• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
இருக்க சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் அவன் இருப்பு அவசியம். அவன் கடமையும் இருத்தி வைத்தது. சொந்த உணர்வுகளுக்காக கடமை தவறுபவன் அவன் அல்லவே!

தனி மனிதனாக அவன் உணர்வுகளை ஒதுக்கி வைத்து, முழு காவல் அதிகாரியாக மாறி இருந்தான்.

"சர் ப்ரோசீஜர் எல்லாம் முடிஞ்சுது. அங்க உங்களுக்காக வெயிட்டிங்" கமல் வந்ததன் காரணத்தை சொல்ல,

"ம்ம் வொஸ்தானு" என்றவன் மூடியிருந்த கதவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து வேகமாக அகன்றிருந்தான்.

பாரென்சிக் ஆட்களும், இன்வெஸ்டிகேட்டிவ் ஆட்களும் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப தயாராக இருந்தனர். அவர்களிடம் வந்தவன்,

"எனி எவிடென்ஸ்" மறுபடியும் ஆரம்பித்தான் கேள்விகளை. கிடைக்கப்போவது ஒரே பதில் தான் என்றாலும், பார்வையும் கோணமும் வித்யாச படுமே! எதிர்பார்த்ததை போல கமல் சொன்னதை தான் அவர்களும் சொன்னார்கள்.

"நார்மல் ஆஃட்டிவிட்டிஸ் தவிர்த்து வேற பைண்ட் அவுட் பண்ண முடியல புகழ். மே பீ அழிக்க பட்டிருக்கலாம்! ஆனா அதோட சிம்டமும் தெரியல! சில பிங்கர் பிரிண்ட்ஸ் மட்டும் கிடைச்சிருக்கு! பட் லேப் போனா தான் யாரோடது ன்னு சொல்ல முடியும்" என்றும் சொல்ல அவன் நெற்றி நெறிந்தது.

"உங்களுக்கு என்ன தோணுது" அவர்களிடமே ஒப்பீனியன் கேட்டான்.

"சீன்ல எல்லாமே பக்கா கிளீயர். பட் சம்திங் பிஷி! ஐ கேன் சென்ஸ்! ஆனா சொல்ல தெரியல! ஒரு ரூம் இவ்வளவு நீட் அன்ட் க்ளீனா இருக்குமா! ம்ம்! சொல்லி வைத்தார் போல் எல்லோரும் சொல்ல, அவனுக்கும் அப்படித்தான் பட்டது.

ஒன்று மட்டும் உறுதியானது! சொன்ன அத்தனை பேர்களும் சொன்னது!
நிறைய ஆனா க்களை!

"ம்ம் ரிப்போர்ட் எப்போ கிடைக்கும்"

"மே பீ நாளைக்கு"

"சீக்கிரம் தர முடியுமா பாருங்க"

"ஷுர்" என்றவர்கள் கை கொடுத்து, "முதல் கேஸே சுத்தல்ல விட்டிருக்கு போல. எனி வே வெல்கம் டு தி கிளப்" சிரித்தபடியே கைகுலுக்கி சொல்ல, அவனுக்கு சிரிப்பு மேலிடவில்லை, விரக்தி தான் வந்தது.

'கேஸ் மாத்ரமா ரா புகழ்' உள்ளே ஓங்கிய குரலை தடுக்க வழியின்றி நின்றான். இப்போதைக்கு அதற்கு பதில் தர அவனுக்கு நேரமும் இல்லை.

கமலை மட்டும் இருக்க சொல்லி விட்டு அனைவரையும் கிளப்பினான். அதிலே தெரிந்தது விசாரணையை இப்போதே தொடங்க போகிறான் என.

"சர்" தயக்கமாக அழைத்தான் கமல்.

"ம்ம்" என்றவனது குரல் கமலை நோக்கி என்றாலும், பார்வை ஸ்ரீபிரசாத் அறையை நோட்டம் விட்டு அலசி ஆராய்ந்துகொண்டிருந்தது.

ஒருவர் கண் பார்வைக்கு சிக்காதது, மற்றவர் பார்வைக்கு சிக்கும் சாத்தியங்கள் உண்டல்லவா! அதிலும், இவனுக்கு இதை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டுமோ, முடித்துக்கொண்டு விலக வேண்டும். இண்டு இடுக்கு விடாமல் அலசி ஆராய்ந்தான்.

"இப்போவே விசாரிக்கணுமா சர், இன்னும் ரிப்போர்ட்ஸ் எதுவும் வரலயே. அதுக்குள்ள எப்பிடி சர். சூசைட்டா கூட இருக் "முழுதாக கேட்டு முடிக்கவில்லை. கடும் முறைப்பை வாங்கினான் கமல்.

"அப்புடு விருந்து தின்னவா வந்தே இங்கே! சூசைட் னா விசாரிக்க மாட்டியா"

"இல்லை சர் லேட்டாகிடும். ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் சத்தம் போடுவாரு "

புகழின் கடுமையில் இவனுக்கு வார்த்தை தந்தி அடித்தது.

"உன்னலா எவன் யா வேலைக்கு எடுத்தது. அங்கே குடும்பம் நடத்தினது போதும். இனிமே என்னோட தான் இருக்க போறே! புரிஞ்சுதா? போ, போய் அடாப்சி எப்போ முடியும் ரிப்போர்ட் எப்போ கிடைக்கும் கேளு. சீக்ரம் தர சொல்லு" என்றவன் விட்ட வேலையை தொடர,

"ஆம்புலென்ஸே இன்னும் ஹாஸ்பிடல் போய் சேர்ந்திருக்காது. இதுல என்னன்னு நான் கேட்டு, இவர்கிட்ட என்னன்னு நான் சொல்ல" கமல் முணுமுணுத்ததில்,

"ஏமி" என்றானே பார்ப்போம்! கமல் போனை எடுத்து காதில் வைத்தபடி, அவ்விடத்தை விட்டே அடித்து பிடித்து ஓடினான்.

நேற்று இரவு வரை இயல்பாய் இருந்த இல்லம், காலையில் கலவரம் பூசி கொண்டது முதலாளியின் இறப்பால் என்றதில், எப்போதும் போல காலையிலேயே வந்திருந்த வேலைகாரர்கள் அரண்டு ஒதுங்கியே இருந்தனர்.

பெரிய வீட்டு பொல்லாப்பு. சட்டென்று பழியை போட்டு தூக்கி சென்று விடுவார்களோ என்ற அச்சமும், விசாரிக்க வேண்டும் எங்கேயும் செல்ல கூடாது என்ற உத்தரவும், அவர்களை இங்கேயே நிறுத்தி இருந்தது.

இப்பொது காவலர்கள் கலைந்திருக்க, தைரியம் சற்று எட்டி பார்க்க, கூடவே முதலாளி மீதான நன்றியும் கலந்திருக்க, வருத்தத்துடன் அவன் அறை எட்டி பார்க்க, வான் புகழின் இருப்பை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பேச்சு சத்தமும், நடமாட்டமும், புகழை கவனிக்க செய்ய, இதோ அவன் முன் கை கட்டி, முகத்தில் பயம் அப்ப விசாரணைக்காக நின்றிருந்தனர் வேலைக்காரர்கள்.

"ம்ம் செப்பண்டி! என்ன நடந்தது? எப்ப விஷயம் தெரிஞ்சது உங்களுக்கெல்லாம் ? ஏமி ச்சுசாரு? ம்ம்ப்ச் என்ன பார்த்தீங்க?"

அடுக்கடுக்காக கொஞ்சமும் கேப் விடாமல் கேள்விகளை அடுக்கினதோடு கண்களால் அளந்தப்படி அவர்களின் பிரதிபலிப்பை எடை போட ஆரம்பித்தான்.

"சர் எங்களுக்கு எதுவும் தெரியாது சர்! எப்போவும் போல காலைல வேலைக்கு வந்தோம்! பெரியம்மா அழுதுட்டுருந்தாங்க! விஷயம் தெரிஞ்சு ஓடி வந்து பாத்தோம்! அய்யா ரத்த வெள்ளத்துல" சொன்னவன் மேலே சொல்ல முடியாமல் துக்கத்தில் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என அவர்கள் கண்களும், நன்றி உணர்வில் கண்ணீரை பெருக்க, முகங்களிலும் வருத்தத்தின் சாயல்.

"ம்ம் அப்றம்"

"எங்க யாருக்கும் ஒன்னுமே புரியலங்க ஐயா! என்ன ஏது யோசிக்கறதுக்குள்ளே போலீஸ் வந்துட்டாங்க. இதுக்கு மேல எங்களுக்கு ஒன்னும் தெரியாதுங்க ஐயா!"

"உடம்பு சரி இல்லாம இருந்து இப்ப தான் மனுஷர் பழைய மாதிரி நல்லானாரு அதுக்குள்ள என்னென்னவோ "

"அப்ப உங்கள்ள யாரும் இந்த கொலைய பண்ணலைன்னு சொல்றீங்களா? நம்ப முடியலேயே?

மழிக்கப்பட்ட கன்னத்தை தேய்த்தபடி, கண்களை சுருக்கி சந்தேக பார்வையோடு வார்த்தை வந்து விழுந்த நிதானத்திற்கு எதிராக அவர்கள் பதட்டம் வேகமாக அதிகரித்தது.

'என்ன கொலையா' அதிர்ந்தவர்களுக்கு அடுத்து அவர்கள் மேல் விழுந்த பழியை உணர்ந்து, எங்கே விட்டால்
இப்போதே கைது செய்து இழுத்து சென்று விடுவார்களோ அச்சம் ஓட

"அய்யோ சர்! நாங்க ஏன் சர் பண்ண போறோம்! புள்ள குட்டி காரங்க சர்! எங்கள விட்டுடுங்க சர்" பயம் கதறலாய் மாறி இருந்தது.

"நிஜம் செப்புனு கதா விட்டுடுவேன்! சொல்லுங்க! உங்கள் ல எவரு சேசாரு" சற்றும் இரக்கம் காட்டாமல் மேலும் கொக்கி போட்டான் புகழ்.

"வினோதினி அம்மா மாதிரியே அவரும் தங்கமானவர் சர். வேலைகாரங்கன்னு எங்கள தனியா வெச்சு பார்க்க மாட்டார். எல்லாத்துக்கும் தனி தனி வேலை ஆளு! எல்லாருக்கும் நல்ல சம்பளம்! வீடு வாடகைலருந்து எங்க புள்ளைங்க படிப்பு வரைக்கும் பாக்குறாங்க! நாங்க ஏன் சர் செய்ய போறோம்! அதோட நைட் நேரம் வீட்டுக்குள்ள யாரும் வர கூடாதுன்னு உத்தரவு சர்! வேணும்னா சிசி டிவி கேமிரா கூட இருக்கு பாத்துக்கங்க சர்!" எனவும் அவன் பார்வை கமல் பக்கம் திரும்பியது.

அது வரை தள்ளியே இருந்தவன், பதில் தர வேண்டிய அவசியத்தை உணர்ந்து புகழ் அருகில் வந்தான் கமல்.

"சர் ஒரு நிமிஷம்" சொன்னவன் நகர்ந்து விட,

'வரும் வரை நகர கூடாது' பார்வையாலே கட்டளை பிறப்பித்தவன் கமலிடம் வந்தான்.

அவர்கள் தூரமிருந்தாலும் வெளிப்படையாக சொல்ல முடியாதெனவே கமல் மெதுவாக காதை கடித்தான்.

"ஓஹ்" என்றவனிடம் கமல் சொன்ன விஷயம் கேஸிற்கு அத்தனை சாதகமாய் இல்லை. எங்கு சுற்றினாலும் விஷயம் ஏதோ ஒரு முட்டு சந்தில் முட்டிக்கொண்டு நிற்பதும், வில்லங்கத்திலேயே சூழல்வதுமாக இருந்தது.

"ம்ம்" சற்று நேரம் கண்களை மூடி யோசனையோடு எல்லாவற்றையும் அலசி பார்த்தான்.

"எதுக்கும் ஹார்ட் டிஸ்க்க சைபர் க்ரைம் ல நம்ம ஆளுங்க கிட்ட குடுத்து ரெகவெரி பண்ண முடியுமா பாரு கமல். அப்டியே விக்டிமோட போன் லேப் டாப் லயும் இன்பர்மேஷன் கிடைக்குதா பார்க்க சொல்லு"

"ஆங் அப்றம், எதுவா இருந்தாலும், எந்து சமயமாருந்தாலும் என்னை கான்டேக்ட் பண்ண சொல்லு. விஷயம் வெளியே லீக் ஆவ கூடாது"

உயர் அதிகாரி அவன் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலையில் கமல். இப்படி என விவரம் கிடைக்க பெற்றதும் வந்துவிட்டான். வயிற்றில் ஆகாரம் என்பது மருந்துக்கும் இல்லை. நீரை குடித்து ஒப்பேத்தி இருந்தான்.

சவுகரியங்கள் உள்ள அதே அளவு சமரசங்களும் இருக்கும் உத்யோகம். கடமையாற்றும் நேரம் அவர்களுக்கு சொந்தமில்லை. ஸ்டேஷன் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தான். இப்பொது அதற்கும் வழி இல்லை. சோர்ந்து போய் வந்தது.

அமர கூட இல்லாமல் சுற்றிக்கொண்டே இருந்தது, அறையின் ரத்த வாடை, மருந்து வாடை, என எப்படியோ வந்தது. சொல்ல முடியாமல் கமல் அகல பார்க்க,

"யோவ் நம்ம வேலை லட்ச்ணத்துக்கு நேரத்துக்கு வயித்துக்கு போட முடியாட்டியும், நேரம் கிடைக்கும் போது போட்டுக்கணும்! பசி வந்தா சொல்ல மாட்டியா? போயா, போய் சாப்டுட்டு வா, இன்னைக்கு முழுக்க இங்க தான்"

புகழ் போகிற போக்கில் சொல்லிக்கொண்டே நகர, அவன் கோபத்தில் சற்று அரண்டு போயிருந்த கமலுக்கு, அவனை எப்படி எடுக்க என்றே புரியாத நிலை.

"ம்ம் எங்க விட்டேன்" நின்றிருந்தவர்களிடம் வந்தவன் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

"ம்ம் உத்தரவுன்னு என்னவோ சொன்னியே, ஏமி அது"

சொன்னவனை இப்பொது கட்டம் கட்ட, கேட்டவனுக்கு நியாபகம் இருக்க, சொன்னவனுக்கு என்ன சொன்னோம் என்பதே மறந்தது.

"பெரியம்மாங்கய்யா" பெண் ஒருத்தி வாயை திறந்தாள்

"ம்ம் அவங்க தான், உங்க பெரியம்மா எப்டி"

"அது.. சர்.. வந்து" தயக்கத்தோடு ஒருவர் ஒருவரின் முகம் பார்த்தனர். கேட்ட மாத்திரத்தில் கலவரம் அப்பி கொண்டது அவர்கள் கண்களில்.

"கேட்ட கேள்விக்கு பதில் வரனும். இல்லைனா என் விசாரணையே வேற மாதிரி இருக்கும். உடம்ப புண்ணாக்கிக்க வேணாம்னா எதையும் மறைக்காமே மறக்காமே சொல்லனும், அர்த்தமாயிந்தா"

அவன் விட்ட சவுண்டில் அவர்களுக்கு உடல் நடுங்கவில்லை என்றால் தான் அதிசயம்.

ஆரம்பதிலிருந்தே அவர்களை பயமுறுத்துவது அவன் எண்ணமல்ல. ஆனால், விசாரணை என்று வந்துவிட்டால் போலீஸ் காரன் என்பவன் முதலில் பயத்தை எதிர் இருப்பவனிடம் விதைக்க வேண்டுமென்பது அவசியமாகிறது.

அதிலும் இம்மாதிரி பெரிய இடங்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் கிடைக்காத உண்மை, அங்கிருப்பவர்களிடம் கிடைக்கும் சாத்தியங்கள் நிறைய.

வெறும் காட்சிகளை பதிவு செய்யும் சிசி டிவி தோற்கும் இவர்களிடம், நடமாடும் ரகசிய ரெகார்ட் ப்ளேயர்கள் இவர்கள்.

ஆகவே போலீஸ் பொது மக்களின் நண்பன் என்பதெல்லாம் விசாரிக்கும் போது எடுபடாது. பயத்தை விதைத்து பதிலை அறுவடை செய்யும் யுக்தி அவசியம்.

உடல் மொழியிலேயே
அதை காட்டி விடும் புகழ், அதில் பிஹெச்டி பயின்றவன் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அதையே இங்கும் கையாள,

"இல்ல சர் நாங்க எதையும் மறைக்கல, எங்கள ஒன்னும் பண்ணிராதீங்க சர்" பதறினர் பெண்கள்.

"தப்பு செஞ்சவங்க மட்டும் தான் பயப்டணும், உங்களை விசாரிக்க மட்டும் தான் செய்றேன், நீங்கோ சொல்ற விஷயம் வைச்சு தான் விசாரணைய இங்கேயே முடிச்சுக்குறதா? இல்லை ஸ்டேஷன் ல வாங்குறதா முடிவு பண்ணும். பயப்டாமே உங்களுக்கு தெரிஞ்சதை செப்பண்டி" ஊக்கினான் அவர்களை.

"சொல்லிடலாம், இல்லைனா நம்ம மேல பழி வரும்" பெண் ஒருத்தி எடுத்து கொடுக்க,

"அது சர்.. பெரியம்மா, வினோதினியம்மா இருக்க சொல்ல நல்லாத்தான் இருந்தாங்க. அவங்க போனதுக்கப்பறம் தான் அவங்க நடை உடை தோரணையே மாறி போச்சு. ஐயாவும் ஹாஸ்பிடல் ல்ல. அதிகாரம் மொத்தம் அவங்க கைல போயிருச்சு. பெரிய இடம் சர். தட்டி கேக்க ஆள் இல்ல. வேலை ஆளுங்க நாங்க என்ன சர் பண்ண முடியும்"

"அவங்களுக்கும் ஸ்ரீபிரசாதுக்கும் ரிலேஷன் எப்டி? ஸ்மூத்தாருந்துச்சா?"

"அய்யா பொழச்சு வர வரைக்குமா ன்னு கேட்டீங்கன்னா? ஆமாங்க சர்"

"ஏன்? அதுக்கப்புறம் என்ன?

கேட்டது தான் தாமதம் அனைவர் கண்களும், சுற்றம் பார்க்க சுழன்றது.

புகழின் அருகே சென்று சற்று நெருங்கினவன், "எப்போவும் அக்கா தம்பி பிரச்சனை இருந்துட்டே இருந்துச்சு சர். அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை ன்னு தெரியாது. ஆனா சின்னம்மாவை வெச்சி தான் பேச்சு அடிபடும். சில நேரம் பெரியம்மா கத்தி விட்டுடுவாங்க"

"சின்னம்மா வா? அதி எவரு "

"ஜதியம்மா ங்க சர்"

"ஓஹ்"

"பெரியம்மாக்கும் அவங்களுக்கும் எப்போவும் ஆகாது சர். பார்க்கும் போதெல்லாம் குத்தல் பேச்சும், திட்டுமா தான் இருப்பாங்க. ஆனா சின்னம்மா தங்கம் சர். ஒரு வார்த்தை எதிர்த்து பேச மாட்டாங்க. அவங்க பேச்செல்லாம் நிக்கி புள்ளையோட மட்டும் தான்."

அய்யா ஹாஸ்பிடல் ல இருந்தப்ப கூட அவங்க தான் பாத்துகிட்டாங்க. அவ்வளவு ஏன் இந்த குடும்ப வாரிசு பொழச்சதே அவங்களால தான் சர். அமைதியான பொண்ணு சர்"

கேட்க பிடிக்காத விஷயம். ஆனாலும் கேட்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாது. விசாரணை என்று வந்து விட்டால் இதையெல்லாம் தாண்டி வந்து தான் ஆக வேண்டும். ஆனால் இங்கு கேட்டுகொண்டிருப்பவனுக்கும் அது சோதனையாக இருப்பது தான் விந்தை.

கடுகடுத்த மனதை அடக்கி தொண்டையை செருமி தன்னை நிலை நிறுத்தி கொண்டான்.

"உங்க சின்னம்மா க்கும் உங்க ஐயாக்கும் பழக்கம் எப்டி"

"அது எங்களுக்கு தெரியல சர். அய்யாக்கு அவங்க மேல எப்போவும் நல்ல அபிப்ராயம் தான். வினோதினி அம்மாங்கிட்ட கூட அவ்வளவு இணக்கம் காட்டி நாங்க பார்த்ததில்லை. ரெண்டு நாள் முன்ன கூட நிக்கி தம்பி பொறந்த நாள் அப்ப சின்னம்மாவை கல்யாணம் செய்துக்க போறதா சொன்னாரே"

மேலே குடைந்து கேட்கும் தைரியம் "இணக்கம்" என்ற வார்த்தையிலேயே அடிபட்டு போனது அவனுக்கு. உடல் இறுகியது கொந்தளித்த கோபத்தை, அழுத்த நடை போட்டு கட்டுக்குள் கொண்டு வந்தான்.

வெறுமனே அவர்களை பேச விட்டு, சொல்வதை மட்டும் குறுக்கிடாமல் புகழ் கேட்டுகொண்டிருக்க, அந்நேரம் கமல் வந்து
விட,

"பேரு டீடெயில்ஸ்லாம் வாங்கிட்டு, என்ன எப்டி நடந்துக்கணும் சொல்லி அனுப்பு கமல்" என்றவன் நகர்ந்து விட்டிருந்தான்.
 
Top