• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..16

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..16



கடலில் பொங்கி பெருகும் அலையின் ஓசை காதில் பேரரிச்சலைத் தர அதைக் கூட உணர முடியாமல் கௌசிக் பேசிய வார்த்தைகள் மட்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது ரிஹானாவிற்கு…


அவன் மனதிலிருந்து உதிர்த்த மொழிகளில் நேசமும் பேரன்பும் நிறைந்திருக்க அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்குள் அசைப் போட்டவளுக்கு மெல்லிய தென்றலாக மேனியும் உள்ளத்தையும் வருடிச் செல்ல அதை அனுபவித்தப்படி அப்படியே அமர்ந்து விட்டாள் ரிஹானா.


இந்தியா வந்த இரண்டாம் நாளே தன் தெளிந்த வாழ்க்கையில் கல்லெறிந்து போனவனை நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு இவன் சொன்னது நிஜமா நடந்தால் எப்படி இருக்குமோ..


இதை இவன் வீட்டில் எல்லாரும் ஒத்துக் கொள்வார்களா என்ற எண்ணம் தோன்றவும், அவளின் மனசாட்சியோ முதல உனக்கு இதுல சம்மதமா…. காதல் கல்யாணம் என்று சொன்னாலே காத தூரம் ஓடுகிறவளுக்கு அவன் பிடிச்சிருக்கு சொன்னவுடன் உன் மனதிலுள்ள கசப்புகளுக்கு எல்லாம் விடை கிடைத்திடுமா என்று உள்ளம் கேட்க … எதையும் யோசிக்க முடியாமல் இருதலைகொல்லி எறும்பாய் தவித்தாள் ரிஹானா.


சில மணித்துளிகள் அப்படியே அமர்ந்திருந்தவளுக்குச் சுற்று புறம் எல்லாம் மறந்துபோய் இருந்தது. …


ரிஹானா தன் பின்னால் வந்து விடுவாள் என்று எண்ணி ரித்தன்யா மாதேஷ் அருகில் போன கௌசிக்யிடம் ''எங்கே அண்ணா ரிஹானா?'', என்று கேட்டாள் ரித்தன்யா..


சட்டென்று திரும்பிப் பார்த்தவன் அவள் தன் பின்னால் வரவில்லையோ? என்று எண்ணியவன் சில கணங்கள் தான் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து அங்கேயே இருந்துவிட்டாளா என்று பதட்டத்துடன் அவள் அமர்ந்திருந்த திசைக்கு ஓடினான் கௌசிக்.


அவன் பதட்டமாக ஓடியதைக் கண்ட ரித்தன்யா மாதேஷ்யைப் பார்க்க ''விடுடா அவர்களே பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள்.. அவர்களுக்கு இடையே மூக்கை நுழைக்கக் கூடாது … காதல் என்றால் என்ன? என்பதை ரிஹானா உணர்ந்து அவளே கௌசிக் ஏற்றுக் கொள்ளும் காலம் சீக்கிரம் நடக்கும்.. அவள் வெளிநாட்டில் வளர்ந்தால் அந்தக் கலாசாரத்தில் வளர்ந்தவளுக்கு சிலது பிடிப்படவில்லை.. தான் பார்த்த நிகழ்வுகளை மட்டுமே மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டு அதன்படி செயல் படுகிறாள்…


ஆனால் காதல் உணர்வு சார்ந்து சுயம் கலைந்து அன்பில் மெய் மறந்து உணர்ச்சி பிடியில் சிலிர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை'', .. என்று சொன்னவன் ''என்னை நம்பு ரித்து'', என்றவன்,


அதை விட ''இன்று நமக்கான நேரம்..இப்படங்கள் எல்லாம் நம்முடைய குழந்தைக்கு மெம்மரிஸாகச் சொல்லணும்.. உன் வயிற்றில் நான் கை வைத்தபோது உள்ளே நம்முடைய குழந்தை சடுகுடு விளையாடியதை உணர்ந்ததும் அப்படியே வானில் பறப்பது போல இருக்கு.. நாம் இந்த மூவ்மெண்டை ரசித்து என்ஜாய் பண்ணலாம்'', என்று சொல்லிய உடன் ரித்தன்யா முகம் செந்தாமரையாக மலர்ந்து பூக்க அதில் மெய்மறந்தவனோ அவள் கன்னங்களில் அழுந்த முத்தமிட அது புகைப்பட கருவி படச்சுருளாக சுட்டுக் கொண்டது.


தான் விட்டுச் சென்ற இடத்திலே எங்கயோ வெறித்தபடி அமர்ந்திருந்த ரிஹானாவை நோக்கி ஓடிய கௌசிக் அவளின் வெறுமையான முகமும் பல குழப்பங்களுக்கிடையே சிக்கித் தவிப்பை உணர்ந்தவன் வேமாக அவளிடம் சென்று அருகில் அமர்ந்தான் கௌசிக்..


''ஏய் ரிஹா என்ன நான் சொன்னதை நினைச்சு குழம்பிப் போய்யிட்டியா?.. என்னாலே மனசிலே ஒண்ணு வச்சுகிட்டு வெளியே ஒண்ணு பேச முடியல..


அதனால்தான் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் உன்னிடம் கொட்டி விட்டேன் .. இதை உடனே ஏத்துக்கணும் கட்டாயம் படுத்தல… உன் மனசிலே என்ன இருக்கோ அதை அப்படியே சொல்லாம்… இல்லை யோசனை பண்ணி மெதுவாகச் சொல்லு.. இன்னும் காலம் நமக்கு இருக்கு… உனக்கு எத்தனை நாட்களோ வாரங்களோ எடுத்துக்கோ.. ஆனால் நல்ல முடிவை சொல்வேன் எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஏன் என்றால் என் உள்வுணர்வு என்றும் பொய்த்ததில்லை… உன்னைக் கண்ட நாள் முதல் இவள் தான் உனக்கு என்று என் இதயம் துடித்துக் கொண்டு தான் இருக்குது..


ஆனால் உள்ளே ஒரு பயமும் இதை உன்னிடம் எப்படி சொல்வது, சொன்னால் எப்படி எடுத்துக்கவ என்று யோசனை இருந்தாலும் என்னை அறியாமல் இன்றே சொல்லிவிட்டேன்.. இனி பொய் முகமூடிப் போட்டுப் பேசணும் அவசியமில்லை பாரு அதுக்குத்தான்'', என்றவன் ''நீ இப்ப நான் சொன்னதை எல்லாம் அப்பறம் யோசிக்கலாம் ரிஹா அங்கே உனக்காக ரித்துவும் மாதேஷ் காத்திருக்காங்க..


இதைச் சொன்னதாலே உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வேன் என்று பயப்பட வேண்டாம்'', .. என்றவன் இதற்கு மேலே எந்த விளக்கம் கொடுப்பது என்று தெரியாமல் சிறிது நேரம் மௌனமாக அவளுடன் அமர்ந்திருந்தான் கௌசிக்.


அவனின் மௌனமும் அவளின் மௌனமும் ஒரு ஏகாந்த நிலையை அங்கே தோற்றுவிக்க இருவரும் உப்புக்காற்றின் சுவையை உணர்ந்தபடி கடலின் மேலே பறக்கும் பறவைகளை கண்டு ரசனையான பார்வையுடன் பார்த்திருந்தனர்.


இங்கே மீண்டும் பலவிதமான படங்களை போட்டோகிராபர் எடுத்தபின்னும் கௌசிக் ரிஹானாவும் வராமல் இருக்க, மாதேஷோ '' நா போய் கூட்டிட்டு வரேன் ரித்து, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு '',என்று அங்கே கடற்கரையில் களைப்பு போக குடையுடன் போட்டிருந்த படுக்கை பெஞ்சில் சாய்வாக அவளை உட்கார வைத்தவன் அவளுக்குரிய உணவான மாதுளை பழத்தை உரித்து டப்பர்வேரில் இருப்பதை ஸ்பூன் போட்டுக் கொடுத்துவிட்டு தண்ணீரையும் அவள் அருகில் வைத்தவன் சிறு தலையசைப்புடன் கௌசிக் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நகர்ந்தான் மாதேஷ்.


அங்கே இருவருக்கிடையே மௌனம் ஆட்சிக் கொள்ள அவர்களை நெருங்கிய மாதேஷ் ''என்னடா நடக்கது இங்கே… அங்கே எங்களை தனியாக விட்டுட்டு இங்கே தனி ரீல் ஓட்டிக்கிட்டு இருக்கீங்க'', என்று கேட்டபடி கௌசிக்யின்

தோளில் கைப் போட்டு அவனருகில் அமர்ந்தான் மாதேஷ்.


அவனின் குரலில் திடுக்கிட்ட ரிஹானா ஒரு தவிப்புடன் கௌசிக்யை நோக்க அவனோ லேசான தலையசைப்பை தரவும் எழுந்தவள் ''நா.. நான்.. ரித்துவிடம் போகிறேன் அவள் அங்கே தனியாக இருப்பாள்'', என்று சொல்லிக் கொண்டு மணலில் கால் புதைய வேகமாக நடந்தவளின் பின்னால் மாதேஷின் குரல் தேக்கியது.. ''இவ்வாறு நேரம் ரித்து தனியாக இருப்பாள் தெரியாத என் தங்கைக்கு'', என்று உரிமையான குரலில் பேசியவனுக்குப் பதில் சொல்லாமல் சிறு முகச் சிவப்புடன் சென்று விட்டாள் ரிஹானா.


அவள் போவதைப் பார்த்தபடி இருந்த கௌசிக்யிடம் ''என்னடா மச்சி விஷயத்தை சொல்லிட்டப் போல… அது தான் தங்கை வெட்கப்பட்டு போகுதோ'', என்று கேட்டான் மாதேஷ்.


''ம்ம்ம்'',.. சொன்னவன் ''ஆனால் அவள் எந்தவித பதிலும் சொல்லவில்லை மச்சான்.. வேண்டாம் சொல்லல.. வேணும் சொல்லல.. மனசிலே என்ன போட்டுக் குழப்பிக் கொள்ளப் போறாலோ தெரியல.. நான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தாலும் எந்த முடிவு சொல்வாளோ என்று பயமாக இருக்கு மச்சான்'', ..



''ஹேய் எடுத்துவுடன் காதலை சொன்னால் பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா… அதுவும் ரிஹானா மாதிரி கல்ச்சர் வேறு நாட்டு கலாச்சாரம் இப்படி வளர்ந்தவளுக்கு நாம் மெதுவா அடி மேல் அடி வைத்து நம்முடைய அன்பை புரிய வைக்க கொஞ்ச நாள் ஆக தான் செய்யும். அதைவிட நீ தான் சொல்லிருக்கீயே.. அவளுக்கு இதுயெல்லாம் பிடிக்காது என்று .. இப்ப நீ சொன்னவுடன் சரி சொல்வாளா.. பிடிக்காத விஷயத்தை பிடிக்க வைக்க கொஞ்சம் கஷ்டப்படணும் மச்சி … இங்கு தானே இருக்கப் போறா.. போகப் போகப் புரிந்து கொள்வாள்.. காதல், அன்பு வாழ்க்கை என்றால் உணர்ந்து கொள்வாள்.. அதன்பின் அவளே வந்து உன்னிடம் காதலை சொல்லிருவா மச்சி'௹,… என்ன அதுக்குள்ள உன் தலை நரைச்சி போகாமல் இருக்கணும்'', என்று சிரிக்காமல் சொல்லிய மாதேஷை கொலைவெறியுடன் விரட்டினான் கௌசிக்…


இருவரும் ஒருவரை ஒருவர் துரத்தியபடி வருவதைக் கண்ட ரித்து ''ஆரம்பிச்சிட்டாங்களா'' என்று வடிவேல் பாணியில் பேசியவள், தன்னருகே வந்த ரிஹாவிடம் ''என்ன ரிஹா எனக்குத் தெரியாமல் ரகசிய பேச்சு வார்த்தை எல்லாம் நடந்திருக்குப் போல'', என்று அவளின் சிவந்த முகத்தைப் பார்த்தபடி கிண்டலான குரலில் கேட்டவளைப் பொய்யாக முறைத்தாள் ரிஹானா..


''ஏய் ரித்து அப்படி எதுமில்லை .. சும்மா ஆபீஸ் விசயம்'', என்று சொல்லியவளைக் கண்டு நக்கலாக ''என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லாமல் சொல்லிட்டே'', என்று கலாய்க்க..


''ச்சூ போ ரித்து'', என்றவள் அவர்கள் கொண்டு வந்தப் பேக்கில் வெளியே இருந்ததை திரும்பி நின்று அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் ரிஹானா.


அதைக் கண்டு சிரித்தவள் அண்ணனும் கணவனும் வரவே கண்ணைச் சிமிட்டி ''எனன நடந்துச்சு? என்று சைகையில் கேட்க அவர்களோ உதட்டைப் பிதுக்கி ஒன்றுமே இல்லை என்று சைகை செய்யவும் ரித்தன்யா முகம் வாடியது.


மாதேஷ் ''நோ டென்ஷன் பேபி'', உதட்டசைவில் தன் மனைவியிடம் சொல்லியவன் , ''கிளம்பலாமா ரிஹானா'', என்று அவளிடம் கேட்டான் மாதேஷ் ..


''ம்ம்.. போகலாம் அண்ணா'', .. என்றவள் கௌசிக் முகத்தைப் பார்க்காமலே காரை நோக்கி நடந்தவள் பின்னால் எல்லாரும் வந்து காரில் ஏறியதும் போட்டோகிராபர் தன் போனுக்கு அனுப்பிய போட்டோக்களை ரிஹானாவிடம் காட்டிய படி பயணித்தாள் ரித்தன்யா…


அப்படங்களை பார்த்தவளுக்கு மனதிற்குள் சில எதிர்ப்பார்ப்புகள் அதீதமாக தோன்ற தனக்கும் இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்குமா வாழ்வில் என்ற கேள்வி குறி உள்ளத்தில் எழ அவளின் பார்வை முன்னால் கார் ஓட்டபவனிடம் செல்ல அவனோ முன்னால் இருக்கும் கண்ணாடியை சரிபண்ணியவன் ரிஹானாவை நோக்கி ஒரு நொடி விழிகளோடு கலந்தவன் அவள் விழிகளில் இருந்த கலக்கத்தைக் கண்டு மனம் மருகினான்..


அவளுக்கு தன் மேல் நம்பிக்கையை வரவழைக்க என்ன செய்வது? என்று புரியாமல் இருந்தவனுக்குச் சட்டென்று முகம் ஒளி பெற அவனின் அதரங்களோ மென்மையான சிரிப்புடன் விசிலடித்தபடி வண்டி ஓட்டினான்..


அவனின் சிரிப்பையும் விசிலையும் பார்த்தவன் சற்று முன் முகம் வாடி இருந்தவன் இப்போது சந்தோஷ மனநிலையில் இருப்பதைக் கண்டு மாதேஷ் புருவத்தை உயர்த்தி பார்க்க அவனோ தன் கூர்மையான கண்களை சிமிட்டிச் சிரித்தான் கௌசிக்..


எல்லாரும் வீடு வந்ததும் அங்கே பாட்டி வேதவல்லி இவர்களுக்காக காத்திருந்தார்.


மற்றவர்கள் ஆளுக்கொரு வேலையாக வெளியே சென்றிருக்க இவர் மட்டும் இருந்தவர் வீட்டின் போர்ட்டிக்கோவில் கார் வந்ததும் எழுந்து வந்தார்.


அவர் வருவதைக் கண்ட கௌசிக் ''என்ன பாட்டி நாங்கள் உள்ளே வரத்தானே போகிறோம் நீங்க ஏன் அலையிறீங்க?'' என்றவனை


''அடப் போடா..காலையில் போய்யிட்டு மாலை வரை அங்கே பிள்ளைதாச்சி பிள்ளையை வைச்சு சுத்திக்கிட்டு இருக்கீங்க அவள் ரொம்ப களைச்சு போய் இருப்பாள் தானே சாப்பிட்டாளா, ஜூஸ் குடிச்சாளா'', என்று கேட்டவரைக் கண்டு ரித்தன்யா எல்லாரையும் மிதப்பாக ஒரு பார்வை பார்த்தவள்..


தன் கணவனிடம் கண்ணைச் சிமிட்டியவள் ''ஆமாம் பாட்டி எல்லாரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்து என்னைக் கவனிக்கவே இல்லை'', என்று செல்லம் கொஞ்சியபடி அவர் தோளில் சாய்ந்தாள் ரித்தன்யா.


அவரோ ''அது தானே என் பேத்தி முகமே வாடி வதங்கிப் போச்சே'', என்றவர் ''அதற்குத் தான் இந்த தடி பையன்களோட போகாதே நான் வரேன் சொன்னேன் கேட்டீயா'', என்றவர்..


ரித்து சொன்னதைக் கேட்டு ரிஹானா எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து நின்று இருப்பதைக் கண்டு ''இவளையும் வெயிலில் அலைய வைச்சிருக்கீங்க .. ரிஹாவின் முகமே பாரு ஒரே நாளில் கறுத்துப் போய்யிருச்சு'', என்றவர் ''வாம்மா ரிஹா எல்லாரும் எதாவது சாப்பிட்டு நீயும் ரித்தும் முகத்திற்கு பேக் போட்டு விடுகிறேன்.. முகமும் பளிச்சென்று இருக்கும்'', என்று சொல்லவும்..


தான் கௌசிக்யிடம் தனியாக பேசியதை சொல்கிறாளா என்று எண்ணம் தலை தூக்க ஒரு வித குற்றவுணர்வுடன் முகம் வாடி இருந்த ரிஹாவின் முகம் பாட்டி சொல்லியதும் மிளிர ,


அதைப் பார்த்தபடி ''நாளைக்கு மெஹந்தி போட வரேன் சொல்லி போன் வந்தது ரித்து'', என்று பேசியபடி பெண்களை அழைத்துக் கொண்டு உள்ளே போனார் வேதவல்லி.


கௌசிக் மாதேஷோ அவர்கள் செல்வதைப் பார்த்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி ''இந்தக் குட்டிப் பிசாசு பாரேன் பார்த்துப் பார்த்துக் கவனித்தாலும் போட்டுக் கொடுக்கது'', என்று கௌசிக் மாதேஷிடம் சொல்ல..,


அவனோ ''அவள் உன்னை மட்டுமா போட்டுக் கொடுத்தா என்னையும் தான் .. இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னைப் பெத்த மகராசியிடமிருந்து போன் வரப் போகுது பாரு அங்கேயும் இதே செல்லம் கொஞ்சிப் பேசுவதை உண்மையாக நடந்தது போல சொல்வாள்.. என் அம்மீ உடனே போன் பண்ணிக் காதில் இரத்தம் வரும் வரை பேசிக் கொல்லும்'',… என்று புலம்பிக் கொண்டே உள்ளே போனார்கள் ஆண்கள் …

தொடரும்
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
274
Super
 
Top