• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 8

சுபத்ராவைப் பார்க்க பாவமாய் இருந்த போதிலும் நண்பனை தனியாய் விடவும் மனதில்லை. அவளைப் பார்த்தபடியே ஆதியிடம் அபி ஓட, சுபாவை திரும்பி திரும்பிப் பார்த்தபடி சென்றாள் சக்தி.

சுபத்ராவும் ஆதியை விடுவதாய் இல்லை. இத்தனை வருடங்கள் தேடித் தேடி அலைந்தவனை கண்டுவிட்ட பின்பு அத்தனை சீக்கிரம் விட்டுவிட முடியுமா?

அவன் வண்டியின் முன் வந்து வழிமறித்து சுபத்ரா நின்றாள்.

"என்ன சக்தி! யாரா இருக்கும் இந்த பொண்ணு? ஆதி விலகி போனாலும் வம்பா வந்து நிக்குது?" என்ற அபி தனது வண்டியில் இருந்து இறங்கி ஆதி அருகே செல்ல, சக்திக்கும் அத்தனை குழப்பம்.

"ஆதி! என்னடா நடக்குது இங்க? ஏன் இவங்க உன்னை சுத்தி வர்றாங்க?" அபி கேட்க,

"ப்ச்! ஷிட்!" என்று வண்டியில் கைகளை மடக்கி குத்திக் கொண்டவன்,

"வந்திருக்கவே கூடாது!" என்றான் கோபமாய்.

"தேவா ப்ளீஸ்! தயவு செஞ்சு மதுவை காட்டுங்க.. நான் பாக்கணும்.. அக்கா.. அக்கா மதுவை பார்த்தே ஆகணும்!" சுபத்ரா கெஞ்ச,

"நோ...!" என்றவன் கத்தலில் அபி, சக்தி கூட அதிர்ந்து விட்டனர்.

பெரிதாய் சிரித்து பேசி என ஆதியை பார்த்திரா விட்டாலும் இந்த அளவுக்கான கோபமும் அவனிடம் இதுவரைக் கண்டதில்லையே இருவரும்.

அதைவிட அதிர்ந்தது என்னவோ சுபத்ரா தான். அவனின் அழுத்தமான முகம் பார்த்தே இவன் தன்னுடன் பழகிய அதே தேவா தானா? என உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, இத்தனை இறுகிய முகமும் அவன் காட்டும் கோபமும் என பழைய தேவாவை காண துடித்தது அவள் விழிகள்.

அதை கேட்கும் நேரமும் பேசும் இடமும் இது அல்லவே! அதற்கு முன்னதாக தேவை எல்லாம் மது என்றவள். அவளைப் பார்த்துவிட்டாலே போதும் என்று தோன்ற வைத்துவிட்டான்.

"ஆதி! ஆதி ரிலாக்ஸ் டா!" என அபி வந்து தோள்களை பிடிக்க,

"யார் நீங்க? மதுவை நீங்க ஏன் பார்க்கனும்?" என சுபத்ராவிடம் கேட்டிருந்தாள் சக்தி.

"சக்தி!" என்று கோபமாய் ஆதி அழைக்க, அபி என்ன செய்வதென தெரியாமல் தான் நின்றான்.

"நான் சுபா.. சுபத்ரா!.. மது தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்கவும் இம்முறை சக்தி ஆதியைப் பார்க்க, அவன் இடவலமாய் தலையசைத்தான்.

"நான் மதுவுக்கு சித்தி!.. அவ அம்மாவோட சிஸ்டர்.. மது... மது இவங்களோட தான் இருக்கா.. பேமிலி ப்ரோப்லேம்.. மதுவை நான் பார்க்கணும்.. ப்ளீஸ் நீங்க கொஞ்சம் சொல்லுங்க தேவாகிட்ட!" என்று சக்தியிடம் சுபா கெஞ்ச, அவளைப் பார்க்கவும் பாவமாய் தான் இருந்தது உடன் இருந்தவர்களுக்கு.

மதுவிற்கு சித்தியா? என திகைத்து பார்த்த அபி சக்தி இருவருக்கும் குழப்பத்தின் முடிச்சுக்கான சிறு நூல் கூட கிடைக்கவில்லை இதில்.

"போதும்!" என்று மீண்டுமாய் கோபம் கொண்டு கத்திய ஆதி,

"உன் ட்ராமா போதும்.. பேசாம கிளம்பிடு!" ஆதி கூற, இப்போது சேர்த்து வைத்த பொறுமை எல்லாம் கரைந்து கோபத்திற்கு வந்திருந்தாள் சுபத்ரா.

"ட்ராமாவா?" என கண்ணீரோடு பார்த்தவளுக்கு, தன்னுடன் இருந்த தேவா இவன் இல்லை என்று தெளிவாய் புரிய வர, சொல்ல முடியாத வலி தான் அவளுள்.

"அபி கிளம்பு போலாம்!" என்றவன் வண்டியை திருப்ப,

"நோ!" என மீண்டுமாய் வண்டி முன் வந்து நின்றவள்,

"இப்ப மதுவை நான் பார்த்தே ஆகணும்.. இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. போலீசை கூப்பிட கூட தயங்கமாட்டேன்!" தன் உயிரானவன் என்ற எண்ணத்தை எல்லாம் மனதின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு மதுவிற்காக அடுத்த ஆயுதத்தை கையில் ஏந்தி இருந்தாள் சுபத்ரா.

"ஓஹ் காட்!" என்றவன் கண்களை அழுத்தமாய் மூடி இருக்க,

"அபி! இதை இதுக்கு மேல இங்க பேசினா சரி வராது.. நம்ம வீட்டுக்கு இவங்களை நாம கூட்டிட்டு போய்டலாம்!" என்றாள் சக்தி.

புரிவதாய் இருந்தாலும் இன்னும் தெளிவாகவில்லை. ஆனாலும் சுபத்ரா அழுகையிலும் மதுவிற்காகவே இத்தனை கோபம் என்பதும் சக்திக்கு புரிய கூறிவிட்டாள்.

"வாட்? என்ன சொன்ன? என்ன தெரியும் இவளை உனக்கு?" என்றவன் பேச்சில் மரியாதை இல்லை சுபத்ராவின் மேல்.

"ஆதி ப்ளீஸ் காம் டவுன்! இது பப்ளிக் பிளேஸ்! மண்டபம் வேற! யாரும் பார்த்து தப்பா நினைச்சிட கூடாது.. சக்தி அதுக்காக தான் சொன்னா!" என்ற அபி, மறுத்த ஆதியுடன் பேசி பேசி அவன் மறுக்க மறுக்க, அங்கே அருகில் நின்ற ஆட்டோவை அழைத்து வந்து அபியுடன் சுபத்ராவை தனது வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு ஆதியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

அத்தனை பிடிவாதம் ஆதி குரலில். சுபத்ராவை அழைத்து வர வேண்டாம் என்ற பிடிவாதம். இவ்வளவு அதிகாரமாய் ஆதி. அது அனைவருக்குமே வியப்பு தான். காரணம் புரிந்த சுபத்ரா மட்டும் மதுவிற்காக அமைதி காக்க, எதுவுமே புரியாமல் வீடு வரை அழைத்து வந்துவிட்டனர் சுபத்ராவை சக்தியுடன் அபி.

"சீதாம்மா! மது?" என்று வேகமாய் வீட்டினுள் ஆதி வர,

"வா ஆதி! இந்த நேரம் வந்திருக்க.. நீ அப்படியே வீட்டுக்கு போய்டுவனு நினச்சேன்.. அம்மாகூட விளையாடிட்டு அங்கேயே தூங்கிட்டா ஆதி!" என்று சீதா பேசியபடி பார்க்க, உள்ளே நுழைந்தனர் சுபத்ராவுடன் மற்ற இருவரும்.

"அடுத்த ஆளா?" என்ற கணேசன்,

"ஏன் பிள்ளைங்களா சும்மாவே இருக்க மாட்டிங்களா?" தொலைக்காட்சியை அமர்த்திவிட்டு உறங்க எழுந்து கொண்ட கணேசன் தற்செயலாய் சுபத்ராவை இவர்களுடன் கவனித்துவிட்டு கோபமாய் கேட்க,

"என்னனு உங்களுக்கு தெரியும்? என்ன அடுத்த ஆளு? வந்தவங்களை வாங்கனு சொல்லிப் பழகுங்க!" சீதா வேகமாய் கூற, ஆதியின் கண்கள் செண்பகவல்லி அறைக்கு தான் பாய்ந்தது.

"ரொம்பவே இடம் கொடுக்குற சீதா! சரி இல்லை!" என்றவர் அங்கிருந்தவர்களை முறைத்துவிட்டு, கூடுதலாய் இரு நொடிகள் ஆதியையும் கவனித்துவிட்டே சென்றார்.

ஈஸ்வரியும் தியாகராஜனும் கூட சில நிமிடங்கள் முன்பு தான் உறங்க சென்றிருக்க, சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வெளி வந்திருந்த சீதா தான் பேசினார்.

"இவருக்கு வேலையும் இல்ல நேரங்காலமும் தெரியாது!" என்ற சீதா யாரென்று கேட்கும் முன்பே சுபத்ராவைப் பார்த்து புன்னகைத்தார்.

"உன் பிரண்ட்டா சக்தி? கல்யாணத்துக்கு வந்த பொண்ணா?" என்று சீதாவே நினைத்துக் கேட்க,

"மது எங்கே அத்தை?" என்றான் அபி யாரும் இருக்கிறார்களா என பார்த்தபடியே.

"அம்மா ரூம்ல தான் தூங்குறா டா!" என்ற சீதா,

"எல்லாரும் தூங்க போயாச்சு..!" என்றார் அபியின் பார்வை புரிந்து.. கூடவே அவர்களின் அமைதியும் எதையோ உணர்த்த, அவர்களே பேசட்டும் என அபி, சக்தியை மாறி மாறி பார்த்தபடி நின்றார்.

"சீதாம்மா! நான்... நான்.. மதுவை என்னோட கூட்டிட்டு போறேனே!" ஆதி கூற, குழப்பமாய் பார்த்தார் சீதா.

"ஆதி! வெயிட் டா.. பேசலாம்!" ஆவி கூற,

"வேண்டாம் அபி! பேச எதுவும் இல்ல.. ப்ளீஸ்!" என்றவன் கெஞ்சும் பார்வை இப்பொழுதும் கூட என்னிடம் எதுவும் கேட்காதே என்பதாய் இருந்தது.

"மது எங்க இருக்கா?" சுபா சீதாவிடம் கேட்க,

"என்னோட இருக்கா.. என்னோட தான் இருப்பா!" என்றான் கட்டளை போல ஆதி.

சீதாவே அதிர்ந்து தான் போனார் அவன் குரல் வித்யாசத்தில். இவ்வளவு அதிகாரமாய் குரலுயர்த்தி இவனுக்கு பேச வருமா என்பதை போன்ற பார்வை.

"ஆதி! நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லை.. முதல்ல ப்ரோப்லேம் என்னனு சால்வ் பண்ண பார்க்கலாம்.. அப்புறம் பிரச்சனை வேற மாதிரி ஆகிட கூடாது.." சக்தி நிலைமையை எடுத்து கூற,

"ஆமா டா ஆதி! அவங்க என்ன சொல்றாங்கனு கேட்போம்!" என்றான் அபியும்.

"என்னடா பேசறீங்க? எனக்கு ஒன்னும் புரியல.. இந்த பொண்ணு யாரு? மதுவை ஏன் கேட்கணும்?" சீதா கேட்க, அபி சக்தியிடம் கூறியதையே சீதாவிடமும் கூறினாள் சுபத்ரா.

"அக்கா பாவம் ம்மா! நீங்க கொஞ்சம் சொல்லுங்க.. மதுவை அக்கா பார்க்கணும் ஹெல்ப் பண்ணுங்க ம்மா!" என்று சுபத்ரா கூற,

"ஆதி! என்ன சொல்றா இந்த பொண்ணு? மது அம்மா உயிரோட இருக்காங்களா?" என்று சீதா கேட்க, அப்போது தான் சக்திக்கும் அது உரைத்தது.

ஆம்! சுபா சித்தி என்றாள் அவள் அக்கா தானே மதுவின் அம்மா? அந்த நினைவில் உண்மையா என்பதை போல மூவருமே ஆதியைப் பார்க்க, என்ன சொல்ல எதை தான் சொல்ல என தெரியாமல் நின்றவன் பெருமூச்சோடு கண்களை மூடி திறந்தான்.

சுபத்ராவை அத்தனை கோபப் பார்வை பார்த்தும் அவள் கண்களை கூடுதலாய் ஒரு நொடி பார்த்திட முடியவில்லை அவனால்.

"எல்லாமே விதி தான்.. யார் மேல தப்பு சொல்ல..." என்றவள் மீண்டும் ஆதியின் பார்வையில் அமைதியானாள்.

யார் மேல தப்பு சொல்லையா? ஏன் யார் மேலயும் தப்பே இல்லையா? உன் அம்மா, அப்பா, உன்னோட..... " என்றவன் கைகளை இறுக மூடித் திறந்தான்.

"யார் மேலயுமே தப்பில்லயா?" என மீண்டும் கேட்டு,

"உங்க வாசனை கூட அவளுக்கு வேண்டாம்னு தானே வந்தேன்.. விரட்டி அடிக்குறிங்க! நோகடிச்சது போதாதா சாகடிக்கணுமா?"

"தேவா ப்ளீஸ்!" என்றவளுக்கு இதற்கு பதில் கூற முடியவில்லை.

"அக்கா பாவம்.. அக்கா பாவம்னு அவ்வளவு சொல்ற.. மது பாவம் இல்ல? அவளைப் போய் கொல்ல பார்த்தீங்களே?" என்றவனை திடுக்கிட்டு மற்றவர்கள் பார்க்க,

"இல்ல இல்ல தேவா! சத்தியமா இல்ல!.. அக்கா அக்காவுமே இப்ப அப்படி இல்.. அவ இப்ப இருக்குற நிலைமையே வேற.. ப்ளீஸ் ப்ளீஸ்.. நான் சொல்றதை கேளுங்க" என்றவள் கண்ணீர் பொங்கிக் கொண்டே இருக்க, அதை வெறுமையாய் பார்த்தான்.

"அக்கா! அந்த ஃபையர் அச்சிடேன்ட்க்கு அப்புறமா எழுந்துக்கவே இல்ல.. அவ முன்ன மாதிரியும் இல்லை தேவா.. ரொம்ப உடைஞ்சிட்டா.. மதுக்காக தான் அவ வாழுறதே!"

சுபத்ரா கூற கூற முடிச்சுக்கள் அதிகமாகியதே தவிர அங்கிருந்தவர்களுக்கு குழப்பங்கள் குறையவில்லை.

மற்றவர்கள் இவர்கள் பேசுவதை கேட்டபடி நிற்க, அடுத்ததாய் ஆதி கேட்ட கேள்வி அனைவரையுமே ஆட்டிப் பார்த்தது.

"அச்சிடேன்ட் நடக்குறதுக்கு முன்னாடி உன் அக்கா நினச்ச மாதிரி மதுவுக்கு எதுவும் ஆகி இருந்தா.. அப்படி நடந்திருந்தா மது இந்த உலகத்துல இல்லாம போயிருந்தா இப்ப யார்கிட்ட போய் கெஞ்சி இருப்ப?" என்றவன் கேள்வியில் எள்ளல் இருந்தாலும் கோபத்தின் அளவில் குறையும் இல்லை.

தொடரும்..