அத்தியாயம்.6
ஆட்டிசம்..
ஆட்டிசம் மிதமான பாதிப்புக்குள்ளானவர்கள் ஆரோக்கியமாகத் தோன்றினாலும் சமூக சார்ந்த தொடர்புகளில் அசாதாரணங்களைக் கொண்டுள்ளனர் .ஆனால் இவர்கள் இயல்பான நுண்ணறிவு கொண்டவர்கள்.
பெரிய நீள் அரங்கு ,அலங்கார விளக்குகள் வண்ணத்தை வாரி இறைத்து விண்ணுலகமே பூலோகத்தில் தரை இறங்கியதை போல எங்கும் விளக்குகளின் ஒளிக்கற்றைகள்.
இன்றைய நாகரிகத்தின் அடிப்படையில் அணிந்த ஆடைகளுடன் நுனி நாக்கில் ஆங்கிலத்தைப் பேசிக் கொண்டே இருக்கும் நவநாகரிய யுவன் யுவதிகளால் அரங்குமே நிரம்பிக் கிடந்தது.
காமிராக்களை உயிர்நாடியாகக் கொண்டவர்கள் வந்தவர்களை விதவிதமாக போஸில் நிற்க வைத்து படங்களை எடுத்து அடுத்த நொடியே அது சோஸியல் ஊடகத்தில் போடப் பரபரப்பாக இருந்த மாலை நேர மந்தகாசமான வானிலை..
செய்தி சேனல்களோ செலீப்பிரடிஸ் வரவை பேட்டி எடுக்க அதை உடனுக்குடன் டெலிகாஸ் பண்ண என்று எங்கும் பரபரப்பும் மிகைப்படுத்திய விளம்பரங்களும் அங்கே மிதமிஞ்சிக் கிடந்தன..
இரவு பகலானது போல விளக்கு வெளிச்சங்களுக்கிடையே
நம்முடைய நாயகியோ தான் உருவாக்கிய ஆடைகளை இன்று மாடல்களால் அணியப்பட்டு கேட்வாக் செய்யப்படும் முக்கியமான நாள். தமிழ்நாட்டில் திருமணங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளில் முதன்மை வாய்ந்த பட்டு ஆடைகளை இன்றைய நாகரியத்தின் அதீத வளர்ச்சியில் இளைஞர் இளைஞிகள் விரும்பும் வகையில் கற்பனையில் தோன்றிய வடிவங்களை டீசைன் பண்ணியது.
வாழ்நாளில் தான் ஆசைப்பட்ட அவளுள் கண்ட கனவு நினைவாகப் போவதைக் காணப் போகும் ஆவல் உள்ளத்தில் அலை மோதிக் கொண்டே இருந்தாலும் அந்த நேரத்திற்குரிய இறுக்கமோ பதற்றமோ முகத்தில் இல்லாமல் எந்தவித பாவமின்றி அமைதியாகக் கடைசி நேரத் திருத்தங்களை தன் உதவியாளர்களைக் கொண்டு செய்து கொண்டிருந்தாள் பத்மவர்ஷினி.
ஜீன்ஸ் சர்ட் அணிந்து இடை வரை நெளிந்த அடர்ந்த கூந்தலை ஒரு கிளிப்பில் அடக்கியவளின் முகத்தில் களைப்பின் சாயலின்றி எந்தவித மேக்கப் இல்லாமல் இருப்பது அவ்விடத்தில் அவளைத் தனித்து காட்டிருந்தது.
தன் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் ஆடைகளை அணிந்த பெண்கள் கேட்கும் சிறு கேள்விகளுக்குப் பதிலளித்தபடி சிறு சிறு திருத்தங்களைச் செய்து கொண்டிருந்தவளைத் தேடி ஓடி வந்தாள் அவளின் தோழி தொழிலில் பங்குதாராக ஆன விசாலி.
''வர்ஷி வர்ஷி'', என்று அழைத்த குரலில் நிமிர்ந்தவள் பதட்டமான முகத்தை பார்த்தும் ''என்ன விசாலி ?''என்று கேட்டபடி எழுந்து நின்றவளின் செவிருகே மெதுவான குரலில்
''இன்று லாஸ்ட் கேட்வாக் ஆடை அணியும் பெண்ணிற்கு ஏதோ எமர்ஜென்ஸி போய்யிருச்சு வர்ஷி'', .. என்று படபடப்பாகச் சொன்னவளுக்குக் கடைசி நேரத்தில் எப்படி இந்த பிரச்சினைகளை எப்படிச் சரி செய்வது என்ற பதட்டமே விசாலிடம் அதிகமாக இருந்தது.
தோழி சொன்னதைக் கேட்டு தன் கண்களைச் சுருக்கியவள் ''ஏன் என்னாச்சு , இப்படி லாஸ்ட் நிமிடத்தில் சொன்னால் எப்படி அவர்களே வரச் சொல்'', என்று அடக்கி கோபத்துடன் விசாலியோட 'நட' என்று சைகை செய்தபடி கூட நடந்தாள் பத்மவர்ஷினி.
அவளுள் இன்று கடைசியில் அணியும் ஆடை மற்றவர்களின் கற்பனைக்கு உள்ளடங்காத உடை.
''அந்தப் பெண் அப்பவே போய்யிட்டாங்க வர்ஷி'',..என்று பதில் சொன்னவள் ''அந்த ஆடையின் அளவுகள் எல்லாம் அந்தப் பெண்ணின் அளவுகள். இப்ப அதை சரிபண்ணி யாரை அணிய வைப்பது'', என்று கேள்வியுடன் பத்மவர்ஷினியை பார்த்தாள் விசாலி.
அவளின் கேள்விக்குப் பதிலளிக்காமல் எதையோ யோசித்தபடி வந்தவளோ '' பிரியங்கா மேம் கேட்டு பார்த்தாயா விசாலி'', என்று சொல்ல,
''அவர்கள் ஏதோ ஆர்ட்க்காக வெளியே போய்ருக்காங்க.. எனக்குத் தெரிந்த எல்லாரையும் கேட்டுட்டு தான் உன்னிடம் வந்தேன்'',… என்றவள், ''நா ஒன்று சொல்லுட்டா வர்ஷி'', என்று மெதுவான குரலில் கேட்டவளை, புருவங்களைச் சுருக்கியபடி அவளை என்னவென்று பார்த்தாள் பத்மவர்ஷினி.
''நீயே அதை அணிந்து கேட்வாக் பண்ணலாமே.. உனக்கும் அவ்வாடை அழகாக இருக்குமே வர்ஷி'', என்று சொன்ன விசாலியை அங்கே நிறைந்திருந்த கூட்டத்தை விட்டுத் தள்ளிக் கூட்டிக் கொண்டு நடந்து வந்தவளோ ,'' ஏய் விசாலி என்னால் முடியாது.. நந்தனா இல்லை என்றால் வேறு யாரையாவது பார்க்கலாம்'', என்று பத்மவர்ஷினி சொல்லவும்,
''வர்ஷி கடைசி நேரத்தில் எதையும் சொதப்பிடக் கூடாது.. நம்முடைய இரண்டு ஆண்டின் உழைப்பிற்கு இன்று தான் வடிவம் கொடுக்க போகிறோம்.. இதற்குப் பின் கிடைக்கும் வெற்றி நம் தொழிலில் ஒரு மைல் கல் புரிஞ்சுக்கோடா'', என்று அவளின் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சியபடி பேசினாள் விசாலி.
அவளின் கரங்களைக் கன்னத்திலிருந்து எடுத்து விட்டு, ''வேண்டாம் விசாலி..இது சரி வராது.. நாம் வேறு பெண்ணை பார்ப்போம்'',… என்று வர்ஷினி மீண்டும் சொல்ல,
''நோ வர்ஷி, இந்த டிசைனை செய்யும் போது அதை உடுத்தும் பெண் உருவத்தில் உன்னைத் தான் பார்த்தேன். உன் கனவின் கற்பனை அத்தனைக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கப் போவது அதை உடுத்தவைப்பவர்கள் தான் .. இனி அதற்காக வேறு யாரையும் தேடாமல் நீயே அணிந்து அதைச் செய் வர்ஷி பேபி, என் தங்கமல'', என்று கொஞ்சியும் கெஞ்சியும் மிஞ்சி பல ஆர்க்யூமென்ட் செய்த விசாலியோ ஓய்ந்தே போனவளோ, ''இப்ப நான் சொன்னதை நீ செய்யலை வர்ஷி அப்பறம் நடக்கும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை'', என்று சொல்லியவளைப் புரியாமல் பார்த்த வர்ஷியை நோக்கி கண்ணைச் சிமிட்டியவள் ''அந்த டிசைன் ஆடையை நானே அணிந்து நடக்க போகிறேன்'', என்று சொல்லி அவளை மிதப்பான பார்வையுடன் விசாலி ஏறிட அதைக் கண்டு சிரிக்கத் தொடங்கி விட்டாள் வர்ஷினி.
இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் அவளின் சிரிப்பும் நிதானமும் கண்ட விசாலிக்கு ஆச்சரியம் தான்.
''போதும் வர்ஷி சிரித்தது, இது நம்முடைய கனவை நினைவாக்கி அதை அடுத்த கட்டத்தை நோக்கிப் போகப் போகிறோம் எத்தனை நாள் ஆசை நமக்கு .. இங்கே வந்திருக்கும் பல செலிபிரட்டீஸீக்கு நாமே ஆடை வடிவமைத்து தரவேண்டும் நம்மல தேடி அவங்க வருவாங்கல.. அதுவுமில்லாமல் இன்றைய முக்கிய முக்கிய நபராக இயக்குநர் வருகிறார், அவருடைய படத்திற்கு நமக்கு வாய்ப்பு கொடுத்தால் நமக்கு எவ்வளவு பெரிய பெயர் கிடைக்கும் .. மிஸ் பண்ணிட கூடாது… இது நல்ல சான்ஸ்டா'', என்று சொல்லி வற்புறுத்திய விசாலியை நோக்கிய பத்மவர்ஷினின் பார்வையோ இவையெல்லாம் எனக்கு தெரியாத ஒன்றா என்று கேள்வியே தேக்கி நின்றது ..
ஆனாலும் சில நொடிகள் எதையோ சிந்தித்தவள் , ''சரி இந்த பிரச்சினைக்கு வழியை நான் பார்க்கிறேன் நீ மற்ற வேலைகளைப் பார், எந்த இடத்திலும் நம்முடைய டிசைன் தரம் குறைந்து காணப்படக் கூடாது.. என்று சொல்லியவளை முறைத்த விசாலி '' போடி நான் சொல்வதை நீ கேட்கமாட்டேல போடி'', என்று சொல்லிவிட்டுச் செல்பவளின் கோபம் சில நொடிகள் தான். அதன்பின் வர்ஷி என்று வந்துவிடுவாள் என அறிந்தால் பத்மவர்ஷினி இன்றைய நெருக்கடியை எப்படித் தீர்ப்பது என்ற சிந்தனைகளோடு நடந்தவள் அந்த ஆடை வைக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். இந்த உடை சஸ்பென்ஸா இன்னும் யாருக்கும் தெரியாமல் வடிவமைக்கப்பட்டுக் கொண்டு வந்தது . இங்கே மற்ற ஆடைகளும் புதுமை தான்
ஆனாலும் இந்த உடையோ பழமையும் புதுமையும் கொண்டு சிறப்பாகப் புதுப்பிக்கப்பட்டு இருந்தது.
தன் இரு கைகளில் தூக்கிப் பார்த்தவளின் விழிகள் ஆடையில் ஒளிர்ந்த வெண்கற்களோடு போட்டிப் போட்டு பளபளத்து ஒளி வீசியது.
ஜரி நூல்களாலும், கற்கள் ஜிரிதோஷி, என்று கொடிகளால் பின்னப்பட்டு தாமரை வண்ணத்தில் மஜந்தாவும் வண்ணப் பார்டரில் ஜொலித்தது .
லெஹாங்கா மாடலாக இருந்தாலும் பிளவுஸ் பாவாடையை இணைத்து உருவாக்கப்பட்டுத் தைக்கப்பட்டிருந்து..
பட்டு துணியால் தயாரிக்கப்பட்ட துப்பட்டாவிலும் டிசைன் செய்து வித்தியாச முறையில் அலங்கரித்து இருந்தது. அதற்கு அணியும் ஆபரணங்களோ உயர்தரமான ரூபி எம்ரால்ட் கற்களுடைய கழுத்தாரமோ ஜொலித்து கண்ணைப் பறித்தது.
அவ்வுடையை எடுத்துப் பார்த்தபடி நின்ற பத்மவர்ஷினியோ விசாலி சொல்கிற மாதிரி தானே அதை அணிந்து நடந்தால் என்ன என்று தோன்றிவிடச் சட்டென்று தன் மேனியின் வைத்துப் பார்த்தவளுக்கு அத்தனை பிடித்தம்..
மனதிற்குள் பிடித்திருந்தாலும் இத்தனை கூட்டத்திற்கு முன் ஒளி வெளிச்சத்தில் நடப்பது என்பது இயல்பாக இருக்குமா என்ற கேள்வி தன்னுள் எழும்பினாலும் '' இது உன்னால் முடியும் குட்டி, நீ செய்டா தங்கமல'', என்று எப்போதும் தயங்கி விலகும் நேரத்தில் மனதிற்குள் ஒலித்த பாசக்குரலில் தன்னுர்வு பெற்றவள் அதன்பின் அவளின் நேரம் அவளுக்கானவை இல்லை..
முடிவு எடுக்க மட்டுமே சில பல யோசனைகள், அதற்குப் பிறகு செயல்படுத்த ஓடவே நேரம் சரியாக இருந்தது.
விசாலியிடம் தானே அணிந்து கேட்வாக் செய்வதாக சொன்ன வினாடியிலிருந்து ஹேர்ஸ்டைல் பண்ண, முக மேக்கப் ஆள் என்று கேஷவலாக வலம் வந்தவளை தேவதையாக மாற்றியது..
அவ்வாடையை அணிந்து நடந்த வந்த அந்நொடிகளில் பல காமிரா கண்களுக்கு அவளின் அழகும் அவள் உருவாக்கிய ஆடையின் அற்புதமும் எங்கும் பேச்சும் பொருளாகிப் போனது தான் விந்தை.
அந்நொடியில் நடந்த விந்தையால் காமிராவின் விழிகளுக்குள் ஆனந்தமாகச் சிறைப்பட்ட பறவையாய் ஒருவனின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து ஆட்சி செய்யப் போவதை அவள் உணரவில்லை…
அவளைக் கண்டதும் தன்னுள் நிரம்பிய அவளின் அழகு மென் காற்றாய் தழுவ, அவளின் விழிகளின் நட்சத்திர ஒளி பரவல் அரங்கத்தை அதிர செய்த கண்டு வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் இயக்குநர் சூரியவர்த்தன்.
விழிகள் விழி மோத இதய கதவு திறந்தனவோ ..இதயத்தினுள் நுழைந்தவளை இரு கரங்களால் அணைத்திடும் நாள் எந்நாளாலோ .. அந்நாள் கூடும் மண நன்னாளா ..
பின் தன் அருகிலிருந்தவனிடம் திரும்பி எதையோ முணுமுணுக்க , ம் ஒகே சார் என்ற கோபு அங்கிருந்து விலகிச் சென்றவன் மீண்டும் அவ்விடம் வந்து சேர ''ம் கிளம்பலாம் '', என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தைப் பார்த்தும் கையசைத்தபடி சூரியவர்த்தனும் கோபு கிளம்பிவிட்டார்கள்.
அன்றைய நாளின் பரபரப்பு எல்லாம் ஓய்ந்து தன்னியிடத்திற்கு வந்த பெண்கள் இருவரும் சேர்ந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டிற்கு வந்த சேரவே அடுத்த நாளின் விடியல் தொடங்கி விட்டது.
விசாலியோ வர்ஷியிடம் நடந்த மகிழ்வான நிகழ்வுகளை விடாமல் பேசியவள் ''நான் மட்டும் ஆணாகப் பிறக்காமல் போய்விட்டேன் கவலையா இருக்கடி என்று சொல்லியவளைப் புரியாமல் பார்த்த வர்ஷினியை நோக்கி கண்ணடித்தவள் உன் அழகில் அப்படியே மயங்கி விழுந்துட்டேன்'', என்று தள்ளாடியபடி சொன்ன விசாலியை அடிக்க துரத்தினாள் பத்மவர்ஷினி.
வீட்டுக்குள் இருவரும் துரத்திக் கொண்டு ஓடியவர்களை நிறுத்தியது வர்ஷினின் அலைபேசி அழைப்பு.
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று இருவரும் ஒருவரை முகத்தை ஒருவர் பார்த்தபடி வர்ஷி தொலைப்பேசியை எடுத்த ஆன் பண்ணக் காதில் வைத்த நொடி ''பத்மவர்ஷினி என்று அவ
ளின் பெயரை அழுத்தி உச்சரித்தபடி கூப்பிட்டது தி கிரேட் டைரக்டர் சூரியவர்த்தன்
தொடரும்