அத்தியாயம்..10
ஆட்டிசம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருக்கும் அர்த்தப்படுத்தவில்லை. திறன் மற்றும் ஆர்வமுள்ள பகுதிகள் வளரும் மற்றும் வளரும் போது ASDஇன் பண்புகள் நபரின் வாழ்நாள் முழுவதும் மாறுபடலாம்.
பத்மவர்ஷினி சூரியவர்த்தனை அன்று ஏன் தனியாகச் சந்திக்கச் சென்றோம் என இன்று வரை மனதிற்குள் கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அன்று சந்திக்கப் போகாமலிருந்திருந்தால் இன்று குழந்தையோடு தனித்திருந்திருக்கத் தேவையில்லையே. விதி வைத்துச் செய்து விட்டது எனத் தன்னைத் தானே நொந்து கொள்வதே தவிர வேறு எதுவுமில்லை.
வாகனத்தில் அமர்ந்திருந்தவனை நோக்கி மெல்ல நடந்தவளின் உள்ளமோ ஹீரோ செய்தவதற்கு எனக்கு மண்டகப்படி கிடைக்கப் போகிறது என எண்ணிக் கொண்டே நடந்தவளை கடுகடுவென முகத்தோடு எதிர் கொண்டான் சூரியவர்த்தன்.
விடியலின் மென்காற்றில் கூந்தல் கற்றைகள் பறந்திட அன்ன நடைபோட்டு வந்தவளின் வதனம் அள்ளிகட்டிக் கொண்டு சிந்து பாடச் சொல்லி அவனின் உள்ளம் ஏங்கியது. பார்த்த நாளிலிருந்து அவளின் விழிகள் பேசும் கதைகளை தனக்குள் புரிந்து கொண்ட எண்ணங்கள் அவனுள் ஏராளமாக இருந்தது. ஆனால் அவளிடம் நேரடியாகச் சொன்னதில்லை தவிர அவளை பின் தொடரும் பார்வைகளை இவனால் கட்டுக்கோப்பாக இருக்க முடியவில்லை.
அவளை வருடி விட்டுச் செல்லும் நேசக்காற்றுகளை அவள் சுவாசிக்க அவளின் மூச்சுக் காற்றைத் தான் உள்வாங்க என அவனின் எண்ணயலைகளோ தறிகெட்டு ஓடும் அந்நேரத்தில். ஆனால் அது மற்றவர்களின் பார்வைக்குத் தெரியாத அளவிற்கு முகமோ நிர்மலமாக இருக்கும். வெளியே காட்டினால் தன்னுடைய அந்தஸ்து என்ன ஆகும் என நினைப்பும் அவனிடம் அதிகமாக இருந்தது.
தன் வாகனத்தின் அருகே வந்தவளை ''உள்ளே ஏறி வா'' என அழைத்தவனின் குரலிலிருக்கும் அந்நியத் தன்மையை அறிந்தவளோ இன்று என் காது கேட்காது போர்டு மாற்றிக் கொள்ளலாம் என எண்ணத்தில் வாகனத்தில் ஏறியவள் அவனின் அருகே தயக்கத்துடன் அமர்ந்தாள் பத்மவர்ஷினி.
தன் அருகே அமர்ந்தவளை விழிகளாலே தழுவியவனின் முகம் இறுகிக் கிடந்தாலும் அவளை வார்த்தைகளால் சாடினான் சூரியவர்த்தன்.
''ஒருவன் எதற்குக் கூப்பிடுகிறான் என்ன மாதிரி பார்க்கிறான் தெரியாமல் இந்தப் பீல்டுல நுழைந்து விட்டாயா.. கொஞ்சமாவது தலையில் சாம்பல் நிறத்தில் மூளை எனும் வஸ்து இருக்கா இல்லை களிமண்ணாக இருக்கா'' என அவளிடம் சுள்ளென்று எரிந்து விழுந்தான் சூரியவர்த்தன்.
அவனின் அடக்க முடியாத சீற்றத்தைக் கண்டவளுக்கு மனதிற்குள் குளிர் பரப்பியது. ஆனால் அதை வெளியே காட்டினால் அவளுடைய கெத்து என்னாவது என நினைத்தவள் சிறு சிரிப்புடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவள்… ''ஏன் சார் என்கிட்ட இல்லை என்றால் உங்க மூளையை கடன் தரப் போகிறீர்களா'' கேலியாக நக்கலடித்தவள்.. ''ஒருவன் ஏன் பார்க்கிறான்? எதற்குப் பொடி வைத்துப் பேசுகிறான் தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை சார் நான். ஆண் பெண் ஈர்ப்பு என்பது எல்லா பீல்டு இருப்பது தான். ஆனால் சினி பீல்டுல அது அதிகமாக இருப்பது தெரிந்த விசயம் தானே. இங்கே பெண்களைப் போதைப் பொருளாகச் சித்தரிக்கும் மாய உலகம் சார். அதனால் தான் பெண்கள் உழைக்கவும் திறமையை நிறுப்பீக்க வருபவர்களை வேறு மாதிரி உபயோகித்து கிழிந்த காகிதமாகக் குப்பையில் எறிந்தவர்களும் உண்டு. உசரமான கோபுரத்தில் வைப்பது உண்டு. இவனுக்காக என்னுடைய திறமையை முடக்கிக் கொண்டு வீட்டுக்குள் அடங்கி விட முடியாது. கதாநாயகன் என்றாலே பெண்கள் உருகி மேலே விழுந்து விடுவார்கள் என்கிற கற்பனை உலகத்தில் மகேஷ் சார் இருக்கிறார் . அவரின் கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாதுலே'' என்று சொல்லியவளை ஆழ்ந்து பார்த்தவன் கேட்ட கேள்வியில் மனமோ திடுக்கிட பதில் அறியாத மழலையாகத் திகைத்தாள் பத்மவர்ஷினி.
''அப்படியென்றால் உனக்கு ஹீரோ பார்வையிலிருக்கும் ஆசை தெரியும் சொல்லீறியே.. அப்ப என் விழிப் பார்வையும் உனக்குப் புரிகிறது தானே'' எனக் கேட்டவனோ அவளின் அகத்தில் இருப்பதை அகழ் ஆழ்வராய்ச்சி செய்தபடியே ஊடுருவிப் பார்த்தான் சூரியவர்த்தன்
''அ..அது..அது..'' எனப் பேசத் திணறியவளைக் கண்டு நமுட்டு சிரிப்பைச் சிந்தியவன் நான் உன்னை அறிவேன் எனச் சீண்டலான பாவனையுடன் அவளின் அகத்தின் பக்கத்தை அறிந்தவன் போலப் பார்த்தான் சூரியவர்த்தன்.
அவனின் பார்வையில் கட்டுண்டவள் ''நீங்க முதல் முறையிலே ஒற்றை பார்வையிலே என் மனத்தை ஆட்கொண்டு ஆளத் தொடங்கிட்டிங்க தெரியும். ஆனால் இது எப்படி சாத்தியம்.. என்ற கேள்வி எனக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது'' என்றவள் மேலே சொல்லாமல் தன் நகக்கண்ணில் பூசிய சாயங்களைக் கீறிக் கொண்டு இருந்தாள் பத்மவர்ஷினி.
முதல் முறை பார்த்த போதே அவன் தன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் என அறிந்தாலும் அவன் ஆளுமையான பேசும் முறைகளும் தானே எல்லாம் என எடுக்கும் முடிவுகளும் அவளைத் தயங்கவே செய்தது.
ஆனாலும் அவனின் எல்லாம் முடிவும் தானே எடுத்து அதற்கு மற்றவர்களோ தஞ்சாவூர் பொம்மையாகத் தலையாட்டி வைக்கும் நிலைமை வைத்திருக்கும் அவனுடைய ஆளுமையான திறனும் கம்பீரமும் அவளுள் எல்லையில்லாத பிரமிப்பு உண்டானது தான் உண்மை. சுற்றியிருக்கும் அத்தனை பேரையும் விழிகளாலும் ஒற்றை சொல்லாலும் தனக்குத் தேவைக்குத் தகுந்த மாதிரி திறமையாக வேலை வாங்கி ஆட வைத்தவன் மாயனாக அவனின் பிம்பம் அவளுள் எழுந்தது.
ஆனால் அவனின் இறுக்கமான போக்கும் சில நேரங்களில் சூட்டீங் பாட்டில் கண்டவளுக்கு உள்ளுறை ஒரு அச்சம் உண்டானது மிகையல்ல.
இவருடைய படத்தில் வேலை செய்ய அக்ரீமென்ட்டில் கையெழுத்து இடும் போது அவனின் பேச்சோ செயலோ அவனை விட்டு விலகி விட மனம் சொன்னாலும் அடி மன ஆழத்தில் ஒலித்த ஏதோ ஒரு குரல் இவன் சொல்வதற்குச் சரியென்று ஒத்துக்கோ என்ற அலறலில் தான் கையொப்பமிட்டாள் பத்மவர்ஷினி.
அதன்பின் வேலை நாட்களில் யாருடைய தொந்தரவுமின்றி இந்தப் பீல்டில் வேலை செய்ய அவளுக்கு முழு சுதந்திரமாகச் செயல்பட்டது எதனால் என்ற சந்தேகம் அவளுள் இருந்தது.
வந்த முதல் நாளே அதிக பழக்கமில்லாத காரணத்தால் கொஞ்சம் திணறியவளை மேம்போக்காகக் கவனித்தும் கவனிக்காத மாதிரி அவளுக்கு அங்குள்ளவர்களிடம் சுலபமா மூவ் பண்ணாவதற்கு நேரத்தை அளித்தான் சூரியவர்த்தன்.
தன் படக்காட்சிக்குத் தகுந்த ஆடைகளின் வண்ணங்களையும் வடிவமைப்புகளையும் அவளிடம் சொல்லும் போதும் அதற்கான மெட்டரீலீ்ஸ் விரைவாகக் கிடைக்க வர்ஷினிக்குத் தெரிந்தாலும் சூரியவர்த்தனோ தானே அதை ஏற்பாடு செய்து கொடுத்தவனின் செயல் மற்றவர்கள் பார்வைக்கு வரவிடாமல் செய்வது தான்.
இந்தப் பீல்டில் உயரத்தில் உயர்ந்தவா்களின் மேல் பல விமர்சனங்களை உள்ளடக்கியது உண்டு. எங்கே தன்னுடைய செயல் அவளின் முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லாக மாற்றி விடக் கூடாதே என எண்ணம் அவனிடம் நிறைய இருந்தது. உள்ளத்தில் இருப்பதை மறைக்க முயன்றவனால் அவள் விழிகளின் பால் இழுக்கும் காந்த சக்தியில் மீள முடியாமல் தவித்தாலும் தனக்குரிய ஆத்மார்த்தமான பார்வைகளால் தொடர்ந்தவனை தன் உள்ளுணர்வால் உணர்ந்தவளால் அவன் எண்ணம் செல்லும் வழியே தன் உள்ளத்தின் தடத்தைத் தொடர்ந்தாள் வர்ஷினி.
காதல் எனும் தீ ஒருவரைப் பார்த்த உடனே மற்றவரின் உள்ளத்தில் தீமுட்டிச் செல்லுமா என்றால் எவர் ஒருவர் தனகானவர் ஆத்மார்த்தமாக உணரும் வேளையில் நேசத்தீ அங்கே உள்ளத்திற்குள் ஊடுருவிப் பற்ற வைக்கும். அத்தீயில் சுகம் கண்டவர்களும் உண்டு வெந்து சாம்பலாகிப் போனவர்களும் உண்டு. இங்கே அவளின் வசீகர கண்களால் வசியமானவனோ தன் கண்களுக்குள் காதல் தீயை அவளுள் பரப்ப அவளோ அத்தீயில் எரிந்து சாம்பலானாலோ இல்ல தினந்தினம் அதை எண்ணி வதை பட்டாளா.. பின்னால் எண்ணியது தான் நடந்தது.
அவனின் நேசப் பார்வையில் உறைபனியாக உறைந்தவள் அதன்பின் அவனின் கைப்பாவையாக மாறி அவனின் விழி அசைவுக்கு ஏற்று நடக்கத் தொடங்கிவிட்டாள் பத்மவர்ஷினி.
அவனுடன் வழக்காடித் தன் மனதில் இருப்பதை மறைமுகமாக சொல்லியவள் அதன்பின் தன்னுடைய வேலைகளைப் பார்க்க சென்று விட்டார்கள் பத்மவர்ஷினியும் சூரியவர்த்தனும்.
ஆனால் அந்த நிகழ்வுக்குப் பின்னால் மற்றவர்களின் எண்ணங்கள் பார்வைகள் எப்படி அர்த்தம் கண்டுபிடிக்கும் என்பதைப் பற்றி எல்லாம் கவலையில்லை அவளுக்கு. படித்துத் தனக்கான தொழிலை முன்னின்று நடத்தி வருபவள். ஆனாலும் அவன் அன்பின் முன் கொஞ்சம் சறுக்கி விட்டாளோ. அது பொய் முலாம் பூசிய கண்ணாடி என்பதை அனுபவத்தால் அறிந்த போது எல்லாம் கைமீறிப் போனது.
அவனிடம் தானே காதலை பறைசாற்றியவளின் மனமோ அதன்பின் கால் தரையில் படாமல் வான்மீகமாக மிதந்தது.
அடுத்த ஒரு வாரத்திலே அவனுடைய பிறந்தநாள். அன்றைய நாளில் படப்பிடிப்புகள் முடிந்ததும் எல்லாருக்கும் பார்ட்டி அரேன்ஜ் பண்ணிருந்தான் சூரியவர்த்தன். தனக்காகக் கொண்டாட இஷ்டமில்லை. அம்மாவோ காலையிலே கோயில் அபிஷேகம் ஆராதனை ஆசிரமங்களுக்கு உணவு என ஏற்பாடு செய்து விடுவார். இவனோ எல்லா நாளும் இனிய நாள் என்ற எண்ணமே. எந்தவித ஆர்ப்பாட்டமும் ஆர்ப்பரிப்பும் இல்லாமல் தினசரி வேலைகளைப் பார்த்தவனின் மனதில் வாழ்க்கையின் அடுத்த பகுதியாகக் காதல் வயப்பட்டுத் தொடங்குவதால் தன்னவளுக்காக இப்பார்ட்டி அரேன்ஜ் பண்ணிருந்தான் சூரியவர்த்தன். அதற்கான ஏற்பாடுகளை கோபுவின் வசம் ஒப்படைத்திருந்தான்.
அன்று மற்றவர்களின் முன்பு தனகானவள் அறிவிப்பைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் இருந்தது. அந்த நேரத்தை அவன் ஆவலோடு எதிர்பார்த்தது பின்னணியில் பல பிரச்சினைகளுக்கு வழி வகுத்ததை இவனும் அறியவில்லை அவனும் அறியவில்லை.
அன்றைக்குக் காலையில் எழும் போதே வர்ஷினின் உள்ளமோ மகிழ்ச்சி ஊற்றால் நிறைந்திருந்தது. தன்னவனின் வாழ்க்கையில் தான் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்றும் ஸ்பெஷலாக இருக்க வேண்டும். இதைப் போல நூறு வருடம் அவனுடன் இருந்து பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்ற பேராசை அவளுள் அதீதமாக இருக்க அதற்கான ஸ்பெஷல் கிப்ட் வாங்கவும் தவறவில்லை. அது தன் கூட ஒட்டுப் புல்லாக ஒட்டி அலைந்துகொண்டிருக்கும் விசாலிக்குக் கூட தெரியாது. அது அவளுக்குரிய ரகசியம். காதல் வந்தாலே கள்ளத்தனமும் வந்து விடும் போல. பள்ளியிலிருந்து தொடர்ந்து உயிர் தோழியாக வருபவளிடம் கூட அவனுக்கான பரிசை வாங்கியதை சொல்லவில்லை பத்மவர்ஷினி.
அந்த ரகசியமான பரிசை அவனுக்குத் தரும் போது அவனின் முகத்தில் தெரியும் அளவுக்கு அதிகமான காதலைக் கண்ணால் காண வேண்டும் பேராவல் அவளிடம் இருந்தது. அந்த நேரத்திற்காக அவள் காத்திருக்க அவனோ அவளின் விழிகளில் ஆழ்ந்து அவளுள் ஒருயிராக அடைக்கலமாக வேண்டும் எண்ணம் அவனுள்.
இருவரும் வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ளாமல் இருந்த நேசத்தை ஊருக்கே வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என ஒருவன் சதி செய்வதை அவனயவள் அறியவில்லை. அறிந்தபிறகு அடுத்தகட்டமே உடனடி திருமணம் நிச்சயக்கப்பட்டு அதே நொடியில் மிஸஸ்
.சூரியவர்த்தனாக பொறுப்பேற்றாள் பத்மவர்ஷினி.
தொடரும்