அத்தியாயம்.. 7
ஆட்டிசம்..
குரோமோசோம் 13 இல் ஏற்படும் மரபணு மாற்றத்தால் குடும்ப ஆட்டிசம் ஏற்படுகிறது. இது சமீபத்திய ஆய்வுகள்.
தி கிரேட் டைரக்டர் சூரியவர்த்தனின் போன்காலை அன்று அட்டன் பண்ணாமல் இருந்திருக்கலாம். அவனின் கம்பீரமான உருவத்திலும் பேச்சில் செயலில் மயங்காமல் இருந்திருக்கலாம். அதை திருமணப் பந்தம் வரை நீட்டி அவனுள் உருகி உறைந்து போகாமலிருந்திருக்கலாம். இன்றைக்கு இருந்திருக்கலாம் என்று எண்ணியது எல்லாம் அன்று நடந்தால் இன்று உருக்குலைந்து போகாமலும் இருந்திருக்கலாம்.
காலம் கடந்த ஞானயோதயம்.
பார்த்தவுடனே ஒருவனுடைய நல்லது கெட்டது எல்லாம் தெரிந்து விடுமா. அவன் மேல் உயிரான நேசம் பூ மலர்ந்திடுமா.. அவனில்லை என்றால் நானில்லை என்று மனதிற்குள் கல்வெட்டில் பொறித்திடும் எழுத்து உருவமாக ஜென்மம் ஜென்மமாகத் தொடர வேண்டும் என்று எண்ணிடத் தோன்றுமோ. ஆனால் தோன்றியதே . தோன்றியது மட்டுமல்லாமல் அவனுள் பனியாய் கரைந்து போகத் தோன்றியது தான் விந்தை.
ஏன் அவனிடம் மயங்கினேன் என்ற கேள்வி அவள் முன் இன்று வரை தொடர்கிறது.
அதற்கான விடை தான் கிடைக்கவில்லை எனப் பல குழப்பங்களுக்கிடையே பத்மவர்ஷினின் சிந்தனை அன்றைய நாளில் மூழ்கி வலம் வரத் தொடங்கியது.
அலைபேசியின் அழைப்பில் எடுத்தவள் அடுத்த பக்கம் ஒலித்த அழுத்தமான குரலில் சூரியவர்த்தன் என்று பெயரைச் சொன்னவனோ ''பத்மவர்ஷினி' என்று அவளின் பெயரை உச்சரித்த விதத்தைக் கேட்டவளுக்கு எதிர்பாராத திகைப்பும் உடம்பில் அதிர்வும் உண்டாக எதுவும் பேசமுடியாமல் சில நிமிடங்கள் உறைந்து நின்றாள் பத்மவர்ஷினி.
தோழியின் திகைத்த முகத்தைப் பார்த்தவளோ ''யார் வர்ஷி? இந்த நேரத்தில் போன்'' என்று கேட்ட விசாலி அவளின் அருகே போய் தோளில் கைகளை வைத்து உலுக்கவும் நிகழ்வுலகத்திற்கு வந்த வர்ஷினி
''ஹ..ஹலோ ந..நான் பத்மவர்ஷினி தான் பேசுகிறேன்'' என்று சொல்ல..
''ஒகே பத்மவர்ஷினி. நீங்களே போன் அட்டன் பண்ணியது நல்லதா ஆயிற்று. நேரடியாக விஷயத்திற்கு வந்து விடுகிறேன் .
இன்று காலை எட்டு மணிக்கு நீங்க என் ஆபீஸ்க்கு என்னுடன் உங்களுக்கு மீட்டிங் இருக்கிறது. வந்து விடுங்கள்'' என்று அதிகாரமான குரலில் சொல்லிவிட்டு அலைபேசியை கட் பண்ணினான் சூரியவர்த்தன்.
தொலைப்பேசி கட் ஆகியும் இன்னும் இன்னும் அவனின் கம்பீரம் மிகுந்த குரல் கட்டளையாக ஒலிப்பதைப் போலத் தோன்றச் செவியிலிருந்து எடுக்காமல் சிலை போல நின்றாள் பத்மவர்ஷினி.
அவன் தான் பேசினானா என்ற சந்தேகமே வந்துவிட்டது.
சுற்றியும் படை போல ஆட்கள் சூழ்ந்து அதிகாரமாக வேலை வாங்குபவனை ஒரு முறை நேரில் சந்திக்கப் போன போது அருகில் நெருங்கவே முடியவில்லை. அவனின் அசிட்டென்ட்க்கு அசிட்டென்ட இருப்பவனைத் தான் பார்க்க முடிந்தது.
ஆனால் இன்று அவனே நேரடியாக போன் பண்ணியதும் அல்லாமல் சந்திக்க வரச் சொல்லிருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் உள்ளத்தில் ஒரு உறுத்தலும் உண்டானது.
என்னமோ இவனிடம் வேலை செய்பவர்களைப் போல அதிகாரம் செய்கிறான் என்ற எண்ணத்தில் மௌனமாக நின்றவளின் காதின் அருகே வந்து ''ஏய் வர்ஷி எத்தனை தடவை கூப்பிடுவது.. யார் போனில் கேட்டாலும் பதில் இல்லாமல் இப்படி மரம் போல நிற்கிற.. என்ன ஆயிற்று வர்ஷி?'' என்று மீண்டும் அவளை உலுக்கினாள் விசாலி.
அவள் உலுக்கலில் 'ஹான்' என்றவள் ''சூரிய.. சூரியவர்த்தன் டைரக்டர் ''என்று திகைப்பும் திணறலுமாகச் சொல்லியவள் ''நம்மை அவர் ஆபீஸ்க்கு எட்டு மணிக்கு வரச் சொல்லிருக்கிறார்'' என்று சொன்னவளை நோக்கிய விசாலி
''ஏய் நிஜமாகவா'' என்று வர்ஷினியை பிடித்துக் கொண்டு சுற்றியவள் ''நாமும் சினி பீல்டு உள்ளே நுழைய போறாமா சூப்பர்ல.. எவ்வளவு பெரிய ஆப்பரினீசுட்டி'' என்று குதூகலித்த விசாலியை ஒரு மென்மையான சிரிப்புடன் ஏறிட்டாள் வர்ஷினி.
வர்ஷினி மௌனமான சிரிப்பைக் கண்டு ''என்ன ஆயிற்று வர்ஷி? ஏதும் மாற்றி போன் பண்ணி பிராங்க் பண்ணினாங்களா.. ஆனால் நீ டைரக்டர் பெயர் சொன்னீயே'' எனக் கேட்ட விசாலி ''ஏய் நிஜமா இல்லை பொய்யாக நீயே ஏதும் சொல்லறீயா'' எனப் பல முறை கேட்டாள் விசாலி.
''ஏய் விசா நிஜமா தான் சொல்லின்'' என்றவள் ''ஆனால் எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நாம் ஒரு நாள் ஷீட்டிங்க ஸ்பாட்க்குப் போன போது அவரைப் பார்க்கவே விடல. ஆனால் இன்று அவரே போன் பண்ணி அதிகாரமாக வரச் சொல்கிறார். அது தான் கொஞ்சம் அன்ஈஸி பீலிங்கா இருக்கிறது'' என்றவளைக் கண்டு சிரித்தாள் விசாலி.
''நேற்று நம்முடைய ஷோவுக்கு வந்து இருந்தார் வர்ஷி. நீ லாஸ்ட் மினிட் மாடலா வந்தால் அவர் வந்த போது நீ அவரை வரவேற்க முடியவில்லை. அது தான் நான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றேன். ஆனால் அவர் இப்பயே கூப்பிடுகிறார் என்றால் நம்முடைய மாடலிங் பண்ணின ஆடை டிசைன் பிடித்து இருக்கலாம். அவருடைய படத்திற்கு டிசைன் பண்ண நம்மைக் கூப்பிட்டு இருக்கலாம்'' என்ற சொன்ன விசாலி, ''கிளம்பு கிளம்பு நேரமாயிற்று. நம்முடைய டிசைன் வரைந்து பையில் லேப்டாப் மறக்காமல் எடுத்துக்கொள்ளவேண்டும். எட்டு மணிக்கு வரச் சொன்னார் சொன்னாலே கிளம்பலாம்'' என்று அவசரப்படுத்தினாள் விசாலி.
அதற்குப் பின் ஜெட் வேகத்தில் கிளம்பி சூரியவர்த்தனின் ஆபீஸில் போய் தான் நின்றார்கள் வர்ஷினியும் விசாலியும்.
சூரியவர்த்தனின் ஆபீஸ்க்கு முன் நிற்கும் சில பெண்களின் நவநாகரிய உடையலங்காரத்தோடு நின்ற கூட்டத்தைக் கண்டு விசாலி வர்ஷினிடம் நக்கலடித்தாள்.
''வருங்கால நடிகைகளின் படையெடுப்பு போல வர்ஷி'' என்று சொல்லியவளை முறைத்த வர்ஷினியோ ''அவரவர் தேவைக்கு ஆசைக்கு வேலை தேடலுக்கு எல்லாரும் வரத் தானே செய்வார்கள். இந்த மாய உலகத்தில் நுழைந்தால் பெயர் புகழ் பணம் எல்லாம் சீக்கிரம் கிடைத்துவிடும். வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என எல்லாருக்கும் தோன்றுவது நியாயம். நாமும் இதற்குள் நுழையவேண்டும் நம்முடைய டிசைன்ஸ் பெயர் சொல்லுமளவுக்குப் பெரிதாக வரனும் ஆசைப்பட்டோம் தானே'' என்று சொல்லியவளின் முன் கைகளைக் கூப்பி ''தாயே அகிலாண்டஷ்வரி மீ பாவம் விட்ருமா ஏதோ கிண்டலா சொன்னேன் எனக்கு இப்படி கிளாஸ் எடுத்துக் கொல்லுறீயே'' எனச் சொல்லிச் சிரிக்க அவளின் செய்கையில் வர்ஷினிக்கும் சிரிப்பு வந்தது.
''ஏய் வாலு வெளியே வந்திருக்கிறோம். உன் குறும்பை மூட்டை கட்டி வச்சிட்டு வா'' என்று புன்னகையுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்களை நெருங்கினான் கோபு.
''ஹாய் தோழிகளுக்குள் ஆசீர்வாதம் வாங்கியாச்சுனா உள்ளே போகலாமா'' என்று இருவருக்கும் பொதுவாகச் சிறு கேலி சிரிப்புடன் சொல்லியவனைப் பார்த்த விசாலி,
''ஏன் சார் உங்களுக்கும் ஆசீர்வாதம் வேண்டுமா. அப்படியென்றால் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு தட்சிணை வைத்து கேளுங்கள். உங்களுக்கும் இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைக்கும்'' எனக் கிண்டலாகப் பேசின விசாலியை முறைத்தான் கோபு.
அவனின் முறைப்பில் சிரித்த விசாலி ''என்ன சார் இந்த சினி பீல்டுல முறைச்சுகிட்டே இருந்தால் நமக்கு வேலை கிடைக்குமா. சிடுமூஞ்சிக்கு யார் வேலை கொடுப்பார்கள்?'' என்று துடுக்காகக் கேட்டாள் விசாலி.
அதைக் கேட்டு கோபத்துடன் ''ஹலோ மேடம் நான் டைரக்டர் சாரோட அசிட்டென்ட் . நீங்க வருவீர்கள் தெரிந்தால் உள்ளே கூட்டிவிட்டுப் போகலாம் என வந்தால் நக்கலு'' என்றவனிடம் இல்லை சார் விக்கல் என்று நய்யாண்டியாக பதில் சொல்லிய விசாலிடம் ''இங்கே தானே வேலை செய்யப் போகிறீர்கள் அதற்குப்பிறகு இந்த துடுக்கத்தனமான பேச்சிற்கு பெவிஸ்சிக் போட்டு ஒட்டி விடுவோம் எனச் சொல்லி முறைத்தபடி பேசியவன் ''உள்ளே வாங்க'' எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டான் கோபு.
விசாலியின் கைகளைப் பிடித்தபடி உன் துடுக்கத்தனமாக வாயாடாமல் வாடி என இழுத்தபடி உள்ளே போனாள் வர்ஷினி.
கோபுவின் பின்னாலே போனவர்கள் எக்ஸ்யூஸ் மீ என்று வர்ஷினின் குரல் ஒலித்தபடி நுழைந்தவர்கள் பெரிய அறையில் நடுஹாலில் போடப்பட்டிருந்த மேசையின் பின் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி அமர்ந்தவன் வர்ஷினின் வருகையில் அவளை தன் கூர் தீட்டிய விழிகளால் அளவெடுத்தான் சூரியவர்த்தன்.
நேற்று மேக்கப்பில் பார்த்த முகத்திற்கும் இன்று எந்தவித ஒப்பனையின்றி பருத்தி சுரிதாரில் நீள் கூந்தலை ஒரு கிளிப்பில் அடக்கிய பாங்கும் உடல்மொழிகளில் நிமிர்வும் அஞ்சனம் பூசிய மைவிழிகளில் ஆழ்கடலாக அவனை இழுத்து அதனுள் மூழ்கி மூச்சுக்குத் திணறி அடிப்பதைக் கண்டு சட்டென்று தன் பார்வையை மாற்றினான் சூரியவர்த்தன்.
ஆனால் அவனுள் ஒரு எதிர்பார்ப்பு. சினிமா இன்ஸ்ட்ரீயலில் பெரிய டைரக்டரை சந்திக்கப் போகிறோமே என ஆர்ப்பரிப்பான சந்தோஷமோ எக்ஸ்யூமென்ட் எதுவுமில்லாமல் நிதானமாக இருப்பவளைக் கண்டவனுக்கு ஆச்சரியம். தன்னுள் கொண்ட எண்ணங்களை மறைத்தபடி புருவ அசைப்பிலே அவர்களை எதிர் இருக்கையில் அமர அவர்கள் அமரச் சொல்ல..
அவன் அமர்ந்திருந்த தோரணையும் ஆளை அளவெடுக்கும் பார்வையும் வாயைத் திறந்து பதிலளிக்காமல் விழியாலே கட்டளை இடுவதைக் கண்ட வர்ஷினின் மனதிற்குள் புகைச்சல் உண்டாகியது. இவன் பெரிய அப்பட்டக்காரா இருக்கலாம். அதற்காகக் காலையில் நான் சொன்ன நேரத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் இப்போது அமரச் சொல்லுவது கூட விழியாலே கட்டளை இடுவதும் கண்டவளுக்குத் தன்னுடைய சுயம் எங்கோ ஓடி ஒளிவது போலத் தோற்றம் அவளுள் எழும்பியது. தொழில் முறையில் சிலதை தவிர்க்க முடியாத என்ற எண்ணம் அவளுள் இருந்தால் எந்தவித சஞ்சலங்களின்றி நிர்மலமான முகத்தோடு நிதானமாக எதிரே அமர்ந்தவள் விசாலியை நோக்க அவளும் கூட அமர்ந்தாள் வர்ஷினி.
''வெல் பத்மவர்ஷினி'' என்று சூரியவர்த்தன் அவளின் பெயரைச் சொல்ல,
''எஸ் சார்''என்றவள் மேற்கொண்டு அவனே பேசட்டும் எனக் காத்திருந்தாள்.
''எங்கள் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்'' என்றவன் ..
தன்னருகில் நின்றிருந்த கோபுவிடம் நம்முடைய படத்திற்குரிய டிசைனர் இடையில் வரமுடியாத சூழ்நிலை என்று ஒப்பந்தம் கேன்சல் பண்ணிட்டாங்க கோபு. அதனால் அந்த வேலையை இவர்களிடம் கொடுத்து விடு. நமக்கான வேலைகள் ஹீரோ ஹீரோயின் மற்ற கோ ஆக்டர்ஸ் எல்லாருக்கும் இவர்களே பார்த்துக் கொள்ளவேண்டும். அதைப் பற்றிய டீடெயலை பேசி முடித்து மற்ற பார்மாலீட்டிஸ் பார்த்துக் கொள் என்றவன், பேச்சு முடிந்து என்று வர்ஷினிடம் எதுவும் பேசாமல் தலையசைத்தான்.
அவனின் முடிவை மற்றவர்களும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று எண்ணத்தில் தான் நினைத்ததைச் சொல்லி முடித்தவனைத் திகைப்பாக நோக்கினார்கள் வர்ஷினியும் விசாலியும்.
வா என்றான் அவனே இது தான் உங்களுக்குரிய வேலை செய்து விடுங்கள் என்று முடித்துவிட்டு எதிரே உள்ளவர்களின் பேச்சோ அவர்களுக்கு இதில் விருப்பமோ என்று எதுவும் கேட்காமல் முடித்து விட்டான்.
வர்ஷினி கிளம்புங்கள் என்று தலையசைத்தாலும் எழுந்து சொல்லாமல் அவனை ஊடுருவிப் பார்த்தவளின்
விழிகள் சொன்ன செய்திக்கு அவனுடைய பதில் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டளை மட்டுமே இருந்தது.
தொடரும்