• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
வெகுநேரம் தன் அறையில் ஹரித்ராவின் நினைவுகளோடு அழுது கொண்டிருந்தவளை தட்டி எழுப்பி தன் மடியில் சாய்த்துக் கொண்டார் விமலா... விமலாவின் ஸ்பரிசத்தில் நேத்ராவின் கதறல்கள் அழுகையாகக் குறைந்து, கேவல்கள் விசும்பல்களாக மாறி அடங்கியும் போனது. அவள் தன்னை சமன்செய்து கொள்ளும் வரை காத்திருந்து,

"சிவா ம்மா... நீ இப்படி ஏங்கி அழுது மூனு வருடம் ஆச்சு... ஹரிக்குட்டி இழப்பை நெனச்சு அழுதே... அதற்கு பிறகு பல அவமானங்களும், அவபெயர்களும், பலர் உன் முகத்திற்கு நேரே அசிங்கப்படுத்தி பேசினபோதும் கூட நீ கலங்கலே... இப்போ ஏன் இவ்வளவு அழுகை? யாரை இழக்குறதா நினைக்கிறே? நம்ம பொம்மியவா? அல்லது யாரை இழக்கக் கூடாதுனு நினைக்கிறே? ராம்கிரனையா?" என்று அவளின் மனசஞ்சளத்தை போக்கிட நினைத்து வினவினார் விமலா...

நேத்ரா ஏதும் கூறிமல் அமைதி காத்திட, "சரி... நான் எதுவும் கேட்கலே... உனக்கு எப்போ விருப்பமோ அப்போ சொல்லு..." என்று கூறி அவள் தலைகோதினார்.

சிறிது நேரம் கழித்து "அத்தை தலை வலிக்குது. கொஞ்சம் எண்ணெய் தேய்த்து தலை பின்னிவிடுறிங்களா?" என்றிட,

"ம்ம்ம்..." என்று மட்டுமே பதில் கூறினார் விமலா.

அவரின் முன் ஒரு மொடாய்யை இழுத்துப்போட்டு அமர்ந்தவள் அவரிடம் எண்ணெய்யை நீட்டிட, விரல்களில் தொய்த்து மசாஜ் செய்துவிட்டு ஜடைபின்னிவிட்டார். நேத்ரா எழுந்து, கொண்டை போடுவதற்கு தன் பின்னலிட்ட கேசத்தை முறுக்கிட அந்த நேரம் சரியாக உள்ளே நுழைந்தாள் வெண்பாவை.

"அம்மா..." என்று அழைத்து துள்ளி வந்தவளின் கையில் ராம் கொடுத்த பார்பி இருந்தது.

"அம்மா... இப்படியே இருங்க, இது தான் அழகா இருக்கு... இந்த டால் மாதிரி... டாலி மாமி.." என்று இடை தாண்டி நீண்டிருந்த கூந்தலைக் காட்டி கூறிவிட்டு, கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சினாள்.

"இந்த டால் அழகா இருக்கே... யாரு வாங்கி கொடுத்தா பவி அங்கிளா?"

"இல்லே... ராம் ப்பா" என்றிட விமலாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

முதலாவது அதிர்ச்சி என்னவென்றால் பொம்மிக்கு ராமை 'அப்பா' என்று அழைக்க யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்!!! என்பது.

இரண்டாவது வெளியே சென்ற குழந்தை ராம் கொடுத்ததாக ஒரு பொம்மையுடன் வந்திருக்கிறாள் என்றால் ராம் இங்கே எப்படி!!! என்பது.

மூன்றாவது நேத்ராவின் இத்தனை நேர அழுகைக்கு ராம் தான் காரணமா!!! இவளையும் நேரில் சந்தித்து பேசியிருப்பானோ!!! இவள் ஏங்கி அழுகும் அளவிற்கு என்ன கூறியிருப்பான்? என்பது.

நான்காவது தன்னிடம் இதனை ஏன் மறைக்க வேண்டும்!!! சிவா மனதிற்குள் கள்ளத் தனம் வந்து குடியேறிக் கொண்டதா? ஆனால் அழுவதற்கு என்ன இருக்கிறது.

இத்தனைக் கேள்விகளும் ஒரு நிமடத்தில் அடுக்கடுக்காக அவர் மனதிற்குள் தோன்றிட, விமலா நேத்ராவின் மேல் ஆராய்ச்சிப் பார்வையை செலுத்தினார். அதனை உணர்ந்து கொண்டாலும் நிமிர்ந்து பார்க்காமல் வெண்பாவின் மீது கவனம் இருப்பது போல் பாசாங்கு செய்தாள் நேத்ரா.

சிறிது நேரத்தில் பவனும், மிதுன்யாவும் அறைக்குள் நுழைய, எவர் பார்வையையும் எதிர்க்கொள்ளும் சக்தியின்றி,

"நான் பொம்மிக்கு சாப்பிட எடுத்துட்டுவரேன்" என்று கூறி நழுவிட நினைத்தவளை தடுத்து நிறுத்தினாள் மிதுன்யா.

"அது என்னோட வேலை அக்கா... நான் பார்த்துக்கிறேன்... நீங்க இருங்க..." என்று கூறி வெண்பாவுடன் அடுக்களை நோக்கிச் சென்றாள் மிதுன்யா.

மிதுன்யா நாசுக்காக நேத்ராவுடன் பேசுவதற்கு தனிமை கொடுத்துச் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த பவனிற்கு தன்னவளை இன்னுமே அதிகமாக காதலிக்கத் தூண்டியது. தன்னிடம் சிறுபிள்ளை போல் நடந்து கொண்டாலும் உண்மையில் அதிக பொறுப்புணர்வு கொண்டவள் என்று நினைத்து கர்வம் கொண்டான்.

மிதுன்யா வெண்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவுடன், தன் கைப்பையில் இருந்து ராம் கொடுத்த மதனின் வாக்குமூல பத்திரத்தை எடுத்து பவனின் கையில் கொடுத்துவிட்டு,

"இதுக்கு மேல நீயே பார்த்துக்கோ" என்று கூறிவிட்டு, விமலாவின் புறம் திரும்பி,

"அத்தை உங்ககிட்டேயும், மாமாகிட்டேயும் நைட் இதைபத்தி கண்டிப்பா சொல்றேன். உங்க ரூமுக்கு வரேன். இப்போவே தெரிஞ்சுக்கனும்னா பவன்கிட்ட கேட்டுக்கோங்க... ப்ளீஸ்" என்று கூறி சமையலறைக்குச் சென்றாள்.

அங்கே வெண்பா உணவு மேசையின் மேல் அமர்ந்திருக்க, மிதுன்யா அருகில் நின்று வெண்பா தானாக தேநீர் கரண்டியில் எடுத்து உண்பதற்கு பழக்கிக் கொண்டிருந்தாள். வெண்பாவும் மிதுன்யா கூறும் கதைகளைக் கேட்டுக்கொண்டே பாதி உணவை காலி செய்திருந்தாள்.

"மிது..." என்று அழைத்துக் கொண்டே நேத்ரா உள்ளே நுழைந்திட,

அங்கே இப்போழுது நேத்ரா வருவாள் என்று எதிர்பார்த்திடாத மிதுன்யா, "ஹாங்... சொல்லுங்க அக்கா... என்ன ஆச்சு? ஏன் வந்துட்டிங்க?" என்றாள்.

"நான் பேச வேண்டியது அவங்ககிட்ட இல்லே... உன்கிட்ட தான்..."

"என்கிட்ட என்ன பேசனும்!!? எதுவா இருந்தாலும் சொல்லுங்க அக்கா..."

"உனக்கு என்மேல கோபம் இல்லேயா?"

மிதுன்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. "எதற்கு?" என்று நேத்ராவிடமே கேட்க,

"இல்ல... அது... அது வந்து... நான்... " என்று வார்த்தைகளை முழுங்கி முழுங்கி கூறிட, நேத்ராவின் கைகள் தன்னையும் அறியாமல் ராம் அடித்த அவள் கன்னத்தை வருடியது.

மிதுன்யாவிற்கு நேத்ரா 'என்ன கேட்க முனைகிறாள்?, ஏன் தயங்குகிறாள்!' என்று புரிந்திட,

"ஓஓஓ... அதுவா!!! கொடுத்து வாங்கினிங்களா? இல்லே வாங்கிட்டு கொடுத்திங்களா?" என்று ஒருவரை ஒருவர் அறைந்து கொண்டதை விளையாட்டாகக் கேட்டிட, மெல்லியதாக சிரித்தாள் நேத்ரா...

"ஏதோ கோபத்துல அடிச்சிட்டேன். நான் சாரி சொன்னதா சொல்லிடுறேயா? ப்ளீஸ்"

"அட போங்க அக்கா... உங்களுக்கு ஃபோன் பண்ணினா நான் கோபமா இருக்கேன்னு சொல்லிடுங்க..." என்றிட

நேத்ராவிற்கு சற்று பதற்றம் நம்மால் இருவருக்குள்ளும் ஏதும் மனஸ்தாபம் வந்துவிட்டதோ என்று. வேகமாக "ஏன்?" என்றாள்.

"பின்னே... வெண்பா குட்டிக்கு மட்டும் அழகான பார்பி டால், எனக்கு அதுக்கு சிஸ்டர் டால் கூட வாங்கிட்டு வரலே... ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சுனு சொல்லி எஸ்கேப் ஆகிட்டாங்க, அடுத்தமுறை சிக்கட்டும் அவங்க பாக்கெட்டை காலி செய்து என் ரூம்மை ஃபில் பண்ணுறேன்." என்று கண்களை சுருக்கி கோபம் போல் கூறினாள்.

இதனைக் கேட்டவுடன் நேத்ராவிற்கு மேலும் சிரிப்பு தான் வந்தது. வெண்பா அதற்கும் ஒருபடி மேலே சென்று,

"சித்தி, நாம ரெண்து பேரும் ஷேர் பண்ணி விளையாடலாம். நெக்ஸ் தைம் அப்பா வரும்போது உங்களுக்கும் டால் வாங்கிட்டு வருவாங்க, அப்படித் தானே ம்மா?" என்று மிதுன்யாவிற்கு ஆறுதல் கூறிவிட்டு, சப்போர்ட்டிற்கு தன் அன்னையையும் அழைத்தாள்.

நேத்ராவோ "இரண்டு பேர்ல யார் பேபினு தெரியலே..." என்று சிரித்துக் கொண்டே கூறிட,

"இரண்டு பேரும் தான்." என்று கூறி வெண்பாவுடன் ஹைபை செய்து கொண்டாள் மிதுன்யா.

மதியவேளை நேத்ராவைத் தவிர மற்றவர்களுக்கு மகிழ்வாகவே கழிந்திட, இரவு உணவு முடித்துக் கொண்டு நேத்ரா, கங்காதரன் மற்றும் விமலாவிடம் அவர்கள் அறையில் பேசி முடித்துக் கிளம்பும் போது,

"என் முடிவு என்னைக்கும் மாறாது மாமா... இதுல உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் தானே!!!" என்றிட, அவர்களும் அறைகுறை மனதோடு சம்மதம் தெரிவித்தனர்.

தனதறைக்கு வந்து வெண்பாவை அணைத்துக் கொண்டு படுக்க ஒருபுறம் நிம்மதியாக இருந்த போதும் மறுபுறம் ராமின் நினைவுகள் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொண்டது.

இதோ பறந்து சென்றுவிட்டது இருபது நாட்கள். இன்று ஹியரிங். கனத்த மனதோடு பவனுடன் நீதிமன்றம் வந்து நின்றாள் நேத்ரா.

எப்போது அவளை ஏளனமாக பார்த்து சிரிக்கும் மதன் இன்று தலைகுனிந்து தன் லாயரின் அருகில் நின்றிருந்தான்.

இருவரும் தங்கள் தரப்பு வழக்கறிஞரை சந்திக்கச் செல்ல, "எஸ் மிஸ்டர் பவன் கல்யாண், அந்த மதன் கேஸை வாப்பஸ் செய்ததாக எப்படி எழுதிக் கொடுத்தான்? ஜட்ஜ் அவன்கிட்ட பணம் கொடுத்தாங்களா? மிரட்டினாங்களா?னு கேட்டு ஆமானு சொல்லிட்டா, அப்பறம் நாம் ஜெயிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். அப்படி எதுவும் சொல்லமாட்டான் தானே!!" என்றிட, இருவருக்கும் பயம் கொஞ்சம் தொற்றிக்கொண்டது.

ராமிற்கு இது போன்ற சந்தேகங்கள் இல்லை. ஏனென்றால் அவன் செய்த வேலை அப்படி. ஆனால் அவன் நினைவுகளில் நிரைந்திருந்தவள் அவனை இம்சை செய்து கொண்டிருந்தாள்.

'என்ன நடந்திருக்கும்? இந்நேரம் தீர்ப்பாகியிருக்குமே!!! தீர்ப்பு இவர்கள் பக்கம் வந்திருக்குமா? ஒரு வார்த்தை ஃபோன் செய்து சொல்கிறாளா பார். திமிர் பிடிச்சவள்' என்று நினைத்தநேரம் அவன் இதழ்கள் சிரித்தன. அதனைக் கண்ட அபி,

"வாட் ஹாப்பன் பையா?" என்றிட, "நத்திங்" என்று உர்ரென்ற முகத்தோடு பதில் கூறிவிட்டு தன் வேலையில் முனைந்தான்.

ராமின் செயல்கள் அபிக்கு சிரிப்பு மூட்டிட, சிரித்தும்விட்டான்.

"என்ன டா!!! எதுக்கு இந்த சிரிப்பு? வந்த வேலையை பார்த்துட்டு உன் இடத்துக்குப் போ... ஆபிஸ்ல வேலை பார்க்க வந்தேயா? இல்லே இளிச்சிட்டு உக்காந்திருக்க வந்தேயா?" என்று கடுமையான கோபத்தில் இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு திட்டிக் கொண்டிருந்தான்.

சரியாக அவனது திறன்பேசி சிணுங்கிட, அதில் தெரிந்த அவனின் ராட்சசியைக் கண்டு மீண்டும் மென்னகையாக விரிந்த சிரிப்பைக் கண்டுகொண்ட அபி இப்போது ஆரவ்வின் தலையில் தட்டி,

"ஆரவ் பையா ஆபிஸ்க்கு என்ன இளிக்கிறதுக்கா வந்திங்க வேலையப் பாருங்க.!!!" என்றிட,

அபி கூறியது காதில் விழுந்த போதும், ஏதோ போனிலேயே கவனம் இருப்பது போல் போன்னை ஆன் செய்து காதில் வைத்து "ஹலோ... ஹலோ... ஒன்னும் கேட்கலே... ஹலோ..." என்று கூறிக்கொண்டே வெளியே எழுந்து சென்றான்.

"இப்போ மட்டும் காது கேட்காதே!" என்று சத்தமாகவே முணங்கினான் அபி.

"தாங்க் யூ சோ மச் ராம்" என்று கலங்கிய குரலுடன் கூறிய மறுநிமிடம்,

"உன் தாங்கஸ்-ஐ நீயே வெச்சுக்கோ... எனக்கு வேற வேணும்..." என்று இரட்டை அர்த்தத்தில் தான் ஆரம்பித்தான் அவள் என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்பதற்கு,

அவனின் பதிலில் ஒரு நொடி உறைந்தாலும் "வாட்?" என்று அதிர்ச்சியாக வினவினாள்.

"ஹேய்... இப்போ எதுக்கு இவ்ளோ ஷாக் ரியாக்ஷன்!!! நான் என்ன, அன்னைக்கு நீ எனக்கு தர்றேன்னு சொன்னதையா கேட்டேன். நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா கூட போதும்!!!" என்று அவளை வம்பு வளர்க்க வேண்டியே வினவினான்.

அவனின் இடக்கு மடக்கான கேள்வியில் சிக்கிடாமல் தப்பிக்க, "நான் வெக்கிறேன்..." என்று அவள் இணைப்பை துண்டிக்க நினைக்க, இதற்கு முன்னால் ஒருமுறை அவன் கோபம் கொண்டது நினைவில் வர, மீண்டும் காதில் வைத்து அமைதியாக இருந்தாள்.

சிறிது நேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவள் இன்னும் ஃபோனை கட் செய்யவில்லை என்றவுடன் தனக்குள்ளாகவே புன்னகைத்துக் கொண்டான் ராம். அந்த மௌனமே இருவருக்குள்ளும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவள் செய்ய தயங்கினாள் என்றால், அவள் தன்னை புரிந்து நடந்துகொள்கிறாள் என்று அவன் மகிழ்ந்தான்

-ஊடல் கூடும்​
 
Top