அத்தியாயம்..3
ஆட்டிசம்..
ஆட்டிசம் ஏற்படுவதாக நம்பப்படும் காரணம்
மரபணு காரணிகள்.. குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுக்கும் ஆட்டிசம் மற்றும் பலவீனமான சிண்ட்ரோம் டியூபரஸ் ஸ்களீரோசிஸ் போன்ற நோய்கள் இருத்தல்.
வாழ்க்கையில் மீண்டும் யாரை இனி சந்திக்கவே கூடாது என்று நினைக்கிறோமோ அவரைக் கண்முன் நிறுத்துவது தானே கடவுளின் வேலை போல.
தி கிரேட் டைரக்டர் சூரியவர்த்தன் அவளின் எதிரே நின்று கொண்டிருந்தான். யாரை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தன் குழந்தை மட்டுமே போதும் என்று வாழும் போது திரும்ப அவனின் வரவு அவளுள் மிதமிஞ்சிய கோபத்ததை அதிகப்படுத்தியது.
அவனின் பார்வையோ தன்னெதிரே நின்றவளை வருடிச் செல்ல அவளின் முகமும் மேனியும் வாடிய கொடியாய் மெலிந்து துவண்டு இருப்பதை அவனின் லேசர் விழிகள் கண்டு கொண்டன.
அதற்கான காரணம் என்று எண்ணியவனின் உள்ளமோ அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவளை எதிர் கொள்ள அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.
தன்னை அளவீடும் அவனின் கூர்மையான விழிகளை உறுத்து பார்த்துவிட்டு அமைதியாக நின்றது சில நொடிகள் மட்டுமே வர்ஷினிக்கு.
அடுத்த நொடியே அறையை நோட்டமிட்டவள் அங்கே விசாலியும் கூட இருக்கவும் அவனிடம் அவள் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும்.
இல்லையென்றால் தான் கம்பெனிக்கு வருகிறோம் என்று தெரிந்ததும் வெளியே வந்திருப்பாளே என்று எண்ணவோட்டத்துடன் நின்றவளுக்கு கம்பெனிக்குள் நுழையும் போது பெரிதாக கூட்டமோ ஆட்களின் நடமாட்டமோ அதிகமாகத் தென்படவில்லையே.
இவன் வரும் போது பாடிகார்ட் ஆட்கள் இல்லாமல் தனியாகவா வந்திருக்கிறான் . அதுவும் தனக்கு முன்பே காத்திருப்பது எல்லாம் அவன் வாழ்வின் அகராதியில் இல்லாத ஒன்றே என்று தோன்றினாலும் இது தனக்குத் தேவையில்லாத ஆணி என்று தன் புத்திக்கு புரியனும் என்று தோன்றியவுடன் அவனின் சிந்தனையை ஒதுக்கிவிட்டு நிர்மலமான முகத்தோடு நிமிர்ந்த நடையுடன் போய் தனக்கான இருக்கையில் அமரப் போனவளிடம் திண்மை நிறைந்த வலது கரத்தை நீட்டி ''டைரக்டர் சூரியவர்த்தன்'', என்று சொல்லித் தன்னைப் புதியதாக அறிமுகப்படுத்திக் கொண்டான்.
இரண்டு வருடங்களுக்குப் பின் சந்திக்கும் சந்திப்பில் அவளின் அருகாமையில் அவனின் உணர்வுகளோ கட்டு தெறியில் கட்டிருக்கும் கன்றோ கயிற்றை அற்று ஓடி தாயின் மடியில் தஞ்சமடைய ஏங்கும் ஏக்கப் பார்வை அவனுள்.
அவனின் விழிச் சொன்ன பாஷையிலும் செய்கையில் உள்ளுற அனல் பரப்பினாலும் அதைக் காண்பிக்காமல் அந்நிய பார்வையோடு தன் கையை நீட்டியவளோ ''பத்மவர்ஷினி'' என்று தன் பெயரைச் சொல்லியவளின் கரத்தை அழுந்தப் பற்றியவன் குலுக்கி விட்டு அவனும் தனக்கான இருக்கையில் அமர்ந்தான் சூரியவர்த்தன்.
அவன் அமர்ந்ததும் எதிர் இருக்கையில் அமர்ந்த வர்ஷினியோ விசாலியை நோக்க அதுவரை பார்வையாளராக அமைதியாக இருந்தவளோ
''இவருடைய படத்திற்குத் தான் கேட்டார்கள் வர்ஷி''..
என்று சொன்னவளை தீப்பார்வை பார்த்தாள் வர்ஷினி.
இவன் முன் கோபமோ பேச்சோ எந்த கலாட்டாவும் வேண்டாம் என்ற எண்ணம் தோன்றவும் இவன் போனதும் அவளுக்கு இருக்கு கச்சேரி என்று விசாலியை மனதிற்குள் திட்டி தீர்த்தவளைக் கண்டு நமுட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனோ..
''என்ன உன் தோழியை ரொம்ப கொஞ்சிற போல''..
என்று கேட்க.
அய்யோ இவன் வந்த வேலையைப் பார்க்காமல் எனக்கு ஆப்பு வைக்கிறானே என்று எண்ணிய விசாலியோ
''சார் நாம் வேலையைப் பற்றிப் பேசலாமா''..
என்று தன் விழிகளைச் சுருக்கியபடி சூர்யவர்த்தனை பார்க்க..
அவனோ லேசான சிரிப்புடன் ''ஒகே ஒகே டன்''..
என்று விசாலியிடம் சொல்லியவன் தன் பின்னந்தலையை லேசாகக் கோதிவிட்டு தன் கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு தோரணையாக நிமிர்ந்து அமர்ந்தவன் தன்னுடைய வசீகரம் நிறைந்த அழுத்தமான குரலில்
''நான் புதியதாக எடுக்கும் படத்திற்கான காஸ்ட்யூம் டிசைனராக உங்க கம்பெனியின் பெயரை புரோடீசர் சொன்னார். பணம் போடுவது அவர் தான். அதனால் அவர் பேச்சைக் கேட்கணுமல. அதற்காகத் தான் நானே நேரடியாக உங்க கம்பெனியின் தரத்தை நேரில் பார்த்து விட்டுப் பேசலாம் என்று வந்தேன்.. இப்ப அதைப் பற்றிப் பேசலாமா''..
என்று சொல்லிய சூரியவர்த்தனை ஏளனமான பார்வை பார்த்தாள் பத்மவர்ஷினி.
''என்ன மேடம்! உங்க பார்வை ரொம்ப தினுசா இருக்கே.. உங்க கம்பெனியை ஆ ஊனு புகழறாங்க .. சரி தான் நம் படத்திற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கேட்க வந்தால் ஏளனமா பார்க்கிறீங்க'',
என்று கேட்டவனுக்குத் தெரியும். அவளை எங்கே சீண்டினால் காரியம் நடக்கும் என்பது தெரிவதால் அவள் வாயாலே ஒப்புக் கொள்ள வைக்க வேண்டிப் பேசினான் சூரியவர்த்தன்.
அவனின் பேச்சில் கோபமானாலும் மனதிற்குள்ளே அவனைக் கடுகாய் தாளித்துக் கொட்டியவளோ அதை வெளிக்காட்டினால் வர்ஷினி இல்லையே என்ற எண்ணத்தோடு புன்னகை புரிந்தவளோ அவனே முழுசா பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தாள் வர்ஷினி .
அவனுக்கு முன் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க அவள் உள்ளுக்குள் போராடுவது எதிரே இருந்தவனின் கண்ணுக்குத் தப்பவில்லை என்றாலும் அவனுக்கும் அதே நிலை தானே.
ஆனாலும் இருவரும் தங்களுடைய இயல்பைத் தொலைத்து விடாமல் வேலை மட்டுமே குறிக்கோளாகப் பேசினர்.
பத்மவர்ஷினிக்கோ நேரடியாக இவனே பேசுவதால் எதாவது காரணம் இருக்குமா என்று உள்ளம் ஆராய்ந்து கொண்டே அவன் பேச்சைக் கேட்க,
ஐம்பது காலகட்டத்தில் நடந்த கதையை எடுக்கப் போவதாகவும் அந்த நாளில் அணிந்திருந்த ஆடைகளின் வடிவமைப்புகள் வேண்டுமென்றும் கதைக்களத்தோடு பயணிப்பவர் அனைவருக்கும் அந்தந்த கதாபாத்திரம் தகுந்தபடி வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் அவள் எந்தவித பதிலும் இல்லாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு புருவங்களை உயர்த்தி பார்த்தான் சூரியவர்த்தன்
அவளும் தன் புருவங்களை உயர்த்தி மேலே சொல்லுங்கள் என்ற சைகையைக் காண்பித்தவளின் நிமிர்வு என்றும் போல இன்றும் அவனைக் கவர்ந்தாலும் தன்னைத் தெரியாத போல அந்நிய பார்வையுடன் பார்ப்பவளைக் கண்டு மனம் துடித்தது.
ஆனால் அதை வெளியே காட்டிக் கொண்டால் அவனின் கவுரவம் குறைந்து விடாதா என்ற எண்ணத்துடன் தன் உதட்டைப் பிதுக்கியவன் தனக்கான கதைக்களத்தின் அடிப்படைத் தேவையை மட்டும் மேலோட்டமாக சொல்லியவன் இனி மற்ற டீட்டெயில்ஸ் இன்னொரு நாள் மீட் பண்ணி பேசுவோம் என்று பேச்சைச் சட்டென்று முடித்தான் சூரியவர்த்தன்.
எந்த செயலையும் அரைகுறையாக முடிக்கப் பிடிக்காதவனுக்கு இன்று ஏனோ முழுமையாக தன்னால் செய்ய முடியாமல் போனது தன்மேல் அவனுக்கு அளவிட முடியாத சீற்றத்தை உருவாக்கியது. எத்தனையோ முறை அவளைப் பார்க்க முயற்சி பண்ணி அதை அனுமதிக்காமல் கூட்டுக்குள் ஒளிந்து இருந்தவளை இன்று பார்த்தவனால் தன் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டு தெரியாத ஒருவரிடம் பிசின்ஸ் டீல் பேசுவது போலப் பேசுவதே மனதிற்குள் பெரும் பாரத்தை ஏற்றியது அவனுக்கு.
சுமக்க முடியாமல் சுமையை ஏற்றிக் கொண்டு பயணிப்பது போல மனதிற்குள் பெரும் அழுத்தம் உண்டாகவும் சட்டென்று பேச்சை முடித்தவனோ மேலே நீதான் சொல்ல வேண்டும் என்ற விழியாலே கட்டளையிட்டான் சூர்யவர்த்தன்.
அவனின் விழியால் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் அவனைப் பார்த்தவளோ..
''இந்தப் படத்தைப் பற்றி டீடெயிலே உங்க மேனேஜரிடம் சொல்லிருந்தால் அவரே பேசலாமே.. ஊரே பாராட்டும் பெத்தப் பெயர் எடுத்த இமாம் பெரிய டைரக்டர் இறங்கி வந்து பேசுவதற்கு காரணம் எதாவது இருக்கா..
என்று எள்ளலாகக் கேட்டவள்,
''ஓ புரோடீசர் சொன்னார் சொன்னீங்களே . ஆனால் அதிசயம் ஆச்சரியம். தி கிரேட் டைரக்டர் பெயர் எடுத்தவர் இப்படி அடுத்தவர் சொன்னாங்கனு இங்கே வந்து கேக்கிறீங்களே .. அடுத்தவர்களின் பேச்சுக்கு உங்களிடம் இந்தளவுக்கு மதிப்பு இருக்கா என்ன?''..
என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவள் அவனின் முகம் கறுத்து மாறுவதைக் கண்டு மனதிற்குள் சிறு மகிழ்ச்சியும் வருத்தமும் சரிவிகிதமாகத் தோன்றியது தான் விந்தை.
அவளின் புன்னகை பூசிய உதடுகளை அசைத்து தன்னுடைய அதீத சினத்தை மறைத்துக் கொண்டு பேசுபவளின் பேச்சைக் கேட்டவனோ சட்டென்று மாறிய முகத்தை மறைத்தவன் நமுட்டு சிரிப்புடன் ''நீ தான் அறிவாளிக்கெல்லாம் அறிவாளியே ஆச்சே கண்டுபிடிச்சுக்கோ''..
என்றவன் ''சீயூ கைட்ஸ்'' என்று இருவருக்கும் பொதுவாகச் சொன்னவனோ தன் காந்த விழியால் வர்ஷினியை சிறையெடுத்துச் சென்றான் சூரியவர்த்தன்..
அனலாய் காய்ந்தவனின் விழிகள் மதியால் குளிர்ந்தது போனது அவளாலே என்று அறிந்தவன் புன்முறுவலுடன் சென்றுவிட அவனின் பார்வையின் வீச்சியில் கற்சிலையாக உருமாறி இறுகி நின்றாள் பத்மவர்ஷினி.
அவன் சென்றதும் வர்ஷினி தன் இருக்கையில் இறுகிப் போய் அமர்ந்திருக்க, அவள் எதிரே அமர்ந்திருந்த விசாலியோ ''வர்ஷி'' என்று அழைக்கவும் நிமிர்ந்து பார்த்தவளின் கண்களிலிருந்த வலியைக் கண்டு வேகமாக எழுந்தவள் தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டாள்.
எதை வாழ்க்கையில் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றோமோ அது தொடர்ந்து தொல்லைப் படுத்துவது உள்ளத்தில் எத்தனை பெரிய வலியைக் கொடுக்கும் என்று அறியாதவன் அல்லவே.. அறிந்தும் அதைத் தனக்கும் தரும் சூரியவர்த்தனின் மீது அதீத வெறுப்பு உண்டாகுவதைத் தடுக்க இயலாமல் தவித்தாள் வர்ஷினி.
வலியும் துன்பமும் துயரும் கொண்ட மனதிற்கு ஆறுதலாக அணைத்த தோழியிடம் தஞ்சமடைந்தவள் இதற்கான மருந்து வார்த்தைகளில் இல்லை என்பதை உண
ர்ந்த விசாலி்யும் மௌனமாக வர்ஷினியை அணைத்துக் கொண்டாள்.
தொடரும்