• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
எதிலிருந்தோ தப்பிக்கும் வேகம் அவனிடம். அது அவன் நினைத்தாலும் நடக்காதென்று தெரியும். இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ?

"நீங்க யாரும் வெளியூர் எங்கயும் போக கூடாது. அப்டியே போகணும்னாலும் எங்ககிட்ட சொல்லி நாங்க சொன்ன பிறகு தான் போகணும். புரிஞ்சுதா? உங்க டீடெயில்ஸ் எல்லாம் சொல்லுங்க" கேட்டு எழுதி கொண்டான் கமல்.

"மாடி பக்கம் யாரும் போக கூடாது. மத்தபடி உங்க வேலைய பார்க்கலாம். சந்தேகமா என்ன நடந்தாலும் யாரை பார்த்தாலும் எங்களுக்கு சொல்லணும்" கமல் அவர்களிடம் தகவல் வாங்கி கொண்டே சொல்லிகொண்டிருக்க, அடுத்து புகழ் போய் நின்றது ஸ்ரீ பிரசாத்தின் சகோதரி கஸ்தூரி முன்.

நினைத்தது போலவே மிக அதிகமாகவே பரபரப்பாக இருந்தது சூழ்நிலை. கஸ்தூரி, அவர் மகன் இன்னும் ஒருவன் என ஆளுக்கு ஒரு பக்கம் தொலை பேசியில் பிஸியாக இருந்தனர்.

இறந்தவன் லேசு பட்டவன் இல்லை. இறந்த விதமும் சர்ச்சைக்கு உரியது. டிவி சேனல்கள் உபயத்தில் அவர்களுக்கு யாரையும் அழைத்து சொல்லும் கட்டாயம் இல்லாமல் போக,
விவரம் அறிய தூக்கம் பகிர என தொடர் அழைப்புகள்.

ஒரே மாதிரியாக எல்லோருக்கும் அளிக்கப்பட்ட பதில்கள், உணர்வை வெளிப்படுத்த முடியாது அடுத்தடுத்து வரிசை கட்டியிருக்கும் வேலைகள், என இறுக்கமான முகத்துடன் தாயும் பிள்ளையும்.

அதே அறையில் வயது பெண் ஒருத்தி, அதாவது கஸ்தூரியின் மகள் பிருந்தா மலங்க மலங்க விழித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள். நல்ல அனுபவம் வாய்த்தவர்களே இம்மாறி சூழ்நிலையை கையாள்வது கடினம். சிறு பெண் மருண்டு போய் இருக்கிறாள் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

கடினமான தருணங்கள் தான். அதற்காகவெல்லாம் அவன் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாதே!

"பேசலாமா" என்று போய் நின்றான் புகழ் இருவர் முன்னும்.

"சர் இப்போவேவா" ஒருவன் வர,

"நுவ்வு நேமு "

"சங்கர் சர்.. ஸ்ரீ சர் பி ஏ"

"அப்புடு நாலு நாள் கழிச்சு என்கொயரி வெச்சுக்கலாமா சங்கர்"

ஒற்றை புருவத்தை தூக்கி கேள்வியாக நிறுத்தி நிதானமாக சொன்னதிலேயே தெரிந்தது, விசாரிக்காமல் நகர மாட்டான் என்பது.

"என்ன விஷயம் சங்கர்? என்ன சொல்றார் சர்?" இன்னொருவன் வந்தான்.

"கஸ்தூரி மேடத்தை விசாரிக்கணும் சொல்றாங்க சர்"

"வாட்" என்றவன் "ஓகே நான் பாத்துக்கறேன் நீங்க பாருங்க"

அவனும் "ஓகே சர்' என நகர்ந்து விட,

"நீங்கோ" என்றான் புகழ் வந்தவனை பார்த்து.

"ஹெலோ சர்" என கை நீட்டியவன் "ஐ யாம் ப்ரியேஷ், ஸ்ரீ மாமாவோட அக்கா பையன்"

மரியாதைக்கு கூட கை கொடுக்க தோன்றவில்லை புகழுக்கு. ஏக கடுப்பில் ஏற்கனவே இருந்தவன், வேண்டுமென்றே இரண்டு கைகளையும் காக்கி பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டு கொண்டான்.

"ஸீ! ப்ரியேஷ்! ஆற போட்டு ஆரம்பிக்கறது எனக்கு பழக்கம் கிடையாது! அதோட விக்டிமும் சாதாரண ஆள் இல்லை! இப்பவே ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்! பீப்பீள்ஸ் வர ஆரம்பிச்சுட்டா உங்களுக்கு வரவங்கள பேஸ் பண்ணவே சரியாருக்கும்! எனக்கு ஒண்ணுமில்ல! உங்களுக்கு தான் ப்ரோப்லம்! சோ கோ ஆப்ரேட் பண்ணா நல்லாருக்கும்" விறைப்பாகவே வந்தது அவனிடம் வார்த்தைகள்.

அவனுக்கு ஏனோ இவர்கள் மேல் அவ்வளவு நல்ல அபிப்ராயம் எழ வில்லை. பார்க்கும் போதே ஒரு சிலரிடம் ஏதோ பிழையாக உறுத்துமே, அப்படியொரு உணர்வை தான் உணர்ந்தான்.

வேலையாட்கள் சொன்னதை வைத்தோ, விட்டால் ஜதியை கொன்று போட்டுவிடும் வன்மத்தோடு கஸ்தூரி பார்த்த பார்வையோ, ஏதோ ஒன்று அவர்களிடம் தவறாய் தெரிந்தது. அவன் கணக்கு என்றுமே தப்பினதில்லை. அதனாலேயே சற்றும் இளக்கம் காட்ட விரும்பவில்லை காராறாக பேசினான்.

"அதில்ல சர் அம்மா அப்செட்! அது தான் கொஞ்சம் யோசனை" என்று இழுக்க,

"பார்க்க அப்படி ஒன்னும் தெரியலையே ப்ரியேஷ். நல்லா தெளிவா தானே இருக்காங்க" மகனை தாண்டி சென்ற அவன் பார்வை, அப்பட்டமாக கஸ்தூரியை ஆராய்ந்தது.

நடந்திருந்த சகோதரன் இறப்பு சாதாரணமில்லை அவனுக்கு தெரியும். ஆனால் அவர் முகத்தில் வருத்தத்தின் சாயல் இருந்ததே ஒழிய, இழப்பின் சாயல் இல்லை என்பதும் அவனுக்கு தெரிந்தது.

எத்தனை ஆளுமை கொண்டவர்களாக இருந்தாலும், ரத்த வெள்ளத்தில் குரூரமான ஒரு இறப்பை, அதிலும் உடன் பிறப்பை அந்நிலையில் கண்ணால் பார்த்து சுதாரிக்க நேரம் பிடிக்கும்.

முதலில் பார்த்தது கஸ்தூரி தான். காவல் துறையை அணுகினதும் அவர் தான். சட் சட்டென்று எடுத்திருந்த நடவடிக்கைகள் எதிர்பார்த்து இருந்ததை போல் பட்டது போலீஸ் காரன் புத்திக்கு.

ப்ரியேஷ் இந்த இடத்தில் இருந்திருந்தால், கஸ்தூரி அவன் சந்தேக வட்டத்திற்குள் வந்திருக்க மாட்டாரோ என்னவோ.

"ப்ரியேஷ், நீ விடு நான் பாத்துக்கறேன். நீ கம்பெனி க்கு போன போட்டு ஜி எம் மை சீக்கிரம் வர சொல்லு. ஆன் தி வே ல இருக்கேன் சொன்னான். எங்க இருக்கான் கேளு. அப்டியே செக்கியூரிடிக்கு அரேஞ் பண்ண சொல்லு " என்றவர்,

"சொல்லுங்க சர்! என்ன பேசணும்" என புகழிடம் வந்தார்.

"ஐ யாம் சாரி போர் யுவர் லாஸ் மிசஸ் கஸ்தூரி! சொல்லுங்கோ உங்க தம்பியை ஏன் கொன்னீங்க"

சற்று இளக்கத்தோடு ஆரம்பித்தவன், முடிவில் வார்த்தையில் கூட காட்டாமல் அதிரடியாகவே ஆரம்பித்தான் புகழ்.

வார்த்தைகள் வராமல் கஸ்தூரி அதிர்ந்து நிற்க, "ஹலோ சர் என்ன பேசுறீங்க நீங்க" காதில் விழுந்த வார்த்தைகளில் அரண்டு போய், வேகமாக வந்த ப்ரியேஷ் இருவருக்கும் நடுவில் வந்தான்.

"என்ன சர் நீங்க போலீஸ் னா என்ன வேணா பேசுவீங்களா? விசாரிக்கிறோம் பேர்ல என்ன வேணா கேப்பீங்களா?"

இருக்கும் பிரச்சனை போதாதா என்ற பதட்டம் அவனுக்கு.

"உங்க பேர் ப்ரியேஷ் னு சொன்னீங்கோ ! லேதாவா பொய் சொன்னீங்ளா?"

தலை சாய்த்து நக்கலாக கேட்டாலும் நேர்கொண்ட பார்வை அவனிடம்.

"ஹலோ என்ன சர் நாங்க யாரு தெரியுமா"

"ஏன் நீக்கு மறிச்சுபோயாவா? நீங்கோ யாரா வேணா இருந்துட்டு போங்க. என் கேள்விக்கு பதில் வரனும் இல்லே" புகழின் குரல் வேகமாக ஏற, கஸ்தூரிக்கு மகனை புகழ் பார்க்கும் விதம் சரியென படவில்லை.

"சர் ப்ளீஸ் கொஞ்சம் இருங்க! நாம பேசலாம்! என்றவர் மகனை அடக்கி வாசிக்க வைத்தார்.

"ப்ரியேஷ் நீ இதுல தலையிடாத! போ நான் சொல்றேன் ல, போ! பிருந்தா வை பாரு நான் பேசிக்கறேன்"

"ம்மா! என்னம்மா நீங்க"

!போ முதல்ல! நான் சொன்னத செய்! அவளை பாரு!

"ம்ம்ப்ச்! என்னவோ பண்ணுங்க"

"சர் வெளிய நின்னு பேசலாமா! பொண்ணு இருக்கா! அவளுக்கு இதெல்லாம் பழக்கமில்லாதது! ஏற்கனவே பயத்துல இருக்கா"

"ம்ம் ஓகே ரண்டி" என்றவன் கஸ்தூரியோடு வெளியேறின கையோடு,

"செப்பண்டி நீங்களே உங்க தம்பிய கொன்னீங்களா? இல்ல ஆள் வெச்சு கொன்னீங்களா?" அதே கேள்வியை வேறு மாதிரி ஆரம்பித்தான்.

ஆத்திரமாய் வந்தது. அடக்கி கொண்டார். தேவை இல்லாமல் போலீஸ் காரனை சீண்டுவது நல்லதில்லை எனப் பட்டது. முடிந்த வரை தன்னை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். யாரிடமும் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் நீக்கு போக்கு தெரிந்த மனிதி.

"சர் நீங்க உங்க கடமையை செய்றீங்க தான் எனக்கு புரியுது! ஆனா ஏன் என்னை கார்னர் செய்ரீங்கன்னு தான் புரியல! என் தம்பியை கொல்ல எனக்கென்ன அவசியம் சர்! இந்த லைஃப் எனக்கு அவன் கொடுத்தது! என் பிள்ளைங்க நல்லாருக்கணும்னு பார்த்து பாத்து செய்த அவன் நல்லாருக்கணும்னு நினைச்சவ சர்"

புகழின் பார்வையில் மெச்சுதல் வந்தது. பிழைக்க தெரிந்தவர் என புரிந்து கொண்டான். வார்த்தைகளை வாங்குவது அவ்வளவு எளிதல்ல புரிந்தது. வேறு மாதிரி தான் இவரை கையாள வேண்டும். புருவம் உயற்றி எதோ முடிவெடுத்தது போல தலையை ஆட்டி கொண்டான்.

"அப்ப இப்ப நினைக்கலே நீங்கோ இல்லையா"

"எ.. என்ன சர் புரியல"

தோள்களை குலுக்கினான் அலட்சியமாக "என்ன செய்றது கஸ்தூரி மேடம் உங்க நடவடிக்கை சந்தேகத்தை வரவழைக்குதே! யார் முதல்ல பாத்தாங்களோ அவங்க மேல தான் எங்க சந்தேகம் போவும். அப்டி பாத்தா நீங்க தான் என்னோட முதல் சஸ்பெக்ட்"

"கொலைகாரனே அவன் செஞ்ச கொலையை ஒதுக்க மாட்டான். எவிடென்ஸ் வெச்சு தான் மடக்கணும்"

"அப்போ என்னை கொலைகாரி சொல்றீங்களா சர்! அப்டி பாத்தா நானே என்னை எப்டி சர் காட்டி குடுப்பேன்"

"அந்த கவலை உங்ளுக்கு வேணாம் கஸ்தூரி மேடம்! அதே எங்கிட்ட விட்டுடுங்கோ! நான் பாத்துக்கறேன். உங்க வேலை கேட்ட கேள்விக்கு பதில்"

இவன் விடா கண்டன் என்று புரிந்து போனது அவருக்கு. பதட்டப்படுத்தி பதில் வாங்குகிறான். இவனிடம் கூடுதல் கவனம் தேவை உள்ளுணர்வு சொன்னது.

"என்ன சர் நீங்க! சென்ஸோட தான் பேசறீங்களா. நான் ஏன் சர் என் தம்பிய கொல்லனும்? நானே என் தம்பியை பறி கொடுத்திட்டு நிக்கறேன் என் மேல பழியை போட்டா என்ன சர் அர்த்தம்"

"சென்ஸோட பேசுறதால தான் சஸ்பெக்ட் லிஸ்ட்லருக்க உங்கள மரியாதையா கூப்ட்டு வெச்சு பேசிட்டு இருக்கேன். தேவை இல்லாம பேசாதீங்க கஸ்தூரி மேடம்"

"நீங்க தான் சர் தேவை இல்லாம பேசறீங்க! உங்க இஷ்டத்துக்கு கேள்வி கேட்டு பதிலும் எதிர்பாக்குறீங்க! என்ன சர் வேணும் உங்களுக்கு"

"பதில் வேணும்"

"நீங்க கேள்வி கேட்டா பரவாயில்லை! ஆனா நீங்க முடிவு செய்துட்டு பேசறீங்க சர்! ஐ கான்ட் ஹெல்ப் யூ"

"அப்புடு நீங்க செய்யல ஓகே. உங்களுக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா? எனி ஐடியா? ஐ மீன் அவரை பிடிக்காதவங்க! பிஸ்னஸ் எதிரி இப்டி" எனும் போது சரியாக ஜதி இருவரையும் கடக்க, கஸ்தூரிக்கு பொத்து கொண்டு வந்தது வன்மம்.

எப்படியாவது காவல் துறை கண்களுக்கு அவளை குற்றவாளியாக காண்பித்து விட வேண்டும் கங்கணமே கட்டிக்கொண்டார்.

"என்னை ஏன் சர் கேக்குறீங்க! இதோ போறாளே அவளை கேளுங்க" என்றதுமே அவள் நடை நிற்க, அவரை தொடர்ந்து புகழின் பார்வை அவள் மேல் நிலைத்தது.

"என் சந்தேகம் எல்லா இவ மேல தான் சர்! இவ தான் கொன்னிருப்பா! என் தம்பி கண்ணு முழிச்சதுல இருந்து இவ முந்தானைய பிடிச்சிகிட்டே தான் சுத்தினான்! இவள கேக்காம துரும்ப கூட கிள்ளி போட மாட்டான்! இன்னைக்கு உயிரையே விட்டுட்டான். இவ தான் காரணம். ஏன் கொன்னீங்க என்னை கேட்டீங்க ல இதோ இவள கேளுங்க சொல்லுவா"

புருவம் நெறித்து ஜதியை ஊடுறுவும் பார்வை பார்த்தான் புகழ். இப்போதேனும் உணர்வை வெளிப்படுத்தகிறாளா ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

திரும்பி கூட பார்க்கவில்லை. ஏன் வீண் பழி சுமந்துறீங்க என்று சண்டை போடவில்லை. பயம் கிஞ்சத்திற்கும் இல்லை. உடல் இறுக கேட்டு நின்றிருந்தவளை, பார்க்க பார்க்க
இவனுக்கு நரம்புகள் விடைத்து விறைப்பானது.

அந்த தோரணையே அவரை மேலும் சீண்டியிருக்க வேண்டும்!

"மொதல்ல பிள்ளையை வசியம் பண்ணா! அவனை வெச்சு பெத்தவனையும் முந்தில சொருகிகிட்டா"

"சிலை மாதிரி எப்டி நிக்கிறா பாருங்க சர்! என்ன வசியம் செய்தாளோ
எப்டி ஒன்னுமே தெரியாதது போல நிக்கிறா பாருங்க! அழுத்தக்காரி! அவளை பிடிங்க. அவ தான் எல்லாத்துக்கும் காரணம். எப்ப அவ என் வீட்டுக்கு வந்தாளோ அப்போவே எல்லா நாசமா போச்சு! என் தம்பி கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு போய் இப்ப மொத்தமா போய்ட்டான்"

சத்தம் போட்டு கத்தினவர் ஓ வென கதறி கொண்டு அப்படியே மடங்கி அமர்ந்து விட்டார். ப்ரியேஷ் வந்திருந்தான் அதற்குள்.
உடல் அழுகையில் குலுங்கியது.

"ம்மா ப்ளீஸ் அழுது உடம்ப கெடுத்துக்காதீங்க! பிருந்தா பார்த்தா இன்னும் பயப்படுவா!" கை தாங்கலாக பெற்றவளை எழுப்ப,
இத்தனை உணர்வுகளுக்கும் நடுவில் ஹப்பாடா எனும் ஆசுவாசம் எழுந்தது கஸ்தூரி மட்டும் அறிந்த உண்மை.

காதில் விழுந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டி. கட்டினவளை பற்றி யாரோ ஒருவர் சொல்ல கைகட்டு போட்டது போல் கேக்க கூடிய நிலையில் அவன். அவள் மேல் வாஞ்சை வரவில்லை. அவள் நிலை பாவம் பார்க்க தோன்றவில்லை.
அரவணைத்து ஆறுதல் சொல்ல மனம் வரவில்லை.

அப்போதும் அவனை பாராது நின்றது சீண்டி விட்டிருக்க, 'உனக்கு இது தேவையா? இதை அனுபவிக்க தான் என்னை விட்டு போனியா? " உலுக்கி போடும் வேகம் வந்தது முயன்று கட்டுக்குள் கொண்டு வர,

"சர் ப்ளீஸ் உங்க விசாரணையை அப்புறம் வெச்சிக்கோங்க! உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குறோம்! ப்ளீஸ் இப்ப விட்டுடுங்க" என்றவன் ஜதியை பார்த்து,

"நீ இங்க என்ன செய்ற ஜதி. போ நிக்கி அழ போறான்" என அதற்கு இவனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வர, அதன் பின் நடந்தது இவன் அறிந்த ரகசியம். தீபனிடம் கடை பரப்புவதற்கில்லை.

"இப்ப சொல்லுங்கோ ண்ணா நான் என்ன செய்யணும்" நின்ற வாக்கிலேயே திரும்பி தீபனை பார்த்தான்.

இளந்தீபனின் முகத்தில் யோசனை ரேகைகளின் படையெடுப்பு. புகழ் சொன்னதை வைத்து பார்த்தால் இம்மியளவு கூட ஜதிக்கு சாதகமாக இல்லை சூழ்நிலை. நன்றாக தெரிந்தது வேண்டுமென்றே கஸ்தூரி ஜதியை இழுத்து வைத்து பேசி சந்தேக வட்டத்திற்குள் கொண்டுவர முயன்றிருக்கிறார் என. இதை செய்தவர் இதற்கடுத்து என்னவெல்லாம் அவர் காய் நகர்த்த கூடும் ஓரளவிற்கு ஊகம் செய்ய முடிந்தது.

"உன்ன வெளிப்படுத்திக்காம இருக்க பாரு புகழே! அந்தம்மா க்கு சாதகமா போக கூடாது"

"அதுக்கு உங்ககிட்ட தான் இருக்கு ண்ணா! புரியலையா எனக்கு தெரியணும் அவளை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது எனக்கும் தெரியணும்." என்றான்.

ஏதோ முடிவு செய்து விட்டான் போல் பிடிவாதமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

"டோவ் மணி என்ன தெரியுமா! உன்ன அனுப்ப வந்தா என்னை குறுக்கு விசாரணை செய்ற! எல்லாம் நேரமடோவ்"

அப்போதும் அசைந்து கொடுத்தான் இல்லை. குழம்பி கொண்ட வரை போதும். இனிமேலும் முடியாது. அழுத்தமாய் நின்றான்.

"அநியாயத்துக்கு பிடிவாதம் வளத்து வெச்சிருக்க நீ"

"சேச்சி விஷயத்துல நீங்க இல்லையா! நீங்க தெரிஞ்சே எல்லாம் செய்தீங்க! நான் தெரிஞ்சுக்க செய்றேன்! ரெண்டுக்கும் வித்யாசமிருக்கு நீங்க பேசாதீங்க"

சேச்சி என்ற வார்த்தையே இளந்தீபனை மடக்க போதுமாயிருந்தது.

"எடோவ் அரசி எங்கடா இதுக்குள்ள ல வந்தா!" கேட்டாலும் அடர் மீசை ஓரம் புன்னகை எட்டி பார்க்க, கண்களால் குறும்பு சிரிப்பு சிரித்தான்.

"எந்தா டா கள்ளா! சப்போர்ட்டெல்லாம் ரொம்ப பலமாருக்கு" புருவம் உயர்த்தினான்.

"அதெல்லாம் அப்டித்தான்! நீங்க மட்டும் தான் செய்வீங்களா! எங்களுக்கும் ஆளிருக்கு"

"ஷேரி டா பறையாம் !
பட்சே இந்த கேஸ் லருந்து ஆ குட்டி வெளி வர வைக்கிறது உன் திறமை கேட்டோ. இப்பல்லா காலைல ஆபிஸ் வா. இப்ப அம்மா காத்திருக்கும் நீ வீட்டுக்கு போய்க்கோ! நாளைக்கு காணாம்" புகழிடம் சொன்னவனுக்கு தெரிய நியாயம் இல்லை, அம்மாதிரியான அக்கறைகள் அவனுக்கே திருப்பமாய் மாற போகிறதென்று.

"இதுக்கு பேர் என்ன தெரியுமா ண்ணா" மெல்லிய புன்னகை புகழிடம்.

"போடா, டேய்.. போடா! நங்களுக்கு எல்லாம் அறியாம்" புன்னகையை மறைக்கும் லாவகம் தீபனிடம்.

இவ்வளவு நேரம் பேசிய அழுத்தம் என்ன? இப்பொது இருவரும் பேசி கொள்ளும் விதமென்ன?
இளந்தீபன் வந்ததில் தூக்கம் எங்கோ பறந்து போயிருக்க, இருவரையும் பார்த்து நின்ற கமல், இதை தான் நினைத்து பார்த்து நின்றிருந்தான்.

இருவரும் புன்னகையோடு திரும்ப, இவ்வளவு நேரமும் தொந்தரவு செய்யாது இவர்களை பாவமாய் பார்த்து நின்ற கமல் பார்வைக்கு பட்டான். புகழ் அவனை கையசைத்து வர வைக்க,

"இனிமே இவன் உங்கள கிளம்ப சொன்னா கொஞ்சங்கூட தயவு தாட்சண்யம் பார்க்காம கிளம்பிடுங்க கமல்! பயலுக்கு குணம் கேட்டுச்சு கூட இருக்கவங்கள படுத்தி எடுத்திருவான்"

இளந்தீபன் சொன்ன விதத்தில் "சர்" பயந்து போய் பார்த்த கமலை மேலும் சீண்டாமல் "மத்தபடி நல்ல பய தான் கிளம்புங்க" என்று அனுப்பி வைத்தான்.

"இவங்கள பார்த்தா, கமஷினரும் ஆசிஸ்டன்ட் கமிஷனரும் பேசிக்கிற போலவா இருக்கு" குழப்பத்தோட கமல் புகழுடன் கிளம்பினான்.

பூக்கும்…
 
Last edited:
Top