• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
கமல் தன் தங்கைக்கு பரிசு வாங்கி வைத்திருப்பதாக கூறுவதும், அதனை தன்னவன் ஆதரிப்பதும் காதில் விழுந்திட தன் முன்னே கடாயில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பைவிட அதிகமாக கொதித்துக் கொண்டிருந்தாள் மிதுன்யா.

இரவு உணவிற்குப் பின் தன் வேலைகளை முடித்துக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்த மிதுன்யா, அங்கே கண்டது, அவளைக் கவர வேண்டும் என்பதற்காகவே தன் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த அவளுக்குப் பிடித்த ஹிந்திப் பாடல்களை இசைக்கவிட்டு, படுக்கையில் விசிலடித்துக் கொண்டு, அறைக் கதவின் மேல் கண் வைத்தபடி படுத்திருந்த அவளின் வம்புக்காரனைத் தான்.

"பவன் உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?" என்று கோபமாக கத்திக் கொண்டு தான் ஆரம்பித்தாள்.

"ஏன்? இல்லேனு சொன்னா கடனாத் தரப் போறியா?"

விளையாடாதிங்க பவன் "அவன் தான் கூறுகெட்டத் தனமா படிக்கிற பிள்ளைக்கு கிஃப்ட் வாங்கி வெச்சிருக்கான்னா... நீங்களும் வெக்கமே இல்லாமா அதை எடுத்து வெச்சுகிட்டேயாடானு கேக்குறிங்க?" என்று எடுத்ததும் பொறிந்து தள்ளிட,

"ஒன்னு செய்யேன்... உன் தங்கச்சி அந்த குட்டிச்சாத்தான் இன்னும் தூங்கிருக்காது. ஒரு கால் செய்து, 'பாப்பா.. பாப்பா... கமல் தடிமாடு உனக்கு கிஃப்ட் கொடுப்பான். அதை வாங்காதே'னு சொல்லு... இந்தா ஃபோன்..." என்று இன்னும் அவளைக் கடுப்பேற்றிகனான்.

"இப்போ எதுக்கு அவளை குட்டிசாத்தானு சொல்றிங்க?... என் குடும்பத்தைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது? என்ன நெனச்சுட்டு இருக்கிங்க உங்க மனசுல?" என்று மீண்டும் சத்தம்போட,

"சத்தியமா உன் தங்கச்சிய நெனைக்கலே?" என்றவன் அவள் கைபிடித்து இழுத்து தன்னருகே மெத்தையில் கிடத்திக் கொண்டு
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள...
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள...


"யூ ச்சீட்டர் நான் கோபமா இருக்கேன்ல, என்னை சமாதானப்படுத்தாம எதுக்கு டா நீ, என் பெட்ல வந்து படுத்தே? போடா ஷோஃபா...உ...உ..." என்று அவள் பேசி முடிப்பதற்குள் அவளின் கீழுதட்டை தன் இரு விரல்களில் பிடித்தை தன்னை நோக்கி இழுத்தான் பவன்.

"ரெம்ப பேசுறடீ போண்டா.... என்னை வாடானு தான் இந்த வாய் சொல்லனும்... போடானு சொன்னா பனிஷ் பண்ணிடுவேன்..." என்றிட,

அவன் கையைத் தட்டிவிட்டு அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் "அப்படிலாம் சொல்ல முடியாது போடா" என்று மறுபடியும் கூறிட, விரல் சிறையில் இருந்த அவளின் அதரங்கள் இப்போது அவன் இதழ் சிறையில் மாட்டித் தவித்தது.

நிமிடங்கள் கடந்தே அவனிடம் இருந்து விடுபட்டவள், ஏனோ ஏமாற்றமாக உணர்ந்தாள். அதனை அவள் முகத்தில் கண்ட நிமிடம்,

"என்ன டீ உன் ப்ரச்சனை?" என்று கோபமும் கொஞ்சலும் கலந்து கேட்டிட,

"என் கோபம் உங்களுக்கு ஒரு பொருட்டாவே தெரியலேல!!! ஏதோ சொன்னிங்க என் உணர்ச்சிய புரிஞ்சுப்பிங்கனு... இப்போ என் கோபம் உங்களுக்குப் புரியலேயா? இல்லே இவளெல்லாம் ஒரு ஆளுனு இவளுக்கு கோபம் ஒரு கேடானு நெனக்கிறிங்களா?" என்றிட,

"உன் கோபம் புரிஞ்சதுனாலத் தான் உனக்காக தான் நாளைக்கு வாரணாசி போறோம்..."

"சும்மா பொய் சொல்லாதிங்க... நேத்ரா அக்காவுக்காக தானே போறோம்..."

"சிவாவுக்காக போறதுனா நேரா உங்க தாத்தா வீட்டுக்குப் போகனும்!!! அப்படி இல்லேனா அங்கே தான் சிவாவுக்குனு தனியா ஒரு அவுட்ஹௌஸ் இருக்கே, அங்கே தானே அம்மா, அப்பா, கமல் எல்லாம் போறாங்க... நாம ஏன் அங்கே போகாம உங்க வீட்டுக்குப் போறோம்!!!" என்று அவன் விளக்கமளித்திட,

அவளுக்கும் அது புரிந்தாலும், அவனாக வந்து சமாதானம் செய்வில்லை என்ற கோபத்தில் சண்டை போட வேண்டும் என்றே அடுத்த ப்ரச்சனையை ஆரம்பித்தாள்.

"ஆனால் இப்போ கமல், சுனோ விஷயத்துல நான் வருத்தப்படுறேனு உங்களுக்குத் தெரியும்... இருந்தும் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணமாட்டேனு சொல்லிட்டிங்க... பின்னே எப்படி நீங்க என்னை புரிஞ்சுகிட்டதா சொல்றிங்க?" என்று தான் வாய் திறந்து கேட்டப்பின்பாவது தனக்கு சாதகமாக பதில் கூறவிடமாட்டானா என்ற ஆவலோடு கேட்டாள்.

"அவங்க பேசுறதை நீ ஏன் தப்பான எண்ணத்துல பாக்குறே!!! அவங்க ப்ரெண்ட்ஸா பழக வாய்ப்பிருக்கே!!! ஏன் அப்படி யோசிக்கமாட்டேன்ற?"

"ஒருவேளை சுனோ ஃப்ரெண்டா பழகி அதை கமல் தப்பா புரிஞ்சிக்கிட்டா என்ன பண்ணுறதுனு!!!, அதான் மொதோவே கன்பார்ம் பண்ணிக்கலாம்ல..."

"மித்து... இது பத்தி இனிமே பேச வேண்டாம்... நமக்குள்ள இந்த விஷயம் சம்பந்தமா சண்டை வரதை நான் விரும்பலே... முடிஞ்சா இதை மறந்துட்டு சகஜமா உன்னால எனக்கிட்ட பேச முடியும்னா பேசு... இல்லேனா இந்த ஒருவாரம் பேசாம இருந்தது போல இனிமேலும் இருக்கலாம்..." என்று முடிந்தளவு மெதுவாகவே கூறிய போதும் பெண்ணவளின் இதயத்தில் சிறு வலி தோன்றத்தான் செய்தது.

'இவரு தம்பி அப்படியே ஒரு தப்பும் செய்யாத உத்தமன் பாரு, சந்தேகமே படாம அவனை நம்புறதுக்கு... தம்பிய சொன்னோனே எவ்ளோ கோபம் வருது!!! இவருக்கு தம்பினா... அவ எனக்கு தங்கச்சி... நான் அவ மேல அக்கறையா இருக்கக் கூடாதா என்ன!!!' என்று மனதிற்குள் புலம்பிய படி அவனுக்கு முதுகு காண்பித்துப் படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் இடையில் அவன் கை ஊரிட, அடுத்த நிமிடம் அவன் புறம் திரும்பி அவனை அணைத்திருந்தாள். அவளின் அணைப்பில் ஆறுதலாக உணர்ந்தவன், "சாரி டீ போண்டா... ஐ ம் சோ சாரி...." என்று உருக்கமாக மன்னிப்புக் கேட்டான்.

அவன் எதற்காக மன்னிப்பு வேண்டுகிறான் என்று புரிந்து கொண்டவள், "இனிமே பேசாதே... அப்படி இப்படினுலாம் சொல்லாதிங்க... என்னாலேலாம் உங்ககிட்ட பேசாம இருக்க முடியாது... டெய்லியும் சண்ட போடுற சாக்குலேனாலும் இந்த ஒரு வாரம் பேசிகிட்டு தான் இருந்தேன்..." என்று கண்ணீரும், கோபமுமாகக் கூறினாள்.

"என்னாலயும் தான். இந்த ஒரு வாரம் உன்னை ரெம்ப மிஸ் பண்ணினேன்... அதை நினைக்கும் போதே உள்ளுக்குள்ள ஏதோ அழுத்துற மாதிரி, வலிக்கிற மாதிரி இருக்கு... இப்போ இந்த நிமிஷம் நீ என் பக்கத்துல இருக்குறது எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா?" என்று அவனையும் அறியாமல் மெல்லியதாக கண்கள் கலங்கிய படி கூறிட,

அவனை ஆச்சரியமாக பார்த்தவள், "என்னை உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா?" என்றாள்.

"ம்ம்ம்... நிறைய.... நிறைய... நிறையா பிடிக்கும்..." என்று அவளை மேலும் மேலும் தன்னோடு இறுக்கி காற்று கூட புகாத அளவிற்கு அணைத்துக் கொண்டான்.

"எப்போ இருந்து?" என்று அவனது காதல் மலர்ந்த நொடியை தெரிந்து கொள்ளும் நோக்கில் வினவினாள்.

"உனக்கு தாலி கட்டின நொடில இருந்து... அந்த ஒரு செகண்ட் மின்னல் போல என் மனசுக்குள்ள வந்து உக்காந்துகிட்ட... மேஜிக் போட்ட மாதிரி மனசு ஃபுல்லா நெறஞ்சுட்ட..." என்று காதலோடு கூறினான்.

"ஓஓஓ...இதுக்கு பேர் தான் மஞ்சள் கயிறு மேஜிக்கா!!! தாலி சென்டிமெண்ட் பசங்களுக்குக் கூட இருக்குமா!!!" என்று கிண்டல் செய்தும் ஆச்சரியமாகவும் கேட்டாள்.

பொய்க்கோபமாக "ஏன் அது பொண்ணுங்களுக்கு மட்டும் தான் இருக்கனும்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன?" என்று நெற்றியை சுருக்கிக் கொண்டு கூறினான்.

அவனின் பொய் கோபத்தை ரசித்தவள், "என் செல்ல மச்சான்..." என்று கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.

"சரி இன்னைக்கே அவங்க பஞ்சாயத்தைப் பேசி முடிச்சிடலாமா?" என்றிட, அவனைவிட்டு நகர்ந்து சென்றவளை மீண்டு இழுத்து தன் கைக்குள் வைத்து,

"இப்போ சொல்லு..." என்றான்.

"இல்ல... நீங்க சொல்லுங்க... நான் ஆரம்பிச்சா திரும்பவும் சண்டை தான் வரும்..."

"சரி ஓகே... எனக்கு கமலும், சுனோவும் ஒன்னு தான். என் தம்பி, உன் தங்கச்சினு நான் பிரிச்சு பாத்தது இல்லே... அதே மாதிரி கமலை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்... படிக்கும் போதும் பொண்ணுங்க கிட்ட பேசுவான் தான், ஆனால் படிப்பைத் தாண்டி நைட் பார்ட்டி, டேட்டிங் அந்த மாதிரி டாப்பிக் போச்சுனா, நான்கூட சில நேரம் டைம் இருந்தா வரேனு சொல்லிருக்கேன்... ஆனால் அவன் சாரி சொல்லி நகந்துருவான்..." என்று தம்பியின் பெறுமையை கூறும் வேகத்தில் தன்னை மறந்தான்.

"இப்போ அவன் சுனோக்கு என்ன கிஃப்ட் வாங்கி வெச்சுக்கான் தெரியுமா? ப்ரைன் பத்தின ரிசர்ச் புக் வாங்கி வச்சிருக்கான். லவ் பண்ற எவனாச்சும் இப்படி ஒரு புக் வாங்கி கொடுப்பானானு எனக்குத் தெரியலே... எனக்கு தெரிஞ்சு அந்த புக்கை அவ தலைக்கு வெச்சு தான் தூங்குவா... சோ என்னோட கணிப்பு படி ரெண்டு பேரும் லவ் பண்ணல..." என்று கூறி முடிக்க, அவளோ

"சார் எத்தன பேர் கூட டேட்டிங் போயிருக்கிங்க?" என்று பற்களை நரநரவென கடித்துக் கொண்டு கேட்டாள்.

"நான்... ம்க்கும்... நான் போனது இல்லே..." என்று இழுத்து சொல்லி முடிப்பதற்குள் "அய்யோ... அம்மா... அடிக்காதேடீ... உண்மையாவே நான் போனது இல்லே டீ..." என்று அலரினான்.

"நீயெல்லாம் லண்டன்ல படிக்கலேனு யாரு கவலைப்பட்டா!!! கார்பென்டர் வேலைக்கு உனக்கு யூ.கே யுனிவர்சிட்டி கேட்குதா? அங்கே போயி என்னத்தையாவது படிச்சிட்டு வந்திருப்பேனு நெனச்சா, நைட் பார்ட்டி, டேட்டிங்னு குடிச்சிட்டும், கூத்தடிச்சிட்டும் வந்திருக்கே..." என்று திட்டிக் கொண்டே அடிகொடுத்தாள் அவனின் போண்டா...

"எங்கம்மா சத்தியமா நான் நல்ல பையன் டீ... நான் டேட்டிங் போனது இல்லே டீ... நம்பு டீ..." என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டு கூறினான்.

"பின்னே டைம் இருந்தா போவேனு சொன்னேல?"

"டைம் இருந்தா நைட் க்ளப் போவேன். அந்த பொண்ணுங்களை சேஃபா அவங்க வீட்ல விட்டுட்டு நான் என் வீட்டுக்கு வந்திடுவேன்..."

"அப்போ குடிப்ப?"

"ம்க்கும்... அதுக்கும் தான் வழி இல்லாம போச்சே!!!... ஃபுல் மப்புல வந்தா வீட்ல சிவா கண்டுபிடிச்சுடுவா... அதனால அந்த ச்சான்சும் கிடைக்காம போச்சு... எப்பவாச்சும் லைட்டா தான் போடமுடியும்..." என்று வருத்தமாக கூறினான்.

"யப்பா... ரெம்ப தான் கவலை... உங்களுக்கெல்லாம் நேத்ரா அக்கா தான் சரி... கமலும் அந்த பயத்துல தான் எந்த தப்பும் செய்யாம இருந்திருப்பான்..." என்றிட,

பவனுக்கு இப்போது தெளிவாக ஒரு விஷயம் புரிந்திருந்தது. மிதுன்யா எப்போது கமலை நம்பத் தயாராக இல்லை என்று. சரி எல்லாத்தையும் ஒரே நாளில் மாற்றிவிட முடியாது... இப்போதைக்கு இவளுக்கு அவர்கள் இருவரும் விரும்பவில்லை என்று தெளிவு படுத்தினால் போதும் என்று நினைத்துக் கொண்டான்.



⏩⏩⏩⏩⏩⏩⏩



ராமின் அலுவலக அறையில் பாரி, புகழ், ராம், ஆரவ், அபி குழுமியிருக்க, புகழ் தன் அண்ணன் பையனுக்கு தைரியம் கூறிக் கொண்டிருந்தார்...

"ராம்... இன்னு ஏன்டா அதையே நெனச்சிட்டு இருக்கே... இன்னும் ஆறு மாசம் தான் அதுக்குள்ள அவனை இறக்கிடலாம் டா... யூ டோன்ட் வொரி பாய்..." அவனிடம் எந்த பதிலும் இல்லை.

அவருக்கு மட்டும் அல்ல யாருக்குமே அவன் பதில் கூறிடவில்லை. இன்னைய போர்ட் மீட்டிங்கில், மற்றவர்கள் ஒன்று சேர்ந்து அவனுக்கு குளிபரித்தது போல் பல விஷயங்கள் நிகழ்ந்திருந்தது. அவன் சிலவற்றை எதிர்பார்த்திருந்தாலும், பலவற்றை எதிர்பார்த்திடவில்லை.

முதலாவதாக தனக்கும் ஆரவிற்கும் திருமணம் முடிந்ததில் தான் நான்கு பாட்னர்ஸ் வெளியேறுவதாக கூறியுள்ளனர். காரணம் பெண்ணை கட்டிக் கொடுக்க நினைத்து தான் பாட்னர் ஆனார்களாம்.

அடுத்தாக நாள்வரில் இருவரின் பங்கை தானே வாங்கிக் கொள்வதாக கூறியும் அவர்கள் மறுத்துவிட்டனர். நாள்வரும் ஒருவருக்கு தன் பங்கை விற்கப் போவதாகக் கூறியதோடு அந்த நபரையும் நேரில் நிறுத்தியிருந்தனர். அந்த நபர் தான் ராமின் ப்ரச்சனையே...

அடுத்ததாக பெரும்பான்மை பங்குதாரர் என்ற கணக்கில் அடுத்த ஆறுமாதம் கம்பெனி அந்த புதிய நபரின் கீழ் வந்துவிடும். இதில் நிம்மதி தருவது ஓரே ஒரு செய்தி மட்டும் தான். லட்சுமணன் ஆரம்பித்த அந்த சிறிய பகுதி மட்டும் அந்த புதிய நபரின் கீழ் வரவில்லை என்பது தான்.

-ஊடல் கூடும்.​
 
Top