• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..17

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம்.. 17


இரவின் உணவின் போது வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்க அங்கே இருவரின் அமைதி மட்டுமே எல்லாருக்கும் கண்ணை உருத்தவும்.... கோமளவல்லி தன் மகளை நோக்க… அவளோ தன் கட்டை விரலைக் கீழ் நோக்கிக் காமிக்கவும், அதைப் பார்த்து மனம் வருந்தினார்.


தன் மகன் எல்லாவற்றிலும் முதன்மையானவனுக்கு அவன் ஆசைப்பட்ட அவனின் வாழ்வும் எந்தவித சிக்கலின்றி தெளிந்த நீரோடையாக அமைய வேண்டும் என்று நினைத்தார் ..


ஆனால் அவன் நினைத்தபடி அமையாமல் போனால் அவன் அடுத்த வாழ்வை தேடிக் கொள்வானா என்று வினா அவர் முன் நிற்க, அவரோ தன் மகனின் முகத்தை ஒருவித ஆராய்ச்சியுடன் பார்த்தார்..


தன்னையே பார்த்தபடி இருக்கும் அன்னைக்குக் கண் மூடி எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்பிக்கையோடு சொல்வதைக் கண்டு தன்னுடைய மனக்கிலாசத்தை ஒதுக்கி விட்டு ரிஹானாவிடம் பேச்சுக் கொடுத்தார் கோமளவல்லி


''ரிஹா'', என்று கூப்பிட்டவர்க்கு ''சொல்லுங்க ஆண்ட்டி'',.. என்றவளிடம்..


''இங்கே இந்த நாடு ஊர் பிடிச்சுருக்கா'', என்று பொதுவாகப் பேச்சை தொடங்கினார்..


''ம்ம் பிடிச்சிருக்கு.. அதைவிட உங்களை பாட்டி ரித்து எல்லாரும் முதல் தடவையாகப் பார்ப்பது போல இல்லாமல் உங்களில் ஒருத்தியாக என்னை நடத்துக்கீறிங்க.. அது ரொம்ப பிடிச்சிருக்கு.. நேற்று புது இடம் பயந்துவிடக் கூடாது கூடவே என் கூட வந்து துணைக்குப் படுத்தது எனக்குப் புதுசா இருந்தது'',... என்று தழுதழுத்தக் குரலில் சொல்லியவள் ,


''இத்தனை வருடங்களில் பல நேரங்கள் நான் தனிமையை அதிகமாக உணர்ந்து இருக்கேன் .. ஆனால் இங்கு வந்து இரண்டு நாளில் தனிமையை உணரவே இல்லை .. அதுவே என் மனதிற்கு நிறைவாக மகிழ்ச்சியாக இருக்கு'', என்று சொல்லியவள் ''தேங்க்ஸ் ஆண்ட்டி'', என்று அவரின் கைகளை அழுத்தினாள் ரிஹானா.


''ஹாய் ரிஹா நீயும் ரித்து மாதிரி எங்கள் பேத்தி தான் .. உன்னை எங்க குடும்பத்தில் ஒரு ஆளாக தான் பார்த்தோம் நீ ஏர்போர்ட் இருந்து இறங்கியவுடன் எங்க வீட்டுப் பெண்ணு முடிவே பண்ணியாச்சு .. இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகாதே'', என்று வேதவல்லி சொல்ல..


''ஆமாம் ரிஹா இங்கே பொழிகிற பாச மழையில் நனைஞ்சு காய்ச்சல் வந்திட போகது'', என்று கிண்டலாகச் சொல்லி சிரித்தவள் ''இதே நினைக்காமல் இங்கே நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆச்சரியமாக பார்க்காதே ரிஹா.. அன்பு பாசம் மட்டுமல்ல, கோபம் கவலை அழுகை எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை .. அதனால சும்மா சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையா இல்லாமல் ஜாலியா உன் வீடா நினைச்சு, நாங்க எல்லாரும் உன் உறவுகள் உணர்ந்து என்ஜாய் பண்ணு''.. என்று ரித்தன்யா சொல்லவும்..,


மாதேஷோ ''அச்சோ என் பொண்டாட்டியை காணாம்… இங்கே என் பொண்டாட்டி ஒரு அப்பாவி ஜீவனை பார்த்தீங்களா'',.. என்று சிரிக்காமல் கேலியாக புருவத்தை உயர்த்தி ரித்துவை பார்க்க அவளோ கரண்டியை தூக்கவதைக் கண்டு , ''அப்பாடி இவ்வளவு அறிவா பேசறாளே யாரா இருக்கும் டவுட் வந்திருச்சு.. இப்ப தான் கிளிராச்சு… என் பொண்டாட்டி கிடைச்சிட்டா'', என்று மனைவியை கலாய்த்தான் மாதேஷ் ..


அதைப் பார்த்து எல்லாரும் சிரிக்க ரிஹாவும் சேர்ந்து சிரித்தாள் …


பின் தன்னயறைக்கு வந்தவளுக்கு இன்று கௌசிக் தன்னிடம் பேசியதை எண்ணிக் கொண்டே படுத்தவள் , அவனின் ஒவ்வொரு வார்த்தையும் தனக்குள் எதையோ செய்கிறது என்று உணர்ந்தவளுக்கு இது சாத்தியபடுமா என்ற எண்ணமும் தனக்குள் போட்டுக் கொண்ட வெறுப்பின் சுவடுகள் அதை வாழ்வில் பிரதிபலித்தால் அந்த வாழ்வு நிலைக்குமா என்று பல வினாக்கள் உருவாக அவளால் நிம்மதியாக உறங்க முடியாமல் தவித்துப் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்..


கூடப் படுக்க வரேன் சொன்ன கோமளவல்லியும் ''வேண்டாம் ஆண்ட்டி தனியாகப் படுத்துக்கிறேன்'', என்று அழுத்தமாகச் சொல்லியதால் அவரும் வரவில்லை .. அவருடைய மகன் சொன்னதைத் தனியாகச் சிந்திக்க வேண்டி இருந்தால் தான் அவரை வேண்டாம் சொன்னோம் எண்ணியவள், பேசாமல் அவரை வரச் சொல்லிருக்கலாமோ, என்று எண்ணமும் தோன்றியது…


இந்த கௌசிக் எப்பவும் போல பேசிருந்தால் இப்படி தூக்கம் வராமல் தவிக்க வேண்டிருக்காது என்று அவனைச் செல்ல திட்டு திட்டியபடி இருந்தவளின் செவியில்

அறைக் கதவு தட்டவும் வேகமாக எழுந்தவள் இந்த நேரத்தில் யார்? என்ற யோசனையோட போய் கதவைத் திறந்ததும் ஆச்சரிமாகப் பார்த்தவள் மனதிற்குள் நினைத்தவன் எதிரே நிற்பதைக் கண்டு திகைத்தும் போனாள் ரிஹானா.


கதவின் அருகில் நின்ற கௌசிக், ''நீ இன்னும் தூங்கிருக்க மாட்டே தோனுச்சு அது தான் கதவைத் தட்டினான்.. தூங்கிட்டியா ரிஹா நான் தொந்தரவு பண்ணிட்டனா'', என்று கேட்டவனுக்கு இல்லை என்று தலையாட்ட,


''நீ சாப்பிடும் போதே கவனித்தேன் நீ ரொம்ப குழம்பிப் போய் இருக்கேன் என்று தோனுச்சு அதை யோசித்துப் படுத்தால் தூங்க மாட்டே'', என்று தான் சொல்லியவன் தன் கையிலிருந்த போனைக் கொடுத்தவன் '''இந்தப் பாடல்களை கேட்டபடி படும்மா நல்ல தூக்கம் வரும்'' என்று சொல்லியவன் ஹெட்செட் ஒரு போனைக் கொடுக்க,


அவளோ "எனனிடம் இருக்கு", என்று சொல்லிய ரிஹாவிடம் "இல்லைமா இதில் தமிழ் சாங்ஸ் இருக்கும் .. உன் மனதிற்கு இதமாக இருக்கும் சொல்லிவிட்டு அவள் கையில் அதைத் திணித்துவிட்டு "குட்நைட் டா", என்று சொல்லியவனின் விழிகளின் பாவனைகளை பார்த்து மலைத்துப் போனவளுக்கு அவ்விடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றாள்..


தன்னயறையின் அருகே போன கௌசிக் திரும்பிப் பார்க்க அவன் விழிகள் சொன்ன செய்தியில் அதிர்ந்து வேகமாகக் கதவை அடைத்தவள் சற்று நேரம் அவளின் இதய துடிப்பு அதிகமாகத் துடித்ததுப் போல இருந்தது ..


சிலமணிதுளிகள் அங்கே நின்றவள், பின் படுக்கையில் படுத்தபடி அவன் கொடுத்த போனிலிருந்து ஜானகி வாய்ஸில் வந்த காதல் தாலாட்டு கலந்த பாடலைக் கேட்கக் கேட்கத் தன்னை மறந்து துயில் கொண்டாள் ரிஹானா .


மறுநாள் வீடே பரபரப்பாக இருக்க இரவில் லேட்டாகத் தூங்கியதால் எட்டு மணிப் போல விழித்தவள், மனமோ சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக இருந்தது.


என்றுமில்லாத அளவிற்குக்கு மனமோ மெல்லிய சிறகை விரித்து பறக்கும் பறவையின் மனத்தை ஒத்திருக்க, எழுந்தவள் ரெப்பிராஷாகிக் கீழே வந்தவளின் விழிகள் கௌசிக் தேடினாலும், மற்றவர்களும் கண்ணில் படாமல் வேலை செய்யும் ஆட்களால் வீடே பரபரப்பாக இருப்பதைக் கண்டு நேராக அங்கே சென்றாள் ரிஹானா.


அவ்விடத்தில் பலகாரம் செய்யும் பணியாளர்கள் முறுக்கு அதிரசம் லட்டு விதவிதமான வகைகள் செய்துக் கொண்டிருக்க அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த வேதவல்லி ''முறுக்கு பெரிய முறுக்கா போடனும்'', என்று சொல்லிச் சுற்றிக் காமித்துக் கொண்டிருந்தார்.


அவர் கையின் லாவகமாக மாவை சுற்றுவதைப் பார்த்தவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்க அவர் அருகில் போனவள், ''பாட்டி'', என்று வந்தவளை.. ''வா வா ரிஹா'', என்றவரிடம் ''இதுயெல்லாம் என்ன பாட்டி?'', என்று கேட்டவளுக்கு, ''நாளை நம்ம ரித்துக்கு வளைகாப்புல.. அதற்குச் சீர்தட்டில் வைக்க வேண்டிய பலகாரங்கள் எல்லாம் வீட்டில் செய்யலாமே என்று தான்'', என்றவர் வாய் தான் பேசியது கைகள் லாவகமாக அதன் வேலையை செய்துக் கொண்டிருக்கு,


''ஆமாம்ல'', என்றவள் ''ஆண்ட்டி ரித்து மற்றவர்களையும் காணாமே'', என்று கேட்டவளிடம்


''ரித்துவிற்கு மெஹந்தி போட ஆள் வரச் சொல்லிருக்கல அதுக்காக ரூம்மில வெயிட் பண்ணுகிறா .. தாத்தா அங்கிள் மண்டபம் வரை போய்ருக்காங்க..கௌசிக் மாதேஷ் சில பொருட்கள் வாங்க வெளியே போய்யிருக்காங்க'', என்றவரிடம்..


''இத்தனை பேர் வேலைக்கு இருக்கும்போது நீங்களே எல்லாம் செய்யரீங்க'', என்று புரியாமல் கேட்டவளுக்கு..


அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தவர் ''வேலைக்குப் பல பேர் இருந்தாலும் நாம் செய்கிற மாதிரி வராது டா.. அதுவும் நம் வீட்டு விசேஷம் நாம் தான் செய்யணும்'', என்றவர்… ''பாட்டி நானும் இதை டிரை பண்ணுட்டுமா'', என்று முறுக்கு பிழியும் குழாயை எடுத்துக் கொண்டு கேட்க,அவரோ லேசாகச் சிரித்தபடி ''பிழியாலாம்… அதற்கு முன்.. நீயும் சாப்பிட்டு வா, அப்பறம் வீட்டை அலங்காரம் பண்ண ஆள் வருவாங்க ,அவங்களுக்கு உன்னால் முடிந்தால் எதாவது ஐடியா சொல்லு, இதை உனக்குத் தனியாகச் சொல்லித் தருகிறேன்'',.. என்றவர் , அப்பறம் ''உனக்கும் மெஹந்தி போடலாம்'', என்று சொல்லவும் சரியென்று தலையாட்டிக் கொண்டு வீட்டினுள் சென்றாள் ரிஹானா.


வீட்டை அலங்காரச் செய்யும் ஆட்கள் செய்துக் கொண்டிருக்க.. பூக்களால் தோராணங்களை கட்டிக் கொண்டிருந்தனர்.. சில இடங்களில் பொக்கே பிளவர்களால் அலங்காரம் செய்யப்பட அவ்விடத்தில் சின்ன சின்ன கரெக்ஷன் சொல்லிக் கொண்டிருந்தாள் ரிஹா…


அவளுக்கு எல்லாமே புதுமையாக இருந்தது .. இப்படி வீடே ஒரு பங்கஷனுக்காக அலைவதைக் கண்டவளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் புரிந்தது. அதை நினைத்தபடி அமர்ந்திருந்தவளைத் தேடி வந்த ரித்தன்யா ''என்ன ரிஹா இங்கே உட்கார்ந்து இருக்க'',… என்று அவளருகே அமரவும், ''ரித்து உனக்கு எதாவது ஜூஸ் கொண்டு வருவா முகமே வாடி இருக்கு'', என்று ரிஹா கேட்டகவும், ரித்தன்யா சிரித்தாள் ..



''நீயும் அம்மா மாதிரி முகத்தைப் பார்த்ததும் ஏன் வாடி இருக்கே கேட்கிற?'', என்றவள், ''இரவு சரியா தூக்கம் வரல குட்டி தூங்க விடாமல் விளையாடிக்கிட்டே இருந்தது'', என்று சொல்லியவளின் முகப்பாவனையில் ரிஹாவிற்கும் ஆசை அதிகரிக்க ''நான் உன் வயிற்றைத் தொட்டுப் பார்க்கட்டா ரித்து'', என்று கேட்டவளின் குரலில் சிறு ஏக்கம் இருக்க,


ம்ம் .. சொல்லவும் அவளும் ரித்துவின் மணிவயிற்றியில் கை வைத்துப் பார்க்கவும்.. அங்கே எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு ''இப்ப பேபி தூங்கிட்டு இருக்கு போல'', என்று சொல்லவும்'',.. ரிஹா முகம் வாடியது,


''அடுத்த முறை துள்ளும் போது நீ கை வைத்து பார்க்கலாம்'', என்று சொல்லியவள், உனக்கும் கல்யாணம் ஆகி இப்படி குழந்தை உருவாகும் போது அதை உணரும் தருணங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது ரிஹா என்று ரித்து சொல்ல,


ரிஹானாவின் முகமோ வாடி வதங்கியது.. அப்படி ஒரு நாள் நம் வாழ்வில் நடப்பதற்கு சாத்திய கூறே இல்லையே என்று நினைத்தவளுக்கு கௌசிக்யின் முகம் கண்முன் நிழலாடியது. அவன் சொன்னது நடந்தால் எல்லாமே கிடைக்கும் தான் ஆனால் அது நிரந்தரமான வாழ்க்கையா இல்லை பாதியில் பிடிக்கவில்லை என்று ஒதுங்கி போய்விடுமோ என்ற எண்ணம் மனதில் தோன்ற அவள் முகம் ஒளியிழந்தது.


அருகில் அமர்ந்திருந்த ரித்தன்யா ரிஹாவின் முகத்தையே பார்த்தவள் அவள் பல குழப்பங்களுக்கிடையே தேங்கிக் கிடக்கிறாள். இவளுக்கும் அழகான குடும்பம் சிறு வயதிலேயே கிடைத்திருந்தால் அவளுக்கு எதன் மேலும் நம்பிக்கை இல்லாமல் போய்யிருக்காது என்று தோன்றவும், அவளை அதனுள்ளே உழன்று கொள்ளாமல் இருக்க மாதேஷ் மாமியார் மாமனார் பற்றி எல்லாம் பேசினாள் ரித்தன்யா.



அவள் பேச்சு வேறு திசையில் செல்லவும் தானும் ஷான்வியின் குடும்பத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் ரிஹானா.


அப்போது மெஹந்தி போட ஆள் வரவும் ரித்தன்யா கையில் ஆலிலையில் கிருஷ்ணன் உருவமும் அதைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் மலர்வனம் வரும் மாதிரி வேண்டும் என்று சொல்ல அவள் சொல்கிற டிசைனை அங்கே வந்த வேதவல்லியும் அதுவே போடச் சொன்னார்.


''ரிஹா நீ மெஹந்தி போட்டுகிரீயா இல்லை மருதாணி போட்டுக்கீரியா'', என்று கேட்டார் வேதவல்லி.


'',மருதாணி எப்படி இருக்கும் பாட்டி? அதைப் பற்றி தெரியாதால் ரிஹா கேட்க,


''மருதாணி போட்டால் கைகள் நல்ல சிவக்கும் .. உடம்புக்கும் குளிர்ச்சியான ஒன்று .. நானும் என் மருமகளும் அதன் தான் வைத்துக் கொள்வோம்.. ரித்துக்கு குளிர்ச்சி இப்ப வேண்டாம் தான் மெஹந்தி இதில் டிசைன் வரையலாம்.. புதுசு புதுசா…ஆனால் மருதாணி மாதிரி வராது என்று சொல்லியவர் ''நீயும் மெஹந்தியே போட்டுக்கீரியா'', என்று கேட்டார் வேதவல்லி…


''இல்லை பாட்டி நானும் மருதாணி வைச்சுக்கிறேன்.. எனக்கு ஆசையாக இருக்கு'', என்று சொல்லவும் ''சரிடா ரிஹா மருதாணியை அரைச்சிட்டு வரச் சொல்றேன்'', என்று சொல்லியவர் வேலை செய்யும் பெண்மணியிடம் மருதாணியை பறித்து அரைத்து வரச் சொன்னார் வேதவல்லி.


''நீ அதுவரை ரித்து கூட இரு ரிஹா எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு'', என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார் ..


''ரிஹா எனக்கும் மருதாணி தான் பிடிக்கும் .. ஆனால் இந்தப் பாட்டி தான் வேண்டாம் சொல்லிட்டாங்க'', என்று சொல்லியவள் மெஹந்தி போடும் பெண்ணின் கைவண்ணத்தைப் பற்றி அரட்டை அடித்தபடி அந்தப் பெண்ணிடமும் பேசியபடியே நேரத்தை ஒட்டிக் கொண்டிருந்தனர் இருவரும்.


இடை இடையே வரும் ஜூஸ் ஸ்னேக்ஸ் ரித்தன்யாவுக்கு கொடுத்தபடி தானும் அருந்திக் கொண்டு அமர்ந்திருக்க , எல்லாரும் அவரவர் வேலையை முடித்துவிட்டு வந்து சேர்ந்தனர் ஆண்கள்..


அதன்பின் ரித்தன்யா இருக்கும் இடத்திற்கே உணவினை கொண்டு வந்து கோமளவல்லி மகளுக்கு ஊட்ட எல்லாரும் ஆளுக்கொரு ஒருவாய் ஊட்டி தாங்களும் உணவை சாப்பிட அவ்விடமே கலகலத்து போனது.


அதையெல்லாம் அருகிலே இருந்து பார்த்த ரிஹானாவிற்கோ ஏதோ மாய உலகில் சஞ்சாரம் செய்தாள்..


இதற்கிடையில் மருதாணி அரைத்து வரவும் அதை கோமளவல்லி ரிஹாவிற்கு கைகளில் வைத்து விட ''அவளோ ஆண்ட்டி தொப்பி ஒவ்வொரு விரலுக்கும் போட்டு விட்டாங்க'', .. என்று சொல்லிச் சிரித்தவள் அதன் குளிர்ச்சி உடல் முழுவதும் தாக்க அதை அனுபவித்து கொண்டிருந்தாள்…


அப்போது வைத்தீஸ்வரன் வேதவல்லியின் விரலுக்கு மருதாணியை வைக்க கௌசிக்கோ ''பாருடா இந்த வயதிலும் ரொமானஸே'', என்று கலாய்க்க,


மாதேஷ், ''டேய் மச்சி இவர்களிடம் நாம் நிறைய கத்துக்கணும் டா'', என்று சொல்லிச் சிரித்தான்.


வேதவல்லியின் முகம் சிவக்க, பேரனை பார்த்துக் ''கம்னு இருடா, என் புருஷன் எனக்கு மருதாணி போட்டு விடுகிறார், வேணுமனா உனக்கு வரவளுக்கு நீ போட்டு விடு நாங்க என்ன தடுக்கவா போறோம்'', என்று ரிஹாவை ஓரக்கண்ணில் பார்த்துச் சொல்ல,


''ம்ஹூம் அதுக்கு உடனே இன்செஸ்ட்ன்ட் பொண்டாட்டிக்கு எங்கே போறது'', என்று ஏக்கப் பெருமூச்சு விட எல்லாரும் கலகலத்தனர்..


ரிஹானாவை பார்த்தபடியே கௌசிக் ''ஏன் பாட்டி இந்த மருதாணிக்கு ஒரு கதை சொல்வீங்களே அதை சொல்லுங்களேன்.. ரிஹானக்கு அக்கதை எல்லாம் தெரியாதுல'', என்று கேட்டவனின் குறும்பில் உள்ளடங்கிய விழிகளின் புன்னகையை கண்டவளுக்கு இதயமோ படபடத்தது…


''ரிஹா இந்த மருதாணி கையில் வைக்கும் போது நாம் மனசிலே ஆசையா அன்பா இருக்கும் கணவனை நினைச்சு வைச்சால் கைவிரல்கள் சிவந்து போய் அவர்களின் மேலே இருக்கும் காதலை சிவந்த விரல்கள் சொல்லிவிடும்'', என்று சொல்லிய வேதவல்லியை வைத்தீஸ்வரன் காதலோடு பார்த்தவர் ''ரிஹாமா அதைப்போல வெற்றிலை பாக்கு போட்டால் வாய் சிவந்தாலும் இதே கதை தான் சொல்லுவாங்க.. வெற்றிலை செரிமானத்துக்கு நல்லது நினைச்சு போட்டாலும் வாய் சிவந்து போனால் கட்டினவன் மேலே எம்புட்டு ஆசை பாரேன் கிண்டலாகப் பேசுவார்கள்'', என்று சொல்லிச் சிரித்தவர் மனைவியை பார்த்துக் கண் சிமிட்டினார் வைத்தீஸ்வரன்…


அதில் முகம் சிவந்த வேதவல்லியோ ''ச்சூ சும்மா இருங்கள்'', என்று வெட்கப்பட அங்கே முதுமையின் காதலில் இருக்கும் சுவை அறியாதவர்கள் இன்று வரை தாத்தா பாட்டியின் அன்பினை நினைத்து மகிழ்ச்சியோடு பார்க்க ரிஹாவோ பாட்டி தாத்தாவை அதிசயமாக பார்த்தாள் …



''சரி சரி.. ரித்து உனக்கு நாளை மெஹந்தி போட்ட கை எப்படி சிவக்கும் இந்த அத்தான் மேலே எம்புட்டு ஆசையா இருக்கேன் நானும் பார்க்கப் போறேன்'', என்று மாதேஷ் சொல்லவும்…


''மருதாணி அளவில் இல்லை என்றாலும் ஓரளவுக்கு சிவக்கும் .. ஓ அப்ப சிவந்தால் உன் மேலே அன்பு அதிகமாக இருக்கும் இல்லைனா இருக்காது சொல்ரீயா'', என்று சிறு முறைப்புடன் கேட்டவளை…


''அப்படினு எவன் சொன்னான்.. நீ எம்புட்டு காதல் என் மேலே எனக்குத் தெரியாதா'', என்று சொல்லி ''நான் இந்த இடத்திலிருந்து எஸ்கேப்'', என்று சொல்லியவாறே தங்களின் அறைக்குள் நுழைந்து கொண்டான் மாதேஷ்.


அதைக்கண்டு ரித்து விழுந்து விழுந்து சிரிக்க, ''ஏய் ரித்து எங்காயாவது பிடிச்சுக்க போகது'', என்று பதறிய கோமளவல்லி ''மெதுவா சிரிடி'', என்று சொன்னவர், ரிஹானாவுக்கு மருதாணியை வைத்து விட்டு தன் கைகளுக்கு வைக்க தன் கணவனை நோக்கிச் சென்றார்.


இப்படியே கிண்டலும் கேலியுமாக அவ்விடமே சிரிப்பு அலை பாய .. ரிஹாவின் மனமோ தன் கை நாளை எப்படி சிவந்து இருக்கும் என்று அறிய ஆவல் கொள்ள, அதை இன்னொருவனும் அறிந்துகொள்ள பேராவல் கொண்டுள்ளான் என்று கௌசிக்யின் பார்வை சொல்லியது.


அவனின் பார்வை கூறும் விழிமொழியில் புதுவிதமான உணர்வுகளுக்குள் ஆட்க் கொண்டாள் ரிஹானாவின் மனம்.


தொடரும்
 
Top