மாலை இல்லம் வந்து நின்ற ராம், நேத்ரா மற்றும் வெண்பா மூவரையும் கண்டு ஆச்சரியம் அடைந்தார் பூங்கொடி.
வாசலில் வைத்தே லட்சுமணன் தன் பேரனிடம் "என்னடா ஒரு வாரம் இருந்துட்டு வர சொன்னா மூனே நாள்ல வந்து நிக்கிறே?" என்று வினவிட,
"வந்தவங்களை வாசலில் நிற்க வைக்காம முதலில் ஆரத்தி எடுத்து உள்ளே அழைச்சிட்டு போங்க" என்று மலையரசி சத்தம் கொடுக்க, ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர், பூங்கொடியும், மீனாட்சியும்.
மலையரசி குளித்துவிட்டு வந்து பூஜையறையில் விளக்கு ஏற்றுமாறு கூறிட,
பணியாட்கள் இருவரின் உடைமைகளை ராமின் அறைக்கு எடுத்துச் செல்ல, ராம் வெண்பாவை தூக்கிக் கொண்டு முன்னே சென்றான்.
நேத்ராவிற்கு தான் தவிப்பாக இருந்தது. அனைவரும் பழக்கமானவர்கள் என்ற போதும் விருந்தாளியாக இந்த இல்லத்தில் தங்கியவரை ஒன்றும் தோன்றிடவில்லை. இப்போது அத்துவான காட்டில் தவிக்கவிட்டது போல் இருந்தது. ஒருவேளை ராம் 'நான் இருக்கிறேன் உனக்கு. என்னோடு சேர்ந்து இந்த பெரிய குடும்பத்தில் இன்ப, துன்பங்களை பகிர்ந்து வாழ எனை நம்பி வா' என்று சிறிய கண்ணசைவு காட்டியிருந்தால் கூட தைரியமாக இருந்திருக்குமோ என்று எண்ணவும் தவறவில்லை அவள்.
ராமைப் பின்பற்றி அவன் பின்னால் சென்ற பெண்ணவள் அவன் அறையைக் கண்டு அதற்கும் மேல் விழி பிதுங்கி நின்றாள். அவனின் அறையே குட்டி வீடுபோல் இருந்து. சமையலறை இல்லாத ஒன்று தான் குறை. அறைக்குள்ளேயே சிறிய கூடம், அதனை அடுத்து படுக்கை அறை, பக்கவாட்டில் அலுவலக அறையும் புத்தக அறையும், வாட்ரோப்புடன் கூடிய உடைமாற்றும் அறை, அதனுடன் இணைந்த குளியல் அறை, இது போக ஒற்றை படுக்கையுடன் ஒரு தனி அறை என கூடத்தோடு சேர்த்து ஐந்து அறைகள் இருந்தது.
அறைவாயிலில் நின்று மலங்க மலங்க விழித்துக் கொண்டு நிற்பவளை, எப்படி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது என்று தெரியாமல் அவளையே பார்த்திருந்தான் ராம். எப்போதும் போல் பேசியிருந்தால் இந்நேரம் இந்த வரவேற்பு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் கண்டவனுக்கு அதற்கு எதிர்மாறாக இருந்தது உண்மை.
இல்லத்தில் நுழையும் போது தோளணைத்தும், அறைக்குள் நுழையும் போது இடையணைத்தும், அவள் தன்னை மறந்து நிற்கும் போது கையில் ஏந்திக்கொண்டும் இந்த நெருக்கம் இறுதிவரை இருவருக்குள்ளும் இருக்கும் என்று சொல்லமல் சொல்வது போல் அசத்தியிருந்திருப்பான் தான்...
அனைத்தும் கற்பனையாகவே முடிந்துவிட, நிகழ்வுக்கு வந்து அவளையும் இயல்புக்குக் கொண்டுவர,
"உள்ளே வாட்ரோப்பில் உனக்கான சேலை வெண்பாவிற்கான உடை எல்லாம் இருக்கு. அது போக என்ன வேணுமோ அதை மட்டும் எடுத்து வெச்சிட்டு குளிக்கப் போ. மற்றதெல்லாம் பிறகு எடுத்து வெச்சிக்கலாம். பாட்டி விளக்கேற்ற சொன்னாங்கல்ல... சீக்கிரம் குளிச்சிட்டு கீழே போ..." என்று கூறிட, வெண்பாவை அழைத்துக் கொண்டு உடைமாற்றும் அறைக்குச் சென்றாள்.
மாலை மங்கள இசையுடன், பத்தி வாசனையும் வீடெங்கும் நிறைந்திருக்க, வெண்பா கைக்கு அடக்கமான மணி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் அன்னையுடன் ஒவ்வொரு இடமாகச் சென்று குமஞ்சம் மனம் பரப்பினாள்.
அடுத்தாக அடுக்களை நுழைந்து பாலைக் காய்ச்சிவிட்டு, பச்சரிசி மாவை கொழுக்கட்டை உருட்டி, அதனை கொதி நீரில் வேத வைத்து அதில் கருப்பட்டி பாகு, தேங்காய்ப்பூ, ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிட்டு பால் கொழுக்கட்டை செய்து அனைவருக்கும் பரிமாறினாள்.
ராம்..... நேத்ரா மற்றும் வெண்பா வீட்டிற்குள் நுழையும் வைபவத்தை பணியால் ஒருவரின் உபயத்தில் தன் ஃபோனில் பதிவு செய்தவன், அதன் பின் ஒவ்வொரு செயலையும் தன் திறன்பேசியில் பதிவு செய்து கொண்டாலும் ஏதோ அவன் கவனம் முழுதும் வெண்பாவின் மேல் மட்டுமே இருப்பது போல் காண்பித்துக் கொண்டான்.
இரவு இல்லம் திரும்பிய அபிக்கு ராம் மற்றும் நேத்ரா வந்திருப்பது ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக இருக்க, சோஃபாவில் அமர்ந்திருந்த ராமையும் தாண்டி உணவுமேசையில் பதார்த்தங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேத்ரா தான் முதலில் மூளையில் உறைத்தாள்.
"அண்ணி நீங்க எப்போ வந்திங்க? இவ்வளவு சீக்கிரம் உங்களை நான் எதிர்பார்க்கலே... ஜர்னி நல்லா வசதியா இருந்ததா? இல்லே சிரமமா இருந்ததா? எல்லாம் ஓகே தானே? வெண்பா போர் அடிக்கிதுனு தொல்லை செய்தாளா?" என்று அவன் போக்கில் கேட்டுக் கொண்டிருக்க,
"அப்பாஆஆஆ... கொஞ்சம் மூச்சுவிட்டுகோ அபி... ஆல் செட்... ஈவ்னிங் தான் வந்தோம்... ஃப்ளைட்ல பொம்மி என்னை எந்த தொல்லையும் செய்யலே..." என்ற மறு நிமிடம்
இங்கே நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருந்த ராமிடம் இருந்து மீதி பதில் வந்தது.
"இருக்காதா பின்னே... வெண்பா போர் அடிக்குதுனு சொன்னது என்கிட்ட தானே... சோட்டூ!!!... நானும் அதே ஃப்ளைட்ல தான் வந்தேன். என்னை ஒரு வார்த்தை நல்லா இருக்கனானு கேட்க வேண்டாம், அட்லீஸ்ட் திரும்பி பார்த்திருக்கலாம். அதுவும் இல்லை... மோர்ஓவர் ஃப்ளைட்ல வெண்பா என் மடியில் தான் அமர்ந்து வந்தாள். ஆனால் குழந்தை சமத்தா இருந்ததானு உன் அண்ணிகிட்ட கேக்குறே... உனக்கு உன் அண்ணி தான் அவ்ளோ முக்கியமா போய்ட்டால்ல? இருக்கட்டும்... நாளைக்கு கம்பெனில என்கிட்ட தானே வந்து நிக்கனும்... அங்க வெச்சு கவனுச்சுகிறேன் உன்னை..." என்று மிரட்டுவது போல் கூறிட,
"பையா" என்ற அழைப்புடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து தன் அண்ணனுக்கு கை அமுக்கிவிட்டு ஐஸ் வைத்துக் கொண்டிருந்தான்.
இரவு உணவு முடித்து அனைவரும் உறங்கச் செல்ல, பயணக்கலைப்பு காரணமாக சீக்கிரமாகவே உறங்கியிருந்த வெண்பாவைத் தூக்கிக் கொண்ட ராம் தன்னவளையும் அழைத்துக் கொண்டு தன் அறையில் இருந்த ஒற்றைப்படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த படுக்கையில் வெண்பாவை படுக்க வைத்துக் கொண்டே,
"இது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ரூம். ஒரு வயதிற்கு மேல் பிள்ளைகள் தனியா படுக்க விரும்பினாலோ அல்லது படிப்பதற்கு தனிமை வேண்டினாலோ யூஸ் பண்ணிக்க தான் இந்த ரூம். நீ விரும்பினால் உனக்கு ஏத்த மாதிரி மாத்திக்கோ. இந்த ரூம்ல வேற என்னென்ன தேவைனு பார்த்து சொல்லு, நாளைக்கு எல்லாம் செய்து கொடுத்திடுறேன்... இன்னைக்கு ஒருநாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ..." என்று கூறிவிட்டு, தன் படுக்கைக்குச் சென்றிருந்தான்.
வெண்பாவின் அருகே படுத்தவளுக்கு துக்கம் நெஞ்சை அடைக்க, தூக்கம் மருந்துக்கும் கூட இல்லாமல் போனது. ஒருமூச்சு அழுது ஓய்ந்திட நினைத்தாலும், இந்த இருபது நாளில் அழுது அழுது கோழையாக மாறிப்போன தன் மேல் கோபம் தான் வந்தது. சுயகழிவிரக்கத்தை தூக்கி எரிந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினாள். யோசனையிலேயே இரவும் கடந்துவிட்டது.
தூக்கம் இல்லாததால் காலை நேரமாகவே எழுந்து குளிக்கச் சென்றுவிட்டாள் நேத்ரா. ராமும் தூக்கமற்று மெத்தையில் உருண்டவன் அவள் எழுந்து செல்வதையும் கவனித்துவிட்டு 'மேடம் பேக் டு ஃபார்ம் வராங்க போலயே!!! ஓ மேடம்னு சொல்லக் கூடாதுல... தருனு தான் சொல்லனுமாம்... என் செல்ல ராட்சசி, பிடிவாதக்காரி, திமிர் பிடிச்சவ' என்று மனதில் நினைத்துக் கொண்டு புன்னகைத்துவிட்டு நிம்மதியாக உறங்கினான்.
கொஞ்சமே கொஞ்சமாக தன் அலங்காரத்தை முடித்துக் கொண்டு சமையலறை நோக்கிச் சென்றாள் நேத்ரா. அவள் வந்து நிற்பதைக் கண்ட பூங்கொடி, காலையில் தோட்டத்து மலர்களைப் பறித்துக் கட்டிய பூவை அவள் தலையில் வைத்துவிட்டார்.
தேநீர் கலக்கச் சென்றவளைத் தடுத்த மீனாட்சி,
"நேத்ரா இங்கே எல்லாரும் சாப்பிடும் போது தான் டீ குடிப்பாங்க... அதனால மத்தவங்களுக்கு கடைசியா போட்டுக்கலாம்... உனக்கு மட்டும் இப்போ காஃபி போட்டுத் தரவா?" என்றிட,
"வேண்டாம் அத்தை... நானும் எல்லாரும் குடிக்கும் போதே குடிக்கிறேன்..." என்று கூறினாலும்
தன்னவனுக்கு தேநீர் கொடுக்க செல்லும் சாக்கில் அவனிடம் சில விசயங்களைப் பேச நினைத்திருந்தவள், இனி அதற்கான நேரம் பார்த்து இரவு வரை காத்திருக்க வேண்டும் அதுவும் வெண்பா தூங்கும் வரை என்று நினைத்து முகம் சுருங்கினாள்.
அதனை தவறாகப் புரிந்து கொண்ட மீனா, "நான் சொன்னது உனக்கு எதுவும் வருத்தமா நேத்ரா?" என்றிட,
"அப்படியெல்லாம் இல்லே அத்தை, நான் ராம்-ஐ எழுப்ப வேண்டியிருக்குமோனு தான் யோசிச்சேன். மத்தபடி எந்த வருத்தமும் இல்லே... வேற என்னென்ன பழக்கங்கள் இருக்கு?" என்று அவரிடம் சகஜமாக பேசிக்கொண்டே வேலையை கவனித்தாள்.
புதுபெண்ணை எப்படி எல்லாம் வம்பிலுப்பார்கள் என்று தெரிந்திடாத மங்கையவள் சமாளிப்பதாக நினைத்து உளறி வைக்க, மீனாட்சி கேலிப் பேச்சில் இறங்கினார்.
"ஓஓஓ... காலைல டீயோட வந்து எழுப்பிவிடுனு ராம் சொன்னானா? அது தெரியாம உன்னை தடுத்துட்டேனே!!! மார்னிங் பூஸ்ட் அப் நீ அவனுக்கு கொடுக்கனுமா? இல்லை அவன் உனக்கு கொடுப்பானா? ஒருவேளை ரெண்டுபேரும் கொடுத்துப்பிங்களோ!!!" என்றிட,
ஒருநிமடம் அவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல் விழித்திட, பூங்கொடி உதவிக்கு வந்தார்,
"மீனு இந்த கேள்விய சின்ன மருமகள் அமிகிட்ட கேட்டு மட்டும் பாரேன்!!!... நீயே வெட்கபடுற அளவுக்கு பதில் சொல்லுவா... அப்பறம் நாம தான் காதை மூடிக்கனும்..." என்று சிரித்துக் கொண்டே பதில் கூறிவிட்டு, நேத்ராவிடம்
"இந்தா டீ... போய் அவனை எழுப்பிவிடு, மீனா உன்னை வம்பு பண்ணதான் அப்படி கேட்டா... உன் புருஷனை கவனிக்க வேண்டியது உன் வேலை... நாங்க கிண்டல் பண்ணினாலும் நீ செய்ய நினைக்கிறதை கூச்சப்படாம செய்... அது தான் எங்களுக்கும் பிடிக்கும்.. சரியா!!" என்று கனிவாகக் கூறி அனுப்பி வைத்தார்.
ராமிடம் என்னென்ன பேச வேண்டும் என்று தன் மனதிற்குள் உருபோட்டுக் கொண்டு, தேநீரோடு அறைக்குள் நுழைந்திட, அங்கே அவனது படுக்கையில் அவன் இல்லை. ஒருவேளை எழுந்து குளிக்கச் சென்றுவிட்டானோ என்ற யோசனையோடு, குளியலறை பக்கம் செல்ல கதவு வெளியே தாளிடப்பட்டிருந்தது.
வெண்பாவின் சிரிப்பு சத்தம் கேட்டு அங்கே சென்று பார்க்க, வெண்பா ராமை, தன் மடியில் படுக்க வைத்து கழுத்தில் சிரிப்புமூட்டுவது போல் செய்திட, அவனும் விழி திறவாமலேயே தூங்குவது போலவும், குழந்தை கூச்சமூட்டுவதில் விழித்துக் கொண்டு வராத கூச்சம் வருவது போல் நடித்து சிரித்து குழந்தையை குஷிப்படுத்தினான். இதனைக் கண்டவளுக்கு தானும் அவர்களுடன் இணைந்து விளையாடும் ஆசை ஏற்பட்டாலும் வலுக்கட்டாயமாக அதனைத் தவிர்த்து, வெண்பாவை அழைத்தாள்.
"பொம்மி குட் மார்னிங்..." என்றவளின் குரலில் காளையவனும் கண் திறந்து பார்க்க,
"குட் மார்னிங் டாலி மாமி(mommy)..." என்று அழகாய் சிரித்து எழுந்து வந்து நேத்ராவின் கன்னத்தில் முத்தமிட்டு,
"அம்மா நானும் என்னோட பார்பி டாலுக்கு இன்னைக்கு ஃப்ளெவெர்ஸ் வெச்சு விடவா? உங்கள மாதிரி அழகா?" என்றிட,
"ம்ம்ம்... வைக்கலாமே... இப்போ ப்ரெஷ் பண்ணிட்டு வா?" என்றிட சந்தோஷமாக தாவி குதித்துச் சென்றாள்.
வெண்பா அங்கிருந்து செல்லவும் தன்னவனை திரும்பிப் பார்க்க, அவளைக் கண்டு ரசனையாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு, ஒற்றைக்கண் சிமிட்டினான் அவளவன். ஏனோ அதனைக் கண்டதும் அவளுக்கு கோபம் தான் வந்தது.
தன்னையும் பொம்மியையும் தனியாக தூங்கச் சொல்லிவிட்டு, காலை தான் எழுந்து சென்றபின் பொம்மியோடு விளையாடியதோடு, இப்போது மட்டும் ஏன் கண்ணடிக்க வேண்டும் என்ற கோபம் தான் அவளுக்கு.
"டீ கொண்டு வந்திருக்கேன்... குடிக்க வாங்க?" என்று கோபத்தோடு விரைப்பாகக் கூறிவிட்டு முன்னறைக்குச் சென்றுவிட்டாள்.
அவளைத் தொடர்ந்து ஐந்தடி இடைவெளியில் பின்னால் வந்தவன்,
"நாளைல இருந்த ரூமுக்கு டீ கொண்டுவர வேண்டாம்... நான் கீழே வரும்போது குடிச்சிக்கிறேன்." என்ற பதிலில் காரணமே இன்றி கோபம் அதிகமாகியது அவளுக்கு.
கொண்டு வந்த டீயை சூடையும் பொருட்படுத்தாது, அவளே முழுமையாக குடித்து முடித்து,
"இன்னைல இருந்தே கீழே வந்து குடிச்சுக்கோங்க..." என்று சிடுசிடுத்துவிட்டு, வெண்பாவிற்கு பல்துலக்க உதவி செய்து அவளையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றுவிட்டாள்.
அவள் வெளியேறிச் சென்றதும், 'யப்பா என்னமா கோபம் வருது!!! சரியான சில்லி ஸாஸ்...' என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.
நேத்ராவோ அறையை விட்டு வெளியேறியப் பின் தான், தான் எதற்காக வந்தோம் என்று நினைவு வர, 'அய்யோ.... இவன் படுத்துறபாடுலே எதுக்கு வந்தேன்னே மறந்துட்டனே!! இப்போ திரும்ப போய் பேசவும் முடியாது... திரும்பவும் நைட் வரை காத்திருக்கனும்... உன்னை யாரு சிவா நேரங்கெட்ட நேரத்துல கோபப்பட சொன்னது?' என்று தன்னைத் தானே கடிந்து கொள்ள, உள்ளிருக்கும் மற்றொரு மனசாட்சியோ,
'அது சரி நானாவா கோபப்பட்டேன்... அந்த மைதாமாவு செய்த வேலை தான் எல்லாம். நேத்துவரை என்மேல கோபமா இருந்தவன் அப்படியே இருக்க வேண்டி தானே... எதுக்கு அப்படி ஒரு பார்வை பார்த்து சிரித்து கண்ணடிக்கிறான்.' என்று தன்னோடு சேர்த்து அவனையும் மனதிற்குள் திட்டிக் கொண்டே வெண்பாவிற்கு பால் புகட்டினாள்.
அலுவலகத்திற்கு தயாராகி கீழே வந்த ராம் எப்போதும் போல் அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லிவிட்டு, உணவருந்த அமர்ந்தான். காலை அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து அபியிடம் பேசிக்கொண்டே உண்டு முடித்திருந்தான்.
அவ்வளவு நேரம் அங்கே அவன் கண் முன்னால் சுற்றித் திரிந்த நேத்ரா, அவன் சாப்பிட்டு முடித்து தன் தாத்தாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது வெண்பாவையும் அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றுவிட்டாள். அவள் சென்றது என்னவோ ராம் கிளம்ப இன்னும் நேரம் ஆகும் அதற்குள் வெண்பாவில் குளிக்க வைத்துவிட்டால் உணவுண்ணான் வைக்கலாம் என்ற ஐடியாவில் தான். ஆனால் அவளவன் என்ன புரிந்து கொண்டானோ!
விடைபெறும் நேரம் நேத்ரா கண்ணில் படாமல் போக ஒருமுறை கண்களை சுழலவிட்டான். அப்போதும் அவள் அங்கே இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருக்க, தன் அன்னை மற்றும் தாத்தா, பாட்டியிடம் மட்டும் விடைபெற்றுவிட்டு அபியிடம்,
"கிளம்பலாம் சோட்டூ" என்றிட, அபியோ "இதோ வரேன் பையா" என்று இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறிச் சென்று நேத்ராவையும் வெண்பாவையும் அழைத்து வந்தான்.
இருவரையும் கண்ட ராம், ஒரு நிமிடம் அகம் மகிழ்ந்து புன்னகைத்திட, அடுத்த நிமிடம் கோபம் தலை தூக்க நின்றான்.
அபியோ "அண்ணி உங்ககிட்ட சொல்லாமக் கூட கம்பெனிக்கு புறப்படுறாங்க பாருங்க... வெண்பா குட்டி அப்பாவை என்னனு கேளு..." என்று இருவரையும் தூண்டிவிட்டான்.
வெண்பா தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைத்திட, நேத்ரா அவன் கண்களோடு தன் கண்களை கலக்கவிட்ட அந்த ஒரு நொடியில் மற்றவர் அறியாவண்ணம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாள்.

-ஊடல் கூடும்.