• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
ஒரு வாரம் கழித்து இன்று தான் கண் திறந்து பார்க்கிறான் ராம். மருத்துவர்களும், செவிலியர்களும் சுற்றிலும் நின்றிருக்க அதிலேயே தன் நிலை என்ன என்பதை அறிந்து கொண்டவன், அவர்களின் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு கண்களில் வெறுமையோடு படுத்திருந்தான்.

தலையில் கட்டும், கண்ணுக்குக் கீழே இடது கன்னத்தில் ஒரு தையலும், அதனை மறைத்தபடி ப்ளாஸ்டரும், இடுப்பில் அறுவை சிகிச்சை மூலம் ப்ளேட் வைத்து வயிறு முழுவதும் கட்டப்பட்டிருந்தது.

மருத்துவர் ஒவ்வொருவராக சென்று பார்க்குமாறு கூறிவிட, அவனது கண்கள் கதவின் வழியே உள்ளே வரும் முதல் நபரை ஆவலாக எதிர்பார்த்திருந்தது.

கொடி கண்கள் கலங்கியபடி உள்ளே நுழைய அவன் முகத்தில் பெரிய ஏமாற்றமே முதலில் தெரிந்திட, அதனை கண்ட கொடிக்கு இன்னுமே கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் மகனை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்க்க த்ராணியின்றி அழுதபடி நின்றார்.

அவனுக்குத் தெரியாதா!!! தன்னவள் இன்னேரம் இங்கே இருந்திருந்தால் அவள் தான் முதல் ஆளாக தன்மகவுடன் உள்ளே நுழைந்திருப்பாள் என்று... 'எனக்கும் குழந்தைக்கும் ஒரு ஆபத்தும் இல்லை என்று சொல்வதற்கேனும் அவள் தான் வந்திருப்பாள். வந்து நின்றதோ கொடி... பெற்றவளுக்கு தான் முதல் உரிமை என்று தன்னவள் கூறியிருந்தால் கூட நிச்சயம் தன் அன்னை அதனை மறுத்து தன் சரிபாதியானவளையும், மகவையும் தான் அனுப்பி வைத்திருப்பார் என்று தன் அன்னை பற்றி நன்கு அறிந்தவனாயிற்றே!!! அப்படி என்றால் இன்னும் தன்னவளை கண்டுபிடிக்க முடிந்திடவில்லை... என்று நினைத்த நொடி அவனுக்கு கோபம் கூட மூண்டது.

ராம் "கொடி..." என்று அழைத்திட, ஒரு வாரமாக தன் மகனின் இந்த அழைப்பிற்காக காத்திருந்த அன்னையின் மனம், இனி அவன் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று வேதனையுற்றது.

"கொஞ்சம் தண்ணி வேணும்?" என்றிட, தாயவள் தன் வலி மறந்து, மறைத்து தன் சேய்க்கு பணிவிடை செய்ய விரைந்தாள்.

அன்னை கொடுத்த தண்ணீரை வாய் நனைக்கமட்டும் சிப்பியவன், "கொடி, அடுத்து யாரு வரனுமோ வர சொல்லுங்க..." என்று கடனே என்று உரைத்தவன், பூங்கொடி கதவின் அருகே சென்றபோது மீண்டும் அழைத்தான்.

"மாம்...". நின்று திரும்பிப் பார்த்த பூங்கொடியிடம்,

"நீங்க என் கூடவே இருக்கிங்களா?" என்று இயலாமையோடு வினவிட, சரி என தலையசைத்துவிட்டு பாரியை அழைத்து வந்தார். கண் மூடிப் படுத்திருக்கும் தன் மகனின் நிலை கண்டு வேதனையுற்றவர், தன்னை முதலில் தேற்றிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு, தந்தையாய் தன் மகனை தேற்ற முயன்றார்.

"ராம்... நீ சின்ன வயசுலேயே ரெம்ப பக்குவமா பொறுப்பா நடந்துப்பே... உனக்கு பின்னாடி பொறந்த பசங்க நாலுபேரையும் பெரியவங்க நாங்க வளர்த்தோம்னு சொல்றதை விட, நீ தான் வளர்த்தனு சொல்லலாம். அவங்களுக்கு எப்போ என்ன வேணும்னு பார்த்து பார்த்து செய்வ...

திரும்பவும் அதே ராம்கிரன்-ஆ எங்களுக்கு நீ வேணும்... எந்த சூழ்நிலையிலும், உன்னை நீ இழந்திடக் கூடாது... நான் என்ன சொல்லவரேனு உனக்குப் புரியும்னு நெனைக்கிறேன்." என்று உருக்கமாக பேசிட, அப்போது தான் கண்களைத் திறந்து பார்த்தான். சரி என்று வாய்திறந்து கூட சொல்லாமல் வெறும் தலையசைப்போடு அதனை ஏற்றுக்கொண்டான்.

அதன்பின் மற்றவர்களை தனியறைக்கு மாற்றியப் பின் பார்த்துக் கொள்கிறேன் என்றிட, அவர்களுக்கும் அதனை ஆமோதிப்பதைத் தவிர வேறுவழியில்லாமல் போனது. புகழ், சுஷேண், கங்காதரன், ஆரவ், பவன், கமல் என ஆண்கள் அனைவரும் கண்ணாடி கதவிற்கு வெளியே நின்று வட்ட வடிவ இடைவெளியில் பார்த்துச் சென்றனர். பெண்கள் அனைவரையும் மருத்துவமனை செல்லவே தடைவிதித்திருந்தார் லட்சுமணன்.

அபி மட்டும் பிடிவாதமாக ராமை பார்க்க வேண்டும் என்றிட அவனை மட்டும் தன் அறைக்குள் அனுமதித்தான் ராம். அவனது முகத்தில் டன் கணக்கில் சோகம் நிறைந்திருக்க, பாரியிடம் கூட பேசாதவன், தன்னைப் பெற்றவளிடம் கேட்டிட நினைக்காதவன், அபியிடம் மட்டும்,

"வெண்பாவையும்....?" என்று அதற்கு மேல் கேட்க முடியாமல் திணறிட,

அருகில் நின்றிருந்த கொடி சேலை தலைப்பால் தன் வாயை மூடிக் கொண்டு சத்தம் வெளியே வரமல் அழுதிட, அபி "பையா" என்று ஒரே பாய்ச்சலாக பாய்ந்து ராமின் தோள் வளைவில் முகம் புதைத்து அழுகத் தொடங்கினான். அபியின் கண்கள் தன் சுரக்கும் பணியை சிறப்பாக செய்திட, ராமிற்கு பதில் தேவையில்லாமல் போனது. அந்த நொடி மட்டும் ராமின் கண்கள் கலங்கின.

அபி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "தேடிட்டு இருக்கோம் பையா" என்று தலை கவிழ்ந்த படி கூறிட,

"வேண்டாம்..." என்று தீர்க்கமாக வந்தது ராமின் வார்த்தைகள். இருவரும் அதிர்ச்சியுடன் அவன் முகம் பார்க்க, அவனோ எந்த உணர்வையும் வெளிக்தாட்டாமல் பாறையாய் இருகிக் கிடந்தான்.

"பையா... உங்க ப்ரெண்ட் சுராஜித் ஹெல்ப்ல சிட்டி ஃபுல்லா தேடிட்டு இருக்கோம் பையா... கண்டிப்பா சீக்கிரமே ரெண்டு பேரும் கிடைச்சிரலாம் பையா..." என்றிட,

"தேடுறதை நிறுத்த சொல்லு...." என்று ஆணையிட்டான்.

அபி மீண்டும் ஏதோ கூறவர, "சோட்டூ எனக்கு டயர்டா இருக்கு... ட்ரிப்ஸ் ஏறுறது தூக்கம் வருது... நீ அம்மாவ கூட்டிட்டு போ... நான் கொஞ்ச நேரம் தூங்கனும்" என்று இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதைப் போல் கண்களை மூடிப்படுத்துக் கொண்டான். படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கியும் போனான்.

இல்லம் திரும்பிய அபி.... ராம் கூறியவற்றை அனைவரிடமும் கூறிட, ராம் ஏன் அப்படிச் சொன்னான் என்று அனைவருக்குமே குழப்பமாக இருந்தது. லட்சுமணனே ஒரு நிமிடம் மூளை வேலை நிறுத்தம் செய்தவராய் சிலையாய் அமர்ந்திருந்தார்.

அனைவருமே என்ன செய்வது என்று தெரியாமல் வருந்தினர். சொல்லப்போனால் கடத்தியது யார் என்று குடும்பத்தில் எவருக்குமே தெரியாது.

விமலாவோ இதனை சுத்தமாக எதிர்பார்த்திடவில்லை. "சிவா என் பொண்ணா இருந்த வரைக்கும் கூட இந்த மாதிரி ப்ரச்சனைலாம் அவளுக்கு வந்தது இல்லே... இப்போ எங்க இருக்கா? எப்படி இருக்கா?னு கூடத் தெரியலே!!! பொம்மி சின்னக் குழந்தை!!! என்னென்ன கஷ்டம்லாம் அனுபவிக்கிறாளோ தெரியலே!!! மாப்ளை கடத்தினவனைப் பத்தி ஏதாவது சொல்லுவார்னு நெனச்சா, தேடாதிங்கனு சொல்றாரே!!! என் குழந்தைங்க ரெண்டும் எப்படியெல்லாம் கஷ்டப்படுதுங்களோ!!!" என்று வளர்த்த மனம் வேதனை தாங்காமல் புலம்பியபடி, லட்சுமணனைப் பார்த்து

"ஐயா உங்க பேரனை யார் கடத்தினானு மட்டும் சொல்ல சொல்லுங்க, அவருக்கு அவர் பொண்டாட்டியும், குழந்தையும் தேவையில்லாம இருக்கலாம்... எனக்கு என் குழந்தைங்க வேணும்... நாங்களே கண்டுபிடிச்சு எங்க கூட கூட்டிட்டு போயிடுறோம்..." என்று கையெடுத்துக் கும்பிட்டபடி கெஞ்சி அழத் தொடங்கினார்.

"அம்மா... வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதிங்க ம்மா... அவங்களும் ராமோடு முடிவுல இடிஞ்சி போய் தான் இருக்காங்க... நீங்க வார்த்தைன்ற ஆயுதத்தை வெச்சு இன்னும் அவங்களை காயப்படுத்தாதிங்க..." என்று கமல் தான் தன் அன்னையை சமாதானம் செய்தான்.

கங்காதரன் விமலாவை அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வு எடுக்குமாறு கூறி பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரைத் தூங்க வைத்தார்.

மிதுன்யா ராமிடம் தான் பேசிப் பார்ப்பதாகக் கூறிட, மாலை மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டாள். முதலில் மிதுன்யாவை சந்திக்க மறுத்த ராம், அவளின் பிடிவாதத்தில் சம்மதித்தான்.

"ராம்... உங்ககிட்ட இருந்து இந்த பதிலை யாரும் எதிர்பார்க்கலே ராம்... உங்களை அடுச்சு போட்டுட்டு உங்க மனைவிய ஒருத்தன் கடத்திட்டுப் போயிருக்கான். அது யாருனு தெரிஞ்சும் நீங்க ஏன் அவங்களை தேட வேண்டாம்னு சொல்றிங்க? இப்போவே ஒரு வாரம் ஆகிடுச்சு ராம்... இன்னும் தாமதமான அவங்க ரெண்டு பேர் உயிருக்கு தான் ஆபத்து... ப்ளீஸ் ராம், அது யாருனு சொல்லுங்க... சுராஜித் பையா நமக்கு தேவையான ஹெல்ப் எல்லாம் செய்ய ரெடியா இருக்கார்..." என்றிட,

"சுராஜித்-ஐ தேடுறதை நிறுத்த சொல்லு..." என்று சற்றும் அலட்டிக் கொள்ளாமல் கூறினான்.

"ராம் பையா ஏன் இப்படி நிலமைய புரிஞ்சுக்காம பேசுறிங்க? அங்கே அத்தை எவ்ளோ தவிக்கிறாங்க தெரியுமா? எல்லாரும் நேத்ரா அக்காவையும், பொம்மியையும் நெனச்சு எவ்ளோ கவலைபட்டுட்டு இருக்காங்க!!! நீங்க என்னடானா கொஞ்சம் கூட வருத்தபடாம, தொலைஞ்சவங்களை தேடாதே... தொல்லை ஒழிஞ்சதுன்ற மாதிரி அப்படியே விட்டுடுனு சொல்றிங்க?" என்று கோபத்தில் கத்தத் தொடங்கிட,

செவிலியர் ஒருவர் வந்து மிதுன்யாவை வெளியே அனுப்ப முயற்சித்தார்.

"மேடம் இது ஹாஸ்பிட்டல். அவர் பேஷன்ட்... உங்க இஷ்டத்துக்கு கத்துறதுக்கு உங்க வீடு இல்லே... அவரை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவிடுங்க..." என்னு வெளியே செல் என்று சொல்லாமல் சொல்ல, அதற்கும் ராம் எதுவும் கூறிடவில்லை.

மிதுன்யாவிற்கு கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டு நிற்க, எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தனக்கு சப்போர்ட் செய்யும் ராமை எதிர்பார்த்து அவன் முகத்தையே பார்த்திருந்தாள். ஆனால் அவனோ யாருக்கோ ஏதோ என்பது போல் வேறு பக்கம் பார்வைவைத் திருப்பிக் கொண்டான்.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், கண்களைத் துடைத்தபடி அங்கிருந்து வெளியேறினாள். வீட்டிலும் இது பற்றி கூறிட, புகழின் ஆலோசனைப்படி ராமிற்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

அதில் ராம் மருத்துவர்களுக்கு ஒத்துலைத்தாலும், குடும்ப உறுப்பினர்களிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. அடுத்த நாள் கொடி மற்றும் அபியை மட்டும் தான் தன்னை காண அனுமதித்தான். வேறு எவரேனும் உள்ளே வந்தால் வெறிப்பிடித்தவனைப் போல் கத்தத் தொடங்கினான்.

இறுதியில் ராமின் உடல் நலம் கருதி வேறு யாரும் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவரும் கூறிவிட, இப்போது குடும்பத்தாருக்கு இரட்டிப்பு வருத்தமாகியது.

அடுத்தகட்டமாக பாரி சுராஜித்தை அனுப்பி வைத்தார். காவலதிகாரி என்பதால் எப்படியும் ராமால் மறுப்பு சொல்ல முடியாது என்று நினைத்தே இந்த முயற்சியை மேற்கொண்டனர்.

"ராம் உன் வொய்ஃவ்-ம் குழந்தையும் காணாம போய் பத்து நாள் ஆகுதுடா. நீ கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணினா அவங்களை சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்... இவர் கேக்குற கேள்விக்கு உனக்கு தெரிஞ்ச பதில் சொல்லு போதும்..." என்றிட

"எனக்கு எதுவும் நியாபகம் இல்லே..."

"பொய்... நீ பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்னு டாக்டர்ஸ் சொல்றாங்க... இன்னு ஒன் வீக்ல உனக்கு ஃபுல் பாடி செக்-அப் இருக்கு... அந்த ரிசல்ட் போதும் நீ நார்மல்னு சொல்றதுக்கு..."

"ஐ ம் நாட் ஆல்ரைட்... எனக்கு எதுவும் நியாபகம் இல்லே..." என்று கத்தி அருகில் இருந்த மருந்து ட்ரே-வை தட்டிவிட, மருத்துவர் ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்து உறங்க வைத்தார். இறுதியில் ராமின் உடல் நலம் கருதி கேஸ்-ஐ க்லோஸ் செய்திருந்தனர்.

-ஊடல் கூடும்.​
 
Top