• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

செம்பூவே...... 2

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:- 4

சிறுவயதில் இருந்தே பூவினிக்கு நிலவனை மிகவும் பிடிக்கும். அவளுக்கு பெரியவனாக அவன் ஒருவனே இருந்ததால் அவளுக்கு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம் அவன் தான்.அவளின் விளையாட்டுத் தோழனும் அவன் தான்.அத்தான் அத்தான் என்று அவன் பின்னால் தான் சுற்றிக்கொண்டிருப்பாள்.

என்ன புதிதாய் வாங்கினாலும் அணிந்தவுடன் ஓடிச்சென்று காட்டுவது அவனிடம் தான்.அது செருப்பானாலும் சரி தான்.உடுப்பானாலும் சரி தான்.அவன் பார்த்து ஹே ...நல்லா இருக்கு.என்று முகம் மலர சொல்லிவிட்டால் அவளுக்கும் அது பிடித்துவிடும்.மாறாக அவனின் முகம் கொஞ்சம் பிடித்தமின்மையை வெளிப்படுத்தினாலே போதும் அவளுக்கும் அந்த பொருள் பிடிக்காது போய்விடும்.

ஒரு சமயம் இப்படித்தான் இவளின் பிறந்த நாளைக்கு இவளின் தந்தை வழிப்பாட்டி கண்மணி அவளின் அத்தை அதாவது பத்மனின் தங்கை கங்கா அவளுக்கு ஒரு ஆடை கொடுத்தனுப்பினார் என்று கூறிக் கொண்டுவந்து கொடுத்தார்.

கங்காவின் குடும்பம் வெளிநாட்டில் இருந்தது.அவருக்கு மித்திரன் என்று ஒரு பையன் மட்டும் தான். கணவருக்கு அங்கு வேலை என்பதால் அவர்கள் குடும்பம் வெளிநாட்டிலேயே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம்.அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி புகைப்படத்தில் முகம் பார்த்த உறவுகள்.

என்ன இருந்தாலும் தந்தை வழி இரத்த உறவல்லவா.அவர் கொடுத்த உடையை அணிந்து கொண்டு நிலவனிடம் சென்றவள் அத்தான் எப்படி இருக்கு?? நல்லா இருக்கா?? அத்தை வெளிநாட்டில் இருந்து கொடுத்து விட்டார்கள் என்றாள். மகிழ்ச்சியுடன்..நிலவனின் முகம் அந்தளவு மகிழ்ச்சியை காட்டவில்லை.ம்ம் நல்லா இருக்கு.என்று கூறிவிட்டு கையில் இருந்த புத்தகத்தின் மீது பார்வையை பதித்தான்.


பூவினிக்கு சப் என்றாகிவிட்டது.முகத்தில் இருந்த மகிழ்ச்சி வடிய ஏன் அத்தான் நல்லா இல்லையா?? என்றாள்.

ம்ம் நல்லா இருக்கு என்று தானே சொன்னேன்??

இல்ல நீங்கள் சும்மா சொல்லுறீங்கள்.உங்களுக்கு இந்த உடுப்பு பிடிக்கேல்ல தான அத்தான்???

ஏன் அப்படி சொல்ற பூவினி??? என்றான் வியப்புடன்.

உங்க முகத்தில தெரியுது உங்களுக்கு பிடிக்கவில்லை என்று..


அப்படி இல்லை பூவினி.இது வெளிநாட்டவருக்கு ஏத்த மாதிரி தயாரித்த உடை.அந்த பண்பாடு கலாச்சாரத்திற்கு இது சரி தான்.ஆனால் இங்கே இந்த மாதிரி இறுக்கமாக குட்டையாக கால்கள் தெரிய உடை அணிவது சரி இல்லைடா.நீ ஒன்றும் இன்னும் சிறு பெண் இல்லை.

நாங்கள் அணியும் உடை பிறருக்கு எங்கள் மீது மதிப்பினை ஏற்படுத்துகின்ற மாதிரி இருக்க வேண்டுமே தவிர அருவருப்பையோ வேறு விதமான உணர்வுகளையோ ஏற்படுத்தக் கூடாது.இப்போது நடக்கும் பெண்கள் மீதான அத்து மீறல்கள் வன்முறைகள் இதற்கு அவர்களின் ஆடை தெரிவுகளும் ஒரு காரணம் தான்.

உன்னுடைய ஒரு நல்ல தோழனாய் வழிகாட்டியாய் இருந்து இதை சொல்லுவது என் கடமை பூவினி.ஆண்களின் பார்வைகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.அடுத்தவரின் கண்களை உறுத்தாத அளவில் உடை அணிந்தால் தேவை இல்லாத பிரசனைகளை தவிர்த்துக்கொள்ளலாம் இல்லையா??

அதற்காக போர்த்துக்கட்டிக்கொண்டு உன்னை செல்லச் சொல்லவில்லை.உன்னை நேர்த்தியாக காட்டும் அதே சமயம் உன் மீது மதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உடைகள் அணி என்று சொல்கிறேன்.என்ன புரிந்ததா??


அந்த பதினைந்து வயது பேதைக்கு அவன் சொன்னது முழுதும் புரியவில்லை ஆனால் ஒன்று புரிந்தது.அது அத்தானுக்கு இந்த உடை பிடிக்கவில்லை.இப்படி இறுக்கமாக குட்டையாக அணிவது பிடிக்காது என்பது.அதன் பிறகு அவள் அந்த உடையை அணியவில்லை.

அவள் பாட்டி கண்மணி கூட ஒன்றிரண்டு தடவை கேட்டுப்பார்த்தார்.
எங்கே பூக்குட்டி அத்தை கொடுத்த சட்டையை நீ போடவே இல்லையா?? என்று

இல்ல பாட்டி அது கொஞ்சம் குட்டையாய் இருக்கு. போட ஒரு மாதிரி இருக்கு. என்று விட்டாள்.
அப்போதும் அவர் விடவில்லை.இன்றைய நாகரீகம் அது தானே என்றவர்.ஒரு கூர்மையான பார்வையுடன் ஏன் யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா?? என்றார்.

இல்லை அப்படி எதுவும் இல்லை பாட்டி. என்று விட்டாள்.நிலவன் இப்படி கூறினான் என்று சொன்னால் அவ்வளவு தான். சும்மாவே அவனை கரித்துக் கொட்டுவார்.
அதுஏனோ தெரியாது.நிலவனை அவருக்கு பிடிக்காது.

பொதுவாக கண்மணிக்கு பூவினியின் அம்மாவின் குடும்பத்தையே பிடிக்காது தான்.ஆனால் அதிலும் நிலவனின் மீது சற்று அதிகமாகவே வன்மத்தை காட்டுவார். பூவினிக்கு அதனாலேயே இந்தப் பாட்டி மீது அதிக ஒட்டுதல் கிடையாது.
பூவினி நினைப்பாள் நல்ல வேளை இந்த பாட்டி தனியே இருப்பது.இங்கேயே இருந்தால் அவ்வளவு தான் என்று.


அவள் நினைப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.கண்மணி தன் மகள் வெளிநாட்டில் இருப்பதால் ஆட்கள் இல்லாவிடில் வீடு பாழடைந்து விடும் என்பதால் மகள் வீட்டைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் தனியே வசித்தார்.ஆனால் மாதத்தில் ஒரு தடவை மகன் வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கிப் போவது அவர் வழக்கம்.அது மகனின் மீதான தன்னுடைய உரிமையை நிலைநிறுத்துவதற்காய் இருக்கலாம்.

அப்படி வந்து நிற்கும் அந்த இரண்டு மூன்று நாட்களும் முடிந்தவரை மேகலாவை வார்த்தையால் வதைத்து அவள் குடும்பத்தை இழுத்து ஏதாவது புரணி பேசாமல் கிளம்ப மாட்டார்.
அதிலும் நிலவன் என்றால் அவருக்கு ஏனோ ஒரு வெறுப்பு அவன் மேல்.அவனை நேரில் கண்டால் வார்த்தையால் சுருக்கென குத்தும் படி ஏதாவது பேசுவதில் அவருக்கு அவ்வளவு இஷ்டம்.அதனால் முடிந்தவரை நிலவன் அவரை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்துவிடுவான்.

ஒரு சமயம் கண்மணி வந்திருப்பதை அறியாது.வழக்கம் போல அத்தை எனக்கு இன்று கேசரி செய்து கொடுக்கிறீங்களா??

என்று வழக்கம் போல பூவினியை வம்பிழுப்பதற்காக அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத கேசரி பெயரை சொல்லிக்கொண்டு போய் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தாளம் தட்டியபடி பூவினியை தேடி விழிகளை சுழற்றியவனின் பார்வையில் விழுந்தது அவனை முறைத்தபடி நின்ற கண்மணி.


நிலவன் சட்டென்று எழுந்து விட்டான்.அதை பார்த்த படியே உள்ளே வந்தவர்.

ஏன் மேகலா உனக்கு அறிவில்லை?? இப்படித்தான் கண்டவனையும் உள்ளே விடுவாயா?? யார் யாரை எங்கே வைக்க வேண்டும் என்ற அறிவு வேண்டாம்??
வயதுப்பெண் இருக்கும் வீட்டில் இப்படியா கண்டவனையும் சமையல் அறை வரை அனுமதிப்பது??? என்று தீக்கங்குகளாய் வார்த்தைகளை அள்ளி வீசினார்.

மேகலாவுக்கு கண் கலங்கிவிட்டது. உள்ளே கோபம் பொங்கி எழுந்தது ஆனாலும் எதுவும் செய்ய முடியாது தவித்தாள்.என்ன செய்வது இன்னொரு குடும்பத்தின் மருமகளாய் போய்விட்டாளே.திருப்பி கோபமாய் ஏதாவது பேசினால் அது வேறு இடத்தில் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மாதத்தில் ஒருசில நாட்களே வந்து தங்கும் தன் அம்மாவை அந்த ஒரு சில நாட்கள் கூட உன்னால் மனம் கோணாமல் பார்த்துக்கொள்ள முடியாதா??? என்று பத்மன் கோபப்படலாம்.என்ன செய்வது இது தான் பெண்களின் தலை எழுத்து.எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாது நாலையும் கருத்தில் கொண்டு நடந்தால் தான்.உறவுகளை இணைத்து வைக்க முடியும்.

ஆனால் அவளின் முழு அன்பிற்கும் உரிய அண்ணன் மகன் அவமானத்தால் முகம் கறுத்து செல்வதையும் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.செய்வதறியாது அவள் திகைத்த அந்த நொடியில் பூவினியின் குரல் கேட்டது.
 
  • Like
Reactions: Krithika ravi