அந்நேரம் ரேடியோ டிரான்சீவர் சரியாக உயிர் பெற, எடுத்து பேசியவனுக்கு என்ன சொல்லப்பட்டதோ?
உள்ளக் கிடப்பின் உணர்வுகள் பின்னுக்குப் போய், கடமை உணர்வு முன்னுக்கு வந்தது.
"கமல் கெட் இன்" எனக் கர்ஜித்தவன், வாகனத்தைச் சீற விட்டதில் பறந்தது ரோந்து வாகனம்.
இவ்வளவு வேகத்தை இது வரை அவனிடம் பார்க்கவில்லை கமல். சைரன் ஒலியோடு, காலி ரோட்டில் வாகனத்தின் வேகமும் சேர நடுக்கம் தான் அவனுக்கு.
நான்கு பக்கமும் சாலை பிரியும் அந்தப் பாலத்திற்க்கு, கீழ் இரண்டு நிமிடத்திற்குள் வந்து விட்டிருந்தனர்.
அடுத்து என்ன எனத் தெரியாமல் கமல் இருக்க, புகழ் போனில் பிஸியாக இருந்தான்.
ஒரு பக்கம் உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த சில பல அழைப்புகளுக்குத் தன் தயார்நிலையின் உறுதியை அளித்தான். மறுபக்கம் இவன் சில அழைப்புகளை இட்டு, அவனுக்காக வேலை செய்பவர்களின் பாதுகாப்பையும், தயார்நிலையையும் உறுதி படுத்திக் கொண்டான்.
பேசின விஷயங்களும், சூழ்நிலையும் அழுத்தமான அமைதியாக, அதே நேரம் பரபரப்புக்கும் உள்ளாகி இருந்தது.
கமலுக்கு ஏற்கனவே அவன் இதயம் துடிப்பது அவனுக்கே கேட்கும் படி ஒரு படபடப்பில் இருக்க, புகழுக்கு பொறுக்கவில்லை போல. அவன் துடிப்பை இன்னும் ஏற்றி விடவெனவே, என்ன நடந்தால் அவன் என்ன செய்ய வேண்டுமெனக் கட்டளைகள் தந்தவன்,
போதா குறைக்கு "எதுக்கும் இருக்கட்டும் வேசிக்கோ" அந்தக் கருப்பு நிற உலோகத்தை அவன் கையில் திணித்துத் திகிலேத்தி சென்று விட்டிருந்தான்.
சைலன்சர் பொறுத்திய துப்பாக்கி.
பயிற்சியின் போது பார்த்தது, இப்பொது அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. தேவை என்றால் மட்டுமே பயன் படுத்தக் கூடியது. இது வரை அந்தக் கட்டாயத்திற்குத் தள்ள படவில்லை கமல். கேட்கவா வேண்டும்?
இதயம் தொண்டைக்கு வெளியே வந்து குதித்து விடுமோ ரீதியில் வேகமாக அடிக்க ஆரம்பித்தது கமலுக்கு. வாயை இறுக்கமாக மூடி கொண்டான்.
"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போலயே டா கமல்" அரண்டு வந்தாலும் அதைப் பத்திரப்படுத்தியவன் தன் பங்கிற்குத் தயாராகினான்.
நிசப்தத்தைக் கிழித்துச் சைரன் ஒலிக்க விட்டுகொண்டிருந்த ஒலியும், அதுவே இருளை கிழித்து உமிழ்ந்து கொண்டிருந்த ஒளியும் மட்டுமே அங்கு.
இரைக்குக் காத்திருக்கும் மிருகத்தின் சாயல் கண்களில் மின்ன புகழ் காத்திருக்க, இரையும் மிருகத்தைக் கொல்லும் திட்டத்தோடு வர வேண்டிய இடம் வந்து அதற்கான காரியங்கள் செய்து கொண்டிருப்பதாகச் செய்தி வர ஆரம்பித்தது.
புகழுக்கும் அது தான் வேண்டும். அதற்காகத் தான் தன்னை இரையென வைத்து, இரண்டு நாட்கள் இந்த ரோந்து.
இன்ன இடத்தில், இந்த நேரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்ற தகவலை, சுலபமாக இரையிடம் செல்ல செய்திருந்தான்.
இரை ஒரு திட்டம் போட, அதை அடிக்க அதை வைத்தே புகழ் ஒரு திட்டம் போட்டிருந்தான்.
அவன் சென்னை வந்து இறங்கியதுமே எப்படி அவர்களுக்குத் தகவல் சென்றதோ, அப்படியே இவனுக்கும் தகவல் வந்திருந்தது. டிபார்ட்மென்ட் ஆட்கள் சில பேரை வைத்து நகர்த்தி இருந்தான்.
அதாவது காவல் உடையில் இரையின் மறைமுகக் கைக்கூலிகள். இது மாதிரியான ஆட்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. புகழை பொறுத்தவரை இப்படியான ஆட்களைச் சரி செய்வதை விட அவர்களை வைத்து தன் இலக்கை அடைவே விரும்புவான் அவர்களை இவன் வேவு பார்த்து அவர்களுக்குத் தகுந்தவாறு காய் நகர்த்துவது அவனுக்குக் கை வந்த கலை.
எல்லாம் முடிந்த பின் அவர்களை டிபார்ட்மென்ட் பார்த்துக்கொள்ளும். பார்க்க செய்வான். அதனாலேயே செல்லும் இடமெல்லாம் சிறப்பை சாம்பாரிக்கிறானோ இல்லையோ பகையைச் சம்பாரிப்பான்.
அப்டேட் கொடுக்கவென அவனால் இருத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்களில் ஒருவன், இவ்வளவு நேரம் புகழ் எதிர்பார்த்த அந்தச் செய்தியை சொல்லவும், அது வரை மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த புகழ் கண்கள் பளிச்சிட்டது. இதழ் வளைந்தது.
"பர்பெக்ட்டா உந்தி" புருவங்களை வளைத்து பாராட்டுப் பத்திரம் வாசித்தவன் "வச்சானு ரா! நா தொங்கனா கொடக்கா! நேனு வச்சானு " என்று பல்லை கடித்து முனங்கிக் கொண்டான். கூடவே அவர்களுக்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்தவன், மற்றவர்களுக்கும் தர சொல்லிவிட்டு..
"எப்ப, என்ன வேணாலும் நடக்கலாம்! சொன்னதெல்லாம் நாபகசக்தி இருக்கில்ல யா! என்னை மீறி தான் உன்னைத் தொட முடியும்! தைரியமா நான் செப்பினண்டி செய்! (சொன்னதைச் செய்) அல்லாகே" கமலுக்குத் தைரியமும் அளித்து
ஆயத்தப்படுத்தி இருந்தான் புகழ்.
அவன் தான் ஆரம்பித்து வைக்கப் போகிறவானாகையால், எப்படிச் செய்வேனோ விழித்துப் பின் சுணங்கி போயிருந்தவனின் முகமும், அந்த வார்த்தைகளில் தெம்பு வர பெற்றிருந்தது.
"எமனை போன் போட்டு வர சொல்றானுங்க பாருங்க சர்" கமல் புன்னகையுடன் சொல்ல,
"தட்ஸ் மை பாய்" புகழ் தோளை தட்டி கொடுத்து ஜீப்பை எடுக்கச் சொல்ல, அதன் பிறகு நடந்தது அத்தனையும் சுவாரஸ்யங்கள்.
சிறிதும் சந்தேகம் வராத அளவிற்குச் சிஷ்யன் அங்கு அடித்தளம் போட்டு தூள் கிளப்பி இருக்க, போதாக்குறைக்குப் புகழ் வந்து வீடு கட்டி பாலையும் காய்ச்சி இருக்க, எல்லாம் சுபம்.
சரியாக நடக்குமா? நடக்காதா? எப்போது நடக்கும்? எவ்வாறு நடக்கும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாக, அந்த நிகழ்வு நிமிடத்தில் நடந்தே விட்டிருந்தது.
விளைவு
பெட்டி கேசில் இருந்து வழிபறி, மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் கேஸ் வரை ஒன்று விடாமல் அத்தனை புகார்கள் இருந்தும், இது நாள் வரை கைக்குச் சிக்காமல் ஆட்டம் காட்டி கொண்டிருந்த இரண்டு பெரிய தலைகளான சரவணன், முருகன் எனும் ரவுடிகள் இருவரும், முட்டிக்கால் போட வைத்து, பின் பக்கமாகக் கைகளுக்கு விலங்கிடப்பட்டு, இருத்தி வைக்கப்பட்டிருந்தனர் புகழ் முன்.
நடந்தது இது தான்.
விட்ட குறை, தொட்ட குறை போலச் சென்னையில் எதுவுமே வேண்டாமென்று புகழ் சென்ற பிறகும், தொடர்ந்திருந்த பிரச்சனை இது.
இரண்டு வருடம் முன் குழந்தை கடத்தல் ஒன்றில் கொல்லப்பட்டவனின் தம்பிகள் தான் இருவரும். அண்ணன் விட்டு சென்றதை எடுத்து செவ்வனே இவர்கள் தொழில் செய்து கொண்டிருந்தாலும், புகழ் இருவர் கண்களையும் உறுத்தி கொண்டுதான் இருந்தான்.
"நம்ம கண்ணு முன்னாலேயே அண்ணனை துள்ள துடிக்கக் கொன்னவனைப் போட்டே ஆவணும் டா"
ஆவேசம் பொங்கும் போதெல்லாம் புகழ் வேலை செய்யும் ஊர்களில் ஆள் வைத்து கொல்ல முயன்ற அத்தனையும் தோல்வி ஆனது, அவர்களை இன்னும் உசுப்பேற்றி இருந்தது.
"ச்சை! என்ன செய்தும் ஆள் தப்பிச்சிடுறானே " ஆதங்கமாகவும் " நம்ம கையால அவனுக்கு உயிர் போவணும்னு இருக்கு போல" சமாதானமாகவும் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் புகழ் மாற்றலாகி மீண்டும் சென்னை வருவது அவர்களுக்குத் தெரிய வந்தது.
"உயிர விடணும்னே வரான்டா" கொக்கரித்துக் கொண்டனர் இருவரும்.
"எங்கெல்லா போறான் ன்னு விசாரி. நேரம் பார்த்துத் தூக்கிடலாம்" சொன்னவர்கள் அவர்களாகவே விசாரித்திருந்தால் கூடத் தாமதமாகச் சென்றிருக்கும். அவன் துறை ஆட்களை வைத்தே விசாரிக்க நிமிடத்தில் புகழிடம் வந்திருந்தது தகவல்.
கேட்கவும் வேண்டுமா என்ன? அவர்களை உசுப்பி விடவெனவே அவர்களின் அண்ணனை சுட்டு கொன்ற ஏரியா பக்கம் சுற்றிக் கொண்டிருந்தான் புகழ்.
"எவ்ளோ தைரியம் டா இவனுக்கு! நம்ம அண்ணனை போட்ட ஏரியாவுல நம்ம கண்ணு முன்னாடி சுத்தினு இருக்கான்! பதவி வாங்குறதுக்குள்ள எங்க அண்ணன் செத்துச்சோ அங்கேயே இவனுக்குப் பரலோக பதவி வாங்கிக் குடுக்கணும் டா! அப்ப தான் அண்ணன் மனசு குளிரும்" ஆவேசம் கொண்டு ஆள் அனுப்ப அவன் அவர்கள் கைகளில் சிக்கினால் தானே?
இன்ன இடத்தில் இருக்கிறான் தகவல் அறிந்து, ஆட்களை அழைத்துப் போவதற்குள் மாயமாகி இருப்பான். ஒரு முறை அல்ல, இரண்டு மூன்று முறை கடுக்கா கொடுத்திருந்தான்.
கோபம் தலைக்கேறியது. "ச்சே என்னடா இவன்! எஸ்கேப் ஆகிகினே கீறான்! இவனை நாம தேடி போவரதுக்குப் பதில் நம்மள தேடி வர வெப்போம் டா! யோசிக்காமல் ஆத்திரத்தில் அறிவிழந்து முடிவெடுத்தனர் இருவரும்.
பிறகென்ன புகழ் நினைத்தது போலவே எல்லாம் நடக்க ஆரம்பித்தது.
அவனுக்கு இன்ன இடம், இன்ன நேரத்தில் என அவர்கள் நாள் குறிக்க, தோதாய் அன்றைய நாளையே அவனும் குறித்திருந்தான்.
நள்ளிரவில் நட்ட நடு ரோட்டில் வைத்து கேக் வெட்டி, பியர் குடித்துக் கூத்தடிப்பது இன்றைய தலை முறைகளின் கொண்டாட்ட விதங்களில் சமீபத்திய ஒன்று
முக்கியமாக ஐடி யில் பணி புரிபவர்கள் இதை விரும்ப ஆரம்பித்திருந்தனர். பிளாட்பாமில் ஆரம்பித்தது இப்பொது நடு ரோட்டிற்கு வந்திருந்தது. திரில் விரும்பிகள் மறக்க முடியா அனுபவம் விரும்புபவர்கள் இதைச் செய்ய அது அப்படியே பரவ ஆரம்பித்திருந்தது.
இரவும் பகலும் அவர்களுக்கு ஒன்றாகவே போய்விட, வெட்ட வெளி, அமைதியான நேரமென ரசனையாக ஆரம்பிப்பது சில நேரங்களில் பப்ளிக் நியுசென்ஸிலும் கொண்டு போய் விடும். எதிர்பாராமல் வாகனங்கள் வந்து விபத்தாகும். அவர்களுக்குள்ளே குடி போதையில் பிரச்சனை ஆகி அடித்துக் கொள்ளும் நிலைக்கும் போகும்.
வாரத்திற்கு இரண்டு மூன்று கேஸ்கள் வர, அதனாலேயே தொழில் நுட்ப பூங்காக்கள் பல்கி இருக்கும் இடங்களில் ரோந்து அடிக்கடி நடக்கும்.
"படிச்ச நீங்களே திரில் ன்ற பேர்ல பப்ளிக் ல பிரச்சனை செய்தா எப்படி " சில நேரங்களில் காவல் துறையினரால் பிடிபட்டு கண்டித்து அனுப்பபடுவதும்,
அதிலும் அடங்காத சில பேர் போதை தலைக்கு ஏறி அவர்களிடமே வார்த்தைகளை விட்டு ஸ்டேஷன் போவதும் நடைபெறும். சமீபமாக இது மாதிரி நிறைய நடக்க ஆரம்பித்திருந்தது.
இதை மனதில் வைத்து புகழை வரவழைத்து வெட்டி வீசவெனப் போட்ட திட்டத்தின் படி ஐடி மக்கள் போல வந்திருந்தனர், அந்த ஆழ்ந்த இரவை ஊடுருவிக்கொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து இரண்டு சக்கர வாகனங்களில்
சரவணனும், முருகனும் அவனது ஆட்களும்.
திட்டம் போட்டால் மட்டும் போதுமா? செயல்படுத்த வேண்டாமா? நிஜமான ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் போலவே செய்ய வேண்டி இருந்தது. செய்தும் இருந்தனர், குறிப்பிட்ட இடத்தில்.
பின் இங்கு ஒரு பிரச்சனை எனவும், ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர் எனவும், காவலரை அனுப்பும் படியும் தகவல் தெரிவிக்கப் பட்டது, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு.
"என்னடா சொன்னானுங்க. எல்லாம் சரியாதான போகுது " தகவல் சொன்னவனிடம் சரவணன் கேட்க,
"ஆமாண்ணே! இந்த ஏரியா பேட்ரோல் வண்டிய அனுப்பி வெக்கிறதா சொன்னானுங்க" என்றான் அடியாட்களில் ஒருவன்.
"அண்ணே எனக்கொரு சந்தேகம்" கேட்ட மற்றொருவன் தலையைச் சொறிந்தான்.
என்னவென்று கேட்கவில்லை சரவணன். 'மவனே அபசகுனமா எதனா நீ கேக்கணும் உன்னைக் குழி தொண்டி புதைச்சிடுவேன்' எனச் சொல்லியிருந்தது உடல் மொழி.
"இல்லண்ணே ஒண்ணுமில்ல" அப்படியே ஒதுங்கி கொண்டவனை முருகன் முறைத்த முறைப்பில் சகலமும் ஆடியது. அமைதியாக அவனின் இடத்திற்குப் போய் நின்று கொண்டான்.
முருகனுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கவே போனில் யாரையோ அழைத்தான். அவனுக்கு வேண்டிய தகவல் சொல்லப்பட,
"ண்ணா அவன் தான் பேட்ரோல் ல இருக்கானாம். நீ ஒன்னுயு கவல படாத இன்னிக்கு அவன தூக்குறோம் " சொல்லும் போதே தூரத்தில் கேட்டது போலீஸ் ஜீப் வருவதற்கான சைரன் சத்தம்.
"என்னடா நீ சொல்லி முடிக்கல இம்மா சீக்கிரமா வந்துட்டானுங்க" சரவணன் சந்தேகமாகக் கேட்கவும்..
"அண்ணே நம்ம கைல சீக்கிரம் சாவணும்னே வரான். நல்லது தானே போட்டுட்டு போய்கிட்டே இருக்கலாம் " சிரித்தபடி முருகன் பதில் தந்தான்.
"அப்பிடிங்குற அப்ப சர்தான் வரட்டும் " பதிலுக்குச் சரவணனும் புன்னகைக்க, பைக்கில் சாய்ந்து அமர்ந்து கொண்டனர்.
அவர்கள் அருகிலும் இல்லாமல் தூரமாகவும் இல்லாமல் ஜீப்பை நிறுத்தி முதலில் இறங்கியது கமல் தான். இடம் இருட்டாக இருந்தது. உள்ளே இருப்பவர் யாரென்று தெரியா வண்ணம்.
கதவை அடித்துச் சாத்தியவன் பெல்டின் இடது பக்கத்தைத் தடவி பார்த்துக் கொண்டான். கண்களாலே புகழ் தைரியம் தர, கண்களை மூடி திறந்து ஏற்றுக் கொண்டவன் தோரணையாகவே போய் நின்றான், என்ன பிரச்சனை என்று கேட்டு.
"இன்னாடா தலையை எதிர்பார்த்தா வாலு வருது" சரவணன் தம்பியை பார்த்தான் கேள்வியாக.
"இரு ண்ணா பாப்போம்" என்றவன் "ஏய் இன்னான்னு கேளு டா" என அடியாள் ஒருவனிடம் சொல்ல,
"இன்னா சார் தனியா வந்திருக்கீங்கோ வேற யாரும் வரல" தூரத்தில் நிற்கும் ஜீப்பை பார்த்தவாறே அவனும் கேட்க, கமலும் திரும்பி பார்த்தான்.
"ஏ விருந்து எதுனா வெக்க போறியா " நக்கலாகக் கேட்ட கமலுக்கு உள்ளுக்குள் உதறல் தான் வெளிக்காட்டவில்லை.
சரவணனும் முருகனும் ஓரமாக நின்றிருப்பது தெரிந்தது.
"தல பொறுக்கி பசங்களுக்கு விருந்து வெக்க தான் வருவாப்ல. உங்களை மாறி ஆளுங்களுக்குத் தண்ணி காட்ட நான் போதும்"
"ஆமா இங்க என்னவோ பிரச்சனை ன்னு சொன்னாங்க! பார்த்தா அப்டி ஒன்னும் தெரியலையே! இன்னங்கடா போதைல போலீஸ் க்கு போன போட்டு கலாய்க்கிறீங்களா! ஒழுங்கா எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஓடீருங்க! இல்ல உள்ள வெச்சி லாடம் கட்டிருவேன்" கமல் மிரட்ட,
"அய்யோ சர்! கலாய்க்க லா இல்ல. நிஜமாலுமே அடிச்சிகினானுங்க. பாருங்க பொருல்லாம் செதறி இருக்கு. உங்களுக்குப் போன போட்டதும் தா அடங்குனானுங்க. அதா வர சொல்லிட்டோமே ஆளில்லைனா பொசுக்குன்னு போய்டுமேன்னு உங்களுக்காகக் காத்துட்டு இருந்தோம். பாரின் சரக்கு இருக்குப் போடுறீங்களா சர். அவரையும் வர சொல்லுங்கோ" ஒருவன் சொல்ல,
"ஆமா சர் பர்த்ரே பையன் ஆசை பட்டுட்டான். ஒரு கட்டிங் ஊத்தறேன் வர சொல்லுங்கோ. சும்மா ஜிவ்வுன்னு ஏறிக்கும்" மற்றொருவனும் சொல்ல முறைத்தான் கமல்.
"டேய் என்னடா திமிரா! முட்டிய பேத்துருவேன் கிளம்புங்க டா முதல்ல" சத்தம் போட்டான்.
"டேய் சாருக்கு ஒரு கட்டிங் போதாது போல டா! புல் பாட்டில் வேணுமாம் குடுத்துடு. பாரு எவ்ளோ கோவம் வருது. எத்தனை பேர பாத்திருப்போம் மொதல்ல வேணாம் சொல்லிட்டு பின்னாடியே நாக்கை தொங்க போட்டுட்டு வரத. கூச்சபடாத சர் சும்மா வா"
"அடிங்க ஏய் யார்கிட்ட என்னடா பேசுற. பல்ல பெத்துருவேன்" ஒரு அடி முன்னுக்குப் போய் விரல் நீட்டி கமல் கோபமாகப் பேச,
"ஏ உன் கிட்ட தான் பேசுறோம். நீ யாருன்னு உனக்குத் தெரியாதா? எங்ககிட்ட கேக்குற" மேலும் என்ன சொல்லி இருப்பானோ இழுத்துக் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்திருந்தான் கமல். வாங்கினவனுக்குக் கண்களில் பொறிப் பறந்தது.
"அப்பாயி அசத்துறான்" கமலின் பர்பாமென்சை சிலாகித்துக் கொண்டிருந்தாலும், அவர்களைச் சுற்று போட வைத்திருந்த அவனது ஆட்கள் மேலும் கவனம் வைத்திருந்தான். சொன்னது போலவே அட்சர சுத்தமாக நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட எட்டு பேர் இருட்டோடு கலந்து தயாராக இருந்தனர். எந்நேரமும் நெருங்குவதற்குத் தோதாக.
இது எதிலும் அங்கிருப்பவர்களுக்குக் கவனம் செல்ல கூடாதென்று தான் கமலை முதலில் இறக்கியது.
"இன்னா சர் பேசும் போதே கை வெக்கிறீங்கோ" அது வரை அமைதியாக இருந்த முருகன் முன் வர,
"பின்ன குடிச்சிட்டு உளறுற நாய் இவனை வெச்சு கொஞ்சுவேனா! நானா இருக்கவும் இத்தோட போச்சு. சார்க்கு மட்டும் விஷயம் போச்சு நேரா லாக் அப் தான் எப்டி வசதி"
"அய்யயோ பயமாருக்கே! எங்க அந்த மோர, சாரி சாரக் கொஞ்சம் கூப்டுங்க" ஜீப்பை கொலை வெறியோடு பார்த்தபடி சரவணன் வந்தான், திமிராக. புகழ் அலர்ட் ஆனான்.
"யோவ் கமலு விரட்டி விட்டுட்டு வராம அக்கட ஏமி யா கொஞ்சிட்டு இருக்கே" புகழ் ஜீப்பில் இருந்தப்படியே குரல் கொடுக்க,
'என்ன கொஞ்சிட்டு இருக்கேனா என் ஈரகுல நடுங்கறது எனக்கு மட்டுமில்ல தெரியும்'
"சர்! மெரட்டுறானுங்க சர்! நீங்க வராமல் அடங்க மாட்டானுங்க போல" கமலும் இங்கிருந்தே குரல் கொடுத்தான்.
ஜீப் கதவு திறந்து அறைந்து மூடும் சத்தம் கேட்டது. பூமியில் அழுத்தமாகப் பூட்ஸ் கால்களை அகல ஊன்றி, பேண்ட் பாக்கெட்டில் கட்டை விரலை மட்டும் உள் நுழைத்தபடி ஜீப்பில் சாய்ந்து படு இயல்பாகத் தோரணையோடு நின்றிருந்தான் புகழ்.
சரவணனுக்கும் முருகனுக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அவன் தான்! அவனே தான் புகழ் தூரத்தில் இருந்தாலும் கண்டு கொண்டனர்.
'முருகா ஒரே வெட்டு ஆள் க்ளோஸ் ஆகணும்' கண்ணைக் காண்பிக்க முருகன் முதுகை தொட்டு பார்த்துக் கொண்டான்.
இன்றைக்கு யார் ரத்தத்தை ருசி பார்க்க போகிறேனோவென, எதிர்பார்ப்புடன் சட்டைக்குள் பள பளவெனத் தீட்ட பட்ட வீச்சருவாள் சமார்த்தாக வீற்றிருந்தது.
புகழின் கண்கள் கூராகிப் பின் இயல்பானது.
"ஏமி மெறட்ரானுங்களா எக்கடா அந்த மூஞ்சிங்களைப் பாப்போம்" இவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க, அதை ஒட்டியே சுற்றி நின்றிருந்தவர்களும், மேற்கொண்டு ஒரு சத்தமும் சலசலப்பும் கேட்காது நெருங்கி வந்தனர்.