ராமின் உடல் நிலையில் அதி வேகமாக முன்னேற்றம் தெரிந்திட, ஒரு வாரத்திற்குப் பின் செய்ய வேண்டிய முழு உடற்பரிசோதனை நான்கு நாட்கள் முன்னதாகவே செய்யப்போவதாக மருத்துவர்கள் கூறிட, அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தான் ராம்.
பரிசோதனையில் அனைவரும் எதிர்பார்த்தது போல் ராம் முற்றிலும் நலம் என்றும், இன்னும் இரண்டு மாதத்தில் இடுப்பு எலும்பு பொருந்திய பின் மெதுவாக நடக்க முயற்சிக்கலாம் என்றும் கூறினர். அதுவரை மருத்துவமனை தனியறையில் இருக்கட்டும் என்றிட, மறுநாளே தனியறைக்கு மாற்றப்பட்டான்.
லட்சுமணனும், மலையரசியும் வந்து பார்த்து சென்றனர். அமியும் கூட ஒருநாள் அழைத்து வரப்பட்டாள். அமியின் அன்னை தந்தை அமியை தங்களோடு அழைத்துச் செல்வதாகக் கூறிட, ஆரவ் மறுத்துவிட்டான். சுனைனாவும் ராமைப் பார்க்க வந்திருக்க, விடுமுறை முடிந்து அபியுடன் அனுப்பி வைக்கப்பட்டாள்.
கங்காதரன் குடும்பத்தார் ராமைச் சந்தித்துவிட்டு அப்படியே மதுரை புறப்படுகிறோம் என்று கூற வந்திருந்தனர். விமலாவின் அன்றைய வார்த்தைகள் ராமின் காதிற்கும் வந்திருந்ததால், அவரைக் கண்டு கொஞ்சம் சங்கட்டமாக உணர்ந்தவன்,
விமலாவிற்கு இன்னும் கோபம் குறையாமல் இருக்க, ராமிடம் "இப்போ வலி பரவாயில்லையா?" என்று மனமே இல்லாமல் கேட்டார்.
"வலிஇஇஈஈஈ..." என்று இழுத்தவன் "சொன்னா நம்புற மாதிரி இருக்காது தான்... ஆனாலும் கேட்குறது நீங்களா இருக்குறதால சொல்றேன். இந்த வலி என்னைக்கும் போகாது..." என்று கூறி, வலி நிரைந்த முறுவல் ஒன்றை சிந்தினான்.
விமலாவிற்கு அவன் எந்த வலியைச் சொல்கிறான் என்று நன்றாகவேப் புரிந்தது. ஒரு நொடி கண்கள் கூட கலங்கத் தான் செய்தது. ஆனாலும் 'போலிஸிற்கு பதில் சொல்லியிருந்தால், முயற்சித்தோம் என்ற மன நிம்மதியாவது இருந்திருக்குமே!' என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
"மனுஷங்களே மாறும் போது மனசும் சீக்கிரம் மாறிடும்..." என்று கூறிட ராமின் மன உறுதி ஆட்டம் கொள்ளத் தொடங்கியது. மற்றவர்களுக்கும் தர்மசங்கடமாகிப் போனது.
பவன் ஆரம்பத்தில் இருந்து நடக்கும் அனைத்தையும் பார்வையாளர் போல் தான் வேடிக்கைப் பார்த்திருந்தான். இன்றும் மருத்துவமனையில் அதேபோல் தான் அமர்ந்திருந்தான்.
மிதுன்யா ஒருபுறம் முகம் திருப்பிக் கொண்டு நிற்பதைக் கண்ட ராம், அங்கே நிலைமையை சரி செய்ய நினைத்து அவளை அழைத்தான்.
"மிதுன்..." அவளிடம் எந்த அசைவும் இல்லை. முதலிலேயே அவளிடம் சரண்டர் ஆகிவிட வேண்டியது தான் என்று நினைத்து,
"மிதுன் சாரி டா..." என்றிட,
"அத்தை நான் வெளிய இருக்கேன். நீங்க பேசி முடிச்சிட்டு வாங்க..." என்று விமலாவிடம் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
அதன் பிறகு யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. கொடி எழுந்து "நான் மிதுனை அழச்சிட்டு வரேன்..." என்றிட,
"அம்மா வேண்டாம்... அவ கோபம் மட்டும் இல்லே.... இங்கே எல்லாரோட கோபமும் ஞாயமானது தான். நானும் இப்போ யாருக்கும் விளக்கம் சொல்ல விரும்பலே... இப்போதைக்கு என்னால சொல்ல முடிஞ்சது எல்லாம் 'மன்னிச்சிடுங்க'ன்ற வார்த்தை மட்டும் தான்."
கமல், பவன், கங்காதரன் மூவரும் ராமை எதுவும் கூறிடவில்லை என்றாலும், அவர்கள் மனதிலும் கோபமும், வருத்தமும், ஏமாற்றமும் இருக்கும் என்பதை புரிந்து தான் அவர்களிடமும் சேர்த்து மன்னிப்பு வேண்டினான்.
அனைவரும் புறப்பட, பவன் மற்றவர்களை சிறிது நேரம் வெளியே இருக்குமாறு கூறிட, கொடியும் அவர்களுடன் அறைக்கு வெளியே காத்திருந்தார்.
"இதுவரைக்கும் நீயும், நானும் கோபமா முறைச்சிக்கிட்டது தான் அதிகம். பேசினது கூட இல்லே. உன்னை மொதோ முறை பாக்கும் போது நானும் கொஞ்சம் அதிகமாத் தான் பேசிட்டேன்... சாரி. அப்பறம் மித்து கூட சொன்னா தாத்தாகிட்ட என்னைப் பத்தி நீ நல்லவிதமா தான் எடுத்து சொன்னேனு... அதனாலத் தான் தாத்தாவும் என்னை முழுமனசா ஏத்துக்கிட்டாருனு.... அதுக்கு தாங்க்ஸ்.... இதுவரைக்கும் இல்லேனாலும்... இனிமே கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ்ஸா பழகலாமா?" என்றிட,
"ஃப்ரெண்ட்ஸ்!!!..... இந்த டைம்ல உன்கிட்ட இந்த வார்த்தைய எதிர்பார்க்கலே... நீயும் என் மேல கோபமா இருப்பேனு நெனச்சேன்..." என்று நக்கலாகக் கூறியவன், தன்னவளின் நினைவில்,
"என் தருவுக்கு உன்னையும் கமலையும் ரெம்ப பிடிக்கும்... அவளுக்கு பிடிச்சது எனக்கு....." என்று கூறிக்கொண்டிருந்தவன், திடீரென
"இப்போ எதுக்கு வெட்டிப் பேச்சு பேசிட்டு இருக்கே... உனக்காக எல்லாரும் வெளியே வெய்ட் பண்ணுறாங்க... கெளம்பு..." என்று விரைப்பாகக் கூறினான்.
"வேற ப்ளான் இருந்தா! ஏதாவது ஹெல்ப் வேணுனா கால் பண்ணு... ஹெல்ப் வேண்டானாலும் கால் பண்ணு... இதுல என் நம்பரும், கமல் நம்பரும் இருக்கு." என்றவன் தன் அலைபேசி எண்ணையும், கமலில் அலைபேசி எண்ணையும் ஒரு பேப்பரில் எழுதி, ராமின் அருகில் இருக்கும் டேபிலில் வைத்தான்.
"என்ன ப்ளான்!!! ஒரு ப்ளானும் இல்லே... மொதோ நீ உன் பொண்டாட்டியையும், அவ வைத்துல இருக்கிற பிள்ளையையும் பாரு..." என்று அப்போதும் முகத்தை சுரித்துக்கொண்டு கூறினான் ராம்.
ஆனால் பவன் பதில் ஒன்றும் கூறாமல் கூர் பார்வையோடு ராமைப் பார்த்தபடி நிற்க, ராம் ஏதோ மாட்டிக் கொண்டது போல் திருதிருவென முழித்தான். இருந்தும் பவனை நிமிர்ந்து பார்த்திடவில்லை.
"சரி அப்போ கமலுக்கு கால் பண்ணு... அவனுக்கும் உன் மேல ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கும் போல... நீ அழச்சா கண்டிப்பா வருவான்." என்று கூறி அவன் அறையைவிட்டு வெளியேறினான்.
மீண்டும் கொடி அறைக்குள் நுழையும் போது ராமின் முகத்தில் ஒரு பிடிமானம் கிடைத்துவிட்டது போன்ற நம்பிக்கை தென்பட்டது.
இரவு அலுவலகம் முடித்து பாரி, புகழ், அபி மூவரும் வந்தனர். ஏற்கனவே ஆரவ்விடம் "ஃப்ஸ்ட் அமியைப் பார்... இந்த பக்கம் வராதே..." என்று கூறி மருத்துவமனை வரக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தான் ராம்.
தந்தையிடம் சகஜமாக உரையாடிட, அவரோ மீண்டும்,
"சுராஜித்தை வர சொல்லவா?" என்றார்.
"தேவையில்லே ப்பா... நீங்க நம்ம கம்பெனியப் பத்தி சொல்லுங்க... புது சார்மன் என்ன சொல்றார்?" என்று கேட்ட ராமை விசித்திரமாகப் பார்த்தார் பாரி...
இத்தனை நாள் நேத்ராவைத் தேட வேண்டாம் என்ற போதும், அவன் முகத்தில் தெரிந்த வேதனையைக் கண்டு கொண்டவர், இன்று தொழிற்சாலை பற்றி விசாரிக்கவும், மீண்டு வரும் தன் மகனை நினைத்து மகிழ்வதா, அல்லது மீண்டு வர முடியாத தொலைவு தங்களைவிட்டுச் சென்று கொண்டிருக்கும் மருமகளையும், பேத்தியையும் நினைத்து வருந்துவதா என்று மனமுடைந்து போனார். தன் வருத்தத்தை மகனிடமே கேட்கவும் செய்தார்.
"டேய்... என்னடா ஆச்சு உனக்கு? ஏன் டா இப்படி மாறிட்டே!!!"
"நீங்க தானே... நான் நானா திரும்ப வேணும்னு கேட்டிங்க... இப்போ என்னாச்சுனு கேக்குறிங்க!!!"
"நீ... நீயா திரும்பி வந்தா எல்லாமே சரியாகிடும்னு நெனச்சேன். ஆனால் என் பேத்தியையும், மருமகளையும் இழந்து தான் நீ திரும்பிக் கெடைப்பனு நெனைக்கல டா..." என்று வருத்தமாக உரைத்திட,
"என்னப்பா... அனுபவஸ்த்தர் நீங்க... உங்களுக்குத் தெரியாதா!!! ஒன்னை இழந்தாத்தான் இன்னொன்னைப் பெற முடியும்னு!! சரி என்னைவிடுங்க... ஆபிஸ் எப்படிப் போகுது சொல்லுங்க?"
"அந்த நாலு பேர்ல ரெண்டு பேருக்கு மொதோவே புதுசா வந்த மதனைப் பிடிக்கலே... அதனால மதனுக்கு எழுதிக் கொடுத்திருந்த பவர் ஆஃப் அத்தாரிட்டியை கேன்சல் பண்ணிட்டு, வேறு ஒருத்தருக்கு ஷேர்ரை விக்கிற முடிவுல இருந்தாங்களாம்... இப்போ அவன் மீதம் இருந்த ரெண்டு பேரையும் ஏமாத்திட்டு, எங்கேயோ ஓடிப் போயிட்டான் போல... நம்மகிட்ட வந்து மன்னிப்புக் கேட்டாங்க... இனி அடுத்த போர்ட் மீட்டிங்ல தான் தெரியும் யாரு சார்மன்னு..."
"ஒன்னு பண்ணுங்க... ரெண்டு ஷேர்ரை அமி பேர்ல வாங்கிடுங்க... என் பேர்ல இருக்குற பவரை ஆரவ் பேருக்கு மாத்திடுங்க... நாளைக்கே இந்த வேலைய முடிச்சிடுங்க... எப்படியும் நாம தான் லீடிங்ல இருப்போம்... சோ ஆரவ் தான் அடுத்த சார்மன்..." என்று கூறிட, அவரும் ஆமோதித்தார்.
"சரி நீ ரெஸ்ட் எடு....நாங்க கெளம்புறோம்..." என்று எழுந்திட,
"நாளைல இருந்து அபி என்கூட ஹாஸ்பிட்டல்ல இருக்கட்டும்.... கொடி நீங்க நாளைக்கே வீட்டுக்கு போயிடுங்க...." என்றிட, எதற்கு இந்த மாற்றம் என்று யோசித்தாலும், அனைவரும் சம்மதித்தனர்.
மறுநாள் வந்த அபியிடம், "குட் மார்னிங் சோட்டூ... உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... வா" என்று அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டான்.
கொடி வெளியேறிய மறுநிமிடம், சில மருந்துகளின் பெயரைச் சொல்லி இணையத்தில் அது பற்றி தேடி பார்க்குமாறு கூறினான்.
முதலில் எந்த வித முன் யோசனையும் இல்லாமல் தமையன் கூறிவற்றை செய்தவன், மருந்தின் தன்னைமை பற்றி வாசித்திட அதிர்ந்தான்.
"பையா இதெல்லாம் இல்லீகல் ட்ரக்ஸ்... இதை எதுக்கு கேக்குறிங்க?"
"சும்மா ஒரு டைம் ட்ரைப் பண்ணலாமேனு தான்... வாரணாசில எங்கே கெடைக்கும்னு விசாரிச்சு வாங்கித் தாயேன்..."
"நெவர் பையா... வாட்ஸ் ராங் வித் யூ பையா!!? என்னால இதையெல்லாம் செய்ய முடியாது..."
"சோட்டூ எனக்காக செய்யமாட்டேயா!!!"
"நீங்க தப்பான வழில போக நான் ஒரு போதும் துணையா இருக்கமாட்டேன் பையா..."
"அப்போ ராம் பையா சொன்னா சரியா இருக்கும்னு சொன்னது எல்லாம் என்னை ஏமாத்துறதுக்கா!!!"
"அது அப்போ... இப்போ நீங்க மாறிட்டிங்க... என் அண்ணிய தேட வேண்டாம்னு சொன்னதே எனக்கு சுத்தமா பிடிக்கலே... இதுக்கு எதுக்கு அவங்களை தொறத்தி தொறத்தி லவ் பண்ணினிங்க!!! பிடிவாதமா அவங்களை கல்யாணம் பண்ணுனிங்க!!! அந்த குட்டிக் கொழந்தை அழகா சோட்டூ... அபினு... என்னை வம்பு பண்ணிக்கிட்டே இருந்தது... இப்போ நாம யாராவது வந்து அழைச்சிட்டு போகமாட்டோமானு எவ்வளவு ஏங்கிருக்கும்!!!" என்று அன்று தான் தன் வருத்ததை வெளிப்படுத்தினான்.
"அப்போ கண்டிப்பா அழச்சிட்டு வரனுமே!!!" என்று ராம் இடையில் கூறிட, அபியோ அவனை யோசனையாகப் பார்த்தான்.
"நீங்க என்ன சொல்ல வரிங்க பையா?"
"நான் ஒன்னு சொல்ல வரலே... சுராஜித்தை கூப்பிடு..." என்று கூறிவிட்டு, கணினித் திரையில் தன் கண்ணை ஓடவிட்டான் ராம். அபிக்கு புரிந்தும் புரியாமலும் இருக்க, அண்ணன் சொல்லைத் தட்டாதவன் இன்று அதையே செய்தான்.
மதியம் போல் வந்த சுராஜித்தோ உள்ளே நுழையும் போதே, "என்னடா கேஸை க்லோஸ் பண்ணின மறுநாளே கூப்பிடுவனு நெனச்சேன்..." என்றபடியே தான் வந்தான்..
"ஜித்து இல்லீகல் ட்ரங்க்ஸ் விக்கிரவன் யார்யாருனு தெரியனும்... உன்னால ஹெல்ப் பண்ண முடியுமா?"
"நீ இந்த மாதிரி ஏதாவது டீடெய்ல் கேட்டு கால் பண்ணுவேனு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். இன்னு டூ டேஸ்ல சொல்றேன்." என்றிட
"டூ டேஸ் அதிகம், டுமாரோ மார்னிங் எனக்கு எல்லா டீடெய்லும் வேணும்..." என்று போலீஸ் அதிகாரிக்கே உத்தரவு பிறப்பித்து, மருந்துகள் பற்றிய தகவலை சுராஜித்திற்கு காட்டினான்.
ராம் கூறியது போலவே மறுநாள் காலையே சுராஜித்தும் அனைத்து தகவல்களையும் சேகரித்து வந்திருந்தான். அதிலும் ராம் கூறிய வகை போதை மருந்துகளை கைமாற்றுபவர்கள் அதில் குறைவாகவே இருக்க, பத்து நபர்களை சுராஜித் புகைப்படத்தோடு கொடுத்தான். அதில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தமாக ட்ரக்ஸ் வாங்கிய நபர் என்று அலசி ஆராய்ந்து தேடியதில் மதன் பற்றிய தகவலும் கிடைத்தது. எங்கே எப்போது கைமாறல் நடைபெற்றது என்று விசாரிக்க, அதுவோ கடத்தப்பட்டதற்கு முன்னைய தேதிகளில் இருந்தது. அதனால் அதன் பின் கண்டுபிடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.
அதே போல் சுராஜித் தன் சொந்த முயற்சியில் காவல் அதிகாரிகள் இல்லாமல் பிறரைக் கொண்டு அனைத்து செக் போஸ்டிலும் ஆட்கள் அமர்த்தியதை மட்டும் தகர்க்காமல் இருக்க, மூவரும் ஊரைவிட்டு வெளியே சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியாக நம்பினான் ராம். உள்ளூருக்குள் இருப்பவர்களையே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என நிலை குழைந்து போனான்.
அவள் உயிருக்கு ஆபத்தா? இல்லை யாருக்கேனும் விற்றுவிட்டானா? என்று பலவற்றை யோசித்து தன் தாமதத்தை நினைத்து கோபம் கொண்டான். பல நேரங்களில் நேத்ராவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவனை உயிரோடு கொன்று கொண்டிருந்தது.
'உலகத்துல எந்த கடைகோடி மூலைக்குப் போனாலும் தேடிக் கண்டுபிடிச்சு காதைப் பிடிச்சு திருகி கூட்டிட்டு வந்திடமாட்டிங்க!!!' என்று தன்னவளின் குரலில் கண்கள் கலங்கிய படி படுத்திருக்க, லட்சுமணன் அறைக்குள் நுழைந்தார். பேரனை தினமும் கண்ணில் கண்டால் தான் தனக்கு நிம்மதி என்று தினமும் மாலை மருத்துவமனை வருவார். ராம் கண்கள் கலங்கிய படி படுத்திருப்பதைக் கண்டு என்னவென்று விசாரித்தார்.
"லவ் டயலாக்ஸ் பேசும் போதும், கேட்கும்போதும் ரெம்பவே நல்லா இருக்கு தாத்தா.... ஆனால் இப்போ.... இங்க... இங்கேலாம் வலிக்குது தாத்தா...." என்று நெஞ்சையும், மூளையையும் சுட்டிக் காண்பித்துக் கூறிட,
"ஏதோ ஒன்றின் மீது வைக்கப்பட்ட முழுமையான நம்பிக்கை உடைபடும் போதுதான்... இனி எதுவுமே தேவையில்லை என்ற நிலைக்கு வந்து விடுகிறது மனித மனம்!... நீயும் அப்படி ஒரு சாதாரண மனிதனா இருக்காதே... உன்னால உன் மனைவி குழந்தைய கண்டுபிடிக்க முடியும்னு நீ வெச்சிருந்த நம்பிக்கைய எப்பவும் கைவிட்டுடாதே... உனக்கு துணையா உன் குடும்பம் இருக்கு... நீ உன் மேல வெச்சிருக்க நம்பிக்கைய விட, உன் மனைவி உன் மேல வெச்சிருக்க நம்பிக்கை அதிகம்...
நீ கலைத்து ஓய்ந்து நிக்கிர நேரம் தான் உன் எதிரி பல மடங்கு பலத்தோட வேகமா ஓடுவான்... நீ பின் தொடர வேண்டியது அவன் பாதைய இல்லே... அவன் பதிச்சிட்டு போன பாத சுவடை... ரெம்ப நேரம் ஓய்வு எடுத்துக்காதே... சீக்கிரம் என் பேத்தியையும், கொள்ளு பேத்தியையும் வீட்டுக்கு கூட்டிட்டு வா...." என்று அவர் பேசியதில் மீண்டும் தன் முயற்சியைத் தொடர்ந்தான்.
நேத்ரா கடத்தப்பட்ட நாளில் இருந்து செக் போஸ்ட்களில் கடுமையான காவல் இடப்பட்டிருக்க மதனால் ஊரைவிட்டு வெளியேற முடியவில்லை. மதன் கணக்கிட்டது என்னவென்றால், ராமை வெறி தீரும்மட்டும் அடித்துவிட்டு, அது போலீஸ் காதுக்குச் சென்று, அதன்பின் அவர்கள் ஆக்ஷன் எடுப்பதற்குள் ஊரைவிட்டு வெறியேறிவிட்டால், வங்காளம் சென்று தப்பிவிடலாம் என்று நினைத்திருந்தான்.
நேத்ராவையும் போதைக்கு அடிமையாக்கிவிட்டு, தன் சொல்லுக்கு கட்டுப்பட வைத்து, அவளது உடலை படமாக எடுத்து அவளை அசிங்கப்படுத்த நினைத்தான். ஆனால் இவன் திட்டப்படி இல்லாமல் சுராஜித்தின் துரிதமான செயல்பாட்டால் செக்போஸ்டை தாண்ட முடியாமல் போக, தன் உயிருக்கு இரட்டைப் பாதுகாப்பு வேண்டி, வெண்பாவின் பள்ளிக்குச் சென்று ராமிற்கு ஆக்ஸிடன்ட் என்றும் தான் நேத்ராவின் தூரத்து சொந்தம் என்றும் கூறி நேத்ராவுடன் எடுத்துக்கொண்ட பழைய ஃபோட்டோவைக் காண்பித்து வெண்பாவையும் அழைத்துக் கொண்டான்.
பெண்ணவளுக்கு போதை மருந்தை இன்ஜெக்ஷன் மூலம் செலுத்தியவன், குழந்தைக்கு செல்ஃபோன் எனும் போதையை கையில் கொடுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
"அம்மா ஏன் தூங்குறாங்க?" என்ற குழந்தையிடம்,
"அம்மாவுக்கு உடம்பு சரியில்லே... அதான் தூங்குறாங்க... அம்மாவை டிஸ்டர்ப் செய்யாதே..." என்றிட வெண்பாவும் சரி எனக் கூறி செல்போனில் விளையாடத் தொடங்கினாள்.
இரண்டு நாட்கள் வெண்பாவை சமாளித்தவனுக்கு மூன்றாம் நாள் சமாளிக்க முடியாமல் போக, அவளை மிரட்டிட, குழந்தையோ கத்தத் தொடங்கியது. குழந்தையின் வாயை மூடி சத்தம் கேட்காமல் பிடித்துக் கொள்ள சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தாள் வெண்பா...
இதற்கு மேலும் காரிலேயே சுற்றுவது சரி வராது என்று உணர்ந்து கேமரா பொருத்தப்படாத சாலையில் மட்டுமே பயணித்து இறுதியில் ஒரு குக்கிராமத்தை அடைந்திருந்தான். அங்கே அவனைப் போலவே ஒரு பணப்பித்தனை தேடிப்பிடித்து அவன் மூலம் பழைமையான ஒரு பாழடைந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தான்.
இருவரையும் ஒரு அறைக்குள் அடைத்திட, மயக்கம் தெளிந்து எழுந்த வெண்பா தன் அன்னையை தட்டி எழுப்பினாள். மூன்று நாட்கள் முழுவதும் போதையினால் கண்கள் சொருகியபடி மயக்கத்தில் இருந்த நேத்ரா இப்போது நான் கண் திறந்து பார்க்கிறாள். வெண்பாவின் குரல் கேட்டிட, ஒரு நொடி தன்னை ராம் மீட்டுவிட்டான் என்று நினைத்தவள் முழுமையாக முழிப்புத் தட்டியதும் தான் மதன் இருவரையும் அடைத்து வைத்திருக்கிறான் என்று புரிந்தது.
வெண்பாவை கட்டிக் கொண்டு அழுதிட, குழந்தை இன்னுமே பயந்து அவளுடன் இணைந்து அழத்தொடங்கினாள். அதனைக் கண்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, குழந்தையை சமாதானம் செய்தாள்.
"பொம்மி... அழாதே... இதோ பார் அம்மா அழுகல... நீயும் அழக் கூடாது..." என்று கூறி தன் மடியில் வைத்துக் கொஞ்சினாள்.
"அம்மா... இந்த அங்கிள் ஏன் நம்ம ரெண்டு பேரையும் இங்கே கூட்டிட்டு வந்திருக்காங்க? நாம் எப்போ ராம் ப்பாகிட்ட போவோம்?" என்றிட,
நேத்ராவிற்கோ மீண்டும் ராமின் நினைவில் கண்கள் கலங்கிட, அன்று தன் முன்னாலேயே அடிபட்டு மயங்கியவன் நினைவில் வரவும், "ராம் ப்பாவுக்கு உடம்பு சரியில்லே... சரியானதும் நம்மல கூட்டிட்டுப் போக வருவாங்க..." என்று குழந்தைக்கு நம்பிக்கை கொடுத்தாள்.

-ஊடல் கூடும்.