அத்தியாயம் 3: (ரசம் -அருவருப்பு)
தெற்கு ஆசியாவில் பனைமர வனம் என்றழைக்கபடும் பகுதியில் முத்து குளிப்பதென்பது மிக சாதாரணமான ஒரு செயல். அங்கு கடலில் முத்து குளிப்பதற்கு தனி இடம் இருக்க மற்றொருபுறம் வழக்கம்போல் மீன் பிடித்தல் மற்றும் அதனுடன் மற்ற கடல்வாழ் உயிரினங்கள் பிடித்தல் என்று அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் நடைபெறும்.
"டேய் பங்காளிங்களா! வழக்கம்போல வெறும் சிப்பிகளா எடுத்தீங்களா இல்ல நான் இந்த முறை சொன்ன மாதிரி நண்டு, நத்தை, சங்குனு எது கிடைச்சாலும் எடுத்துங்கீளா" என இளவயது வாலிபன் ஒருவன் தன்னுடன் வந்த ஆட்களிடம் கேட்பது அந்த உப்பு காற்றிலும் உரத்து கரையோரம் வரை கேட்டது.
சில நிமிடங்களில் அவர்களின் படகு கரை ஒதுங்க அதன் அருகே சென்று, "ஏன்டா தம்பி ஜானு! அதெல்லாம் வச்சு என்னத்தை பண்ணுறது நம்ப என்ன வேடிக்கை காட்டாவா எல்லாம் எடுத்துட்டு போறோம் வியாபாராம் ஆக வேணாமா?" என பெரியவர் ஒருவர் அங்கலாயித்தார்.
"அண்ணாவ்! என்ன இப்படி கேட்டுபுட்ட இப்போலாம் இதுக்கு தான்-ணே மவுசு ஜாஸ்தி. வெறும் சோத்துக்கு மட்டும் இல்லண்ணாவ் இதை எல்லாம் வச்சி என்ன என்னவோ பண்ணுறாங்க" அவர் அழைத்த ஜான் என்பவன் குரல் கொடுத்தான்.
அவனை தொடர்ந்து அவனுடன் வந்திருந்த வேறு ஒரு இளைஞனும், "ஆமாங்கய்யா! நம்ப "நுத்தனம் சந்தை" பக்கம் நீர்வாழ் உயிரினங்களை விக்கிறதுக்குனே ஒரு இடம் இருக்கு. அங்க இருக்க ஒரு பெரிய கடைக்கு நான் என் பெரியப்பனோட போனப்ப இந்த மாதிரி நிறைய பார்த்திருக்கேன். இதுக்கெல்லாம் கூடுதல் காசு-ண்ணே" என்றான்.
"என்னம்ல சொல்ற தினேசு? நிஜத்தை தான் பேசுறியா அந்த மாதிரி கடையை இதுவரை நான் பார்த்ததே இல்லையே. இதை வச்சு என்னை பண்றாங்க அவிங்க?"
அந்த பெரியவர் அதிசயம் நடப்பது போல் வியந்து போய் விசாரித்தார்.
"அதுவும் நம்ப மீன் சந்தை மாதிரி தாங்கய்யா. சின்ன சின்ன தொட்டி கட்டி அதுல மீன் வகைங்க, சிப்பி, சங்கு, நத்தை, நண்டு, ஆமைனு நிறைய வச்சிருப்பாங்க. அங்க இருக்குறதை நிறைய பேர் காசு கொடுத்து வாங்கிட்டு போய் வீட்ல வளர்க்குறாங்களாம்" என பெரியவருக்கு தான் பார்த்ததை சொன்னான் தினேஷ்.
பேசியபடியே அவர்கள் வந்த படகில் இருந்து கடலுக்குள்ள இருந்து கொண்டு வந்திருந்தவற்றை அப்படியே அண்டா அண்டாவாய் தூக்கி கீழே இறக்கினர்.
வழக்கபடி பெரியவர் தான் வைத்திருந்த வலை போன்ற ஒன்றை கடல் மண்ணில் விரித்துவிட அந்த அண்டாக்களில் இருந்தவற்றை அதில் கொட்டினர்.
அவற்றை கைகளால் அளந்த பெரியவர், "என்னல சொல்ற வீட்ல வளர்ப்பாங்களா அது
எதுக்கு? வாங்குனோம் நெருப்புல சுட்டோம் தின்னோம்னு இல்லாம என்னத்துக்குல வீட்டுல வளர்க்குறாங்க?" என கேட்டவரின் கைகளில் இடம் பெற்றிருந்தது எண்ணிலடங்கா சிப்பிகள்.
"அண்ணே! இதுக்கெல்லாம் நிறைய உபயோகம் இருக்காம்ல அதும் இப்போ உங்க கையில் கிடக்கும் சிப்பிலாம் பாசியை தின்னுடுமாம். அதனால் தண்ணீர் தொட்டிலாம் சுலபமா சுத்தமாகிடுதாம்" தான் செவிவழி அறிந்ததை சொன்னான் ஜான்.
"ஆத்தி! அப்படியா ஜானு... இது அதை எல்லாம் பண்ணுதா சரிதாம்பா சரிதான். அப்போ தினேசு நம்ப இதெல்லாம் கொண்டு போய் அவன்ட்ட கொடுத்தா அவன் நமக்கு நிறைய காசு தருவானா ஒய்" என விசாரித்தார்.
அவர் மூளைக்குள் தினம் தினம் வெயிலில் காய்ந்து விற்பதற்கு மொத்தமாய் ஒருவனிடம் விற்றால் அலைச்சல் மிச்சம் அதனோடு புது ஆள் என்பதால் காசையும் அதிகம் கறக்கலாம் என திட்டம் உருவானது.
"ஆமா அய்யா நம்ப கொடுக்கலாம். நானே வேணும்னா உங்களுக்காக போறேன்" என அவன் சொல்லும் நேரம் அந்த பெரியவர் கையில் ஒரு நத்தை ஏறி ஊறியது. அடர் காவி வண்ணம் அதனட ஓட்டில் ஆங்காங்கே அழுக்குபோல் அடர்த்தியாய் படர்ந்திருக்க பார்க்கவே அருவருப்பாய் இருந்தது அதன் தோற்றம்.
"ச்சை கருமம்" என கையை உதறியவர், "இதை எல்லாம் தூக்கி போட்டுட்டு நல்லா அழகா இருக்குறதை மட்டும் தனியா எடுத்து போடுடா. அந்த கடையில கொடுத்து காச வாங்குவோம்" என்றவரிடம் மீண்டும் அந்த நத்தை நெருங்க பார்த்தது.
அதை தொட கூட பிடிக்காமல் முகத்தை சுழித்தபடி வலையில் சிதறிகிடந்த சங்கில் ஒன்றை எடுத்து அந்த நத்தையை நகட்டி தள்ளினார்.
ஆட்கள் அனைவரும் அவர் பேச்சை கேட்டு தங்களுக்கு கிடைத்த நீர்வாழ் உயிரனங்களை ஒவ்வொரு இனமாய் தனிதனியாய் தண்ணீர் நிரம்பிய அண்டாக்களில் பிரித்து சேகரித்தனர்.
அழகானவை அனைத்தும் கடையில் விற்பதற்காய் ஒதுக்கபட, மீதி இருந்தவற்றில் தங்களின் அன்றாட வியாபாரத்திற்கு தேவையானதை வேறு பாத்திரங்களில் நீர் நிரப்பி அதில் எடுத்து வைத்தனர்.
இந்த இரண்டு விதமான வியாபாரத்திற்கும் பொருந்தாத அந்த அருவருப்பான நத்தை பெரியவர் நகட்டி தள்ளியதில் ஒரு ஓரமாய் மணல் மேட்டில் குப்பைகளுக்கு இடையே தன் ஓட்டுக்குள் ஒடுங்கி இருந்தது.
அனைத்தையும் பிரித்து முடித்தவர்கள் கடையில் விற்க வேண்டியதை வண்டியில் ஏற்றி அதை எடுத்து செல்ல தயாரானர்.
அத்தனை நேரம் அங்கு நடப்பதை தன் குட்டி கண்களை உருட்டிஉருட்டி பார்த்திருந்த குட்டி பூனை ஓன்று வேகமாய் ஓடி வந்து மணல் மேட்டில் குப்பைகளுக்கு இடையில் ஓட்டுக்குள் ஒடுங்கியிருந்த நத்தையை தன் வாயினுள் கவ்வியபடி ஓடியது.
வேகவேகமாய் ஓடிய பூனை வண்டியை அடைவதற்கும் அந்த வண்டியை ஓட்டுனர் எடுபதற்கும் சரியாய் இருந்தது. தொப்பென வண்டியினுள் குதித்த பூனை பெட்டிகளுக்கு இடையில் சென்று பதுங்கி கொண்டு தன் வாயினுள் இருந்த நத்தையை துப்பியது.
சில நிமிட பயணத்தின் பின் "சமுத்திரத்தின் அழகு" என்ற பெயர்பலகையை தாங்கி நின்ற சிறிய கட்டிடத்தின் முன் நின்றது அந்த வண்டி.
தினேஷ் முன்பே அங்கு வந்திருந்ததால் அந்த கடையின் உரிமையாளரிடம் பேசி பெரிய தொகைக்கு அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் விற்றான்.
காசு கைமாற கடையின் ஆட்கள் வண்டியில் இருந்து ஒவ்வொரு அண்டாவாய் எடுத்து சென்று உள்ளே வைத்தனர். அவர்களின் இடையே சிக்காமல் நத்தையை கவ்விக்கொண்டு வண்டியில் இருந்து இறங்கி நழுவி கடையின் உள்ளே ஓடியது பூனை.
அதை ஒருவர் பார்த்துவிட்டு, "ஏய்..ச்சூ ச்சூ.. ப்போ" என விரட்டியபடி துரத்த வாயில் இருந்த நத்தையை அங்கேயே போட்டுவிட்டு வெளியே ஓடியது.
அது வெளியே சென்றதா அல்ல கடைக்குள் மீண்டும் வந்துவிடுமா என பார்க்க அதை தொடர்ந்து வந்தவர் அண்டாக்களை தூக்கிக் கொண்டு வந்த ஆட்களுடன் மோதிக் கொண்டார்.
அதில் ஒருவர் தன் கையில் இருந்த அண்டாவை நழுவ விட, அதில் நீரோடு இருந்த சிப்பிகள் எல்லாம் கீழே விழுந்தது.
"ஏய் என்னப்பா காரியம் பண்ணீட்டிங்க? புடிபுடி.. சட்டுனு எல்லாத்தையும் வேற தண்ணில எடுத்து போடுங்க ஓடுங்க" என கடை உரிமையாளர் அதட்ட அவசரஅவசரமாய் கீழே இருந்தவற்றை அங்கிருந்த நீர் நிரம்பிய தொட்டி ஒன்றில் எடுத்து போட்டனர் வேலையாட்கள்.
அவர்கள் எடுத்துபோட்ட சிப்பிகளுக்கு இடையே பூனை போட்டுவிட்டு சென்ற நத்தையும் அழகாய் அந்த தொட்டியில் சென்று சேர்ந்தது.
சில வாரங்கள் சென்றபின்:
நுத்தனம் சந்தை:
"வாங்க மா வாங்க.. வாங்க அய்யா வாங்க.. என்ன வேணும் சொல்லுங்க"
என இதே வார்த்தைகள் மாறிமாறி பல குரல்களில் அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது.
அவ்விடம் நீர்வாழ் உயிரனங்களை அனைத்தையும் நாம் பார்க்கலாம். அங்கு நமக்கு தேவையானதை வாங்கி கொள்ளவும் செய்யலாம்.
இங்கு தினசரி உணவுகளுக்கு உபயோகமாகும் நீர்வாழ் உயிரினங்கள், அழகுக்காகவும் ஆசைக்காகவும் வாங்கபடும் நீர்வாழ் உயிரனங்கள் என இருவகையிலும் விற்கபடும்.
வாரஇறுதி என்பதால் இன்று அங்கு கூட்டமும் கூச்சலும் சற்று அதிகமாய் தான் இருந்தது. அந்த கூட்டத்தின் இடையில்,
"அப்பா! நம்ப இங்க என்ன வாங்க போறோம்" பச்சை வண்ண பாவாடை சட்டையில் தந்தையின் கைகளை பிடித்து கொண்டு தளிர் நடையிட்டு வேடிக்கை பார்த்து வந்தாள் அந்த சிறுமி.
"நம்ப வீட்ல தண்ணீர் தொட்டிலாம் பாசி புடிச்சிடுச்சுல டா. அதான் அப்பா சிப்பி வாங்கிட்டு போலாம்னு என்னோட தங்ககுட்டியையும் கூட கூட்டிட்டு வந்திருக்கேன்"
பிள்ளையை கொஞ்சியபடி சொன்னவர் அங்கிருந்ததில் எளிமையாய் அதே நேரத்தில் நேர்த்தியாய் இருந்த "சமுத்திரத்தின் அழகு" என்ற கடையினுள் நுழைந்தார்.
அதன் உள்ளே வேறுவேறு வடிவத்தில், பல அளவுகளில் தொட்டிகள் வரிசையாய் வைக்கபட்டிருக்க அதில் நீர்வாழ் உயிரினங்களின் அனைத்து இனங்களும் சில எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தன.
"ப்பா... இது என்ன இவ்வளவு இருக்கு, எல்லாம் ரொம்ப அழகாவும் இருக்குல" என கண்களை விரித்த சிறுமி ஒவ்வொரு தொட்டியாய் அருகே சென்று பார்த்தாள்.
"ப்பா.. நட்சத்திர மீன் ப்பா சூப்பரா இருக்குப்பா.. அச்சோ ப்பா இங்க பாருங்களேன் இது குட்டியா குதிரையோட தலை மாதிரியே இருக்கு" என அவள் ஒவ்வொன்றாய் பார்த்து அங்கும் இங்கும் ஓடி குதியாட்டாம் போட்டாள்.
அங்கு இருக்கும் மொத்தத்தையும் பார்க்க அவளின் இரு கண்கள் போதவில்லை போலும் ஓடிஓடி ஒன்றொன்றாய் அவள் பார்வையிட்ட வேளை கண்விழித்தது ஓரமாய் ஒரு தொட்டியில் உறங்கி கொண்டிருந்த அந்த அருவருப்பான நத்தை.
அந்த சிறுமி அங்கும் இங்கும் ஓடுவதை கண்டு அவள் தன்னை பார்ப்பாளா தன்னை தன்னுடன் வாங்கி செல்வாளா? என ஏக்கமாய் பார்த்தது.
ஒவ்வொரு தொட்டியாய் பார்த்து வந்தவள் நத்தை இருந்த தொட்டியை நெருங்கும் வேளை, "பாப்பா! இங்க வா அங்க எல்லாம் போகாத" என அழைத்தார் அவளின் தந்தை. ஆனால் அவள் அதற்குள் தூரத்தில் இருந்தே அந்த நத்தையை பார்த்து விட்டிருந்தாள்.
"ப்பா! நத்தை ப்பா.. ஒரே ஒரு நத்தை மட்டும் இதுல தனியா இருக்கு ப்பா" என தந்தையிடம் அதை காட்டுவதற்கு அழைத்தாள்.
மகளின் குரலில் வந்த தந்தை அந்த நத்தையை பாரத்து விட்டு, "ச்சே இது என்ன இப்படி இருக்கு பார்க்கவே அருவருப்பா இருக்கு. கிட்ட போகாத பாப்பா" என முகத்தை சுழித்தார்.
அவரின் முகத்தின் அருவருப்பை கண்ட அந்த கடையின் உரிமையாளர்,
"இதே தான் சாமி.. வர எல்லாரும் இதை பார்த்துட்டு அருவருத்து இதை வாங்க மாட்டுறாங்க. நான் வழக்கமாக இந்த மாதிரி நத்தையை எல்லாம் வச்சிகிறது இல்லை. அந்த தொட்டி கூட சிப்பிங்க கிடந்த தொட்டிதான் இது எப்படி வந்திருக்கும்னு நானே யோசிச்சேன். ஆனா சாமி! இதுங்களை வச்சி தான் நம்ப பொலப்பே ஓடுதா அதான் தூக்கி போடவும் மனசு வர மாட்டுது சரி ஒரு ஓரமா கிடக்கட்டும்னு விட்டுட்டேன்"
அவர் சொல்லியதில் மனிதர் மீண்டும் ஒருமுறை அந்த நத்தையை திரும்பி பார்க்க அடர் காவி வண்ணத்தில் அழுக்கு படிந்திருப்பது போல் தொட்டியின் ஓரம் கிடந்ததின் மேல் அருவருப்பு தான் தோன்றியது.
"சரி சரி விடுப்பா.. அதை பத்தி எனக்கு என்ன? நீ நான் கேட்ட சிப்பிகளை கொடு தாமதமா போனா என் பொண்டாட்டி என்னை வஞ்சிபுடுவா" என காசை எடுத்து கொடுத்தார்.
அவர் அந்த காசுக்கு ஏற்ப சிப்பிகளை சின்ன பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதனுள் இட்டு தர அதை வாங்கும் வேலையில் கடையின் வாயிலில் இருந்து அந்த சிறுமியின் தந்தையை யாரோ அழைத்தனர்.
"ஏம்ல ராசு! இங்கன என்ன பண்ணுறவ?" என அவரின் பங்காளி முறை உள்ளவர் கேட்க,
"பாப்பா! அந்த மாமா கொடுக்கிற டப்பாவ வாங்கிட்டு வாடா அப்பா பெரியப்பாகிட்ட பேசிட்டு வரேன்" என வெளியே சென்றார்.
தந்தை வாசலை தாண்டும் வரை பார்த்திருந்த சிறுமி கடையின் உரிமையாளரிடம், "மாமா மாமா! அந்த நத்தையையும் சேர்த்து தாங்களேன்" என தண்ணீர் தொட்டியின் ஒரமாய் இருந்ததை கேட்டாள்.
"பாப்பா! உனக்கு எதுக்கு அது? உங்க அப்பா பார்த்தா அடிக்க போறார்" என கடைக்காரர் மெதுவாய் சொல்ல,
"மாமா! எனக்கு வேணும் மாமா.. அது சிப்பி இருந்த தொட்டிக்குள்ள தான இருந்துச்சுனு சொன்னீங்க. அப்பா உங்ககிட்ட வந்து கேட்டா அதே போல இந்த தொட்டில் தெரியாம இருந்திருக்கும்னு சொல்லுங்க. பாவம் அது தனியா இருக்குல எனக்கு அதை பார்க்கவே பாவமாய் இருக்கு"
என கெஞ்சலாய் கேட்டாள் சிறுமி.
பூலோகத்தில் நடப்பதை கண்டு, "நாராயணரே! இந்த சிறுமியை பார்க்கும் வேளை குழந்தைகள் கடவுள்களுக்கு நிகர் என்று சொல்வதில்லை தவறே இல்லை என்று தோன்றுகிறது" என விண்ணுலகில் மகாலட்சுமி, மாகாவிஷ்ணுவிடம் தனக்கு தோன்றியதை சொன்னார்.
"ஆம் லட்சுமி! ஏனையோருக்கு அருவருக்கதக்கதாய் தோன்றும் ஓர் உயிரினம் அந்த சிறுமியின் கண்களுக்கு மட்டும் தான் அதுவும் ஓர் உயிரினம் என தோன்றுகிறது. நான் "க்ரியா" நத்தையாய் இப்படி ஒரு தோற்றத்தில் அவதரிப்பாள் என எண்ணவில்லை"
"ஆம் நாராயணரே! நானும் க்ரியா இந்த பிறவியில் அழகான சிப்பியாய் அவதரிப்பாள் என்று தான் எண்ணினேன். சிப்பிகள் மண்ணரிப்பு மற்றும் நில சரிவுகளை தடுக்கும் அதோடு சுற்றுசூழலுக்கு அதன் உதவி அளப்பறியது. அதனால் க்ரியா இந்த பிறவியை கடப்பதும் எளிதாய் அமையும் என நினைத்தேன். நத்தையாய் வந்தவள் எப்பொழுதும் போலாவது வந்திருக்கலாம் எதற்கு இந்த தோற்றம். ஆனால் தங்களின் புத்திரி தங்களை போல் விசித்திரமானவள் தான் போலும்" என குறைபடுவது போல் பெருமைபட்டார் மகாலட்சுமி.
"ஹாஹா! விசித்திரமோ சித்திரமோ அழகென்பதில் ஒரு பயனும் இல்லை தேவி. எந்த செயலும், எத்தகைய விருப்பமும் மக்களின் நலத்திற்காய் தான் பயன்படவேண்டும் தேவி. நானும் எம் மக்களும் அதை தான் எங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் வெளிபடுத்துகிறோம்" என்றார் பாற்கடல் வாசன்.
"தங்களை விட மக்களின் நலம் காப்பவர் எவர் நாராயணரே! ஆனால் க்ரியா இந்த அருவருப்பு தரும் நத்தையின் தோற்றத்தில் எவ்வாறு மக்களுக்கு உதவ போகிறாள் என காண நான் ஆவலாய் உள்ளேன்" என்ற மகாலட்சுமி, மகாவிஷ்ணுவுடன் இணைந்து பூவுலகத்தை கண்டார்.
பூமியில் சிறுமி மிகவும் அடம் பிடித்ததால் கடை உரிமையாளரும், 'சரி சும்மா தான் அது இங்க இருக்கு இந்த புள்ளையாச்சு கொண்டு போகட்டும்' என நினைத்து அதை அவர்கள் வாங்கிய சிப்பிகள் நிரம்பிய சிறு டப்பாவினுள் அந்த நத்தையையும் பிடித்து போட்டார்.
"நானும் ஏகபட்ட நத்தையை பாத்திருக்கேன் ஆனா இது என்னவோ ஒரு மாதிரி வழவழனு கெடக்கு. அதுவும் நிறத்தை பாரு அழுக்கு படிஞ்ச மாதிரி..இதை போய் நீ ஏன் விருப்பப்பட்டு கேக்குறனு தெரியலை" என புலம்பியபடியே அந்த சிறுமியிடம் கொடுத்தார்.
"பாப்பா .. வாங்கிட்டியாடா.. போலாமா" என வாசலில் இருந்து குரல் கொடுத்த தந்தைக்கு "இதோ வந்திட்டேன் ப்பா" என கத்தியபடி ஓடிய சிறுமியை கடையின் ஓரம் நின்று தன் குட்டி கண்களை மேலும் சுருக்கி பார்த்த பூனையின் கண்கள் ஒளிர்ந்தது.
நத்தையை இந்த கடையில் சேர்த்தது முதல் அந்த சிறுமியின் கைகளுக்கு அது போய் சேரும் வரை அந்த கடையையே சுற்றிசுற்றி வந்திருந்த பூனை இப்பொழுது அதன் வேலை முடிந்தது என அங்கிருந்து எவரின் கண்களிலும் சிக்காமல் மறைந்தது.
அதுதான் இந்த பிறவியில் நத்தையாய் பிறந்த "க்ரியா"-விற்கு முடிந்த உதவியை செய்துவிட்டதே இனி "இச்சா" விற்கு அங்கு என்ன வேலை?
*****
"ஏங்க ஒருவேலையை கூட சரியா செய்ய மாட்டீங்களா? தொட்டில பாசி புடிச்சி கிடக்குது எவனும் சுத்தம் பண்ண வரமாட்றானேனு சிப்பியை வாங்கிட்டு வர சொன்னா நீங்க இந்த கேவலமான நத்தையை கூட தூக்கிட்டு வந்திருக்கீங்க. சுத்தமான தண்ணியை வீணடிக்கவா... போங்க போய் இதை தூக்கி கடாசுங்க"
என நத்தையை தூக்கி கணவனின் அருகில் எறிந்தாள் அந்த சிறுமியின் அன்னை.
"அய் ச்சீ கருமம்.. எதோ தெரியாம வந்திருந்கும் அதை எதுக்கு டி என் மேல போடுற நீயே குப்பையில தூக்கி போட வேண்டியது தான? ச்சை ச்சை" என அவர் பதிலுக்கு உடலை சிலுப்பினார்.
அவரின் இடைவிடாத சிலுப்பலை கண்டு, "என்ன என்னவோ சுத்த சைவம் கணக்கா உடலை உதறுறீங்க? மிதக்குறது, மேயுறது, நடக்குறது, பறக்குறதுனு அத்தனையையும் முழுங்குற ஆளு தான நீங்க" கணவனை சீண்டியபடி அவர் தொட்டிக்குள் மற்ற சிற்பிகளை எடுத்து போட்டார்.
"ஆமா தான் டி! எங்க ஆத்தா கொண்டு வர நத்தைலாம் நல்லா கூழாங்கல்லு மாதிரி செவசெவனு இருக்கும். இது என்னவோ பார்க்கவே அருவருப்பா இருக்கு"
என மனைவிக்கு பதிலளித்தபடியே அந்த நத்தையை தேடினார்.
இவரின் மனைவி அதை தூக்கி வீசிய அடுத்த நொடி சிறுமி அதை தூக்கி கொண்டாலே பிறகு எங்கு அது அங்கிருக்கும்?
அவசரஅவசரமாய் அந்த நத்தையை தூக்கிகொண்டு யாரும் வராத தங்களின் நிலத்தை நோக்கி ஓடினாள் சிறுமி. யார் கண்களிலும் சிக்காமல் ஓடியவள் நிலத்தை நெருங்கியவுடன் மூச்சுவாங்க கீழே அமரந்து தன் கைகளில் இருந்த நத்தையை தூக்கி பார்த்தாள்.
இத்தனை நேரம் ஓட்டுக்குள் சுருங்கி இருந்த நத்தை காற்று பட்டதில் தன் தலையை வெளியே நீட்டியது. ஓட்டினுள் இருந்து மெதுவாய் தலை நீட்டும் அதன் அழகில் சிறுமியின் கண்கள் பெரியதானது.
"அச்சோ! இது எவ்வளவு அழகா தலையை நீட்டி பாக்குது இதை போய் அருவருப்புனு சொல்றாரு அப்பா. நீ ஒன்னும் கவலைபடாதடா குட்டி. நீ தான் இனி என் செல்லகுட்டி சரியா" என அதை தடவி கொடுத்தாள்.
அவளின் தொடுகையை உணர்ந்த நத்தைக்கு முதல்முதலாய் ஒருவர் தன்னை அருவருப்பின்றி தொடுவதை புரிந்துகொள்ள முடிந்தது.
அதில் அதன் இச்சை வெளிவர தன் சிறிய நாக்கு போன்ற உறுப்பை நீட்டியது. அது செய்வது இன்னது என புரியாத சிறுமி தானே ஒன்றை நினைத்து,
"எதுக்கு இப்போ இது வெளியே வெளியே எட்டி பாக்குது ஒருவேளை இதுக்கு பசிக்கிதோ. ஆனா நத்தை என்ன சாப்பிடும்னு தெரியலையே" என யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.
அந்நேரத்தில், "ஏன்டி யாரது பொழுது போற நேரத்துல வயகாட்டு பக்கம் உட்கார்ந்திருக்குறது" என பெரிய குரல் உரத்து ஒலிக்க அதில் திடுகிட்ட சிறுமி கையில் இருந்த நத்தையை தவறவிட அது அந்த வெற்று நிலத்தில் சென்று விழுந்தது.
அதை அவள் எடுப்பதற்குள் குரல் கொடுத்த பெரியவர் அருகே வந்து விட்டார்.
"ஏன்டி ராசு பொண்ணு தான நீ? வெயில் அசந்த நேரத்தில் இந்த வெத்து நிலத்துல உனக்கென்ன டி வேலை" என அதட்ட,
"வெத்து நிலமா இருந்தாலும் எங்க வீட்டு நிலம் அம்மாச்சி! சீக்கிரமே இந்த நிலத்துல நாங்க நெல்லை விதைப்போம் பாரு.. வெத்து நிலமாமே" என தங்கள் வீட்டு நிலத்தை பழித்து சொல்லியதில் கோபத்தில் பதிலுக்கு பதில் பேசியவள் நத்தையை மறந்து சென்றாள்.
ஆனால் அவளின் தொடுதலில் தன் இச்சைகள் வெளிவரபெற்ற நத்தை முன்போல் அமைதியாய் ஒரு ஓரத்தில் ஓட்டுக்குள் ஒடுங்கியிருக்குமா என்ன? துருதுருவென தான் விழுந்த நிலத்தில் இருந்த மண்களுக்குள் நுழைந்து திரிந்து அதை தோண்டி அங்குமிங்கும் வேகவேகமாய் ஓடியது.
அது மண்ணை கிளறிய கிளறில் ஆங்காங்கே இருந்த சிறு சிறு புழுக்கள் வெளிவர அதை தன் நாக்கால் உணர்ந்து சுவைத்தது. அதன் இருப்பால் அனைத்து சிறு உயிரினங்களும் வெளிவர தான் உண்ணுபவற்றை மட்டும் தேடி தேடி உண்டது. எந்த அளவிற்கு உண்டதோ அதே அளவிற்கு, கழிவுகளையும் வெளியேற்ற அது அந்த மண்ணிற்கு ஊட்டசத்தாய் மாறியது.
ஓட்டமும், உணவும், கழிவும் என அது நாட்களை கழிக்க அந்த மண்ணின் அமைப்பு நத்தையால் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் பெற்றது. அதனால் காற்று மற்றும் நீர் பரவ தேவையான இடைவெளி உண்டாக வெற்று நிலத்தை பசுமையாக்கியே தீர்வேன் என அந்த சிறுமி தினம்தினம் ஊற்றும் சிறிதளவு நீரை அந்த நிலம் உறிஞ்ச தொடங்கியது.
வரண்டு காய்ந்த இடமாய் கிடந்த பகுதியில் சில நாட்களில் ஆங்காங்கே ஈர பசை தோன்ற அதை எதிர்பாராத சிறுமி தன் தந்தை அழைத்து காட்டினாள்.
அதை தொடர்ந்து தந்தையும் மகளும் தினம் அந்த நிலத்தை சரியாய் பராமரிக்க அருகருகே இருந்த நிலத்தில் இருந்த சிறுசிறு பூச்சிகளும், புழுக்களும், நத்தைகளும் கூட இந்த நிலத்தில் இருக்கும் நத்தையை நுகர்ந்து இங்கு வந்தன.
அதனால் இயற்கையான உணவு சங்கிலி அங்கு தொடர மண் மேம்பட்டதுடன், நத்தைகளின் இனப்பெருக்கமும் அதிகரித்து வயலும் உழுவதற்கு தயாரானது.
உருவில் சிறியதாய் தோற்றத்தில் அருவருப்பாய் இருந்தபோதும் பிற்காலத்தில் நிறைய மனிதர்கள் வயிராற உட்கொள்ள போகும் நெற்கதிர்களை நடவ அந்த நிலத்தை தயார்படுத்தும் உன்னத செயலை புரிந்தது அந்த நத்தை.
அது மட்டும் தன் அருவருக்க தக்க தோற்றத்தில் இல்லாமல் அழகாய் இருந்திருந்தால் என்றோ கடையில் எவரேனும் ஒருவர் வாங்கி சென்றிருப்பர். அப்படி நடந்திருந்தால் அது வெறும் ஒரு அலங்காரதிற்கான உயிரினமாய் எந்த பயனும் இன்றி நாட்களை கடத்தி இருக்கும்.
ஆனால் தற்பொழுது "க்ரியா"வின் இரண்டாம் ஜென்மமான "நத்தை" தன் பிறப்பை மக்களின் நலனுக்கான கருவியாய் அமைத்து தன் வாழ்நாளை வெற்றிகரமாய் முடித்துக்கொண்டு அடுத்த பிறவியை நோக்கி பயணித்தது.
- தொடரும்...
(இந்த கதையில் வரும் அனைத்து மனிதர்களும், கடவுள்களும், அவர்களின் செயல்களும், சூழல்களும், இடங்களும் எனது கற்பனையே அன்றி எந்த ஒரு தனி மனிதனையோ, மத நம்பிக்கைகளையோ, இறைவனையோ குறிக்காது. இதில் வரும் சம்பவங்கள் முழுக்கமுழுக்க எனது கற்பனை மட்டுமே எந்த ஒரு வரலாற்று செய்திகளுடனோ, புராணங்களுடனோ தொடர்புடையது அல்ல)