• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே.. 1

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
58
28
Karur
சூடிக் கொண்ட சுடர்விழியே


நாயகன் .. கௌசிக் வைத்தீஸ்வரன்..


நாயகி.. ரிஹானா..


அத்தியாயம் ..1


நியூயார்க் நகரம் …


வானளாவிய கட்டங்களுக்குப் பெயர் பெற்ற நகரம் என்றே சொல்லாம் நீயூயார்க் நகரத்தை… அந்தளவுக்குக் கட்டிடகலையில் சிறப்பு மிக்க பல்வேறு பாணி கட்டிங்கள் இங்கே உள்ளன.. அங்கே ஒவ்வொரு பாணி்யில் கட்டப்பட்ட இருக்கும் கட்டிடங்களோ உலகளவில் பெயர் பெற்றது…


அங்கே வசிக்கும் மக்களின் வீடுகளோ பழுப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டு இருக்க… அதன் உள் வடிவமைப்புகளைப் பார்க்கும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு தான்…


இப்படி அழகு வாய்ந்த ஊரில் தான் நம்முடைய நாயகி ரிஹானா ஒரு கட்டுப்பான கம்பெனியில் வேலை செய்யும் ஆர்க்டிக் டெக் .. கட்டங்களின் உள்யமைப்புகளை வடிவமைத்து தருபவள்… வேலை வந்துட்டால் வெள்ளைகாரன் போல செய்கிற வேலையில் ஆழ்ந்து ரசனையோடு செய்கிறவள்.. அந்த ரசனையோடயே அவளையும் பிரம்மன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிப் படைத்திருப்பானா..


கோவில் சிற்பம் போல இருப்பவளின் நிறமோ பால்வண்ணம், சுண்டி விட்டால் சிவந்து செந்நிறமாக மாறும் மென்மையான சருமம்த்தைக் கொண்டவள் தான் ரிஹானா.


பழுப்பும் கறுப்பும் கலந்த மயில்தோகை கூந்தலை இன்றைய நாகரிகம் பேரில் குதறி வைக்காமல் நீண்டு வளர்ந்து இடை வரை தொங்கும் பட்டுக் கூந்தலே கண்டவர்களே மீண்டும் திரும்பிப் பார்ப்பார்கள் ..


முழுங்கால வரை அணிந்திருந்த திரீ போர்ட் ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்திருக்க பார்த்ததும் மனதில்

பச்சக் ஒட்டிக்கொள்ளும்

பெவிக்கால் தேவதையாக மிளிர்ந்தாள்.. பழுப்பு நிறத்தில் கருவண்டு நீள விழிகளோ இங்குமங்கும் நார்தனமாட நீண்ட நாசியில் இன்றைய நாகரியத்தின் பேரில் போட்டிருந்த வளையமும்.. பூவிதழ்களில் லிப் பாரம் மட்டுமே போட்டு நிரந்தரமான மென்மையான புன்னகை குடிக் கொண்டிருக்க,அவளைக் கண்டவர்கள் எந்த வித அலங்காரமின்றி இவள்

சிற்பி செதுக்கிய பொற்சிலையா! என்று எண்ணத்தை மனதிற்குள் நினைக்காமல் அவளைத் தாண்டிச் சென்றதில்லை …


அழகும் அறிவும் கொண்ட ரிஹானா அந்த நகரிலுள்ள பெரிய கட்டுமானக் கம்பெனியில் தான் வேலை செய்கிறாள்..


காலையில் விரைவாக எழுந்தவளோ ஆபீஸ்க்குக் கிளம்பி ரெடியாகி கீழே வரும் போதே அங்கே அவளின் தந்தை ரிச்சர்ட்டும், அவரின் இரண்டாவது மனைவியாக வந்த லாஸ்யாவும் பெரிய விவாதத்தைக் கொண்டிருக்க.. அதைப் பார்த்தவளோ இன்று என்ன பிரச்சினையோ? என்று எண்ணிக் கொண்டு அவர்களைக் கண்டு கொள்ளாமல் கடந்து டைனிங் டேபிளை நெருங்கியவள் அங்கே தந்தை பேசியது செவிப்பறையை மோதவும், அப்படியே உறைந்து போய் நின்றவளால் அவ்விசயத்தைக் கேட்டு ஜீரணிக்க முடியவில்லை …


ரிச்சர்ட் தன் இரண்டாவது மனைவி லாஸ்யாவிடம் ''இது உனக்கே தவறா படவில்லையா டாலு.. இத்தனை வயதுக்கு அப்பறம் புதுசா ஒருத்தன் உனக்குப் பிடிச்சிருக்கு சொல்லி விவாகரத்து கேக்கிற'', என்று கேட்டவரை..


''ஹேய் , ரிச்சர்ட் டார்லிங், இதுயென்ன புதுசா கேள்வி கேக்கிற, என் இன்டிபென்ட்டான விஷயத்தில் தலையிடுவது சரியில்லையே .. இங்கே பிறந்து வளர்ந்த உனக்குத் இதுயெல்லாம் தெரியாதா?… யாரோட முடிவிலும் யாரும் தலையிட மாட்டார்கள்… இது

எனக்கான வாழ்க்கையை நான் வாழ போகிறேன் .. உன் கூட இருந்தது போர்யடிக்கது'', என்று வெகு சுலபமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் லாஸ்யா..


''ஓ, அப்படியா ஒகே.. இனி உனக்கு எதுவும் செட்டில்மெண்ட் இல்லாமல் மீயூசுவல் ஒப்பந்தப்படி பிரிந்து விடலாம்'', என்று ரிச்சர்ட் சொல்லிவிட்டார்.


ஒரு வாழ்க்கை அங்கே எந்தவித அன்போ காதலோ அழுகையோ வருத்தமோ எதுவும் இல்லாமல் போலியாகப் புன்னகைத்தப்படி பிரிந்தது.


அதைக் காதில் கேட்டக் கொண்டிருந்த ரிஹானாவிற்கு ஒருவித அறுவெறுப்பு தோன்ற.. சாப்பிட வந்தவள் சாப்பிடாமலே கிளம்பிவிட்டாள்..


பிறக்கும்போது தாயை இழந்த ரிஹானாவை அங்கே இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் மெய்ட் ஜுலியட்டால் வளர்க்கப்பட்டவள்.. சூட்டிகையான பெண்ணாக ரிஹானா இருந்தால் அவளை வளர்த்த மெய்ட் ஜுலியட்க்கு அவளை ரொம்ப பிடிக்க, அவளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை போதித்தார்.. அவர் அங்கே வேலை செய்யும் வரை வீட்டு சூழ்நிலை அவளுக்குப் பிடித்து இருந்தது.


அவளுடைய அப்பா ரிச்சர்ட் சிலரை நண்பி என்று வீட்டுக்கு அழைத்து வருவதைக் கண்டு காணாமல் இருக்கவும் இரண்டாவதாக லாஸ்யாவைக் கல்யாணம் பண்ணி வீட்டுக்கு அழைத்து வந்தாலும் லாஸ்யாவிடமும் ரிஹானாவால் பழக முடியாமல் ஒதுங்கிச் சென்று விடுவாள்..


ஜுலியோ வயது மூப்பின் காரணமாக அவருடைய நாட்டிற்குக் கிளம்பிச் சென்றதும் தனிமை பிடியில் இருந்தவளுக்கு அவள் படிப்பும் அவளுடைய கற்பனை திறனும் அவளை மேன்படுத்தியது.


ஆனால் அவளுக்கு வீட்டின் சூழ்நிலை எப்போதும் ஒரு ஒவாத தன்மையை கொடுத்தாலோ என்னவோ அங்கே இருக்கும்போது எல்லாம் வாயை இறுகப் பூட்டிக் கொண்டு மனத்தை இறுக்கமாக வைத்தபடியே இருப்பாள்..


கூண்டுக்குள் சிக்கிய சிறைப் பறவையாகவே வீட்டினுள் இருப்பதாக எண்ணியவளுக்கு

கம்பெனிக்குச் செல்வதும், விடுமுறை நாட்களில் அழகிய கட்டிடங்களைத் தேடிச் சென்று அதைப் பற்றி வடிவமைக்களை வீட்டில் வந்ததும் தனக்குப் பிடித்த மாதிரி மாற்றி அமைப்பதும் என்று அவளுக்குப் பொழுதுகள் ஓடிவிடும்..


வீட்டை விட்டு வெளியே வந்த ரிஹானாவோ வெளிக்காற்றை நாசியின் வழியே நுரையீரலில் நிரப்பி மனதின் இருக்கத்தைக் குறைக்க, இயற்கையோடு கைக் கோர்த்துக் கொண்டு அங்கே விளையாடும் சிறார்களின் குறும்புகளையும் அவர்களின் சின்ன விஷயங்களையும் ரசனை கலந்த பார்வையோடு ரசித்தவள், தன் காரில் போகும் வழியிலே இருக்கும் இந்தியன் உணவகத்தில் காரை பார்க்கிங் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.


அங்கே வேலை செய்யும் ரகுவரன் ''ஹேய் ரிஹானா, ஹௌ ஆர் யூ!", என்று கேட்டபடி எதிரில் அழைத்தபடி அவள் அருகில் வர,


"ஹேய் ரகு, உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன், என்னிடம் பேசும் போது தமிழில் பேசு'', என்று சொல்லி முறைத்தவள் அங்கிருந்த அலங்காரமான இருக்கையில் அமர்ந்தாள் ரிஹானா…


இங்கே இந்தியன் உணவகத்திற்கு அடிக்கடி வருவதால் அங்கே மேனேஜராக வேலை பார்க்கும் ரகுவரன் நல்ல நண்பனாக இருக்க, அவள் வரும்போது எல்லாம் அவளிடம் அமர்ந்து பேசுவது வாடிக்கை தான்..


எந்தவித பாசாங்கும் இல்லாத அன்பை பொழியும் ரகுவை அப்படியே நண்பனாக ஏற்றுக் கொண்டவள் தன்னைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் சில விஷயங்களை பகிருவதும் உண்டு..


ரகுவரன் தமிழ்நாட்டிலிருந்து இங்கே வந்து வேலை செய்வதால் தன் மனைவி குடும்பத்தாரைப் பற்றிச் சொல்லுவதும், நல்லதை அவளுக்கு எடுத்துச் சொல்லும் நல்ல நண்பனாக மாறியதால் அங்கே அவர்களுக்கிடையே சிறந்த நட்பு உருவானது.


''சாரி, சாரி, ரிஹா.. இனி ஒன்லி தமிழ் தான் ஒகே என்று சொல்லியவன், உள்ளே வரும்போதே இன்று ரோஜாவின் முகம் வாடி இருக்கே என்னாச்சுடா''... என்று கேட்டவன், அவள் பதில் சொல்லுமுன் ''இரு இரு உனக்காகச் செய்ய சொன்ன ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு, எடுத்து வரேன்'', என்று உள்ளே போனவன், அலங்கார தட்டில் மினி இட்லி அதில் மேல் செட்டிநாடு சாம்பார், நெய் லேசாக ஊற்றி கொத்தமல்லி தழை தூவி சிறு கிண்ணத்தில் தேங்காய் சட்னியும் ஸ்பூன் எடுத்து வந்தவன் அவள் முன் வைக்க..


வாயில் எச்சில் ஊறியது ரிஹானாவிற்கு.. ஒரு ஸ்பூனில் இட்லியை சாம்பார் சட்னி கலந்து எடுத்தவள் நாசியின் அருகே கொண்டு சென்று வாசனை பிடித்து தன் வாயில் வைத்து மெதுவாக ரசித்து ருசித்தாள்…


''என்ன தான் சொல்லு? உங்க ஊர் இட்லி சாம்பார் ருசிக்கு வாழ்க்கை முழுவதும் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கணும்'', என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள் ரிஹானா.


அவள் சாப்பிடுவதைக் கண்ட ரகுவரன் ஜென் ஞானிகள் மாதிரி எதையும ரசித்து ருசிக்கும் அழகைக் கண்டு கிண்டலாகச் சிரித்தான்..


''இத்துண்டு இட்லிக்காக அடிமையாக போறீயா ரிஹா'', என்று கேட்டவன், ''உன்னைக் காதலிக்கணும் நினைச்சா இந்த இட்லி சாம்பாரை வாங்கிக் கொடுத்தால் சரி சொல்லிருவ போல'', என்று கேட்க..


ரிஹாவின் முகம் சட்டென்று நிறம் மாறியது .. ''இந்தக் காதல் கண்றாவி பற்றி எல்லாம் பேசாதே ரகு,.. அதுயெல்லாம் சும்மா போலி,வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம் இல்லையா விலகிப் போகலாம் இங்கே '', …என்று சொல்லிவிட்டு சட்டென்று பேச்சை மாற்றியவள் ''ஆமாம் உன் கிராமத்துக் கிளி போன் பண்ணிச்சா? என்ன சொல்லிச்சி?'', என்று சிறு சிரிப்பும், கேலியும் கலந்த குரலில் கேட்டவளை…


''ஹாஹா, காதலே போலி சொல்லிட்டு என் காதல் கதையை கேட்கிறீயே ரிஹா'', என்று சொல்லிச் சிரித்தவன்.. ''அவளை என்கிட்ட பேச வைக்கிறகுள்ள போன் பில் எகிறியிரும்… அந்தளவுக்கு சுற்றி எல்லாரும் பேசிட்டு கடைசியிலே 'நல்ல இருக்கீயா மாமா', என்று அவளின் குரல் கேட்பதுக்குள் போன் கட் ஆகிரும்'', என்று பெருமூச்சு விட்டவனின் ஏக்கத்தைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தாள்.


அவள் சிரிப்பதைப் பார்த்தவன், ''உள்ளே வரும்போது உன் முகம் ஏன் டல்லாக இருந்தது ரிஹா?, என்னாச்சு", என்று மீண்டும் கேட்க..


"ப்ச்ச்.. எப்பவும் உள்ளது தான்.. வீட்டில் அப்பாவுக்கும் அவங்க மனைவிக்கும் பிரச்சினை … இன்று பிரிந்து போக போறாங்களாம்",.. என்று சொல்லியவளை ஆதூரமாகப் பார்த்த ரகுவரனுக்கு

இவள் பட்டாம்பூச்சியாக மகிழ்ச்சியை தேடி அலைகிறாள்.. ஆனால் வீட்டில் அதற்கான சூழல் இல்லாதது தான் விதி எனறு நினைத்தவன்..


பேச்சை மாற்றும் பொருட்டு, "என் கிராமத்து கிளியைப் பற்றி கேட்டீல ரிஹா .. அவள் இன்று என்ன செய்தாள் தெரியுமா?", என்று தன் மனைவியை பற்றிச் சொன்னான் ரகு..,


"எங்க வீட்டில பசு மாடு கன்று போட்டு இருக்கு.. கன்று குட்டினாலே எப்பவும் துருதுரு ஓடிக் கொண்டிருக்கும்.. என் அம்மணி அதைப் பிடிக்கப் போறேன் போய் வயல்காட்டு சேத்துல விழுந்து கைகால் காயம்பட்டு எழுந்து வந்தவள், எங்கம்மாவிடம் கன்று குட்டி சேத்துல விழுந்தால் அடிப்பட்டுரும் போய் பிடிக்கப் போனேன் அத்தை என்று சொல்லிருக்கா.. அவங்க ஒரே புலம்பல்.. உன் பிள்ளை கூடப் நான் பார்த்துக்குவேன்டா… உன் பொண்டாட்டியை பார்த்துக்க என்னாலே முடியலனு'', என்று சொல்லியவனின் முகத்தில் தன்னவளின் வெகுளிதனத்தை நினைத்துச் சிரிக்க..


"வாட் எ லவ்லி இன்சென்ட் கேர்ள்'',.. என்றவள் ''அவளிடம் நான் லவ்யூ சொன்னேன் சொல்லிரு ரகு'', என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்ட..


''அய்யோ, உனக்கேன் இந்தக் கொலைவெறி ரிஹா.. அவளிடம் நான் இதைச் சொன்னேன் அவ்வளவு தான்…. பொண்ணும் பொண்ணும் லவ்யூ சொல்லிக்குவாங்களா …என்று ஆயிரம் விளக்கம் கேட்பாளே'', என்று ரகு பரிதாபமானக் குரலில் சொல்லிச் சிரித்தான்..


கூடச் சேர்ந்து சிரித்தபடி ரிஹா உணவை உண்டு முடிக்க .. ரகுவோ

''இன்று உங்க ஆபீஸ் முக்கியமான யாரோ ஒருத்தர் வராங்க சொன்னீயே யாராம்'', .. என்று கேட்டான்..



''அச்சோ ஆமாம் .. உன்கிட்ட பேசிக்கிட்டே மறந்துட்டேன் பாரு அதை'', என்றவள் .. ''அவர் உங்க ஊர்காரங்க தான் ஆபீ்ஸ்ல சொன்னாங்க.. அதுவும் எங்க டீம் கூடத் தான் இன்று முக்கியமான மீட்டிங்'',.. என்று சொல்லியவள், உணவுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு ''பை ரகு'',.. என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டாள் ரிஹானா..


ஆபீஸ் போய் காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு லிப்ட்டுக்காக ஓட அதனுள் நின்றவனோ அவளின் வேகத்தில் லிப்ட் டோர் சாத்தாமல் இருக்க அதன் இடையே தன் திண்மையான கரங்களை நீட்டவும் அவளும் லிப்ட்டினுள் நுழைந்து மேல் மூச்சு வாங்கி நின்றாள் ரி்ஹானா.


''தேங்க்யூ'',.. என்று பாராமலே சொன்னவள் அவனைக் கவனிக்காமல் தான் போகும் தளத்துக்குரிய நம்பரை அமுக்கி விட்டுக் காத்திருக்க , தளத்திலிருந்து லிப்ட் ஓபன் ஆனதும் பறந்து ஓடியவளை ஆச்சரியம் கலந்த விழிகளோடு பார்த்தவன், ஏனோ அவள் கூட வந்த லிப்ட் பயணமானது அவனுக்குள் ஒற்றை நொடியில் மனதிற்குள் ஒரு சாரல் வீசியது ....


அவளோ அங்கே தன் கேபினுக்குள் நுழைந்தும் அவளின் தோழியும் கூட வேலை செய்யும் கோ ஒர்க்கரான ஷான்வி, ''ஹாய் ரிஹா… கம் பார்ஸ்ட்.. எல்லாரும் மீட்டிங் ஹாலுக்கு வந்தாச்சு'', என்று சொல்லியவளிடம்..


''சாரி, சாரி'',.. என்று சொல்லியவள், மீட்டிங் ஹாலில் பேச வேண்டியதை ஒரு நிமிடம் கண்ணை மூடி மனதிற்குள் அசைப் போட்டவள்,


ஷான்வியிடம் போகலாம் என்று கண்ணயசைவுடன் இருவரும் அவரவர் லேப்டாப்புடன் மீட்டிங் நடக்கும் அறைக்குள் நுழைந்தனர்..


அங்கே ஹெட் ஹார்ன்லர்ட், ''ஹாய் ரிஹானா, ஷான்வி'',.. என்று அழைத்ததும் ''மார்னிங் சார்'', என்று சொல்லிவிட்டு அவர்களுக்கான இடத்தில் அமர்ந்தனர் இருவரும்….,


அப்போது அந்த ஹாலுக்குள் நிமிர்ந்த நடையுடன் உயரமான ஒருவன் உள்ளே நுழைய அவனுடைய கம்பீரமான தோற்றமும் அணிந்திருந்த சாம்பல் வண்ணத்தில் கோர்ட்டும் பிளாக் சர்ட் அவனின் தோற்றத்தை மேலும் மெருக்கேற்ற, வசீகரமான புன்னகையுடன் எல்லாரிடம் ''ஹாய்'', சொல்லியவன்… தன் காந்த விழிகளாலே அங்கே இருப்பவர்களை ஒரு சுற்று சுற்றி வர ஒருயிடத்தில் நிலைத்து திகைத்து மீண்டும் மற்றவர்களை நோக்கியவன்.. ''ஹாய் பிரண்ஸ் .. ஐ ஆம் கௌசிக் வைத்தீஸ்வரன்'', என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்..


அங்கிருந்த மற்றவர்களிடம் அவர்களுக்கான வேலையைப் பற்றி தெரிந்துகொண்டவன் , தனக்கு வேண்டியதை சொல்ல ஆரம்பித்தான் கௌசிக் வைத்தீஸ்வரன்.


தமிழ்நாட்டில் பிரபலமான கட்டுமானத் தொழிலை இரண்டு தலைமுறையாக நடத்திக் கொண்டிக்கும் 'விஆர்டி' கம்பெனியில் இவன் மூன்றாவது தலைமுறை.


தாத்தா வைத்தீஸ்வரன், அவனுடைய அப்பா ராகவன் அதன்பின் இவன் முன் நின்று கம்பெனியை நடத்த முந்தைய தலைமுறையும் அவனுக்கு வழிவிட்டு நிற்க, கௌசிக்கோ வெளிநாட்டிலும் தன் தொழிலை மேன்ப்படுத்த வேண்டும், அங்கு இருக்கும் கட்டிடகலையின் அமைப்புகளை தன்னுடைய நாட்டிலும் புகுத்திப் புதிய முறைகளை கையாள வேண்டும் என்று எண்ணம் உருவானது கௌசிக் வைத்திஸ்வரனுக்கு..


அதனால்தான் நியூயார்க் நகரத்தில் இருக்கும் முக்கியமான கம்பெனியோடு ஒப்பந்தம் பேசி இங்குள்ள நுணுக்கங்களோடு தன்னுடைய ஐடியாக்களை சேர்த்து புதிய முயற்சியால் ஒரு பெரிய மால் ஒன்றை இந்தியாவில் நிறுவ வேண்டும் எண்ணத்தில் வந்திருந்தான் கௌசிக் வைத்தீஸ்வரன்.



பழமையான கட்டிடத்தின் நேர்த்தியுடன் புதுமையும் சேர்த்து அழகுற மால் ஒன்றை கட்ட வேண்டும் .. அது உலகளவில் பேசப்பட வேண்டும் என்று அவனின் அதீதமான தொழிலிலுள்ள பற்றும் ஆர்வமும் அதிகம்.. அதனால்தான் நியூயார்க் நகரத்திலிருக்கும் பழமையான கட்டங்களைப் பார்வையிடவும் இங்கே இருக்கும் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளவே வந்தவனின் வாழ்வில் பார்த்தவுடனே அவனுள் மழை சாரலாக நுழைந்தாள் ரிஹானா.


ரிஹானாவோ அவன் உள்ளே நுழைந்தபோதும் அவனின் வசீகரமான தோற்றத்தையும் கூர்மையான பார்வையாலே மற்றவர்களை எடை போடும் திறனையும் கண்டவள், அவனின் ஆளுமையான பேச்சில் கவரப்பட்டு அவனையே கவனிக்கத் தொடங்கினாள்…


இந்தியாவில் உள்ள கட்டுமானங்களைப் பற்றி எடுத்துரைத்தவன், இங்கே காத்திக் பாணியில் கட்டப்பட்ட 'வூல்வொர்த் கட்டிடமும்', ஆர்ட் டோகா வடிவமைப்பில் கட்டப்பட்ட 'கிரைசலர்' கட்டிட்டத்தைப் பற்றி பேசவும், அதுவோ ரொம்ப பழமை வாய்ந்தவை அதைப்பற்றி அக்குவேறாக எடுத்துரைக்கும் கௌசிக் வைத்தீஸ்வரன் மீது ஆச்சரிமான பார்வையுடன் அவனின் பேச்சில் ஆழ்ந்து போனாள் ரிஹானா.

தொடரும்..

ஹாய் மக்கா புதிய கதை இது.. படித்துப் பாருங்கள் மக்கா... தாட்சாயணி தேவி இனி வாரம் ஒரு நாள் மட்டும் வரும்.. சூடிக் கொண்ட சுடர்விழியே தினமும் இந்த நேரத்தில் பதிவு பண்ணப்படும்.. படித்த உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் மக்கா.. உங்கள் ஊக்கம் தான் எனக்கு எழுத தூண்டும் மருநது.. 😍 😍
IMG-20230213-WA0016.jpg