அத்தியாயம் 4 (ரசம்- அழுகை)
"நாரயணரே! இது க்ரியாவின் மூன்றாம் பிறப்பிற்கான தருணம் அல்லவா? அவள் எந்த உயிரினமாய் பிறந்து எவ்வாறு பூமிவாசிகளுக்கு உதவ போகிறாள்?" பாற்கடலில் பள்ளி கொண்டவனை பார்க்க வந்த சரஸ்வதி தன் ஆவலை அடக்க இயலாமல் வினவினார்.
"நானும் அதை கேட்க தான் ஓடோடி வந்தேன் அண்ணா! மகாதேவரிடம் எத்தனை கேட்டாலும் இதழ் தாண்டும் புன்னகையை கூட முழுதாய் உதிர்க்க மாட்டேன் என அடமாய் அமர்ந்துள்ளார்"
அங்கு வந்த தேவி பார்வதி தன் கணவரை பற்றி அண்ணனிடம் முறையிட்டார்.
மூவுலகத்திற்கும் ஆதிசக்தியானவள் சிறு பிள்ளையாய் சிணுங்கி நிற்பதில் மாயோனுக்கு புன்னகை வர வாய்விட்டு நகைத்தார்.
பார்வதியின் பதி அங்கு புன்னகைக்கு பஞ்சமாய் பதில் சொல்லாமல் மழுப்பியிருக்க இங்கு அண்ணனோ வாய்விட்டு நகைத்து மழுப்பினார்.
"தேவி பார்வதி! யாரை பற்றி யாரிடம் புலம்புகிறீர்கள் இவர்கள் இருவருமே மழுப்பலின் அரசர்கள் ஆதலால் நாம் அமைதியாய் வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டும்"
சிரித்தபடி சொன்ன மகாலட்சுமியின் புன்னகை அவரின் முழு இதழ்களையும் அடையும் முன்பே பூலோகத்தில் ஒலித்த கூச்சல்களில் புரியாமல் சுருங்கியது.
இத்தனை நேரம் வாய்விட்டு நகைத்து கொண்டிருந்த வாமணன் திடுமென சிரிப்பை நிறுத்தி கண்களில் துக்கத்தை நிறுவி பூமியை கண்டார்.
"நாராயணரே! என்ன நேரந்தது? எதற்காக தாங்கள் கலக்கமுற்று உள்ளீர்கள்?" என லட்சுமிதேவி கவலையாய் கேட்கும் வேளை பூலோகத்தில்,
"டேய் கண்ணா.. ராசா. எஞ்சாமிகளா! ஆத்தா சொல்றதை கேளுங்கடா அது நமக்கு சாமி மாதிரிடா அதை அழிக்காதீங்கடா" என பெருங்குரலெடுத்து கத்தி அழுது கொண்டிருந்தார் ஒரு மூதாட்டி.
அவரை சுற்றி நடுத்தர வயது பெண்கள் மூவர் நிற்க, இளவயதில் சிறுவர், சிறுமிகள் என ஐவர் நின்றிருந்தனர்.
அவர்கள் முகத்தில் அந்த முதிய பெண்மணிக்கு ஈடான துயரம் இல்லாத போதும் தங்கள் வீட்டின் பெரிய மனுஷியின் கண்ணீரில் கலங்கி நின்றிருந்தனர்.
"வேண்டாம் டா.. நமக்கு என்ன சொத்தா இல்லை. இந்த ஒரு வீடு சாமி வீடா இருந்திட்டு போது விடுங்களேன் டா" என அழுது அறற்றினார்.
அவரின் அழுகை பொறுக்காமல், "ஏங்க அத்தை தான் இவ்வளவு சொல்றாங்கள கொஞ்சம் கேளுங்களேன்" என நடுதரவயதில் இருந்த பெண்களில் ஒருவர் சொல்ல தன் கையில் இருந்த கட்டையுடன் தீயாய் முறைத்தார் அவர் எதிரில் இருந்த ஆண்.
அவர் அருகே இருந்த மற்றொரு ஆண், "அண்ணி! எங்க அம்மை தான் வயசான காலத்துல மூளை குழம்பி போய் பேசுறாங்கனா நீங்களும் கூட்டு வெக்காதீங்க" என்றவனை தொடர்ந்து இன்னொரு ஆணும்,
"அண்ணன் சொல்றது தான் அண்ணி! காசு ஒன்னும் மரத்துல காய்க்கலை சாமி வீடாம்ல.. நம்பகிட்ட இருக்கிறதை தூக்கி யாராவது சாமிக்கு கொடுப்பாங்களா!" என கடுகடுத்தான்.
அந்த மூன்று ஆண்களும் அந்த மூதாட்டியின் மகன்கள் தான்.அந்த நடுதர வயது பெண்கள் இந்த மூவரின் மனைவிகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் இவர்களின் பிள்ளைகள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், "என்ன சேகர்! எதுக்கு ஆச்சி அழுதிட்டு இருக்காங்க ஆமா நீங்க எல்லாம் ஏன் வீட்டை விட்டு வெளியே வந்து நிக்குறீங்க?"
"வெளியே இருக்கிறது இருக்கட்டும் நம்ப தம்பிங்க மூணு பேர் கையிலும் கடப்பாறையும் மண் வெட்டியும்ல இருக்கு என்னப்பா என்னாச்சு"
என அருகே வந்து கேட்டனர் அவர்கள் ஊரை சேர்ந்த சில பெரியவர்கள்.
கிராமம் என்பதால் அந்த உச்சி வெயில் வேளையிலும் ஆட்கள் ஆங்காங்கே வெளி திண்ணையில் தான் இளைபாறிக் கொண்டிருந்தனர். இவர்கள் வீடு கிராமத்தின் இறுதி என்பதால் வாயிலில் திடீரென அனைவரும் வெளியே வந்து நின்று பேசியபடி இருந்ததை அவர்கள் குடும்ப பிரச்சனை போலும் என முதலில் அசட்டையாய் தான பார்த்திருந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் ஆண்கள் வீட்டின் பின்பக்கம் சென்று கடப்பாறை, மண்வெட்டி, கம்பு என கொண்டு வந்ததில் என்னவோ என புருவம் சுருக்கியவர்கள் ஆச்சி பெருங்குரல் எடுத்து அழுததில் அருகே வந்துவிட்டனர்.
அந்த பெரியவர்களின் கேள்விக்கு சேகர் என அவர்களால் அழைக்கபட்ட அந்த வீட்டின் மூத்த மகன், "அது ஒன்னுமில்லை சித்தப்பு! வீட்டுல பழைய சாமான் போட்டு பல வருஷமா திறக்காம கிடந்த அறைல கறையான் எல்லாத்தையும் அரிச்சு புத்து கட்டி வச்சிருக்கு. அதை உடைச்சு சுத்த படுத்ததான் இதெல்லாம் கொண்டு வந்தோம்" என பொறுமையாய் பதில் அளித்தவாறு தன் தம்பிகளை பார்த்தான்
அண்ணன் பார்வை புரிந்ததில், "சித்தப்பு! நீங்க அண்ணன் கூட பேசிட்டிருங்க நாங்க இதோ விரசா வேலையை முடிச்சுட்டு வரோம்" என்று இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்.
"அய்யோ கடவுளே! இந்த பாவத்தை நான் எங்க போய் கரைப்பேன். சாமியை போய் அழிக்க பார்க்குறாங்களே" என முதியவர் மீண்டும் அழுதார்.
"ஆச்சி! நீ என்னத்துக்கு இந்த அழு அழுவுறவ? உன் பசங்க என்ன பாம்பு புத்தையா உடைக்க போறானுங்க பாவம் வந்துரும்னு கத்துற அது கறையான் தான ஆச்சி" என வந்தவர்கள அவரைதான் சமாதானம் செய்தனர்.
"நல்ல சொல்லுங்க எல்லோரும்... பாம்பு புத்துனா நாங்களே கோவிலுக்கு வீட்டை கொடுத்திருப்போம் இந்த கறையானுக்கெல்லாம் இவ்வளவு பெரிய வீட்டை விட்டு தரமுடியுமா?"
அம்மாவின் அழுகை பெரிய மகனுக்கு துக்கத்தை தந்தபோதும் 'எந்த இளிச்சவாயன் கறையானுக்காக மொத்த வீட்டையும் விட்டுட்டு போவான்' என மனதிற்குள் நினைத்தவர் அன்னையை சமாதானம் செய்யும்படி மனைவிக்கு கண்காட்டி விட்டு உள்ளே தம்பிகளுக்கு உதவ சென்றான்.
"அத்தை! அதான் எல்லோரும் சொல்றாங்கள அழாதீங்க அத்தை உங்களுக்கு தான் நோவு காணும்" என மருமகள்கள் அவரை சமாதானம் செய்து வீட்டின் திண்ணையில் அமர வைத்தனர்.
"நான் பொறந்த ஊர் கறையானை சாமியா தான்டி பார்ப்பாங்க. பாம்பா இருந்தா என்ன கறையானா இருந்தா என்ன? ஒழுங்கா வீட்டை கவனிக்காததால தான அது வந்திருக்கு. கறையான் வீட்டை அரிக்கிதுனா உங்க மாமன் எதுக்குடி மரத்துல வீட்டை கட்டுனாரு? அப்படி மரத்துல் தான் கட்டனும்னா கறையான் அறிக்காத மரமான தேக்கு மரத்துல கட்ட வேண்டியது தான. அது வீட்டை எடுத்து வந்து இவனுங்க வீடு கட்டுவானுங்களாம் அது தேடி வந்தா அழிச்சிடுவானுங்களாம்"
என வகைவகையாய் இந்த வீட்டை கட்டிய தன் கணவரையும், ஒழுங்காய் பராமரிக்காத மகன்களையும் திட்டி ஒப்பாரி வைத்தார்.
அவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் மருமகள்கள் முழிக்க வீட்டினுள் இருந்தவர்கள் புற்றை கொஞ்சம் கொஞ்சமாய் அகற்றும் சத்தம் கேட்டது.
சிறிது நேரத்தில், "அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சுது. இனி வீட்டுல ஒரு தடவை மரமாத்து முடிச்சு பூசு வேலை பார்த்தா சரியா போயிடும்" என பேசியபடி வெளியே வந்தனர் அவர் பிள்ளைகள்.
அவர்கள் வந்தது தான் தாமதம் தள்ளாத உடலுடன் அவசரஅவசரமாய் தன் வீட்டிற்குள் நுழைந்தவர், அங்கு வீட்டின் கடைசியில் ஓரமாய் இருந்த அறையை நோக்கி ஓடினார்.
"அத்தை பார்த்து" என மருமகள்கள் பதற, "ம்மா! என்ன அவசரம் உனக்கு" என பிள்ளைகள் அவரை தொடர்ந்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் வருவதற்குள் அந்த அறைக்குள் நுழைந்திருந்தவர் அங்கு சிறு துணுக்கு கூட மிச்சமில்லாமல் அடியோடு தன் மகன்கள் கறையானை அப்புறபடுத்தி இருந்ததில் அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தார்.
"இப்போ நான் என்ன பண்ணுவேன்" என அறற்றினார்.
"அக்கா! ஆச்சி எதுக்காக ஒரு பூச்சிகாக இப்படி அழுவுறாங்க?" என அங்கிருந்த அவர்கள் வீட்டு பிள்ளைகளில் சிறுவன் ஒருவன் தன் தமக்கையை கேட்டான்.
"எனக்கும் தெரியலடா குண்டா! நம்ப விடுப்பு முடுஞ்சு பள்ளிகூடம் போறப்போ வாத்தியாரை கேப்போம்" என்ற தமக்கையின் பதிலில்,
"ஏன் அக்கா! ஆச்சி அழுவுறதை ஆச்சி கிட்ட கேட்டாதான தெரியும் நீ எதுக்கு வாத்தியாரை கேக்கனும்னு சொல்ற?" சிறுவன் புரியாமல் கேட்டான்.
"ஆச்சிக்கு பதில் தெரிஞ்சிருந்தா அவங்க ஏன்டா அப்பா, சித்தப்பாங்களை தடுக்காம அழுதிட்டிருக்க போறாங்க. அவங்க அதை சாமியா நினைக்கிறாங்க அதை தான் நமக்கும் சொல்லுவாங்க. ஆனா நம்ப முன்னோர்கள் சொன்ன எல்லா ஆன்மிக விஷயங்களுக்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்குனு எங்க அறிவியல் வாத்தியார் சொல்லிருக்காரு" என சொல்லியபடி தன் தம்பி,தங்கைகளை அங்கிருந்து அழைத்து சென்றாள் பெரியவள்.
"நாராயணரே! தங்களின் கலக்கத்திற்கு காரணம் இந்த கறையானின் அழிவு தானா? ஆனால் இது உலகின் அனைத்து பிறவிகளுக்கும் ஆன சங்கிலிகள் தானே" என தேவி சரஸ்வதி நாராயணனிடம் தன் எண்ணத்தை வெளிபடுத்த,
"ஆம் அண்ணா! சரஸ்வதி தேவி சொல்வது தான் நிதர்சனம். பூலோகத்தில் உணவு சங்கிலி என்பது ஒரு உயிர் மற்றொரு உயிரை அழிப்பதில் தானே தொடங்கி முடிகிறது. ஆனால் இதில் என்னவொன்று மற்ற பிறவிகள் தாங்கள் படைக்கபட்ட காரியங்களை மட்டும் செயல்படுத்த மனிதர்கள் மட்டும் ஏனைய பிறவிகளையும் தங்களின் சொத்தாய் எண்ணி இவ்வாறு செய்கிறார்கள்" என்ற பார்வதியிடம் பூலோக வாசிகளை எண்ணி பெருத்த கவலை.
அவர்கள் பேசுவதை எல்லாம் சிந்தையில் கொள்ளாத மகாலட்சுமி, "நாராயணரே! இந்த பிறவியில் நம் மகள் க்ரியா எடுத்தது கறையானின் பிறப்பு என்றும், இப்பொழுது அவர்கள் அழித்த புற்று அவளின் பிறப்பிடம் என்றும் கூறி விடமாட்டீர்கள் தானே" என பெரும் தவிப்புடன் கேட்டார்.
நாராயணன் பதில் சொல்லாமல் பெரும் துயரத்துடன் கண்களை மூட, மகாலட்சுமிக்கு தான் ஒரு தேவி என்பதையும் தாண்டி அன்னையின் பாசம் வெளிபட்டதில் அவரின் கண்கள் கண்ணீர் பொழிந்தது.
"என் மகள்... என் மகளுக்கு ஏன் இந்த நிலை நாராயணரே! அவள் ஆறுமுகனை சேர்வதற்காய் தோன்றி இருந்தாலும் பூமி மக்களுக்கு நல்லதை செய்யவேண்டும் என்று தானே ஒவ்வொரு பிறப்புகளையும் கவனமாய் தேர்ந்தெடுக்கிறாள். இந்த பிறப்பில் பிறப்பதற்குள்ளே அவளின் இறப்பு எதனால் நாராயணா"
தேவி மகாலட்சுமி அன்னையாய் கதற அவரின் வேதனை பூமியை பெரும் புயலாய் தாக்கியது.
ஆங்காங்கே ஆழ்கடலினுள் பூகம்பம் வெடிக்க ஆழியவள் சுனாமியாய் வடிவெடுக்க தயாரானாள். காற்றும், மழையும் ஒன்று சேர்ந்து வேகமாய் பூமியை ஆட்கொண்டது.
தேவி லட்சுமியின் பாரத்தை அன்னையாய் உணர்ந்த தேவி பார்வதி, "லட்சுமி தேவியாரே! தங்களின் துயர் யாம் அறிவோம். ஆயினும் ஜனனம் என ஒன்று இருந்தால் மரணம் என்பதும் உண்டு தானே. க்ரியா இந்த பிறவியை விரைவில் முடித்துக் கொண்டதாய் எண்ணுங்கள்" என ஆறுதலாய் உரைத்தாளும் அவரின் கண்களிலும் கண்ணீர் தான்.
அவர் ஆறுதலாய் உரைத்த வார்த்தைகளில் தேவி சரஸ்வதி, "ஆனால் க்ரியாவின் ஏழ் பிறவிகள் என்னும் வழியில் தடை ஏற்பட்டு போனதே பார்வதி. இனி அடுத்து என்ன நேரும்?" என கேட்டதில் மூன்று தேவிகளும் தவிப்புடன் நாராயணரை பார்த்தனர்.
ஆனால் அவர் கண்களில் இத்தனை நேரம் இருந்த கலக்கம் மறைந்து இந்த நொடி வழக்கமான அவரின் மந்தகாச புன்னகை தோன்றி இருந்தது. அதில் அதிர்ந்த மூன்று தேவிகளும் "இப்பொழுது என்ன மாற்றம்?" என கலங்கிய கண்களுடன் மீண்டும் பூலோக காட்சிகளை கண்டனர்.
தேவி லட்சுமியின் சில நொடி வேதனையில் பூலோகத்தில் ஏகபட்ட பாதிப்புகள் உருவாகி இருந்தன. அதிலும் அந்த கறையான் புற்று அழிக்கபட்ட ஊரில் ஏராளமான சேதம் ஏற்பட்டிருந்தது.
வீட்டினுள் இன்னும் அழுது கொண்டிருந்த அந்த முதிய பெண்மணி, "ஆத்தி! இது என்ன இப்படி காத்தும் மழையும் வீசுது. என் இத்தனை காலத்துல நான் இப்படி ஒன்னை பார்த்ததே இல்லையே" என அழுத விழிகளோடு விதிர்த்து புலம்பினார்.
அவரின் மகன்கள் அழித்தெடுத்த கறையானை ஒரு மூட்டையாய் கட்டி எடுத்து சென்றிருந்தவர்கள் பெரும் காற்றிலும், மழையிலும் நடக்க முடியாமல் தடுமாறி கையில் இருந்த மூட்டையை கீழே போட்டனர்.
மரங்களே நிற்க முடியமல் அந்த புயல் மழையில் தடுமாறி சாயந்திருக்க மனிதர்களான இந்த மூவர் பெரியவர்களா என்ன? தள்ளாடி தவித்தனர். ஆனால் அத்தனை புயலிலும் சிறிதும் அசையாமல் அவர்கள் போட்ட இடத்தில் அப்படியே கிடந்தது அந்த கரையான் மூட்டை.
அந்த மூட்டையை விடுத்து மூவரும் முழுதாய் வீடு போய் சேர்ந்தால் போதும் என தள்ளாடியபடி வீட்டை நோக்கி செல்ல மணல்களை சாரலோடு அள்ளி வீசி சென்ற காற்று அவர்களின் பாதையை மறித்தது.
ஊரே அல்லல்கோல பட அத்தனை களேபரத்திலும் ஒரு காகம் மட்டும் விடாமல் "கா கா" என கரைந்தவாறு அந்த கரையான் மூட்டையை சுற்றி சுற்றி பறந்து கொண்டிருந்தது.
அதை பார்த்துதான் நாராயணர் தன் மந்தகாச புன்னகையை மீட்டிருந்தார்.
"லட்சுமி! உன் மகள்கள் இருவரும் ஒன்றாய் தோன்றிவர்கள் ஒருவரின் துன்பத்தில் மற்றவர் கை கொடுக்க நிச்சயம் வருகை புரிவர் என்பதை நான் மறந்தாலும் நீ மறக்கலாமா? அங்கு பார்.. இச்சா காகமாய் வந்து தன்னுடன் தோன்றியவளை காக்க தவிக்கிறாள்" என்றார்.
"நாராயணரே! தாங்கள் சொல்வது உண்மையை தானா? அது இச்சா தானா? அவள் சகோதரியை காக்க முற்படுகிறாளா அப்படி எனில் இன்னும் க்ரியா தன் இந்த பிறவியை முடிக்கவில்லையா?"
இடைவிடாமல் கேள்விகளை அடுக்கியவரின் அழுகை தேம்பலாய் வெளிபட்டது.
"ஆம் லட்சுமி! போதும் கண்ணீர் சிந்தியது. பூமிவாசிகளை படைத்த நாமே அவர்களின் துயரத்திற்கு காரணமாய் மாற கூடாது. அவரவர் செயல்கள் தான் அவரவருக்கான நியாயங்களை தரவேண்டும்" என தன் துணைவிக்கு உலக நியதியை எடுத்து இயம்பினார்.
அண்ணன் பேச்சில் தெளிவுற்ற தேவி பார்வதி, "ஆகட்டும் லட்சுமி தேவியாரே இனி எதற்காக கண்ணீர்? தங்களின் வேதனையை துறந்து க்ரியாவின் இந்த பிறவி வெற்றிபெற ஆசிர்வதியுங்கள்" என்றார்.
தேவி சரஸ்வதியும் ஆமோதிப்பாய் புன்னகைக்க மகாலட்சுமி தன் கண்ணீர் மறைந்து புன்னகைத்தார். அவரின் புன்னகையில் பூமி மீண்டும் பழைய நிலமைக்கு திரும்பிய போதும் நடந்த சேதாரங்கள் நடந்தது தானே.
பச்சைபசேல் என இருந்த அந்த ஊரின் மரங்களில் சில வேரோடு அழிந்திருக்க, முதலே பட்டுபோய் இருந்த மரங்கள் மேலும் ஈரப்பசையுடன் தங்களின் பட்டைகளை கீழே உதிர்த்திருந்தது.
"ஒரு காரியத்தின் விளைவு நிச்சயம் ஒரே ஒரு பலனை மட்டும் தராது தேவி. ஆதலால் ஒருவரை தண்டிக்கும் முன் அந்த தண்டனையால் வேறு எவரேனுக்கும் பாதகம் உண்டாகுமா? என ஆராய வேண்டும். அந்த மரங்களும், செடிகொடிகளும் என்ன தவறிழைத்தன தேவி? உன் கோபத்தின் தண்டனையை பெற்றிருப்பது அவர்கள் தானே" என தன் சரிபாதிக்கு அவசரபட்டு செய்யும் செயலின் விளைவுகளை எடுத்து இயம்பினார் மாகாவிஷ்ணு.
"தாங்கள் இதற்கு முன் பல அவதாரங்களில் நடத்திய அனர்த்தங்களுக்கு இது சற்று குறைவு தான் அண்ணா! பாவம் லட்சுமி தேவியார் புத்திரியின் இழப்பில் தன் நிலை இழந்ததை தாம் சொல்லி காட்ட வேண்டாம்" என கண்களால் அண்ணனை சுட்டெரித்தார் தேவி பார்வதி.
இறைவன் என்றாலும் தங்கையின் முன் வார்த்தைகளில் வெல்ல எந்த அண்ணணால் முடியும்?
இப்படி மேலோகத்தில் அவரவர், அவரவர் நியாயங்களை பேசிக்கொணடிருக்க இங்கு பூமியில் அண்ணன் தம்பிகள் கீழே போட்டு சென்றிருந்த மூட்டையை தூக்கமுடியாமல் தவித்தது காகம்.
"கா கா" என சுற்றி சுற்றி வந்து உதவிக்கு தன் மக்களை கூப்பிட அதன் குரலில் ஓடோடி வந்தனர் ஒற்றுமைக்கு பெயர் போன காக்கைகளின் கூட்டம்.
பல காகங்கள் இணைந்து அந்த மூட்டையை தன் அலகுகளால் கொத்தி தூக்க முற்பட அவர்களால் அதை தூக்க முடியாமல் போனதுடன் அவர்கள் அலகில் சிக்கி மூட்டை ஆங்காங்கு கிழிந்தது.
அந்த கிழிசல்கள் வழியே கறையான் புற்றில் இருந்த கறையான்கள் இறந்த உடலாய் விழ, காகத்தின் வடிவில் இருந்த இச்சா அந்த இறந்து கிடந்த கறையான்கள் கூட்டத்தில் க்ரியாவை தேடியது.
கீழே சிதறி கிடந்த கூட்டத்தை தன் அலகால் கிளறி கிளறி தேட ஆள்காட்டி விரல் அளவில் வயிற்று பகுதி பெரியதாய் உயிரின் கடைசி தருணத்தில் இருந்த ராணிகறையானை கண்டு கொண்டது.
கறையான்களின் கூட்டத்தில் ராணி கறையான் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். அவை இடும் முட்டைகளை பணியாளர் கறையான்கள் எடுத்து சென்று அது வளரும் வரை பாதுகாக்கும். ராணி கறையான் பதினைந்து விநாடிகளுக்கு ஒருமுறை முட்டை இடுமாம். அப்படி இம்முறையும் முட்டையிடும் சில நொடியில் அந்த கறையான் புத்து அழிக்கபட்டிருக்க க்ரியாவின் உயிர் அந்த ராணி கறையானின் வயிற்றுக்குள் முட்டையாய் தேங்கி இருந்தது.
இப்போது ராணி கறையான் தன் இறுதி நொடிகளில் இருப்பதை உணர்ந்த காகம் அதை தன் அலகுக்குள் சுமந்தபடி அங்கிருந்து பறந்தது.
பறந்து வந்த காகம் அனைத்து பச்சை மரங்களும் அழிந்து கிடப்பதை வருத்ததுடன் பார்த்தவாறு பட்டு போன மரம் ஏதேனும் தென்படுகிறதா என தேடியது.
க்ரியாவின பிறப்பு உன்னதமான ஒன்று என இறைவன் முன்பே நிர்ணயித்ததால் காகத்தின் கண்களில் சிக்கியது அடியில் இருந்து சிறிது மட்டுமே இருக்க பட்டுபோய் கிடந்த மரம் ஒன்று. வேகமாய் அதன் மேல் சென்று அமர்ந்த காகம் கறையானை ஓரம் வைத்துவிட்டு அந்த மரத்தை தன் அலகால் கொறித்தது.
பட்டு மரம் அதனுடன் ஈரமும் இருந்ததில் எளிதாய் உடைய அதனுள் அந்த ராணி கறையானை போட்ட காகம் அதன் அருகே பாதுகாப்பாய் அமர்ந்தது. சில நொடிகளில் ராணி கறையான் தன் இறுதி முட்டையை இட்டு உயிரை துறக்க அதை கண்களை உருட்டி கண்ட காகம் மீண்டும் அந்த கறையான் மூட்டையை தேடி பறந்தது.
அதற்குள் மற்ற காகங்கள் அந்த மூட்டையை திரிதிரியாய் பிரித்திருக்க அதில் இன்னும் உயிர் ஒட்டி கொண்டிருந்த சில கறையான்களை தூக்கி வந்து அந்த பட்டை மரத்தில் போட்டது.
இறப்பின் இறுதி வேளையிலும் ஈரப்பசையுடன் கூடிய மரத்துகள்கள் கிட்டினால் கறையான்களில் ஆயிரத்தில் ஒன்று உயிர்பெறுமாம். இங்கு இச்சாவின் அலகு பட்டாதாலோ என்னவோ அது கொண்டு வந்து போட்ட அனைத்து கறையான்களும் அந்த பட்டை மரத்தின் ஈரப்பசையினை மூன்றாம் பிறவிகளுக்கே உரிய நுகர்தல் தன்மையால் நுகர்ந்து உணர்ந்தது.
அது போதுமே கடகடவென அந்த மரத்தினுள் தங்கள் ஆதிக்கத்தை அவர்கள் செலுத்த தொடங்க ராணி கறையான் வயிற்றில் முட்டையாய் அவதரித்திருந்த க்ரியாவும் வெற்றிகரமாய் பணியாளர்கள் கறையான்களால் பேணி காத்து வளர்க்கபட்டாள்.
கறையான்கள் வீட்டை அரிப்பது பெரும் துயர் தான் ஆனால் அவைதான் பட்டுபோன மரங்கள் துளிர் பெறவும் உதவுகிறது. கறையான்கள் இல்லை என்றால் இயற்கை கழிவுகள் அப்படி அப்படியே தேங்கி பூமியே அழுக்காகி விடும்.
ஏனெனில் கறையான்களின் பெரும்உணவு இயற்கையின் கழிவுகள் தான். இலைகள், பட்டைகள், தொய்ந்நு விழும் சருகுகள் என அனைத்தையும் உண்ணும் கரையான் பூமியின் இயற்கை சுழற்சிக்கு முக்கிய காரணியாய் உள்ளது.
இதோ எந்த வீட்டில் இருந்து அதை அகற்றினார்களோ அந்த ஊரே புயலினால் மரங்களை இழந்து மழை இன்றி சில காலங்களில் பஞ்சத்தை அடைய வேண்டி இருந்திருக்கும். ஆனால் இச்சா மற்றும் க்ரியாவால் பட்டு போன ஒரு மரம் துளிர்த்து அதை தடுத்து விட்டது.
முட்டையில் வளர்ந்து புலுவாய் உருமாறி சில நாட்களில் ராணி கறையானாய் மாறிய இச்சா பதினைந்து நொடிகளுக்கு ஒருமுறை இட்ட முட்டைகள் பல கறையான்களின் பிறப்பிற்கு காரணமாய் அமைந்து, பல மரங்களின் துளிர்விற்கும் காரணமாய் மாறியது.
உலகில் அழிவென்பது எத்தனை சாதாரணமோ அதேபோல் ஆக்கமும் நிச்சயம் சாதாரணம் தான், நம்மை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் இந்த பூமியில் வாழும் அனைத்தையும் நேசிக்க தொடங்கினால்.
நேசிப்போம்.. நம்மையும்... நாம் வாழும் இந்த பூமியையும்... அதில் வாழும் உயிரினங்களையும்..
-தொடரும்..
(இந்த கதையில் வரும் அனைத்து மனிதர்களும், கடவுள்களும், அவர்களின் செயல்களும், சூழல்களும், இடங்களும் எனது கற்பனையே அன்றி எந்த ஒரு தனி மனிதனையோ, மத நம்பிக்கைகளையோ, இறைவனையோ குறிக்காது. இதில் வரும் சம்பவங்கள் முழுக்கமுழுக்க எனது கற்பனை மட்டுமே எந்த ஒரு வரலாற்று செய்திகளுடனோ, புராணங்களுடனோ தொடர்புடையது அல்ல)