• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"உன்னை அப்போதே கண்டுபிடித்து சேவ் பண்ணிருந்தா என் உயிர் எனக்கு பத்திரமா கிடைச்ச மனநிம்மதி மட்டும் தான் இருந்திருக்கும்... ஆனா இப்போ எவ்ளோ சந்தோஷமா பெருமையா இருக்கு தெரியுமா!!!" என்று முகம் கொள்ளா புன்னகையோடு கூறினான் ராம்.

அவனின் கூற்றுக்கு எல்லா பெருமையும் உனக்கே என்பது போல் அளவான புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு, "சுராஜித் அண்ணா மூனு பேரையும் என்ன செஞ்சாங்க?" என்றாள் ஆவலாக...

அவளது கையில் ஒரு செய்தித்தாளை நீட்டினான் ராம். அதில் ஹரித்ராவின் பெயரை பயன்படுத்தாமல் மீதி அனைத்து சம்பவமும் இப்போது நடந்தது போலவும், அதை 'மானினி சுரக்ஷா' இயக்கம் கண்டுபிடித்துவிட்டதால் நேத்ராவையும், வெண்பாவையும் கடத்தியதாகவும், அடுத்து நடந்த அனைத்து சம்பவங்களும் நடந்தவற்றை அப்படியே எழுதியிருந்தனர். இறுதியில் நேத்ராவே அவர்களை கட்டிவைத்துவிட்டு காவல் நிலையத்திற்கு தெரிவித்ததாகவும், காவல் படை நேத்ராவையும், வெண்பாவையும் மீட்டு அழைத்து வரும் வழியில் மதனுடன் சேர்த்து உடன் இருந்த இருவரும் தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்யப்படதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

அதனைப் படித்து முடித்தவள், ராமைப் பார்த்து "அந்த ஃபாரினரையும், மத்த ரெண்டு பேரையும் என்ன செய்திங்க?" என்றாள்.

"ஏதோ செய்தேன்... அது எதுக்கு உனக்கு!!!" என்று சிரித்தபடி அவளை சீண்டினான்.

"தெரிஞ்சுக்கலேனா தலையே வெடிச்சிடும்... பத்து நாளா யோசிச்சிட்டு இருக்கேன்... ப்ளீஸ் சொல்லுங்களேன்... இருக்கானுங்களா? இல்லே பரலோகம் போயிட்டானுங்களா?"

"கிட்டதட்ட..."

"அப்போ ஏதோ பயங்கறமா பண்ணிருக்கிங்க... கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்... சொல்லுங்க..."

"அந்த ஃபாரினர்... அவனை கொல்றது அவ்ளோ ஈசி கெடையாது... அவனோட நாட்டுல காசு கொடுத்து எந்த வேலையும் செய்ய வைக்க முடியாது. ரூல் இஸ் அ ரூல்... சோ சின்ன ஆக்ஸிடன்ட் பண்ண வேண்டியதாகிடுச்சு... இப்போ அவன் விரலைக் கூட அவனா அசைக்க முடியாது... கிட்டதட்ட கோமா ஸ்டேஜ் தான். என்ன!!! நம்ம ஆளு ஒருத்தனுக்கு ஒரு வர்ஷம் ஜெயில் தண்டனையோடு, விசா கேன்ஸல் பண்ணிட்டாங்க... அது தான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு. தண்டனை முடியப்போகுது, வந்ததும் அவனை நம்ம கூட வெச்சுக்கனும்.

மத்த ரெண்டு பசங்க... இனி ஊசி போட்டுக்க கூட பேண்ட்டை கழட்ட முடியாது... இடுப்பை சுத்தி பச்சை குத்தியாச்சு... அதை படிக்கிறவங்க கோபப்பட்டு அடிப்பாங்க இல்லே அசிங்கமா பார்த்து சிரிப்பாங்க... அவமானம் தாங்காம அவனுங்களே சூசைட் பண்ணியிருந்தாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்லே..." என்றிட,

அப்படி என்ன எழுதப்பட்டிருக்கும்! என்று யோசித்த பெண்ணவளுக்கு, ராம் அவளின் காதில் உரைத்திட "ச்சீ..." என அவள் முகம் அஷ்ட கோணல் அடைந்தது.

"அப்பவே இவ்ளோ செஞ்ச நீங்க மதனை சும்மா விட்டிங்கனு சொன்னா நம்ப முடியலேயே!!!" என்று ஆச்சரியமாகக் கேட்க, ராம் அவளைப் பார்த்து 'சரியான கெஸ்' என்று பாராட்டுவது போல் தன் இரண்டு கண்களையும் ஒருசேர சிமிட்டிக் காண்பித்தான்.

"மதனை என்ன செய்திங்க?" என்று கதை கேட்பது போல் ஆர்வமாக வினவினாள்.

"மூனு மாசம்.... மாசத்துக்கு ஒரு இன்ஜக்ஷன்... அவ்ளோ தான்.... அப்பறம் எப்பேர்பட்ட உலக அழகியே வந்து என்னை எடுத்தக்கோனு சொல்லியிருந்தாலும் அவனால ஒன்னும் செய்திருக்க முடியாது..." என்றிட ராமை பிரமிப்பாகப் பார்த்தாள்.

இவை அனைத்தும் தன் மேல் கொண்ட காதலால் செய்தது என்று நினைத்த நொடி படுத்திருக்கும் அவனின் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவன் தோள்களைச் சேர்த்து அணைத்து "தாங்க் யூ" என்றுரைத்து முன்கழுத்தில் முத்தமிட, அவள் தலை கோதியவன், சின்ன சிரிப்போடு "தரு... இது வீடு இல்லே... இன்னு ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கோம்..." என்றிட, சட்டென எழுந்து அமர்ந்து தன் கண்களை துடைத்தபடி "சாரி" என்றுரைத்தாள். அவசியம் இல்லை என்பது போல் தன் கண்களை மூடித் திறந்து இடவலமாக தலையசைத்தான் அவன்.

"ராம்... இந்த மதன்லாம் மனுஷனே இல்லேல!!! அவனுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லேனு தெரிஞ்சும் வெண்பா மேல அவனுக்கு அன்பு வரலேல! என்ன மாதிரி ஜென்மம் அவன்!!?" என்று அறுவறுத்துக் கேட்க,

பல்லை கடித்து கோபத்தை அடக்கியபடி, "வயித்துக்குள்ள இருக்கும்போதே இரண்டு உயிரையும் சேர்த்து கொல்ல பார்த்தவன்.... பிறந்த பிறகும் யாரோ நாலு பேருக்கு பெறந்த பிள்ளைனு சொன்னவன்.... அவன்கிட்ட சென்டிமெண்ட் எதிர்பார்க்காதே தரு... இனி எப்பவும் இந்த டாப்பிக் வேண்டாம்... வெண்பா என்னைக்கும் என் பொண்ணு தான்... புரியுதா?" என்று கோபமாக ஆரம்பித்து கட்டளையாக முடித்தான்.

அவன் வெண்பா மீது கொண்ட அன்பில் தன்னை மறந்தவளுக்கு சற்று பொறாமையும் கூடத் தோன்றியது. "என்ன என் டையலாக்-ஐ நீங்க சொல்றிங்க!!! வர வர எனக்கு மேக்கொண்டு பொம்மி மேல அஃபக்ஷனா இருக்கிங்கலே... சரியில்லையே..."

"பொறாமை!!!" என்று நக்கலாக சிரித்தபடி கூறினான். "ஆ... ஆமா... இப்போலாம் அவளும் உங்களைத் தான் கொஞ்சுறா!!! அதான்..." என்று உண்மையை உரைத்தாள்.

அவளது மெலிந்திருந்த புஜத்தைப் பிடித்து இழுத்து, "உன்னை கொஞ்சுறதுக்குத் தான் நான் இருக்கேனே!!! வேறேன்ன வேணும்!!?" என்றிட,

அவனின் முதல் கூற்றில் வெட்கம் கொண்டவள் இரண்டாம் கூற்றை கவனிக்க மறந்து, அவன் கையைத் தட்டிவிட்டபடி "நான் குழந்தைய சொன்னேன்..." என்று பதிலுக்கு உதட்டைச் சுழித்துக் காட்டி கூறிட,

"அவ்ளோ தானே... கவலைய விடு நான் வீட்டுக்கு வந்ததும் ஏற்பாடு பண்ணிடலாம்... பத்தே மாசம் தான்.... வெண்பா மாதிரி அழகான பொண்ணு... இல்லே உனக்கு பையன் தான் வேணும்னு ஆசைப்பட்டேனா அடுத்த ஒரு வர்ஷத்துல அதுவும் ரெடி பண்ணடலாம்... இந்த கன்னத்துல ஒன்னு அந்த கன்னத்துல ஒன்னுனு மாத்தி மாத்தி கொஞ்சிக்கிட்டே இருக்கட்டும்... பிள்ளைகள் கொஞ்சினது போக மீதம் இருக்கும் லிப்ஸ் மட்டும் எனக்கு போதும்..." என்று கண்ணடித்துக் கூறிட,

அவனின் ஒவ்வொரு கூற்றுக்கும் பெண்ணவளுக்கு மேலும் மேலும் நாணம் கூடக் கொண்டே போக, வெட்கிச் சிவந்த முகத்தை எங்கே சென்று மறைத்துக் கொள்வது என்று தெரியாமல் எழுந்து செல்ல முயற்சிக்க, அவளின் கரம் பிடித்து இழுத்தான் அவன்.

அந்த நொடி அவனை சமாளிக்க "மொதோ உங்க பொண்ணு ரெண்டாவது குழந்தைக்கு சரினு சொல்லட்டும் அப்பறமா மூனாவது பத்தி யோசிக்கலாம்" என்று கூறி அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நகர்ந்திட சரியாக அறை கதவு திறக்கப்பட்டது.

கொடியும், வெண்பாவும் உள்ளே நுழைய, நேத்ரா கண் விழித்திருப்பதைக் கண்டு அவள் நலமாக இருக்கிறாளா??! என உச்சி முதல் பாதம் வரை கலங்கிய கண்களோடு நோட்டமிட்டார் கொடி. வெண்பாவோ தன் அன்னையை அணைத்துவிட்டு, அடுத்த நொடி படுக்கையில் ஏறி ராம்-ஐ இடையூறு செய்யாமல், அவனுக்கு இடப்புறமாகச் சென்று அவனை அணைத்தபடி படுத்துக் கொண்டாள்.

நேத்ரா இருவரையும் கண்டு பலிப்பு காட்டிவிட்டு, கொடியை அணைத்துக் கொண்டாள். கொடியும் பேச வார்த்தைகள் வராமல் நேத்ராவை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். திடுதிப்பென ராமைவிட்டு விலகிய வெண்பா தன் அன்னையிடம் சென்று அவள் வயிற்றில் கை வைத்துப் பார்ப்பதும் அணைப்பதுமாக இருந்தாள்.

ராம் தன் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் மூன்று பெண்களையும் கண்டு மெய்சிலிர்த்தான். தன்னை இவ்வுலகிற்கு கொடுத்தவள், தன் காதலுக்காக சுற்றமும், உறவும் துறந்து தன்னுலகிற்குள் தன்னோடு பயணிப்பவள், தன் மழலை மொழியால் தன்னை அவள் உலகிற்குள் அழைத்துச் செல்பவள் என மூவரும் ஒருவருக்கொருவர் அன்போடு அரவணைத்து நிற்பதைக் கண்டு பேரின்பம் கொண்டான்.

வெண்பாவோ "கொடி பாட்டி டிஸ்டர்ப் பண்ணாதிங்க" என்று கொடியை நகர்த்திவிட்டு மீண்டும் நேத்ராவின் வயிற்றில் கை வைத்துப் பார்த்தாள்.

"பாப்புகுட்டி டாக்டர்க்கு படிக்கப் போறிங்களா டி தங்கம்!!? இப்போவே அம்மா க்யூர் ஆகிட்டாங்களானு செக் பண்ணுறிங்க!??" என்று கொடி பெருமையாக வினவிட,

"டூ டேஸ் பிஃபோர் அமி சித்தி வயித்துக்குள்ள பாப்பா ஓடி, ஓடி விளையாண்டுச்சா!!!. எஸ்டர்டே மிது சித்தி வயித்துலேயும் தம்பி ஃபுட்பால் விளையாடுறா சொன்னாங்களா!!!... அம்மா வயித்துல இருக்குற பாப்பா என்ன செய்யும்!!!?" என்று இரண்டு நாட்களாக தன் சித்திமார்களின் வயிற்றில் இருக்கும் ஏழு மாத சிசுவின் அசைவுகளை தொட்டுப் பார்த்து ரசித்தவள் அதே ஆவலில் நேத்ராவையும் தொட்டுப் பார்த்து தன் அதி தீவிரத் தேடலை வினவினாள்.

அவளின் இக்கேள்வியை சற்றும் எதிர்பார்த்திடாத ராமும், நேத்ராவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்த்துக்கொள்ள, நான்கு கண்களும் காதல் புரியத் தொடங்கின...

தன்னவளைக் கண்டு ஒற்றைப் புருவம் உயர்த்தி உதட்டில் குறும்பு சிரிப்போடு 'இப்போ என்ன சொல்றே?' என்ற ராமின் விழிவழி வினாவிற்கு, கன்னம் சூடேறியபடி தன் வேல்விழிகளை மூடித் திறந்து சம்மதம் தெரிவித்தாள் அவனது இயமானி.

கொடியோ வெண்பாவை சமாளிப்பதில் முனைந்தார். "அம்மா ரெம்ப வீக்-ஆ இருக்காங்களே!!! பின்னே எப்படி பாப்பாவை சேர்த்து தூக்கிட்டு நடப்பாங்க... மொதோ அம்மாவும், அப்பாவும் க்யூர் ஆகி வீட்டுக்கு வரட்டும். நாம எல்லாரும் சேந்து காட் கிட்ட வெண்பாவுக்கு தம்பி பாப்பா வேணும்னு கேப்போம்... காட் அம்மா நல்லா ஸ்ட்ராங்கா இருக்காங்கலானு பாத்துட்டு அம்மா வயித்துக்குள்ள பாப்பாவே கொடுப்பாங்க... சரியா?" என்றிட சிறுமியும் கதை கேட்பது போல் கேட்டு சரி என்று தலையாட்டினாள்.

அதற்குள் டாக்டரும் நேத்ராவை பரிசோதிக்க உள்ளே நுழைய, வெண்பா அவரிடம் "டாக்டர் சீக்கிரம் அம்மாவை க்யூர் பண்ணுங்க... நாங்க அம்மாவே கூட்டிகிட்டு காட் கிட்ட பாப்பா கேக்க போகனும்..." என்று தனக்குத் தெரிந்த ஹிந்தியில் தத்தித் தடுமாறி கூறினாள்.

அவரோ குழந்தையின் பேச்சை ரசித்து சிரித்து "ஓகே லிட்டில் ப்ரின்சஸ்... யுவர் ஆர்டர் ஹேஸ் பீன் அக்ஸப்ட்டடு..." என்று கூறி நேத்ராவை பரிசோதித்தார்.

"ஹல்லோ Mrs.ராம்கிரன். யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்... இடையே பிட்ஸ் மாதிரி வந்தா மட்டும் இந்த டேப்லெட் எடுத்துக்கோங்க..." என்றிட, ராமைத் திரும்பிப் பார்த்தவள் "இனி இது தேவையில்லே டாக்டர்" என்றாள். அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவன், 'என் பெயரைச் சொல்லியே இருபத்து எட்டு நாட்களை கடத்தியவளுக்கு என் அருகாமை போதுமே!!! அவளே அவளை எப்பேற்பட்ட துன்பத்திலிருந்தும் மீட்டுக்கொள்வாளே!!!' என்று நினைத்து செருக்கோடு அவளைப் பார்த்தான்.

அவளின் பதிலில் நேத்ராவை நிமிர்ந்து பார்த்த மருத்துவர், இருவரின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டு, "அப்சலியூட்லி கரெக்ட். அவரும் சீக்கிரமே குணமாகிடுவார்... அவருக்கும் இனி எங்க கவனிப்பு தேவையில்லை... உங்க கவனிப்பே போதும்... நீங்க இங்கே அட்மிட் ஆன ஒரே நாள்ல மனுஷன் எழுந்து நடக்க ஆரம்பிச்சுட்டாரே!!!" என்றிட பெண்ணவளோ அவனின் உடல்நிலை குறித்து கவலையுற்றபோதும் என்னவன் என்ற பெருமையோடு தலைநிமிர்ந்து நின்றாள்.

நேத்ரா கண்விழித்த விடயம் தெரிந்து மீண்டும் மொத்த குடும்பமும் மருத்துவமனையில் ஒன்று திரண்டது. விமலா ராமின் முன் வந்து நின்று, "என் பொண்ணை திருப்பிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி... எங்கே பொம்மியையும், சிவாவையும் திரும்ப பாக்க முடியாதோனு பயம்... அந்த பயத்துல தான் அன்னைக்கு உங்களை கஷ்டபடுத்துற மாதிரி பேசிட்டேன்..." என்று கூறிக் கொண்டிருந்தவரை தன் குரல் கொண்டு மேற்கொண்டு பேசாமல் தடுத்தான்... அடுத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்று உணர்ந்தே தான் அவரை தடுத்திருந்தான்.

"அதனால என்ன ஆன்டி... என்னையும் பவன், கமல் மாதிரி நெனச்சு உரிமையா உங்க கோபத்தை என்கிட்ட காண்பிச்சதுல எனக்கும் சந்தோஷம் தான். ரெண்டு பேரும் அவ மேல இருந்த பாசத்துல தான் முட்டிக்க வேண்டியதாகிடுச்சு... இனியும் உங்க பசங்ககிட்ட எப்படி சமாதானம் ஆன பின்னாடி சகஜமா பேசுவிங்களோ அதே மாதிரி என்கிட்டேயும் எந்தவித கூச்சமும் இல்லாம, சகஜமா பேசுங்க... அது மட்டும் தான நான் உங்ககிட்ட எதிர்பாக்குறேன்..." என்று அவர் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என மறைமுகமாகக் கூறினான்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த நேத்ரா, கொடியிடம் என்னவென்று கேட்க, அவரோ "மாமியார், மருமகனுக்கு நடுல என்னவோ பேசிக்கிறாங்க... அது எதுக்கு நமக்கு..." என்று சாதாரணமாகப் பேசிட, அவரை அதிசயித்துப் பார்த்தவள்,

"என்ன நீங்க!!! பையனை பெத்த அம்மா மாதிரி ஒரு அராகன்ட் மாமியாராவும் இருக்கமாட்டேன்றிங்க... சண்டகோழி சம்மந்தியாவும் இருக்கமாட்டேன்றிங்க... உங்க மாமியார் உங்களை சரியா ட்ரைன் பண்ணலே போலயே!!!" என்று சலித்துக் கொள்ள, அவர்களின் பேச்சிற்கு நடுவே வந்தாள் மிதுன்யா...

"அக்கா இப்போலாம் மாமியார் கூட மருமகள்களை எதுவும் சொல்றது இல்லே... இந்த அம்மா மார்கள் இருக்காங்களே... யப்பப்பா... மாப்பிள்ளைக்கு தண்ணி வேணுமா கேளு... மாப்பிள்ளய கொஞ்ச நேரம் படுக்க சொல்லு... மாப்பிள்ளைக்கு இன்னும் கொஞ்சம் சாதம் வை, கறி வை, கை கழுவ போறார் பாரு, டவல் எடுத்துக்கொடு... மாப்பிள்ளைய பேர் சொல்லி கூப்பிடாதே... அப்படி இப்படினு மாப்பிள்ளைய கவனிக்கிறேனு நம்மலை உயிர வாங்கிடுறாங்க... சரி அது தான் போகுது மகபேறுக்கு புருஷனை அவங்க அம்மாகிட்ட விட்டுட்டு நாம ஜாலியா அம்மாவோட செல்லபுள்ளையா இருக்காலாம்னு பாத்தா... அது அதுக்கு மேல தலைவலி... அங்க உக்காராதே... அப்படி படுக்காதே... இப்படி திரும்பி எந்திரி... இவ்ளோ நேரம் தூங்காதேனு... படுத்துறாங்க... அத்தம்மா நல்ல மாமியார் தான். ஆனால் உங்களுக்கு டிப்பிக்கல் அம்மா... சோ இங்கே அத்தைய மாற சொல்லாதிங்க... அப்பறம் இரண்டு பக்கமும் அடிவிழும்... மத்தளம் மாதிரி நாம தான் நடுவுல கெடந்து தவிக்கனும்" என்றிட குந்தவி மிதுனின் காதைப் பிடித்துத் திருகினார்.

"அம்மா...." என்று கத்தியவள் பதிலுக்கு அவரது காதைப் பிடித்து திருகிவிட்டு குந்தவியிடம் இருந்து தப்பி பவனிடம் வந்து ஒழிந்திட, அவனோ அவளை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மீண்டும் குந்தவியிடம் விட்டுவிட்டான்.

"பவன்... ஏன் டா இப்படி பண்ணினே?" என்று சிணுங்கிட, குந்தவி அவளது காதை மீண்டும் பிடித்து "மாப்பிள்ளைய கொஞ்சமாவது மதிக்கிறேயா!!! உன்னேலாம் வாயிலேயே அடி போட்டு வளத்திருக்கனும்..." என்றிட,

"அத்தை... இப்போ பவனை உரிமையா கூப்பிடாம வேற யாரை அவ அவ்ளோ உரிமையா கூப்பிட போற... விடுங்க அவளை... மாசமா இருக்கிறவளை ஆளாளுக்கு அடிக்கிறிங்க..." என்றான் ராம்.

அதில் மேலும் முறுக்கிக் கொண்ட மிதுன்யா... "பவன் எனக்கு யாரும் சப்போர்ட் பண்ண தேவையில்லேனு சொல்லுங்க... என் அம்மா என்னை அடிக்கிறாங்க... அதுல அவருக்கு என்ன கவலையாம்..." என்றிட

ராமிற்கு அவளின் கோபம் புரிந்திட, அமைதியாகினான். ஆனால் பவனோ ராமைப் பார்த்து, "அவ சொன்னது புரியிதுல... இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... அவளுக்கு எதுனாலும் பாத்து செய்து கொடுக்க நான் இருக்கேன்... இனி நீ, அவ விசயத்துல தலையிடத் தேவையில்லை... இனி அவகிட்ட உனக்கு எந்த உரிமையும் இல்லே... அத்தை பொண்ணை பாத்தியா! நல்லாயிருக்கேயானு கேட்டியா! அதோடு நிறுத்திக்கோ..." என்றிட சுற்றியிருந்த அனைவருக்குமே பயங்கர அதிர்ச்சி...

விமலா தான் முதலில் கண்டித்தார். "டேய் பவன் என்னடா பேச்சு இது!!?? ஏன் திடீர்னு இப்படி பேசுறே!!! நீ பேசுறது ரெம்ப தப்பு பவன்..." என்றிட

"நான் என்ன தப்பா பேசிட்டேன்... என் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ண அவன் யாரு?" என்று மீண்டும் கேட்க,

"அவர் என்னோட ராம் பையா... நான் உனக்கு மனைவியாகுறதுக்கு முன்னாடியே என்னை அன்பா அப்பாவுக்கு அப்பாவா அண்ணனுக்கு அண்ணா பாத்துக்கிட்டவர்... நாங்க இன்னைக்கு சண்டை போட்டுப்போம், நாளைக்கு பேசிப்போம்... எங்க ரெண்டு பேருக்கு நடுவுல உன்னை அழைச்சது என் தப்பு தான்..." என்று மிதுன்யா பவனைப் பார்த்து கர்ஜித்துவிட்டு,

"சாரி ராம்... பவன் பேசினதை மனசுல வெச்சுக்காதிங்க..." என்று ராமின் அருகே சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு கூறியவளுக்கு அப்போது தான் இது தன்னவனின் திட்டமோ என்று தோன்றிட, பவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் நினைத்து போலவே பவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்திட, "யூ ச்சீட்டர்... ஃப்ராடு... எப்போ பார் உனக்கு இதே வேலையா போச்சு..." என்று தன் இருகரம் கொண்டு அவனது நெஞ்சில் அடித்திட, அவளது விருப்பத்திற்காக முதல் இரண்டு அடிகளை இன்பமாய் பெற்றுக் கொண்டவன், மூன்றாம் முறை கை ஓங்கியவளின் கரங்களைப் பிடித்து தன்னோடு சேர்த்து, வயிறு இடிக்காதபடி பாந்தமாக அணைத்து முன்னுச்சியில் முத்தமிட்டான்.

அனைவரும் புரியாமல் பார்த்திட, பவனோ ராமை பார்த்து கண்ணடித்துவிட்டு "அது..." என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்து இழுத்தவன் "சும்மா மித்துவ கோபப்படுத்தி பார்க்க தான் அப்படி சொன்னேன்..." என்றிட அனைவரும் நம்பாத பார்வை பார்த்திட, "தாங்க்ஸ் பவன்" என்றான் ராம்.

அதன்பிறகு தான் அனைவருக்கும் மிதுன்யா ராமிடம் பேசியதும், ராமிற்காக பவனிடம் சண்டையிட்டதும் புரிய, புன்னகையோடு ஒதுங்கிக் கொண்டனர். அன்று ஒருநாள் மட்டும் மற்றவர்கள் கூறியதற்காக இல்லம் சென்று வந்தாள் நேத்ரா. அதுவும் இரவு மருத்துவமனையில் தான் தங்குவேன் என்ற கோரிக்கையோடு தான் இல்லம் செல்ல சம்மதித்தாள்.

அதன்பின் வந்த நாட்கள் மலையரசியின் அறிவுரைப்படி கொடியின் கை பக்குவத்தில் ராம், நேத்ரா மற்றும் வெண்பாவிற்கு உணவுபட்டியல் இட்டு நேராநேரத்திற்கு சத்தாகாரம் வந்து சேர்ந்தது. அடுத்த இருபது நாட்களில் ராம் இல்லம் திரும்பிவிட, அவனுக்கென தினமும், காலை சோயாபால், நன்பகலில் நண்டு சூப் அல்லது முருங்கைக்கீரை சூப் மாலை கொள்ளு அல்லது உளுந்து களி இடையிடையே பழச்சாறு, தினமும் ஒரு ஆரஞ்சு மற்றும் அத்தி என எலும்பை வழுவூட்டக் கூடிய கால்சியம் நிறைந்த உணவு வகைகள் நேத்ராவின் கவனிப்பில் வழங்கப்பட, அனைவரும் எதிர்பார்த்ததைவிட அதிவிரைவில் தேரிவந்தான் ராம்.

-ஊடல் கூடும்.​
 
Top