அத்தியாயம் 10 (ரசம் - உவகை)
தேவி பார்வதியிடம் சக்தி மிகு வேலை பெற்ற ஆறுமுகன் வீரபாகு முதலிய நவ வீரர்களை படைதலைவர்களாய் கொண்டு சூரபத்மனுடன் ஆறு நாட்கள் போர் புரிந்து இறுதியில் அவனை சூரஸம்ஹாரம் செய்தார்.
வேல் தாக்கி இரண்டு கூறாய் மாறிய சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன்னுடன் வைத்துகொண்ட முருகபெருமானின் வீரத்தில் மகிழ்ந்து அவருக்கு தன் மகளான தேவசேனாவை திருமணம் செய்ய ஆசைகொண்டார் இந்திரதேவர்.
சிவலோகமான கைலாசத்தில் மும்மூர்த்திகள் தங்களின் துணையுடன் இருக்க, தேவர்கள் அனைவரும் அவர்களிடம் ஆசி வாங்க வந்திருந்தனர். அவ்வேளையில் தான் இந்திரதேவர் தன் ஆசையை வெளியிட்டார்.
மஞ்சள் நிற ஆடையுடுத்தி கம்பீரமாய் தன் தமையன் ஆனைமுகத்தான் அருகே அமர்ந்திருந்த ஆறுமுகனின் மேல் ஒருமுறை பார்வை பதித்த இந்திரதேவர், "மகாதேவா! நான் என் மகள் தேவசேனா என்னும் தெய்வானையை தங்களின் புத்திரர் தேவர்களின் காவலர் முருகபெருமானுக்கு மண முடிக்க ஆசை கொண்டுள்ளேன்" என தன் எண்ணத்தை வெளிபடுத்தினார்.
அவரின் சொல் கேட்ட ஆறுமுகனுக்கு அன்று தான் கண்ட மங்கையின் வீர தோற்றமும், ருத்ர வடிவமும், அத்துடன் இறுதியில் கண்ட நாணமும் கண்முன் வர அவரின் கன்னங்கள் குழைந்தது.
அவரின் பாவனையில் வேலனின் விருப்பம் உணர்ந்த பார்வதி தேவி, "இந்திரதேவரே! தங்கள் ஆசை சரி.. தங்கள் மகள் மற்றும் என் மைந்தன் இதற்கு சம்மதிக்க வேண்டுமே. முருகன் சிறு பிள்ளை" என வேண்டுமென்றே மகனை வம்பிழுத்தார்.
முருகர் உடனே தன் அருகே இருந்த தமையனிடம், "அண்ணா! இது என்ன அன்னை இப்படி கூறுகிறார்கள், தாங்கள் ஏதேனும் செய்யுங்கள் எமக்கு தெய்வானையுடன் மணமாக வேண்டும்" என மென்குரலில் கெஞ்சினார்.
முதல் கடவுள் தம்பியின் ஆசையை தடை சொல்வாரா அதனால், "அன்னையே! தங்களுக்கு நேரம் போகவில்லை என்றால் கூறுங்கள் நாம் சென்று மோதகம் அல்லது லட்டு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும்" என, பார்வதி பொய்கோபத்தோடு முறைத்தார்.
அதில் அனைவரும் சிரிக்க, "சரிசரி! ஆகட்டும் இந்திரதேவரின் ஆசைபடி ஆறுமுகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடக்கட்டும்" என தேவி பார்வதி சொல்ல மகாதேவர், "இன்றே திருமண சடங்குகளை ஆரம்பியுங்கள், இவர்களின் திருமணம் அனைத்து சம்பிராதாயங்களும் செய்து முறைப்படி நடைபெறவேண்டும்" என உத்தரவிட்டார்.
மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் திருமண வேலை செய்ய செல்ல மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் ஒருவரையொருவர் கண்டு புன்னகைத்து நின்றனர்.
"ஒரு வழியாய் க்ரியாவின் பிறப்பிற்கான அர்த்தம் அவளுக்கு கிடைத்துவிட்டது அல்லவா லட்சுமி. அவள் இலக்கை அவள் சுபமாய் சென்று சேர்ந்துவிட்டாள்"
"ஆம் நாராயணா!" என்ற மகாலட்சுமியின் முகம் புன்னகைத்தாலும் அதில் முழு சந்தோஷம் இல்லை அதனால்,
"என்னாயிற்று லட்சுமி இன்னும் என்ன கவலை உனக்கு?" என வினவினார் நாராயணர்.
"நாராயணரே! நீங்கள் மறந்து விட்டீர்களா? க்ரியா மட்டுமே நம் மகள் இல்லை இச்சாவும் நம் மகள் தான். இப்பொழுது க்ரியா ஆறுமுகனை திருமணம் செய்வதால் அவள் பிறப்பின் நோக்கம் வெற்றிபெறும் அப்படி என்றால் இச்சாவின் பிறப்பு என்னவாகும்? அவள் மனித பிறப்பில் ஆறுமுகனை சேருவதற்காக தானே காத்திருக்கிறாள்.
"ஆம் தேவி! வேடர் குலத்தில் வளரும் இச்சா ஆறுமுகனை நினைத்து அவனின் வருகைக்காக தான் காத்திருக்கிறாள். க்ரியாவை போலவே நிச்சயம் இச்சாவும் ஆறுமுகனுடன் இணைந்து அவளின் பிறப்பிற்கான அர்த்தத்தை அறிவாள்"
"ஆனால் அது எவ்வாறு சாத்தியம் நாராயணரே! ஆறுமுகனுக்கும் தேவசேனாவிற்கும் திருமணம் முடிந்தபின் ஆறுமுகன் தேவசேனாவிற்கு உரியவன் ஆகிவிடுவான். அதன்பின் அவனை நேசிப்பது பாவம் அல்லவா? இச்சாவின் இச்சைகள் தவறாகிவிடுமே"
ஒரு மகள் வாழ்வு செழிப்புற தற்பொழுது மற்றொரு மகளை பற்றி கவலை கொண்டார் அன்னை லட்சுமி.
"இதற்கான விடை ஆறுமுகன் தான் அளிக்கவேண்டும் தேவி. அவனின் பதிலுக்காய் நாம் காத்திருப்போம்" என்றார் நாராயணர்.
பின் மகாதேவரின் வாக்கிற்கேற்ப சாஸ்திர சம்பிரதாயங்கள் படி மூம்மூர்த்திகள், மூன்று தேவிகள் தலைமையில் தேவர்கள், ரிஷிகள் ஆசிர்வாதத்துடன் கோலாகலமாய் நடைபெற்றது ஆறுமுகன் தெய்வானையின் திருமணம்.
திருமண விழாவில் பிரம்மதேவர் விவாக காரியங்களை விளக்கி சொல்ல மற்றவர்கள் அதை செய்தனர். சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, இந்திரர் தந்தையாய் தெய்வானையை தாரை வார்த்து கொடுக்க முருகப்பெருமான் தெய்வானையை தன் மனைவியாய் ஏற்றுக் கொண்டார்.
அத்தருணத்தை கண்டு பார்வதி தேவியும், பரமேஸ்வரரும் பரமானாந்தம் கொள்ள ஆதிலட்சுமியும், மகாவிஷ்ணுவும் தங்களின் மகள் அவளின் வாழ்வின் இலக்கை சேர்ந்ததில் பேரானந்தம் கொண்டனர்.
கண்டநொடி முதல் தன் நெஞ்சில் காதலை தோன்ற செய்தவரையே வாழ்நாள் துணையாய் இன்று பெரியவர்கள் முன் திருமணம் செய்த உவகையில் தேவலோக கன்னிகள் அனைவரையும் மிஞ்சும் அழகில் நளினமாய் நின்றிருந்த தெய்வானை இந்த ஒரு நொடிக்காக தான் அவள் ஏழு ஜென்மங்களை தாங்கி நிற்கிறாள் என்பதை இந்நொடி வரை அறியவில்லை.
உலகிற்கு ஒரு விஷயத்தை விளக்க தானே அவள் தோன்றியது அதனால் அவ்விஷயம் நடக்கும் வேளையில் தெய்வானையும் தான் கடந்து வந்த பாதைகளை அறிவாள். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை.
அந்நாள் நெருங்கியதாலோ என்னவோ திருமணத்திற்கு பின்னும் ஆறுமுகனின் மனம் எதையோ தேடியபடி இருந்தது. தெய்வானையுடன் ஆனந்தமாய் வாழ்வை தொடர்ந்த போதும் அவரின் மனம் எதையோ இழந்தது போலவே தவித்ததில் அவர் என்ன செய்வது என புரியாமல் தடுமாறி கொண்டிருந்தார்.
அவ்வேளையில் தான் ஒருநாள் நாரத முனிவர் முருகபெருமானை சந்திக்க வந்தார்.
"ஆறுமுகபெருமானுக்கு வணக்கம்! சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் தங்கள் புகழ் எட்டு திசைகளிலும் பரவிவிட்டது சுவாமி! எமக்கு மிக்க மகிழ்ச்சி! நாராயணா நாராயணா" என்று ஆர்பாட்டமாய் ஆரம்பித்த நாரதரின் கூற்றில் முருகர் புன்னகைக்க,
"இம்முறை எம் தம்பியின் புறம் தங்களின் காற்று வீசுகிறதே என்ன விஷயம் நாரதரே?" என வினவியபடி வந்தார் ஆனைமுகத்தான்.
அவரை வணங்கிய நாரதர், "என்ன விநாயகா! நான் முருகரின் புகழ் திக்கெங்கும் பரவிய ஆனந்தத்தில் தான் வந்தேன். நீ அறிவாயோ? பூமியில் வள்ளிகாடு என்னும் பகுதிக்கு தான் நான் இம்முறை சென்றிருந்தேன்.
அடடா.. எத்தனை அழகு அந்த வனம். என் மனம் அங்கேயே இருக்க தான் விரும்பியது ஆயினும் அங்கு நான் கண்ட ஒரு காட்சி தான் என்னை இவ்விடம் ஆறுமுகனை தேடி ஓடி வர செய்தது" என அவர் சொன்ன விதத்தில் ஆர்வம் ஏற்பட,
"என்ன கூறுகிறார்கள் நாரதரே! தாங்கள் அப்படி என்ன கண்டீர்கள்?" என கேட்டார் குமரன்.
"என்ன கண்டேனா? அந்த வள்ளிகாட்டில் தங்கள் மேல் நேசம் கொண்டு தங்களுக்காகவே காத்திருக்கும் வள்ளிகாட்டின் தலைவர் நம்பிராஜனின் மகள் வள்ளியை தான் கண்டேன்" என்றார்.
"என்ன எனக்காக காத்திருக்கிறாரா? யார் அந்த வள்ளி நாரதரே?" தனக்கே தெரியாமல் தன் மேல் நேசமா என்னும் வியப்புடன் கேட்டார் ஆறுமுகன்.
"முனிவரின் பார்வையால் அரபி என்னும் மானின் வயிற்றில் பிறந்தவர் தான் வள்ளி, ஆறுமுகா. வள்ளி காட்டின் தலைவர் தனக்கு பெண் குழந்தை இல்லை என்பதால் அவர்களை தன் பிள்ளையாய் வளர்த்து வருகிறார். அந்த தேவியின் அழகை தாங்கள் காண வேண்டுமே.. வான் மேகம் கொஞ்சும் மேகபொதிகள் போல் அத்தனை மென்மையான பெண்ணை இதுவரை நான் கண்டதே இல்லை" என வள்ளியின் அழகை சிலாகித்தார்.
"மேகபொதிகள் மென்மையானது என எவர் சொன்னது நாரதரே! மழைதுளிகளை தன்னுள் தாங்கி கொண்டிருக்கும் கார்மேகங்கள் மிகவும் கனமானது" என விநாயகர் அறிவு பூர்வமாய் குறுக்கிட்டார்.
நாரதர் அதில், "தாங்கள் ஏன் மண முடிக்கவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன் விநாயகா" என சிரிப்புடன் கூற விநாயகர் அவர் தன்னை கேலி செய்வதை உணர்ந்து விளையாட்டாய் முறைத்தார்.
இவர்கள் இருவரின் விளையாட்டில் முருகபெருமான் கவனம் கொள்ளவில்லை, அவர்தான் வள்ளியை பற்றி சிலாகித்து சொன்ன நாரதரின் பேச்சில் தன் தேடலுக்கான விடை அந்த வள்ளி என உணர்ந்து கொண்டிருந்தாரே.
திடீரென தன் மனம் வேகமாய் அடிப்பதை கண்டு திகைத்த ஆறுமுகன் அது வள்ளி என்னும் மந்திரத்தால் என புரிந்து புன்னகை பூத்தார். உடனே அங்கிருந்து மறைந்தவர் தன் மனதின் தேடலுக்கான விடையை தேடி சென்றார்.
"வள்ளி"யாய் அவதரித்திருந்த "இச்சா"க்கு பிறந்தது முதல் அடிகடி ஒருமுகம் கனவில் தோன்றும். அந்த முகத்தை பற்றி தான் எந்நாளும் சிந்தித்து அவரை காணும் நாளுக்காகவே அவள் காத்திருக்க தொடங்கினாள்.
அப்படி ஒருநாள் முருகரை நினைத்துக்கொண்டு அவர்களின் வேடற்குல வழக்கபடி நெற்பயிர்களை காவல் காக்கும் வேலையில் இருந்த வள்ளியை காண வேடர் வேடத்தில் வந்தார் முருகபெருமான். மயில் தோகையின் மென்மையாய், புன்சிரிப்புடன், கயல்விழிகள் சுழல நின்று கொண்டிருந்த பெண்ணவளை கண்ட நொடி முருகபெருமானின் தேடல் முடிய மனம் அப்பெண்ணிடம் மயங்கியது.
அவள்மேல் விருப்பம் தோன்றிய நொடி அவரை திருமணம் செய்ய எண்ணிய முருகபெருமான் தன் தமையன் விநாயகனை தான் உதவிக்காய் அழைத்தார்.
"முருகா! என்ன கூறுகிறாய்? இவ்விடயம் தந்தை மற்றும் தாய் அறிந்தால் மனம் வருந்துவர் அத்தோடு உம் மனைவி தேவி தெய்வானை மனம் உடைந்துவிடுவார்" என தம்பிக்கு எடுத்து சொன்னார்.
தமையன் சொன்னதை கேட்டு ஓர் நொடி அமைதியாய் இருந்த முருகர், "அண்ணா! தெய்வானையை மணந்ததில் எனக்கு விருப்பம் இருந்தது தான் ஆயினும் என் மனம் அந்த திருமணத்திற்கு பின்னும் எதையோ தேடி அலைந்தது. ஆனால் இப்பொழுது இங்கு வள்ளியை கண்ட நொடி என் மனம் தன் தேடல் முற்று பெற்றதாய் உணருகிறது.
ஆம்.. நான்அறிவேன் இது தவறு தான் ஆனால் நம் மாமா மகாவிஷ்ணு அவர்கள் அடிகடி கூறுவாரே அண்ணா! எந்த செயலுக்கும் காரண காரியம் உண்டென. அதனால் என் மனதின் இந்த செயலுக்கும் காரணம் உண்டென எண்ணுகிறேன். தற்பொழுது அதை நான் அறியவில்லை எனினும் வள்ளியை மணந்த பின் அதை நான் அறிய நேரிடலாம்" என வெகுவாய் சமாதானம் செய்தார்.
தம்பியின் வேண்டுதலில் மனம் இறங்கிய விநாயகர் யானை உருக்கொண்டு பயிரை காவல் காக்கும் வள்ளிக்கு அச்சம் மூட்டினார். பயந்த வள்ளி அபயமாய் சேர்ந்தது அங்கு முதியோர் ரூபத்தை எடுத்திருந்த முருகரிடம் தான்.
தன்னை திருமணம் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை காத்த முருகர் பின் தன் உண்மையான சொருபத்தை காண்பித்து வள்ளியை கந்தர்வ முறைப்படி காதல் மணம் புரிந்தார்.
பார்த்தநொடி முதல் காதல் கொண்ட இருவரும் காதலை மட்டுமே பிரதானமாய் கொண்டு ஒருவரையொருவர் சேர்ந்திருக்க அவர்கள் நேரம் இன்பமாய் கழிந்தது. காதலுடன் மணம் செய்த மணவாட்டியுடன் கைலாசம் வந்த வேலன் எதிர்கொண்டது கோபத்துடன் இருந்த தெய்வானையை தான்.
"சுவாமி! நான் இதை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. எந்நொடி நான் இன்றி வேறு ஒருவர் தங்களின் வாழ்வில் வந்தார்களோ இனி நான் தங்களின் வாழ்வில் அவசியமில்லை என்று தானே அர்த்தமாகிறது. நான் கிளம்புகிறேன் சுவாமி"
முருகர் வள்ளி என்னும் மானுட பெண்ணை மணமுடித்துள்ளார் என கேள்வியுற்றவுடன் கோபத்தின் உச்சத்தில் இருந்த தெய்வானை முருகரின் வருகை உணர்ந்து அவர்களை ஏறெடுத்தும் பாராமல் தன் மனம் சொல்ல விளைந்ததை சொல்லி விட்டு கிளம்ப முற்பட்டார்.
"பொறு தெய்வானை! உனக்கான நியாயம் கிட்டாமல் நீ இங்கிருந்து செல்ல கூடாது" என்றபடி பார்வதி தேவியார் மகாதேவருடன் வர,
"ஆம் க்ரியா! உன் பிறப்பிற்கான அர்த்தம் நீ அறிய வேண்டாமா?" என கேட்டபடி லட்சுமி தேவி மகாவிஷ்ணுவுடன் அங்கு தோன்றினார். அவர்களுடன் பிரம்ம தேவரும் தேவி சரஸ்வதியும் தோன்ற அனைவரின் பிரசன்னத்தையும் உணர்ந்து விநாயகரும், நாரதரும் அங்கு வந்தனர்.
"அன்னையே நடந்தவை அனைத்திற்கும் நாரதர் தான் காரணம் நானில்லை" விநாயகர் முதல் ஆளாய் அன்னையிடம் தானாய் ஒப்புக்கொள்ள நாராயணன் நாரதரை குறும்பாய் பார்த்தார்.
"தேவி பார்வதி! நான் ஒன்றும் செய்யவில்லை. இவை எல்லாம் ஆறுமுகனின் திருவிளையாடல் தான் நாராயணா! நாராயணா!" என்றார் நாரதர்.
"ஆம் தாயே! நானே முதலில் இதை அறியவில்லை ஆயினும் தற்போது என் மனம் நடந்தவைகளை உணர்ந்து கொண்டது" என அழகாய் புன்னகைத்தார் குமரன்.
தெய்வானை அதில் தலை நிமிர்ந்து தன் கோப விழிகளால் அவரை எரிக்க முயன்றார், அப்பொழுது தான் அவருக்கு ஆறுமுகனின் அருகே நின்றிருந்த வள்ளி தென்பட அவளின் முகம் கண்ட நொடி தெய்வானையின் மனம் படபடவென அடித்தது.
அதேபோல் இத்தனை நேரமாய் குனிந்திருந்த தலையை நிமிர்த்திய தெய்வானையை கண்டு வள்ளிக்கும் மனம் துடித்தது.
இருவரும் தங்களையும் மீறி எட்டு வைத்து அருகருகே வந்தனர். வள்ளி தானாய் முன்வந்து "அக்கா" என்றழைத்து கை நீட்ட, என்ன சொல்வது என் தெரியாமல் கண்கள் கலங்கி தானாய் சுரக்கும் கண்ணீர் ஏன் என புரியாமல் நீட்டிய அவளின் கரம் பற்றினாள் தெய்வானை.
அதில் விநாயகரும், நாரதரும் ஆச்சரியமாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,
"தந்தையே!" என ஆதிசிவனை அழைத்த முருகர்,
"நான் ஞானத்தின் வடிவம் என தாங்கள் தானே கூறினீர்கள்.. அப்படி இருக்க நான் எப்படி வெறும் செயல்களை மட்டும் என்னுடன் கொண்டிருப்பேன். ஞானம் வேண்டுமெனில் செயல் மற்றும் இச்சை இரண்டும் வேண்டுமல்லவா?" என வினா தொடுத்தார்.
தெய்வானை மற்றும் வள்ளி இருவரும் நடப்பது புாியாமல் பார்க்க, "வள்ளி!தெய்வானை! தாங்கள் இருவருக்குமே நான் இருதாரம் என்பதில் கோபம் இருக்கும், ஆயினும் உலகிற்கு நாம் நம் வாழ்வின் மூலம் முக்கிய தத்துவத்தை விளக்கவே இந்த இரு திருமணங்கள்.
நான் முருகன் ஞானத்தின் வடிவமாவேன் அதோடு தெய்வானை செயல் வடிவமாவாள் அதே போல் வள்ளி இச்சையின் வடிவம். ஞானத்தை அடைய வேண்டுமெனில் மனிதர்கள் வெறும் இச்சையை மட்டும் கொண்டால் போதாது, அதுபோல் இச்சை அன்றி ஞானத்தை அடைய செயல் புரிந்தால் முடியாது. இச்சையும் செயலும் இணையும் இடத்திலே ஞானம் இருக்கும்.
இந்த தத்துவத்தை விளக்க தான் என் இரு தார மணம். தாங்கள் இருவரின் வடிவம் வேறாயினும் இருவரும் ஒருவரே, ஒன்றாய் தோன்றி ஒன்றாகவே பல ஜென்மங்களை கடந்து வந்தவர்கள். நம் மூவர் மூலம் மனிதர்கள் தங்கள் வாழ்வை செம்மையுற கடைபிடிக்க வேண்டிய தத்துவத்தை அறிவார்கள்"
என்று தன் இரு தார மணத்திற்கான விளக்கத்தை உரைத்த ஆறுமுகனின் வாய்மொழி வார்த்தைகளால் தெய்வானையாய் இருந்த க்ரியாவிற்கும், வள்ளியாய் நின்றிருந்த இச்சாவிற்கும் தங்களின் முந்தைய வாழ்க்கைகள் கண் முன் நினைவுகளாய் தோன்றியது.
மகாவிஷ்ணுவின் ஆனந்த கண்ணீரில் அவதரித்த நொடி, அவரின் கண்களில் கண்ட ஆறுமுகனின் முகம், அவரை சேர தாங்கள் இருந்த தவம், பெற்ற இரு வழிகள், கடந்து வந்த ஏழு ஜென்மங்கள் என அனைத்தும் நினைவில் நிற்க தங்களின் பிறப்பிற்கான அர்த்தத்தை இனிதாய் உணர்ந்தவர்கள் உவகை கொண்டனர்.
இருவரும் இன்னும் கை கோர்த்து நிற்க, கோர்த்த கரங்களுடனே ஒன்றாய் ஆறுமுகனை நோக்கி அடி வைக்க இருவரையும் தன் இருபுறமும் நிறுத்தி கொண்டார் சிவ மைந்தன் கார்த்திக்கேயன்.
இத்தனை நேரம் தான் கேட்டதற்காய் முருகனின் இரு திருமணத்திற்கு பின் இருக்கும் கதை பற்றி விளக்கிய ஜகதாம்பாள் பாட்டியிடம்,
"ஓஓ! அப்படினா இதனால தான் செய்றதை விருப்பத்தோட செய்யனும்னு சொல்றதோ? படிக்கிறதை கூட விருப்பத்தோட படி இல்லனா மண்டைல நிக்காதுனு சொல்வாங்க தானே பாட்டி" என கேட்டாள் குமாரி.
"இன்னுமா உனக்கு சந்தேகம் லூசு! நீ விழுந்து விழுந்து படிச்சு, போட்டு பார்த்த அல்ஜீப்ரால எதாவது உனக்கு இப்போ நியாபகம் இருக்கா? ஏன்னா நீ அதை அப்பா அடிப்பாருனு தான படிச்ச?" என தங்கையை கிண்டல் செய்து சிரித்தான் இத்தனை நேரம் அவளுடன் இணைந்து கதை கேட்ட அண்ணன் குகன்.
"ராஜா சொல்வது சரிதான் கண்ணு! நீ ஒன்னும் படிக்காம இல்லையே எத்தனை தடவை எழுதி எழுதி படிச்சிருப்ப ஆனா அது எல்லாம் நினைவு இருக்கா? அதே சின்ன வயசுல உங்க அம்மா சொன்ன ஆயா வடை சுட்ட கதை இன்னும் உனக்கு நியாபகம் இருக்கும்?" என்றார் ஜகதாம்பாள் பாட்டி.
"ஆனா பாட்டி அப்போ வெறும் விருப்பம் தான இருந்துச்சு அதாவது இச்சா மட்டும் அப்றம் அது மட்டும் எப்படி நினைவிருக்கு" என கேட்க,
"வெறும் விருப்பம் இருந்தா உங்க அம்மா முதல் தடவை சொன்னதே உனக்கு நியாபகம் இருக்கும் கண்ணு ஆனா உனக்கு அப்படியா இருக்கு. அந்த கதை உனக்கு பிடிச்சதால நீ அடிகடி அதை சொல்ல சொல்லி கேட்டு கவனிக்க ஆரம்பிச்சிருப்ப, அடுத்து நீ வளரவளர அந்த கதைகளை நீயே வேறு சின்ன பசங்களுக்கு சொல்லிருப்ப அதான் செயல். அப்படி உன்னோட விருப்பமும், செயலும் இணைந்ததால தான் உனக்கு அது நியாபகம் இருக்கு" என அவளுக்கு தெளிவாய் விளக்கினார் பாட்டி.
"இப்போ எனக்கு புரிஞ்சுது பாட்டி" என குமாரி சொல்ல குகன், "ஆனா எனக்கு ஒரு சந்தேகம் பாட்டி! நீங்க கதைல இச்சா, க்ரியானு சொன்னீங்களே அவங்களோட பெயர்கள் அமுதவல்லி, சுந்தரவல்லினு தான் நான் எங்கேயோ படிச்ச நியாபகம்" என்றான்.
"ஆமா ராஜா! தெய்வானை தான் அமுதவல்லி, வள்ளி தான் சுந்தரவல்லி. ஆனா நம்ப கண்ணுக்கு நீ ஆரம்பத்தில் சொன்ன இச்சா சக்தி க்ரியா சக்தி புரியலைல அதான் கண்ணு மனசுல அது தெளிவா தங்கனும்னு நான் அவங்களை இச்சா, க்ரியானே அடையாள படுத்திட்டேன். இனி எப்பவும் அது மறக்காதுல, ஆமாதான கண்ணு" என பேத்தியிடம் கேட்டார்.
பாட்டியை பக்கவாட்டில் கட்டிக்கொண்ட குமாரி, "நீங்க ரொம்ப ரொம்ப நல்ல பாட்டி என் செல்ல பாட்டி" என கன்னத்தில் முத்தமிட்டவள்,
"எனக்கு இப்போ தெளிவா புரிஞ்சுது பாட்டி! இனி நான் என்னோட ஆய்வு கட்டுரையை சும்மா பேருக்கு எழுத மாட்டேன். இப்போ உங்ககிட்ட கேட்ட மாதிரி நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டு தான் தயார் பண்ணுவேன்" என உறுதிமொழி அளித்தார்.
அதில் குகனும் பாட்டியும் த்ருப்தியாய் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள, "இப்போ நான் சொன்ன கதை கூட கற்பனை தான்டா. நான் சொன்னேன்ல எனக்கு என் பாட்டி சொன்னதுனு அதை நான் உங்களுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் மாத்தி தான் சொல்லிருப்பேன். அதனால யார் என்ன சொன்னாலும் அப்படியே கேக்காம உண்மை எதுனு ஆராய்ந்து கட்டுரையை தயார் பண்ணு" என்றார் பாட்டி.
"சரி பாட்டி... ஆமா பாட்டி நீங்க ஏன் தெய்வானை கதையை விளக்கமா சொல்லி வள்ளி கதையை சீக்கிரம் முடிச்சிட்டீங்க?" என கேட்ட குமாரி நேரம் கடந்துவிட்டதால் தான் எழுந்தபடி பாட்டிக்கும் எழுவதற்கு கை கொடுத்தாள்.
மறுபக்கம் குகனும் எழுந்து கை கொடுக்க பேரன், பேத்தியின் கையணைவில் எழுந்து நடந்தபடி,
"காதல் பற்றிய கதைகள் எப்பவுமே உலகத்தவர்களோட பார்வையில அற்புதமா தெரியும் ஆனா அதுக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லைடா பெத்தவங்க பார்த்து வைக்கிற திருமணம். எப்பவும் காதலால் கசிந்துருகி மணமுடிக்கிறவங்களை பத்தியே ஏன் பேசனும் கண்ணு? எப்படியும் உனக்கு வள்ளி தேவியோட கதை தெரிஞ்சிருக்கும் அதனால தான் தெரியாத தெய்வானையை பத்தி சொன்னேன். வள்ளியோட காதலுக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லை தெய்வானையோட முருகர் மேலனா நேசம்"
என்ற பாட்டி பேரன், பேத்தியுடன் கொடிமரத்தை ஒருமுறை அன்னாந்து பார்த்து வள்ளி-தெய்வானை -முருகபெருமானிடம் விடைபெற்று வீட்டிற்கு செல்ல நாமும் இப்பொழுது அவர்களிடம் விடைபெறுவோமாக...
"ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தெய்வானை நாயகா போற்றி
ஓம் வள்ளி மணாளா வடிவேலா போற்றி
ஓம் வேடனாய் வந்த வேலவா போற்றி"
- முற்றும்.
(இந்த கதையில் வரும் அனைத்து மனிதர்களும், கடவுள்களும், அவர்களின் செயல்களும், சூழல்களும், இடங்களும் எனது கற்பனையே அன்றி எந்த ஒரு தனி மனிதனையோ, மத நம்பிக்கைகளையோ, இறைவனையோ குறிக்காது. இதில் வரும் சம்பவங்கள் முழுக்கமுழுக்க எனது கற்பனை மட்டுமே எந்த ஒரு வரலாற்று செய்திகளுடனோ, புராணங்களுடனோ தொடர்புடையது அல்ல)