• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
வெண்பாவின் தந்தை.... தான் தான் என்று மதன் கூறிட, போதையின் வீரியத்தோடு உண்மையின் தாக்கமும் சேர்ந்துகொள்ள மயங்கி சரிந்தாள் நேத்ரா. அதன்பின் வந்த நாட்கள் எவ்வித கேள்வியும் இல்லாமல் தினமும் இன்ஜக்ஷன் போட்டுக்கொள்ள, அவளை சீண்ட நினைத்தான் மதன்.

"நாலு பேர்ல நான் தான் அப்பானு எப்படி இவ்ளோ உறுதியா சொல்றேனு உனக்கு சந்தேகம் வரலேயா?" என்று அவளை வெறுப்பேற்ற வேண்டியே சிரித்துக் கொண்டே வினவினான். பெண்ணவள் எந்த பதிலும் சொல்லாமல் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையில் என்ன இருந்தது என்று மதனால் கண்டறிய முடியவில்லை. வெறுப்பா? பயமா? சோகமா? நிச்சயம் இதில் ஒன்றோடு சேர்த்து திமிரும் நிறைந்திருந்தது.

"மத்த மூனு பேரையும் ராம் என்ன செய்தார்?" என்ற கேள்வியில் வெறுப்படைந்தது மதன் தான்.

"அவங்களைப் பத்தி யோசிக்கிற நீ உன் நிலைமை என்னனு யோசிச்சேயா? என்னை பத்தி தெரிஞ்சிருந்தும், உன்னையும் வெண்மாவையும் மூனு வாரமா கண்டுபிடிக்காம என்கிட்ட விட்டிருக்கானே!!! அதுலேயே தெரியலே அவனோட காதல் அவ்ளோ தான்னு... ஹரித்ராவோட நிலை உனக்கும், நீ ஆசையா வளக்குறேயே உன் பொண்ணுக்கும் வர வாய்ப்பு இருக்குனு தெரிஞ்சும் இன்னும் உங்களைத் தேடலேனா என்ன அர்த்தம்? அவனுக்கு நீங்க வேண்டாம்னு அர்த்தம்..." என்று கூறி சிரித்திட, பதிலுக்கு நேத்ராவும் வெற்றிச் சிரிப்பு சிரித்தாள்.

அப்போது தான் ஊசி போட்டு முடித்திருந்தவன் அவளது சிரிப்பில் இன்ஜக்ஷனை எறிந்து அவள் கழுத்தைப் பிடித்து "எதுக்கு டி இப்படி சிரிக்கிறே?" என்று கோபமாக வினவினான். நேத்ராவோ அப்போதும் பதில் கூறாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அந்த சிரிப்பின் வித்தியாசம் மதனுக்கு நன்றாகவே புரிந்தது. இது நிச்சயம் போதையில் உண்டாகும் சிரிப்பல்ல என்று நன்கு அறிந்திருந்தவன், அவளின் கழுத்தை நெறிக்க, அப்போது சிரித்தாள். மேலும் கோபம் கொண்டவன், அந்த சிரிப்பை நிறுத்த வெண்பாவை நெருங்கினான்.
☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️

இங்கே மருத்துவமனையில் கமலுக்கும், அபிக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. லட்சுமணன் வந்து சென்றபின் நம்பிக்கையோடு அடுத்த முயற்சியில் ஈடுபட்டான் ராம். அதற்கு கமலையும் உதவிக்கு அழைத்திட அவனும் வந்து சேர்ந்துவிட்டான்.

அபிக்கு கமலோடு இணைந்து நேத்ராவைத் தேடுவதில் உடன்பாடு இல்லை. அதனால் தானும் சுராஜித்தும் செல்வதாகக் கூறிட, கமலோ

"டேய் இந்த நேரம் கூட மொறச்சிட்டு தான் இருப்பேயா? இது ஒன்னும் உனக்கும் எனக்கும் போட்டி கெடையாது..."

"பையா எனக்கு அவன் கூட பேசவும் பிடிக்கலே... போகவும் பிடிக்கலே. ஜீத்து பையா நீங்க இன்னு ரெண்டு மஃப்டி போலிஸ் கூட அனுப்புங்க இவன் வேண்டாம்..." என்று தன் தமையனிடம் ஆரம்பித்து சுராஜித்திடம் முடித்திட,

"ராம் நீங்க உங்க ப்ளானை சொல்லுங்க... அவனா பேசி முடிச்சிட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்..." என்று கமல் ராமிடம் கூறினான்.

ராம் கூற ஆரம்பிக்க அபி வேறு வழியில்லாமல் அமைதியாகக் கேட்க ஆரம்பித்தான். ராம் கூறியது சுராஜித்திற்கு சரி என்றே தோன்றிட, மதனுக்கு இதற்கு முன்னால் ட்ரக்ஸ் கைமாற்றிக் கொடுத்த 'ஷாகித்' என்பவனை அழைத்து வந்து மதனின் வாட்ஸ்அப்-பிற்கு புதிய ட்ரக்ஸ் மார்க்கெட்டில் வந்திருப்பதாக குறுந்தகவல் அனுப்பும் படி கூறினர்.

மறுநாள் அதற்கு 'வேண்டும்' என்று மட்டும் பதில் வந்திருந்தது. 'எப்போதும் சந்திக்கும் இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்' என்று அனுப்பி வைக்க, இந்தமுறை அங்கே வரமுடியாது என்றும், தான் சொல்லும் இடத்தில் வந்து கொடுத்துவிட்டு, இரண்டு மடங்கு பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறுந்தகவல் வந்து சேர்ந்தது. மூன்று நாட்களில் வருவதாக பதிலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்காகவே இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தது போல் ராம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யத் தொடங்கினான். சுராஜித் காவல் அதிகாரி என்பதால் அங்கே வேறுவிதமான சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டால் அவன் வேலைக்கு வேட்டு வைத்தது போல் ஆகிவிடும் என்று அவனை நிறுத்தி வைத்திருந்தான் ராம்.

ஷாகித்-தின் இடையில் சிறியளவிலான பாம்ப் பிளாஸ்டர் பொருத்தி அதன் கன்ட்ரோலர் ராமின் ஃபோனில் பயன்படுத்துவது போல் செய்திருந்தனர். அதே போல் காரின் முன்பக்கத்தில் திறன்பேசியோடு இணைக்கப்பட்ட கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் ராம் அங்கே நடப்பவற்றை இங்கிருந்தே பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தான். சுராஜித் கமல் மற்றும் அபிக்கு புல்லட் ப்ரூஃப் உடையும், கள்ளத் துப்பாக்கியும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். அவசரத்திற்கு மட்டும் பயன்படுத்துமாறு கூறியிருந்தான்.

கமலும், அபியும் தயாராக இருக்க, ராம் கமலை அருகில் அழைத்து, "கமல்... பீ கேர் ஃபுல்... எனக்கு தருவும், பொம்மியும் எவ்ளோ முக்கியமோ அதைவிட நீங்க ரெண்டு பேரும் முக்கியம்... 99% மதன் மட்டும் தான் வருவான். அவனை ஃபாலோ பண்ணுறேனு உங்களை மறந்துடாதிங்க... உங்க உயிருக்கு ஆபத்து வரும்னா தயவு செய்து பின்வாங்கிடுங்க... எனக்காக ப்ளீஸ்..." என்று சில கெஞ்சல்களோடு, பல அறிவுரைகளையும் வழங்கினான்.

"சோட்டூ... கமலோட உயிர் உன்னோட பொறுப்பு... கமலுக்கு எதுவும் ஆகாம நீ தான் பாத்துக்கனும்... உன்னோட உயிர் எனக்கு சொந்தமானது... உனக்கு ஏதாவது ஆச்சுனா நானும்..." என்றவனின் வாயை மூடினான் அபி...

"நோ வொரீஸ் பையா... ரெண்டு போரும் சேந்து உங்க ரெண்டு உயிரையும் பத்திரமா கூட்டிட்டு வருவோம்... எங்களுக்கும் எதுவும் ஆகாது... அவங்களுக்கும் எதுவும் ஆகாம கூட்டிட்டு வந்து உங்க முன்னாடி நிப்பாட்டுவோம்..." என்றிட, இவ்வளவு நேரம் சிறுபிள்ளைத்தனமாக கமலோடு செல்லமாட்டேன் என்று சண்டையிட்ட அபியா இது என்பது போல் பார்த்தான் ராம்.

இருவரும் ஆளுக்கு ஒருபுறம் ராமின் கையை பிடித்துக் கொள்ள, ராம் கண்கள் கலங்கியபடி மனமே இல்லாமல் இருவரையும் அனுப்பி வைத்தான்.

மதன் சொன்ன இடத்திற்கு வர அது ஒரு மலைத்தொடர் போன்ற பகுதியாக இருந்தது. அந்த மலையில் அடுக்கடுக்காக அமைந்திருந்த வீடுகள் தூரத்தில் இருந்து பார்க்க படிக்கட்டுகள் போன்று இருந்தது. மக்கள் புலங்கும் பொது இடத்தில் எப்படி பொருள் கைமாற்ற முடியும்!!! என்ற யோசனை இருவருக்கும் தோன்றிட, ஒருவேலை தேடுவது தெரிந்து திசைதிருப்ப முயற்சிக்கிறானோ என்று தோன்றிட, தங்களையே நினைத்து நொந்து கொண்டனர் இருவரும்.

ராமிற்கு அழைத்து விஷயத்தைக் கூறினான் அபி. "பையா இது ஏதோ மலைப்பிரதேசம் மாதிரி இருக்கு. இங்கே அவன் இருக்கிற மாதிரி தெரியலே..." என்றிட,

"ஷாகித்-ஐ கால் பண்ணி பேச சொல்லு..." என்று ராம் கூறிட, அது போலவே செய்தனர். ஆனால் மதனுக்கு ரிங் போனதே ஓழிய, அழைப்பை எடுத்தபாடில்லை...

அபியோ கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தன் கையை அங்கே இருந்த மரத்தில் ஓங்கி குத்திக் கொள்ள, விரல்களின் மூட்டுகளில் ரத்தம் கசிய, கமல் தன் கைகுட்டையை எடுத்து அவன் உள்ளங்கையோடு சேர்த்து கட்டிவிட்டபடி,

"உன் உயிரி உன் அண்ணனுக்கு மட்டும் சொந்தமானது இல்லே... இன்னொருத்திக்கும் சொந்தமானது... உனக்கு ஏதாவது ஆனா அவளுக்கும் தான் வலிக்கும்... மறந்திடாதே" என்றிட, அவன் யாரைக் கூறுகிறான் என்று தெரிந்ததும், ஒருநொடி சில்லிட்ட மனதை ஒருநிலைப்படுத்தி,

"இப்போ அதை பத்தி பேச வேண்டிய நேரமோ! கவலைப்பட வேண்டிய நேரமோ இல்லே!!!..." என்றவனால் அதற்கு மேல் பேசமுடியாமல், நேத்ரா மற்றும் வெண்பாவின் நினைவுகள் கண் முன்னே வந்து நின்றது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் வாகனத்தில் காத்திருக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் ஷாகித்தின் ஃபோன் ரிங் ஆனது. மூவரும் பதைபதைப்புடன் எடுத்துப் பார்க்க, அது அவனது எண் தான்.

"ஹலோ... சார் நீ சொன்ன எடத்துக்கு வந்துட்டேன். நீ எங்கே இருக்க?"

"நான் லொக்கேஷன் ஷேர் பண்ணியிருந்தனே!!! ஏன் இவ்ளோ லேட்டா வர்றே!!!... சரி இப்போ ஒருக்க அனுப்புறேன்... சீக்கிரம் வா" என்ற அடுத்த நிமிடம் கால் கட் செய்யப்பட்டது.

"சார் லொக்கேஷன் ஷேர் பண்றதா சொன்னான் சார்..." அடுத்த நிமிடம் குறுந்தகவல் அவன் திறன்பேசியில் வந்தே விழுந்திட, அதனை கூகுல் மேப்பில் தேடிப்பார்த்ததில், அவ்வடத்தின் மலையடுக்குளில் கடைசி அடுக்கு என காண்பித்தது. அங்கே மற்ற வீடுகளில் இருந்து சற்று தள்ளி ஒரு வீடு மட்டும் தன்னந்தனியாக இருந்தது. அதனை அடுத்து முழுவதும் காடு தான்.

கமல் அவ்வீட்டின் முன்புறம் சற்று தள்ளி ஒரு மரத்தின் அருகே மறைந்து நிற்க, அபி பின் பக்கம் சென்று வீட்டை நோட்டமிட்டான்.

ஷாகித் காதிலும் புளூடுத் பொறுத்தப்பட்டு ராம் மூவரிடமும் பேசும்படியாக கால் கனெக்ட் செய்திருந்தான்.

நேத்ராவையும், வெண்பாவையும் நெருங்குகிறோம் என்ற நினைப்பே அனைவருக்குள்ளும் பிரளயத்தை ஏற்படுத்தியிருந்தது. இருவரும் அந்த வீட்டிற்குள் இருப்பார்களா? இருந்தாலும் பத்திரமாக இருப்பார்களா? என்ற பயம் உள்ளுக்குள் தோன்றாமல் இல்லை.

ராமிற்கோ இங்கே மருத்துவமனையில் ஒவ்வொரு நொடியும் யுகமாகக் கடந்து கொண்டிருந்தது. செவிகளைத் தீட்டிக் கொண்டு யாருடைய குரலேனும் கேட்கிறதா என்று உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினான்.

பின்பக்கமாக சென்றிருந்த அபி ஜன்னல் கதவுகளை மெதுவாகத் தள்ளிப் பார்த்தபடி வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்தான். உள்ளே யாரும் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. முன்பக்கம் கமல் கதவு திறக்கப்படுவதற்காகக் காத்திருந்தான்.

ஷாகித் கதவை தட்டிட, உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை. மறுபடியும தட்டிட, அதற்குள் "சோட்டூ..." என்ற வெண்பாவின் குரல் கேட்டது. சிறுமியின் கத்தலில் தான் கடந்து வந்த ஜன்னலை மீண்டும் சென்று பார்த்தான் அபி. கதவின் பின்னால் நின்றிருந்த சிறுமி துள்ளிக் குதித்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை "சோட்டூ..." என்று கத்தியபடி வாசலை நோக்கி ஓடினாள்.

அபி முன்பக்கமாக ஓடிவருவதற்குள் வெண்பா கதவைத் திறந்திருந்தாள். எதிரில் நின்றிருந்த ஷாகித்-ஐ கண்டு அஞ்சி பின்னால் செல்ல அதற்குள் அவன் வெண்பாத் தூக்கி வைத்துக் கொண்டு,

"சார் என் இடுப்புல இருக்குற பாம்-ஐ எடுக்க சொல்லு... உன் குழந்தை இப்போ என் கையில இருக்கு..." என்று ராமை மிரட்டினான்.

சற்று தள்ளி நின்றிருந்த கமல் அவன் முன் தன் துப்பாக்கியை தூக்கிக் காண்பித்தான். "சார் இப்பவும் என் உயிர்மேல இருக்குற பயத்துல தான் கொழந்தைய தூக்கினேன். என்னை உயிரோட விட்டுட சொல்லு தான் கொழந்தைய இறக்கிவிட்டுட்டு ஓடிருறேன்." என்று துப்பாக்கியைப் பார்த்த பயத்தில் மீண்டும் மிரட்டினான்.

அதற்குள் முன்பக்கம் வந்த அபியின் கண்கள் நேத்ராவையும், மதனையும் தேடியது... துப்பாக்கியைப் பிடித்திருந்த போதும் கமலின் பார்வையும் அவ்வபோது கதவைத் தான் தொட்டு வந்தது, மகனை எதிர்பார்த்து.

"கமல் அவன்கிட்ட இருக்குற பாம்-ஐ எடுத்திடு" என்று ராம் கூறியதும், அபியை வீட்டின் உள்ளே சென்று பார்க்குமாறு கண்ஜாடை செய்துவிட்டு, துப்பாக்கியை பின்பக்கம் சொருகிக் கொண்டு, ஷாகித்திடம் இருந்த பாம்-ஐ எடுத்துக் கொண்டு, வெண்பாவை வாங்கிக் கொள்ள, அவன் அங்கிருந்து தப்பி ஓடினான்.

ராமிடம் அதனைக் கூறியதோடு கூடுதல் தகவலாக "கொஞ்ச நேரத்துல அவன் மயங்கிடுவான், அள்ளி கொண்டு வந்து போடுறேன்... நீங்களே அவனை என்ன செய்யிறதுனு முடிவு பண்ணிக்கோங்க..." என்று சாதாரணமாகக் கூறினான் கமல். சொன்னது போல் ஓடிக்கொண்டிருந்தவன் தள்ளாடியபடி மயங்கி சரிந்தான்.

"கமல் ரெண்டு பேரும் சேஃபா இருக்காங்களா?" என்ற ராமிற்கு, "பொம்மி மட்டும் தான் வெளியே வந்திருக்கா... இன்னும் சிவா வரலே... அபி தேடி போயிருக்கான்." என்றிட ராமிற்கு இதயத் துடிப்பு பல மடங்கு அதிகமாகியது.

"பொம்மி... அப்பாகிட்ட பேசு..." என்று புளுடூத்தை வெண்பாவின் காதில் வைத்திட, வெண்பாவின் "ராம் ப்பா... ராம் ப்பா..." என்ற அழைப்பில் ராமின் கண்கள் மடை திறந்த வெள்ளமாகியது.

"சொல்லு டா... பாப்பா பத்திரமா இருக்கிங்களா டா?"

"ஹாங்... ப்பா... அம்மாவே தான் அந்த பேட் அங்கில் அடிச்சுட்டான்..." என்றிட, ராம் தன்னவளை நினைத்து மேலும் கண்ணீர் சிந்தியபடி,

"அம்மா எங்கே டா?"

"அம்மா.... ட்ரெஸ் எல்லாம் கிளிச்சு.... அடிச்சு... ரெம்ப டயர்டா இருக்காங்க..." என்றிட கமலின் கண்களும் நிறுத்தாமல் கண்ணீர் சிந்தியது.

"சோட்டூ... ஏதாவது பேசு டா? தரு... தருக்கு... என் தருக்கு என்னாச்சு?" என்று மெத்தையில் அமர முடியாமல் படபடத்தபடி எழுந்திட, இடுப்பில் சிலீரென வலியை உணர்ந்தவன், அதற்கும் மேற்கொண்டு தன் நெஞ்சிலும் வலியை உணர்ந்தான்.

அபியிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, "கமல்... தருக்கு என்னாச்சு? யாராவது பேசுங்கடா?" என்று கத்தினான் ராம்.

"ராம் ப்பா.... அம்மா அழறாங்க... நீங்க ஏன் எங்களை அழச்சிட்டு போக வரலே... அந்த பேட் அங்கில் நீங்க வரமாட்டிங்கனு சொன்னாங்க... ஏன்? எங்க இருக்கிங்க?"

ராமிற்கு தன்னவளின் நிலை என்னவென்று தெரியாமல் பேசக் கூட முடியவில்லை. ஆனால் இந்த பிஞ்சின் உள்ளமும் தன்னை எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறதே!!! அவளிடம் பேசாமல் விட்டால் இன்னும் ஏங்கித் தவிக்குமே!! என்று கடினப்பட்டு, தன் கண்ணீரை விழுங்கிக் கொண்டு பதில் கூறினான்.

"அப்பா... அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கேன் டா?" என்றிட,

"உங்களுக்கு உடம்பு சரியில்லேனு அம்மா சொன்னாங்க... நான் மறந்துட்டேன்... சரியானதும் தான் வந்து எங்களை கூட்டிட்டு போவிங்களா?" என்றிட,

பதறியபடி மறுத்தான் ராம்... "இல்லே டா... இல்லே... இனிமே நீங்க அங்கே இருக்க வேண்டாம், சோட்டூவும், கமல் அங்கிலும் உன்னையும் அம்மாவையும், அப்பாகிட்ட கூட்டிட்டு வந்திடுவாங்க..."

"ஹேஏஏஏஏ.... ஜாலி..." என்று கத்தினாள் சிறுமி.

"வெண்பா குட்டி... அம்மாவை அப்பாகிட்ட பேச சொல்றியா டா?" என்று தன் குரல் உடையாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டு பேசினான்.

நேத்ராவின் காதிலும் புளுடூத் பொருத்தப்பட, அவளின் விசும்பல்களைக் கேட்ட ராம், "தரு... தரு... பேசு டீ... ப்ளீஸ் டீ..."

"எனக்கு.... எனக்கு... உங்களை பாக்கனும்..." என்றிட, உடனடியாக அழைப்பைத் துண்டித்து வீடியோ கால் செய்தான் ராம்.

நேத்ராவோ வாடிய முகம் நலிந்த தேகமுமாக ஒரு மாதமாக மதனுடன் நடத்திய போராட்டத்தில் அயர்ந்து காணப்பட்டாள். குழந்தையும் அப்படித் தான் இருந்தது. இருவரையும் கண்டு கண்கலங்கியபடி வார்த்தைகள் வராமல் அழுதான் ராம்.

நெற்றியில் சிறிய கட்டும், கண்ணத்தில் ப்ளாஸ்டருமாக அமர முடியாமல் அமர்ந்திருந்த ராமைக் கண்டவுடன் நேத்ராவின் கண்களும் கலங்கிட, இருவரும் ஒரே நேரம் தன் கைகள் கொண்டு தொடுதிரையில் தெரிந்த தன் காதலை வறுடிப் பார்த்திட, ஒரு நொடி இதழ்கள் கூட சிரிப்பில் மலர்ந்தது.

-ஊடல் கூடும்.​
 
Top