• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..12

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
97
அத்தியாயம் ..12


ரிஹானாவிற்கு கௌசிக் குடும்பத்தில் எல்லாரும் தன்னைத் தாங்குவது கண்டு மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.


முதல் முறை கண்டது போல இல்லாமல் காலம் காலமாக இவர்களோட வாழ்ந்த உணர்வினை அளிக்கும் அவர்களின் அன்பு மெய் சிலிர்க்க வைத்தது.


இந்த மாதிரி தாத்தா பாட்டி அம்மா அப்பா தங்கை ஒரு குடும்பமாக தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அவளுள் பேரலையாக சுழற்றி அடிக்க அப்படியே படுக்கையின் மீது அமர்ந்து விட்டாள் ரிஹானா.


அப்போது அருகிலிருந்த அலைபேசி ஒலித்திடும் சத்தத்தில் திடுக்கிட்டவள் அதில் கௌசிக் நம்பர் மின்னவும் வேகமாக அதை ஆன் பண்ணிக் காதில் வைத்துக் ''ஹலோ'', என்று சொல்லியவளின் குரலில் ஏக்கம் கலந்து ஓடுவதை உணர்ந்தான் கௌசிக்


''என்னாச்சு ரிஹா ஏன் உன் வாய்ஸ் டல்லாக இருக்கு'', என்று கேட்டவன், ''உனக்கு இங்கே எதும் பிடிக்கலயா எதும் அன்ஈஸி பீலீங்கா இருக்கா.. இல்லை உனக்குப் பிடிக்காது எதும் யாரும் சொல்லிட்டாங்களா'', என்று கேட்டவனின் குரலில் ஏதோ ஒன்று அவள் மனத்தைப் பாதித்தது.


''அப்படி எதும் இல்லை கௌசிக், இங்கே எல்லாரும் நல்லா பேசறாங்க.. பழகறாங்க .... முதல்முறை பார்த்த மாதிரி இல்லாமல் எல்லாரும் பேசுவது எனக்குத் தான் ஆச்சரியமாக இருந்தது. அதைவிட எ.. என..எனக்கு இந்த மாதிரி பாசமாக அன்பாக யாரும் இருந்தில்லை அது தான்'', என்று தடுமாற்றத்துடன் உரைத்தாள் ரிஹானா.


''ஹேய், பழைசை விடு ரிஹா.. இப்ப உன் வாழ்க்கையில் இன்று முதல் நடப்பதை உணர்ந்து மகிழ்ச்சியாக இருக்கலாமல.. அதைவிட்டு ஏன் இப்படி கிடைக்கல பீல் பண்ணிகிட்டு இருக்காதே.. நீ சீக்கரம் ரெப்பிராஷாகி கீழே வா உனக்காக எல்லாரும் சாப்பிடாமல் காத்திருப்பாங்க'',.. என்று சொல்லியவன்.. ''இன்னொன்று நீ இங்கே நீயாக இருக்கலாம் அதுக்கு நான் பொறுப்பு ஓகே'', என்றவன், ''சீக்கிரம் வாம்மா'', என்று சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்து வைத்து விட்டான் கௌசிக்.


அவன் பேசியதை உள்வாங்கியவள் அதை மனதிற்குகள் அசைப் போட்டபடி எழுந்தவள் குளித்துவிட்டு ஒரு ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்தவள் தன் நீள கூந்தலை பாதியை கிளிப்பில் அடக்கி மற்றதை விரித்து விட்டவள் காதில் சின்னதா ஒரு தோடு மட்டுமே அணிந்து கொண்டு மாசு மருவற்ற பால் வண்ண முகத்தில் மெல்லிதான புன்னகை மட்டுமே இருக்க தன் அறையின் கதவைத் திறந்ததும் திகைத்து அப்படியே நின்று விட்டாள் ரிஹானா.


அவளின் அறையின் எதிர் அறை தான் கௌசிக் அறை போல அவனும் வீட்டில் இருக்கும் போது அணியும் கேஷவல் டீ சர்ட், தீரிபோர்த் பேண்ட் போட்டுக் கொண்டு அவனின் முடியை கையாலே கோதி சரிப்பண்ணிக் கொண்டு நின்றவனைப் பார்த்தவளுக்கு உள்ளம் அதிர்ந்தது


கதவின் அருகே நின்றவளை கவனித்த கௌசிக்'' ஹேய் ரிஹா வா கீழே போகலாமா '', என்று அழைக்கவும்…


''ஹாங்.. ம்ம் .. போகலாம்'', என்று தலையாட்டிப் படி அவனுடன் மாடியிலிருந்து இறங்கினாள்.


டைனிங் டேபிளில் எல்லாரும் இவர்களுக்காகக் காத்திருக்க.. ''சாரி மா லேட்டாயிருச்சா'', என்று கேட்ட கௌசிக் ரிஹானாவுக்கும் ஒரு சேரைக் காமித்துவிட்டு.. "ஏய் ரித்து நீ சாப்பிட வேண்டிதானா டா இப்ப கூட வெயிட் பண்ணனுமா அப்பறம் உன் குட்டி என்னிடம் சண்டை போடும்", என்று சொல்லிச் சிரித்தான் கௌசிக்…


இங்கே மடமடவென்று சிரித்தபடி பேசுபவனைப் பார்த்தத் திகைத்தவளை கோமளவல்லி' வா ரிஹானா ஏன் தயங்கி நிற்கிற? முதல சொன்னது தான் இது உன் வீடு மாதிரி நினைச்சு பீரியா இருக்கலாம்'',… என்றவர் ''உனக்கு பிடிச்ச மினி இட்லியும் சாம்பார் ரெடியா இருக்க'',, என்றவர் ''முதல் முறையாகச் சாப்பிடுவதால் இனிப்பு தான் சாப்பிடுணும்'',.. என்று ''பைன் ஆப்பிள் கேசரியை'', அவளுக்கு வைத்தவர், மகளுக்காக நட்ஸ் கலந்த இனிப்பை வைத்தார்..


வேதவல்லியோ ''ரிஹா அதை டேஸ்ட் பண்ணிச் சொல்லு டா எப்படி இருக்கு'', என்று கேட்டவரை ''ம் சரிங்க பாட்டி'', என்றவளை பரிதாபமாகப் பார்த்த வைத்தீஸ்வரன் ''இன்று எக்ஸ்பரிமென்ட் எலி நீ தான் மா .. உனக்காக எல்லாம் ஸ்பெஷலாகச் செய்யதது என்று எங்களை சாப்பிட விடவில்லை'', என்று கிண்டலாகப் பேசினார்..


அவர் பேசுவதைக் கேட்டு மாதேஷ் சிரிக்க கௌசிக் தலை குனிந்து கொண்டான்..


வேதவல்லியோ.. ''இனி வேது எனக்கு புதுசா எதாவது செய்து தா வாங்க… அன்னிக்கு இருக்கு'',.. என்றவர் ''இப்ப தான் இந்த ஸ்வீட்டை செய்முறை வீடியோவை அப்லோடு பண்ணினேன் .. பாருங்க எத்தனை வீவர்ஸ் பார்த்திருக்காங்க ,எத்தனை பெயர் சூப்பர் சொல்லிருக்காங்கனு..'',… என்று போனைக் காமிக்க,


வைத்தீஸ்வரனோ ''பார்க்கிற யாருக்கும் பொழுது போகல போல வேது…இன்னும் எத்தனை வீட்டில் இந்த ஸ்வீட்டை செய்து பாயசனாக போகதோ'', என்று விடாமல் கலாய்த்தார் இந்த வயதிலும் தன் மனைவியை..


அவர் சிரிக்காமல் சொல்வதைக் கேட்டு எல்லாரும் சிரிக்க, ரிஹானாவோ அவர்களின் கலகலப்பில் கலந்து கொள்ளலாம் வேண்டாமா என்று யோசித்து சிரிக்க, வேதவல்லியின் மற்றவர்களை முறைப்பதைக் கண்டு சட்டெனு சிரிப்பை நிறுத்தியவள் ''பாட்டி சூப்பரா இருக்கு ஸ்வீட்'', என்று சொல்லவும்..


''பாருங்க வெளிநாட்டில் இருந்த வந்த பொண்ணுக்குக் கூடத் தெரிது'',.. என்று வேதவல்லி சொல்ல..


ரித்தன்யாவோ ''பாட்டி ரிஹானா இப்ப தானே வந்திருக்காங்க.. இன்னும் கொஞ்ச நாளிலே அவங்களுக்கே தெரிஞ்சுரும்'', என்று கிண்டல் பண்ணினாள்…


''கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை அதுப்போல தான் இருக்கு என் அருமை பெருமை எல்லாம் எங்கே உங்களுக்குப் புரிய போகுது… '', என்று தோள்பட்டையில் இடித்துக் கொண்டபடி பேசியவரைக் கண்டு ரிஹானாவிற்கு அவர் சொல்ல வந்தது புரியாமல் கௌசிக் நோக்க..


அவனோ ''அது ஒரு பழமொழி'', என்று சொல்லியவன், ''அம்மா இங்கு உங்க மகனையும் கவனிங்க.. இருபது நாளா வெளிநாட்டிலா சுற்றி வந்திருக்கேன்'', என்று தன் அம்மாவிடம் பேசுபவனை கண்ட மாதேஷ் ''பொறாமையா இருக்கா மச்சி எல்லாரையும் கவனிக்கிறாங்கனு'', பொத்தம் பொதுவாகச் சொல்பவனை செல்லமாக முறைத்த கௌசிக் .. கையாலே வாயை மூடு சைகை செய்தான்…


அதைப் பார்த்த மாதேஷோ.. "இந்த வீட்டு மாப்பிள்ளை உனக்கு மதிப்பு இருக்கா… என்ன ரித்தன்யா இது எல்லாம் கேட்க மாட்டீயா", என்று கேட்டவனை ஒரு பார்வை பார்த்தவள் "உங்கள் இருவருக்கு இடையே வந்து நான் பல்பு வாங்கவா.. நான் வரலபா எனக்கு ரொம்ப பசிக்கது", என்று சொல்லிச் சாப்பிட எல்லாரும் கேலியும் சிரிப்புமாக உணவு உண்டு முடித்து ஹாலில் வந்து அமர்ந்தனர்.


ராகவன் மகனின் பக்கம் திரும்பி "இன்று ஆபீஸ் வரீயா கௌசிக்",என்று மகனிடம் கேட்க அவனை முந்திக் கொண்டு ''இல்லை பா அண்ணா வர மாட்டான்.. இன்று எங்க கூட ஷாப்பிங் வரணும்'', என்று ரித்தன்யா சொன்னாள்…


''அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் நினைச்சா விட மாட்டீயே'', என்று மாதேஷ் சொல்லவும்.. ''பிளேன்ல தானே வந்தான் .. என்னமோ அங்கிருந்து நடந்ததெல்லாம் வந்த மாதிரி சொல்லரீங்க'', என்று கணவனிடம் மொழிந்தவள், ''ரிஹானா நீயும் எங்களோட வரணும்'', என்று சொல்லவும் ..


எதுக்கு ஷாப்பிங் என்று என்னவென்று புரியாமல் கௌசிக் திரும்பிப் பார்க்க, ''அவனோ ஷாப்பிங் போக தான்''.. என்று சொல்ல..


வேதவல்லியோ "ரித்தன்யாவிற்கு இன்னும் இரண்டு நாளில் வளைகாப்பு வச்சிருக்கு ரிஹானா .. அதுக்காக கடைக்குப் போகணும்.. கண்ணாடி வளையல், வருபவர்களுக்கு மஞ்சள் குங்குமம் வளையல், துணி மணிகள் வாங்கணும் என்று சொன்னவர்.. இரண்டு நாளைக்கு முன்னாலே போகலாம் சொன்னோம் .. இவ தான் அண்ணா வந்தால் தான் போய் வாங்கணும் சொல்லிட்டா", என்றவர், "உனக்குக் களைப்பா இருக்கா ரிஹானா", என்று கேட்டார் வேதவல்லி ..


ரிஹானாவும் உற்சாகமாக "இல்லை பாட்டி போகலாம் .. எனக்கு இது எல்லாம் புதுசா இருக்கு நீங்கள் வாங்குவது எல்லாம் நான் பார்க்கணும்னு", என்று சொன்னாள் ..


ராகவனிடம் திரும்பி "அடுத்த வாரம் ரிஹானா ஆபீஸ் ஜாயின் பண்ணிக்கட்டுமா", என்று வேதவல்லி மகனிடம் கேட்க…


அவரோ "ஒகே மா.. ஒண்ணும் பிரச்சினை இல்லை .. உங்களோட அலைய வைக்கீறிங்க.. பயந்து பிளேன் ஏறாமல் இருந்தால் சரி தான்", என்று அம்மாவையும் மனைவியும் பார்த்து நக்கலாகச் சிரித்தார் …


"மகனே ராத்திரி சாப்பிட வீட்டுக்குத் தான் வரணும் ஞாபகம் வச்சுக்கோ", எண்று வைத்தீஸ்வரன் சொல்ல,


"அது அப்ப பார்த்துக்கலாம் பா.. நீங்கள் ரெஸ்ட் எடுங்க இவங்களோட அலைய வேண்டாம்", என்று பொறுப்பாகச் சொல்லிய ராகவனைப் பார்த்துத் தலையசைத்தார் வைத்தீஸ்வரன்.


ஒருவருக்கு ஒருவர் காலை வாரிப் பேசிக் கொள்வதும் அன்பாக கேரீங்கா சொல்வதும் கண்டவளுக்கு கண் நிறைந்து போனது ரிஹானாவுக்கு…


"சரி சரி எல்லாரும் போகலாம் கௌசிக் நீ போய் ரெடியாகி வா, ரிஹா நீ போய் ரெடியாகி வரணுனா போய்யிட்டு வாடா'', என்று கோமளவல்லி சொல்ல,


''இல்லை ஆண்ட்டி இந்த டிரஸ் ஓகே தானே'', என்று கேட்க... அவரும் ''நல்ல தான் இருக்கும் மா'', என்றவர்.. அவளின் கூந்தலை வருடி விட்டவர், தன் அத்தையிடம் திரும்பி ''அத்த ரிஹாவுக்கு இடுப்புக்குக் கீழே மூடி இருக்கு அதுவும் சில்க் கேர் .. பாருங்க சைனீங்க் கேர்.. அழகாக இருக்குல'' என்று சொல்ல…


"ஆமாம் கோமளம்", என்றவர் "அந்தச் சீப்பை எடுத்து வா நான் ரிஹானாவிற்கு பின்னல் போட்டு விடுகிறேன்'',.. என்று சொல்லியவர், ''ரிஹா நீ பின்னல் போட்டுக்கீரியா .. உனக்கு எதும் அன்ஈஸியா இருக்குமா'' என்று அவளிடம் கேட்க ..


அவளோ "அச்சோ எனக்கு யாரும் பின்னல் போட்டு விட்டதில்லை பாட்டி.. ஆனால் இந்த டிரஸ்க்கு நல்லா இருக்குமா", என்று ஒரு டவுட் கேட்டவளை பார்த்தவர், "ஆமாம் இந்த டிரஸ்க்கு இப்படி இருந்தால் தான் நல்லா இருக்கும் .. இதைப் போதும்.. நாளை பின்னல் போட்டுக்கலாம்'', என்று சொல்லிவிட்டார் வேதவல்லி..


கோமளவல்லியையும் வேதவல்லியையும் அவர்களின் அன்பான செயலால் அவளுக்கு ரொம்ப பிடித்துப் போயிற்று ..


அவர்களுடன் குதி போட்டுக் கொண்டு ஷாப்பிங் கிளம்பினாள் ரிஹானா..


மாதேஷோ யார் பெத்த புள்ளையோ இன்று பார் மூன்று பேரும் சேர்ந்து ரிஹானாவை கதற விடப் போறாங்க… கடை கடையா ஏறி இறங்குவதற்குள் உன் ஆள் அப்படியே ஏர்போர்ட் போய்யிரும் நினைக்கிறேன் கௌசிக்.. என்று கிளம்பி வந்தவனிடம் கலாய்த்தபடி எல்லாரும் காரில் ஏறிக் கிளம்பினார்கள்…
 
Top