• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அலங்கார விளக்குகளின் மத்தியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த பெயர்ப்பலகையைப் பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு கோபம் கோபமாக வந்தது. பெயர்ப்பலகையைக் கண்டு முறைத்துக் கொண்டிருப்பவனின் அருகில் வந்த மீனாட்சி(அபியின் அன்னை) அவன் தலையில் தட்டி

"இன்னும் எத்தனை நாளைக்கு மாப்பிள்ளையக் கண்டு முறைச்சிக்கிட்டே இருப்ப?"

"எனக்கு அவனைப் பிடிக்கலேனு சொன்னா விடுங்கலேன்... இங்கே யாரும் எங்க விருப்பத்தைக் கேட்டிங்களா!!! அவன் பேரைக் கேட்டாலே கோபம் கோபமா வருது..." என்று பல்லைக் கடித்திட,
இருவரும் பேசிக்கொண்டே மண்டபத்திற்குள் நுழைந்திட அங்கே ஆரவும், ராமும் அனைத்து அலங்காரமும் முடிந்துவிட்டாதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

"அபி... பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசு.... மாப்பிள்ளை உனக்கு அண்ணன் முறை, அவன் இவன்னு பேசாம மரியாதையா அண்ணானு சொல்லிப் பேசு."

"என்னாலேலாம் அண்ணானு கூப்பிட முடியாது... அதுவும் அந்த கமலைக் கண்டா எனக்கு பத்திக்கிட்டு வருது" என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கூறினான்.

அபியின் கோபத்தைக் கண்டு ஆரவ் என்னவென்று தன் அன்னையிடம் வினவிட, பவனையும் கமலையும் பையா என்று அழைக்கக் கூறிட, ராமிற்கு ஏனோ நேத்ராவின் நினைவு வர, அவள் என்ன முறை என்று வினவினான். தங்கை முறை என்றவுடம் ஏதோ நெஞ்சுக்குள் அழுத்துவது போல் இருந்தது அவனுக்கு.

அன்று மதுரையில் அவள் வீட்டில் சந்தித்து மன்னிப்புக் கேட்டதோடு சரி. மீண்டும் அவளை சந்திக்கவில்லை தான். ஆனால் அவளை நினைத்தாலே ஏமாற்றிவிட்டாள் என்ற வெறுப்பு தான் தோன்றியது.

மிதுன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் மலையரசி மிதுன்யாவை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

"ஆச்சி... இப்போ எதுக்கு அழறிங்க. எனக்கு ஒன்னும் இல்லே. நான் நல்லா தான் இருக்கேன்." என்று திடமாக பதிலளித்தாள் மிதுன்யா.

"உனக்கு என்னடி தெரியும் மூனு நாளா நாங்க பட்ட வேதனை. பெரியவங்க சொன்னா எதுவும் சரினு கேட்டுகிடுறது இல்லே. அன்னைக்கே நீ கல்யாணத்துக்குப் போக வேண்டானு எத்தனை முறை சொன்னேன். பிடிவாதமா போயே தீருவேனு நின்ன." என்று குந்தவி திட்டினார்.

"நீங்க ஆரம்பத்துலேயே வேண்டாம்னு அபசகுணமா பேசினதுனாலத் தான் இப்படி ஆகிடுச்சி" என்றவள் அடுத்த நிமிடம் வீட்டிற்குள் சிட்டாகப் பறந்திருந்தாள். இல்லையேல் அன்னையிடம் அடி வாங்க நேரிடுமே.

"அவளுக்கு ஒன்னும் இல்லே பாட்டி. நீங்க அழாதிங்க. அத்தை அவளைத் திட்டாதிங்க... அவளும் மூனு நாளா அழுது ஓஞ்சிருக்கா... எல்லாரும் அவளுக்கு என்ன வேணும்னு பாருங்க." என்று அனுப்பி வைத்தவன் தாத்தாவிடம் சென்றான்.

ஆண்கள் மட்டும் குழுமியிருக்க "யாரு? என்ன? ஏது?னு தெரிஞ்சதா டா?" என்றார் பாரி.
என்ன சொல்வதெனத் தெரியாமல் அவறைப் பார்த்து மழங்க மழங்க முழித்துக் கொண்டிருந்தான் ராம்.

'மிதுனிற்கு நடந்ததை சொன்னால் தாங்குவார்களா!!!' என்ற யோசனையில் எவருக்கும் பதில் சொல்லாமல் நின்றிருந்தான்.

"யாரு செய்தானு தெரியலே பெரியப்பா, ஆனா தொழில் ரீதியான மிரட்டல் மாதிரி தான் தெரியுது. ஏன் எதுக்குனு தெரியலே." என்று தன் அண்ணனை பார்த்துக் கொண்டேக் கூறினான் அபி.

"தடிப்பசங்க மூனு பேர் போயும் கண்டுபிடிக்க முடியலேனு சொல்றிங்க, வெட்கமா இல்லையா டா?" என்றார் லட்சுமணன்.

ராம், அபி இருவரும் பதில் கூறாமல் இருக்க, ராமின் கண்களில் தெரிந்த கோபம் புகழுக்கு ஏதோ உணர்த்தியது.
"சரி சரி, கொஞ்ச நாள் போகட்டும் யாரு செய்தானு கண்டுபிடிக்கலாம். இப்போதைக்கு நம்ம மிதுனைத் தான் கவனிச்சிக்கனும். அப்பறம் சுனோகுட்டி வேற தனியா இருக்கா. முடிஞ்சா அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நம்ம பாதுகாப்புல கொஞ்சநாள் வெச்சிருக்கலாம். நாம கலங்கி வீட்டுப் பெண்களையும் கலங்கவிட வேண்டாம்." என்று புகழேந்திக் கூறிட அனைவருக்கும் அதுவே சரி என்று பட்டது.

மிதுன்யா அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். சில நேரங்களில் தன்னை குந்தவி கவனிக்கிறார் என்று தோன்றினால் கலகலப்பாக பேசுவது போல் காட்டிக் கொள்வாள். தனிமையில் அமைதியும், வெறித்தப் பார்வையுமே அவளது பொழுதுபோக்காகியது.
அதனைக் கண்டு கொண்ட சுஷேண் கிருஷ்ணா, ராமை அழைத்துப் பேசினார்.

"ராம், மிதுன் பல நேரங்களில் தன்னைத் தானே தனிமை படுத்திக்கிறா... எங்க முன்னாடி எப்போதும் போல இருக்கிற மாதிரி நடிக்கிறா... அவளுக்கு என்ன தான் ஆச்சு சொல்லு டா?"

"அவளுக்கு எதுவும் இல்ல மாமா... நீங்க தேவையில்லாம மனசை குழப்பிக்கிறிங்க.."

"டேய் பெத்தவனுக்குத் தெரியாதா பிள்ளையோட நடவடிக்கை. உண்மைய சொல்லு..."

"மாமா... நீங்களோ, நம்ம குடும்பமோ பயப்படுற மாதிரி அவளுக்கு எதுவும் ஆகலே. இங்கே நம்ம பெரிய வீட்டுக்கு அனுப்பி வைங்க. எல்லாரும் அவகிட்ட பேசிட்டே இருந்தா நார்மல் ஆகிடுவா..."

"நீ சொல்ற வார்த்தையைத் தான் டா தம்புறேன். அவளுக்கு ஒன்னு இல்லேல?"என்று மீண்டும் தகப்பனாக கவலையுற்றார்.

"அவளை ரெடியா இருக்க சொல்லுங்க நான் இப்போவே வந்து கூட்டிட்டுப் போறேன். சுனோ எப்போ வருவா?"

"சுனோவுக்கு பத்து நாள் லீவ் கேட்டு மெயில் அனுப்பிருக்கேன். அனேகமா அடுத்தவாரம் வந்திடுவா?"

"சரி அவ வந்ததும் அவளையும் அங்கே கூட்டிட்டு வாங்க. ஒரு வாரம் எல்லாரும் கவலை மறந்து குடும்பத்தோட எங்கேயாவது போய்ட்டு வரலாம்."

"சரி டா. மிதுனை மதியம் போல ரெடியா இருக்க சொல்றேன்."

"சரிங்க மாமா." என்று அழைப்பை துண்டித்தான்.

மிதுன்யாவை மீண்டும் தன் இல்லம் அழைத்து வந்தான். அங்கே மலையரசி எப்போது தன் பேத்தியுடன் ஏதேனும் பேசிக் கொண்டே அவளை தனிமையிலிருந்து விடுவித்தார்.

பூங்கொடியும், மீனாட்சியும் அவளின் விருப்பமறிந்து அவளுக்கு சமைத்துத் தருவது, சமையல் சொல்லிக் கொடுப்பது என தங்களுக்குத் தெரிந்தளவில் அவள் மனநிலையை சரி செய்ய நினைத்தனர். தினமும் குந்தவியும் வந்து தன் மகளை பார்த்துச் சென்றார்.

அபியும், ஆரவும் அவளை எங்கேனும் வெளியே அழைத்துச் சென்று வந்தனர். ராம் வேலைப் பளு காரணமாக இன்டஸ்ட்ரியில் இருந்து வந்தவுடன் தன் நேரம் மொத்ததையும் அவளுடன் வீட்டிலேயே கழித்தான்.

ஒருவாரம் கடந்திருக்க பழைய
மிதுன்யாவாக தன்னை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டாள். தனக்காக இல்லை என்றாலும் தன் குடும்பத்திற்காக தன் கவலையிலிருந்து வெளியே வரவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

இதற்கிடையே லட்சுமணன் தன் பேத்தி நிரந்தரமாக இங்கே இருக்க முடிவெடுத்து சுஷேணிடம் ராம், மிதுன் திருமணம் பற்றி கலந்தாலேசித்தார். சுனைனா வரும்போது நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என பெரியவர்கள் முடிவெடுத்து அதனை ராமிடம் சொல்ல, ஏதும் பதில் சொல்லாமல் தனதறைக்குச் சென்றுவிட்டான்.

மீண்டும் அவன் மனதில் நேத்ரா தோன்றினாள். தன்னை ஏன் அவள் இவ்வளவு இம்சை செய்கிறாள் என்று தன் யோசனையில் உலன்றவனுக்கு இன்னும் குழப்பமே விடையாகக் கிடைத்தது. அவனைப் பொறுத்தவரை திருமணமான ஒரு பெண் தன் நெஞ்சை ஏன் குடைந்திட வேண்டும்!!! திருமணமான பெண்ணை கீழ்தரமாய் பார்க்கும் அளவிற்கு புத்தி பேதளித்துவிட்டதா! என்று தோன்றிட அதனை ஆராயும் முயற்சியை கைவிட்டான்.

அதற்கு மாறாக இனி தன் வாழ்வு மிதுன்யாவுடன் தான் என முடிவெடுத்து அவளை மட்டுமே கருத்தில் நிறைக்க முயற்சித்தான். ஆனால் அவனை அறியாமலேயே மனம் நேத்ராவைத் தான் நாடியது. ஒரு முடிவோடு அதன்பின் வந்த நாட்களிலும் நேத்ராவின் நினைவுகளை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்தான்.



கடலன்னை அவள்
முத்தென பெற்றெடுத்த
தலைமகனாய்,
புல்வெளியில் படர்ந்திருக்கும் பனித்துளியை தன்
காதலால் உருகிடச் செய்யும்
காதலனாய்,
பாசமாக பிரபஞ்சத்தை
கதிர்கரம் நீட்டி அணைத்திடும்
தந்தையுமாய்,
கீழ்வானில் உதித்தான்
அக்னியின் அன்னையவன்
ஆதவன்.


மேலும் ஒரு வாரம் கடந்திருக்க, அதிகாலைப் பொழுதில் கண்ணனை வரவேற்கும் மங்கள இசையும் ஆதவனின் வருகையுமாக ஒலியுடன் கூடிய ஒளி வாரணாசியில் அந்த பெரிய வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது.

வரவேற்பறையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த லட்சுமணன் தன் பொறுமையை இழுத்துப்பிடித்துக் கொண்டு எதிரில் இருப்பவனுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தார்.

"தம்பி... என் பேத்திக்கு என் பேரன் தான்-னு சின்ன வயசுலேயே முடிவு பண்ணிட்டோம். சொன்னா புரிஞ்சிக்கோங்க. ."

கடந்த சில நிமிடங்களாக இந்த உரையாடலை நடத்திக் கொண்டிரப்பவனோ,

"இல்ல ஐயா... உங்க பேத்திக்கு சம்மதம் இருக்கானு கேளுங்க... அவங்க சம்மதம் இல்லேனு சொல்லிட்டா நான் போறேன், அவங்களை வரச் சொல்லுங்க" என்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.
"என் பேத்திக்கு என் பேரனை ரெம்ப பிடிக்கும், அப்படி பிடிக்கலேனா எங்ககிட்ட எப்பவோ சொல்லிருப்பா..இப்படி வீட்டுப் பெரியவங்களும் இல்லாம நீங்களா பொண்ணு கேட்டு வந்திருப்பதும் முறையே இல்லை. புறப்படுங்கனு சொல்ல வைக்காதிங்க... அது நம்ம பண்பாடு இல்லே."

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாய், "நான் பொண்ணு கேட்டு வந்தது உங்க பேத்திய இல்ல..." என்று ஒரு நொடி தாமதிக்க லட்சுமணன் 'என்னடா இவன் இப்படிக் குழப்பறான்' என்பது போல் பார்த்தார்.

"நான் பொண்ணு கேட்டு வந்தது உங்க பேத்திய இல்ல. என் மனைவிய..." லட்சுமணனன் ஒரு நொடி ஆட்டம் கண்டவராய் அவனை பார்த்துக் கொண்டிருந்தார். மனதிலோ 'பைத்தியமா இவன்!!!' என்றே நினைத்தார்.

"எனக்கும் மிதுன்யாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி" என்று அழுங்காமல் குலுங்காமல் அந்த பெரியவர் தலையில் பெரிய இடியை இறக்கினான் பவன்.

லட்சுமணனன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவருக்கு இன்னும் விடயம் எட்டவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்தது.

"மிதுன்யா" என்ற லட்சுமணனின் கர்ஜனையில் மொத்தக் குடும்பமும் அங்கு ஆஜராகியது.

அலுவலகத்திற்கு தாயாராகிக் கொண்டிருந்த ஆண்களும், சமையலறையில் பதார்த்தங்களை உணவு மேசைக்கு மாற்றிக் கொண்டிருந்த பெண்களும் என அனைவரும் திறண்டனர்.

லட்சுமணனின் கடைக்கண் பார்வையில் குடும்ப உறுப்பினர்கள் தவிற பிற வேலையாட்கள் தங்கள் பணியைத் தொடரச் சென்றனர்.

எப்போதும் தன்னை 'மிதுன்குட்டி' என்று செல்லமாக அழைத்திடும் தாத்தா இன்று முழுப்பெயர் சொல்லி அழைத்திடவும் கொஞ்சம் பதறியவளாய் தாத்தாவின் அருகே வந்தாள்.
வரவேற்பறைக்கு வந்த மிதுன்யா அங்கு அமர்ந்திருப்பவனைக் கண்டு அதிர்ந்து தன் வெற்றுக் கழுத்தில் அனிச்சையாக கைவைத்தபடி நின்றாள்.
-ஊடல் கூடும்​
 
Top