• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அடுத்து வந்த ஒருவாரம் லட்டுமணனின் இல்லத்தில், கங்காதரனின் குடும்பம், விஜயன்-புவனா தம்பதியர் என இரு குடும்பத்தாருக்கும் சம்மந்தி முறையில் தடாபுடலாக விருந்து உபசாரம் நடைபெற்றது. விருந்தினர்கள் வந்து சென்றபின் மீண்டும் ராமின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.

பகலில் அலுவலகத்தில் உலாவரும் ராமிற்கும், மாலை இல்லத்தில் வெண்பாவோடு விளையாடும் ராமிற்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது. அதனை உணர்ந்து லட்சுமணன் முதற்கொண்டு அபி வரை வருந்தினர் என்பதை விட, பயம் கொண்டனர் என்றே சொல்லலாம்...

அவனின் இந்த வித்தியாசமான செய்கைக்கு காரணம் புரியாமல் மூச்சடைப்பது போல் உணர்ந்தார் பாரி. தன் மனைவிடமும் இது பற்றிக் கூறிடவும் தவரவில்லை. பூங்கொடியோ கல்யாணமான புதுமணத் தம்பதிகள் தேனிலவு சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறும், இதனால் ராமிற்கு ரிலாக்ஷேஷன் கிடைக்கக் கூடும் என்றும் கூறிட, ராமிற்குத் தெரியாமலேயே அலுவலகப் பணிகளை மூவருமாகப் பிரித்துக் கொண்டனர்.

அதன் விளைவாக ராமின் கோபத்தையும் காணவேண்டிய நாள் வந்தது.

"இப்போ யாரு உங்களை ஹனிமூன் ப்ளான் பண்ண சொன்னது?" என்று கோபத்தில் நடுக்கூடத்தில் வைத்தே அபியிடம் கத்தத் தொடங்கினான்.

"அவனை ஏன் டா கத்துறே? நான் தான் மால்தீவ்ஸ்க்கு ஹனிமூன் பேக்கேஜ் டிக்கெட் போட சொன்னேன்... உனக்கு வேலை முக்கியமா இருக்கலாம்.. அதுக்காக புதுசா கல்யாணம் ஆகி வந்த ரெண்டு பொண்ணுங்களையும் கண்டுக்காம நீங்க ரெண்டு பேரும் ஆபிஸே கதினு கெடந்தா நல்லாவா இருக்கும்!!! பத்து நாள்ல ஒன்னும் மாறிடாது... எல்லாம் நாங்க பாத்துக்குறோம்... நீ போயிட்டு வா..." என்று அவர் தன்னைமையாகத் தான் எடுத்துக் கூறினார்.

ஆனால் கேட்பவனுக்கு அந்த பொறுமையில்லாமல் போக "ஏய்... இப்போ உனக்கு ஹனிமூன் கண்டிப்பா போகனுமா!!?" என்று அனைவர் முன்னிலையிலும் சண்டையிடுவது போல் நேத்ராவைப் பார்த்து வினவினான்.

அவளோ முதலில் சங்கடமாக உணர்ந்து தலை குனிந்து நிற்க, "ராம்... இதெல்லாம் உங்க ரூம்ல வெச்சு பேசிக்கோங்க..." என்று பாரி மருமகளின் உதவிக்கு வர,

அதனை சிறிதும் காதில் வாங்கிக் கொள்ளமல், "பதில் சொல்லு டீ?" என்று மீண்டும் அதட்டினான்.

இப்போது நிமிர்ந்து பார்க்க அனைவரும் அதே சங்கடத்தில் தான் நின்றிருந்தனர். அவள் ராமிற்கு பதில் கூறாமல் ஆரவ் மற்றும் அமியைப் பார்க்க, அவள் பார்வை அவர்களின் மேல் ஒரு நிமிடம் நிலைத்து நின்றது. நேத்ராவிற்கு ஆரவ் பற்றி ஓரளவு தெரியும், ராம் ஹனிமூன் செல்லவில்லை என்றால் ஆரவும் மறுத்துவிடுவான் என்று யோசித்தாள். நேத்ராவின் பார்வை சென்ற திசையைப் பார்த்த ராம்,

"அவங்க கண்டிப்பா ஹனிமூன் போறாங்க... அது என் பொறுப்பு... நீயும் நானும் போகனுமா?" என்று அவளின் கேட்கப்படாத கேள்விக்கு பதிலளித்துவிட்டு, மீண்டும் தங்களைப் பற்றி கேட்டான்.

எப்படியும் அவள் இல்லை என்று தான் கூறுவாள், அதை அனைவர் முன்னிலையிலும் கூறினால் தான் மற்றவர்கள் மீண்டும் இது பற்றி பேசமாட்டார்கள் என்று நினைத்து அவளின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் அனைவர் முன்னிலையிலும் வினவினான்.

ஆனால் அவளோ ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு "ஆம்" என மேலும் கீழும் தலையசைக்க, ராம் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திருதிருவென முழித்தான்.

சொல்லப்போனால் வீட்டில் மற்றவர்களும் கூட அவள் இல்லை என்று தான் கூறப்போகிறாள், அதுவும் இத்தனை பேர் மத்தியில் கேட்கும் போது அவளுக்கு விருப்பம் இருந்தாலும் அதை எப்படி வெளியே சொல்லுவாள். நிச்சயம் இல்லை என்று தான் சொல்லுவாள் என்றே நினைத்து ஏமாற்றமாக உணர்ந்தனர்.

அவளின் ஆம் என்ற தலையசைப்பில் மகிழ்ந்த, பூங்கொடி நேத்ராவின் அருகே வந்து அவளை நெட்டி முறித்து, கன்னத்தில் முத்தமிட்டவர்,

"எங்கே நீ இல்லேனு சொல்லிடுவேயோனு நெனச்சேன்... அவன் மூஞ்சியைப் பாரு... இஞ்சியைத் தின்ன ஏதோ மாதிரி..." என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.

பூங்கொடியை அடுத்து அமி அவளை கட்டிக்கொண்டு "சூப்பர் க்கா... இப்போ தான் என் வழிக்கு வர்றிங்க... அத்தானுக்கும் ஆரவ்வுக்கும் இப்படி சொன்னாத் தான் புரியும்" என்று காதோடு ரகசியம் பேசுவது போல் கூறினாள்.

அடுத்ததாக மீனாட்சி நேத்ராவின் அருகே சென்று கைகுலுக்கி "கலக்கிட்ட போ... நேத்ராவா இதுனு யோசிக்க வெச்சிட்ட...", என்று அவரவர் தத்தம் சந்தோஷத்தை வெளிப்படுத்திட, ராம் நேத்ராவை முறைத்துக் கொண்டிருந்தான்.

இறுதியாக ராமின் அருகில் நின்றிருந்த அபி கூட நேத்ராவைக் கண்டு இங்கிருந்தே சூப்பர் என்று கை காட்டிட, அதில் கோபமுற்ற ராம், அபியை முறைத்துவிட்டு

"எல்லாரும் இங்கேயிருந்து போங்க..." என்று கத்திட, அனைவரும் ஒரு நொடி திடுக்கிட்டு அவனைத் திரும்பி பார்க்க இத்தனை நாள் யாரும் பார்த்திடாத ராம்கிரன் அங்கே நின்றிருந்தான்.

வெண்பா கூட அஞ்சிய விழிகளுடன் அவனைப் பார்த்துக் கொண்டே நேத்ராவை கட்டிக்கொண்டாள். நேத்ரா அவளை தூக்கி சமாதானம் செய்திட, அதனைக் கண்டு தன்னைத் தானே நொந்து கொண்டு,

"நான் உங்கிட்ட பேசனும் வா..." என்று நேத்ராவை அழைத்தான்.

பூங்கொடி பதற்றத்துடன் "ராம்... உன் விருப்பத்துக்கு மாறா நடந்துக்கிட்டானு அவ மேல கோபப்படாதே... நீ இவ்ளோ கோபப்பட்டு நாங்க யாரும் பாத்தது இல்லே... எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு... எதுவா இருந்தாலும் இங்கேயே பேசேன்..." என்று நேத்ராவிற்கு பரிந்து பேசிட,

"மாம்... நான் அவகிட்ட கோப படமாட்டேன்... வெண்பா பயந்து இருக்கா... நீங்க பாப்பாவை பாத்துக்கோங்க ப்ளீஸ்..." என்று தன் கோபம் குறைத்து தன் அன்னையிடம் கேட்டுக்கொண்டான்.

அப்போதும் அவர் நேத்ராவையும், ராமையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே நிற்க, "நான் அவளை தனியா கூட்டிட்டுப் போகலே... இதோ இங்கேயே உக்காந்து பேசுறேன்... போதுமா!!! நீங்க எல்லாம் உங்க வேலையைப் பாக்கப் போங்க..." என்று அங்கிருந்த நீள்சாய்விருக்கையைக் காண்பித்துக் கூறிட, அறைகுறை மனதோடு பூங்கொடி அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

மற்றவர்களும் அங்கிருந்து சென்றிட, நேத்ராவை சோஃபாவில் அமரச் சொல்லி சற்று இடைவெளி விட்டு தானும் அமர்ந்து கொண்டான்.

"இதோ பார் தரு... எனக்கு ஆபிஸ்ல நெறைய வேலை இருக்கு. அப்பா, சித்தப்பா நினைக்கிற மாதிரி இந்த ப்ரச்சனை ஆறு மாசத்துல முடியக் கூடியது இல்லே. ஆறு மாசத்துல முடிச்சு வைக்கனும்னா நான் நெறைய ஹார்ட்வொர்க் பண்ணனும்...

அதுவும் இல்லாம வெண்பாவை வெச்சுகிட்டு நமக்கு இப்போ... இதெல்லாம் தேவையா? நீயும் உன் கவுன்சிலிங் வெர்க்கை ஸ்டார்ட் பண்ணனும் தானே..." என்று பொறுமையாகக் கூறிட

"நான் உங்களை வேலை பாக்க வேண்டாம்னு சொல்லலியே ராம்..." என்று எதுவுமே நடக்காதது போல் கூறிட,

"விளையாடாதே தரு... இப்போ என்னால உன்னை எங்கேயும் கூட்டிட்டு போக முடியாது..." என்று சற்று அழுத்தமாக கூறினான்.

"நானும் உங்க கூட எங்கேயும் வரத் தயாராயில்லே... முக்கியமா மால்தீவ்ஸ்..." என்று கூறி கண் சிமிட்டிட...

"பின்னே ஏன்டீ எல்லார் முன்னாடியும் ஆமானு சொன்னே?!!" என்று பொய் கோபமாய் வினவினான்.

"சும்மா தான்... இப்போ இன்னொரு சீன் பாக்குறிங்களா!!!?" என்று கண்ணை உருட்டிக் கேட்டிட, அவனோ என்ன செய்யப்போகிறாள் என்று விழிவிரித்துப் பார்த்தான்.

"ஐயோ... அம்மா... என்னை மிரட்டுறார் பாருங்க..." என்று கத்திட, அடுத்த நிமிடம் பூங்கொடி இருவர் முன்பும் வந்து நின்றார்.

ஷோஃபாவில் அமர்ந்திருந்த நேத்ரா அவசரமாக எழுந்து பயந்து பூங்கொடியின் பின்னால் ஒழிவது போல் சென்று நின்றுகொண்டு,

"பாருங்க ம்மா... உன்னை இப்போ கூட்டிட்டு போக முடியாது, அதனால நீயே வீட்ல எல்லார்கிட்டேயும் இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ண சொல்லிடுனு மெரட்டுறார்." என்று சிறுபிள்ளை போல் கம்ப்ளைன்ட் செய்தாள்.

'அடிப்பாவி நான் எவ்ளோ பொறுமையா என் நிலவரத்தை எடுத்து சொல்லிட்டு இருந்தேன், இவ அப்பட்டமா மிரட்டுனேன் பொய் சொல்றாளே!!!' என்று மனதிற்குள் புலம்பினாலும், வெளியே அவள் செய்கையை ரசித்தான்.

"டேய்... இப்போ எதுக்கு அவளை மிரட்டுறே... நீயும், அவளும் போறிங்க... அவ்ளோ தான்... புரியுதா?" என்று பூங்கொடி இறுதி முடிவாகக் கூறிட,

"அய்யோ கொடி... அவ சும்மா சொல்றா கொடி... நான் அவளை மிரட்டல... ஏய் நான் உன்னை மிரட்டினேனா டீ?" என்று தன் அன்னையிடம் தன்னை நிரூபிக்க அவளிடம் குரலை உயர்த்திக் கேட்க...

"இதோ இப்படி தான் என்னை மிரட்டினார். இங்கே உங்க முன்னாடியே இப்படி மிரட்டுறார்னா, தனியா இருக்கும் போது எப்படியெல்லாம் மிரட்டுவார்!!! அம்மா என்னை இவரு எங்கேயும் கூட்டிட்டு போக வேண்டாம். எனக்கு இவர் கூட போக பயமா இருக்கு... நான் உங்க கூடவே இருந்திடுறேன்..." என்றிட,

"அதானே பாத்தேன். என் பையன் விருப்பத்துக்கு மாறா நடந்துக்கிறவளா நீ... நீ வேமா ஆமானு மண்டையாட்டும் போதே நான் யோசிச்சிருக்கனும்... ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி அவனுக்கு ஏத்த பொண்டாட்டி தான் நீ... இனி இதே மாதிரி தினமும் ஒரு காரணம் சொல்லி கடைசியா கிளம்புறதுக்கு முதல் நாள் டிக்கெட்டை கேன்சல் பண்ண வெச்சிடுவே... அப்படித் தானே?" என்று நேத்ராவை சரியாக கண்டுகொண்டு வினவினார் பூங்கொடி.

தன்னைக் கண்டு கொண்டாரே என்று கண்களை மூடி, உதடுகள் கடித்து சிரித்துக் கொண்டே ஒற்றைக் கண்ணைத் திறந்து பூங்கொடியைப் பார்த்தாள் நேத்ரா. அவரோ இடுப்பில் கை வைத்து அவளை முறைத்துக் கொண்டிருக்க,

"இப்போ என்ன உங்க பையனுக்கு ஆபிஸ்ல ஓவர் டென்ஷன். வொர்க் பர்டன் அதிகமா இருக்கு, அதை கொஞ்ச நாள் கொறைக்கனும்... அவ்ளோ தானே... நாளைல இருந்து நானும் ஆபிஸ் போறேன்... அவருக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுறேன்... ஓகே வா?" என்று கொடியை ஐஸ் வைத்தாள்.

இருவரின் பேச்சு வார்த்தைகளை பார்வையாளராக அமர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ராம்.

ஒருவழியாக ஆரவ், அமி இருவரும் மாலத்தீவுகள் பத்து நாள் சென்று வருவதாகவும், அதுவரை நேத்ரா ஆபிஸ் சென்று வருவதாகவும், அமி வந்தப் பின்னால் அவளின் கவுன்சிலிங் சென்டரை ஆரம்பிக்கப் போவதாகவும் முடிவாகியது.

இதில் மற்றவர்கள் ராமின் பிடிவாதத்தை நினைத்து கவலையுற்றாலும், எந்த சூழலிலும் அவனை விட்டுக்கொடுத்திடாத நேத்ராவை நினைத்து மகிழ்ச்சியே கொண்டனர்.

தாயுள்ளமாக பூங்கொடிக்கு தான் இருவருக்குள்ளும் இன்னும் எதுவும் சரியாகவில்லை என எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

மறுநாள் அமி தனக்கு ஷாப்பிங் செய்யவேண்டி இருப்பதாகக் கூறிட வெண்பாவை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு நேத்ராவும், அமியும் கடைவீதி சென்றனர்.

அந்த ஷாப்பிங் மாலில் உள்ள ஒவ்வொரு கடையிலும் நுழைந்து தனக்கு வேண்டியவற்றை பார்த்துப் பார்த்து வாங்கிக் குவித்தாள் அம்ரிதா. இன்னும் ஒன்றிரண்டு பொருட்களே வாங்க வேண்டியிருக்க,

"அமி இன்னும் கொஞ்ச திங்க்ஸ் தானே... நீ வாங்கிட்டு வா நான் இங்கே வெய்ட் பண்ணுறேன்" என்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாள் நேத்ரா.

"சாரிக்கா... டயர்ட் ஆக்கிட்டேனா?" என்று வருத்தமாக வினவினாள் அமி.

"இல்லே டா... எதுக்கு எல்லா திங்க்ஸையும் தூக்கிட்டு அலையனும். அதான் சொன்னேன்... சரிவா நானும் வரேன். இதுக்கு போயி இப்படியா ஃபீல் பண்ணுவே" என்று வாடிய அவள் முகத்தைக் கண்டு சமாதானம் செய்தாள்.

இதனை தூரத்தில் இருந்து பார்த்த இரண்டு விழிகளுக்குச் சொந்தமான கால்கள் தானாக அவர்களை நோக்கி வந்தது. அடுத்த கடைக்குள், நுழையும் முன் ஒரு குரல் அவளை அழைத்திருந்தது.

"சிவநேத்ரா..."

பெரும்பாலும் மதுரையில் இருப்பவர்களுக்கு மட்டுமே நேத்ராவின் முழுப்பெயர் தெரிந்திருந்தது. இங்கே வாரணாசியில் பெரும்பான்மையோருக்கு அவள் நேத்ரா மட்டுமே... அப்படி இருக்க தன்னை முழுப்பெயர் சொல்லி அழைக்கும் நபர் யார் என்ற யோசனையோடு திரும்பிப் பார்த்தாள்.

"ஹாய் எப்படி இருக்கிங்க? உங்களை இன்னைக்கே பாப்பேனு நெனைக்கல மிஸஸ்.ராம்கிரன்" என்றவரின் பேச்சில் ஒருநொடி வரண்டு போன நாவில் எச்சிலைக்கூட்டி விழுங்கிடக் கூட மறந்தவளாய் நின்றிருந்தாள் நேத்ரா.

-ஊடல் கூடும்.​
 
Top