• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே..7

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
58
28
Karur
அத்தியாயம் ..7


வாகனத்தில் ஏறுவதற்கு வந்த ரிஹானாவின் முன் வந்து நின்ற ஜேம்ஸை கண்டதும் அவள் மனம் அச்சப்பட, அருகினில் வந்த கௌசிகின் துணையால் சிறு பலமும் அடைந்தாலும் இரண்டு கெட்டான மனநிலையில் நின்றிருந்தவளுக்கு, எப்பவும் எந்த பிரச்சினையும் தனியாக நின்று சமாளித்துப் பழகினவளுக்கு இன்று ஏன் இவ்வளவு பயம்? என்று காரணமும் புரியாமல் மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் ரிஹானா.


அவளின் முக மாற்றத்தைப் பார்த்தபடியே கௌசிக் இவன் யார் ரிஹானா? என்ற கேள்வி அவனின் விழியில் தேக்கி நிற்பதைக் கண்டவள், ''இவன்..இவர்.. என் அப்பாவின் இரண்டாம் மனைவியின் தம்பி'',… என்று திக்கித் திணறினாள் ரிஹானா.


''ஹேய், உங்க அப்பாவைத் தான் லாஸ்யா டைவர்ஸ் பண்ணிட்டாளே இன்னும் அதேயே சொல்லி அறிமுகப்படுத்திற.. நமக்குள்ள இருக்கும் உறவைச் சொல்ல வேண்டிய தானே டார்லிங்'', என்று ஜேம்ஸ் கோணலான சிரிப்புடன் சொல்லவதைக் கேட்ட கௌசிக் உடல் இறுகி முகமோ கடினமாயின.


அவனின் கடின தோற்றத்தை உணர்வாலே உணர்ந்தவளுக்கு ஏன் எதற்கு என்று ஐயம் உண்டானாலும், இப்போதைக்கு ஜேம்ஸ் விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பது தான் முக்கியம் என்று தோன்றியுடனே அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் தைரியலட்சுமி குடிக் கொண்டாள்.


''இங்கே பாரு ஜேம்ஸ் உங்க அக்காவே என் அப்பாவை வேண்டாம் சொல்லி விலகியாச்சு, இப்ப நீங்க எதற்கு புதிய உறவோடு வரீங்க'',... என்று கேட்டவள், ''அன்று உங்களுக்கு என்ன பதில் சொன்னானோ அதே பதில் தான் இன்றும்… எனக்கு இந்த காதல் கல்யாணம் எல்லாம் என் வாழ்வில் இல்லை'', என்று அழுத்தமாக உரைத்தவள் அது அருகில் நிற்பவனுக்கும் சேர்த்தித் தான் என்று தன் மனதிற்கும் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டாள் ரிஹானா.


''காதல் கல்யாணம் வேண்டாமா அப்ப பரவாயில்லை இந்த டீலும் ஓகே ரிஹா டியர், நாம் இருவரும் கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழலாமே .. இப்ப எல்லாம் இது சகஜமாக நடக்கிற நிகழ்வுகள் தானே.. எனக்குப் பிடிக்கிற வரை உன்னுடன் சேர்ந்து இருக்கிறேன்.. எனக்கோ இல்லை உனக்கோ சேர்ந்து வாழ்வது பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்'',.. என்றவன் அவளை மேலும் கீழும் துச்சாதனின் பார்வையில் துகிலுரித்துக் கொண்டே ''உனக்கும் இந்த வயதில் தோன்றுகிற ஆசைகளை என் மூலமாகத் தீர்த்துக் கொள்ளலாம்'', என்று வக்கிரமாகப் பேசுவனைக் கண்டு கைகளை ஓங்கி விட்டாள் ரிஹானா..


அதற்கு முன்பே ஜேம்ஸ் கன்னத்தைப் பிடித்த படி இருப்பதைக் கண்டு திரும்பி அருகில் நின்றவனை நோக்க, அவனோ ஜேம்ஸ் அறைந்த கைகளைத் தேய்த்தபடி ரௌத்திரமாக நின்றான் கௌசிக்.


ஜேம்ஸ் தன்னை அடித்தவனைத் திரும்பி அடிக்க கை ஓங்கியவனின் கரத்தை முதுகின் பின்னால் கொண்டு வந்த கௌசிக் அவனின் பின்பக்கம் செவியின் அருகே சீற்றமான குரலில் ''ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் தெரியாதா'', என்றவனின் அதீதமான சினத்தைக் கண்டு ஜேம்ஸ் முகம் பயத்தில் வெளியேறியது .. ஆனாலும் திமிறாக ''அவள் எனக்குப் பிடித்தவள், அவளிடம் எப்படி வேண்டுமானலும் பேசுவேன்.. நீ யார் அதைக் கேட்க.. நீ வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து இங்கே பிறந்து வாழும் என்னிடம் கை நீட்டுவாயா'', என்று ஆத்திரத்துடன் பேசியவன், கௌசிக்கிடமிருந்து திமிறினான் ஜேம்ஸ் .


அவனைத் திமிறி விடாமல் இழுத்துப் பிடித்தவன், ''ஒரு பெண்ணிடம் எப்படி நாகரிகமாக பேசணும் பழகணும் தெரியாத உன்னை'', என்று சொல்லிய கௌசிக் ஜேம்ஸின் கன்னத்தில் அறைந்த வேகத்தில் தடுமாறி விழவும், ரிஹானா கௌசிக்யின் மறு முகத்தினைக் கண்டு அதிர்ந்தாள்.


அவனின் அளவுக்குமீறிய கோபத்தில் அவன் முகமோ சிவப்பேறிய முகம் கறுத்து கண்களில் அனலில் கொந்தளித்துக் கொண்டிருக்க அதைக் கண்டவளுக்கு மனதிற்குள் ஒருவித பயம் உண்டாகி அவனிடமிருந்தே நாலடி தள்ளி நின்றாள்.


''பெண்ணிடம் அத்துமீறினால் என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியாதா?'', என்று கடுமையான குரலில் கேட்டவன், ''இனி ஒரு தடவை ரிஹானாவிடம் இந்த மாதிரி பிஹேவியர் பண்ணினால் உனக்குக் கையும் காலும் உன்னுடைதாக இருக்காது'', என்று சொல்லியவனின் குரலிருந்த கர்ஜனையில் ஜேம்ஸ் உள்ளமும் நடுநடுங்கியது..


அவனை ஒரே தள்ளாகத் தள்ளி விட்டு ரிஹானாவிடம் ''காரில் ஏறு'', என்று உத்திரவிட்டவன், அங்கே இருந்து கிளம்பினார்கள் ..


காரில் ஏறியும் அவன் ஆத்திரம் அடங்காமல் அலைபுற அமர்ந்திருக்க, ரிஹானாவின் முகமோ தெளிவில்லாமல் இருண்டு போயிருந்தது. இவனிடம் தன்னைப் பற்றியும் தன் குடும்ப சூழலுயும் விவரிக்க வேண்டிதாக இருக்கிறதே என்று மனம் குன்றியவள், எதுவும் பேசாமல் மௌனியானாள்.


அவளின் மௌனத்தைக் கண்டு அவளுடைய உள்ளக்கிடங்கில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை களைந்து இறுக்கமான அவளின் முகமும் மனமும் மெலிதான சிறகைப் போல காற்றில் அசைந்தாடும் அழகினை அவளிடம் காண வேண்டும் .. காலையில் குழந்தையோடு குழந்தையாக எப்படி குதூக்கலமாக இருந்தாள்

என்ற எண்ணம் அவனுள் தோன்ற

இந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று தோன்றிய உடனே கௌசிக், ''ரிஹானா'', என்று கூப்பிட, அவளோ அவன் கூப்பிட்டதைக் கூட கவனிக்காமல் தன்னுள்ளே ஒடுங்கிப் போய் இருப்பவளைக் கண்டவனுக்கு மனம் வலித்தது.


''ஹேய் ரிஹானா ,ரிஹா'', என்று சத்தமிட்டு மீண்டும் கூப்பிட..


ஙே… என்று விழித்தவள், ''சொல்லுங்க சார், கூப்பிட்டிங்களா'', என்று தடுமாறியபடி கேட்டவளை ஆதூரமாகப் பார்த்தவன், ''நாளை இங்கே இருக்கிற பூங்காவிற்கு போகலாமா, கட்டிடம் என்று சுற்றாமல் கொஞ்சம் வித்தியாசமான இடமாக இருக்கும்'', என்று சொல்லியவனின் பேச்சில் ''ஒகே ஒகே சார் நாளை அங்கே போகலாம்'', என்று சொல்லியவள் தன் கையிலிருந்த ஹேண்ட் பேக்கின் சிப்பை திறக்க மூட என்று பதட்டமாகவே இருக்கேவே அதைக் கண்டவன் அவளிடம் திரும்பி அமர்ந்தான் கௌசிக்


''லிசன் ரிஹானா, இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எல்லா நாட்டிலும் இருக்க தான் செய்கிறார்கள் … அதைப் பெண்கள் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். இதை எல்லாம் பெரிதாக மண்டையில் ஏற்றிக் கொண்டால் தலைவலி மட்டுமே மிஞ்சும்.. அதை எல்லாம் தாண்டி வர வேண்டும் .. அதுவும் இந்தக் கலாச்சாரத்தில் வாழ்ந்த உனக்கு இது மாதிரி எத்தனையோ பார்த்திருப்பாய்.. அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு பீரியாக இருமமா'', என்று மென்மையாக தன் ஆழ்ந்த குரலில் சொல்லியவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் விழிநீர் தேங்கி நின்றது.


இந்த மாதிரி ஆதரவாக பேசவோ ஆறுதல் சொல்லவோ ஏன், பிரச்சினை வந்துபோது உனக்காக நான் இருக்கிறேன் என்று முன் நின்று அவனை அடித்துத் துரத்தியதோ அவள் வாழ்வில் யாருமே இல்லையே.. சிறு வயதிலிருந்து தனக்காக தானே பார்த்துக் கொள்ளும் நிலை தானே.

அதனாலே அவள் மற்றவர்கள் முன் தைரியமாகவும் தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டாலும் உள்ளுற உள்ள ஏக்கம் அவளுக்கு ஒன்று உண்டு. தன்னையும் ஒருவன் அரவணைத்து தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்ய ஒருத்தர் வர மாட்டாங்களா என்ற மனம் ஏங்கியது.. ஆனால் அதை வெளிப்படையாக எவரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்ப கௌசிக் பேச்சும் செயலும் அவளை மேலும் பலவீனமாக்கியது..


இது எந்த மாதிரியான அன்பு என்பதை அறிய மனம் விளைந்தாலும் இதைப் பற்றி தனியாக தன் மனத்தை சுய அலசல் பண்ண வேண்டும் என்று எண்ணியபடி அமர்ந்திருந்தாலும் அவனுக்கு வேறு எந்தவித பதிலின்றி மௌனமாக தலையாட்டிவிட்டு காரின் ஜன்னல் ஊடுட வெளியே பார்த்துக் கொண்டு வந்தால் ரிஹானா.


நேராக கம்பெனிக்குக் கார் செல்லவும் அவனிடம் வார்த்தைகளின்றி தலையசைத்து விட்டு தன் வீடு நோக்கித் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி வி்ட்டாள் ரிஹானா.


கௌசிக்கிற்கு அவளின் மௌனம் மனத்தை பாதித்தது. அது ஏன் என்று புரிந்தாலும் அதைப் பற்றிய சிந்தனைகளோடு தன் இருப்பிடம் நோக்கிச் சென்றவன், அங்கே இருந்தபடி தன் பாட்டியிடம் பேசினான் கௌசிக்.


அவன் சொல்வதை முழுவதுமாகக் கேட்டவர், ''இது சரி வருமா'', என பலமுறை அவனிடம் கேள்விகளை கேட்டு குடைந்து எடுத்தவர், ''உனக்கு சரி என்றால் நாளை அவளிடம் பேசிவிடு,.. அதற்குமுன் இன்னும் உன் மனத்தை தெளிவு படுத்திக் கொள்'', என்று சொல்லியவர், ''இதைப் பற்றி நான் உன் தாத்தாவிடம் பேசுகிறேன்.. நாளை அவளைப் பார்த்துப் பேசிவிட்டு எங்களுக்குப் போன் பண்ணு'', என்று சொல்ல, ''ஒகே பாட்டி'', என்றவன், ''இதில் உங்களுக்கு வருத்தம் எதுவுமில்லையே'', என்று தயங்கியபடி கேட்டான் கௌசிக்.


''அவரோ நாங்க பழைய காலத்து ஆட்கள் தான் ஆனால் இன்றைய நிலையில் குழந்தைகளின் மனத்திற்குப் பிடித்ததைச் செய்து தர வேண்டிய சூழ்நிலை.. அவரவர் வாழ்வு அவரவர் கையில்… உன் வாழ்க்கையை தீர்மானம் செய்ய உனக்கு முழு சுதந்திரம் உண்டு. அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து முடிவு எடுப்பது மட்டுமே.. நாளை பிடிக்கவில்லை என்று பாதியிலே விட்டுப் போகும் உறவில்லை கடைசிவரை உன்னுடன் வாழ்ந்து வம்சம் தழைத்து இந்தக் குடும்பத்தையும் தாங்கி தன்னுடைய லட்சியத்திலும் ஜெயித்து வரக் கூடிய பக்குவம் அந்தப் பெண்ணிடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.. நீயும் அதை அவளிடம் எப்படி சொல்லிப் புரிய வைக்கப் போகிறாய் என்று தெரியல.. அவளுக்குக் கல்யாணம் காதலில் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறாய், அதனால் நான் ஒரு ஐடியா சொல்கிறேன் அதன் படி செய்'', என்றவர், அவர் சொன்ன ஐடியாவைக் கேட்டு ''சூப்பர் வேது டார்லிங்'', என்று இச் என்று போனில் முத்தமிட, அவரோ ஏ''ய் அவளை நினைத்து எனக்கு கொடுக்கீறியே பேராண்டி'',… என்று பேரனைக் கலாய்த்தவர் சிறிது நேரம் பல விஷயங்களை பேசியவிட்டு போனை வைத்துவிட்டார் வேதவல்லி.


தன் பாட்டியிடம் பேசியதும் தெளிவு ஏற்பட,நாளை ரிஹானாவிடம் எப்படி பேச வேண்டும் என்று முடிவு எடுத்தப் பின் அமைதியாக உறக்கம் கொண்டான் கௌசிக்.


நாளை இவன் எடுத்த முடிவுக்காக அவளிடம் போராடா தலைகீழாக நின்னு தண்ணீ குடிக்க வைக்கப் போறா என்பதை அறியாமல் நிம்மதியாக உறங்கினான் கௌசிக்.

தொடரும்