• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"அடிங்க... நானும் பாக்குறேன் ரெம்பத் தான் கத்துறே... கடிப்பேனு சொல்றே... மாமியார்னு கொஞ்சமாவது பயம் இருக்கா உனக்கு... லெஃப்டல விட்டா ரைட்ல திரும்பிக்கும்..." என்று விமலாவும் சவுண்டு கொடுக்க ஒரு நொடி பயந்து அப்படியே நின்றுவிட்டாள் பெண்ணவள்.

'அப்பாடா நாம ஒரு அதட்டு போடவும் பயந்துட்டா... விமலா இப்படியே உன் கெத்தை மெய்ண்டெய்ன் பண்ணிடு' என்று விமலா தனக்குத் தானே பெருமைப்பட்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் பக்கென சிரிக்கும் சத்தம்.... அந்த அறையை நிறைத்தது.
விமலாவோ ப்யூஸ் போன பல்பாக முகம் வாடி தன் மருமகளைத் திரும்பிப் பார்த்து, "அடியேய்... நான் உன் மாமியார் டி... கொஞ்சம் பயந்த மாதிரியாச்சு நடி டி..." என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினார்.

"அது என்ன சொன்னிங்க அத்தே... லெஃப்ட்ல விட்டா.... என்னது அது... ஆஆஆ ரைட்ல திரும்பிக்கும்... ஹாஹாஹா... இது எந்த படத்துல வர டயலாக் அத்தே... நீங்க எப்பவுமே இப்படித் தான் ஜாலியா பேசுவிங்களா???" என்று கேட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினாள்.
"எப்படியோ இன்னைக்கு நைட் எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் கன்ஃபார்ம்..." என்று கூறிக்கொண்டே தன் உடைகளை அடுக்கத் தொடங்கினாள்.

விறுவிறுவென்று அறைக்குள் நுழைந்த பவன் அவள் கையில் இருக்கும் ஆடைகளை பிடிங்கி சூட்கேஸில் போட்டு ஜிப் செய்தான். தன்னவளின் அடிகளையும் குத்துகளையும் இனிமையாக ஏற்றவன், பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
விமலாவின் வாய் மட்டும் தான் வேண்டாம் என்று கத்திக் கொண்டிருந்தது. கைகளோ அப்படியே கொண்டு போய்டு என்று அவனை விரட்டியது.

"அவ பொட்டிய எங்க டா எடுத்துட்டுப் போறே... வைடா இங்கே..."என்றது சாட்சாத் விமலா தான்.
'நல்லவேல பொட்டியத் தூக்கிட்டு போய்ட்டான்' இது விமலாவின் மனசாட்சி.

பெட்டியோடு வெளியே வந்த பவனைக் கண்ட நேத்ரா "டேய் நீ சொன்னா கேட்கவே மாட்டியா டா... அவளை ஃபோர்ஸ் பண்ணாதே பவன்" என்று அறிவுரை வழங்கினாள்.

"சிவா அவ தாத்தா-பாட்டி, அத்தை-மாமா, மூனு முரட்டு முறைப் பசங்கனு பெரிய குடும்பத்துல இருந்து வந்தவ, இன்னைக்கு கண்டிப்பா லோன்லியா ஃபீல் பண்ணுவா... நார்மல் ஹஸ்பண்டா தோளில் சாச்சி உனக்கு நான் இருக்கேனு சொல்லி என்னால சமாதானப்படுத்த முடியாது. அட்லீஸ்ட் என்னை திட்டிக்கிட்டுனாலும் அவ வீட்டை நினைக்காம இருக்க வாய்ப்பு இருக்குல. அதுவும் இல்லாம அவளைத் தனியா ஒரு ரூம்ல வீட்டுட்டு தூங்கினாளா!!! அழுதாளானு நான் யோசிட்டு இருக்கிறதை விட என் பக்கத்துல இருந்தானாத் தான் எனக்கு நிம்மதியா இருக்கும்..." என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றான்.
மிதுன்யா பேய் பிடித்தது போல் மெத்தையில் அமர்ந்து முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தாள்.
மீண்டும் அறைக்குள் வந்த பவன் "இப்போ நீயா நடந்து வரியா? இல்லே உன்னையும் தூக்கிட்டுப் போகனுமா?" என்று அடாவடியாக அவளை நெருங்கினான்.

மேலும் அவளைத் தூக்க கைகளை நீட்டிய பொழுது, "நான் செத்ததுக்கு அப்பறம் சடங்கு செய்றதுக்கு மட்டும் தான் உங்க கை என் மேல படனும். அதுக்கு முன்னே என்னை தொடுறதா இருந்து என்னை ஒரு ஜடமா உங்க மனசுல நெனச்சிகிட்டு தொடுங்க" என்று அமில வார்த்தைகள் அவன் காதுகளை ஸ்பரிசித்திருந்தது.

அடுத்த நிமிடம் முகம் சுருங்கி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பின்னால் நகர்ந்து சுவற்றில் சாய்ந்து நின்றான் பவன்.
வார்த்தைகளால் அமிலத்தைக் கொட்டியவளோ நிமிர்ந்தும் பாராமல் அவனது அறை நோக்கிச் சென்றாள்.

இவ்வளவு நேரம் மகன் மருமகளின் சீண்டல்களை மனமகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த விமலாவிற்கோ இதயம் படபடக்க கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
என்னதான் மருமகளின் மனநிலையை உணர்ந்து அவளுக்கு சப்போர்ட் செய்து அவளின் துணையாக மாறியிருந்தாலும், கலங்கி நிற்கும் தன் மகனின் நிலையைக் காணப் பொருக்காமல் கண்ணீர் வடித்தார் அந்த தாய்.
பவனின் அருகே சென்று தலை கோதிட,

"அவ இன்னும் கோபத்துவ இருக்கா ம்மா... நீங்க கவலைப்படாதிங்க... என்னை மன்னிச்சு ஏத்துப்பா ம்மா..." என்று தன் அன்னைக்கு ஆருதல் கூறுவதாக நினைத்துக் கொண்டு தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
எவ்வளவு முயன்றும் அவன் குரல் கலங்கியதை கட்டுப்படுத்திட முடியாதவன் அங்கிருத்து வெளியேறி தன் தம்பியின் அறைக்குச் சென்றான்.

பயணக்கலைப்பு நீங்க அனைவரும் குளித்து சிறிது நேரம் ஓய்வெடுக்க, விமலா மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தார்.

பவனின் அறையில் 'ரெம்ப பேசிட்டோமே... சும்மாவே நமக்கு பதிலுக்கு பதில் ஏதாவது செய்றவன், இன்னைக்கு அவன் ரூம்ல வந்து வேற மாட்டிக்கிட்டோமே... மிதுன்குட்டி இன்னைக்கு உன்னை உண்டு இல்லேனு பண்ணப்போறான்' என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே நேரத்தைக் கடத்தினாள் மிதுன்யா.

வெகுநேரம் அவனுக்காக காத்திருந்தவள் அலுப்பில் அப்படியே சோஃபாவில் அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போயிருந்தாள்.

சிறிது நேரத்தில் கழுத்தில் ஏதோ குறுகுறுப்புத் தோன்ற விழித்துப் பார்த்தவளின் எதிரே அவளின் மணவாளன் மிக அருகில் அவள் கழுத்தில் வாய் குவித்து ஊதிக் கொண்டு அவளை நகரவிடாமல் பிடித்திருந்த படி குனிந்து நின்றிருக்க,

"என்ன பண்ணுறிங்க?" என்றாள் பெண்ணவள்.

"உன்னை ஜடமா நெனச்சுக்க சொன்னேல... அதுக்கு நான் ரெடி, நீயும் எவ்வளவு நேரம் உன் உணர்ச்சிய வெளிக்காட்டம ஜடமா இருக்கேனு பார்க்க வந்தேன். 'எனக்கு பிடிக்கல என்னை விட்டுடு'னு சொல்றதுக்குனாலும் அறுவறுப்பு உணர்ச்சிய வெளிக்காட்டி தானே ஆகனும். இன்னைக்கு ஃபஸ்ட் நைட் இல்லே... ஃபஸ்ட் டே செலப்ரேட் பண்ணப் போறோம் பேபி..." என்றவன் முரட்டுத் தனமாக அவளின் மேல் சரிந்து, அவளின் இதழ்களை முற்றுகையிட்டு, பால்வண்ண மேனியில் படர்ந்திட,

"ஐயோ... வேண்டாம்..." என கத்திக் கொண்டு எழுந்தாள்.
முகம் முழுதும் வேர்த்திருக்க அறையில் யாரும் இல்லாமல் இருக்கவே அப்போது தான், தான் கண்டது கனவு என்று புரிந்தது.

அறையிலும் அவன் வந்து சென்றதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் இருக்க, 'எங்கே போனான் இன்னு வரல?' என்று யோசித்துக் கொண்டே குளிக்கச் சென்றாள்.
மீண்டும் அவனின் நினைவுகள் அவளை இம்சித்தது. 'ஏன் கனவு அப்படி வந்தது? அவன் மிரட்டுவான் தான், ஆனா இப்படி ச்சீப்பா பிஹேவ் பண்ணமாட்டான். அவன் உன்கிட்ட பேசும் போதும் சரி, மிரட்டும் போதும் சரி உன் கண்ணுக்குக் கீழே அவன் பார்வை இறங்கிருக்குமா யோசி...

அவனைப் போய் இவ்வளவு கேவலமா நெனச்சிட்டியே!!!' என்று தனக்குத் தானே பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் அதற்கு பதில் யோசித்துக் கொண்டும் உடைமாற்றி கீழே இறங்கி வந்தாள்.

நேரே அடுக்களை சென்றவள் அங்கே தன் அத்தம்மா மட்டும் தனித்து சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு,

"கொடுங்க அத்தம்மா நான் காய் வெட்டுறேன். ஆமா இது என்ன இலைதழைய வெட்டிட்டு இருக்கிங்க... இது என்ன? சேலெட் ஆ?" என்றாள்.

"ஆமாடா... உன் புருஷன் இதைத் தான் சாப்பிடுவான்."

"அப்போ சமைக்கிற வேலையே இல்லே... ஜாலி..."

"அது தான் இல்லே... இது காலை உணவு. ஒரு நாள் வெஜ் சேலெட், ஒரு நாள் ப்ரூட் சேலெட், ஒரு நாள் சத்து மாவு கஞ்சி, ஒரு நாள் ஏதாவது ஒரு கலி இப்படி அவனுக்கு மட்டும் தனியா ஏதாவது செய்து தரனும்.

எல்லாருக்கும் சமைக்கிறதே சாப்பிடேன்டானு சொன்னா நானே கட் பண்ணிக்கிறேனு கிட்சனுக்குள்ள வந்துடுவான். இப்போ ஒரு வாரமா அவன் டயட் ஃபாலோ பண்ணலேயாம். அதான் லன்ச் வேண்டாம் இதை செய்து வைங்கனு சொல்லிட்டு போயிருக்கான்."

அவர் கூறியதை சிறிய சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள், இறுதியாகக் கூறியதில் முகம் வாட, "எங்கே போயிருக்காரு?" என்றாள்.

"ஃபர்னிச்சர் கடைக்குத் தான் மிது. திடீர்னு தான் கிளம்பிப் போயிருக்கான். எப்ப வருவான்னு தெரியலே..."

"ரெஸ்ட் எடுத்த மாதிரியோ, ரெஃப்ரெஷ் பண்ணின மாதிரியோ தெரியலேயே!!!? ரூமுக்கு வரவே இல்லே!!!" என்று அமைதியாக வினவிட,

"தெரியலே மா, போகும் போது கமல் ட்ரெஸ்ஸைப் போட்டிருந்தான்... அங்கே தான் படுத்திருந்திருப்பான்னு நெனைக்கிறேன்."

"அத்தே பொம்மிக்கு சாப்பாடு எடுத்துத்தரிங்களா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் நேத்ரா.

அதற்குள் மிதுன்யாவும் சேலெட் வெட்டி முடித்திருந்தாள்.
"அக்கா, வெண்பாக்கு நான் ஊட்டிவிடட்டா?" என்று கேட்க, "சரி... செய்" என்று முகம் மலர்ந்து சம்மதித்தாள் நேத்ரா.

உணவை எடுத்துக் கொண்டு வெண்பாவை அழைக்கச் சென்றாள் மிதுன்யா.

"நல்ல பொண்ணு அத்தே... எல்லாரையும் அனுசரிச்சு நடந்துக்கிறா..." என்று கூறினாள் நேத்ரா.

காலையில் அறைக்குள் நடந்த உரையாடல் யாருக்கும் தெரிந்திருக்காத நிலையில் விமலாவின் மனம் அதனை நினைத்து வெளியே சொல்ல முடியாமல் கலங்கியது.

"பவனை மட்டும் கூட புரிஞ்சு அனுசரிச்சாப் போதும்..." என்று பொதுப்படையாக கூறி நகர்ந்துவிட்டார்.

மதிய உணவுவேளையில் அவனுக்காக காத்திருக்கத் தோன்றினாலும், தன் ஏக்கத்தை எதிர்பார்ப்பை வெளியே காட்டிக் கொள்ள பிடிக்காமல் அமைதியாக உண்டு முடித்தாள் பவனின் மணவாட்டி.

மாலை வீட்டிற்கு வந்தவன் எப்போதும் போல் அன்னையை அழைக்க, பகலில் உறங்கும் பழக்கம் இல்லாத விமலா இன்று கலைப்பில் கூடத்து சோஃபாவிலேயே உறக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன் அமைதியாக அடுக்களை சென்று தனக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்து உண்டு முடித்துவிட்டு மீண்டும் ஷோரூமிற்கு சென்றுவிட்டான்.

தன்னவன் வந்த தடம் தெரியாமல் மீண்டும் சென்றுவிட்டதை அறிந்து கொண்ட மிதுன்யா 'தன்னை தவிர்க்கிறானோ!!! தான் பேசியது தவறோ!!! என்று முதல் முறையாக வருந்தினாள். ஆனால் அவளுள் இருந்த அரக்கி 'அதெல்லாம் ஒரு தப்பும் இல்லே... அவன் செய்த காரியத்துக்கு இது தேவை தான்' என்று அவளைவிட்டு வெளியே வந்து அவளுக்கு அறிவுரை வழங்கிட மீண்டும் தன் குற்றவுணர்வை தூக்கி எறிந்து இயல்பாக இருந்தாள்.

இரவு உணவின் போது வீடுவந்து சேர்ந்த பவன் தன் அன்னைக்கு மட்டும் புரியும் படி கண்ணசைத்துவிட்டு தனதறைக்குச் சென்று ரெஃப்ரெஷ் செய்து கொண்டு வந்து உண்ண அமர்ந்தான்.
தந்தையுடன் தொழில் விவகாரம் பேசிக் கொண்டே உண்டு முடித்துவிட்டு, கமலை "டேய் நாளைல இருந்து கடைக்குப் போ... மறக்காம சிவாவையும் அழச்சிட்டு போ" என்று கூறிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டான்.

அனைவரும் உறங்கச் சென்றப்பின் விமலா மிதுன்யாவை சமையலறைக்குள் அழைத்தார். அவள் இருந்த மனநிலைக்கு எதுவும் யோசிக்கத் தோன்றாமல் தன் அத்தம்மாவின் பின்னே சென்றாள். அவள் முன் ஒரு குல்பி ஐஸ் நீட்டப்பட,

"அத்தம்மா எனக்கு குல்பி ரெம்ப பிடிக்கும் அத்தம்மா... எப்போ வாங்கி வெச்சிங்க... எனக்கு இது தான் பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டு குழந்தை போல் குதுகளித்தவளைக் கண்டு தன் மகனை நினைத்து பெருமைபட்டுக் கொண்டார்.

இருக்காதா பின்னே மிதுக்கு ஐஸ்க்ரீம் வேண்டும் என்று மட்டும் தானே தகவல் தெரிவித்திருந்தார். அவன் உடனே குந்தவிக்கு அழைத்து அவளுக்கு என்ன ஃப்ளேவர் பிடிக்கும் என்று கேட்டு வாங்கி வந்திருக்கிறானே...

ஐஸ்கிரீமை உண்டு முடித்து அறைக்குச் செல்ல, அங்கே பவன் சோஃபாவில் படுத்து உறங்கியும் இருந்தான். மீண்டும் இலகத் தோன்றிய மனதை கடினப்பட்டு அடக்கி படுக்கையில் சென்று படுத்தாள்.

அதன்பின் வந்த நாட்கள் இருவருக்குள்ளும் கண்ணாமூச்சி ஆட்டமாக மாறிப்போனது. அவள் எழும் முன்னே ஜாக்கிங் சென்றுவிட்டு கமலின் அறைக்குச் சென்று குளித்து கிளம்பு கீழே வருபவன் உணவுண்ணும் அந்த ஐந்து நிமிட கேப்பில் தன்னவளுக்குத் தெரியாமல் அவளை ரசித்துக் கொண்டே உண்டு முடித்து ஷோரூம் சென்றான் என்றால், மதியம் அனைவரும் உண்டுமுடித்தப் பின்னறே வருவான்.
எப்போதும் போல் வந்த சுவடு தெரியாமல் மீண்டும் சென்றுவிடுவான். இரவும் அதே போல் ஒரு பத்து நிமிடம் தன்னவளை கண்களில் நிறைத்துக் கொண்டு, அவளுக்கு முன்னதாகவே அறைக்குச் சென்று கண்களை இறுக மூடி படுத்துக் கொள்வான்.
தூங்கியிருப்பானா என்றால் நிச்சயம் இல்லை தான்.

இவ்வாறாக ஒருவாரம் கடந்திருக்க, ரிஸப்ஷனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மிதுன்யாவின் குடும்பம் மதுரை வந்தடைந்தனர்.

லட்சுமணனின் இல்லத்திற்கு நிகராக பெரிய வீடாக இல்லாவிட்டாலும், அனைவருக்கும் வேண்டிய அனைத்து வசதிகளும் இருந்தது கங்காதரனின் இல்லத்தில். ரிஸப்ஷனன்று காலை தான் சுனைனா வருவாதாக இருந்தது. அனைவரும் பரபரப்பாக வரவேற்பிற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க கமல் தான் சுனைனாவை அழைத்துவரச் செல்ல வேண்டியதாகிவிட்டது.
அவனும் ஏர்போர்ட் சென்று காத்திருக்கும் நேரத்தில் செல்ஃபி எடுத்து குந்தவி கொடுத்த எண்ணிற்கு வாட்சப் செய்தான். அடுத்த நிமிடமே மிதுன்யாவும், சுனைனாவும் அணைத்து நின்றார் போல் ஒரு படம் அவன் போனிற்கு வந்தது.

அதற்கும் எதிரே நடந்து வந்தவளுக்கும் ஆயிரம் வித்தியாசம் கண்டுபிடிக்கலாம். அப்படியாக வந்திருந்தாள் சுனைனா... முன்நெற்றியில் புறலும்படியாக வெட்டப்பட்ட முடியும், கர்லிங் செய்யப்பட்ட பின் கூந்தலும், முழங்கால் அளவிற்கு கையில்லாத ஃப்ராக்குமாக, அல்ட்ரா மார்டனாக வந்து நின்றாள் சுனைனா.
அவளைக் கண்டு ஆஆஆவென வாய்பிளந்து நின்றான் கமல். கண்கள் அவளை எடைபோட்டாலும், மனதிலோ 'அடக்கமான அண்ணிக்கு இப்படி ஒரு தங்கச்சியா!!!'என்று நினைக்கவும் தவறவில்லை.

கமலின் முன்னே சொடுக்கிட்டவள், "முன்ன பின்ன ஒரு பொண்ணை பார்த்ததே இல்லேயா? இப்படி ஓப்பனா வாய பொளந்துகிட்டு சைட் அடிக்கிறே..."

"ம்க்கும் உன்னை சைட் அடிச்சிட்டாலும்... அம்மா தாயே... எங்க ஊரு இதெல்லாம் தாங்காது. மதுரை மீனாட்சிய பாக்க வர்ற வெள்ளக்காரிகளையே வேற்று கிரகத்திலிருந்து வந்தது மாதிரி வெச்ச கண்ணு எடுக்காம பாப்பானுங்க... உன்னை சொல்லவே தேவையில்லே... நீ எங்க வீட்டு விருந்தாலி மட்டும் இல்லே. இனிமே எங்க குடும்பத்துப் பொண்ணும் கூடத் தான். அதனால இதை மேல மட்டுமாவது போட்டுக்கிட்டு வா" என்று அவள் சூட்கேஸின் மேல் இருந்த ஜெர்கின்னை எடுத்து அவள் மேனியில் போர்த்திவிட்டான்.

"எனக்கும் இப்படியே வர்ற ஐடியா இல்லே... தாத்தா பாத்தாரு... தோலை உறிச்சி உப்புக்கண்டம் போட்டிருவாரு... முடிஞ்சா உங்க வீட்டு பின் வாசல் வழியா கூட்டிட்டு போ... ட்ரெஸை மாத்திட்டு தாத்தா முன்னாடி வந்து நிக்கிறேன்." என்றாள் சுனைனா.

"எங்க வீட்ல ஒரே வாசல் தான். அதுக்கு மேல உன் பாடு..." என்று கூறி ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டு காரை நோக்கி சென்றான்.
வீட்டில் வந்து இறங்கிட அவளின் உடை முழு உடையாக மாறியிருந்தது. கீழே ஒரு லெங்கின் அணிந்திருந்தாள். பார்ப்பதற்கு அம்பர்லா கட் சுடிதார் போல் தோன்றியது இப்போது.

'அடியேய் கேடி... இதுக்கு தான் அதி முக்கியமான வேலை இருக்குற மாதிரி பின்னாடி உக்காந்துக்கிறேனு சொன்னியா?' என்ற கேள்வியோடு அவளைப் பார்த்தான் கமல்.
அவளோ பெரியோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு கமலைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தாள். இந்தக் காட்சியை பார்க்கக் கூடாத, பார்க்க விரும்பாத கண்கள் பார்த்து கொதித்துக் கொண்டிருந்தது.
இனி என்னலாம் நடக்குமோ!!!!

-ஊடல் கூடும்​
 
Top