"அண்ணி உங்ககிட்ட சொல்லாமக் கூட கம்பெனிக்கு புறப்படுறாங்க பாருங்க... வெண்பா குட்டி ராம் ப்பாவை என்னனு கேளு..." என்று இருவரையும் தூண்டிவிட்டான்.
வெண்பா தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைத்திட, நேத்ரா அவன் கண்களோடு தன் கண்களை கலக்கவிட்ட அந்த ஒரு நொடியில் மற்றவர் அறியாவண்ணம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாள்.
"ஆபிஸ் வா... உன்னை கவனிக்கிற விதமா கவனிச்சுக்கிறேன்..." என்று அபியிடம் முணுமுணுத்துவிட்டு, வெண்பாவைத் தூக்கி முத்தமிட்டு,
"ராம் ப்பா உங்களை தேடுனேன் தெரியுமா? பாப்பா குட்டி எங்கே போயிருந்திங்க?" என்று கொஞ்சிட, பிஞ்சு மனம் நொடிக்குள் சமாதானம் ஆகியிருந்தது.
"அம்மா தான் குளிச்சிட்டு வந்து பைய் சொல்ல சொன்னாங்க" என்று ராமிடம் கூறிவிட்டு பூங்கொடியைப் பார்த்து,
"கொடி பாட்டி பொம்மிக்கும் வைட் ஃப்ளார்ஸ் வேணும்" என்று ஒருவிதமான தயக்கத்துடனே கேட்டிட,
"வா நாம தோட்டத்துல பரிச்சிட்டு வரலாம்..." என்று பூங்கொடி குழந்தையை அழைத்தார்.
பூங்கொடியின் புன்னகைப் பேச்சில் குழந்தையின் தயக்கம் பறந்தோடிச் செல்ல, ராமிற்கு முத்தமிட்டு "பைய் ப்பா... நான் பாட்டி கூட எனக்கும், பார்பி டாலுக்கும் ஃப்ளவெர்ஸ் எடுத்துட்டு வரேன்" என்று கூறி பூங்கொடியின் கைப்பிடித்து நடந்து சென்றாள்.
மீதம் இருந்த மீனாட்சியும், அபியும் பேசிக்கொண்டே வெளியேறிச் சென்றிருக்க, நேத்ரா அவனை ஆர்வமாகப் பார்த்தாள். ஆனால் அவனோ தலையைக் கூட அசைக்காது, வெறுமனே அவளைப் பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான்.
'இவன் ப்ராப்ளம் தான் என்ன? திடீர்னு கோபமா இருக்கான். திடீர்னு சிரிக்கிறான். இல்லேனா இப்படி உம்முனு திரியிறான். இதுல அப்பப்போ கண்ணுல காதல் வேற... அதை நம்பி ஏமாறுறதும் நானாத் தான் இருக்கேன்...'என்று சலிப்போடும் ஏமாற்றத்தோடும் தனுக்குள்ளாகவே புலம்பித் தவித்தாள்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் இதே போல் கடந்திருக்க, அவனிடம் பேசுவதற்கான தனிமை அவளுக்கு கிடைத்ததாகவே இல்லை. அப்படியே கிடைத்தாலும், அதிலும் தன்னவளை சீண்டி, கோபமூட்டியே ரசித்தான் அவன்.
நேரம் கிடைக்காமல் போனதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. இரவு வெகு நேரம் கழித்தே இல்லம் நுழைபவன் முகம் வாடி குரல் களைத்து தான் உள்ளே வருவான். அவன் முகமே சொல்லிவிடும் கம்பெனியில் பல ப்ரச்சனைகளை சந்தித்துள்ளான் என்று. இப்படி அலுத்து களைத்து வருபவனை தானும் ஓய்வு எடுக்கவிடாமல் தடுத்து அமர்த்தி பேசுவதற்கு மனமில்லாமலேயே அவளும் நாளைக் கடத்தினாள்.
இங்கே மிதுன்யாவிற்கும் பவனிற்கும் இடையே பேச்சுவார்த்தையற்ற சண்டை நடந்து கொண்டிருந்தது.
நேத்ரா மற்றும் வெண்பாவை வழியனுப்ப தன் குடும்பத்தாரோ, அல்லது அழைத்துச் செல்ல ராம் குடும்பத்தாரோ யாரும் இன்றி கணவன் குழந்தையுடன் தனியாகச் சென்றிருக்கிறாளே! என்று வருந்தினான் பவன். அதற்கு முழுமுதல் காரணமான ராமின் மேல் கோபத்தில் இருந்தான். ஆனாலும் அதனை மனைவியின் மேல் காண்பிப்பது முறையல்ல என்று அவளுடன் சகஜமாகத் தான் பேசினான்.
ஆனால் மிதுன்யாவோ நேத்ராவை அழைத்துச் செல்லும் போது மிதுன்யாவுடன் அவள் இல்லம் சென்று ஒருவாரம் தங்கி வரலாம் என்று கூறிவிட்டு இப்போது அன்னை இல்லம் செல்வது பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறானே என்ற கோபத்தில் அவனிடம் சரியாக பேசமல் இருக்க, அவனும் தன் கோபத்தை அவளிடம் காட்டிவிடக் கூடாது என்பதற்காக, எதுவானாலும் கூடத்தில் வைத்து கேட்டுக் கொள்வதோடு சரி. தங்கள் அறைக்குள் இருவரும் பேசிக் கொள்வதில்லை.
அன்று காலை கமல் கடைக்குக் கிளம்புவதற்கு தாமதமாகிவிட,
"அம்மா... சீக்கிரம் சாப்பாடு எடுத்து வைங்க..." என்று பறந்து கொண்டிருக்க,
"நீ லேட் ஆக்கிட்டு என்னை ஏன்டா படுத்துறே... காலைல சீக்கிரம் எழுந்தா என்ன? இனிமே 8 மணிக்கு டைனிங் டேபில் வந்தேனா பரிமாறுறேன். இல்லேனா நீயா எடுத்து வெச்சு சாப்பிட்டு கிளம்பு..." என்று விமலாவும் கடிந்து கொள்ள,
"ஐயோ... அம்மா... நான் சீக்கிரமே எழுந்துட்டேன். இந்த சுனோ பைத்தியம் மார்னிங்கே ஃபோன் பண்ணி ஒரே ப்ளேடு. அவளுக்கு நேத்திலே இருந்து ப்ராக்டிகல் க்ளாஸ் ஸ்டார் ஆகிடுச்சாம்... அங்கே அவ அறுத்து பார்த்ததை எல்லாம் என்கிட்ட சொல்லி என்னை அறுத்துட்டு இருந்தா... அதான் லேட் ஆகிடுச்சு..." என்று அவன் கூறிக் கொண்டிருக்க,
சமையலறை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மிதுன் கைகளை கட்டிக் கொண்டு அவனை, தன் கூர் பார்வையால் துழைத்துக் கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு முடித்து எழுந்தவன் தன் அண்ணியைக் கண்டு தன் வாயை மூடிக் கொண்டான். அவனுக்கு மிதுன்யா தன்னை ஒதுக்குவது நன்றாகவே புரிந்தது. இது வரை முகம் கொடுத்து ஒருநாளும் பேசியதில்லை. ஏன் அவன் வீட்டில் தான் இருக்கிறான் என்று கூட காட்டிக் கொண்டதில்லை. அனைவர் மத்தியிலும் பொதுவாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொள்வதோடு சரி, அதற்கு மேல் இருவரும் பேசிக்கொண்டதில்லை.
ஓரலளவிற்கு அவன் அதற்கான காரணத்தையும் ஊகித்து வைத்திருந்தான். அவளை கடத்தி வந்தது தான் கோபமாக இருக்கும் என்று நினைத்திருந்தான். அப்படிப் பார்த்தால் மூல காரணகர்த்தாவாகிய பவனிடமே நன்றாக பேசும் போது, ராமருக்கு உதவிய அணிலுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா!!! என்று மலைத்ததும் உண்டு.
தன்னால் பவனுக்கும் மிதுனுக்கும் சண்டை வந்துவிடக் கூடாது என்று இதுபற்றி யாரிடமும் கூறியதில்லை கமல். இப்போது அவனை முறைத்து விழிப்பது அப்பட்டமாகத் தெரிந்திட, 'தங்கையை குறை கூறியதாக நினைத்து, தன் அண்ணியார் தன்னை முறைக்கிறார்' என்று நினைத்து அதற்கு மேல் எதுவும் பேசாமல் கடைக்குச் சென்றுவிட்டான்.
ஆனால் அங்கு நிகழ்ந்ததோ வேறு ஒன்றாக இருந்தது. இப்படியே எத்தனை நாளைக்கு தான் பேசாமல் இருப்பது என்று நினைத்து கவலையுற்ற பவன், மதியம் இல்லம் வரும்போது வாரணாசி செல்லும் விமான பயணச்சீட்டோடு வீட்டிற்குள் நுழைந்தான்.
"அம்மா... வாரணாசி போறதுக்கு எல்லாருக்கும் டிக்கெட் புக் பண்ணிருக்கேன். இன்னைக்கே சிவாவுக்கும், பொம்மிக்கும் என்னென்ன வேணுமோ எல்லாம் பேக் பண்ணிங்கோங்க... நாளை மறுநாள் மார்னிங் ஃப்ளைட்... மித்து நீயும் என்ன எல்லாம் எடுக்கனும்னு பாத்து எடுத்துக்கோ..." என்று தன்னவளின் முகத்தில் ஆராய்ச்சிப் பார்வையை செலுத்திக் கொண்டே கூறினான். ஆனால் அவள் முகம் மலர்ந்தது போல் இல்லை.
தன் போண்டாவின் முகவாட்டத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற யோசனையில் உளன்றவன் தன் அன்னையின் பேச்சை காதில் வாங்காமல் போனான்.
"டேய்..." என்று விமலா ஒரு சத்தம் போட்டப்பின் தான் நிகழ்வுக்கு வந்தான்.
"என்ன ம்மா?"
"சிவா இங்கேயிருந்து போய் மூனு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள அவங்க வீட்ல போய் நின்னா நல்லாயிருக்குமா!!!" என்றிட,
"ஏன் அதனால இப்போ என்ன? அவங்களா திடீர்னு புறப்பட்டதுனால தான் இப்போ நாம உடனே போய் பாக்குற மாதிரி இருக்கு. எப்படியும் சென்ட்ஆஃப் பண்ண நாம போற ப்ளான்ல தானே இருந்தோம்!!!" என்று ராமின் மேல் இருக்கும் கோபம் கொஞ்சமாக வெளியே வர, தன் அன்னையை பொறிந்து தள்ளினான்.
"சரி டா... உடனே மூஞ்சியத் தூக்காதே... எனக்கும் பொம்மிய பாக்குறதுல சந்தோஷம் தான்... என் கூடவே ஒட்டிககிட்டு திரியிற குழந்தை... இப்போ இங்கே இல்லாதது ஒரு மாதிரியா இருக்கு..." என்று கூறி பேத்தியின் நினைவில் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.
உணவு உண்டு முடித்து கைகழுவச் சென்றவன், தன்னவளிடம் "ரூமுக்கு வா..." என்று கூறிவிட்டு, கைகழுவிவிட்டு விறுவிறுவென்று படியேறிச் சென்றிருந்தான்.
முதலில் செல்லக்கூடாது என்று நினைத்தவள், பின் மனம் கேட்காமல் தங்கள் அறைக்குச் செல்ல, உள்ளே நுழைந்த நொடி அவளை பின்னால் இருந்து அனைத்து,
"இன்னும் கோபம் போகலேயா? அதான் ஊருக்கு போறோமே! பின்னே என்னடீ?" என்றிட,
"எனக்கு ரெம்ப சந்தோஷம்... அதுக்கு இப்போ என்ன செய்யனும்?"
அவளின் பட்டும்படாமல் வந்த பதிலில் அவளைவிட்டு நகர்ந்து நின்று, "ஊருக்கு போறது இல்லாம வேற ஏதோ கோபம் உனக்கு.... என்னனு சொல்லு, என்னால சரிசெய்ய முடியுதானு பாக்குறேன்..."
"நான் சொன்னா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவிங்கனு எனக்குத் தெரியலே... ஆனால்..." என்று ஒருநொடி யோசித்திட,
"கோபப்படுவேனு தயங்குறேயா?"
"நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை வரக்கூடாதுனு யோசிக்கிறேன்."
"எவ்ளோ சண்டை வந்தாலும் என்னைவிட்டு போகனும்னு நினைக்காதே... அதே போல மிரட்டி கல்யாணம் செய்துக்கிட்டவன் தானே நம்ம உணர்ச்சிய ஒருபோதும் புரிஞ்சுக்கமாட்டானு நெனச்சுடாதே..." என்று கூறி அவள் கை பிடித்து அழைத்து வந்து மெத்தையில் அமர வைத்தான்.
"கமலும், சுனோவும் லவ் பண்ணுறாங்களா? உங்களுக்கு எதுவும் தெரியுமா?"
கேட்டுவிட்டு அவன் பதிலுக்காக ஆர்வமாக அவன் முகத்தைப் பார்த்திட அவனோ பதில் சொல்லாமல் பலமாக சிரிக்கத் தொடங்கினான்.
"ஏன் சிரிக்கிறிங்க? உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?" என்று கொஞ்சம் கடுப்புடனே வினவினாள்.
"இப்போ வரைக்கும் அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன இருக்குனு எனக்குத் தெரியாது. ஆனால் சுனோ, எனக்கு ரெண்டாம் தாரமா உனக்கு காம்போட்டீடரா இந்த வீட்டுக்கு வரப் போறே'னு என்கிட்ட சொல்லுவா... அந்த மாதிரி உன்கிட்ட ஏதாச்சும் உளறுச்சா அந்த அருந்தவாலு?"
"ஓஓஓ... அவ சொன்னா இளிச்சிட்டு கேட்டுட்டு நிப்பிங்களோ? இதென்ன பேச்சுனு சொல்லி வாயிலேயே ரெண்டு அடி போட வேண்டி தானே!!! உங்களுக்கு என்ன வந்துச்சு... அவ பேசுறதை கேக்கும் போது உங்களுக்கு தான் குளுகுளுனு இருக்குமே..." என்று கூறும்போதே மூண்ட கோபத்தை எப்படி காண்பிப்பது என்று தெரியாமல், கைகளை பிசைந்தும், நகம் கொண்டு கிழிப்பது போலவும் மாற்றி மாற்றி வைத்து பேசி முடித்திருந்தாள்.
இன்னும் அழகாக, பலமாக சிரித்தவன், "அவ பேசும் போது கொழுந்திய குசும்புனு தான் தோனுச்சு... இப்போ நீ பேசுறதை கேட்கும் போது தான் ரெம்ப இதமா, குளுகுளுனு இருக்கு..." என்று கூறி அவளை தன்னோடு இணைத்துக் கொண்டான்.
அவனை உதறி தள்ளிவிட்டு, "அப்போ கமலும், சுனோவும் லவ் பண்ணுறாங்களானு உங்களுக்குத் தெரியாதா?"
"இப்போ அவங்க விரும்புறதுல உனக்கு என்ன ப்ரச்சனை..."
"எனக்கு அது பிடிக்கலே... அவ கல்யாணம் தாத்தா விருப்பப்படி நடக்கனும்... அதுவுமில்லாம கமலை விட, அபி தான் அவளை நல்லா பார்த்துப்பான்..."
"ம்ம்ம்... அப்படி வா... அவங்க லவ்வுல நமக்குள்ள ஏன் சண்டை வரப்போதுனு இப்போ தான் தெரியுது... என் தம்பி சுனோவை லவ் பண்ணினா நான் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்... உனக்கு கஷ்டமா இருந்தா உன் தங்கச்சிகிட்ட சொல்லி வை..." என்று விளையாட்டாக கூறுவது போல் இருந்தாலும், உண்மையை அழுத்தமாகக் கூறியிருந்தான்.
"விட்டா படிக்கிற பொண்ணை லவ் பண்ணுனு நீங்களே சொல்லித் தருவிங்க போல... அவ படிச்சு முடிக்கிற வரை கமலை அவ கூட பேசக்கூடாதுனு சொல்லி வைங்க"
"நான் கிளம்புறேன்... என்னென்ன கமலுக்கு சொல்லனும்னு நெனைக்கிறேயோ அது எல்லாத்தையும் மொதோ சுனோவுக்கு சொல்லு... என் செல்ல போண்டா..." என்று கொஞ்சி அவளை கடுபேற்றிவிட்டுச் சென்றான்.
விமலா நேத்ராவிற்கு அழைத்து தாங்கள் வரும் செய்தியை தெரிவிக்க மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்திடத் தோன்றியது அவளுக்கு. விமலா அழைத்துப் பேசிய விஷயத்தை வீட்டில் அனைவரிடமும் கூறிட, அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. வெண்பாவிற்கும் அளவுகடந்த மகிழ்ச்சி, தன் மைமியை மிஸ் செய்வதாக உணர்ந்த போதும் அதற்கான காரணம் தெரியாமல், அதனை சொல்லவும் தெரியாமல் தவித்தாள். அது அவளின் கொண்டாட்டத்தில் நன்கு தெரிந்தது.
நேத்ராவிற்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், ராமின் செயல்கள் வருத்தமடையச் செய்தது. இன்று எப்படியும் அவனிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தன் திறன்பேசியில் அவனுக்கு குறுஞ்செய்தி தட்டச்சு செய்து கொண்டிருந்த நேரம் ராமிடம் இருந்தே அழைப்பு வந்திட, ஒருநொடி பிரமித்து பின் ஃபோனை ஆன் செய்து காதில் வைத்தாள்.
"ஹலோ..."
"உன் மெயிலுக்கு ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் அனுப்பிருக்கேன். நீ ஃபிரீயா இருந்தா என் ஆபிஸ் ரூம்ல ப்ரின்டர் இருக்கு. அதுலே பிரின்ட்அவுட் எடுத்து அதை ஃபில் பண்ணி வை. இன்னும் பத்து நிமிஷச்சுல வீட்டுக்கு வந்திடுவேன். வந்து டீட்டெல் சொல்றேன்." என்று கூறி அவள் பதில் கூறிவதற்கு முன்பாகவே அழைப்பைத் துண்டித்திருந்தான்.
சொன்னது போலவே பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்தவன், தன் அன்னையுடன் விளையாடிக் கொண்டிருந்த வெண்பாவை தூக்கிக் கொஞ்சிவிட்டு,
"இன்னும் கொஞ்ச நேரம் கொடி பாட்டி கூட விளையாடுங்க... ராம் ப்பா டென் மினிட்ஸ்ல வந்துறேன்." என்று கூறி நேத்ராவைக் காணச் சென்றான்.
தான் கூறிய வேலையைத் தான் செய்து கொண்டிருப்பாள் என்ற நம்பிக்கையில் அறைக்குள் நுழைந்திட, அவளோ தன் ஃபோனில் கவனத்தைப் பதித்திருந்தாள்.
"அப்ளிகேஷன் ஃபில் பண்ணினேயா?"
"இல்ல" என்று ஃபோனைப் பார்த்துக் கொண்டே பதில் கூறிட,
"சரி... மெயிலாச்சும் பாத்தியா?"
"இல்ல..." இப்போதும் அதே போல் தான் பதில் வந்தது.
தனக்குள் மூண்ட கோபத்தை அடக்கி, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக மற்றொரு இருக்கையில் அமர்ந்து அவளை பார்வை மாற்றாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் தன்னை தான் பார்க்கிறான் என்று உணர்ந்தவளும் அவனை நிமிர்ந்து பார்த்திடவில்லை.
இதற்கு மேல் அவள் தன்னை நிமிர்ந்து பார்க்கமாட்டாள் என்று உணர்ந்தவன்,
"தரு..." என்று தன் சத்தத்தை உயர்த்தாமல் அழைத்திட,
அடுத்த நிமிடம் கோபத்தில் தன் ஃபோனை அவன் மேல் வீசினாள் அவள், அதனை சரியாகப் பிடிந்தவன்,
"ஹேய்..... ஸ்டுபிட் மாதிரி பிகேவ் பண்ணாதே தரு... கோபம் வந்தா நீ எப்படி ரியாக்ட் பண்ணுறே பார்..." என்று தன் குரலை உயர்த்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு பேசிட,
"ஓஓஓ நெனச்ச நேரம் ரியாக்ஷன் மாத்துற நீங்க என்னை சொல்றிங்களா? நான் ஒன்னும் உங்கள மாதிரி நேரத்துக்கேத்த மாதிரி நடிக்கிறவ கிடையாது..."
"நீ நடிக்கலே!!! இந்த டுவென்டி ஃபைவ் டேஸ்ல ஒரு நாள்... ஒரு நிமிஷம் நீ, நீயா இருந்தேயா சொல்லு? உன்னால எஸ்னு சொல்ல முடியுமா? முடியாதுல... பின்னே எப்படி நீ எப்பவும் ஒரேமாதிரி இருக்கேனு சொல்லுற!!!"
"ஆமா... நான் நானா இல்லே தான். இந்த டுவென்டி ஃபைவ் டேஸ் மட்டும் இல்லே, அதுக்கும் முன்னாடியே நீங்க என்னை அணைச்சு 'நான் இருக்கேன்... நீ பயப்படாதே'னு சொன்ன நாள்ல இருந்து நான் நானா இல்லே தான். உங்களை விரும்புறதுக்கு முன்னாடி வரை தான் ஒருநாள் கூட என் அம்மா அப்பா சாகும்போது நான் ஏன் உயிர்பெழச்சேன்னு நெனச்சது இல்லே.
ஆனால் இப்போலாம் பல தடவை நெனைக்கிறேன். நான் ஏன் உயிர்பெழச்சேன்... நானும் செத்திருக்கனும்... உயிரோட இருந்து ஒரு பணபித்தனை கல்யாணம் செஞ்சு, அவன் மூலமா அசிங்கமான பேர்லாம் வாங்கி, இப்போ பல கஷ்டங்களுக்குப் பின்னாலேயும் மனசுக்குப் பிடிச்சவன் கூட பிடிச்ச மாதிரி வாழ முடியாம என்னையும் கஷ்டபடுத்திகிட்டு உங்களையும் கஷ்டபடுத்தி.... இதெல்லாம் அனுபவிக்கிறதுக்கு நான் அன்னைக்கே செத்திருக்கலாம்.
-ஊடல் கூடும்.