அத்தியாயம்..8
ஆட்டிசம்.
9வது மாதம் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது கவனிக்காமல் இருத்தல் முகபாவனைகளைக் காட்டாமல் இருந்தால் அது ஆட்டிசம் அறிகுறி.
சூரியவர்த்தனின் விழிகள் வர்ஷினின் விழிகளோடு கலந்தன . அவளின் நீள் பெரிய அகன்ற விழிகளின் ஆழத்தில் தன்னை மறந்து ஆழ்ந்து பார்த்தவன் தன் பேச்சை விரும்பாதே தன்மையில் நோக்குவதைக் கண்டு இவ்விழிகள் தன்னுள் உருகி உறைந்து காதலாக கசிந்துருகிப் பார்த்தால் எவ்விதம் இருக்கும் என்ற ஆராய்வு அவனின் உள்ளத்தில் தோன்றியது.
என்னுள் அவளும் அவளுள் நானும் மறந்து உறவாடும் வேளையில் இப்பிரபஞ்சமே அசைவற்று உறைந்து விடாதா.. என அவனின் எண்ணப்போக்கு எங்கு எங்கோ கொண்டு சென்றதைக் கடிவாளமிட்டு நிறுத்தியவன் எவ்வித நிர்மலமான முக பாவனையின்றி தன் முன்னே அமர்ந்திருந்தவளைக் கூர்ந்து கவனித்து அவளின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை அறிந்தவன் அதற்கான பதிலை விழியாலே அவளிடம் சொன்னான்.
அவனின் கூர் விழிகள் தன்னிடம் ஏதோ ஏதோ செய்த வர்ண ஜாலங்களைத் தவிர்த்துத் தான் வந்ததும் பற்றி மட்டுமே யோசித்த வர்ஷினி நிதானமான குரலில் ''சார் நீங்கச் சொன்ன எதற்கும் எங்களுக்கு கன்வின்டா இருக்குமா'' என்று சொல்லவில்லை. நீங்களே எல்லாம் முடிவு எடுத்ததைப் போலப் பேசுவது என்னவென்று நினைப்பது .. இங்கே வந்ததிலிருந்து நாங்கள் எதுவும் பேசாமலே நீங்களே பேசி முடித்து விட்டீர்கள்'' என்று பேசிக் கொண்டு இருப்பவளை உற்று நோக்கினான் சூரியவா்த்தன்.
அவள் பேசியதைக் கேட்டுச் சிரித்தவன் ம்ம்.. உங்களைப் பேச விடாமலே பேசறேன்ல என்றவன் ''என் படத்தில் வேலை செய்ய ஆயிரம் பெயர் க்யூல நிற்கிறார்கள் பத்மவர்ஷினி மேடம். ஆனால் உனக்கு அது தானாகத் தேடி வருவதை வேண்டாம் என்றா சொல்லப் போறே''.. என தெனவெட்டாக பேசியவனை உறுத்து விழித்தாள் வர்ஷினி
அவளின் வெப்பப் பார்வையை ஒதுக்கியவன் ''நீ நேற்று நடத்திய ஷோ எதற்கு? என்னை அந்த ஷோவிற்கு அழைத்த காரணம் உனக்கும் என் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணத்தில் தானே.. அதை நானே கூப்பிட்டுத் தரும் போது மறுக்கக் காரணம் எதுவுமில்லை'' என்றவன் சட்டென்று இறுக்கமான முகத்துடன் ''இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. இந்த சினி பீல்டுல என்னிடம் வேலை செய்ய மறுத்து விட்டது வெளியே தெரிந்தால் வேறு யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். தேடி வந்ததை தூக்கி எறிய மாட்டே என்று நினைக்கிறேன்'' என மறைமுக மிரட்டலாக மொழிந்தவனைக் கண்டு மனதிற்குள் சிறு நடுக்கம் உருவானாலும் அதைத் தவிர்த்தவள் எதுவும் பேசாமல் எழுந்தாள் பத்மவர்ஷினி.
அதுவரை அவள் அருகே அமர்ந்திருந்த விசாலியோ சூர்யவர்த்தனின் பேச்சைத் திகைப்போடு கேட்டவள் சுருக்கென்று வார்த்தைகளை விட முயன்றாள். ஆனால் வர்ஷினியோ அவளின் கைகளை அழுத்தி எதுவும் பேச வேண்டாம் தடுத்தவள் ''ஒகே சார் நீங்கச் சொன்னால் தான் இந்த சினி பில்டுல எல்லாரும் வேலை தருவார்கள் என எனக்குத் தெரியாது. நான் நினைத்தது என் ஆடை வடிவமைப்புகளையும் என் உழைப்பும் திறமையும் போதும் நினைத்தேன். அது தவறு போல.. இங்கே உள்ள அத்தனை பேரும் உங்கள் பேச்சை மட்டுமே கேட்டு நடப்பதாக மாய உலகத்திலே இருக்காதீர்கள். நிஜ உலகில் நடப்பதே வேறு'' எனச் சொல்லியவளின் பேச்சில் இருக்கும் நிமிர்வும் முகத்திற்கு நேராக உரைத்திடும் பதிலையும் கண்டவனுக்கு மனதிற்குள் சிறு சஞ்சலம் உண்டானது.
நேரடியாக எந்தவித ஒப்பனை பூச்சுமின்றி பேசுபவளுக்கு இந்த பீல்டு ஒத்து வருமா என்கிற எண்ணம் அவனுள் எழுந்தது.
ஆனாலும் அதை மறைத்துக் கொண்டவன் ''தேடி வருகிற வாய்ப்பை உதறிச் செல்வது முட்டாள்களின் பழக்கம். நீயும் அந்த கேட்டகிரி தான் எனக்குத் தெரியாமல் போயிற்று. உன்னுடன் பேசுவது வேஸ்ட் ஆப் டைம்'' என்றவனை முறைத்தாள் பத்மவர்ஷினி.
அவளின் முறைப்பைக் கண்டு ''என்ன முறைக்கிற பத்மவர்ஷினி. இந்தக் காலத்தில் வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு கடினம் தெரியுமா.. வாய்ப்புக்காக இங்கே எவ்வளவு தூரம் இறங்கி போகவேண்டும் தெரியாது உனக்கு. தானாகத் தேடி வருவதால் அதைப் பற்றிய கவலை இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் பேசுகிறாய்.. இங்கே என் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்வதற்கு பல பேர் காத்திருக்கிறார்கள். ஆனால் அது தானாக உன்னைத் தேடி வருவதால் அதன் அருமை பெருமை எல்லாம் தெரியவில்லை'' எனப் பேசிக் கொண்டிருந்தவனை நிறுத்த வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மவர்ஷினி.
அருகில் நின்ற கோபுக்கும் இது அதிசயமாக இருந்தது. இவ்வளவு இறங்கி விளக்கம் கொடுக்க மாட்டானே மச்சி. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசி முடித்து விட்டுப் போகிறவனின் எதாவது பேய் பிசாசு அடித்துவிட்டதா என சூரிய வர்த்தனைப் பார்த்தவனுக்கு அவன் கண்ணைச் சிமிட்டியதில் தலையும் புரியாமல் வாலும் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் கோபு.
பத்மவர்ஷினியை பேச விடாமல் பேசுபவனைக் கண்ட விசாலிக்கும் என்ன இது எனக் கேள்வி முன்னிறுத்தி நின்று கொண்டிருந்தாள் .
மூவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க நான்ஸ்டாப்பாக பேசியவனோ வர்ஷினி முகத்தைத் தவிர அவன் பார்வை வேறு எங்கும் நிலைக்கவில்லை. அவளின் முகமோ அகம் காட்டும் கண்ணாடியாக அவளின் நீள் விழிகளோ அவனிடம் காவிய கதை பேசுகிறதா என எண்ணத்தில் தன் விழிகளாலே அவளைச் சிறையெடுத்தான் காவிய நாயகன் சூரியவர்த்தன்.
அவன் விழிகள் செய்த வர்ண ஜாலத்தில் திகைத்தவளோ அதற்கான விடையை அவனிடமே தேடினாள் பேதை.
ஒரு பார்வை இந்த அளவுக்கு வசீகரிக்குமா. அதனுள் ஆழ்ந்து மயங்கி மகுடிக்குக் கட்டுப்படும் அருவமாகத் தலையாட்ட வைக்குமா. ஆனால் அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட வைத்தது மட்டுமல்லாமல் அவன் பின்னால் செல்லும் மனத்தை அடக்க இயலாமல் பேசும் அனைத்திற்கும் தலையாட்டிப் பொம்மையாகத் தலையை ஆட்டியது மட்டுமல்லாமல் அதன்பின் அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுத்துச் சென்று இன்று தன்னந்தனியாக குழந்தையோடு போராடும் நிலையை உருவாக்கியது விதியா இல்லை அவனின் சதியா..
ஆனால் அதற்குக் காரணம் அவன் என்று குற்றம் சாட்டினால் அவனோ இதற்கு மொத்த பொறுப்பு நீதான் என் மேல் திறப்பிவிட்டவனின் வாய் திறமை இவள் அறியாதா. அறிந்தும் மீண்டும் அதே புதைகுழியில் விழத் தானே வைக்கிறது விதி என எண்ணிய பத்மவர்ஷினிக்கு இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஞாபக அலைகளோடு போராடினாள்.
அன்று அவன் பேசிய வார்த்தைகளுக்குப் பதிலடி கொடுக்காமலிருந்தால் தானோ என்னவோ இன்றும் அவ்வலியின் வடுக்கள் கூட குருதியின் செந்நிறத்துடன் தன் இதயத்தைக் கூறுப் போட்டுக் கொண்டிருக்கிறது என நினைத்தவள் அன்று அவன் பேசிப் பேசிக் கரைத்ததெல்லாம் ஆத்மார்த்தமான காதலின் வெளிப்பாடு என்று நினைத்து உறைபனியாக உருகிக் குழைந்து கரைந்து மெய் மறந்த கணங்கள் அனைத்தையும் ஞாபகத் தடங்களாகத் தன்னை வாட்டி எடுப்பதைத் தடுக்க இயலாமல் இருக்கிறாள் வர்ஷினி.
அன்று அவன் பேசுவதற்குப் பதில் இல்லாமல் சரி சொல்லி ஒப்பந்தத்தில் சைன் பண்ணியது வாழ்க்கையில் தான் செய்த மிகப் பெரிய தவறாக இருந்தாலும் அத்தவற்றில் மலர்ந்தவள் தான் தன் மகள். தேவதையாக தன் மனக்காயங்களுக்கு மருந்தாக இன்று வரை தன் பொக்கிஷமாகப் போற்றிக் காப்பாற்றி வருவதை இவன் கையில் தூக்கிக் கொடுக்கவா என எண்ணியவள் தன் கையிலிருந்த மகளைக் கட்டி அணைத்தபடி படுத்துக் கொண்ட பத்மவர்ஷினிக்கு அன்று அவன் ஆபீஸில் சொன்ன எல்லாம் கண்முன் வலம் வரத் தொடங்கியது.
எவ்வளவு அழகாகக் கதையை சோடித்தான் சூர்யவர்த்தன். பார்த்ததும் பிடித்தது அதனால் தான் என் படத்திற்குக்காக்க வரவழைத்து காதலாக கசிந்துருகி என் வாழ்க்கையின் சரிபாதியாக ஏற்றுக் கொண்டேன் என மூன்று மாதக் கதையை ஒரு வரியில் முடித்து விட்டானே. ஆனால் மூன்று மாதத்தில் ஆளிலை வயிற்றில் உதித்த முத்தாக தன்னுள் வளர்ந்த குழந்தையே இருக்கக் கூடாது நினைத்த கல்நெஞ்சுக்காரன் அவன் தான் எனப் புரிய தன் வாழ்க்கையே பணயம் வைத்தது எண்ணி இன்று வரை மனதிற்குள் வாள் கொண்டு அறுக்கிறது. முதல் சந்திப்பிலே தன்னுடைய பேச்சும் செயலும் தான் முன்னிலை எப்பவும் இருக்க வேண்டும் என எண்ணிப் பேசியவன் தெரிந்தும் புத்தி பேதலித்து காதலில் விழுந்தது தன்னுடைய குற்றம் தானே எனத் தன்னையே நொந்து கொள்வது தான்.
ஆனாலும் முதல் முறை பேசியதைப் போல அடுத்த முறை நடக்கவில்லையே. அவன் சொன்ன கண்டீசன் ஓகே சொல்லி அக்ரீமென்ட் சைன் பண்ணினாலும் படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகளில் தனக்கான பாதுகாப்பை அவன் அளித்தது மனத்தை அவனிடம் தஞ்சமடைய வைத்தது.
படத்திற்கான தேவைகளை அவனுடைய அசிட்டென்ட் விளக்கிச் சொன்னதைக் கேட்டு அதை வடிவமைத்துக் கொண்டு அவனிடம் காண்பித்த போது அவன் விழிகள் மெச்சிதான் பார்வையோடு கீப் அட் அப் சொல்லியவன் இன்னும் அதை மேலும் திறம்படச் செய்ய ஆலோசனையும் வழங்கினானே என்று தோன்றி சூரியவர்த்தனை பார்க்கும் போது தன் அடர் புருவத்தை உயர்த்தி என்னவென்று தெனவெட்டாக வினாவினை பாம்பென்றும் ஒதுக்க முடியாது. பழுது என்றும் தூக்கி எறிந்திட முடியாமல் மனம் சஞ்சலமானது தான் பத்மவர்ஷினுக்கு.
அவன் பாம்பாகச் சீறி விஷத்தைக் கக்கிச் சென்றது அவனைக் கடைசியாகப் பிரிவு என முடிவெடுத்த நாள் அன்று மட்டுமே. அதற்கு முன் திருமண முடித்த மூன்று மாதம் வாழ்வில் வசந்த காலம். அக்காலத்தில் வேலை வேலை என்று அலைந்ததை விட ஒருவரை ஒருவருக்குள் தேடியதை அதிகம். அந்நாளில் மனத்தைத் தேடி அதனுள் ஆழ்வதை விட இளமையின் தேடல் அதீதமாக இருந்தோ என அவளுள் வினா ..
மனம் பின்னால் போக அங்கே இளமை ஊஞ்சாலடியது. அதனால் தான் அக்காலத்திலே ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எனச் சொல்லிச் சென்றார்கள் போல.. நூறாவது நாளில் வாழ்க்கையின் மொத்தமும் முடிந்து கண்ணீர் மழையோடு தந்தை மடி தேடும் மழலையாக ஓடினாள் பத்மவர்ஷினி.
ஓடி வந்தவளை மடி சாய்த்தவர் அதன்பின் அவளின் வாழ்க்கையைச் சிரிக்க வைக்க முடிந்த வரை போராடிக் கொண்டு தான் இருக்கிறார்.
சிரிக்க மறந்த அதரங்களோ இறுகப் பூட்டிக் கொண்டது.
அவனோடு வாழ்ந்த அன்றைய நாளில் அவளின் சிரிப்பின் சத்தம் வெள்ளி அருவியாய் பொங்கிப் பெருகி வழிந்தோடியது அவனால்.
சிரிப்பை அதீதமாகக் கொடுத்தும் அதைப்பிடுங்கி அழுகையும் அதீதமாகக்
கொடுக்க அவனைத் தவிர யாரால் முடியும்...
தொடரும்