• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே.. 6

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..6


ரிஹானா கௌசிக்கை பின் தொடர்ந்து கண்ணாடிப் பாலத்தில் நடக்கும் போது ஒரு நாலு வயது பெண் குழந்தை ஒன்று தன் பிஞ்சு மென்பாதங்களை கண்ணாடித் தளத்தில் இரண்டடி எடுத்து வைக்கவும்,பிறகு பயந்து கொண்டு மீண்டும் பின்னோக்கி வைக்கவும்… முன்னே போகாமல் அதில் ஏறி நடக்கவும் தயங்கிக் கொண்டு தன் ரோஜா பூவிதழ்களை பிதுக்கியபடி கண்ணைச் சுருக்கிக் கொண்டு நிற்கும் அந்த மலரின் செய்கையை கண்டு அங்கேயே நின்று விட்டாள் ரிஹானா.


குழந்தையின் ரோஸ் வண்ண முக அழகில் சொக்கி நின்றவள் சப்பியாகுவும் அதன் முடியை பட்டர்பிளை முகப்பில் அடங்கிய அழகும், அதன் முகத்தில் தெரியும் முகபாங்கள் ஒவ்வொன்ரும் ரசித்தவள் அதன் செய்கையும் கண்டு ரசனை நிறைந்த விழிகளோடு பார்த்துக் கொண்டு அங்கே நின்று விட்டாள் ரிஹானா.


குழந்தையோ கண்ணாடிப் பாலத்தில் தெரியும் தன் உருவத்தைக் கண்டும் அஞ்சிய படி சிணுங்குவதும் , பிறகு நாலடி ஓடவதும், கீழே தவிழ்ந்து போவதும் அதன் குறும்புடன் கண்ணாடியை தட்டுவதும், பிறகு பயந்தபடி அப்படியே உட்கார்ந்து கீழே பார்ப்பதைக் கண்ட அவளின் விழிகளுக்கு அக்காட்சியைக் காணக் காணத் தெவிட்டவில்லை ரிஹானாவிற்கு.


தான் எதற்கும் வந்தோம், யார் கூட வந்தோம் என்பதை மறந்தவள் அக்குழந்தையின் பெற்றோர் எங்கயாவது தென்படுகிறார்களா? என்று சுற்றிப் பார்த்தாள்.


அவர்களை எங்கயும் காணாமல் அவ்விடமே விருச்சோடி இருக்க அதைக் கண்டு திகைத்தவள், மெதுவாக குழந்தையின் அருகில் சென்று ''ஹேய் பேபி டால் கம் .. வாட்ஸ் யுவர் நேம்?'', என்று கேட்டபடி தன் கைகளை நீட்டவும் குழந்தையோ அவளை மேலும் கீழும் ஆராய்ச்சி பார்வையுடன் பார்த்துவிட்டு ''மீ டயானா'', என்று மழலைக் குரலில் சொல்லியபடி அவள் கைக்குள் வந்து அடைக்கலமாயிற்று.


மென்பஞ்சு பொதி போல இருக்கும் குழந்தையை வாரியெடுத்தவள் அதன் குண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுக் கொஞ்சித் தன் கைகளோடு பிஞ்சு கைகளைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் கண்ணாடிப் பாலத்தில் நடக்க அதுவும் பால் அருவியாய் சிரித்தபடி அவள் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடந்தது ..


இருவரும் கண்ணாடிப் பாலத்தில் நடக்க, சிறிது தூரம் ஓட, முகம் மூடிக் கொண்டு பூம் என்று கைகளை விலக்க, என விளையாடிவளைக் கண்டு பால் பற்கள் பளீர் என தெரிந்தபடி நகைத்தக் குழந்தையோடு குழந்தையாய் ஐக்கியமானாள் ரிஹானா.


தன்னுடன் நடந்து வந்தவளைக் காணவில்லை என்று திகைத்தவன் வந்த வழியே திரும்பிப் பார்த்த கௌசிக்கிற்கு அங்கே அவள் குழந்தையோடு நிற்பதைக் கண்டு அதிர்ந்தாலும் அவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகளை ரசனை கலந்த விழிகளோடு நோக்கினான்.


அப்போது அவளிடம் தோன்றிய அவளின் முகபாவங்களைக் கண்டவனுக்கு இவளும் மழலை போல உள்ளம் கொண்டவள் தான் என்ற எண்ணம் உதயமானது..


சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவன் அவள் நிகழ் உலகத்திற்கு வராமல் அவர்களின் உலகத்திலே சஞ்சரிப்பதைக் கண்டு அவர்களின் அருகில் போன கௌசிக்கோ, ''ஹேய் ரிஹானா, இது யார் குழந்தை?'', என்று கேட்டபடி குழந்தையின் கன்னத்தை மெதுவாக வருடி விட்டவனின் கரத்தின் அருகிலே அவளின் பட்டுப் போன்ற மென்மையான சருமம் தெரியவும் அதை வருடிவிட அவன் கைகள் துடித்ததை அறிந்ததும் வேகமாகக் குழந்தையின் கன்னத்திலிருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டான் கௌசிக்.,


அப்போது அவர்களை நெருங்கியபடி ஜோடியாக இருவர் வந்தார்கள்.


அவர்களைப் பார்த்தும் குழந்தை ரிஹானாவின் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இறுக்கி அணைத்ததும் அதன் முதுகை வருடி விட்டவளுக்கு, ''இது உங்க குழந்தையா?'', என்று கேட்டபடி அவர்களிடம் நீட்டினாள்..


குழந்தையோ அவளை விட்டுப் போக மறுக்க தன் கைகளிலே வைத்தவளுக்கு, சிறு கோபம் ஒன்று எட்டிப் பார்க்க ''இப்படி தான் குழந்தையை தனியாக விட்டுச் செல்வீர்களா'', என்று ஆங்கிலத்தில் கேட்டாள் ரிஹானா.


அவர்களோ ''நோ நோ பேபி டால்.. நாங்க அங்கே தான் நின்றிருந்தோம்.. குழந்தையின் சிறு சிறு கொண்டாட்டம் மகிழ்ச்சி சந்தோஷம் அழுகை எல்லாம் வீடியோ எடுப்பது வாடிக்கை அதுதான் , என்று தன் எதிரே நின்றிருந்தப் பக்கம் கையை நீட்டி சிறு மறைவான பகுதியை காமித்து அங்கே நின்றோம்... நாளை இவள் பெரியவள் ஆனால் இதை எல்லாம் பார்ப்பாளா அல்லவா…, அப்போது அவளுக்கு கிடைக்கும் அறியாத பருவத்தின் நினைவுகளின் காணலொலியை கண்டால் தான் செய்த குறும்புகளை நினைத்து மகிழ்வாள்… என்று டயானாவின் அம்மாவும் அப்பாவும் சொல்லவதைக் கேட்டவளின் முகம் வாடி வதங்கியது .


தனக்கு இப்படி ஒரு மகிழ்ச்சி தருவதற்கு தன் பெற்றோர்கள் நினைக்கவில்லையே என்ற ஏக்கம் ஆழி அலையாய் உள்ளத்தை சுழன்று அவளுக்குள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியது. அப்போது டயானாவின் அம்மா பேசியது கிணற்றுக்குள்ள இருந்து கேட்பதைப் போல வார்த்தைகள் அவள் செவியில் மெதுவாக விழவும் அதைக் கவனித்தாள் ரிஹானா.


''அதுவும் டயானாவோட நீங்களும் குழந்தையோட குழந்தையாக விளையாடவும் அதைக் கெடுக்க எங்களுக்கு மனதில்லை ....


சில வருசங்கள் கழித்து டயானா இந்தக் காணலொலியைக் காணும் போது உங்கள் முகம் அவளுக்குப் பரிச்சியமாகும். அப்போது சந்திக்க நேர்ந்தால் உங்கள் இருவருக்கும் இந்த நிமிடங்கள் நடந்த நிகழ்வுகள் படத்தின் காட்சியாக மாறி உங்கள் மலரும் நினைவுகளுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்குமல…


அதனால் தான் இவ்வளவு நேரம் அங்கேயே இருந்தோம்'', என்று சொல்லினார்கள் அந்த நதம்பதினர்,


திரும்பி கௌசிக்யை நோக்கிய டயானவின் அப்பா ''நாளை உங்கள் மனைவி குழந்தையோடு குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டு உங்களையே மறந்து விடுவார்கள்'', .. எனறு கேலியாக உரைத்துவிட்டு ''உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நல்லா அம்மா கிடைப்பாள்'', என்று பாராட்டிச் சொல்வதைக் கேட்டு கௌசிக்யை அதிர்ந்துப் போய் பார்த்தாள் ரிஹானா.


தங்களைக் கணவன் மனைவியாக நினைத்து அந்தத் தம்பதிகள் பேசுவதைக் கேட்டு வாய் பேசமுடியாமல் திகைத்து நின்றவளை ஏறயெடுத்துப் பார்த்தவன், தன்னைறியாமல் அவர்களிடம் பதிலும் சொன்னான் கௌசிக்....


அதைச் சொன்னவுடன் தன் மனம் அதற்குள் அவள் வசம் சென்று விட்டதா.. என்ற வினா அவனுள் பெரியதாக உருவமெடுத்து ஆடியது…


எந்த நம்பிக்கையில் தான் பேசியது என்றவனின் மனமோ உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டது…


ஆனாலும் அவளைப் பார்த்த வினாடியிலிருந்து மனதிற்குள் புகுந்து ஏதோ செய்கிறாள்.. அந்த உணர்வுகளின் உன்னத்தில் அவனுக்குள் புதுமையாக இருக்க அதனுள் ஆழ்ந்து போகவே விரும்பினான் கௌசிக். ..


தன் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை வெளிபடாமல் மீண்டும் குழந்தையின் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் கௌசிக்.


கௌசிக் அவர்களிடம் பேசியதைக் கேட்ட ரிஹானாவிக்கோ கைகால்கள் நடுங்க ஆரம்பிக்கவும், அவளிடமிருந்து குழந்தையை வாங்கி அவர்களின் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு ''உங்களைச் சந்தித்ததும் மிக்க மகிழ்ச்சி கைஸ்'', என்று சொல்லிய கௌசிக் தன்னையும் அறிமுகப்படுத்தி கொண்டவன், ரிஹானாவின் பெயரை மட்டுமே சொன்னான்.


அவர்கள் சொன்னதற்கு பதிலாக ''நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை தான்… நாளை இவள் என் குழந்தைக்கு நல்ல அம்மாவாக இருப்பாள், எனக்கும் என் குழந்தையின் அம்மாவின் காதலும் எனக்கு அதீதமாகக் கிடைக்கும்'' என்று சொல்லிச் சிரிக்க .. அவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.


அவர்கள் சிரிப்பதையும் பேசுவதையும் கண்டு திகைத்து நின்றிருந்த ரிஹானாவின் கையை உலுக்கிய கௌசிக்…அவர்களிடம் விடைபெறச் சொல்லிச் சைகை காமித்தைக் கண்டவளுக்கு அவன் முகத்தைத் தவிர வேறு எதுவும் கண்ணிலும் படவில்லை கருத்திலும் படவில்லை .


அவள் தன்னையே மறந்த நிலையைக் கண்டு டயானாவின் பெற்றோர், ''ஹேய் நீங்கள் சொல்லியது மெய் தான் போல, உங்களை தவிர நாங்க எல்லாம் கண்ணில் படவில்லை '',எனறு சொல்லிவிட்டு, ''டயானா பேபி பை சொல்லு'', என்று கௌசிக் ரிஹானாவைப் பார்த்துச் சொல்லச் சொல்லக் குழந்தையும் ரிஹானாவின் கன்னத்தில் முத்தமிட்டு ''பை '',சொல்லிச் சென்றது.


குழந்தை முத்தமிட்டக் கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டவள் கௌசிக்கின் பேச்சால் அதிர்ந்த மனத்தின் போக்கை அறியாமல் திகைத்தபடி சிலையாக நின்றிருந்தாள் ரிஹானா.


ரிஹானா எதுவும் பேசாமல் அப்படியே நிற்பதைக் கண்ட கௌசிக் நமுட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு, ''ஹேய் வா இன்னும் மேலே போகலாம்'', என்று சொல்லிக் கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்றான். அங்கே கைகளைப் பிடித்துப் பேசுவதோ பழகுவதில் யாரும் உன்னிப்பாகக் கவனிக்க மாட்டார்கள்..


அவன் தன் கரத்தைப் பிடித்து இழுத்துச் செல்ல அவனுடன் சென்றவள் டயானாவின் தாய் தந்தையிடம் அவன் சொன்னதைக் கேட்ட நிமிடங்களிடமிருந்து மீள முடியாமல் அதிலே உழன்றாள்.


அவள் இன்னும் தான் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் தவிப்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்தாலும் அவனிடம் பேச வேண்டுமே என்ற எதிர்ப்பார்ப்புடன் அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வந்தவளைக் கண்டும் காணாமல் நடந்த கௌசிக்கு இன்னும் தன் மனம் முழுமையாக அவளிடம் தஞ்சமடைந்தா என்று தெளிவு பெறாமல் அவளிடம் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று எண்ணம் அவனுள் வலுப்பெற்றது .


அதை அவளிடம் காட்டாமல் அவளுக்கு இன்ரெஸ்ட்டான கட்டிடத்தின் வேலைபாடுகளைப் பற்றி பேசினான் கௌசிக்ம


ரிஹானா மனம் முழுவதும் கௌசிக் பேச்சிலே சுழன்றாலும் அவன் தான் வந்த வேலையில் அவள் கவனத்தைத் திசை திருப்புவதைக் கவனித்தவளுக்கு அவன் பேசியதைப் பற்றி எதுவும் கேட்க முடியாத சூழல் உண்டாகியது.


அங்கே கட்டிடத்தின் மேலே வரச் சென்றவர்கள் மற்றப் பகுதிகளையும் பார்வையிட்டு அவளிடம் சிலபல கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை வாங்கினான்.


கௌசிக் கட்டிடத்தின் சில நுணுக்கமான விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்ததும் நிகழ் உலகத்திற்கு வந்தவள் அவனிடம் மேலும் பல விளக்கங்களைக் கூறவும் இருவரும் வந்த வேலையில் மும்மரமாயினர்


மாலை வரை அங்கே சுற்றிவிட்டு வெளியே வந்தவர்கள் ''ரிஹானா நாளை வேறு இடம் போவதைப் பற்றி நாளைக்குக் காலையில் சொல்கிறேன்.. நீ எதையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அமைதியாக இரு'', என்று ஒரு முறைக்குப் பலமுறை சொல்லவும் அவளோ தலையாட்டிப் பொம்மைப் போல தலையாட்டினாள் ரிஹானா.


இருவரும் அவரவர் மனம் விட்டு எதுவும் பேசவில்லை ஆனால் மனதிற்குள் இருவருக்கும் ஒரு தாக்கம் இருந்ததை அறிந்து கொண்டவர்கள், இது காலம் முழுவதும் வருமா? என்ற கேள்வி ரிஹானாவின் மனதில் எழும்பியது.


அவளுக்குக் காதல் கல்யாணம் வாழ்க்கை என்று எதிலும் நம்பிக்கையோ நாட்டமில்லாமல் இருப்பவளைக் காதல் வலையில் சிக்க வைக்கும் கௌசிக் இடமிருந்து விலகிவிட வேண்டும் என்று தோன்றியுடன் அதைச் செயல்படுத்த முயன்றாள் ரிஹானா.


அவன் டயானாவின் பெற்றோர்யிடம் சொன்னது மனத்தை உறுத்தினாலும் அதைப் பற்றி அவனிடம் விரிவாகப் பேசிட வேண்டும்.. தனக்கு இதில் எந்த விருப்பமும் இல்லை என்பதை .. ஆணித்தரமாகக் கூறி விட வேண்டும் ….


இல்லையென்றால் அவன் உள்ளத்தில் தேவையில்லாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு நாளை அவனை ஏமாற்றி விட்டேன் என்று எண்ணினால் அதைத் தன்னால் தாங்க முடியாதாக இருந்தாலும்… அவனுக்கு அதனால் வருத்தமும் மனத்தின் வலியும் அவனுக்கு அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் ரிஹானா.


நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் கடவுளின் சித்தம் எது என்பதை யாருக்கும் தெரியாமலே போய்விடுமே… விதியை மாற்ற எந்த கால தச்சனுக்கும் அனுமதில்லை. அதுவும் மானிட பிறப்பிற்கு வாழ்க்கையின் போக்கை திசை திருப்பாமல் விதி வழியே போய் கொண்டே இருக்கிறது .. சிலதை மாற்றவோ அப்படி மாற்றினால் அதனால் வரும் நன்மையோ தீமைகளோ அவர்களையே பாதிக்கத் தான் செய்கிறது.


பலதை தன் போக்கில் யோசித்தபடி காரின் அருகே வந்தவளின் முன் ஒரு நெடிய உருவம் வந்து நிற்க தன்னிச்சையாக இருடி விலகி நிமிர்ந்து பார்த்து நின்றவளோ நின்றவளோ ''ஜேம்ஸ்'', என்று வாய்சைத்து அவனின் முகத்தில் தெரியும் அசூயையான பார்வையை பார்த்து அதிர்ந்து அதிர்ச்சியுடன் நின்றாள் ரிஹானா.


அவள் தன் பெயரைச் சொல்லியதைக் கண்டு பெருஞ் சிரிப்புடன் ''பரவாயில்லையே பெயர் கூட ஞாபகம் வைச்சிருக்க.. அப்ப நான் சொன்ன எல்லாமே ஞாபகத்தில் இருக்கும் தானே… என்று சொல்லிய ஜேம்ஸ் அச்சத்துடன் பார்த்தவளைக் கண்ட கௌசிக் இவன் யார்? என்ற வினாவோடு அவள் அருகில் வந்து எந்தப் பிரச்சினை வந்தாலும் உனக்குத் துணையாக இருப்பேன் என்று வார்த்தையால் சொல்லாதை அவனின் உடல்மொழி உணர்த்தியது கண்டு ரிஹானவின் இதயக் கூடு அதீத துடிப்புடன் எகிறிக் குதித்தது.


தொடரும்..

ஹாய் மக்கா இன்று ud போட கொஞ்சம் லேட்டாகி விட்டதது.. மன்னிச்சுடுங்க 😍 😍 😍 😍
IMG-20230213-WA0016.jpg
 
Top