும் என் மனுஷனுக்கு லவ் தான் பொங்கிட்டோன்னு தப்பா நினைச்சிட்டேன் வழக்கம் போல தத்தி தான் என்று அலுத்துக் கொண்டே உதட்டை சுலித்து சொல்கிறாள்.
மது...! போட்டி நேரம் முடிவடைந்தது போட்டிக்கான முடிவில் வெற்றி பெற்ற காதல் ஜோடி "கதிர் பிந்து" என்று தன் கைகளை தட்டி வேகமாக கூறுகிறாள்.
அவளை பின் தொடர்ந்து அனைவரும் கைதட்டி உற்சாகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
போதும்.. போதும்...! உங்கள் விளையாட்டு டயம் ஆகிட்டே போது நான் போய் சாப்பாடு செய்றேன் என்று," பிந்து" கிளம்பிவிட்டாள்.
பிந்து... அடுப்படியில் சென்று சமையல் துவங்க,காயு,வும் தன் அத்தைக்கு உதவி செய்துக்கொண்டிருக்க, வெளியே இருந்த நித்தியும் உள்ளே வந்து காயு தள்ளு ம்மா... என் அண்ணிக்கு நான் உதவி செய்கிறேன். நீ போய் வேற ஏதாவது வேலை இருந்தால் பாருமா என்கிறாள்.
அப்படியா..?? சரிங்க சித்தி, நான் ஆபீஸ்க்கு ஒரு மெயில் அனுப்பி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு அவளது அறைக்குள் சென்றவள் கணினி பெட்டியை போடுவதற்காக ஸ்விட்ச் போர்டில் கையை வைத்தவள் திடீரென்று மயக்கம் வந்து கீழே விழுகிறாள்,
காயுவின் அறை மாடியில் இருப்பதால் அவள் மயங்கி விழுந்தது யாருக்கும் தெரியவே இல்லை சற்று நேரம் கழிந்ததும், "பிந்து" ஏய்..! மது, போய் காயவ சாப்பிட அழைத்து வா என்று கூறவே,
மதுவும் காயு அறைக்குச் செல்கிறாள்.
அங்கு அவள் சற்றும் எதிர்பார்க்காதது போல் காயு மயக்க நிலையில் இருக்க இவள் ஒன்றும் புரியாமல், டேய் ...!பாலா அம்மா எல்லாரும் இங்க வாங்க அண்ணி மயக்கம் போட்டு கீழே விழுந்து கிடக்கிறாங்க என்று தன்னை மீறி அலறி கத்துகிறாள்.
மதுவின் குரலைக் கேட்டு அனைவரும் பதறி அடித்து காயுவின் அறைக்கு செல்கிறார்கள்.
தண்ணீரை எடுத்து அவளின் முகத்தில் தெளித்து எழுந்து அமர வைக்கிறாள் நித்தி,
ஏம்மா காயு என்ன ஆச்சு இப்போ தானே எங்க கூட ஜாலியா பேசிட்டு இருந்த, அதற்குள் என்னமா? முகம் எல்லாம் இப்படி வேர்த்து போயிருக்கே, என்ன டா பன்னுதுன்னு கேட்டுக்கொண்டே கைக்குட்டையை எடுத்து அவள் முகத்தில் நெற்றியில் படிந்திருக்கும் வியர்வை துளிகளை துடைத்து விடுகிறாள்.
"பிந்து "காயுவின் அருகில் வந்து அவளின் தலையை வருடிய படியே ஒரு நிமிஷம் உயிரே போயிருச்சு டா மா." மது" கத்தவும் நெஞ்செல்லாம் பதறிடிச்சு என்னாச்சு காயுமா என்று அக்கரை கலந்த அன்போடு கேட்கிறாள்.
சரி ...!அவளை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க முதல்ல ஹாஸ்பிடல் போகலாம் இப்படி, மாத்தி மாத்தி அவ கிட்ட கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காதீங்க .
என்று கதிர் கூறுவதைக் கேட்ட காயு,
இல்லை... மாமா.! ஹாஸ்பிடல் எல்லாம் போக வேண்டாம் எனக்கு ஒன்றும் இல்லை, தலைசுத்தல் தான் அதுவும் நல்ல விஷயம் தான்...மாமா...!நீங்க தாத்தா ஆகப் போறீங்க ,உங்களுக்கு பேரன் வரப்போறான் என்று காயு கூறவும்,
பிந்து கண்களில் இருந்து ஆனந்த கண்ணீரோடு காயுவின் அருகில் சென்று அவளின் நெற்றியில் முத்தம் பதித்த பிந்து , நாள் தள்ளிருக்கா மா என்று கேட்கிறாள்.
ஆமாம் அத்தை 15 நாட்கள் தள்ளி இருக்கிறது பிரக்னன்சி கார்டு வாங்கி கன்ஃபார்ம் பண்ணி பார்க்கணும் நான்கு நாட்களாகவே உடல் சோர்வாக உணர்கிறேன்.மயக்க நிலையாகவே இருக்கிறது அத்தை என்று காயு சொல்வதைக் கேட்ட பிந்து
அப்படினா இது கன்பார்ம் தாமா என்று மகிழ்ச்சி தாங்க முடியாமல் அடுப்படிக்கு சென்று இனிப்பு எடுத்துக் கொண்டு வந்து காயுக்கு ஊட்டி விடுகிறாள்
கங்கிராட்ஸ் அண்ணி மருமகன் வரப்போறான் இனி ஜாலிதான் என்று அண்ணியை கட்டி அனைத்து " மது" வாழ்த்து கூறுகிறாள்.
ஆகாஷ்...! பாலாவை பார்த்து மச்சான் ப ப.. ப ...ப... பாஷை பேசிட்டு ஊமை வேலை பண்ணி இருக்கீங்களா??? நீங்கள் என்று கேலி செய்து கொண்டே வாழ்த்துக்கள் மச்சான் வாழ்த்துக்கள் அக்கா என்று கூறுகிறான்.
"ஐ அம் எ ஹாப்பியஸ்ட் மேன் இன் தி வேர்ல்ட் " என்று வீடு அலறும் படி கதிர் வேகமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்.
"பிந்து.." ரொம்பவே மகிழ்ச்சியான நாள் இன்று எல்லோரும் கிளம்பி அப்படியே கோவிலுக்கு போயிட்டு வந்துருவோமே.
நித்திமா உனக்கு முக்கிய வேலை இருக்கிறதா ?? இல்லை என்றால் நீயும் வாயேன் கோவிலுக்கு போயிட்டு இந்தியாவுக்கு போறதுக்கு நிறைய சாமான்கள் வாங்க வேண்டும் நீ வந்தால் எனக்கு உதவியாக இருக்கும் என்கிறாள்
சரிங்க அண்ணி நிச்சயமாக வருகிறேன் எனக்கு எந்த முக்கிய வேலையும் இல்லை என்று நித்தி கூறவே
உடனே முரளி இல்லனா மட்டும் இவங்க ஃப்ரீயா, வேலை பாக்க போறாங்க பாருங்க ..அட..! ஏம்மா பிந்து.." நீ வேற யாரு கிட்ட எந்த கேள்வி கேட்கணும் என்கிற விவஸ்தையே உனக்கு கிடையாது, என்று தன் கையால் வாயை பொத்திக் கொண்டு முரளி சிரிக்க,
இல்லை..! உங்களுக்கு ஒன்னும் புரியல, வாங்க வீட்டுக்கு உங்களுக்கு இருக்கு என்று நித்தி கணவரை பார்த்து முறைக்கிறாள்.
சரி ...!நாமே பேசிக்கிட்டு இருந்தா எப்படி?? "பாலா ."இந்த சந்தோஷமான செய்தியை கேட்டதும் "காயுக்கு" ஸ்பெஷலா வாழ்த்து ஏதும் சொல்லுவான். நம்ம எல்லாம் இடைஞ்சலா இங்க எதுக்கு?? வாங்க எல்லோரும் டீசண்டா வெளியே போயிடுவோம். என்று முரளி கூறவே அனைவரும் அறையை விட்டு வெளியேறி விட்டனர்.
"பாலா..." காயுவின் அருகில் சென்று பக்கத்தில் அமர்ந்து அவளது கைகளை தன் உள்ளங்கையில் பிடித்து காயுமா, நீ..! அம்மா ஆகப் போறியா டி ?? நான் அப்பா ஆகப் போறேன்னா ?? என்று கலங்கிய கண்களோடு இமயசைக்காது அவளின் முகத்தை பார்த்த படியே கேட்கிறான்.
பக்கத்தில் நெருங்கி வந்த காயு தன் கைகளால் பாலாவின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டே, ஆமாங்க..! நீங்க அப்பா ஆக போறீங்க, எனக்கு குட்டி பாலா வரப் போறான் என்று கூறி பாலாவின் கன்னத்தில் மிருதுவான முத்தத்தை பதிக்கிறாள்.
அந்த நேரம் பார்த்து பாலாவின் கைபேசி வேகமாக அலறுகிறது..

தொடரும் 

பாலாவின் அலைபேசியில் வந்த கால் யாராக இருக்கும்????
அடுத்த பதிவில் பார்ப்போம்..