அத்தியாயம் 20
இரவு உணவு நேரம் அனைவரும் வந்து சாப்பிடும் இடத்தில் அமர்ந்திருக்க, அறையில் இருந்து வெளிவந்த அபி அங்கே சக்தி இல்லாததை பார்த்தபடி வந்து ஹாலில் அமர்ந்தான்.
"சாப்பிட வா அபி! உனக்கு வேற தனியா பரிமாறனுமா?" சீதா அழைக்க,
"சக்தியை எங்க ஈஸ்வரி?" என்றார் செண்பகவல்லி.
"அவளுக்கு தலைவலியாம்.. சாயந்திரமே வந்து ரூம்குள்ள போனவ சாப்பாடும் வேண்டாம்னு சொல்லிட்டா!" என்றார் ஈஸ்வரி.
"நீங்க சாப்பிடுங்க அண்ணி! எல்லாரும் சாப்பிட்டதும் நான் அவ ரூம்க்கே போய் சாப்பாடு குடுத்துட்டு வர்றேன்!" என்றார் சீதாவும்.
சக்தி ஆதி வீட்டில் இருந்து கிளம்பி வந்தவள் தன் அறைக்குள் நுழைந்து கொண்டதோடு சரி.. வெளியே வரவே இல்லை.
அவள் வந்த அரை மணி நேரத்தில் அபி வந்தவன், "சக்தி எங்கம்மா?" என்று கேட்டாலும் வார்த்தைகள் திணறி தான் வந்தது.
"ரூம்ல இருக்கா டா!" என்றவர்,
"மது எங்க? நீங்க ரெண்டு பேரும் வந்துட்டிங்க? ஆதி வரலையா?" என்று கேட்க,
"மது தூங்குறா.. ஆதி நாளைக்கு கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டான்" என்றவனுக்கு உடனே சக்தியை போய் பார்க்க தோன்றினாலும் இத்தனை வருடம் இல்லாத தயக்கம் அவள் அறைக்கு செல்ல.
"என்ன தான் சாக்கு வச்சிருப்பானோ! இனி உன் ஆச்சி வேற படுத்துவாங்க மதுவை பாக்கணும்னு!" என்றவர், காலை கணவன் பெண் பார்க்க ஆரம்பித்திருந்த விஷயத்தை மகனிடம் சொல்ல மறந்திருந்தார்.
அப்போது அறைக்குள் சென்ற அபியுமே இப்போது தான் வெளியே வந்திருந்தான்.
இன்னும் சக்தி வெளிவரவில்லை என்றதோடு தலைவலி என்றும் கூற, அவளைப் பார்க்க வேண்டும் என்றும் பார்த்தாலும் என்ன பேச என்றும் நினைத்தபடி இருக்க, கணேசன் பேச ஆரம்பித்தார்.
"காலையில போட்டோ குடுத்துட்டு போனேன்.. யாருமே அதை ஒன்னும் சொல்லல.. பார்த்திங்களா எப்படி? சீதா! ஏதாச்சும் உனக்கு சரினு படுதா?" என்று கேட்க, அப்போது தான் நியாபகம் வந்தவராய் மகனைப் பார்த்தார் சீதா.
"அபி! சாப்பிட வா! உன்கிட்ட சொல்ல மறந்துட்டோம் பாரு!" என்று ஈஸ்வரி அழைக்க, அதை என்ன என கேட்கும் எண்ணம் இல்லாமல் அழைத்தாதற்காய் அங்கே சென்று சாப்பிட அமர்ந்தான் அபி.
"அபி! உங்க அப்பா உனக்கு பொண்ணு பார்த்திருக்கார்.. நாலஞ்சு போட்டோ இருக்கு.. எல்லாமே நல்லா தான் இருக்கு.. நீயே ஒன்னை செலக்ட் பண்ணேன்.. சீதா அந்த போட்டோவை கொண்டு வந்து அபி கையில குடு!" என்று படபடவென ஈஸ்வரியே பேசிவிட, எப்போதும் பேசியபடி இருக்கும் செண்பகவல்லி அமைதியானார்.
சீதாவும் மகனைப் பார்த்தபடி நிற்க, "அம்மாடி சீதா! போட்டோவை கொண்டு வந்து குடு.. அவனும் பார்க்கட்டும்" என்றார் தியாகராஜன் எதுவும் அறியாதவர்.
"இதோ எடுத்துட்டு வர்றேன் ண்ணா!" என்று கூறி சீதா எடுத்து வந்து தர,
"ம்மா! என்ன இது? இப்ப எதுக்கு எனக்கு?" என்றான் சலிப்பாய் அபி.
இருக்கும் பிரச்சனையில் இது வேறா என்று தான் தோன்றியது அவனுக்கு.
"இப்ப எதுக்கா? இப்ப பார்க்காம எப்ப பாக்கறது? வயசு என்ன உனக்கு மட்டும் குறைஞ்சுகிட்டா போகுது? உனக்கு எப்ப என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியாதாக்கும்?" என்றார் கணேசனும் சத்தமாய்.
"அட இருங்க மாப்பிள்ளை! இப்ப தான பேச ஆரம்பிச்சு இருக்கோம்.. அவனும் கொஞ்சம் யோசிச்சு பார்த்து முடிவு பண்ண வேண்டாமா? வாழப் போறது அவன்!" என்றார் தியாகராஜன்.
"அண்ணே சொல்றதும் சரி தானே? காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்கணும் தானே?" ஈஸ்வரி கணேசனுக்கு ஆதரவாக பேச,
"கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்க.. இப்போ என்ன? கல்யாணப் பேச்செடுத்தா உடனே பொண்ண முடிவு பண்ண முடியுமா? அவன் மனசுக்கு பிடிக்க வேண்டாமா? அவன் ஆற அமர உக்காந்து பார்த்து முடிவு பண்ணட்டும்.. கால்ல சுடு தண்ணி ஊத்துன மாதிரி நிக்க கூடாது யாரும்.. அவனா புடிச்சிருந்தா சொல்லுவான்.. இல்லையா வேற பாப்போம்!" என செண்பகவல்லி குரலை உயர்த்த,
"இதெல்லாம் சரி இல்ல! ஆசான் என்னமோ இப்ப எதுக்குங்கான்.. நீங்களும் சரி தான்னு பேசுதீங்க.. அவனுக்கு எடுத்து சொல்லுங்க.. இன்னும் மூணு மாசத்துல கல்யாணத்தை முடிச்சாவனும்!" என்றபடி எழுந்து சென்றார் கணேசன்.
தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் அபி நந்தன்.
"அட நீ எதுக்கு இப்படி இருக்க.. அவர் கிடக்காரு! நீ எப்பவும் போல இரு டா.. உனக்கு பிடிச்சா தான்.. இல்லைனா யாரு என்ன பண்ணிருவா? நான் இருக்கேம்ல உனக்கு?" என்று தைரியம் கொடுத்தார் பாட்டி.
"இப்படி சொல்லி சொல்லி இவனையும் சக்தியையும் கெடுத்து வச்சிருக்கீங்க நீங்க!" என்று சொல்லி கிளம்பிவிட்டார் ஈஸ்வரி.
தியாகராஜன் கூட உனக்கு சம்மதம்னா தான் டா என்று கூறி செல்ல, மென் புன்னகை கொடுத்தான்.
"சரி ம்மா! நான் போய் சக்திக்கு சாப்பாடு குடுத்துட்டு வர்றேன்!" என்று சீதா எழ,
"நானும் வர்றேன் ம்மா!" என்று சட்டென எழுந்து கொண்டான் அபி.
"நீயும் சரியா சாப்பிடலையே.. சரி ரெண்டு பேருக்குமே கொண்டு வர்றேன்!" என எடுத்துக் கொண்டார் சீதா.
"இந்தாங்க ஆச்சி! இந்த பொண்ணுங்க எதுவும் எனக்கு வேண்டாம்.. அப்பாகிட்ட என்னமும் சொல்லிக்கோங்க!" என்று கூறி அன்னையுடன் செல்ல,
"ஆகும் சரி! நான் சொன்னா உன் அப்பன் என்ன குதி குதிக்க போறானோ!" என்று கூறி அந்த கவரை வாங்கி ஓரமாய் வைத்தார்.
கட்டிலில் கால்களை குறுக்கி முட்டியினை சேர்த்தபடி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் சக்தி.
"என்ன டி இன்னுமா தலைவலி சரியாகல? மாத்திரை வேணுமான்னு கேட்டேன் தான?" என்று சீதா வர,
"இப்ப வேணும் த்தை.. எடுத்துட்டு வாங்களேன்!" என்றாள். வெளியில் தான் அபி நின்றிருந்தான்.. உள்ளே செல்ல ஏனோ அத்தனை தயக்கம் இத்தனை நாள் இல்லாத தயக்கம்.
"அது சரி!" என்று திரும்பிய சீதா,
"எங்க இவனை?" என்றவர்,
"அபி!" என்று குரல் கொடுக்க, சக்தி திரும்பவே இல்லை.
"அபி!" என்று மீண்டும் அழைத்ததும் தயங்கி தயங்கி அவன் உள்ளே செல்ல,
"அம்மா ரூம்ல தலைவலி மாத்திரை டப்பால இருக்கும்.. போய் எடுத்துட்டு வா.." என்றவர்,
"சரி இரு.. நானே எடுத்துட்டு அப்படியே காப்பியும் கொண்டு வர்றேன்!" என்று கூறி சட்டென எழுந்து செல்ல,
"அம்.. அம்மா!" என்று திக்கி அழைப்பதற்குள் சென்றுவிட்டார் அவர்.
சக்தி அபி புறம் திரும்பாமல் இருக்க, அவளிடம் எப்படி எங்கே இருந்து எதைக் கூறி தன்னை நியாயப்படுத்த என தெரியாமல் தயங்கிய அபி, மெல்ல நிமிர்ந்து திரும்பி சக்தியைப் பார்த்தான்.
அழுது வீங்கிய முகமாய் தலை கலைந்து பார்க்கவே அத்தனை சோகமாய் சக்தி அமர்ந்திருக்க, அதுவும் தாளவில்லை அபிக்கு.
"ப்ச்! சக்தி! இப்ப ஏன் இப்படி இருக்க? ப்ளீஸ்! அங்க.. ஆதி பேசினதெல்லாம் ஏதோ மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங்.. இதுக்கு போய்..." என்று கூறிவிட்டாலும் அதை சொல்வதற்குள் அவன் அத்தனை திவங்கி இருக்க, சக்தி அசையவில்லை.
"சக்தி! உன்கிட்ட தான்.." அபி அழைக்க, திரும்பினாள் இல்லை.
"சக்தி!"
"என் மேல ப்ரோமிஸ் பண்ணு ஆதி சொன்னதெல்லாம் பொய்னு!" என்று குரல் மட்டும் வந்தது சக்தி புறம் இருந்து.
அதிர்ந்த அபி விக்கித்துப் பார்த்து நிற்க, அவனை காப்பாற்றவென காபி, மாத்திரையுடன் வந்துவிட்டார் சீதா.
"இந்தா நாலு வாய் வேகமா வாங்கிட்டு இந்த காபில மாத்திரையை போடு!" என்று ஊட்டிவிட அமைதியாய் வாங்கிக் கொண்டிருந்தாள்.
"ம்ம்! வங்கு அபி!" என அபி புறம் நீட்ட, வாயில் வாங்கிக் கொண்டவனுக்கு உணவு உள்ளே இறங்க மறுத்தது.
"என்ன ரெண்டு பேரும் சண்டை போட்டிங்களா?" சீதா கேட்க, இருவருமே அமைதி.
"அதான் மூஞ்சிங்களைப் பார்த்தாலே தெரியுதே! இப்ப யார் மேல தப்பு?" சீதா கேட்டபடி ஊட்டுவதையும் நிறுத்தவில்லை.
"என்னனு தான் சொல்லுங்களேன்.. என் அறிவுக்கு எதாவது எட்டுதான்னு பார்ப்போம்!" விளையாட்டாய் சீதா கூற,
"நான் தான் தப்பு த்தை!" என்றாள் சக்தி.
"என்ன தப்பு?" சீதா கேட்க,
"இல்லம்மா என் தப்பு தான்!" என்றான் வேகமாய் அபி.
"நீ பேசாத! நான் தான முதல்ல பதில் சொன்னேன்!" என சக்தி கூற,
"சரி! சரி! என்னனு சொல்லுங்க.. சண்டை எல்லாம் அப்புறம்!" என்றார்.
"அத்தை! ஆதிக்கு பொண்ணு இருக்குன்னு தெரிஞ்சும் நான் ஆதியை லவ் பண்ணினேன்!" என்றதும் ஊட்டுவதற்கு எடுத்த கைகள் அப்படியே நின்றுவிட்டது சீதாவிற்கு.
"ஆனா ஆதி மனசுல இன்னொரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சதுமே நான் விலகிட்டேன் த்தை!" என்றாள் வேகமாய் சீதாவின் அதிர்ச்சி கண்டு.
"இப்ப என்ன சொல்ல வர்ற?" சீதாவிற்கு படபடவென வந்தது.
"அய்யோ ம்மா! பதறாதிங்க! சொல்றதை முழுசா கேளுங்க" என்றான் அபி.
"இவன் போய் ஆதிகிட்ட எனக்காக கெஞ்சிகிட்டு நிக்குறான் த்தை.." என்றதும் அவர் மகனைப் பார்க்க,
"ம்மா!" என்றான் என்ன கூறுவது என்றே தெரியாமல். அதைவிடவும் சக்தி எதை கூற போகிறாள் எல்லாம் கூறி விடுவாளோ எனும் சிறு படபடப்பு வேறு அவனை ஒட்டிக் கொண்டது.
"எனக்கு இப்ப தலைவலியே இவன் தான்.. இவனால தான்!" என்று சக்தி கூற, சீதாவிற்கு கூட தலை சுற்ற தொடங்கியது.
தான் ஒன்று நினைத்திருக்க, இப்படி காதல் என்று அதுவும் ஆதி மேல் என்று அவர் அதிர்ந்திருக்க, இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ என்ற பயமும் சேர்ந்தது.
"சக்தி! நான் சொல்றதை கேளு!" அபி கூற,
"ஜஸ்ட் ஷட்டப்! நீ பேசாத.. என்கிட்ட பேசாத!" என்றவள் கோபத்தில் அபியை விட சீதா பயம் கொண்டார்.
"என்ன டா இது.. என்னென்னவோ சொல்றிங்க.. எனக்கு பயமா இருக்கு.. இரு அம்மாவை கூப்பிடுறேன்!" என்று சீதா எழ,
"அத்தை! நான் சொல்றதை கேளுங்க முதல்ல!" என இழுத்து அமர்த்தினாள் சக்தி.
"சக்தி! என்ன பண்ற நீ?" அபிக்கு அவள் பேசுவது எதில் சென்று முடியுமோ என்று இருந்தது.
"எனக்கு புடிச்சது.. ப்ரொபோஸ் பண்ணினேன் தப்பா த்தை.. ஆனா ப்ரோமிஸ்! ஆதி மனசுல இன்னொரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சதுமே நான் விலகிட்டேன்!" சக்தி கூற, இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் விழித்தாலும் சக்தி தெளிவாய் இருந்தது புரிந்தது சீதாவிற்கு.
தொடரும்..