• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொந்தம் 56

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"அப்பா சீக்கிரமே நம்மல கூட்டிட்டு போக வருவார் டா..." என்று தன் மகளுக்கு நம்பிக்கை கொடுத்தவள், தனக்கும் சேர்த்தே கூறிக் கொண்டாள். இருந்தும் அன்று அவன் அடிபட்டு நெற்றியிலும், கன்னத்திலும் ரத்தம் வடிந்தபடி மயங்கியது நினைவில் வர, 'என்ன செய்கிறானோ!!! எப்படி இருக்கிறானோ!!! வயிற்றிலும், இடுப்பிலும் வேறு அடித்தானே அந்த மதன். என்னவருக்கு ஏதும் ஆபத்து நேர்ந்திருக்கக் கூடாது' என்று பலமுறை மனதிற்குள் உரைத்தாள்.

அறை கதவு திறக்கப்பட, வெண்பா தன் அன்னையை கழுத்தோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, குழந்தையின் பயத்தை உணர்ந்து, அவளின் காதருகே

"பொம்மி தப்பு செய்தா மட்டும் தான் பயப்படனும். நீ இப்போ எந்த தப்பும் செய்யலே தானே! பின்னே ஏன் பயப்படுறே! உன்னை முன்னப்பின்ன தெரியாதவங்க யாராவது அடிக்க வந்தா அவங்களை கொல்லக் கூட அஞ்சக் கூடாது... புரியுதா?" என்று தன் கண்களைக் காணச் செய்ய, அதில் தெரிந்த திமிரும், இதழில் தெரிந்த புன்னகையும் இளையவளுக்கு தைரியம் கூறிட, தலையாட்டியபடி அச்சம் தவிர்த்து நிமிர்ந்து அமர்ந்தாள்.

முதலுதவி பெட்டி போல் ஒரு சிறிய பெட்டியை நேத்ராவின் அருகே வைத்து திறந்திட, அதில் ஊசியும் மருந்து இருந்தது. அதனைக் கண்டு நக்கலாக சிரித்தவள்,

"கவலைப்படாதே... இங்கேயிருந்து ஓடிப் போயிடமாட்டேன்... இது இனி தேவையில்லே.."

பதிலுக்கு அவனும் நக்காலாக சிரித்திட, பெண்ணவள் புரியாமல் பார்த்தாள். அவனே அதற்கு விளக்கமளித்தான்.

"உன் புருஷனை..." என்று ஆரம்பித்து அவளை மனதளவில் வார்த்தைகளால் குத்தி காயப்படுத்த நினைத்து, "உன் ரெண்டாவது புருஷனை அடிச்சு போட்டு தூக்கிட்டு வர தெரிஞ்ச எனக்கு உன்னை இங்கேயே கை, காலை ஒடிச்சி அடச்சி வெக்கத் தெரியாதா என்ன? எனக்கு அது தேவையில்லே. என்னை பாத்தா 'நீ என் பொண்டாட்டி... எனக்கு மட்டும் தான் நீ சொந்தமா இருக்கனும்'னு சொல்ற ஸைக்கோ மாதிரி தெரியுதா!!! அந்த ஆசைல உன்னை தூக்கிட்டு வரலே... எனக்கு அந்த ராமை பலிவாங்கனும்... அவ்ளோ தான்."

மதனின் பேச்சில் அவளுக்கு சில விஷயங்கள் நியாபத்திற்கு வந்தது. அன்று கேஸ் வாப்பஸ் வாங்கப்பட்டதாக ஒரு டாக்யூமெண்ட் கொடுக்க மதுரைக்கு வந்தாரே ராம். அன்று கூட ஏதோ மதனைப் பற்றி 'இனி அவன் ஒழுங்கா வாய் திறந்து பேசவே ஒரு மாசம் ஆகும்னு சொன்னாறே... அப்படி என்ன செய்தார்.' என்று தோன்றிட, அதை அவனிடமே கேட்டாள்.

"உன்னை என்ன செய்தார் அவர்?" என்று கேட்ட நொடி அவன் முகம் கோபம் கொண்டது. கோபத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அதில் குழந்தை தனியாகவும், நேத்ரா தனியாகவும் தரையில் கிடக்க, நேத்ராவின் அருகே சிறிய பெட்டியில் இருந்த மருந்துகள் கையில் சிக்கியதும், கையில் இரண்டு மூன்று மருந்து குப்பிகளை எடுத்து சுவற்றில் எறிந்து உடைத்தாள். அதில் மேலும் கோபம் கொண்டவன் அவளை மீண்டும் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அறைய, நேத்ராவின் இதழ் கிழிந்து இதழோரம் ரத்தம் கசிந்தது. அதற்கும் அசராமல் அவனைப் பார்த்து சிரித்திட, தன் ஒவ்வொரு செயலுக்கும் அவள் தான் வெல்வது போன்று உணர்ந்தான் மதன். வெண்பாவின் அருகே சென்று அவளை தன் கைபிடியில் தூக்கி நிறுத்தி,

"இந்த ட்ரக்-ஐ இவளுக்கு போட்டு விடுறேன்... அப்பவும் இதே மாதரி சிரி டீ பார்க்கலாம்." என்றிட தாயவள் அடுத்த நொடி அவன் காலருகே மண்டியிட்டு கெஞ்சினாள்.

"ப்ளீஸ்... அவ கொழந்தை... அவளால இதை தாங்கிக்க முடியாது... அவளை விட்டுடு... நானே போட்டுக்கிறேன்..." என்றிட,

தன் காலடியில் கிடந்து கெஞ்சுபவளைப் பார்க்க அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்போது தான் ஸைக்கோ போல் சிரித்தான். வென்றுவிட்ட திருப்தியில் அவள் கையில் ஊசி போட்டுவிட்டான்.

இன்ஜக் செய்ததும் தோன்றிடும் சிரிப்பை கட்டுப்படுத்தி, வெண்பாவுடன் பேசிக்கொண்டும், ராமைப் பற்றியும், அவனது காதலில் கழித்த இனிமையான பொழுதுகளையும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டு போதை மூளைக்கு ஏறாமல் தடுக்க முயற்சித்தாள். அன்று மட்டும் அல்ல அதன்பின் வந்த நாட்களும் அப்படித்தான் கடந்து சென்றது.

நேத்ரா அன்று காலையிலேயே ஒரு சிறுமியின் கொலை வழக்கு சம்மந்தமாக குற்றவாளியை கண்டுபிடித்து ஆதாரங்களுடன் குழந்தைகள் நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தாள். அமி அப்போது தான் கருவுற்றிருந்ததாள் நேத்ரா மட்டும் தனியாகத் தான் சென்றிருந்தாள். நேத்ரா எதிர்பார்த்தது போலவே குற்றவாளிக்கு பதினான்கு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதத்தோடு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்று தீர்ப்பு வர, அதில் அவளுக்கு பெருமளவில் வருத்தமே!

தண்டனைக்குறியவனோ பெரும் செல்வந்தன் என்பதால் நீதிமன்ற அபராதத் தொகையோடு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு அவனுக்கு பதிலாக மற்றொருவனை அனுப்பி வைக்க, அது சம்மந்தப்பட்ட அனைத்து மிருகங்களுக்கும் கணக்கில் சேர்க்கப்படாத அபராதத் தொகை செலுத்திவிட்டு, அவள் கண்முன்னாலேயே காரில் ஏறிச் சென்றான். அதனைக் கண்ட நொடி தான் எதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்து இப்பணியில் ஈடுபட்டோம்!!! என்று வெறுப்பு தோன்றியது.

அந்த நேரம் ராம் அலைபேசியில் அழைக்க, இருக்கும் கோபம், வருத்தம், வெறுப்பு அத்தனையும் அவனின் மேல் காண்பித்தாள்.

"ஹலோ"

"ஜட்ச்மெண்ட் சொல்லிட்டாங்களா?"

"ம்ம்ம்..."

"அதுக்கு ஏன் நீ டல்லா இருக்கே?"

"பின்னே அந்த தீர்ப்புக்கு சந்தோஷமா இருக்க சொல்றிங்களா? தப்பு செஞ்சவன் ஃபைனோடு சேர்த்து லஞ்சமும் கொடுத்துட்டு ஜாலியா ஜாக்குவர்-ல போறான். அவனை ஒன்னும் செய்ய முடியலே. அந்த சின்ன கொழந்த பாவம்... இவனோட ஒருநாள் சந்தோஷத்துக்கு சின்னபிள்ளையோட உயிரைப் பறிச்சிட்டான். பிள்ளைய இழந்த பேரண்ட்ஸ் எவ்வளோ கஷ்டப்படுறாங்க... இந்த அநியாயத்தையெல்லாம் பாக்க முடியாம தான் இந்த வேலையே வேண்டாம்னு சொன்னேன். இப்போவும் ஒவ்வொரு தீர்ப்புலேயும் நொந்து போறது நான் தான்." என்று கவலையும் கோபமுமாக உரைத்திட,

"சரி... நீ மூட் அவுட்ல இருக்கே போல... நான் அப்பறம் பேசுறேன்..." என்று கூறி ஃபோனை வைத்தவிட்டான்.

இன்னும் நேத்ராவின் கோபம் அதிகமாகியது. காரில் ஏறி புறப்பட, "மேடம் சார் உங்களை கம்பெனிக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க" என்று ட்ரைவர் அவளிடம் கூறியபடி மகிழுந்தை ராமின் கம்பெனிக்குத் திருப்பினார்.

இருக்கட்டும் நேரிலேயே போய் நல்லா அடி கொடுக்குறேன். அக்கறை இருக்கறவர் மாதிரி ஃபோன் பண்ணி கேக்க வேண்டயது, திட்ட ஆரம்பிச்சாட்டா அப்பறமா பேசுறேனு வச்சிட வேண்டியது... என்று மனதிற்குள் தன்னவனை வறுத்துக் கொண்டிருந்தாள்.

நீதிமன்றம் தாண்டி கொஞ்சத் தூரத்திலேயே, விபத்து என்று கூட்டம் கூடியிருக்க, மருத்துவ அவரச ஊர்தியில் சிறிது நேரத்திற்கு முன் குற்றவாளி கூண்டில் நின்றிருந்தவன் ஏற்றிச் செல்லப்பட, ஒரு நொடி பரிதாபம் கொண்டாள் நேத்ரா. ஆனாலும் மறு நொடியே கடமை-க்கு லஞ்சம் கொடுக்கலாம், கடவுளுக்கு கொடுக்க முடியுமா என்ன? என்று நினைத்து சற்று ஆறுதலாக உணர்ந்தாள்.

கம்பெனியில் தரி நெய்யும் பகுதியில் ராம் மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்க, கோபத்தோடு உள்ளே நுழைந்தவளால் அனைவர் முன்னிலையிலும் அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் போக, அவன் அருகே சென்று கைகட்டிக் கொண்டு அமைதியாக நின்றாள்.

தன் காரியத்தரிசி பிரகல்நாத்துடன் பேசிக் கொண்டிருந்தவன், தன்னவளின் கோப வதனத்தைக் கண்டு மேலும் அவளின் பொறுமையை சோதிக்கும் நோக்கில் இல்லாத வேலை எல்லாவற்றையும் பற்றி பேசிட, எதிரில் நிற்பவர் அவனை சற்று வித்தியாசமாகப் பார்த்திட, அதற்கு மேல் அவரிடம் அசிங்கப்பட விரும்பாமல் அவரை அனுப்பி வைத்தான்.

அவர் சென்ற பின்னும் தன்னிடம் பேசாமல் நிற்கும் தன் வதுகையவளின் கோப முகத்தை ரசித்தவன், அவளின் கை பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

"இப்போ சொல்லு... உனக்கு என்ன வருத்தம்?"

"இப்போ மட்டும் எதுக்கு கேக்குறிங்க?" என்று முறுக்கிக் கொள்ள,

தன்னவளின் தோளில் கைபோட்டபடி அழைத்துச் சென்று தன் இருக்கையில் அமர வைத்தான்.

"நானும் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். அதான் ஃபுல்லா கேட்க முடியலே... இப்போ சொல்லு..." என்றிட பெண்ணவளின் மனமும் கொஞ்சம் இறங்கி வந்தது.

"என்னத்தை சொல்ல... கோர்ட் கொடுத்த தண்டனைல தப்பிச்சாலும், கடவுள் தண்டனை கொடுத்துட்டார். செத்துட்டான்..."

"அந்த தண்டனைல உனக்கு சந்தோஷமா?"

"ம்ம்ம்... இனி ஒரு பொண்ணு அவன் ஆசைக்காக சாகத் தேவையில்லேயே... இருந்தாலும் இப்படி பொட்டுனு போயிருக்கக் கூடாது... செய்த கொடுமைக்கு நல்லா சித்ரவதைப்பட்டு தான் செத்திருக்கனும்..."

"ம்ம்ம் சரி ஓகே... அடுத்தமுறை இந்த மாதிரி தப்பு செய்றவனுக்கு அப்படி ஒரு தண்டனை கொடுத்திடலாம்..."

முதலில் அவன் கூறியது பெரிதாகத் தோன்றிடவில்லை. அரைகுறையாக கவனித்தவள் அவனின் முகத்தில் தெரிந்த புன்னகையில் முழுவதும் புரிந்திட, கண்களை விரித்து காண்பித்து,

"ராம்... இதெல்லாம் தப்பு இல்லேயா?"

"இது சின்ன பொண்ணு மேல கை வெக்கிறது முன்னாடி அவனுக்கு தோனிருக்கனும்... தோனலே..." என்று கூறி தோளைக்குழுக்கினான்.

"இருந்தாலும்..." என்று இழுத்தவளைத் தடுத்து,

"ஹேய் தரு லுக்... அவன் செத்தான்னு தெரிஞ்சதும் ஒரு செகண்ட்னாலும் சந்தோஷப்பட்டியா!!! இல்லேயா!!!" என்றிட, அவளும் அதே விழிவிரித்த பார்வையோடு, ஆம் என மேலும் கீழும் தலையசைத்தாள்.

"அதான்... அதான் எனக்கு வேணும். கொஞ்ச நாள் இந்த கேஸ் விஷயமா அலஞ்ச உனக்கே சந்தோஷமா இருக்குனா அந்த பேரண்ட்ஸ் எவ்ளோ சந்தோஷப்பட்டிருப்பாங்க!?"

நேத்ராவிற்கு இப்போது சந்தோஷப்பட முடியவில்லை. ராமையே பார்த்தபடி அமர்ந்திருக்க, "நான் நல்ல விஷயம் செய்தா பாராட்டமாட்டியா?" என்று கண்ணடித்து வினவி அவளை இயல்புக்கு கொண்டு வர நினைத்தான்.

"இது நல்ல விஷயமா!!!" என்று அவள் முறைக்க,

"அப்போ பனிஸ்மெண்ட் ஆவது கொடு டி" என்று அவளை மடக்க, பெண்ணவள் முதலில் கோபமும் பின் வெட்கமும் கொண்டு எழுந்து செல்ல, அவள் கை பிடித்து நிறுத்தி பின்னால் இருந்து அணைத்து,

"இன்னும் எத்தனை நாளைக்கு தான் முத்தத்துக்கே வெட்கப்பட்டு ஓடி ஒழிவ, அப்பறம் எப்படி அமி மாதிரி ஷாக்கிங் சர்ப்ரைஸ் சொல்றது!!! ஆசைபட்டா மட்டும் போதுமா? முயற்சி செய்ய வேண்டாமா?"

அவன் கைகளுக்குள் நெளிந்தபடியே அமைதியாக நின்றிருக்க, "உன் ஆசைய நிறைவேத்த நான் வேணுனா ஹெல்ப் பண்ணட்டுமா?"

"நான் வீட்டுக்கு போகனும் என்னை விடுங்க... அம்மாவும், அமியும் எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க..." என்று அவனிடம் இருந்து விடுபடுவதிலேயே குறியாக இருந்தாள் பெண்ணவள்.

"ச்சீ போடி... சின்னபிள்ளத்தனமா ரீசன் சொல்லிகிட்டு... இனி நானா உன்கிட்டக்க கூட வரமாட்டேன்... போடி" என்று கோபம் போல் கூறி அவளைவிட்டு நகர்ந்து நின்றான். அது பொய் கோபம் என்று தெரிந்த போதும் கூட அவனை கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்தாள் அவன் வதூ.


ஊடலும், கூடலுமாக தனக்கும் தன்னவனுக்கும் இடையே காதல் மலர்ந்த தருணங்களை அசைபோட்ட படி, வெண்பாவிற்கு தைரியம் கொடுக்கும் பணியையும் சிறப்பாகவே செய்தாள் நேத்ரா. ஒருவாரம் கடந்திருக்க, எப்போதும் போல் தினமும் இன்ஜக்ஷன் போடும் நேரத்திற்கு வந்த மதன்,

"உன்னோட ஆசை கணவனுக்கு எல்லாம் மறந்துடுச்சாம்... யாரையும் தேடவேண்டாம்னு சொல்லிட்டானாம்..." என்று சந்தோஷமாக சிரித்துக் கொண்டே கூறிட, பெண்ணவள் கண்கள் கலங்கிட அதனைக் கண்டு இன்னும் ஆனந்தம் கொண்டான்.

வெண்பாவிடம் "அந்த ராம் உங்களை கூட்டிட்டு போக வரமாட்டான். இனிமே நான் சொல்றதை கேட்டு நல்லபிள்ளையா நடந்துக்கோ... உன் அம்மா மாதிரி சின்ன வயசுலேயே செத்திடாத..." என்றிட மழலைக்கு அதன் அர்த்தம் புரிந்திடவில்லை.

அரைகுறை நிதானத்தில் இருந்த நேத்ராவிற்கு புரிந்திட, அவன் சட்டையைப் பிடித்து "ஹிரிக்குட்டிய நீதான் கொன்னியா?" என்று ஆற்றலே இல்லாமல் மெல்லிய குரலில் வினவினாள்.

அதற்கு அவன் பதில் கூறாமல் சிரித்தபடி அறையைவிட்டு வெளியேறினான். மறுநாள் வந்தவனிடம் அதே கேள்வியைக் கேட்டாள்.

தன் பணியை செய்து கொண்டே அவளின் முகம் பார்த்து "ஏன்?...... அவன் எதுவும் உன்கிட்ட சொல்லலேயா?...... அவனுக்கு தான் எல்லாமே தெரியுமே?...." என்று நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு கேள்விக்கும் இடைவெளி விட்டு கேட்டிட,

"எல்லாம் தெரியும்னா?.... என்னென்ன தெரியும்?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவளின் கண்கள் சொருகத் தொடங்கியது. என்றும் இல்லாமல் இன்று அதிக டோஸ் கொடுத்திருப்பான் போல... மிக விரைவாக போதை ஏறத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல் அவளால் அவளை தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினாள்... தன் தலையைத் தட்டி, மூளைக்கு ஏறிடும் போதையை கலைத்து, அவன் சொல்லப்போகும் பதிலுக்காக காத்திருந்தாள் நேத்ரா.

"இவ அம்மா எப்படி செத்தா!!! இவளோட அப்பன் யாரு!!! அவனுக்கு இப்போ என்னாச்சு!!! எல்லாமே தெரியும்" என்று வெண்பாவின் அருகே சென்று நின்று பல்லைக் கடித்துக்கொண்டு கோபமாக உரைத்தவன், வெறி கொண்டு அச்சிறுமியை அடிக்கக் கை ஓங்கிட, நேத்ரா குறுக்கே சென்று அந்த அடியை வாங்கிக் கொண்டாள். அதனைக் கண்டு நக்கலாக சிரித்தவன்,

"உண்மைய சொல்றேன். முடிஞ்சா மயங்கம் போடாம கேட்டுக்கோ..." என்றுவிட்டு, ஹரித்ரா பற்றிய உண்மையைக் கூறத் தொடங்கினான்.

"நான் ஃபாரின் போக ட்ரை பண்ணிட்டு இருந்த நேரம், ஒரு வெள்ளைக்காரனை அறிமுகப்படுத்தினான் என் ஃப்ரெண்டு. அவங்க நாட்டுல பதினெட்டு வயசுக்கு கீழ இருக்கிற பெண் குழந்தைகளை தொட்டா தினம் தினம் அடிச்சே கொல்லுவானுங்களாம்... பதினஞ்சு வயசுல ஒரு பொண்ணு கேட்டான். ஏற்பாடு பண்ணிக் கொடுத்தா விசாவுக்கு ஏற்பாடு செய்றதா சொன்னான். அவனை நம்பி ஏமாந்தது தான் மிச்சம்...." என்று தன் ஏமாற்றமே பெரிது என்பது போல் கூறியவை வெட்டிக் கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டாள் நேத்ரா... போதையின் விளைவால் ஒன்றும் செய்ய முடியாமல் போக,

"ஹிரித்ராகிட்ட வம்பு பண்ணின ரெண்டு பேர் யாரு?" என்று கண்கள் சிவக்க நாவறண்டு கேட்டவளை ஏளமாகப் பார்த்து,

"பரவாயில்லேயே... இன்னும் தெளிவா தான் இருக்கேயா? அவனுங்க ப்ரெண்ட்ஸ்ன்ற பேர்ல என் கூட இருந்த பச்ச துரோகிங்க... அந்த வெள்ளக்காரனோட சேர்ந்து நல்லா அனுபவிச்சிட்டு, கடைசில கைய விரிச்சுட்டானுங்க....

இப்போ உனக்கு கொடுத்த அதே ட்ரக்ஸ்-ஐ தான் ஹரித்ராவுக்கும் கொடுத்து கூட்டிட்டு போனேன். நல்லாவே வேலை செஞ்சது. ஒருநாள் முழுக்க சிரிச்சுகிட்டே இருந்தா... சுத்தி என்ன நடக்குதுனு கூட தெரியாம நல்லாவே கோ-ஆப்ரேட் பண்ணினா"

"ஷரித்ராவ செக் பண்ணின டாக்டர் நாலு பேர்னு சொன்னாங்க...அப்போ அந்த இன்னொருத்தன்......?" என்று பதில் தெரிந்தும் தன் கேள்வியை பாதியோடு நிறுத்த, அப்போது ஏதோ சாதித்துவிட்டது போன்று பெருமிதமாக சிரித்து,

"வெண்பா என் பொண்ணுனு சொல்லி கோர்ட்ல கேஸ் போட்டதுலேயே தெரியலே... ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தா உண்மை என்னனு தெரிஞ்சிடும், அப்படி இருக்கும் போது எப்படி இப்படி ஒரு பொய் சொல்லி கேஸ் போட முடியும்?...." என்று மீண்டும் சிரித்தான் மதன். அத்தோடு முழு மயக்கத்திற்குச் சென்றிருந்தாள் நேத்ரா.

-ஊடல் கூடும்.​