• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
திருமணத்தை நேரில் காணமுடியாத குறையை தீர்த்து வைத்திருந்தது இந்த வரவேற்பு.

மாப்பிள்ளை அழைப்பு அதன் முறைப்படி இருபத்தி ஒரு ஆரத்தியும் பெண்வீட்டு சார்பாக மாப்பிள்ளை முறைமையும் செய்தே வரவேற்றனர். கடைசி ஆரத்தியில் தன் மச்சானிடமிருந்து முழு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுக்குப்பிடியாக பெற்றப்பின்னரே மண்டபத்திற்குள் பவனை அனுமதித்தாள் சுனோ....

தாம்பூலம் மாற்றி, அரக்கு நிற தங்கச் சரிகையால் நெய்த பட்டுடன் விமலா மணமகள் அறைக்குள் சென்று, தன் மருமகளுக்கு தானே தன் கையால் பட்டு உடுத்திவிட்டு கைபிடித்து மேடை அழைத்து வந்தார்.

பவனும் கோட் ஷூட்டில் இருந்து வெளிவந்து பட்டு வேட்டி, சட்டைக்குள் தன்னைப் புகுத்தியிருந்தான்.

ரோஜா இதழ் மாலை மிதுன்யாவிற்கு விமலாவும், பவனுக்கு சுஷேணும் அணிந்துவிட, மேடையில் சாமங்கி மாலை பவனும் மிதுன்யாவும் மூன்று முறை மாற்றிக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஓர் இதயத்தை இரண்டு கைகள் பிடித்துக் கொண்டிருப்பது போன்று, அதாவது ஒரு கை இதயத்தை கொடுப்பது போலவும் மற்றொரு கை இதயத்தை பெறுவது போலவுமான வைரக்கல் பதித்த தங்க மோதிரத்தை ஒருவருக்கு ஒருவர் அணிவித்தனர்.

அதன்பின் இதய வடிவ திறந்து மூடக் கூடிய லாக்கெட்டில் ஒருபுறம் பவனும் மறுபுறம் மிதுன்யாவும் இருப்பது போல் தங்கச் சங்கிலி ஒன்றை தன் மணவாட்டிக்கு அணிவித்தான் காதல் கணவன்.

எந்த சூழ்நிலையிலும் பவனின் கைகள் மிதுனைத் தீண்டிடாமல் பார்த்துக் கொண்டான் பவன். ஏனோ வாரணாசி வரவேற்பில் இருந்த உற்சாகம் இதில் குறைந்திருந்தது இருவருக்கும்.

பவனின் கண்கள் இந்த முறை மறந்தும் கூட மனைவியின் பக்கம் திரும்பிடவில்லை. இதனை முதலில் உணர்ந்து கொண்டது மூத்தத் தலைமுறையான லட்சுமணனும் மலையரசியும் தான். இது பற்றி இருவரிடமும் பேச வேண்டும் என்று நினைத்திருந்தனர் அந்த அனுபவம் நிறைந்த தம்பதிகள்.

இரவு உணவு, இட்லி சட்னி சாம்பார் என்று பாரம்பரிய உணவும் அதனுடன் வெஜ் பிரியர்களுக்கு சாம்பார் ரசம் மோர், ஐந்து வகை காய்கறிகள், சேப்பக்கிழங்கு வறுவல் என்றும் நான்-வெஜ் பிரியர்களுக்கு ஆட்டின் அனைத்து பாகங்களுடன், கோழி வறுவல் என அனைத்தும் வாழைஇலையில் பந்தி பரிமாறி விருந்தாக படைக்கப்பட்டது. பரிமாறும் வேலையில் இளவட்டாரங்களான கமல், சுனோ, ஆரவ், அபி என நால்வரும் கலந்து கொண்டனர். கமல் எப்போது போல் சுனோவிடம்

"நீ ஏன் இங்கே வேலையை பார்த்துட்டு இருக்கே? அண்ணி கூட போய் உட்காரு..." என்றிட,

"நான் ஒன்னும் வேலையப் பார்க்க வரலே..." என்று தன் பார்வையை அபியின் புறம் திருப்பிட,

"எத்தனை தடவை சொன்னாலும் கேட்குறதா இல்ல???..."என்று அவள் தலையில் குட்டு ஒன்றை வைத்துவிட்டு சென்றான்.

இங்கே இப்படி என்றாள் வெளியே ராம் கூடவே சுற்றித் திரிந்த வெண்பா அவனை தாஜா செய்து சிலபல சாக்லெட்களை உள்ளே தள்ளியிருந்தாள். இரவு உணவு ஊட்டிவிடுவதற்காக அவளைத் தேடி வந்தாள் நேத்ரா.

"பொம்மி...." என்ற அன்னையின் சத்தம் கேட்ட அடுத்த நிமிடம் கையில் இருந்த பெரிய டைரிமில்க் ட்ரீட் சாக்லெட்டை வாயில் திணிக்கப் போராடிட, அதில் பாதி மட்டுமே உள்ளே சென்றது. மீதம் கையில் இருந்ததை ராமின் வாயில் திணிக்கிறேன் என்று அவன் கன்னம் முதற்கொண்டு பாழ்படுத்தியிருந்தாள் சிறுமி.

குழந்தையைக் கண்டு அங்கே விறைந்து வந்த நேத்ரா இருவரின் வாயும் சாக்லெட் நிறைந்திருப்பதைக் கண்டு வெண்பாவை முறைக்க, சிறுமி கீழே கிடந்த கவரை மீண்டும் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதனைக் கண்ட நேத்ரா 'டைரிமில்க்.... யாரு தந்திருப்பா!!! வேற யாரு எல்லாம் இந்த மைதா மாவு வேலையாத் தான் இருக்கும்' என்று நினைத்துக் கொண்டு ராமை முறைக்க,

சிறிது நேரம் அந்த பார்வையை தாங்கி நின்றவன், 'என்ன விடாம மொறச்சிக்கிட்டே இருக்கா!!!... இப்போ ஓட வைக்கிறேன் பாருடி....' என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளை ஆழப்பார்வை பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டிட, அவன் எதிர்பார்த்தது போலவே முகத்தை திருப்பிக் கொண்டு வெண்பாவைத் தூக்கிட கைநீட்டினாள்.

வெண்பா அவளிடம் செல்ல மறுக்க, "அம்மா கிட்டே போ... ஒன் மோர் சாக்கி வாங்கித் தாரன்..." என்று வடஇந்தியனுக்கே உள்ள தனி ஸ்டைலில் ராம் தமிழில் மொழிந்திட, அவனை பிரம்மிப்பாக பார்த்தாள் நேத்ரா.

வெண்பாவோ மேலும் ஒரு மிட்டாய் கிடைக்கப் போகிறது என்ற உற்சாகத்தில் அவன் கன்னத்தில் முத்தம் வைத்திட இப்போது அவன் கன்னம் முழுதும் நன்றாகவே சாக்லேட் ஒட்டிக் கொண்டது. தன் செல்லப்பிள்ளையின் முத்தம் தனக்கு கிடைக்கவில்லையே என்ற பொறாமையும் கோபமுமாக அவன் கன்னத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளை சீண்ட நினைத்து,

"உனக்கும் சாக்லேட் வேணுமா? இந்தா சாப்பிடு" என்று தன் கன்னத்தை அவள் முன் நீட்டினான்.

அதனை கற்பனையில் கண்டவளுக்கு தன் ரத்தம் சூடாகி காதுகள் சிவப்பதை உணர முடிந்தது. இருந்தும் தென்னக நிறம் அதனை மறைக்க உதவிட, முகத்தில் எந்த உணர்வும் காட்டிக் கொள்ளாமல் வெண்பாவை உள்ளே அழைத்துச் சென்றாள்.

குழந்தைக்கு உடைமாற்றி முகம், கை, கால் அளம்பிவிட்டு, வேறுஉடை மாற்றிவிட்டு உணவு உண்ணும் இடம் நோக்கி அழைத்துச் சென்றாள்.

கைகழுவும் இடத்தில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த ராம், உணவுக் கூடம் சென்று கொண்டிருந்த நேத்ராவையும், வெண்பாவையையும் தான் பார்த்து பரவசப்பட்டுக் கொண்டிருந்தான்.

வரவேற்பு முடிந்து இரவு அனைவரும் வீடு வந்தடைய கங்காதரன், தன் சம்மந்தி குடும்பத்தோடு சேர்த்து ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் தன் கையாலேயே பூசணி, எலுமிச்சை மற்றும் தேங்காய் கொண்டு திருஷ்டி சுத்திப் போட்டார்.

அன்று தன் பேரனுக்காக மிதுன்யாவைத் திட்டிய பாட்டி தான் இன்று அந்த பேத்திக்காக பவனின் முன் வந்து நின்றார்.

வெளிவராண்டாவில் கமலுடன் பேசிக் கொண்டிருந்த பவனிடம் மலையரசியை அழைத்து வந்தாள் சுனைனா. "பவன் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்... நீங்க ஃப்ரீயா இருக்கும் போது என்னை பார்க்க வரிங்களா?" என்று வினவினார் மலையரசி.

அவரை கைபிடித்து அழைத்து இருக்கையில் அமரவைத்து... "நீங்க எப்போ பேச நெனச்சாலும், இங்கே வாடா பேரானு கூப்பிட்டா ஒடனே வந்திடுவேன் பாட்டிமா... நானும் உங்க பேரன் தானே.. உரிமையா பேசுங்க... ஏன் பெர்மிஷன் கேக்குற மாதிரி கேட்குறிங்க...." என்றான்.

இடைபுகுந்த சுனோ... "என்ன ஆச்சி!!!! புதுமாப்பிள்ளைக்கு எப்படி குடும்பம் நடத்தனும்னு சொல்லித்தர போறிங்களா? அப்போ நானும் இங்கே தான் இருப்பேன்... நானும் கேட்டு வெச்சிக்குறேன்..." என்றிட,

"ஏய்... வாயாடி போ அந்த பக்கம்... அவங்க ஏற்கனவே எப்படி பேசுறதுனு சங்கடப்பட்டுகிட்டு இருக்காங்க... நீ வேற நேரம் காலம் தெரியாம லூசு மாதிரி பேசுறே... டேய் கமல் கூட்டிட்டு போ டா..." என்றான் பவன்.

"சரி தான் போங்க மச்சான்... எனக்கு எங்க அக்கா இருக்கா... அவகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிறேன்..." என்று கூறிவிட்டு சென்றாள் அந்த வாயாடி...

'சரி தான்... சரியான ஆளு தான்' என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன் தலையில் தட்டிக் கொண்டான்.

"நீங்க என்ன சொல்ல வந்திங்க பாட்டிமா...?" என்று மலையரசியை தூண்டினான்.

"மிதுன்யா கொஞ்சம் செல்லமா வளர்ந்த பொண்ணு தம்பி. உங்களை அனுசரிச்சு போங்கனு சொல்றதுக்காக இப்போ நான் வரலே... அன்னைக்கு ரெண்டு பேரும் ஊரே பொறாமை படுற அளவுக்கு அன்னியோனியமா இருந்திங்க... இன்னைக்கு அது இல்லாம பார்க்கவே ஏதோ குறையா தெரிஞ்சது. அதுக்கு உங்களை குத்தம் சொல்லலே... எந்த பிரச்சனை வந்தாலும் ஒருவார்த்தை பெரியவங்ககிட்ட சொல்லி வெச்சிங்கனா கொஞ்சம் பக்குவமா சொல்லி அவளை அனுசரிச்சி இருக்க சொல்லுவோம்... ஏதாவது ஏடாகுடமா பேசியிருந்தா மனசுல வெச்சிக்காதிங்க...." என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே...

"பாட்டிமா உங்களுக்கும், பாட்டையாவுக்கும் சண்டை வந்தா யாரு மொதோ சமாதானம் பேசுவாங்க?"

"உங்க தாத்தா கோபமா இருந்தா நான் அவருக்கு பிடிச்சதை சமைச்சி பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து பரிமாறுவேன். அதிலேயே கொஞ்சம் கோபம் உங்க தாத்தாவுக்கு கொறைஞ்சிடும்...."

"நீங்க கோபமா இருந்தா பாட்டையா எப்படி சமாதானம் செய்வாறு? அதை மொதோ சொல்லுங்க..."

இந்த வயதிலும் மலையரசிக்கு வெட்கம் வந்திட "அதே போய் இப்போ கேட்டுக்கிட்டு... சும்மா இரு பேரான்டி..." என்று புன்னகையுடன் மலுப்பினார்.

"அட சொல்லுங்க பாட்டிமா.... உங்ககிட்ட கேட்டு போய் நான் என்ன பாட்டையாவை கேலி செய்யவா போறேன்... நாளைப் பின்ன எனக்கும் உதவும் ல..." என்று இழுத்து ஏற்ற இறக்கத்துடன் கூறினான்.

மலையரசியும் சிரித்துக் கொண்டே வெட்கத்தை அடக்கிக் கொண்டு வேறுவழியில்லாமல் கூறினார். "கல்யாணம் ஆன புதுசுல நான் சமையல் செய்தா அம்மி அரைக்கனுமா சொல்லு அரச்சுத் தரேனு வந்து நிப்பாங்க, கொல்லப்பக்கம் கிணத்துல தண்ணி இறைக்கப் போனா இங்க கொடுனு வாங்கி அவங்களே எறச்சிக் கொடுப்பாங்க..... அப்பேலாம் அவங்காளா வந்து பேசும்போது என்னை மகாராணி போல தாங்குறாங்கனு சந்தோஷமா இருக்கும்.

வயசு போச்சுனா அதோட சேந்து எல்லாம் போயிடும்னு நெனப்பேன். ஆனா வருஷம் போனப் பின்னாடியும் மாறவே இல்லே... துணி துவைக்க உக்காந்தா 'என்ன கிழவி உக்காந்து எந்திரிக்க முடியுமா? நான் வேணா தொவச்சி தரட்டானு கேட்டு வம்பு பண்ணுவாங்க.... இப்போ தான் பேரனுங்க முன்னாடி இந்த வம்பெல்லாம் செய்யாம இருக்காங்க, மகன் மருமகள், மருமகன் யாரையும் கண்டுக்கிட மாட்டாங்க...." என்று கூறினார்.

"கெடச்சது வாய்ப்புனு நீங்களூம் எல்லா வேலையும் பாட்டையாகிட்ட தள்ளிடுவிங்க!!!" என்று அவனும் அவன் பங்கிற்கு வம்பு செய்தான்.

"அது தானே முடியலே... மனசு கேட்காதே... அடுத்தெல்லாம் குச்சி ஒன்றை பக்கத்துல வெச்சிக்கிட்டு தான் வேலை செய்யவே ஆரம்பிப்பேன். பக்கத்துல வந்தா அடிதானு சொல்லி மிரட்டுவேன். அப்படி மிரட்டும் போது தான் பெரிய பேரன் ராம் இருக்கானே, எட்டாவதோ ஏழாவதோ படிச்சிட்டு இருந்தான். அவங்க தாத்தனயே மிரட்டிடேனு கோபத்துல என் கையில இருந்து குச்சிய உருவி ஒடச்சி தூர எரிஞ்சிட்டான்.

உங்க பாட்டையாவுக்கு கோபம் அப்படி வந்திடுச்சி... அவருக்கு எங்க சண்டைக்குள்ள யாரு வந்தாலும் பிடிக்காது. என் பொண்டாட்டி நான் சண்ட போட்டேன், இப்போ சமாதானப்படுத்துறேன் நீங்க யாரும் தலையிட வேண்டாம்னு சொல்லி மத்தவங்க வாயே அடச்சிடுவாங்க.

புத்தி கெட்ட மனுஷெ மொதோ முறையா பேரனை அடிக்க கை ஓங்கிட்டாரு. அதை நெனச்சி வாய் வார்த்தையா சொல்லலேனாலும் மனசளவுல நிரைய வருத்தப்பட்டாரு. அதுல இருந்து நானும் கோபிச்சிக்கிறது இல்லே... அவங்களும் சேட்டைய கொறைச்சி வயசாகிடுச்சினு சும்மா பேருக்கு சொல்லிக்குவாங்க...." என்று கூறி முடித்தார்.

வீட்டின் முதல் பேரன், சிறுவயதில் பேரனை தன் நெஞ்சில் ஏற்றி விளையாடவிட்டு பார்த்து மகிழ்தவர், பேரனின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்பவர், தன் பேரனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காதவர், தன் அடுத்த வாரிசு அவனைக் கை ஓங்கியிருக்கிறார் என்றால் மனைவியின் மீது அதைவிட அதிகக் காதலா!!!! என்று நினைத்தவன் தானும் இதே போல் இறுதிவரை ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று ஒருநொடி ஆசை கொண்டு இறைவனை வேண்டினான்.

மேலும் இந்த பத்து நாளில் அவள் இருக்கும் பக்கம் கூட தான் செல்லாதது நினைவில் வந்து அவனை சாடியது. அவளும் இந்த வீட்டில் தான் இருக்கிறாள் என்பதற்கு அடையாளமாக ஒருமுறைகூட, தான் அவளை நடத்திடவில்லை என்பதும் புரிந்தது. பார்க்கும் போதெல்லாம் செய்த தவறுக்கு சாரி சொல்லவில்லை என்றாலும், சாப்பிட்டேயா? எதுவும் வேண்டுமா? எங்கேயும் போகனுமா? இந்த மாதிரி கேள்விகள் கூட அவளிடம் கேட்கவில்லையே என்று வருந்தினான். இப்போதே தன் மனையாளைக் காண வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

"சரி பாட்டிமா நான் என் பொண்டாட்டிய பார்த்துட்டு வரேன்." என்று கூறி எழுந்தவனை கைபிடித்து அமர்த்தி,

"அவளை இப்போ எதுக்கு பார்க்கனும்?" என்று பதட்டமாக வினவினார்.

இருக்காதா பின்னே.... இன்று இரவு முகூர்த்தம் குறித்துக் கொடுத்திருக்கார் ஜோசியர். இவ்வளவு நேரம் முடியவே முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்தவளை, சும்மா ஒரு சம்பிரதாயத்திற்கு தான் என்று கூறி சரிக்கட்டி அல்லவா அவளை அழங்கிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவன் அங்கே சென்றான் என்றால் இவன் என்ன அதகளம் செய்வானோ!!! என்று எண்ணியே அவனை தடுத்து நிறுத்தினார் மலையரசி.

"அவ என் மேல கோபமா இருக்கா பாட்டிமா, அதான் பாட்டையா ஸ்டைல்ல அவளை சமாதானப் படுத்தப் போறேன்." என்று மீண்டும் எழுந்தான்.

'அடேய் கூறுகெட்டவனே!!! அவரை மாதிரி சமாதானம் செய்தா மட்டும் போதுமா? அடுத்து நடக்க வேண்டியதும் நடக்கனுமே... அதுக்கு இன்னும் ரெண்டு பேரும் ரெடியாகவே இல்லேயே...' என்று மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டு.

"இப்போ எல்லாரும் அவளைச் சுத்தி தான் இருப்பாங்க, நைட் உங்க ரூமுக்கு தானே வருவா... அப்போ வேற மாதிரி சமாதானம் செய்துக்கோ...."

"வேற மாதிரினா எப்படி பாட்டிமா?... அதுவுமில்லாம அவ ரூமுக்கு வரதுக்கு முன்னாடி நான் படுத்து தூங்கிடுவனே!!!" என்று உண்மையாகவே அவர் கூறும் அர்த்தம் புரியாமல் மெய்யுறைத்தான்.

"கெட்டது குடி..." என்று தலையில் கை வைத்த மலையரசி, "டேய் ராசா.... இதுக்கு மேல என்னால சொல்ல முடியலே.... நீ உன் பாட்டையாகிட்டயே ஐடியா கேட்டுக்கோ" என்று அங்கிருந்து எழுந்து சென்றார்.

சிறிது நேரம் யோசித்தவனுக்கு அப்போது தான் விளங்கியது பாட்டி என்ன கூறினார் என்று... 'ஐயோ பாட்டிமா... இங்கே அது தானே பிரச்சனை.... அவளைத் தொடுறதுக்கே எப்படி சமாதானப் படுத்தனு தெரியாமத் தானே நான் முழிச்சிட்டு இருக்கேன். இதுல அடுத்துக் கட்டத்துக்கு நான் எப்படிப் போவேன்....' என்று புலம்பினான்.

'என்ன ஆனாலும் சரி இன்னைக்கு நைட் அவகிட்ட பேசிட வேண்டியது தான்.' என்று நினைத்துக் கொண்டவன் எல்லோரும் உறங்கச் செல்லும் வரை காத்திருந்தான். இருந்தும் அவனின் மித்து கண்ணில் படவில்லை என்றவுடன், தன் அன்னையிடம் வினவ, அவரோ "நீ உன் ரூம்முக்கு போ அவ வருவா" என்று மட்டும் கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

சரி என்று தனதறைக்குச் சென்றவன் அறையின் அலங்காரத்தைக் கண்டு திகைத்து நின்றான். மனதிலோ 'அவளுக்கு மட்டும் இது தெரிஞ்சா என்னலாம் பேசி என்னை கொதறப் போறாளோ தெரியலேயே... இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லை போல... எதுக்கு வம்பு...நாம் எப்பவும் போல சோஃபாவில் படுத்துக்குவோம்' என்று நினைத்து எப்போதும் போல் படுத்துக் கொண்டான்.

அவனையடுத்து உள்ளே நுழைந்த மிதுன்யாவோ சோஃபாவில் படுத்திருப்பவனைக் கண்டு 'இன்னைக்கு கூட ஒரு பத்து நிமிஷம் காத்திருக்கமாட்டாராமா? ஆளுக்கு முன்னே குப்புறபடுத்து குரட்டை விடுறதைப் பார்' என்று தனக்குள் திட்டிக் கொண்டு மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ராமிடம் இருந்துகொண்டு வரமாட்டேன் என்று மறுத்த வெண்பாவை தூங்கியப்பின் அழைத்துச் செல்லவாத கூறியிருந்தாள் நேத்ரா. அவனது அறைக்குச் சென்று பார்க்க அபியை ஒரு மடியிலும், வெண்பாவை ஒரு மடியிலும் படுக்க வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான் ராம்.

வெண்பாவைத் தூக்கச் செல்ல சிறுமியோ கொஞ்சம் முரண்டு பிடித்து கைகளை உதற அது சரியாக அபியின் மேல் பட்டவுடன், அவனோ வெண்பா அவனை தூங்க விடாமல் தொல்லை செய்வதாக நினைத்து, "சித்தப்பாவே தூங்க விடு பாப்பு" என்று கண்ணைத் திறக்காமல் உரைத்தான்.

அதில் விக்கித்து நிமிர்ந்த நேத்ரா, ராமை சுட்டெரிக்கும் பார்வை பார்க்க, "அ... அ... அது வந்து... சோட்டூ தூக்கத்துலே உளறுரான். வேற ஒன்னு இல்லே..... அவனுக்கு வேற எதுவும் தெரியவை தெரியாதே..." என்று அவன் கூறிய விதத்திலேயே அவன் சொல்வது பொய் என்று அவளுக்குப் புரிந்தது.

அபியை மெதுவாக தலையணையில் படுக்க வைத்துவிட்டு, "வெண்பாவ நான் தூக்கிட்டு வந்து படுக்க வைக்கிறேன்" என்றான்.

"இல்லே... வேண்டாம்" என்றுவிட்டு மீண்டும் வெண்பாவைத் தூக்க, இப்போது நன்றாக கை காலை உதறினாள் சிறுமி.

அதில் நேத்ராவில் சரியாக பிடிக்கமுடியாமல் போக, வெண்பாவை தன் கைகளுக்குள் கொண்டுவந்த ராம் "காம் டௌன் பேபி... காம் டௌன்... காம் டௌன்...." என்று வெண்பாவின் தலை கோதி காதில் மென்னையாகக் கூறிட சிறுமியும் அமைதியாக அவன் தோளில் சாய்ந்து உறங்கினாள்.

"வா..." என்று கூறி நேத்ராவின் கைகளை வம்படியாக இறுகப் பிடித்துக் கொண்டு கீழே அழைத்துச் சென்றான். நேத்ராவின் அறையில் வெண்பாவை படுக்க வைத்துவிட்டு, சிறிது நேரம் உறங்கும் குழந்தையின் அழகை ரசித்துவிட்டு எழுந்து நேத்ராவிடம் சென்றான்.

இவன் எப்போதடா வெளியே செல்வான், ஒருமூச்சு அழுது தீர்த்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டு நேத்ரா அறை வாயிலிலேய நின்றிருந்தாள். அவள் முகத்தைக் கண்டு மனதைப் படித்துவிட்டது போல் அவள் அருகே சென்று,

"ஹேய்... தரு.... அவ குழந்தை டி... அவளுக்கு உன்னைத் தான் டி பிடிக்கும்.... என்கிட்ட எத்தனை முறை சொல்லிருக்கா தெரியுமா?" என்று அவன் கூறுவதைக் கேட்வளுக்கு தன்னையும் மீறி சிறிய கேவளுடன் இரண்டு துளிக் கண்ணீர் கன்னம் தாண்டி இறங்கிக் கொண்டிருந்தது.
"தரு..." என்று அவன் கண்ணீரைத் துடைக்கச் செல்ல, அவன் கையைத் தட்டிவிட்டு, "நீங்க கிளம்புங்க.... நான் இனி பார்த்துக்கிறேன்...." என்று இரண்டு வரியைச் சொல்லி முடிப்பதற்குள் கழுத்து எலும்புகள் துரித்துக் கொண்டு இரண்டு மூன்று கேவள்கள் வெளிவந்திருந்தது.
"தூக்கத்துல எழுப்பினதுக்குத் தான் வெண்பா உன்கிட்ட வரமறுத்தானு உனக்கும் தெரியும் தானே... நீ இப்படி அழுதா என்னால எப்படி என் ரூமுக்கு போக முடியும் சொல்லு.... அழாதே டி..." என்று மென்மையாகக் கூறினான்.
"நான் அழுதா உங்களுக்கு என்ன? அதான் என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டிங்கல்ல... இல்ல இன்னு இது பத்தாதுனு நிரந்தரமா பிரிக்க நினைக்கிறிங்களா?" என்று கோபமும் அழுகையுமாக வினவினாள்.

அவளின் கேள்வியில் கோபம் கொண்டவன் அவளின் தாடையைப் பிடித்து தன் கண்களைக் கானச் செய்து "என்னை பார்த்தா அந்த பொறுக்கி மதன் மாதிரி தெரியுதா என்ன?" என்று எதிர்கேள்வி கேட்டான்.
மதன் என்ற பெயரைக் கேட்டதும் ஒரு நொடி அவள் மனதில் அச்சம் பரவியது. அதனை தன் கை வழியே உணர்ந்து கொண்டவன், அவளை அணைத்து "நான் இருக்கேன் டி.... நீ ஏன் பயப்படுறே!!!..." என்று வார்த்தையால் தைரியம் அளித்து தன் அணைப்பால் பாதுக்காப்பு உணர்வைக் கொடுத்திருந்தான்.

-ஊடல் கூடும்​
 
Top