• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொந்தம் 61(இறுதி அத்தியாயம்)

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
ராம் வாக்கரின் துணையோடு வீட்டிற்குள் நடக்கத் தொடங்கியிருந்தான். முன்பைவிட அதிக பாதுகாப்போடு பள்ளி சென்று வரத் தொடங்கினாள் வெண்பா.

அமிக்கும், மிதுன்யாவிற்கும் மிக எளிமையான முறையில் வளைகாப்பு வைபவம் வீட்டளவில் நடத்தினர். அதிலும் மிதுன்யாவின் வளைகாப்பு
மதுரையில் என்பதால் ராமும், நேத்ராவும் கலந்து கொள்ள முடியாமல் போனது.

வளைகாப்பு முடிந்து பத்து நாளிலேயே மிதுன்யாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. மிதுன்யாவின் ஜாடையிலும் பவனைப் போல் முன்கோபியாகவும் இருந்தான் பவனின் மகன்... அடுத்த ஒரு வாரத்தில் அமிக்கு பெண்குழந்தை. அமியை ஒத்த ஜாடையில் அமியின் அடாவடி துறுதுறு குணாபிஷேகங்களோடு பிறந்திருந்தது.

என்ன தான் வெண்பா ஆசைப்பட்டது போல் பவனுக்கு ஆண் குழந்தையும், ஆரவ்விற்கு பெண்குழந்தையும் பிறந்திருந்த போதும், வெண்பாவின் அணத்தல் நாளுக்கு நாள் அதிகமாகியது. "எப்போ காட் கிட்ட பாப்பா கேக்க போகலாம்?" என்று....

கோவிலுக்குச் சென்று வந்துவிட்டாள் போதும் "எப்போ காட் அம்மா வயித்துக்குள்ள டாலி பேபி வைப்பாங்க?" என்பாள்.

அப்பாவிற்கும் சரி ஆகட்டும் என்றால் போதும், "அம்மா தானே பேபிய பாத்துப்பாங்க... அதுக்கு எதுக்கு அப்பா க்யூர் ஆகனும்!!?" என்று அடுத்த சந்தேகம். இதற்கு பதில் சொல்ல எவராலும் முடியாது... இறுதியில் ராம் தான் தன் செல்லபிள்ளையை சமாளிப்பான்.

"அப்பா ஃபுல்லா க்யூர் ஆனாதானே உன் கூடவும், பேபி கூடவும் விளையாட முடியும்!!???" என்றிட,

"அப்போ நான் காட்கிட்ட அப்பாவே சீக்கிரம் க்யூர் பண்ணுங்கனு கேக்குறேன்..." என்று பூஜையறை நோக்கி விரைந்தாள் சிறுமி.

இரு குழந்தைகளுக்கும் ஒன்றாக பெயர்சூட்டுவிழா இன்று. ராமின் உடல்நிலை காரணமாக கடந்த நான்கு மாதங்களில் வந்த பவன்-மிதுன் கல்யாணநாள், வெண்பாவின் நான்காவது பிறந்தநாள், ராம்-நேத்ரா மற்றும் ஆரவ்-அமியின் திருமணநாள் என எதுவும் விமர்சையாக கொண்டாடப் படவில்ல. வளைகாப்பும் அப்படி ஒன்றும் பெரிய கொண்டாட்டமாக நடந்திராததால் பெயர்சூட்டு விழா பெரியளவில் நடத்த முடிவு செய்திருந்தனர். அதுவும் ராமின் கட்டாயத்தால் தான்.

தனக்கு சரியாகிவிட்டது என்றும் தான் மட்டுமே முன்னின்று அனைத்தும் செய்வேன் என்று விடாபுடியாக லட்சுமணனிடம் சண்டையிட்டு அனுமதி வாங்கியிருக்கிறான். கூறியது போல் அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்தபடி இருந்த இடத்திலிருந்தே முடித்திருந்தான். வீட்டு அலங்காரத்திற்கு ஆட்கள் ஏற்பாடு செய்ததோடு, பெண்களுக்கு நகைக்கடையும், ஜவுளிக்கடையும் வீட்டிற்குள் வந்து குவித்தான்.

வெண்பாவுடன் சேர்த்து குழந்தைகள் மூவருக்கும் ஒரே நிறத்தில் உடை எடுத்திருந்தான். அதே போல் மூத்த தலைமுறையிலிருந்து மூன்றாம் தலைமுறை வரை ஜோடிகள் அனைவருக்கும் அவரவர் இணைகளுக்குப் பொருத்தமான நிறத்தில் உடை தேர்வு செய்திருந்தான். சுனோ, கமல் மற்றும் அபி மூவரின் உடை மட்டும் மூன்று வண்ணங்களில் இருந்தது. அவரவர் அணிந்த பின் தான் உடை ஒற்றுமையை அனைவரும் கவனித்தனர்.

சுனோவிற்கு அவளின் பால் வண்ண மேனிக்கு ஏற்றார் போல் செந்தூர நிறத்தில் சேலை எடுத்திருந்தான் ராம். அபிக்கோ ஆர்மி க்ரீன் கோட் ஷூட். ஜோடி ஜோடியாக ஒரே வண்ணத்தில் ஆடை அணிந்திருப்தைக் கண்ட அபி காலை கொஞ்ச நேரம் தான் அந்த கோட் ஷூட்டை அணிந்தான். நன்பகலுக்கு மேல் செந்தூர நிறத்தில் ஷர்வானி அணிந்து கொள்ள, அதனைக் கண்ட ராம்,

"சோட்டூ உனக்கு கோட் ஷூட் பிடிக்கலேயா?" என்றிட, அப்போது அங்கே வந்த நேத்ரா,

"ஏன் அப்படி கேக்கனும்!!! ஷர்வானி தான் பிடிக்குமானு கேக்கலாமே!!" என்று சின்ன சிரிப்போடு கூறினாள்.

"ஒருவேளை ஷர்வானி கலர் பிடிச்சிருக்கலாம்" என்று பவனும்

"அப்படியும் இல்லேனா அந்த கலர்ல ட்ரெஸ் போட்டிருக்கவங்களைப் பிடிச்சிருக்கலாம்" என்று கமலும் கூறிட,

"அப்படியா அபி அத்தான்!!???" என்று வாய் பிழந்து கேட்டாள் அமி. அம்ரிதா அபியை விட வயதில் சிறியவள் என்பதால் அபியையும் அத்தான் என்று அழைப்பது தான் வழக்கம். அதே போல் அபி அண்ணன் மனைவி என்பதால் அமியை அண்ணி என்று தான் அழைப்பான்.

"அய்யோ அண்ணி... அப்படிலாம் இல்லே... எல்லாரும் என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க..." என்று மழுப்பலாக பதில் கூறிட,

"அமி அக்கா... அபி மச்சானுக்கு லவ் பண்ணுறதுக்கு எல்லாம் தைரியம் இல்லே..." என்று கூறியபடி அந்த கூட்டத்தோடு வந்து இணைந்தாள் சுனைனா...

அதனைக் கேட்ட அபியின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. 'கிராதகி அவளுக்காகத் தான் ட்ரெஸ் ச்சேஞ் பண்ணிட்டு வந்து நிக்கிறேன். ஆனா எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுறா பாரு. சப்போர்ட் பண்ணலாட்டாலும் கிண்டல் பண்ணாமயாவது இருக்கலாம்ல...' என்று மனதிற்குள் புகைந்தபடி,

"அடியேய் உன்னால தான் இங்கே எல்லாரும் என்னை வெச்சு செஞ்சுட்டு இருக்காங்க... போதா கொறைக்கு நீயும் என்னை ஓட்டுறேயா... உன்னை..." என்று கோபமாய் அவள் தலையில் கொட்டினான்.

"டேய் குழந்தையப் போய் அடிக்கிறே... என்னடா பழக்கம் இது!!" என்று கண்டித்தான் ஆரவ்...

"யாரு? இதுவா கொழந்தை!!!?" என்று அபியும் கமலும் ஒரு சேர அதிர்ச்சியாக வினவினர். சுனோ இருவரையும் முறைத்திட, மற்றவர்கள் அதனைக் கண்டு சிரித்தனர்.

அதன்பின் ஆளுக்கொரு வேலையோடு நகர்ந்து செல்ல லட்சுமணன் தன் பேரனின் அருகே வந்து அமர்ந்தார்.

"ராம் கண்ணா சுனோ படிச்சு முடிக்கவும் அபிக்கும் சுனோவுக்கும் கல்யாணம் செய்து வெச்சிடலாமா?" என்றிட,

"அபி சுனோவை விரும்புற மாதிரி தான் தெரியுது தாத்தா... எதுக்கு ரெண்டு பேர்கிட்டேயும் கேட்டுட்டு முடிவு பண்ணலாமே தாத்தா..." என்றிட, அவரும் சம்மதித்தார்.

அன்று முழுதும் லட்சுமணன் பக்கத்திலேயே அமர்ந்திருந்த போதும் கண்களாலேயே அனைவரிடமும் வேலை வாங்கியிருந்தான் ராம். அவன் அமர்ந்திருந்த விதமும், அவனது கண்ணசைவில் வேலை நடக்கும் விதமும் உடல்நிலை சரியில்லாதவன் என்று எவரும் கூறமுடியாது. 'தி கிங் மேக்கர்' என்றது அவனது தோரணை.

இடையே ஒருமுறை நேத்ரா வந்து "ரெம்ப நேரம் உக்காராதிங்க... வாங்க கொஞ்சம் நடக்கலாம்" என்று அழைக்க, அவள் தோளில் கைபோட்டு நடக்கும் போதும் கூட அவனது வலியை எந்த இடத்திலும் அவனது முகம் காண்பித்திடவில்லை. இன்முகமாகவும் கம்பீரமாகவும் வலம் வந்தான். அவனுக்கு சற்றும் சலைக்காதவளாய் பெண்ணவளின் திமிர் பார்வையும், நிமிர்ந்த நடையுமாக அவனுடன் நின்றிருந்தவளைக் காண சக்கரவர்த்திக்கு ஏற்ற சக்கரவர்த்தினி என நினைக்காதவர்களும் அதனை வாய் திறந்து கூறாதவர்களும் இல்லை என்றே சொல்லலாம்.

குழந்தைகள் இருவருக்கும் பாட்டியின் மடியில் வைத்து வெள்ளை நூலில் மஞ்சள் தொய்த்து இடுப்பிலும், கையிலும், கழுத்திலும் கயிறு கட்டிவிட்டு, அவரவர் தாத்தா மார்களின் கையால் இடுப்பு சங்கிலி, கழுத்து சங்கிலி மற்றும் கை வளையல் அணிவிக்கப்பட, மூத்த தலைமுறையான லட்சுமணனும், மலையரசியும் காதில் மூன்று முறை குழந்தைகளின் பெயரை உச்சரித்தனர்.

பவன் மற்றும் மிதுன்யாவின் பையனுக்கு ருத்தேஷ் என்றும், ஆரவ் மற்றும் அம்ரிதாவின் பெண்ணிற்கு யாழிசை என்றும் பெயர் சூட்டினர். அனைவரும் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாகவே நிறைவுற்றிருந்தது பெயர்சூட்டும் விழா. நிகழ்த்தியிருந்தான் ராம்.

இரவு உணவு முடித்து அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, நேத்ரா தான் தவித்துப் போனாள். இன்று காலையில் இருந்து தன்னவன் ஓய்வு இல்லாமல் இருப்பதாக உணர்ந்தவள் அதனை அவனிடம் கூறி ஓய்வு எடுக்க அறைக்கு செல்லுமாறு கூறிடவும் தயங்கினாள்...

வெண்பா நேத்ராவின் மடியிலேயே உறங்கிவிட, கொடி வெண்பாவை தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றுவிட்டார். செல்லும் முன் "சீக்கிரம் எல்லாரும் போய் தூங்குங்க" என்றிட,

"ரெம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தான் எல்லாரும் ஒன்னா இருக்குறோம் அத்தே... இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு போய் தூங்குறோம்..." என்று கெஞ்சி கொஞ்சினாள் மிதுன்யா. கொடியோ பதில் ஏதும் சொல்லாமல் நேத்ராவையும், ராமையும் பார்த்துவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.

அதன் பிறகும் பல கதைகள் பேசியபடி வாயடித்துக் கொண்டிருந்த பட்டாளத்தை மலையரசி சத்தமிட்டு விரட்டினார்.

"பிள்ளை பெத்த பச்ச உடம்புக்காரிங்க ரெண்டு பேரும் உக்காந்து என்னடி பல்லை பல்லை காட்டி பேசிகிட்டு இருக்குறிங்க... போய் படுங்கடி..." என்று அமியையும், மிதுன்யாவையும் விரட்ட, அதன்பிறகு மறுபேச்சின்றி இருவரும் எழுந்து சென்றனர். இல்லை என்றாள் அடுத்த கட்டளை தாத்தாவிடம் இருந்து வருமே.

இருவரும் எழுந்து செல்ல அவர்களின் இயமான்களும் தங்கள் மூன்றுமாதப் பிரிவை ஈடுகட்ட அவர்கள் பின்னாலேயே எழுந்து செல்ல அங்கே அவரவர் அறைக்குள் குழந்தைகளோடு மீனாட்சியும், விமலாவும் படுத்திருக்க, அமி ஆரவைப் பார்த்து "ஏமாந்துட்டியா பேபி.... அச்சச்சோ.... போய் மாமா கூட படுத்துக்கோ" என்று பரிகாசமாகக் கூறிச் சிரித்தாள். அதே நிலை தான் பவனுக்கும்... மீண்டும் வந்து பட்டாளத்திற்குள் இணைந்தால், சுனோ ஒருத்தியே போதும் ஓட்டித்தள்ளிடுவாள் என்ற பயத்தில் பவன் சென்று தன் தந்தையுடன் படுத்துக்கொள்ள, ஆரவ்வும் வேறு வழியில்லாமல் தன் தந்தை அறை நோக்கி சென்றான்.

இங்கே மூவரையும் அவரவர் அறைக்கு விரட்டிவிட்டு ராம் மற்றும் நேத்ரா தங்கள் அறைக்குச் சென்றனர். அதுவரை நேத்ராவின் தோள் பிடித்து நடந்து வந்தவன் அவர்களின் அறைவாயில் வந்தவுடன், "நான் வெண்பாவை தூக்கிட்டு வரேன்" என்று கூறி நகர்ந்தவளை தன் கைகளில் ஏந்தி தன் வெகுநாள் ஆசையை இன்று நிறைவேற்றி இருந்தான் ராம்.

"ராம்... நோ ராம்... கீழே விட்டுடுங்க... இன்னும் உங்களுக்கு ஃபுல்லா க்யூர் ஆகலே... வெயிட் தூக்கக் கூடாது... ப்ளீஸ்... விடுங்க ராம்" என்று மூச்சுவிடாமல் தன்னவள் கூறியதை சிறிதும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவன்.

"கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் டைம் நம்ம வீட்டுக்கு வந்தப்போ நீ ரூம் என்ட்ரன்ஸ்-லயே ஸ்டாச்சூ மாதிரி நின்றுந்த, அப்பவே உன்னை இப்படி தூக்கிட்டு வரனும்னு நெனச்சேன்... இன்னைக்கு தான் அது நடந்திருக்கு" என்று கூறியபடி தன்னவளை மெத்தையில் கிடத்திவிட்டு இடுப்பை இப்படியும், அப்படியுமாக முறுக்கிட,

"தூக்காதிங்கனு சொன்னா கேக்குறிங்களா!!! இப்போ யாருக்கு கஷ்டம்!!?. வந்து படுங்க நான் மருந்து தேச்சுவிடுறேன்..." என்று அப்போதும் அவன் உடல்நிலை குறித்து பதறியவளின் மேல் சட்டென படர்ந்திருந்தான் அவள் கள்வன்.

பெண்ணவளோ வாயடைத்து அவனையே பார்த்திருக்க, "கொடி ஏன் பாப்புவ அவங்க கூட படுக்க வெச்சுக்கிட்டாங்கனு உனக்குத் தெரியாதா!!!?" என்று குறும்பாகச் சிரித்து வினவிட, பெண்ணவள் வெட்கம் கொண்டு தன்னவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
நீ நடக்கும் பொழுது நிழல்
தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது
பேரழகின் மேலே ஒரு
துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு நொடியும்
வாடக் கூடாது
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது
உன்னை தாண்டி எதுவும்
தெரிய கூடாது
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா...

💞💞💞💞💞🌅🌅🌅🌅🌅💞💞💞💞💞

ராம்-நேத்ராவின் காதல்கதை இனிதே இவ்விடத்தில் முடிகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணம் தொடங்கிய தருணம் இனிதே அமைய நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்...

எபிலாக் இருக்கு மக்களே அதில் உங்களை சந்திக்கிறேன்.