• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 23

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 23

"ஆதி எங்க ம்மா?" என்று சீதா கேட்க,

"ஆதி எப்ப வந்தான்? தியாகு தான் மதுவை கூட்டிட்டு வந்தான்.." என்று செண்பகவல்லி கூறவும் புரியாமல் பார்த்தனர் சீதாவும் அபியும்.

"ஆதி தான் டா போன் பண்ணி கூப்பிட்டுருக்கான்.. எமர்ஜென்சினு எங்கயோ போறான் போல.. உன்னை போன் பண்ண சொல்லி இருக்கான்.. நான் தான் நீ தூங்கி இருப்ப காலையில சொல்லிக்கலாம்னு தியாகுகிட்ட சொன்னேன்.." என்று கூற, அபி தனது மொபைல் அங்கே டேபிளில் இருந்ததை எடுத்துப் பார்க்க, நான்கு அழைப்புகள் ஆதியிடம் இருந்து..

தன்னை தானே திட்டிக் கொண்ட அபி உடனே நேரத்தையும் பார்க்காது ஆதிக்கு அழைத்துவிட்டான்.

மாத்திரையின் உபயத்தில் அப்போது தான் சுபத்ரா தூங்க ஆரம்பித்திருக்க, அபி அழைக்கவும் மொபைலுடன் வெளியே வந்துவிட்டான் ஆதி.

"சொல்லு டா!" என்று ஆதி சாதாரணமாயா கேட்க,

"ஆதி! எங்க இருக்க நீ? ஏன் மதுவை மாமா கூட அனுப்பின? உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்ன பதறினான் அபி.

"டேய்! என்ன டென்ஷன் உனக்கு? போன் பண்ணும் போது எங்க போன? ஆமா சக்தியை சமாதானம் பண்ணிட்டியா இல்லையா?" என்றான் மீண்டும் இலகுவாய் ஆதி.

"ப்ச்! நான் என்ன கேட்குறேன்.. நீ என்ன பேசுற? இப்ப எங்க இருக்குற.. அதை சொல்லு.. நான் உடனே வர்ரேன்!" என்ற அபி பைக் சாவி இருந்த பக்கம் பார்வையை திருப்பினான்.

மதுவை கூட அனுப்பிவிட்டு தனியே என்ன செய்கிறான்.. தனியாய் இருந்து எதையாவது நினைத்து தன்னை தானே வருத்தி கொள்வானோ என்ற ஓர் எண்ணம்.. கூடவே இல்லையே இப்படி உடனடியாக மதுவை அனுப்பி இருக்கிறான் என்றால் என்ன பிரச்சனையோ என்றொரு எண்ணம் என எண்ணங்களுக்குள் சுழன்றான் அபி.

"அபி! பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை.. நான் இங்க சுப்... ஸ்ரீபெரும்புதூர் வரை வந்திருக்கேன்.." சுபத்ராவைப் பார்க்க வந்திருப்பதாய் கூற வந்தவன் அப்படி கூறாமல் நிறுத்திவிட, அதில் இன்னமும் கலக்கமுற்றது அபிக்கு.

"அங்க எதுக்கு டா? சுபத்ரா அக்கா ஓகே தானே? ஏன் டா போறவன் வீட்டுக்க வந்து என்னை கூட்டிட்டு போக மாட்டியா?" என்று பதட்டமாகிவிட,

"யாருக்கு என்ன ஆச்சு டா?" என கலவரமுற்றனர் பெரியவர்கள்.

அதை ஆதியுமே கேட்டுக் கொண்டிருக்க, அவர்களை கையமர்த்தி அபி நிறுத்தி ஆதி சொல்வதை கேட்கலானான்.

"இப்ப எதுக்கு எல்லாரையும் நீ டென்ஷன் பண்ணிட்டு இருக்க? வேணும்னா கூட்டிட்டு வர மாட்டேனா? போன் எடுக்காதது உன் தப்பு.." என்றவன்,

"முதல்ல அவங்களை சமாதானப்படுத்திட்டு தனியா வா!" என்று கூறி அழைப்பை நிறுத்த போக,

"என்னனு?" என்றான் அபி.

"என்னவாச்சும் சொல்லு டா.. இங்க யாருக்கும் ஒன்னும் இல்லைனு சொல்லு!" என்று கட் செய்தவனை வெட்டவா குத்தவா என நினைத்தவன்,

'என்கிட்டயே ஒன்னும் சொல்லாம இவங்களை வேற சமாதானப்படுத்த சொல்லறானே' என நொந்து சில நிமிடங்களில் அதை முடித்து அறைக்கு வந்து ஆதிக்கு அழைத்தான்.

"சுபத்ராக்கு சின்னதா ஒரு அச்சிடேன்ட்!" அபி கேட்கும் முன் ஆதியே கூறிவிட்டான்.

"அச்சிடேன்ட்டா? என்ன டா சொல்ற? எப்படி? இப்ப எப்படி இருக்காங்க?"

"முழுசா சொல்ல விடு டா.. பெரிய ப்ரோப்லேம் ஒன்னும் இல்லை.. காலுல தான் கொஞ்சம் அடி.. ஆறு மாசம் கூட ஆகுமாம் எழுந்து நடக்க.."

"என்ன ஆதி சொல்ற? ஆறு மாசமா? அது சின்ன அடியா உனக்கு?"

"ப்ச்! சரி டா.. பெரிய அடி தான்.. கொஞ்சம் கஷ்டப்படுறா.. மார்னிங் முடிஞ்சா நீ சக்தியை கூட்டிட்டு வா.. மார்னிங்னா மார்னிங் கிளம்பி வந்தா போதும்.. இப்பவே ஊரை கூட்ட வேண்டாம்.. புரியுதா?" என்றான் கறாராய்.

"ப்ச்! பண்றதெல்லாம் பெரிய இவனாட்டம்.. பேச்சை பாரு!" என்றவன் மீண்டும் மீண்டுமாய் கேட்டு உறுதி செய்து சுபத்ராவின் அக்காவிற்கு தெரியுமா என பேசிதான் வைத்தான்.

அடுத்த நாள் வீட்டில் மெதுவாய் விஷயத்தை சொல்லிவிட்டே கிளம்பினான் அபி சக்தியுடன்.

சக்தி காலை எழுந்ததும் கேட்டது சுபத்ராவின் விபத்தை தான். நொடியும் தாமதிக்காது தானும் வருவதாய் கூறியவள் அவனுடனே கிளம்பிவிட்டாள்.

"இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுனு எனக்கு தெரியவே இல்ல.. அவனே நமக்கு யாரோ தான்.. இதுல அவன் சொந்தக்காரன் சொக்காரனுக்கு உடம்பு சரி இல்லனு நம்ம வீட்டு பிள்ளைங்கள அவ்வளவு தூரம் அனுப்ப என்னனு நீங்க எல்லாம் ஒத்துக்குறிங்க?" என்ற கணேசன்,

"நேத்து உன்கிட்ட போட்டோ குடுத்துட்டு போனேனே அதை எல்லாம் அவன் பார்த்தானா? எதாவது சொன்னானா? ஒரு அம்மாவா நீ இதை தான் அவன்கிட்ட கேட்கணும் முதல்ல? போய்ட்டு வானு வழியனுப்பி வைக்க நிக்குற!" என்ன சீதாவையும் பேச ஆரம்பித்து விட்டார்.

"மாப்பிள்ளை! என்ன பேசுறீங்க? ஆதியும் இந்த வீட்டுல ஒரு பயன் மாதிரி தான?" தியாகராஜன் கேட்க,

"மாதிரி தான் மச்சான்.. பையன் இல்லை இல்ல? அந்த லிமிட்ல நிறுத்துங்கன்னு சொல்லுறேன்! விட்டா வீட்டுக்குள்ள வந்து இருந்து பொண்ணு கேட்பானுங்க.. அதுக்கு சரினு சொல்ல முடியுமா!" என்றார் விடாமல்.

"போதும்ங்க.." என்று அதற்கு மேல் கேட்க முடியாமல் தடுத்துவிட்டார் சீதா.

நல்லவேளை அங்கே ஈஸ்வரி இல்லை என்று நிம்மதி அடையாமல் இல்லை அங்கிருந்த உள்ளங்களில் சில.

"உங்களுக்கு என்ன பிரச்சனை? அவன் கல்யாணம் தான? அடுத்த ரெண்டு மாசத்துல பண்ணனும் அவ்வளவு தான? அவன் பண்ணிப்பான்.. அதுக்காக அடுத்த பிள்ளைங்களை எல்லாம் பேசாதீங்க!" என்று சீதா உறுதியாய் கூறிவிட, அபி, சக்தி, செண்பகவல்லி என அனைவருமே அதிர்ச்சியாய் தான் பார்த்தனர் சீதாவை.

எந்த நம்பிக்கையில் இப்படி வாக்கு கொடுக்கிறார் என்பதை போல வியந்து பார்க்க,

"அவனை ஒத்த வார்த்தை சொல்ல கூடாது.. எதாவது சொல்லி என் வாயை அடச்சிடுவா!" என்ற கணேசன் உள்ளே சென்றுவிட,

"ம்ம்க்கும் அப்படியே வாயை அடச்சிட்டு தான் வேற வேலை பார்ப்பார் உன் புருஷன்!" என்றார் செண்பகவல்லி.

"என்ன இப்படி பார்த்துட்டு நிக்கிங்க.. முதல்ல ரெண்டு பேரும் கிளம்புங்க.." என அதிர்ந்து நின்றவர்களை அனுப்பி வைத்தார் சீதா.

"என்ன சீதா! அபிகிட்ட கூட கேட்காம டப்புனு ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிப்பான்னு சொல்லிட்ட?" அபி, சக்தி இருவரும் சென்றதும் செண்பகவல்லி கேட்க,

"அவங்க ரெண்டு பேரும் நின்னுட்டு இருந்தா இந்த மனுஷன் இப்படி தான் நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருப்பார்.. முதல்ல அங்க போய் என்ன நிலவரம்னு இவங்க பார்த்துட்டு வரட்டும்.. அப்புறமா பேசிக்கலாம்.." என்று சாதாரணமாய் சீதா கூற,

"உன் புருஷனை சமாளிக்க உன்னால தான் முடியும் போ!" என்று மெச்சிக் கொண்டார் அன்னை.

அதற்கு சிரித்தாலும் சீதாவின் மனம் சக்தி அபியை ஏற்றுக் கொள்வாளா? அப்படி ஏற்றுக் கொண்டால் ஈஸ்வரி மட்டும் அல்லாது தன் கணவரிடமும் கூட அதற்கு போராட தான் வேண்டும்.. என்று தோன்ற, அப்படி சக்திக்கு விருப்பம் இல்லை என்றால் எப்பாடுபட்டாவது அபிக்கு உடனே ஒரு பெண்ணைப் பார்த்து திருமணத்தை நடத்தி முடித்திட வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

காரில் சென்று கொண்டிருந்த போதும் அங்கே சென்று சேர எடுத்த ஒரு மணி நேர இடைவெளியிலும் ஒரு வார்த்தை தேவைக்கு அதிகமாய் அபியிடம் பேசிடவில்லை சக்தி.

அவள் தான் பேசவில்லையே தவிற, அவள் தேவையை கவனிக்கவும் அவளிடம் பேசவும் தயங்கவில்லை அபி.

சிறு குற்ற உணர்ச்சி.. பிறந்ததில் இருந்து அருகில் இருப்பவளிடம் இப்படி மறைத்துவிட்டோமே என்று மட்டும் இல்லாமல் இல்லை.

அதையும் மீறி அவன் பாசம் முன்னிற்க, அவள் முகம் பார்த்து பேசிட முடியவிட்டாலும் அவள் தேவைகளை கவனித்துக் கொண்டான்.

இடைஇடைடே ஆதி அழைத்து அவர்கள் வரும் இடத்தையும் கேட்டுக் கொண்டான்.

காலையில் எழும் பொழுதே சுபத்ராவிற்கு காலில் வலியுடன் ஆரம்பிக்க, சிறு முகச் சுருக்கத்தில் கண்டு கொண்டவன் அவளிடம் கேட்காமல், மருத்துவர் வரும் நேரம் கேட்டுக் கொண்டான்.

"இருக்கும் மிஸ்டர் ஆதி.. காயம் எப்படி வலி இல்லாம இருக்க முடியும்? இன்னும் ஒரு மாசத்துக்கு நிச்சயம் வலி அதிகமா தான் இருக்கும். அவங்க மெடிசின் எடுத்துக்க எடுத்துக்க தான் அது குறையும்" என்று கூற, ஆதி மருத்துவரை கவனிக்க, ஆதியை கவனித்தாள் சுபத்ரா.

"தேவா!" மருத்துவர் சென்றதும் மாத்திரைகளை பார்த்தபடி நின்ற ஆதியை சுபத்ரா அழைக்க, கேட்டதற்கு அடையாளமாய் தலையை மட்டும் உயர்த்தி திரும்பாமல் நின்றான்.

"ஒரு மாசத்துல வலி குறைஞ்சிடும்னு டாக்டர் சொன்னாங்களே! அந்த வலி எனக்கு கொஞ்சம் தான்.. ஆனா நீ குடுத்துட்டு இருக்குற பார்த்தியா! அது தான் ஆயுள் முழுசுக்கும் எனக்கு தீராத வலி.. வேணும்னே வலிக்க வலிக்க குடுத்துட்டு நிக்குற.. என்னால இந்த காலோட இப்பவே எழுந்து நடக்க முடியும்.. ஆனா மனசுல இருக்குற பாரத்தை தாங்கிக்கிட்டு வாழ தான் முடியல!" என்றவள் முகத்தை மூடி அழ, திரும்பியவன் வேகமாய் அவள் அருகில் வந்துவிட்டான்.

"என்ன பண்ணிட்டு இருக்க நீ? எதுலயும் கவனம் இல்லாம இவ்வளவு தூரம் வந்தது போதாதா?" என்று ஆதி சத்தமிட,

"எல்லாம் தேவா விட்டுட்டு போனதுல இருந்து தான்னு புரியல இல்ல?" என்றாள் கண்ணீரோடு நிமிர்ந்து.

அதில் சற்றே நிதானம் அடைந்தவன் அங்கிருந்த இருக்கையை அவளருகில் இழுத்துப் போட்டு அதில் அமர்ந்தான்.

"நான் என்ன தப்பு பண்ணினேன்?" என்றதும் ஆதி முறைக்க,

"அவ என்னோட அக்கா.. அதுவும் வாழ்க்கை வெறுத்து சாவை தேடி போய் திரும்ப வந்தவ.. அவளை மன்னிச்சது அவ்வளவு பெரிய தப்பா?" என்றாள்.

"போதும்! ரொம்ப பேசிட்ட! கொஞ்சம் ரெஸ்ட் எடு!" என்றவனை அவள் பார்வைகளால் துரத்தினாள்.

"கேளு சுபி! முதல்ல ரிலாக்ஸா ரெஸ்ட் எடு" என்றான் அத்தனை மென்மையாய்.

ஆனாலும் அது போதவில்லை என்பதை போல அத்தனை தேடல் அவள் பார்வையில்.

"சரி!" என்று இழுத்தவன்,

"சாரி!" என்றான் பெருமூச்சோடு.. எதற்கு என்று புரியாமல் அவள் பார்க்க,

"எல்லாத்துக்கும்.. என்னால டீடெயிலா சொல்ல முடியாது.. ஆனா...." என்று சில நொடிகள் அவன் மௌனம் காக்க, அவனே சொல்ல என அமைதியாய் பார்த்தாள்.

"நானும்..." என்று மீண்டும் ஒரு சிறு இடைவெளி விட்டவன்,

"நிஜமாவே மிஸ் பண்ணேன்!" என்று சொல்ல, மொத்தமாய் விரிந்து கொண்டது சுபத்ராவின் விழிகள்.

தொடரும்..
 
  • Love
Reactions: Durka Janani