• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்..4

kkp38

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
13
6
3
Tamil nadu
அத்தியாயம் ..4


ஆட்டிசம்.. வளர்ச்சிக் கோளாறுகளால் மன ஆதிக்கத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஆனால் கிளாசிக் ஆட்டிசம் அல்லது ஆஸ்பெஸ்டாஸ் வகைகளுக்குப்
received_961603518457940.jpeg
பொருந்தாத ஒரு வகைப்படும் ..

வாகனத்தில் பயணித்த சூரியவர்த்தனின் உள்ளமோ வர்ஷினின் ஞாபகயலைகளின் கீற்றால் தன் இழந்த வாழ்நாட்கள் கண்முன் நடனமாடியது.

எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அவளைப் பார்த்தவுடனே புரிந்தது.

மீண்டும் கடந்து போன நாட்களின் இழந்த சந்தோஷங்களைப் பெற முடியுமா. வாய் தவறியதால் கைத் தவறி விழுந்த கண்ணாடிக் கோப்பையாகச் சுக்குநூறாக சிதறிப் போனது வாழ்க்கை

கோபம்.. கோபம்.. அளவுக்கு மீறிய கோபம். இதனால் அடைந்தது என்ன? எல்லா சுகங்களையும் இழந்து தான் மிச்சம்.

''நயனங்களால்

நயம்படப் பேசியவள்

நளினமாக ஆட்கொண்டு

நால் திசையும் என்னுள்

நற்கவி இயற்றும்

நடனமாடும் அம்பை''..

ஆம்!பார்த்த அன்றே என்னை அஞ்சனம் பூசிய மைவிழியால் சுவீகரித்துக் கொண்டவள் தான். ஆனால் அதை நானறியாமல் போனது என்னுடைய அவசரப் புத்தியே என்று தன்னையே சுயபரிசோதனை செய்தவனுக்கு தன்மேல் ஆத்திரம் பொங்கியது.

அதனால் தான் வர்ஷினி பேசியதற்கு எதிராக எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்தவன் இனியும் அவளை இப்படியே விட்டு விடும் எண்ணமில்லை. இனி அவளை வார்த்தைகளால் காயம்பட வைக்க முடியாது என்று உறுதியை எடுத்தால் மேலும் அவளைக் கோபப்படுத்தி அதில் குளிர் காயணும் என்று எண்ணமில்லை .

அதற்காக அவளிடம் இறங்கிப் போகப் போவதில்லை. தன் வழியிலே போய் அவளே தன்னிடம் வந்து சேரவேண்டும் என்று யோசித்தபடி சென்றவன் அடுத்துச் செய்ய வேண்டியதை தன் கண்முன் காட்சிகளாய் உருமாற்றிக் கொண்டான் சூரியவர்த்தன்.

டைரக்டர் அல்லவா. தன்னுடைய வாழ்க்கையும் தானே டைரக்ட் பண்ண வேண்டும் நினைத்து விட்டான். அது ஒருவர் செல்லும் பாதை அல்ல இருவரும் சேர்ந்து செல்லும் ஒருவழிப் பாதை.

அங்கே இருவரின் மனப்போக்கும் ஒருமித்து பயணித்தால் வாழ்க்கை கண்முன் நறுமண வீசும் மலர்வனம் .

அங்கே தீண்டிச் செல்லும் மெல்லிய காற்றில் சுகம் அதிகம் என்பதை அறிய இன்னும் எத்தனையோ தடங்களை தகர்த்து எறிய எந்தளவுக்கு பொறுமை சாத்தியம் என்பதை அறிவானா. காலம் அவனுக்கு உணர்த்துமோ .. உணர்ந்து வந்தவனை கைக் கோர்த்து நடப்பாளா .. காலமே விடை.


விசாலியை அணைத்தபடி இருந்த பல நிமிடங்கள் கடந்ததும் தன்னை தானே தேற்றிக் கொண்டவளோ தோழியின் கையை விலக்கி முறைத்தாள் வர்ஷினி.

எது வேண்டாம் என்று விலகிவிட்டு வந்தோம். எதற்கு இத்தனை ஆண்டுகள் ஒதுங்கி இருந்தோம். அதை இன்று கண்முன்னே அமர்ந்து பேசும் சூழ்நிலையை உருவாக்கியவளை முறைத்த வர்ஷினி

''ஏன்டி இப்படி பண்ணினே, யாரைப் பார்க்கவே கூடாது நினைத்தேனோ அதை இப்ப பார்க்கவும் வைத்துப் பேசவும் வைக்கிற''..

என்ற மனம் நொந்தவளைத் தட்டிக் கொடுத்த விசாலி.,

''எத்தனை நாட்கள் ஓடி ஒளிய போற வர்ஷி.. வாழ்க்கை இதோடு முடியப்போவதில்லை உனக்குத் தெரியாதா''….

என்று கேட்டவளை ரௌத்திரம் பூசிய விழிகளோடு நோக்கி வர்ஷியை கண்டு இரண்டு அடி தள்ளிப் போனவள் சட்டென்று அவளை விட்டு விலகி வெளியேறினாள் விசாலி.

விசாலி விலகிச் சென்றதும் தன் இருக்கையில் அமர்ந்தவளின் மனமோ ரணகளமாகக் கொந்தளித்தது .

அவன் முன் தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அமைதியாக இருப்பதைப் போலக் காட்டிக் கொள்ள எவ்வளவு போராட்டம் மனதிற்குள்.

ஆனால் அவனுக்குத் தான் யாரோ போலப் பேசிவிட்டுப் போகிறான். இந்த அன்பு பாசம் நேசமெல்லாம் அவனின் கதைக்கு மட்டும் தான் போல என்று மனம் குமிறியவள் இவனை என்று பார்த்தேனோ அன்றே தன்னுடைய மென்மையான குணம் மாறியே போய் விட்டது என்று நினைத்து மறுகினாள்.

இவ்வளவு நாள் கழித்துப் பார்ப்பவனிடம் ஒரு அன்பான பார்வையோ பேச்சோ எதுவுமில்லை என்று ஒரு மனம் ஏங்க, இன்னொரு மனமோ அவனை அரக்கன் ராட்சசன் என்று கூறுப் போட்டது. வாழ்ந்த நாட்களை விட அவனைப் பிரிந்த நாட்கள் பன்மடங்கு அதிகம். அவனால் உருவான பந்தத்தை எப்படி வேண்டாம் என்று வார்த்தையாலே கொன்று தீர்த்தான் என்று மனத்தின் ரணத்தைக் கீறிவிட அங்கே குருதியின் ஊற்று பொங்கிப் பெருகியது.

இப்படி இருதலைக் கொல்லி எறும்பாய் தத்தளித்தவள், இவனை வாழ்க்கையில் சந்திக்காமலே இருந்திருக்கலாம் என்ற எண்ணயலைகள் அதிகமானது.

சந்தித்தால் உண்டான விளைவுகளைத் தான் ஒருவலே சுமக்க வேண்டி இருப்பதை எண்ணி மருகி வருந்தியவளுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று தோன்றியவுடனே விசாலிக்கு வீட்டுக்குக் கிளம்புகிறேன் என்று ஒரு மெச்ஸ்ஜ் தட்டிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு வேகமெடுத்தாள்.

எங்கே போனால் அமைதி கிடைக்கும் நினைத்துப் போனவளோ அங்கே அந்த அமைதியைக் குலைக்கவென்று அவன் காத்திருப்பதை அறியவில்லை பேதை..

தன் வீட்டு இரும்புக் கதவின் முன் வேறு கார் நிற்பதைக் கண்டவளுக்கு அக்காரிக்குரியவன் யார் ?என்று புரிந்தாலும் அவன் இங்கே வரமாட்டான் என்ற எண்ணத்தோடு வீட்டினுள் நுழைந்தவள் மனம் ஏமார்ந்து போனது.

வசீகரம் நிறைந்த ஆரவாரமான குரலோடு கைகளை ஆட்டியபடி ஷவானியிடம் பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டவளின் மனமோ எரிமலையா கொந்தளித்தது.

இவனை எப்படி அப்பா உள்ளே விட்டார், அதுவுமில்லாமல் குட்டியை அவன் கையில் ஏன் கொடுத்தார்? என்று சினத்தோடு உள்ளே நுழைந்தவள் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே போனாள் வர்ஷினி.

அவள் வருவதை ஓரக்கண்ணால் கண்டாலும் யாருக்கும் கிடைக்காதா பொக்கிஷமொன்றைக் கையில் ஏந்தியவனாக ரோஜா மலரை ஒத்திருந்த மகளின் பட்டு சருமத்தை வருடி மென்மையாக அணைத்தவன் தணிகாசலிடம் தீவரமாக எதையோ பேசிக் கொண்டது போல நடித்து கொண்டிருந்ததை கண்டவளுக்குக் காண்டானது.


நடிப்பை சொல்லிக் கொடுப்பனுக்கு நடிக்க சொல்லியா கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றவும் மிதமிஞ்சிய கோபத்துடன் அவர்கள் அருகில் போய் நின்றாள் பத்மவர்ஷினி.

மகளின் முகத்தைப் பார்த்தவர்..

''வாடா கண்ணு .இப்ப தான் வேலை முடிஞ்சதா. முகம் ஏன் வாடி இருக்கு? ஜூஸ் ஏதும் குடிக்கிறீயா மா ..

ரமணிம்மாவை போடச் சொல்றேன். நீ உட்கார்ந்து மாப்பிள்ளையிடம் பேசிகிட்டு இருடா''..

என்று சொல்லியபடியே எழுந்து அவ்விடத்தை விட்டு நழுவினார் தணிகாசலம்.

தன்னைப் பார்த்தும் நழுவும் அப்பாவை முறைத்தவள் திரும்பி அங்கே அமர்ந்திருந்தவனை வெறுப்புடன் நோக்கினாள் வர்‍ஷினி.

வெறுப்பான பார்வையும் நிர்மலமான முகத்தோடு இங்கே உனக்கு என்ன வேலை? என்ற கேள்வியும் இருப்பதைக் கண்டு அவளுக்குப் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் அவன் கரங்களிலிருந்த ஷவானியை வேகமாகப் பிடுங்குவதே போலத் தூக்கியவள்,

''என் கருவறைக்குள் பொக்கிஷமாக வளர்ந்த குழந்தையைப் பிறக்கவே கூடாது நினைச்சவங்க . இவளைத் தொடக் கூட அருகதை இல்லை''..

என்று சொல்லிவிட்டு விருட்டென்று அறைக்குள் நுழைந்து விட்டாள் வர்ஷினி.

அவள் பேச்சில் முகம் சுருங்கியவனோ எதுவும் பேசாமல் தன் கோபத்தை அடக்க மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டு தன் தலையைக் கோதிய படி எழுந்து நிற்க தணிகாசலமோ வேகமாக அவனின் அருகே வந்தவர்

''மன்னிச்சுக்கோங்க மாப்பிள்ளை''..

என்று சொல்லி வருந்துவதைக் கண்டு அவரின் கரங்களை பிடித்தவன்..

''நீங்க தான் என்னை மன்னிக்கணும் ''..

என்று கரகரத்த குரலில் சொல்லியவன்..

'' நான் இப்ப கிளம்பறேன் மாமா அவள் ரொம்ப ரெஸ்லெசா இருப்பா அவளைப் பாருங்க, அப்பறமா பேசிக்கலாம் மாமா''..

என்று சொல்லிவிட்டு வெளியேறினான் டைரக்டர் அண்ட் பத்மவர்ஷினின் கணவன் சூரியவர்த்தன்.

மருமகனுடைய வருத்தமும் மகளைப் பேசி மேலும் காயப்படுத்த விருப்பமில்லாமல் கிளம்பியதைக் கண்டவருக்கு மகள் மீது சிறு கோபம் உண்டானது.

ஆனாலும் அவள் இடத்திலிருந்து யோசித்தால் அவள் நடந்து கொண்டதும் தவறில்லையே என்று தோன்றவும் இருவருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அவரவர் வாழ்க்கை அவர்கள் தான் சரிப்படுத்தி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்..

இனி நாம் பார்வையாளராக இருப்பது தான் நல்லது என்று எண்ணம் வரவும் மகளைத் தேடிப் போனார் தணிகாசலம்.

மகளை மடியில் வைத்துக் கொண்டு எங்கோ வெறித்து அமர்ந்தவளின் முகமோ வாடிய வதங்கிய மலராகக் கசங்கிப் போய் இருந்தது.

சிலமணித்துளிகளிலே மூப்பு பாய்ந்ததைப் போல தன் மகளின் புன்னகை முகம் பொலிவிழந்து போனது அவனால் தான் என்பதை உணர்ந்தே இருந்தார் தணிகாசலம்.

ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதே.தனக்குப் பின் தன் மகளைப் பார்த்துக் கொள்ளக் கொண்டவனைத் தவிர யார் இருக்கிறார்கள் என்று எண்ணம் தோன்றவும் தான் அவனின் வருகைக்கு அமைதியாக இருந்தார்.

ஆனால் அது தன் மகள் மீண்டும் சுருங்கிச் சுருண்டு போய் நத்தை தன் கூட்டுக்குள் அடைத்துக் கொண்டு இருப்பதைக் காண முடியவில்லை என்று வருத்தத்துடன் பார்த்தவர்

''அம்மாடி ''...

என்று அழைத்து வர்ஷினி அருகே போக,

அவரோ நீர் நிறைந்த கண்ணீர் படலத்துடன் தன் அப்பாவைப் பார்த்தவள்..

''ஏன்பா நான் வேண்டாம் என்று நினைத்ததைப் படியேறி வீட்டினுள் வரை விட்டுருக்கீங்க.அதைவிட நம்ம குட்டிம்மாவை அ..அவ அவனிடம்.. அவரிடம் ஏன் கொடுத்தீங்க ''..

என்று கண்ணீர் குரலில் கேட்டவளின் தலையை வருடிவிட்டார் தணிகாசலம்

பேத்திக்கு முன் எப்பவும் புன்னகை முகம் மட்டுமே இருக்கவேண்டும் என்று சொல்லியவளே இன்று கண்ணீரோடு இருப்பது அவர் ஈரக்கொலையை நடுங்கச் செய்தது.

மகளின் தலையை வருடியவரோ ''வாழ்க்கையில் நடக்கும் அத்தனை செயல்களையும் நம்மை ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கத் தான் செய்யும்.. அதையெல்லாம் மன்னித்துக் கடந்து போகணும் டா''..என்று சொல்லியவரைத் தீர்க்கமாகப் பார்த்தவளோ..


''அத்தனையுமா மன்னிப்பதா.. எப்படி முடியும்.. அதற்கு நான் எதையும் அறியாத உயிரற்ற பொம்மையாக நடமாடனும்''..



என்று சொல்லியவளின் வார்த்தையில் அதிர்ந்தவரைப் பார்த்தவள்..



''எனக்கு நீங்களும் பாப்பு மட்டும் போதும். என் வாழ்க்கையில் நுழைய இனி எவருக்கும் அனுமதி இல்லை. இனி அவரிடம் பாப்பாவைக் கொடுக்கக் கூடாது''...



என்று சொல்லியவளோ குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு மாடி ஏறிச் சென்றவளின் தளர்ந்த நடையே சொல்லியது அவளின் மனம் படும் பாட்டை..அதைக் களைந்து அவளின் மனதின் வலியை துடைப்பது அவளின் மணவாளனின் கையில் தானே இருக்கிறது.
. அதற்குள் நடக்கும் காலத்தின் விளையாட்டில் அவள் மனக் காயத்திற்கு மருந்தாக இருப்பானா இல்லை மேலும் காயத்தை உண்டு பண்ணுவானா...



தொடரும்.