• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..15

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..15


மாதேஷூம் ரித்தன்யாவையும் வைத்து விதவிதமாகப் பல படங்களை எடுத்தனர் போட்டோகிராபர் ...


ரித்தன்யாவின் பின்னால் இருந்து வயிற்றில் இருவரும் ஆர்டீன் சேப்பில் கைகளை வைத்துப் பிடிக்கவும், தோளில் சாய்ந்தபடி இருவரின் கைகளும் குழந்தையை தாங்குவதுபோல வயிற்றைப் பிடிக்கவும், மாதேஷ் ரித்தன்யாவின் சிப்பி வயிற்றில் தாங்கிக் கொண்டிருக்கும் வெண்முத்துவை முத்தமிட என்று பல கோணங்களில் படம் பிடித்தனர்..


அப்போது அவர்களின் முகபாவனைகளோ காதலில் மூழ்கி அவர்களின் உலகில் சஞ்சரிக்க ரித்தன்யாவின் முகமோ செவ்வானமாக சிவந்தது போய்யின..


மாதேஷின் கண்களால் பேசிய பரிபாஷைகளை உணர்ந்தவளுக்கு அவனின் காதலில் மூச்சுத் திணறித் தான் போனாள் ரித்தன்யா


இதை எல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்தபடி கவனித்துக் கொண்டிருந்த ரிஹானாவிற்கு ரித்தன்யாவிற்கு உடை மாற்றுவதில் உதவி புரிந்தாலும் அவர்கள் படம் பிடிக்கும்போது ஒதுங்கியே இருந்தாள்.


ஆனாலும் கௌசிக் அவளையும் எதாவது பேச வைத்தபடி மாதேஷை கிண்டல் பண்ணிக் கொண்டிருக்க, ரிஹானவோ ''உஸ் கம்னு இருங்க.. இது அவங்களுக்கான பொழுது என்ஜாய் பண்ணி எடுக்கட்டுமே'', என்று சொல்லவும், அவளைத் திரும்பிப் பார்த்தவன், ''சரி அவங்களுக்கான நேரம் தான் நாம் எதுக்கு இங்கே வந்திருக்கோம் ரிஹா'', என்று தெரியாதைப் போல கேட்டான்…


''ம்ஹூம் அவர்களுக்கு பசித்தால் ஜூஸ் தர உடை மாற்ற உதவ தான் வந்திருக்கோம்'', என்று சொல்லியவள், ''ரித்தன்யாவின் மேல் மாதேஷ் அண்ணா எவ்வளவு அன்பா காதலா இருக்கிறார் .. அவர் உருகி உருகிக் கரைந்து ரித்துவிடம் இருப்பதைக் கண்டால் என் கண்ணே பட்டு விடும் போல", என்று சொல்லிபடி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவர்களின் ஒவ்வொரு அசைவையும்.. சிலது அவளுக்குள் நாணமேறினாலும் இந்த உண்மையான நேசம் கிடைத்தால் வாழ்க்கை முழுவதும் திகட்டாத பேரன்பில் திளைக்கலாம்… ஆனால் தான் சிறு வயதிலிருந்து தன் அப்பாவின் வாழ்க்கை மற்ற சிலரோட வாழ்க்கையை பார்த்த வரை எல்லாம் வாழ்க்கை முழுவதும் இல்லாமல் பிடிச்சா வாழலாம் பிடிக்கவில்லை என்றால் பாதியிலே பிரிந்து செல்வதே அதிகமாக இருந்தாலோ என்னவோ அவளுக்குக் காதலும் கசந்தது வாழ்வும் கசந்தது.


இப்ப இவர்கள் இருவரையும் பார்க்கும்போது தனக்கு இப்படி ஒரு காதல் கிடைக்குமா! என்ற ஏக்கம் தலை தூக்க, அதற்குப் பின் அவ்விடத்தில் அவளால் அமர முடியவில்லை …


சட்டென எழுந்தவள் படம் எடுக்க வந்த இடம் பிரைவேட் ஏரியா என்பதால் கடற்கரையில் கூட்டம் இல்லாமல் இருக்கவும் இவர்கள் இருந்த திசைக்கு எதிர் திசையில் நடந்தாள் ரிஹானா.


அதுவரை அவள் அருகிலே அமர்ந்து அவளின் உணர்வுகளை உள்வாங்கியவன், அவள் மனம் போன போக்கை அறிந்து இந்த நேரத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாமா என்ற எண்ணம் தோன்றவும், மாதேஷிடம் கையை காமித்துவிட்டு ரிஹானா சென்ற பாதையில் தானும் சென்றான் கௌசிக்.



''ஏய் ரிஹா நில்லு நானும் வரேன்'', என்றவன் வேக கால்யெட்டுகளை வைத்து அவளிடம் நெருங்கி அவளுடன் நடந்தான் கௌசிக்…


உப்பு காற்றின் ஈரச்சுவையும் அலைகளின் ஆர்ப்பரிப்பும் தூரத்தில் தெரிகின்ற படகுகளில் மீனவனின் வலைவிரிப்பை பார்த்தக் கொண்டே வந்தவளிடம் மௌனமே குடியேறிந்தது.


அவளின் மௌனம் கௌசிக் தாக்க, ''என்னாச்சு ரிஹா, ஏன் சைலண்ட் ஆயிட்டே'',.. என்று கேட்டவனுக்கு…


''ஒண்ணுமில்லே சும்மா ஷான்வி ரகு பற்றி யோசித்து வந்தேன்'', என்று சிறு தடுமாற்றத்துடன் பேச….


''ஓ.. அவர்களிடம் பேசினீயா'', என்றவன்,''நான் வந்ததும் அவர்களுக்கு இன்பார்ம் பண்ணிவிட்டேன்'', என்று சொல்லிவிட்டு ''நீ அவர்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறாயா'', என்று கேட்க…



''இல்லை.. ஆமாம்'', என்று மாற்றி மாற்றி வேகமாகச் சொல்லியவளைக் கண்ட சிறு சிரிப்புடன் ஏறிட்டான் கௌசிக்.


அவள் கைகளைப் பிடித்து நிறுத்தியவன் ''ஏன் இவ்வளவு குழப்பான மனநிலை இருக்கிற.. எப்பவும் சலசலவென்று பேசிக்கிட்டே இருப்பே.. என்னாச்சு.. இங்கே யாரும் உன்னை எதும் சொன்னாங்களா'',… என்றவன், ''அப்படி சொன்னால் என்னிடம் தாராளமாகச் சொல்லாம் ரிஹானா'', என்று அழுத்தமாக உரைத்தான் கௌசிக்..


''அச்சோ இங்கு யாரும் எதும் சொல்லல'',… என்று பதட்டமாகக் கூறியவள் ''சும்மா எதையோ நினைச்சிட்டு இருந்தேன்'', என்று சிறு தடுமாற்றத்துடன் சொன்னாள் ரிஹானா.


''அப்படி என்ன யோசிச்ச.. என் கிட்ட கூடச் சொல்ல முடியாத அளவுக்கு'', என்று கேட்டவனுக்கு,


''சொல்கிற அளவுக்கு பெரிதாக இல்லை கௌசிக்'', என்று பேச்சையைக் கத்தரித்தாள் ரிஹானா.


''ஓ.. என் கிட்ட சொல்லுமளவுக்கு நான் உனக்கு சொந்தமில்லை, நண்பனுமில்லை அது தானே'', என்று சொல்லியவன் அவளை விட்டு விலகி வேகமாக எட்டி வைத்து நடந்தான் கௌசிக்.



அவன் குரலிலிருந்து பாவனையில் அவனுக்குக் கோபம் வந்துவிட்டது போல என்று நினைத்தவள் ''அச்சோ:', என்று தன் தலையை தட்டிக் கொண்டு அவன் பின்னால் ஓடினாள் ரிஹானா..


''சாரி சாரி கௌசிக்'' , என்றவள் ''ரித்தன்யா மாதேஷ் அண்ணா பற்றி யோசித்தேன்'', என்று சிறு குரலில் சொன்னாள் ரிஹானா.


''ஏன் அவர்களுக்கு என்ன? என்று புரியாமல் கேட்டான் கௌசிக்..


''அது அது அவர்கள் ஒருத்தர் மீது ஒருத்தர் எவ்வளவு அன்பா காதலா இருக்காங்க .. சின்ன சின்ன விஷயமானாலும் இருவரும் விட்டுக் கொடுத்துப் போறதும், ஒருவர் கண் பார்த்து ஒருவர் நடப்பது எல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்திருந்தேன்.. ஆனால் ரித்தன்யா என்ன நினைக்கிறாளோ இல்லை உணர்கிறாளோ அதை அப்படியே மாதேஷ் அண்ணா புரிந்து நடந்துக் கொள்வதைப் பார்க்கும்போது காதல் இத்தனை அன்பையும் செலுத்தி ஒருவரை ஒருவர் தாங்கச் செய்யுமா என்று எனக்கு பிரமிப்பூட்டுகிறது'' என்று சிறு குரலில் சொல்லியவளிடம் சிறு ஏக்கமும் இழையோடிக் கிடந்தது .


அதைக் கௌசிக் கவனித்தாலும் எதும் சொல்லாமல் அவளே பேசட்டும் என்று காத்திருக்க .. அவளோ "வீட்டில் பாட்டி தாத்தா ஆண்ட்டி அங்கிள் உங்கள் குடும்பத்தில் எல்லாரும் எப்படி இப்படி இருக்கீங்க எனக்குப் புரியல.. பாட்டி கலந்து கொள்ளாமல் ஆண்ட்டி எதுவும் செய்வதில்லை .. அதை மாதிரி பாட்டியும் அப்படியே இருக்கிறார்கள், இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு ஏத்த மாதிரி எல்லாவற்றிலும் ஆசையாகச் செய்ய சொல்லுவதிலும், சிறியவர்களின் ஆசைக்கு ஓதுங்கி நின்று வழி விடுவதும் பார்க்கப் பார்க்க எனக்குத் திகைப்பாக இருக்கு… அதுவுமில்லாமல் முதல்முறையாக என்னைப் பார்த்தாலும் என்னையும் இயல்பான முறையில் நடத்துவது, இரவில் தனியாக இருக்கிறாளே என்று ஆண்ட்டி துணைக்கு இருந்ததும் பசிக்குமே உணவு எடுத்து வைத்துக் கொடுப்பதும் இந்தப் பாசத்தை எல்லாம் பார்க்கும்போது இது எல்லாம் வாழ்க்கையில் அனுபவித்து இல்லாத ஒன்றாக இருக்கு தெரியுமா…


படிக்கும்போது சரி, வேலைக்கு வந்தபோதும் ரகு ஷான்வி என்னைச் சுற்றி நிறைய நண்பர்களை சேர்த்துக் கொண்டு என்னை நானே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயன்றேன். ஆனால் இங்கே குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும் அனுசரித்து அடுத்தவர் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் வாழ்வதை வந்த இந்த இரண்டு நாளுக்குள்ளே எனக்குப் புரிந்து விட்டது … உங்கள் குடும்பம் சூப்பர் கௌசிக்.. இக்குடும்பத்தில் அன்பும் பாசமும் நேசமும் நிறைந்த இடத்தில் வாழ்வது வரம் அது உங்களுக்கு கிடைச்சிருக்கு'', என்று தனக்குள் தோன்றிய எல்லாவற்றையும் ஒரு கோர்வையாகச் சொல்லிக் கொண்டே வந்தாள் ரிஹானா.


அவள் பேசுவதை எல்லாம் கேட்டவன் தாங்கள் ரித்தன்யா மாதேஷ் விட்டு வெகுதூரம் வந்ததை அறிந்ததும் அவள் கைகளைப் பிடித்து நிறுத்தினான் கௌசிக்.


அவன் கையைப் பிடித்ததும் திகைத்த ரிஹானாவோ தன் பேச்சை நிறுத்திவிட்டு அவனைப் பார்க்க, அவனின் முகம் இறுக்கம் கலைந்து மென்மையான பார்வையோடு அவளைப் பார்த்த விழிகள் சொன்ன சேதியில் அவளுக்குள் பகீர் என்ற உணர்வில் அதிர்ந்து பார்த்தாள் ரிஹானா.


''எ..என்..என்ன.. கௌசிக்'', என்று திணறலோடு கேட்டவளைக் கண்டு மென்மையாகச் சிரித்தவன் ''பரவாயில்லையே ரிஹானா, வந்த இரண்டே நாளில் எங்கள் வீட்டைப் பற்றி என்னை விட அதிகமாகத் தெரிந்து வைச்சிருக்க,….. என்றவன் .. நான் ஒண்ணு கேட்பேன்.. உனக்கும் இந்த மாதிரி குடும்பம் அமைந்தால் சந்தோஷமாக கல்யாணம் காதல் எல்லாவற்றிலும் நம்பிக்கை வருமா'', என்று கேட்டவனிக்கு என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்தாள் ரிஹானா.


''சொல்லு ரிஹா, உனக்கும் அப்படி நடந்தால் நம்பிக்கை வருமா'', .. என்றவன் ''என்னையும் பிடிச்சிருக்கா இந்தக் குடும்பத்தைப் பிடித்தது போல '', என்று அழுத்திச் சொல்லியவனைப் புரியாமல் நோக்கினாள் ரிஹானா.


அவளின் திகைத்தப் பார்வையைப் பார்த்தபடி ''உனக்கும் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக வலம் வர ஆசை இருக்கா'', என்றவன், ''இதை இப்பவே சொல்றேன் என்று நினைக்காதே.. எனக்கு உன்னை முதல்முறையாகப் பார்த்தப் போதே ரொம்ப பிடித்தது … உன் அழகைவிட உன் ரசனை ஒவ்வொன்றும் என்னுடைய பிம்பமாக பிரதிபலிக்க என்னால் உன்னை விட முடியாது வாழ்நாள் முழுவதும் என்று எண்ணம் என்னுள் எழும்பியது... ஆனால் உன்னிடம் சொல்லத் தயங்கினேன்.. உன் எண்ணத்தில் இருக்கும் கசப்புகளை அறிந்து அதைத் தீர்ந்தால் இன்றி உனக்கான வாழ்க்கையை பற்றி யோசிக்க மாட்டே தோனுச்சு..


அது தான் உன்னை வேலைக்காக இந்தியாவுக்கு வரவழைச்சேன்.. நீ என்னை என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தால் உன் மனம் மாறினால் என் காதலை உன்னிடம் சொல்லி விடணும் நினைச்சு இப்ப சொல்லிவிட்டேன்.. இதுக்கு நீ உடனே எதும் வேண்டாம் என்று பதில் சொல்லாதே.. இன்னும் கொஞ்ச நாள் இங்கே தானே இருப்பே அப்ப கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் என் குடும்பத்தை எல்லாவற்றையும் பார்த்து உனக்குப் பிடிக்கும் என்று தோன்றினால் நாம் அடுத்த அடி எடுத்து வைப்போம்.. அதுவரை நீ என் தோழி மட்டுமல்ல, என் வேலைக்கு உற்ற துணையாக நிற்ப்பாய் என்ற நம்பிக்கையில் இதை எதையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வாய் என்று நினைக்கிறேன்'', என்று முழுமூச்சாக எல்லாம் சொல்லியவன்,


அவள் எதுவும் பேசாமல் தன்னை வெறித்துப் பார்வையோடு பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் வலித்தாலும் ''ரிஹா இதை இப்பவே போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் .. வா அங்கே ரித்தன்யா உன்னைத் தேடுவாள்'', என்று திரும்பி விடுவிடுவென்று நடந்துவிட்டான் கௌசிக்.


கௌசிக் பேசிய மொழிகளை ஜீரணிக்க முடியாமலும் ஏற்றுக் கொள்ள மனம் தயங்கி அவ்விடத்திலேயே மண் சிலையாக கீழே அமர்ந்து விட்டாள் ரிஹானா.




.


































































































தொடரும்
 
Top